தமிழ் இலக்கணம் - சார்பெழுத்துக்கள்



தமிழ் இலக்கணம்
இலக்கணம்
மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் பயன்படுவது இலக்கணம் ஆகும் தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி

எழுத்திலக்கணம்
அணுத் திரளின் காரியமாய்த் தோன்றம் ஒலி எழுத்தாகும். எழுத்து உச்சரிக்கப்படும்போது ஒலி வடிவம் பெறுகிறது. எழுதப்படுத் போது வரி வடிவம் பெறுகிறது. எழுத்து இரண்டு வகைப்படும்
  1. முதலெழுத்து
  2. சார்பெழுத்து

முதலெழுத்து
உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்துக்கள் 18 ஆகிய 30 எழுத்துக்களும் வேறு சில எழுத்துக்கள் பிறப்பதற்கும் அவை இயங்குவதற்கும் அடிப்படையாக அமைவதால் இவற்றை முதல் எழுத்துக்கள் என்பர்.

சார்பெழுத்துக்கள்
முதலெழுத்துக்களை சார்ந்து தோன்றும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். சுார்பெழுத்துக்கள் 10 வகைப்படும். அவை 
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஓற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஓளகாரக் குறுக்கம்
  9. மகரக் குறுக்கம்
  10. ஆய்தக் குறுக்கம்

உயிர்மெய்
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்து பிறக்கின்றது. மெய்யொலி முன்னும் உயிர் ஒலி பின்னுமாக ஒலிக்கப்படினும் உயிரின் மாத்திரை அளவே உயிர்மெய்க்கும் அமைவதால் இவை மெய் உயிர் என பெயர் பெராமால் உயிர்மெய் என அழைக்கப்படுகிறது.

உயிர்மெய் குறில்   
18 X 5
 90
உயிர்மெய் நெடில்
18 X  7
126
உயிர்மெய் எழுத்துக்கள்  
216




ஆய்தம் ( ) (அரை மாத்திரை) 
  • இதன் வேறு பெயர்கள் தனி நிலை, முப்புள்ளி , முப்பாற்புள்ளி மற்றும் முற்றாய்தம்
  • ஆய்த எழுத்து ஒரு சொல்லில் இடம்பெறகின்ற போது தனக்கு முன் ஒரு குற்றெழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று நடுவில்தான் வரும்.

.கா
அஃது, எஃகு, கஃசு

அளபெடை
இருக்கும் அளவைக் காட்டிலும் மிகுந்து ஒலிக்கச் செய்வதை அளபெடை என்பர் புலவர்கள் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்காகவும், செய்யுளின் இனிய ஓசைக்காகவும் சொல்லின் இன எழுத்தை சேர்த்து ஓசையை நிறைவு செய்வர் இதனை அளபெடை என்கிறோம். அளபெடை இரண்டு வகைப்படும்.
  1. உயிரளபெடை
  2. ஓற்றளபெடை

உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்தோ அல்லது இனிய ஓசைக்காகவோ உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அதனை உயிரளபெடை என்கிறோம்.
உயிரளபெடை மூன்று வகைப்படும்
1. செய்யுளிசை அளபெடை 
2. இன்னிசை அளபெடை 
3. சொல்லிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை 
  • இதனைஇசை நிறை அளபெடை என்றும் கூறுவர்.
  • செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்வதற்காக ஏழு உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை என்பர்.
  • சொல்லின் முதல் இடை கடையில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுக்கும்.
  • செய்யுளிசை அளபெடை சொல்லை பிரிக்கும் போது ஈரசைச் சொல்லாக இருக்கும். அளபெடுப்பதை அறிந்து கொள்ள அளபெடுக்கும் நெடில் எழுத்தின் குறில் எழுத்து அதனை அடுத்து எழுதப்படும்.
  • செய்யுளிசை அளபெடையில் அளபெடுத்த பின்னரே செய்யுளின் யாப்பிலக்கணம் பிழையின்றி அமையும்.

