3- TNPSC GROUP -2 Genaral Tamil Model Question Paper - 3 (2022 New Syllabus), கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 3

 

TNPSC GROUP II & IV 

GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 3

WITH ANSWER KEY 

 கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 3

விடையுடன் இலவச பதிவிறக்கம்

புதிய பாடத்திட்டம் (2022) 

மாதிரி வினாத்தாள் 3-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

பகுதி (அ)

1. பிரித்தெழுதுக

பகுதி (ஆ)

2. கம்ப ராமாயணம் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பாவகை, சிறந்த தொடர்கள்.

பகுதி (இ)

3. புதுக் கவிதை -  ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, ரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

----------------------------------------------------------------

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அன்பு சொந்தங்களே !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொதுத்தமிழ் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் - 3 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

👇

CLICK HERE FOR PDF DOWNLOAD

மாதிரி வினாத்தாள் - 3


For all online test Click Here 👉 CLICK HERE

மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)















மாதிரி வினாத்தாள் -3  👇

மாதிரி வினாத்தாள்- 3 (100 வினாக்கள்)

1. புதுக்கவிதை வளர்ச்சியில் போற்றத்தக்க பங்காற்றியவர் யார் ?

A) வல்லிக்கண்ணன்

B) பாரதியார்

C) ந.பிச்சமூர்த்தி

D) புதுமைப்பித்தன்



2. வால்ட்விட்மனின் சாயலில் வசனகவிதை எழுதியவர் யார் ?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) வல்லிக்கண்ணன்

D) ந.பிச்சமூர்த்தி



3. எவரின் உரைநடைகள் அனைத்தும் கவிதை நடை கொண்டதாக இருக்கின்றன ?

A) ஞானக்கூத்தன்

B) கல்யாண்ஜி

C) பாரதிதாசன்

D) கலாப்பிரியா



4. புதுக்கவிதையை பரவலாக்கப் பாடுபட்டவர் யார் ?

A) சாலை இளந்திரையன்

B) சாலினி இளந்திரையன்

C) A மற்றும் B

D) வானம்பாடிக் குழுவினர்



5. பொருத்துக

1. அன்று வேறு கிழமை - அ) பசுவய்யா

2. கைப்பிடியளவு கடல் - ஆ) ஞானக்கூத்தன்

3. பூக்காரி - இ) தருமுசிவராமு

4. ஜெஜெ சில குறிப்புகள் - ஈ) ந.பிச்சமூர்த்தி



1. 2. 3. 4.

A. ஆ இ ஈ அ

B. இ உ அ ஆ

C. ஆ இ அ ஈ

D. C இ ஈ ஆ





6. நிவேதனம் என்ற சொல்லின் பொருள் ?

A) படையலமுது

B) நெய்வேத்தியம்

C) இறைபொருள்

D) படையல்



7. இறந்த பின்னர் தம் உடலை மருத்துவமனைக்கு வழங்கிய தமிழ்ச்சான்றோர் யார் ?

A) ஆலந்தூர் மோகனரங்கன்

B) ந.பிச்சமூர்த்தி

C) ஈரோடு தமிழன்பன்

D) சாலை இளந்திரையன்



8. தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி எவர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது ?

A) இளங்கோவடிகள்

B) கம்பர்

C) சீத்தலைச் சாத்தனார்

D) பாரதியார்



9. கம்பரிடம் யான் கற்ற அரசியல் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) காமராஜர்

B) இராஜாஜி

C) ம.பொ.சிவஞானம்

D) அறிஞர் அண்ணா



10. சாலை இளந்திரையன் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக

A. தில்லி தமிழ்ப் பல்கலைகழகத்தில் தமிழாசிரியராக பணியாற்றினார்

B. எழுச்சிச் சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டவர்

C. தமிழனின் ஒரே கவிஞன், தமிழனே தலைமகன், தாய் எழில் தமிழ் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

D. தமிழகத்தின் ஓராசிரியர் பள்ளிகளை ஈராசியர் பள்ளிகளாக மாற பயணம் மேற்கொண்டார்



11. மாக்பெத்து என்ற ஆங்கில நாடகத்துடன் ஒப்பிடப்படும் நூல் எது ?

A) கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) திருக்குறள்

12. ந.பிச்சமூர்த்தி தொடர்பான தவறான கூற்றினை காண்க ?

