TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 23 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 23
விடையுடன் இலவச பதிவிறக்கம்
பத்தாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அன்பிற்கினிய தேர்வர் சொந்தங்களே! கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக தேர்வாணையத்தின் தேர்வுகளில், திருக்குறளை எழுதியவர் யார்? கம்பராமாயணத்தை எழுதியவர் யார்? என்ற வினாக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வினாக்கள் தங்களுக்கு தற்போது எவ்வளவு எளிதான வினாவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அவ்வாறான மிக எளிமையான வினாக்கள் கேட்கப்படுகின்றனவா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
- இதை தற்போது ஏன் தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றால், தேர்வர்களின் அறிவு முதிர்ச்சியின் காரணமாகவும், தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாகவும், தேர்வாணையத்தின் வினாக்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து, தங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே.
- கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் கடினத் தன்மை தேர்வுக்கு தேர்வு அதிகரித்து வந்திருப்பதை பழைய வினாக்களை பார்க்கும் போது தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
- எனவேதான் இந்த மாதிரித் தேர்வு, கடினமாக இருக்கும் வகையில் சில வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. கடினமான வினாக்களை அணுகிவிட்டால், எளிமையான வினாக்களுக்கு விடையளிப்பது உங்களுக்கு சுலபமாகிவிடும் என்ற எண்ணத்திலும், தேர்வாணையத்தின் வினா தொகுக்கும் முறையில் அவ்வப்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டும், இந்த மாதிரித் தேர்வு 23 (பத்தாம் வகுப்பு புதிய புத்தகம்) வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதே போன்றுதான் கடிமாக தேர்வாணைய தேர்வில் வினாக்கள் அமைக்கப்படும் என்று பொருள் கொள்ள வேண்டாம். இப்படியாக சில கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
- இந்த பதிவில், 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு புதிய மற்றும் பழைய பாடப் புத்தகத்திலிருந்து வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
- மேலும், தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் அடிப்படையிலும், பாடத்திட்டத்தில் இடம்பெறாத வினாக்கள் இதற்கு முன்பாக தேர்வுகளில் பாடப்புத்தகத்தில் இருந்து எவ்வாறு வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன என்ற முன் நிகழ்வுகளின் அடிப்படையிலும் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
மாதிரி வினாத்தாள்- 23 (100 வினாக்கள்)
1. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை - கால்டுவெல்
2. இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என்றவர் - கமில்சுவலபில்
3. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் - கெல்லட்
(A) 1 மற்றும் 2 சரி
(B) 2 மற்றும் சரி
(C) 3 மட்டும் சரி
(D) அனைத்தும் சரி
2. கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்- இத்தொடரில் உள்ள இலக்கணம் தேர்க.
(A) பெயரெச்சம்
(B) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(C) குறிப்பு பெயரெச்சம்
(D) தெரிநிலை பெயரெச்சம்
3. முழவு உறழ் தடக்க இதில் உள்ள உவம உருபு யாது?
(A) முழவு
(B) உறழ
(C) தடக்கை
(D) போல
4. கீழ்க்கண்டதைக் கவனி.
கூற்று (அ) - களைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
காரணம் (ஆர்) - இரண்டு எதிர்மறைச் சொற்கள் சேர்ந்துவந்தால் அஃது உடன் பாட்டுப் பொருளைத் தரும்
(A) (அ) தவறு ஆனால் (ஆர்) சரி
(B) (அ) சரி ஆனால் (ஆர்) தவறு
(C) (அ) மற்றும் (ஆர்) இரண்டும் சரி மேலும் (ஆர்) என்பது (அ) விற்கு சரியான விளக்கம்
(D) (அ) மற்றும் (ஆர்) இரண்டும் சரி மேலும் (ஆர்) என்பது (அ) விற்கு சரியான விளக்கம்
5. கட்டளை வாக்கியத்தோடு தொடர்பு இல்லாததைத் தேர்வு செய்க.