.கா
  1. ஓஒதல் வேண்டும் - மொழிக்கு முதலில்
  2. விடாஅர், உழாஅர், தொழாஅள், கெடாஅர் மொழிக்கு இடையில்
  3. கெடாஅ மொழிக்கு இறுதியில்


இன்னிசை அளபெடை 
  • செய்யுளில் ஓசை குறையாத போதும், இனிய ஓசையை தரும் பொருட்டு உயிர்க் குறில் நெடிலாகி பின் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
  • இன்னிசை அளபெடை சொல்லை பிரிக்கும் போது மூன்று அசைச் சொல்லாக பிரியும்.
  • இன்னிசை அளபெடையில் உள்ள அடைபெடுக்கும் சொல் அளபெடுத்தாலும், அளபெடுக்கவில்லை என்றாலும் யாப்பிலக்கணம் பிழையின்றி அமையும்.

.கா
எடுப்பதுாஉம், கெடுப்பதுாஉம்

சொல்லிசை அளபெடை 
  • செய்யுளில் ஓசை குறையாத போதும், பெயர்ச் சொல்லை வினையெச்ச சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
  • சொல்லிசை அளபெடை பெரும்பாலும் என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். 
.கா
குடிதழீ     - தழுவுதல் (தொழிற்பெயர்)
குடிதழீஇ தழுவி (வினையெச்சம்) 

ஓற்றளபெடை 
  • செய்யுளில் ஓசை குறையும் போது குறிப்பிட்ட மெய்யெழுத்தும், ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
  • ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் மற்றும் ஆகிய 11 எழுத்துக்களும் ஒரு குறிலை அடுத்தோ அல்லது இரு குறில்களை அடுத்தோ அளபெடுக்கும்.
  • செய்யுளில் அளபெடுப்பதை அறிய மெய்யெழுத்து இருமுறை தொடர்ந்து எழுதப்படும்.
  • வல்லின எழுத்துக்கள் க், ச், ட், த், ப், ற் என்னும் 6 எழுத்துக்கள் மற்றும் இடையினத்தில் ர், ழ் என்ற 2 எழுத்துக்கள் மொத்தம் 8 எழுத்துக்கள் அளபெடுக்காது.

.கா     
எங்ங்கிறைவன், சங்ங்கு, நெஞ்ஞ்சு, வெஃஃவார், கண்ண்

குற்றியலுகரம்
  • குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
  • குறுகிய ஓசையை உடைய உகர எழுத்து குற்றிலுகரம் எனப்படும்.
  • சொல்லின் இறுதியில் வல்லின மெய்களின் மீது ஏறிவருகின்ற உகரம் தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும்.
  • சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் உகரம் தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்காது.
  • சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினமெய்களை ஊர்ந்த உகரம் (கு, சு, டு, து,பு, று) மட்டுமே தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அனவாக ஒலிக்கும்.

.கா
   பாகு, பஞ்சு , பட்டு , அஃது, மார்பு, கயிறு
வல்லின மெய்களை ஊர்ந்த உகரம் (கு, சு, டு, து,பு, று) சொல்லுக்கு இறுதியில் வந்தாலும் தனி ஒரு குறிலை அடுத்து வரும் போது குறையாமல் ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கும்.
சொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகைப்படும்
  1. நெடில் தொடர்   குற்றியலுகரம் - பாகு, வீசு, ஓடு, காது, கோபு, ஆறு
  2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம் - எஃகு, கஃசு, அஃது
  3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் -அழகு, அரசு, பண்பாடு, உனது, உறுபு, பாலாறு
  4. வன் தொடர்       குற்றிலுகரம்  - நாக்கு, கச்சு, பாட்டு, பத்து, உப்பு, புற்று
  5. மென் தொடர்     குற்றியலுகரம் - தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று
  6. இடைத் தொடர்  குற்றியலுகரம் - செய்து, சார்பு, சால்பு, மூழ்கு, 
முற்றியலுகரம்
தனிக்குறிலை அடுத்து வரும் வல்லினமெய்களை ஊர்ந்த உகரம் (கு, சு, டு, து,பு, று) அளவில் குறைந்து ஒலிக்காது.மேலும் (கு, சு, டு, து,பு, று) தவிர்த்த மற்ற வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வந்தாலும் அளவில் குறைந்து ஒலிக்காது. இதனை முற்றியலுகரம் என்பர்.
.கா
அது, பசு, படு, பெறு, நகு

