தமிழ் இலக்கணம் - சொல் இலக்கணம்

சொல் இலக்கணம்

இலக்கண வகை
பெயர்ச் சொல்
வினைச் சொல்
இடைச்சொல்
உரிச் சொல்

இலக்கிய வகை
இயற் சொல்
திரி சொல்
திசைச் சொல்
வட சொல்
பெயர்ச் சொல் வகை

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலபெயர்
  4. சினைப் பெயர்
  5. குணப்பெயர்
  6. தொழிற்பெயர்

பொருட்பெயர்
பொருள்களின் பெயரைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர்
.கா
முருகன், கிளி, நாற்காலி, புத்தகம், மரம், கொடி, மனிதர்கள், விலங்குகள், ஊதியம், ரூபாய்,

இடப்பெயர்
இடங்களின் பெயர்களைக் குறிக்கும் பெயர்ச் சொல் இடப்பெயர் ஆகும்.
.கா
அனைத்து இடங்களும், பள்ளி, குளம், வீதி, இல்லம், சமையல் அறை, படுக்கை அறை, விளையாட்டு மைதானம், மருத்துவ மனை, கடல், மலை, வெற்பு, பொருப்பு, ஞாலம், சென்னை, மும்பை,

காலப்பெயர்
காலத்தின் பெயரை உணர்த்தும் பெயர் காலப்பெயர் ஆகும்.
.கா
காலை, மாலை, நாள், மணி, மாதம், வைகறை, சிறுபொழுதுகள், பெரும்பொழுதுகள், நாழிகை, வினாடி, நிமிடம்

சினைப்பெயர்
முழுப்பொருளின் பகுதியை குறிக்கும் பெயர் சினைப்பெயர் ஆகும்.
.கா
கிளை, இலை, கால், பூ, கனி, கண், காது, மூக்கு, தலை, நுதல், பாதம், சருகு, நுசுப்பு

குணப்பெயர் அல்லது பண்புப் பெயர்
நிறம் வடிவம் சுவை குணம் ஆகியவற்றுல் ஒன்றனைக் குறிக்கும் பெயர் குணப்பெயர் ஆகும்.
.கா
நிறம் - செம்மை, கருமை, வெண்மை, பசுமை
வடிவம் - வட்டம், சதுரம்,முக்கோணம், செவ்வகம்
சுவை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, கரிப்பு
குணம் - அன்பு,
விகுதி பெற்ற பண்புப் பெயர்கள்
மை செம்மை
கு நன்கு
அர் - நல்லர்
தொல்லை
றி - நன்றி

சி மாட்சி
று நன்று

பு மாண்பு
து தீது

- செலவு
அம் - நலம்


தொழிற் பெயர்
ஒரு பொருள் செய்யும் தொழிலைக் குறிக்கும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் ஆகும்.
.கா
எழுதுதல், தேடுதல், விளையாட்டு, ஓட்டம்காண்பு, சொலல், நல்குரவு, ஒருவுதல், உண்டி, செய்தல், செய்கை, கொடுமை, கடத்தல், ஆண்மை, ஓங்குதல், சிதைவு, பெருக்கல், தோன்றாமை, வெறுக்கை, நத்தம், நீத்தம்,

விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்
தல் நடித்தல்
தி மறதி
அல் பாடல்
சி வளர்ச்சி
அம் - ஆட்டம்
வி  - உதவி
கொலை
உள் கடவுள்
கைவாழ்க்கை
காடு சாக்காடு
வை பார்வை
பாடு கோட்பாடு
பு நடிப்பு

எதிர்மறை தொழிற்பெயர்கள்
ஆனை வாரானை
மை கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, அஞ்சாமை, தள்ளாமை,
முதல் நிலை தொழிற்பெயர்
ஒரு தொழிற்பெயரின் முதல் நிலையே (பகுதி) தொழிற்பெயரின் பொருளைத் தருவது முதல்நிலை தொழிற்பெயர் எனப்படும்.
.,கா
கொள்ளுதல் கொள்
உறுதல் உறு
படுதல் படு
தெறுதல் தெறு
கொதித்தல் கொதி
இடித்தல் இடி
சுடுதல் சுடு
கெடுதல் கெடு
எண்ணம் - எண்

முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்
ஒரு தொழிற்பெயரின் முதல்நிலை (பகுதி) திரிந்து தொழிற்பெயரின் பெயரைத் தருவது முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
கொள்ளுதல் கொள் கோள்
சுடுதல் சுடு - சூடு
கெடுதல் கெடு - கேடு
உண்ணுதல் உண் - ஊண்
விடுதல் விடு வீடு
படுதல் படு - பாடு

.கா
கோள் , சூடு, கேடு, ஊண், வீடு, பாடு

இடுகுறிப்பெயர்கள்
உலகப்பெயர்கள் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இரு வகைப்படும்.
காரணம் இன்றி முன்னோர் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும்.
இடுகுறிப்பெயரானது இடுகுறிபொதுப்பெயர் இடுகுறிசிறப்புப்பெயர் என இரண்டு வகைப்படும்
இடுகுறிபொதுப்பெயர்
.கா
மரம், மனிதன், செடி, கொடி,
இடுகுறிசிறப்புப்பெயர்
.கா
தென்னை, வாழை,

காரணப்பெயர்
காரணம் கருதி வழங்கவது காரணப்பெயர் ஆகும்.
காரணப்பெயரானது காரண பொதுப்பெயர், காரண சிறப்புப் பெயர் என இரண்டு வகைப்படும்.
காரண பொதுப் பெயர்
.கா
பறவை, அணி,
காரண சிறப்புப் பெயர்
பருந்து, கிளி, வளையல், தோடு
காரண இடுகுறிப்பெயர்கள்
.கா
முக்கண்ணன், நாற்காலி



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post