(A) கவனமாக படி
(B) பார்த்துப் போ
(C) வளமுடன் வாழ்க
(D) நலமுடன் இரு
6. வல்லினம் மிகா இடங்களில் சரியான இணையைத் தேர்க.
1. சுடுசோறு
2. கதைச் சொன்னான்
3. படித்த பாடம்
4. கோழிக் கொக்கரிக்கிறது
5. கல்வி கேள்வி
6. வாழ்க செந்தமிழ்
(A) 1, 2, 3 மட்டும் சரி
(B) 1, 3, 5, 6 மட்டும் சரி
(C) 1, 2, 3, 4, 5 மட்டும் சரி
(D) அனைத்தும் சரி
7. பொருத்துக.
a. ஐகாரக்குறுக்கம் 1. முடீது
b. ஔகாரக்குறுக்கம் 2. தலைவன்
c. ஆடீநுதக்குறுக்கம் 3. போனம்
d. மகரக்குறுக்கம் 4. வௌவால்
(A) a(4), b(2), c(1), d(3)
(B) a(4), b(2), c(3), d(1)
(C) a(2), b(4), c(3), d(1)
(D) a(2), b(4), c(1), d(3)
8. தவறானதைக் தேர்க.
1. வளவன் பழம் உண்டான்
2. விடியற்காலையில் சேவல் கூவியது
3. குழந்தை பால் பருகியது
4. இது வேப்பந்தழை துவையள்
5. கவிஞர் கவிதை எழுதினார்
(A) 1 மற்றும் 2
(B) 3 மற்றும் 4
(C) 1 மற்றும் 3
(D) 1 மற்றும் 5
9. கூற்றுகளை கவனி.
1. மொழி மூன்று வகைப்படும்
2. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிற சொற்களுடன் தொடர்ந்து நின்று
வேறு பொருளையும் தருவது தொடர் மொழி
3. தாமரை, வைகை போன்றவை தனிமொழிக்கு சான்றுகளாகும்.
4. முற்றுப்பெற்று வந்துள்ள வினைச் சொற்களை வினைமுற்றுகள் (அ) முற்று வினை என்பர்
(A) 1, 2 மட்டும் சரி
(B) 3, 4 மட்டும் சரி
(C) 1, 4 மட்டும் சரி
(D) 2, 4 மட்டும் சரி
10. பொருத்துக.
பட்டியல் ஐ - பட்டியல் ஐஐ
a. நிரை கவர்தல் 1. உழிஞை
b. நிரை மீட்டல் 2. நொச்சி
c. எயில் காத்தல் 3. கரந்தை
d. எயில் வளைத்தல் 4. வெட்சி
குறியீடுகள்
a b c d
(A) 3 4 2 1
(B) 4 3 2 1
(C) 4 3 1 2
(D) 3 4 1 2
11. " AESTHETIC " என்ற ஆங்கிலச் சொல்லி தூய தமிழாக்கச் சொல்
(A) இயற்கை வனப்பு
(B) குடிக்கூலி
(C) மண்ணெண்ணை
(D) செயற்கை வனப்பு
12. பொருத்துக.
பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
a. வெஃகல் 1. பேராசை
b. வெகுளல் 2. கடுங்கோபம்
c. குறளை 3. புறங்கூறல்
d. பொல்லாக்காட்சி 4. தெளிவில்லாக்காட்சி
குறியீடுகள்
a b c d
(A) 1 2 3 4
(B) 1 3 2 4
(C) 4 2 3 1
(D) 3 1 2 4
13. வீரனும் தடுமாறுவான் இது?
