வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்

 

1. , , உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.
+ பையன் = அப்பையன்
+ செடி = இச்செடி
+ பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; அப்படி, இப்படி, எப்படி என்னும் சுட்டு வினாச்சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக் கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச் சென்றான்.

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.
தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை
10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை

12. , ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.
ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
சால + பேசினான் = சாலப்பேசினான்.
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
என + கூறினான் = எனக் கூறினான்.
இனி + காண்போம் = இனிக் காண்போம்.


வல்லினம் மிகா இடங்கள்


1. அதுஇது, அவைஇவை  என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. , , ஓ என்னும் வினா எழுத்துகளின்பின் வல்லினம் மிகாது.
அவனா + சென்றான் = அவனா சென்றான்.
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்.
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது.
மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.
4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்
5. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறுகாய்
சுடு + சோறு = சுடுசோறு

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
கபிலபரணர்
இரவுபகல்

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
தமிழ்+ கற்றார் = தமிழ் கற்றார்.
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் ( ஒடு, ஓடு ) வல்லினம் மிகாது.
பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்

10. வியங்கோள் வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்

சிறிய + பெண் = சிறிய பெண்

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post