A) பிறந்த ஊர் - திருச்சி

B) இயற்பெயர் - ந.வேங்கடமகாலிங்கம்

C) கதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் மற்றும் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார்.

D) காலம் - 15.08.1900 முதல் 04.12.1976



13. சிற்பி பாலசுப்பிரமணியம் தொடர்பான தவறான கூற்று எது ?

A) பிறந்த ஊர் - ஆத்துப்பொள்ளாட்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

B) பெற்றோர் - பொன்Dசாமி - கண்டியம்மாள்

C) எழுதிய நூல்கள் - செயல்மணக்கும் தோள்கள், நெஞ்நோடு நெஞ்சம்

D) பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.



14. கம்பராமாயண நிகழ்வினை வரிசைப்படுத்துக.

1. சீதைக்கு நல்லமொழி சொல்லி இணங்குவிக்குமாறு அரக்கியரை ஏவி இராவணன் சென்றான்.

2. இராவணனை சீதை கடிந்துரைத்து ஒதுக்கினாள்.

3. இராமதூதன் யான் என அனுமன் சீதைமுன் தோன்றி அடையாள மொழிகளைக்கூறி கணையாழியைத் தந்தான்

4. அசோகவனத்தில் சீதையிடம் இராவணன் வந்து உரையாடினான்.



A) 1, 2, 3, 4

B) 4, 2, 1, 3

C) 2, 3, 4, 1

D) 4, 1, 2, 3



15. சொற்களை ஒழுங்குபடத்தி சொற்றொடராக்குக.

A) பார்விட் டந்தர மடைந்தானன்றே அஞ்சலை அரக்க !

B) அரக்க அஞ்சலை ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே

C) அஞ்சலை அரக்க ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே

D) பார்விட் டந்தர அரக்க ! மடைந்தா னன்றே அஞ்சலை



16. முளரி என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?

A) மொட்டு

B) அரளிப்பூ

C) தாமரை

D) கோபம்

17. விற்பெருந் தடந்தோள் வீர ! வீங்குநீர் இலங்கை வெற்பில் என்ற கம்பராமாயண அடியில் விற்பெருந் தடந்தோள் வீர என்ற தொடர் யாரைக் குறிக்கும் ?

A) இராவணன்

B) இராமன்

C) இலக்குவன்

D) குகன்

18. சரியாண இணையை கண்டறிக.

A) தடந்தோள் - உவமைத் தொகை

B) தெண்டிரை - வினைத் தொகை

C) இப்பிறப்பு - ஏழாம் வேற்றுமைத் தொகை

D) உம்பி - உருவகம்



19. சரியற்ற இணையைக் கண்டறிக.

A) மொய்கழல் - வினைத் தொகை

B) பொன்னடி - பண்புத்தொகை

C) கண்ணின் நீர்க்கடல் - உருவகம்

D) தழீஇ - சொல்லிசையளபெடை



20. சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய எந்தநூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது ?

A) இலக்கியச் சிந்தனை

B) ஒரு கிராமத்து நதி

C) அலையும் சுவடும்

D) ஆகாயத்திற்கு அடுத்த வீடு



21. சீதாபிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் ?

A) ஒரு திங்கள்

B) அடுத்த திங்கள் கிழமை வரை

C) ஒரு வாரம்

D) ஈரேழு நாட்கள்



22. சுந்தரன் என்னும் பெயரில் இராமாயணத்தில் வழங்கப்பெறுபவர் ?

A) இராமன்

B) அனுமன்

C) இலக்குவன்

D) பரதன்



23. கம்பராமாயணம் தொடர்பான சரியற்ற கூற்றிணை காண்க. ?

A) இராமன் தன் கதாயுத ஆற்றலால் சீதையை மணந்தான்

B) கோசலையின் மகன் இராமன்

C) கைகேயியின் மகன் பரதன்

D) சுமத்திரையின் மகன் இலக்குவன் மற்றும் சத்துருக்கன்



24. கம்பராமாயணத்தின் முடிமணி என்று அழைக்கப்படுவது?

A) சீதையின் கற்புநெறி

B) சுந்தர காண்டம்

C) இரமன்

D) அனுமன்



25. சம்பரன் என்னும் அசுரனுடன் தசரதன் போரிட்ட போது தசரதனுக்கு தேரோட்டியது யார் ?

A) கைகேயி

B) இராமன்

C) விஸ்வாமித்திரர்

D) இலக்குவன்





26. எவரின் படைப்புகள் பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தன?