(A) உயர்வு சிறப்பும்மை
(B) முற்றும்மை
(C) இழிவு சிறப்பும்மை
(D) எண்ணும்மை
14. ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய முழு விபரங்களையும் தரும் படம்
(A) விளக்கப்படம்
(B) கல்விப் படம்
(C) செய்திப் படம்
(D) கருத்துப்படம்
15. ‘இந்திரதேச சரித்திரம்’ -என்ற நூலின் ஆசிரியர்
(A) அயோத்திதாசப் பண்டிதர்
(B) பாரதியார்
(C) வில்லிப் புத்தூரார்
(D) வீரமாமுனிவர்
16. சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ, கைத்தோல் உரியகல்லுடைக்கும் போதுஎன் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ – இவ்வரியுடன் தொடர்புடையவர் யார்?
(A) அண்ணா
(B) பாரதியார்
(C) சுப்ரமணிய ஐயர்
(D) சிதம்பரம் பிள்ளை
17. "பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது" - என்றுக் கூறியவர் யார்?
(A) பெரியார்
(B) பாரதியார்
(C) அம்பேத்கர்
(D) காமராசர்
18. ரூபாவதி, கலாவதி முதலிய நாடகங்களை எழுதியவர்
(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) சூரிய நாராயண சாஸ்திரி
(C) பம்மல் சம்பந்தனார்
(D) தி.க. சண்முகனார்
19. உப்புக்காக, உரிமைக்காக, ஓற்றுமைக்காக, சமத்துவத்திற்காக, வன்முறைக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடியவர் யார்?
(A) அண்ணல் காந்தியடிகள்
(B) இராஜாஜி
(C) ஆச்சார்யவினோபாவே
(D) பெரியார்
20. வன்முறையை தடுக்கும் வழிகளாக காந்தியடிகள் கூறுவது
(A) அருள், மருள்
(B) அன்பு, அருள்
(C) அன்பு, பண்பு
(D) பண்பு, அருள்
21. தவறாக பொருந்தியுள்ளவற்றை கண்டறிக.
(A) போர்க்களத்து மிக்கேள் செருவென்றாவது - வஞ்சி
(B) உட்காது எதிரூன்றல் - காஞ்சி
(C) அதிரப் பெருவது - தும்பை
(D) எயில் வளைத்தாலாகும் - உழிஞை
22. வாக்கியங்களை ஆராய்ந்து சரியானவை எவை எனக் கண்டறிக.
2. சொற்கள் ஒன்றுபட்டு நிற்பது - இரட்டைக்கிளவி
3. இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர்
4. சொற்கள் பிரித்தால் பொருள் தருவது இரட்டைக்கிளவி
(A) 1 மற்றும் 2
(B) 2 மற்றும்3
(C) 3 மற்றும் 4
(D) 1 மற்றும்
23. "வலவன் ஏவா வானூர்தி" - என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?
(A) புறநானூறு
(B) பதிற்றுப்பத்து
(C) திருவாசகம்
(D) கம்பராமாயணம்
24. அந்தக்கேணியும் எந்திரக் கிணறும் என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) பதிற்றுப் பத்து
(B) பெருங்கதை
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
25. "உடம்பார் அழியின்; உயிரார் அழிவர்" என்று பாடியவர் யார்?
(A) திருமூலர்
(B) ஔவையார்
(C) திருவள்ளுவர்
(D) கம்பர்
26. சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து - யார்?
(A) அயோத்திதாசப் பண்டிதர்
(B) பாரதியார்
(C) பெரியார்
(D) அம்பேத்கர்
27. "தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் அம்பேத்கர்"- என்று கூறியவர் யார்?
(B) நேரு
(C) இராசேந்திர பிரசாத்
(D) பாரதியார்
28. "ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணிணும் உள" -என்ற பாடல்வரிகளுக்குரியவர் யார்?
(B) ஔவையார்
(C) திருநாவுக்கரசர்
(D) கம்பர்
29. மரூஉச் சொற்கள் நீங்கிய சொல்லைத் தேர்க
(A) ஆர்க்காடு
(B) மதிரை
(C) கொரநாடு
(D) குறிச்சி
30. வழுஉச்சொற்கள் நீங்கிய சொல்லைத் தேர்க.
