தமிழ் இலக்கணம் - வழக்கு

வழக்கு

நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது இயல்பு வழக்கு தகுதி வழக்கு என இருவ்கைப்படும்.

இயல்பு வழக்கு
ஒரு பொருளைச் சுட்டுவதற்கு எந்த சொல் இயல்பாக வருகிறதோ அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர்.
இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.

1      இலக்கணமுடையது
2.       இலக்கண போலி
3.       மரூஉ


இலக்கணமுடையது
இலக்கண பிழை இல்லாமல் வழங்கி வருவதனை இலக்கணமுடையது என்பர்.
.கா யாழினி பாடம் படித்தாள்

 போலிகள்
ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதனைப்போலி என்பர்.
ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின், அது போலி எனப்படும். இப்போலி மூன்று வகைப்படும்
  1. முதற்போலி,
  2. இடைப்போலி,
  3. இறுதிப்போலிஇறுதிப் போலியைக் கடைப்போலி எனவும் கூறுவர்.

முதற்போலி
ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது
முதற்போலியாகும்.
(.கா.) மஞ்சு - மைஞ்சு;
மயல் - மையல்.


இடைப்போலி
ஒருசொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது, இடைப்போலி எனப்படும்.
(.கா.) முரசு - முரைசு;
இலஞ்சி - இலைஞ்சி.

இறுதிப்போலி (கடைப்போலி)
ஒருசொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது, இறுதிப்போலி (கடைப்போலி) என்பர்.
(.கா.) அறம் - அறன்;
பந்தல் - பந்தர்.
முற்றுப்போலி
அஞ்சு என்னும் சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியுள்ளன. இருப்பினும், பொருள் மாறவில்லை. எனவே, இது முற்றுப்போலி எனப்படும்.

மரூஉ மொழி
மக்களின் பேச்சு மொழியில் ஏற்படும் மாறுதலே மரூஉ மொழி எனப்படும். இது பெரும்பாலும் ஊர்ப்பெயராகவும், உறவுப் பெயராகவும் அமையும்.

.கா
தஞ்சாவூர் - தஞ்சை
சோழன் நாடு சோனாடு
என் தந்தை எந்தை
என் தம்பி எம்பி
உன் தந்தை உந்தை
உறையூர் - உறந்தை,      
கோயம்புத்தூர் - கோவை
தகுதி வழக்கு

தகுதியான சொற்களை பேசுவது தகுதி வழக்கு என்பர்இது மூன்று வகைப்படும்.
  1. இடக்கரடக்கல்
  2. மங்கலம்
  3. குழூஉக்குறி


இடக்கரடக்கல்
பலர் முன்னே கூறுவதற்கு இடர்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால் அப்பொருளை தெரிவிப்பது இடக்கரடக்கல் என்பர்.
.கா
வாய் கழுவி வந்தேன் - வாய்பூசி வந்தேன்
மலம் கழுவி வந்தேன் - கால் கழுவி வந்தேன்

மங்கலம்
அமங்கல சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது மங்கலம் என்பர்.
.கா
இறந்தார் - இறைவனடி சேர்ந்தார்
அமங்கலி வருகிறார் - சுமங்கலி வருகிறார்

குழூஉக் குறி
ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயரை குழூஉக்குறி என்பர்
.கா.
பொற்கொல்லர் பொன்னைபறி என்பர்.
கள்ளை சொல்விளம்பி என்பர்


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post