A) பாரதிதாசன்

B) சி.சு.செல்லப்பா

C) தேவதேவன்

D) ந.பிச்சமூர்த்தி



27. தவறாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) என்பணிந்த = என்பு + அணிந்த

B) யாதெனின் = யாது + எனின்

C) அணிவதாலல்லவோ = அணிவதால் + அல்லவே

D) புறந்தூய்மை = புறம் + தூய்மை



28. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைத் தேர்க

A) என்றுருகுவார் = என்று + உகுவார்

B) கசடற = கசட + அற

C) பயக்குமெனின்=பயக்கு + மெனின்

D) சேமமுற =சேமம் + உற



29. காயும் வில்லினன் கல்திரள் தோளினான் - இத்தொடரால் அறியப்படுபவன் யார் ?

A) இராமன்

B) இலக்குவன்

C) தசரதன்

D) குகன்



30. மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர் யார்

A) ந.பிச்சமூர்த்தி

B) சாலை இளந்திரையன்

C) ஆலந்தூர் மோகனரங்கன்

D) அப்துல் ரகுமான்



31. கம்பராமாயணம் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) இராமனைக் காணச் சென்றபோது குகன் தேDம் மீDம் கொண்டு சென்றான்.

B) குகன் சிருங்கிபேரம் என்Dம் நகரில் வாழும் தலைவன்

C) ஈராயிரம் படகுகளுக்கு தலைவன் குகன்

D) குகன் கங்கையாற்றின் தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்



32. சந்தியிலே நிற்கின்றார் ! ஊக்கம் ஊட்டி

சரியாக வழிநடத்தல் கடமை என்பேன்- இத்தொடரில் சந்தி என்ற சொல்லின் பொருள் ?

A) சந்தனம்

B) மேடை

C) கோவில்

D) தெருக்கள் கூடுமிடம்



33. கூவா முன்னம் இளையோன் குறுகுநீ

ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்- இவ்வடியில் இளையோன் என்பது யாரைக் குறிக்கும் ?

A) இலக்குவன்

B) பரதன்

C) சத்துருக்கன்

D) குகன்



34. அமலை என்ற சொல்லின் பொருள் ?

A) அமங்கலம்

B) மலர்மாலை

C) ஆரவாரம்

D) ஆதரவற்ற பெண்.



35. அசோகவனத்தில் சீதை அனுமனிடம் தந்த பொருள் எது ?

A) கணையாழி

B) ஆரம்

C) சூடாமணி

D) வில்அம்பு



36. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - மட அன்னக் கதியது செல

A) நீரையும் பாலையும் பிரித்தறிதல்

B) வேண்டாத வேலை

C) விரைவு

D) துன்பம்



37. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - மறையோர் எரியுறு மெழுகானார்

A) தியாகம்

B) பகை

C) அன்பு

D) துன்பம்



38. இமயம் எங்கள் காலடியில் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) ஆலந்தூர் மோகனரங்கன்

B) நா.காமராசன்

C) தாராபாரதி

D) அப்துல் ரகுமான்



39. "இறை" என்ற சொல்லின் பொருள்

A) இறைவன்

B) உணவு

C) சொல்

D) இவை அனைத்தும்



40. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) கரணத்தேர் = கரண + தேர்

B) கரணத்தேர் = கரணம் + தேர்

C) கரணத்தேர் = கரணம் + ஏர்

D) கரணத்தேர்= கரணத்து + ஏர்



41. தவறாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) எண்கினங்கள்= எண்கு + இனங்கள்

B) மாதிரத்துறை = மாதிரத்து + உறை

C) தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்

D) மந்தராசலம் = மந்தரா + சலம்



42. தவறாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) எங்குறைவீர்= எங்கு + உறைவீர்

B) கண்டபோதெல்லாம்= கண்டபோது + எல்லாம்

C) நன்கணியர்= நன்மை + கணியர்

D) வீடுதோறிரந்தும்= வீடுதோறும் + இரந்தும்



43. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) புடைத்தென்னார் = புடை + தென்னார்

B) நுண்ணறிவு = நுண்மை + அறிவு

C) நேருற= நேர் + உற

D) இணையதளம் = இணைய + தளம்



44. தவறாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) புத்துயுரூட்டி = புது + உயிர் + Cட்டி

B) தாய்மையன் பிறனை= தாய்மை + அன்பின் + தனை

C) பேரறிவு= பெருமை + அறிவு

D) ஐயாயிரம்= ஐந்து + ஆயிரம்



45. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) குவையெனக்கு = கு + வை + எனக்கு