(A) அவை அன்று
(B) முழித்தான்
(C) பொன்னாங்காணி
(D) மணத்தக்காளி
31. பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
a. பொருட்பெயர் 1. கொங்கன்
b. இடப்பெயர் 2. ஈவான்
c. தொழிற்பெயர் 3. அந்தணன்
d. பண்புப்பெயர் 4. அத்திகோசத்தான்
குறியீடுகள்
a b c d
(A) 1 2 3 4
(B) 4 1 2 3
(C) 4 2 3 1
(D) 3 1 2 4
32. நெடுங்கடலும் தண்ணீமை என்னும் நீரியல் அறிவுப் பற்றிக் கூறும் நூல் எது?
(B) புறநானூறு
(C) பெருங்கதை
(D) திருக்குறள்
33. "வறிது நிலைஇய காயமும் "- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) திருவாசகம்
(B) புறநானூறு
(C) பெருங்கதை
(D) திருக்குறள்
34. பொருத்துக.
a. Weedicide 1. களைக்கொல்லி
b. Insecticide 2. உயிர்க்கொல்லி
c. Fungicide 3. பூஞ்சைக்கொல்லி
d. Pesticide 4. பூச்சிக்கொல்லி
குறியீடுகள்
a b c d
(A) 2 1 3 4
(B) 1 2 4 3
(C) 4 2 3 1
(D) 1 2 3 4
35. இறுதியில் தனிச்சொல் பெற்று ஒரு விகற்பத்தானும் இருவிகற்பத்தானும் மூன்றடிகளாய் வருவது
(A) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
(B) பஃறொடை வெண்பா
(C) இன்னிசை வெண்பா
(D) நேரிசை சிந்தியல் வெண்பா
36. மாணவர்களே! உங்களுக்கு சீருடை இல்லையோ? என கேட்பது?
(A) ஏவல் வினா
(B) கொளல் வினா
(C) கொடை வினா
(D) அறி வினா
37. "இன்று தொட்டிவண் நெறியினில் உயிர் செகுத்திடுவ தென்று" செகுத்திடுவ தென்று சொல்லின் இலக்கணத்தைக் கண்டறிக.
(A) வேற்றுமைத்தொகை
(B) பண்புத்தொகை
(C) உவமைத்தொகை
(D) அன்மொழித்தொகை
38. "ஒருமைத்தோற்றத்து ஐவேறு வனப்பின்" - எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
(A) மணிமேகலை
(B) சீவகசிந்தாமணி
(C) சிலப்பதிகாரம்
(D) புறநானூறு
39. வாதம், பித்தம்…… ஆகிய மூன்றின் சமநிலையே உடலின் உறுதிக்குக் காரணம்
(A) வைத்தியம்
(B) கபம்
(C) சித்தம்
(D) சீதம்
40. "வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்", என்ற கவிஞர்
(A) பாரதியார்
(B) தாராபாரதி
(C) பாரதிதாசன்
(D) சுத்தானந்த பாரதியார்
41. ‘ஊனுக்கு ஊன்’ என்னும் மருத்துவ முறையைக் கூறும் தமிழ் நூல்
(A) திருவாசகம்
(B) மணிமேகலை
(C) திருக்குறள்
(D) கண்ணப்பன் வரலாறு
42. கீழ்க்கண்டவற்றை வரிசைப்படுத்துக
1. கரந்தைத் திணை
2. உழிஞைத் திணை
3. வெட்சித் திணை
4. பெருந்திணை
5. பொதுவியல் திணை
6. வாகைத் திணை
(A) 3, 1, 2, 6, 4, 5
(B) 3, 1, 2, 6, 5, 4
(C) 1, 3, 2, 6, 5, 4
(D) 1, 2, 3, 4, 5, 6
43. கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் - இதில் உள்ள அணியைச் சுட்டுக.