குற்றியலிகரம்
குற்றியலுகர சொற்கள் நிலை மொழியாக நிற்க, வருமொழி முதலில் யகரம் வந்தால் அந்த குற்றியலுகரத்தின் உகரம் இகரமாகத் திரியும் அவ்வாறு திரிகின்ற போது இகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கும்.
.கா
நாகுயாது = நாகியாது
குரங்கு + யாது = குரங்கியாது
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
மி என்னும் எழுத்து இயல்பாக தனக்குரிய மாத்திரையில் ஒலிக்கும். ஆனால் கேண்மியா சென்மியா என்னும் அசைச் சொற்களில் மி என்னும் எழுத்தில் உள்ள இகரம் குறைந்து ஒலித்துள்ளது. ஏனவே இது குற்றியலிகரம் ஆயிற்று.

ஐகாரக் குறுக்கம்
  • ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக் குறுக்கம்
  • ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து 1 1/2 மாத்திரையாகவும், 1 மாத்திரையாகவும் ஒலிப்பது ஐகாரக் குறுக்கம் ஆகும்.
  • சொல்லுக்கு முதலெழுத்தாக ஐகாரம் அமையும்1 1/2 மாத்திரையாகவும், சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் அமையும் போது 1 மாத்திரை அளவாக ஒலிக்கும்.

.கா
  1. ஐந்து மொழிக்கு முதலில்   - 1 1/2 மாத்திரை
  2. வளையல் மொழிக்கு இடையில் 1 மாத்திரை
  3. வலை மொழிக்கு இறுதியில் 1 மாத்திரை

ஔகாரக் குறுக்கம்
  • ஔகாரம் சொல்லுக்கு முதலில் அமையும் போது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து 1 1/2 மாத்திரை அளவாக ஒலிக்கும்.
  • ஔகாரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக மட்டுமே அமையும்.
  • சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஔகாரம் வராது

.கா
ஔவை - மொழிக்கு முதலில்   - 1 1/2 மாத்திரை

மகரக் குறுக்கம்
  • மகரம் + குறுக்கம் = மகரக் குறுக்கம்
  • ம் என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.
  • திரிந்த சொற்களில் னகர ணகரங்களில் முன் உள்ள ம் என்னும் எழுத்து அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும்.

.கா
  • போலும், மருளும் ஆகிய சொற்களில் ஈற்றயல் எழுத்துக்களில் உள்ள உகரம் கெட்டு போல்ம் அருள்ம் என்றாகி பின் போன்ம் மருண்ம் என்று திரியும்
  • நிலைமொழி இறுதியில் மகரமும், வருமொழி முதலில் வகரமும் அமைந்து நிலைமொழியும் வரமொழியும் புணரும்போது மகரம் கால் மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

.கா
தரும் வளவன்

ஆய்தக் குறுக்கம்
  • ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்
  • ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால்மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம்

.கா
ல் ற் ஆக மாறும்
ள்- ட் ஆக மாறும்
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ்வரும் லகரமும் , ளகரமும் வருமொழி முதலில் தகரம் வந்தால் நிலைமொழியும் வருமொழியும்  புணரும் போது ஆய்தமாக மாறியுள்ளன. அவ்வாறு மாறிய ஆய்தம் கால் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.

FREE PDF FILE DOWNLOAD CLICK HERE


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post