அணியிலக்கணம்


அணியிலக்கணம்


அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம் .
அணியிலக்கண நூல்கள் - தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ்  நூல்கள்.
அவ்வாறான அணிகள், ‘இயல்பு நவிற்சி, ‘ உயர்வு நவிற்சி முதலியன ஆகும்.

இயல்பு நவிற்சியணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி எனப்படும்.
தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாடய்விட் டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.
இப்பாடலில் தயிர் கடையும் ஆய மங்கையரின் தன்மை உள்ளவாறே அழகுபடச் சொல்லப்படுவதனைக் காணலாம்.

உயர்வுநவிற்சியணி
ஒருபொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சியணி எனப்படும். உயரமான மலையைவிண்ணைத் தொடும் மலை என வருணித்தல்; உயரமான வைக்கோல் போரைவானை முட்டும் வைக்கோல்போர் என உயர்த்திக் கூறுதல்.

உவமையணி

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

ஊர் நடுவே உள்ள குளம் நிரம்பினாற்போன்றதே உலக உயிர்களை யெல்லாம் விரும்பி உதவிசெய்யும் பேரறிவு உடையானிடம் சேர்ந்த செல்வம். இப்பாடலில், ஊருணி நீர்நிறைதல் என்பது உவமை. உலகவாம் பேரறிவாளன் திரு என்பது உவமேயம். அற்று என்பது உவம உருபு. இவ்வாறு உவமை, உவமேயம் இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது உவமையணி ஆகும்.

எடுத்துக்காட்டு உவமையணி

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

ஒருவனது உடல் தூய்மை நீரில் குளிப்பதனால் புலப்படும். உண்மையைப் பேசுவதனால், உள்ளத்தின் தூய்மை புலப்படும்.
இப்பாடலில், உடம்பின் தூய்மை நீரால் அமையும் என்பது உவமை. உள்ளத்தின் தூய்மை உண்மை பேசுவதனால் உண்டாகும் என்பது உவமேயம். இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு இல்லை. இப்பாடலில் உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டு இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப் பட்டுள்ளது. எனவே, இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி.

உருவகஅணி

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.

இப்பாடலில் இன்சொல் - விளைநிலம்; ஈதல் - விதை, வன்சொல் - களை; வாய்மை - உரம் (எரு); அன்பு - நீர்; அறம் - கதிர் என உருவகிக்கப் பெற்றுள்ளதனால், இப்பாடல் உருவக அணியாகும். இவ்வாறு உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத் தோன்றாத வகையில், உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி யாகும்.
மதிமுகம் - மதிபோன்ற முகம் - உவமை
முகமதி - முகம் ஆகிய மதி - உருவகம்

பின்வருநிலையணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப் பலவிடத்தும்வரின் அது பின்வருநிலையணி ஆகும்.
இது, சொல்பின்வருநிலையணி, பொருள்பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி, உவமைப் பின்வருநிலையணி என நால்வகைப்படும்.
சொற்பொருள் பின்வருநிலையணி ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும்வரின் அது, சொற்பொருள் பின்வருநிலையணியாம். ‘கண்வனப்புக் கண்ணோட்டம். . . என்னும் சிறுபஞ்சமூலப் பாடலில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது. இப்பாடலில்வனப்பு என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்துஅழகு என்னும் பொருளைத் தருகின்றது.

இல்பொருள் உவமையணி
உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது இல்பொருள்
உவமையணி எனப்படும்.
அன்பகத் தில்லா உயிர்வாடிநக்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - குறள், 78
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள். உள்ளத்தில் அன்பில்லாத ஒருவர் குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது, பாலை நிலத்தில், பட்டமரம் தளிர்விட்டு வளர்வது போன்றது. திருவள்ளுவர், இக்குறட்பாவில் அன்பில்லாதவன் வாழ்க்கை, பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்விட்டு வளர்வதற்கு ஒப்பானது என இல்லாத பொருளை உவமித்துக் கூறுகிறார்.
புலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை இவ்வாறு உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.

வேற்றுப்பொருள் வைப்பணி
புலவர், தாம் கருதிய பொருளை நிலைநாட்ட, உலகம் அறிந்த வேறொரு பொருளைச் சான்றுகாட்டிக் கூறும்போது, பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் விளக்குவதனை வேற்றுப்பொருள் வைப்பணி என்பர்.

உரைமுடிவு காணான் இளையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.

இப்பாடலில், கரிகாலன் இளமையில் நரைமுடித்து வந்து, வழக்கில் நீதி வழங்கினான் என்பது சிறப்புச் செய்தி. வழிவழியாக நீதி தவிராமல் ஆட்சி புரிந்துவரும் சோழர் குலத்தில் தோன்றியமையால், இயல்பாகவே கரிகாலனும் சிறந்த நீதி வழங்கினான் என்பது பொதுப் பொருள். எனவே, சிறப்புப் பொருளால் பொதுப் பொருள் விளக்கப்பட்டுள்ளதனால் இப்பாடலில் வேற்றுப்பொருள் வைப்பணி அமைந்துள்ளது.

வேற்றுமையணி
செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர், அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாகும்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. - குறள்,129
தீயினால் சுடுவதும், நாவினால் தீயசொற்களைக்கொண்டு சுடுவதும் என்பது ஒற்றுமை, தீயினால் சுட்டது ஆறும்; நாவினால் சொன்னது ஆறாது என்பது வேற்றுமையாகும். எனவே, இப்பாடலில் வேற்றுமையணி இடம்பெற்றுள்ளது.


ஏகதேச உருவக அணி
கவிஞர், தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது ஒன்றனை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றனை உருவகப்படுத்தாமல் விடுவது, ஏகதேச உருவக அணி எனப்படும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - குறள், 10
இக்குறட்பாவில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்திவிட்டு, அதனைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்படுத்தாமையால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று.

நிரல்நிறை அணி
சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, நேரே பொருள் கொள்வது நிரல்நிறை அணி யாகும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாடழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள், 45
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள். இல்வாழ்க்கையின் பண்பு எனப்படுவது அன்பு காட்டுவது. இல்வாடிநக்கையின் பயன் எனப்படுவது அறம்செய்தல் என்பதாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து இக்குறட்பாவில் அன்பும் அறனும் முதலடியில் அமைந்துள்ளன. அடுத்த அடியில், அச் சொற்களோடு முறையாகப் பொருந்தும் வரிசைப்படி பண்பு, பயன் என்னும் சொற்கள் அமைந்துள்ளன. எனவே, இது நிரல்நிறை அணி.

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post