B) செங்கதிரவன்= செம்மை + கதிரவன்

C) நூற்றாண்டு = நூற்று + ஆண்டு

D) ஏட்டிலக்கியம் = ஏட்டு + இலக்கியம்



46. தவறாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) அமுதகிரணம்= அமுதம் + கிரணம்

B) வன்பாற்கண்=வான்பல் + கண்

C) போதவிழ் = போது + அவிழ்

D) ஒற்றைக்கால் = ஒற்றை + கால்



47. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) வேறில்லை =வேர் + இல்லை

B) திரிந்தற்று= திரிந்து + அற்று

C) குரங்கரசர்= குரங்கும் + அரசர்

D) மக்கட்பண்பு = மக்கட் + பண்பு



48. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க ?

A) புகுந்தீங்கு = புகுந்தி + ஈங்கு

B) புகுந்தீங்கு = புகும் + தீங்கு

C) புகுந்தீங்கு = புகு + தீங்கு

D) புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு



49. சரியான எதிர்ச்சொல் தருக - மேதகை

A) கீழ்தகை

B) வருதகை

C) இழிதகை

D) மூடர்



50. தாய்மையன் பிறனை என்ற சொல் எவ்வாறு பிரியும்?

A) தாய்மை + அன்பு + அதனை

B) தாய்மையன்பின் + தனை

C) தாய்மை + அன்பின் + தனை

D) தாய்மையன் + பிறனை

51. உள்ளது உள்ளபடி, காவல் துப்பாக்கி, ஏழாயிரம் எரிமலைகள் என்ற நூலை எழுதியவர் ?

A) ஆலந்தூர் மோகனரங்கன்

B) அப்துல் ரகுமான்

C) சாலை இளந்திரையன்

D) தேவதேவன்



52. பசும்பொற்சுடர் - பிரித்து எழுதுக

A) பசும்பொற் + சுடர்

B) பசும் + பொற்சுடர்

C) பசும்பொன் + சுடர்

D) பசுமை + பொன் + சுடர்



53. தவறாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) போக்கு = போ + கு

B) நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை

C) தவிப்பெய்தி = தவிப்பு + எய்தி

D) காண்டகு = காண்ட + கு



54. பொருத்துக

1. சாயாவனம் - அ) அப்துல் ரகுமான்

2. பால் வீதி - ஆ) மு.மேத்தா

3. கண்ணீர் பூக்கள் - இ) நா. காமராசன்

4. கருப்பு மலர்கள் - ஈ) சா. கந்தசாமி

1. 2. 3. 4.

A. ஈ அ ஆ இ

B. இ ஈ அ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ



55. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) வெவ்விருப்பாணி= வெம்மை + இரும்பு + ஆணி

B) மென்கண் = மென் + கண்

C) பெரும்பெயர்= பெரும் + பெயர்

D) நெடுநீர் = நெடு + நீர்



56. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) நடவாமை = நடாவா + மை

B) காண்டகு= காண் + தகு

C) குருசேற்றி= குரு + சேற்றி

D) தோற்றரவு = தோற்ற + அரவு



57. தோமறுமாக்கலை என்று அழைக்கப்படும் நூல் எது?

A) கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) சீவகசிந்தாமணி



58. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A) இயல்பீராறு = இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு

B) நன்மொழி = நல் + மொழி

C) எனக்கிடர்= என + கிடர்

D) நல்லறம் = நல் + அறம்



59. தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுதி எது ?

A) ந.பிச்சமூர்த்தி கவிதைகள்

B) புதுக்குரல்கள்

C) குலத்தங்கரை அரசமரம்

D) மங்கையர்கரசியின் காதல்



60. எழுத்து என்ற இதழை தொடங்கியவர் யார் ?

A) சிலம்பொலியார்

B) சிலம்புச் செல்வர்

C) திருக்குறளார்

D) கவியரசு



61. சுடுபூக்கள், தீபாவளிப் பகல், இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் என்ற நூல்களை எழுதியவர் யார் ?

A) லட்சுமி

B) மீரா

C) கலாப்பிரியா

D) ரா.மீனாட்சி



62. இருமுறை சாகித்ய அகாடமி பரிசினைப் பெற்ற கவிஞர் யார்

A) சிற்பி

B) டாக்டர் மு.வ

C) ந.காமராசன்

D) அப்துல் ரகுமான்



63. தொன்மம் என்ற இலக்கிய உக்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர் யார் ?