(A) தற்குறிப்பேற்ற அணி
(B) சொற்பொருள் பின்வருநிலை அணி
(C) வஞ்சப்புகழ்ச்சி அணி
(D) இரட்டுற மொழிதல் அணி
44. "மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்"" - என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
(A) திருவாசகம்
(B) புறநானூறு
(C) மணிமேகலை
(D) சிலப்பதிகாரம்
45. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனிக்க.
கூற்று (I) : நான்கு சீர் கொண்ட ஓரடியில் மோனை முதலான தொடைகளைத் தொடுப்பது விகற்பத் தொடை எனப்படும்
கூற்று (II) : இரட்டை, அந்தாதி மற்றும் செந்தொடை இம் மூன்றும் விகற்ப தொடையில் வரும் இவற்றுள் சரியானவற்றை தேர்க.
(A) கூற்றுகள் (I) மற்றும் (II) இரண்டும் சரி
(B) கூற்றுகள் (I) மற்றும் (II) இரண்டுமே தவறு
(C) கூற்று (I) சரி, கூற்று (II) தவறு
(D) கூற்று (I) தவறு, கூற்று (II) சரி
46. பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
a. குன்றேறி 1. இரண்டாம் வேற்றுமைத்தொகை
b. கால்மடித்து 2. ஆறாம் வேற்றுமைத்தொகை
c. நின்கோள் 3. ஏழாம் வேற்றுமைத்தொகை
d. என்கால் 4. நான்காம் வேற்றுமைத்தொகை
குறியீடுகள்
a b c d
(A) 3 1 2 4
(B) 4 2 1 3
(C) 3 1 4 2
(D) 2 3 4 1
47. "உடம்பிடைத் தோன்றித் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி" - பாடல்வரிகளுக்குரியவர் யார்?
(B) சீத்தலைச்சாத்தனார்
(C) மாணிக்க வாசகர்
(D) திருவள்ளுவர்
48. 1876, மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம்
(B) நிப்பூர்
(C) ஆதிச்சநல்லூர்
(D) தருமபுரி
49. ‘தொல்லியல்’ என்பதின் ஆங்கில சொல் எது?
(A) ஆர்த்தாலஜி
(B) ஆர்க்கியாலஜி
(C) ஆல்காலஜி
(D) ஆர்யாலஜி
50. திருவண்ணாமலையில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற கல்வெட்டில் குறிப்பிடப்படும் நூல் எது?
(A) சிறுபாணாற்றுப்படை
(B) பெரும்பாணாற்றுப்படை
(C) கூத்தராற்றுப்படை
(D) பொருநராற்றுப்படை
51. சந்திப்பிழையை நீக்கி தேர்க.
(A) பிடித்த கதையைப் படித்தபின் சுருக்கிச் சொன்னான்
(B) பிடித்தக் கதையைப் படித்தபின் சுருக்கிச் சொன்னான்
(C) பிடித்த கதையைப் படித்தபின் சுருக்கிச் சொன்னான்
(D) பிடித்தக் கதையை படித்தபின் சுருக்கிச் சொன்னான்
52. எயிற்போர் என்பது?
(A) வஞ்சி மற்றும் காஞ்சி
(B) நொச்சி மற்றும் உழிஞை
(C) கரந்தை மற்றும் காஞ்சி
(D) உழிஞை மற்றும் தும்பை
53. நேற்றிரவு நல்ல மழைபெய்தது. ஆதனால் ஏரி குளங்கள் நிரம்பின
(A) கலவை வாக்கியம்
(B) தொடர் வாக்கியம்
(C) தனி வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
54. "பண்ணொடு தமிழொப்பாய்" - எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) திருப்பள்ளியெழுச்சி
(D) தேவாரம்
55. "மனித நாகரிகத் தொட்டில்" என அழைக்கப்படுவது
(A) தமிழ்நாடு
(B) சிந்து சமவெளி
(C) இலெமுரியா
(D) ஹரப்பா, மொகஞ்சதாரோ
56. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"" - பாடலின் ஆசிரியர் யார்?
