ABOUT US

 உலகெங்கிலும் வாழும் தமிழர்கள், தமிழை பிழையின்றி பேசவும் எழுதவும் தமிழ் இலக்கணம் பயன்படுகிறது. தமிழரின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை காட்டும் காலக்கண்ணாடியாக தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன.

உழைப்பால் முன்னேற வேண்டும், உழைத்து வாழ வேண்டும் என நினைத்து, அதற்கான அறிவையும், உடல் உழைப்பினையும் செலுத்தி உலகில் செய்யப்படும் எந்த விதமான தொழிலும் போற்றத்தக்கவையே. எனினும் "காலனா காசானாலும் அரசாங்க உத்தியோகம் வேண்டும்" என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழ்நாடு அரசினைப் பொறுத்தமட்டில் போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் முகமையாக "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" Tamil Nadu Public Service Commission (TNPSC) விளங்குகிறது. இந்த TNPSC மூலமாகவே தமிழ்நாடு அரசின் பல துறைகளுக்கு இளநிலை உதவியாளர் முதல் உதவி ஆட்சியர் வரையில் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வுகள் Group I, Group II, Group III, Group IV, Group VII என்ற நிலைகளில்  நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு "பொதுத்தமிழ்" என்ற பாடம் முக்கிய பாடமாக இருக்கிறது. இந்த பொதுத்தமிழ் தாளில் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்த வினாக்கள் இடம் பெறுகின்றன. 

இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் இருக்கும் வகையில்,   இந்த போட்டித் தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர் என்ற முறையில், நம்மைப் போல் மற்றவர்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்று சமூகத்தில் மதிக்கத் தக்க மனிதர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த வலைதளப் பக்கத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பதிவுகள் இடப்படுகின்றன.  

இந்த தேர்வுகளுக்கு பொதுத்தமிழ் என்ற தாளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரையறுத்துள்ள பாடதிட்டத்தின்படி ஒவ்வொரு தலைப்பிற்கும் தேவையான பாடக்குறிப்புகளும், அதற்கேற்ற மாதிரி வினாத்தாளும் இந்த வலைதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாக தலைப்புவாரியாக பாடக்குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அவ்வப்பொழுது பாடத்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பாடக்குறிப்புகளில் தேவையான மாற்றங்களுடனும், கூடுதல் விவரங்களுடனும் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவுகள் இடப்படும்.

இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பொதுத்தமிழ் என்ற தாளில் தேர்ச்சி பெறுவதற்கும், தமிழரின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கும், தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு, அவர்களின் தியாகம் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை இந்த வலைதளப் பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் இலக்கணத்தையும், தமிழ் புலவர்கள், தமிழ்ச் சான்றோர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த வலைதளப் பக்கம் பேருதவியாக இருக்கும்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் பொதுத் தமிழ் தாளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை இந்த வலைதளப் பக்கத்தில் இலவசமாக படிக்கலாம் மற்றும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தவிர தமிழ்ச்சமூகம் தமிழனின் பெருமையையும், தமிழ் மொழியின் இனிமையையும், தமிழ்ச்சான்றோர்களைப் பற்றியும், தமிழுக்கு தொண்டு செய்த வெளிநாட்டு பிறமொழி அறிஞர்கள் பற்றியும் அறிந்து கொள்ள இந்த வலைதளப் பக்கம் உதவியாக இருக்கும். 


                                                                                        அன்புடன்

                                                                                    கு.திருஞானம்

"தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து"

தொடர்புக்கு - 8643079556

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post