A) ஆலந்தூர் மோகரங்கன்

B) சி.மணி

C) அப்துல் ரகுமான்

D) ஞானக்கூத்தன்



64. விடிந்தும் விடியாத பொழுது என்ற நூலை எழுதியவர் யார் ?

A) ஆலந்தூர் மோகரங்கன்

B) சி.மணி

C) அப்துல் ரகுமான்

D) தேவதேவன்



65. எழுத்து சீர்திருத்த மாநாட்டை நடத்தியவர் யார்

A) சாலை இளந்திரையன்

B) கால்டுவெல்

C) வீரமாமுனிவர்

D) ஜி.யு.போப்



66. தனது கல்லூரி முதல்வர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் என்பவருக்கு எந்த இலக்கியத்தில் இடம்பெற்ற பாடல் வரியின் மூலம் பரிதிமாற்கலைஞர் தமிழின் பெருமையை உணர்த்தினார் ?

A) திருக்குறள்

B) கம்பராமாயணம்

C) திருவாசகம்

D) புறநானூறு



67. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர் யார் ?

A) ந. பிச்சமூர்த்தி

B) கு.ப.இராசகோபாலன்

C) க.நா.சுப்பிரமணியன்

D) சாலை இளந்திரையன்



68. கம்பராமாயணத்தின் குகப்படலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் எது ?

A) இயற்கைப் படலம்

B) ஐவர் படலம்

C) தூதுப் படலம்

D) கங்கைப் படலம்

69. கைப்பிடியளவு கடல் என்ற நூலை எழுதியவர்.

A) முடியரசன்

B) சாண்டில்யன்

C) பசுவய்யா

D) தருமு சிவராமு



70. தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பை வெளியிட்டவர் யார்?

A) ஞானக்கூத்தன்

B) பசுவய்யா

C) ஈரோடு தமிழன்பன்

D) தேவதேவன்



71. மு.மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது ?

A) காற்றை மிரட்டிய சருகுகள்

B) இதயத்தில் நாற்காலி

C) ஆகாயத்திற்கு அடுத்த வீடு

D) காத்திருந்த காற்று



72. சிறுகதையின் வள்ளுவர் என அழைக்கப்படுபவர் யார் ?

A) புதுமைப்பித்தன்

B) வ.வே.சு ஐயர்

C) கு.ப.ராஜ கோபாலன்

D) மௌனி



73. திருவள்ளுவர் என்ற நூலை இயற்றியவர் யார் ?

A) சோமசுந்தர பாரதியார்

B) அறிஞர் அண்ணா

C) தந்தை பெரியார்

D) தெய்வசிகாமணி



74. வீ. முனுசாமி அவர்களுக்கு திருக்குறளார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார் ?

A) தருமபுரம் ஆதீனத்தார்

B) உடையார் பாளையம் குறுநில மன்னர்

C) டாக்டர் கலைஞர்

D) தந்தை பெரியார்



75. பிரவேச கால பண்டிதர் என்ற பட்டத்தைப் பெற்றவர் யார் ?

A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

B) ஆறுமுக நாவலர்

C) கி. ராஜ நாராயணன்

D) மு.கதிரேச செட்டியார்.



76. பொருந்தாத இணையைக் காண்க

A) உருவகக் கவிஞர் - நா. காமராசன்

B) உவமைக் கவிஞர் - சுரதா

C) படிமக் கவிஞர் - மு. மேத்தா

D) கரிசல் இலக்கியத் தந்தை - வைரமுத்து



77. தி.சு. சோமசுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழ்ச் சான்றோர் யார் ?

A) கலாப்ரியா

B) ஞானக்கூத்தன்

C) தேவதேவன்

D) கல்யாண்ஜி



78. தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்ற கவிஞர் யார் ?

A) அப்துல் ரகுமான்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) சி.சு.செல்லப்பா

D) கலாப்பிரியா



79. முதன் முதலில் புதுக்கவிதை எழுதியவர் யார் ?

A) வால்ட் விட்மன்

B) ந.பிச்சமூர்த்தி

C) பாரதியார்

D) தமிழன்பன்



80. புதுக்கவிதையில் குறியீடு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் யார் ?