(A) பாரதிதாசன்
(B) இளங்கோவடிகள்
(C) பாரதியார்
(D) பரஞ்சோதிமுனிவர்
57. "திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்" - பாடலின் ஆசிரியர் யார்?
(A) பாரதிதாசன்
(B) இளங்கோவடிகள்
(C) பாரதியார்
(D) பாவாணர்
58. பண்டையத் தமிழ் வாணிபர்கள் பற்றியப் பொருந்தாத கருத்து
(A) அறத்தின் வழி வாணிபம் செய்தனர்
(B) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்
(C) கொள்வதும் குறைபடாது, கொடுப்பதும் மிகை கொளாது
(D) உள், வெளி நாட்டிலும் பொருளீட்டினார்கள்
59. தமிழ் வேலி, தமிழ்கெழு கூடல் என்று சங்க நூல்கள் எதனைக் குறிக்கின்றன
(A) காவிரிப் பூம்பட்டினம்
(B) பஃறுளி ஆறு
(C) மதுரை தமிழ்ச்சங்கம்
(D) கூடலூர்
60. "கூடலில் ஆய்ந்த ஒண்தீந்" தமிழின் என்று கூறுவது எந்நூல்?
(A) புறநானூறு
(B) பரிபாடல்
(C) பட்டினப்பாலை
(D) திருவாசகம்
61. "நீரின் பந்த நிமிர்பரிப் பரவியும்
காலின் வந்த கருங்கறி மூட்டையும்" - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) பட்டினப் பாலை
(B) மதுரைக் காஞ்சி
(C) பரிபாடல்
(D) புறநானூறு
62. "உ" என்ற ஓரெழுத்து ஒரு மொழியில் அடங்காதது
(A) உமையாள்
(B) பிரம்மன்
(C) சிவன்
(D) குபேரன்
63. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
(A) நான் பார்த்தது அவைகள் அன்று
(B) நான் பார்த்தது அவை அன்று
(C) நான் பார்த்தது அது அல்ல
(D) நான் பார்த்தது அது அன்று
64. தன்வினைவாக்கியத்தைக் கண்டறிக.
(A) உலகநாதன் படியில் உருட்டினான்
(B) உலகநாதன் படியில் உருண்டான்
(C) உலகநாதன் படியில் உருட்டுவித்தான்
(D) உலகநாதன் படியில் உருட்டுவான்
65. உலகில் …. உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்தவிட்ட தென்பர்
(A) மொழி
(B) இலக்கணம்
(C) இலக்கியம்
(D) எழுத்து
66. நரம்பின் மறை - இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) திருக்குறள்
(D) புறநானூறு
67. சிவவாக்கியன் நாள் தோறும் கோயிலுக்குச் செல்வான் - இதன் பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
(A) சிவவாக்கியன் நாள் தோறும் கோயிலுக்குச் செல்வான்
(B) சிவவாக்கியன் சில நாள் மட்டுமே கோயிலுக்குச் செல்ல மாட்டான்
(C) சிவவாகிக்கியன் நாள் தோறும் கோயிலுக்குச் செல்ல மாட்டான்
(D) சிவவாக்கியன் சில நாள் மட்டுமே கோயிலுக்குச் செல்வான்
68. பயிர் நன்றாக வளர்ந்தது - எவ்வகை வாக்கியம்
(A) செய்வினை
(B) பிறவினை
(C) செயப்பாட்டு வினை
(D) தன்வினை
69. "கா" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) சரஸ்வதி
(B) இலக்குமி
(C) துர்கை
(D) உமையாள்
70. இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று பாடுவது
(A) தொட்டில் குழந்தையைப் பாடுவது
(B) தொழில் செய்யும் போது பாடுவது
(C) பிறந்தவரைப் பாடுவது
(D) இறந்தவரைப் பாடுவது
71. இன்றைய கர்நாடக இசைக்கு தாய்
(A) சமஸ்கிருத இசை
(B) தெலுங்கிசை
(C) தமிழிசை
(D) கன்னட இசை
72. எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் வினைச்சொற்கள்
(A) வினைமுற்று
(B) வினைச்சொல்
(C) பெயரெச்சம்
(D) வினையெச்சம்
73. கார் வேந்தன் கோளோக்க வாழுங்குடி போன்றிருந்தேனே - இதில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
(A) இரண்டாம் வேற்றுமைத் தொகை, வினையெச்சம்
(B) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை, பெயரெச்சம்
(C) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை, வினையெச்சம்
(D) இரண்டாம் வேற்றுமைத் தொகை, பெயரெச்சம்
74. சரியாக பொருந்தியுள்ளவற்றுள் தவறானதைக் கண்டறிக.
(A) எவ்விடம் = எவ் + இடம்
(B) கரணத்தேர் = கரணத்து + ஏர்
(C) விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
(D) பாவிசை = பா + விசை
75. குழலினிது, யாழினிது என்று இசைபொழியும் கருவிகளைப் போற்றும் புலவர் யார்?
(A) வள்ளலார்
(B) தொல்காப்பியர்
(C) திருவள்ளுவர்
(D) அகத்தியர்
76. "பால்மணம் மாறாச் சிறுமகன் தன்னைச் செருக்களம் நோக்கிப் பகைத்திறம் மாய்க்க விடுத்த தமிழச்சி" - என்றுப் பாடியப் பெண்பாற் புலவர் யார்?
(A) பொன் முடியார்
(B) ஔவையார்
(C) ஓக்கூர் மாசாத்தியார்
(D) வெண்ணிக் குயத்தியார்
77. உற்றநோய் நீக்கி உறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் - இக்குறட்பாவில் அமைந்துள்ள அளபெடைச் சொல்லைக் கண்டறிக.
(A) இன்னிசை அளபெடை
(B) சொல்லிசை அளபெடை
(C) இசைநிறை அளபெடை
(D) ஒற்றளபெடை
78. ‘படுகொலைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத்து’ இவ்வடியில் உள்ள இலக்கணக் குறிப்பு
(A) இரண்டாம் வேற்றுமைத்தொகை
(B) இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்கத் தொகையும்
(C) மூன்றாம் வேற்றுமைத் தொகை
(D) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
79. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது ------------------ எனப்படும்
(A) சீர்
(B) தளை
(C) அடி
(D) தொடை
80. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் கூறியவர் யார்?
(B) முத்துவீரப்பன்
(C) அயோத்திதாசப் பண்டிதர்
(D) விஜய ரங்க சொக்கநாதர்
81. "உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" - என்று கூறம் நூல் எது?
(A) மணிமேகலை
(B) முதல் சமயக் காப்பியம்
(C) புறநானூறு
(D) அனைத்தும் சரி
82. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" - யாருடைய மேற்கோள்?
(A) அறிஞர் அண்ணா
(B) காமராசர்
(C) அயோத்திதாசப் பண்டிதர்
(D) அம்பேத்கர்
83. ‘புரட்சித் துறவி’ என்று அழைக்கப்படுபவர்
(A) இளங்கோவடிகள்
(B) வள்ளலார்
(C) மாணிக்க வாசகர்
(D) மணிமேகலை
84. "இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்" - என்றவர் யார்?