A) அப்துல் ரகுமான்

B) பசுவய்யா

C) ரா.மீனாட்சி

D) தேவதேவன்



81. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) வண்ணதாசன்

B) புதுமைப் பித்தன்

C) மீ.ராசேந்திரன்

D) அகிலன்



82. ந.பிச்சமூர்த்தி பணியாற்றிய இதழ் எது ?

A) விமோசனம் மற்றும் நியூஇந்தியா

B) தென்றல் மற்றும் முல்லை

C) ஹனுமான் மற்றும் நவ இந்தியா

D) வீரநடய் அறிவியக்கம்



83. மனித வீறு என்ற இதழை நடத்தியவர் யார் ?

A) கல்யாண்ஜி

B) சாலினி இளந்திரையன்

C) தேவதேவன்

D) அப்துல் ரகுமான்



84. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற சாகித்ய அகடமி பரிசினைப் பெற்ற நூலை எழுதியவர் யார் ?

A) புவியரசு

B) வல்லிக் கண்ணன்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) ஈரோடு தமிழன்பன்



85. தமிழக அரசின் பரிசினைப் பெற்ற மு.மேத்தா அவர்களின் நூல் எது ?

A) கண்ணீர் பூக்கள்

B) முகத்துக்கு முகம்

C) ஊர்வலம்

D) நடந்த நாடகம்



86. அப்துல் ரகுமான் எழுதாத நூல் எது ?

A) பாரதீயம்

B) முட்டை வாசிகள்

C) பால்வீதி

D) நேயர் விருப்பம்



87. மீரா எழுதிய நூல் எது ?

A) நாவல் பழம்

B) கிறுக்கல்கள்

C) மூன்றும் ஆறும்

D) மகா காவியம்



88. நா. காமராசன் எழுதாத நூல் எது ?

A) ஞானரதம்

B) கருப்பு மலர்கள்

C) சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்

D) ஒரு கைதியின் டைரி



89. சரியான இணையை தேர்ந்தெடு ?

A) விலங்குகள் இல்லாத கவிதை - நா.காமராசன்

B) தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும் - மீரா

C) வைகறை மேகங்கள் - வைரமுத்து

D) திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் - சி.சு.செல்லப்பா



90. பிச்சுமணி என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் யார் ?

A) ந.பிச்சமூர்த்தி

B) தேவதேவன்

C) சி.மணி

D) மௌனி



91. வண்ணதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார் ?

A) கல்யாண்ஜி

B) கலாப்ரியா

C) தேவதேவன்

D) தண்டபாணி சுவாமிகள்



92. அனிச்சம் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) அ.பழனி

B) கலாப்ரியா

C) அப்பாதுரையார்

D) அப்துல் ரகுமான்



93. இருமுறை தமிழ்ப் பல்கலைக் கழக விருது பெற்றவர் ?

A) ஈரோடு தமிழன்பன்

B) சி.மணி

C) சாலை இளந்திரையன்

D) அப்துல் ரகுமான்



94. வே.மாலி என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார் ?

A) சி.மணி

B) தருமு சிவராமு

C) ஈரோடு தமிழன்பன்

D) கலாப்ரியா



95. பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம் என்ற புனைப்பெயர்களைக் கொண்ட தமிழ்ச்சான்றோர் யார் ?

A) பசுவய்யா

B) இரா, மீனாட்சி

C) தருமு சிவராமு

D) சி.மணி



96. தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி ?

A) மணிக்கொடி

B) எழுத்து

C) துக்ளக்

D) குயில்



97. சரசாவின் பொம்மைகள் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) சிலம்புச் செல்வர்

B) கவிஞரேறு

C) சிலம்பொலியார்

D) புலவரேறு



98. வானம்பாடிக் காலத்திற்கு முன்பே சமுதாய அக்கறையோடு புதுக்கவிதை புனைந்த உருவகக் கவிஞர் யார் ?

A) நா. காமராசன்

B) ஈரோடு தமிழன்பன்

C) சி.மணி

D) தருமு சிவராமு



99. அன்னம் விடு தூது இதழின் ஆசிரியர் யார்?

A) விந்தன்

B) மு.மேத்தா

C) மீரா

D) கண்ணதாசன்



100. அறிஞர் அண்ணா பற்றிய விதைபோல் விழுந்தவன் என்னும் கவியரங்க கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர் ?

A) மீரா

B) அப்துல் ரகுமான்

C) நா.காமராசன்

D) மு.மேத்தா


DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download





thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post