(A) இராமலிங்கர்
(B) வேலாயுத முதலியார்
(C) திகம்பர சாமியார்
(D) தியாகராஜ தேசிகர்
85. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"
(A) செய்தி வாக்கியம்
(B) உணர்ச்சி வாக்கியம்
(C) கலவை வாக்கியம்
(D) தொடர் வாக்கியம்
86. “Green Proof” என்பதன் தூய தமிழாக்கச் சொல்
(A) பச்சைபொய்
(B) திருத்தப்படாத அச்சுப்படிவம்
(C) திருத்தப்பட்ட அச்சப்படிவம்
(D) உண்மைச்சாட்சி
87. பிரித்து எழுதுக. "ஏறாண்முல்லை"
(A) ஏறா + ஆண் + முல்லை
(B) ஏறாண் + முல்லை
(C) ஏண் + முல்லை
(D) ஏறு + ஆண்+ முல்லை
88. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்", என்று பாடியவர் யார்?
(A) இராமலிங்கர்
(B) ஔவையார்
(C) திருவள்ளுவர்
(D) பாரதியார்
89. எழுத்தறியும் பெருமான் மாலையின் பாட்டுடைத் தலைவன்
(A) கந்தக்கோட்டத்து முருகன்
(B) திருவொற்றியூர் சிவன்
(C) தென்கமலை ஈசனார்
(D) தில்லை நடராசர்
90. "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"- என வற்புறுத்தியவர் யார்?
(A) புரட்சிக் கவி
(B) புதுவைக் கவி
(C) சன்மார்க்க கவி
(D) தெய்வப்புலவர்
91. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து, பொருத்தமான விடையைத் தேர்க.
1. நிலைமொழி உயிரிற்றுச் சொல்லின் பின் வல்லினம் மிகும்.
2. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகம்.
3. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
(A) 1 மட்டும் சரி
(B) 1, 3 மட்டும் சரி
(C) 1, 2 மட்டும் சரி
(D) அனைத்தும் சரி
92. ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளுள் ஒன்றைக் கொண்டும் இயற்சீர், வெண்சீர் ஆகியவற்றைப் பெற்று வருவது.
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
93. "கருவைப் போற்றிய குருமணி" - என்ற தொடருக்கு உரியவர் யார்?
(A) அம்பேத்கர்
(B) உ. வே. சா
(C) காத்தவராயன்
(D) வள்ளலார்
94. களிறு எறிந்துப் பெயர்தல் காளைக்குக் கடனே என்னும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பொன் முடியார்
(B) ஔவையார்
(C) ஓக்கூர் மாசாத்தியர்
(D) வெண்ணிக் குயத்தியார்
95. பஞ்சமர் பள்ளிகள்தொடங்கக் காரணமானவர் யார்?
(A) அம்பேத்கர்
(B) பெரியார்
(C) வள்ளலார்
(D) அயோத்திதாசப் பண்டிதர்
96. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்
தொன்றுண்டாகச் செய்வான் வினை - இக்குறளில் பயின்று வரும் அணியைச் சுட்டுக.
(A) உருவக அணி
(B) எடுத்துக்காட்டு உவயைணி
(C) உவமை அணி
(D) வேற்றுமை அணி
97. சரியான பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தறிதலைக் கண்டறிக
(A) அறியாமை = அறி + ஆ + மை
(B) அறியாமை = அறியா + ஆ + மை
(C) அறியாமை = அறி + ய் + ஆமை
(D) அறியாமை = அறி + ய் + ஆ + மை
98. கீழ்க்கண்டவற்றில் எது ஆகுபெயர் வகைகளில் சார்ந்தது அல்ல?
(A) உடைந்த ஏரியை பார்த்த மக்கள் திரண்டனர்
(B) இவ்வாடைகளை தலைகொன்றாக குடு
(C) தைப்பொங்கலுக்கு வெள்ளை அடிப்பர்
(D) தேன்மொழி டிசம்பர் சூடி வந்தாள்
99. "வரும் வண்டி" - இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன?
(A) 2 1/2
(B) 2 1/4
(C) 3
(D) 2 3/4
100. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்கள்
(A) பரிதிமாற்கலைஞர்
(B) உ.வே. சாமிநாதன்
(C) இராகவனார்
(D) அனைத்தும் சரி