2 - TNPSC GROUP-2 Genaral Tamil Model question paper -2 (2022 New Syllabus) கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 2

 TNPSC GROUP II & IV 

GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 2

WITH ANSWER KEY 

 கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 2

விடையுடன் இலவச பதிவிறக்கம்


புதிய பாடத்திட்டம் (2022) 

மாதிரி வினாத்தாள் 2-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

பகுதி (அ)

1. தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.

பகுதி (ஆ)

2. அறநூல்கள் நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

பகுதி (இ)

3. மரபுக் கவிதை - முடியரசன் , வாணிதாசன், சுரதாகண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

----------------------------------------------------------------

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொதுத்தமிழ் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் - 2 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாழ்த்துகள்.



👉 For Day 2 Online Test  > CLICK HERE

மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -2  👇

மாதிரி வினாத்தாள்- 2 (100 வினாக்கள்)


1. எண் பெருங் குன்றத்து எணா அயிரம் இருடி

கண் பொருந்தப் பாடியபா நானூறும் - இச்செய்யுள் மூலம் அறியப்படும் நூல் எது?

A) முதுமொழிக் காஞ்சி

B) நாலடியார்

C) இனியவை நாற்பது

D) இன்னா நாற்பது



2. மாக்பெத்து என்ற ஆங்கில நாடகத்துடன் ஒப்பிடப்படும் நூல் எது ?

A) கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) திருக்குறள்



3. ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று பாராட்டியவர் யார் ?

A) சுந்தரர்

B) திருஞான சம்பந்தர்

C) மாணிக்க வாசகர்

D) திருநாவுக்கரசர்



4. ஒவ்வொரு செய்யுளின் மூன்றாமடி இறுதியில் தவறாமல் இம்மூன்றும், இம்மூவர், இவை மூன்றும், இவர் மூவர் என வரும் தொடர்களுல் ஏதாவது ஒன்றைப் பெற்றுவரும் செய்யுளைக் கொண்ட நூல் எது ?

A) ஏலாதி

B) பழமொழி

C) திரிகடுகம்

D) நாலடியார்



5. பொருத்துக

1. இயற்கை ஓவியம் - அ) திருக்குறள்

2. இயற்கை இன்பக்கலம் - ஆ) பத்துப்பாட்டு

3. இயற்கை வாழ்வில்லம் - இ) கலித்தொகை

4. இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - ஈ) சிலப்பதிகாரம்

1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. இ உ அ ஆ

C. ஆ இ அ ஈ

D. C இ ஈ ஆ



6. மணியில்லா யானைமீது மன்னன் சென்றால் அவனுக்கு தீங்கு ஏற்படும், அந்தணர் வீட்டிற்குள் கோழியும் நாயும் புகுதல் கூடாது முதலிய அக்கால பழக்கவழக்கங்களின் செய்திகளை தெரிவிக்கும் நூல் எது ?

A) இன்னா நாற்பது

B) இனியவை நாற்பது

C) திரிகடுகம்

D) நான்மணிக் கடிகை



7. காரியாசான் பெற்றிராத சிறப்பு எது ?

A) பெருஞ்செல்வர்

B) கொடையாளர்

C) வடமொழி அறிஞர்

D) வானியல் அறிஞர்



8. தமிழ் பன்னியன் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

B) திருவள்ளுவர்

C) திருஞான சம்பந்தர்

D) திருநாவுக்கரசர்



9. ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

A) ஆலங்தூர் மோகனரங்கள்

B) சி.சு. செல்லப்பா

C) வாணிதாசன்

D) ஈரோடு தமிழன்பன்


10. இன்னா நாற்பது நூல் தெரிவிக்கும் இன்னாத பொருட்களின் எண்ணிக்கை ?

A) 190

B) 100

C) 99

D) 164



11. தானத்தால் போகம், தவத்தால் சுகம் சுகமா

ஞானத்தால் வீடாகும் நாட்டு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) முதுமொழிக் காஞ்சி

B) நாலடியார்

C) சிறுபஞ்ச மூலம்

D) பழமொழி நானூறு



12. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்கள் எழுதிய நூல்கள் எத்தனை?

A) மூன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஒன்று



13. பொருளமைப்பில் திரிகடுகத்தைப் போன்று உள்ளதும், திருக்குறளின் கருத்தும் சொல்லும் விரவி வந்துள்ளதுவமாகவும் அமைந்த நூல் எது ?

A) இனியவை நாற்பது

B) இன்னா நாற்பது

C) நாலடியார்

D) முதுமொழிக் காஞ்சி



14. பழமொழி தொடர்பான தவறான கூற்றினைக் கண்டறிக.

A) திருக்குறள், நாலடியாருக்கு அடுத்துப் பெரிதும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

B) ஒவ்வொரு பாட்டின் ஈற்றயலடியிலும் ஒரு பழமொழி அமைந்திருக்கும்.

C) கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 400 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

D) இந்நூலில் உள்ள பழமொழிகள் நாட்டுப்புற பழமொழியாக இல்லாமல் இலக்கியப் பழமொழியாக உள்ளன.



15. நாலடியாரை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என பகுத்து உரை கண்டவர் யார்?

A) பரிமேலழகர்

B) மணக்குடவர்

C) நச்சினார்க்கினியர்

D) தருமர்



16. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இரண்டு நூல்களை எழுதியவர் யார் ?

A) காரியாசான்

B) முன்றுறையரையனார்

C) கணிமேதாவியார்

D) பூதஞ்சேந்தனார்



17. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாற்பது என்னும் பெயரில் அமைந்த நூல்கள் எத்தனை?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு



18. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்திணை என்னும் பெயரில் அமைந்த நூல்கள் எத்தனை ?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு



19. பால்சோற்றில் நெய்பெய்து உண்ணுதல், பிறன்மனை விழைவோர்க்குக் கொலை தண்டனை முதலிய அன்றைய வழக்கங்கள் சுட்டப்பட்டுள்ள நூல் எது ?

A) முதுமொழிக் காஞ்சி

B) நாலடியார்

C) இன்னா நாற்பது

D) நான்மணிக் கடிகை



20. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்துப் பெயரில் அமைந்த நூல்கள் எத்தனை ?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு



21. முறைமைக்கு மூப்பிளைமை இல், நிறைகுடம் நீர்தளும்பல் இல் என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) இன்னா நாற்பது

B) பழமொழி

C) முதுமொழிக் காஞ்சி

D) நாலடியார்



22. நான்மணிக் கடிகை என்ற நூற்பெயரில் கடிகை என்பதன் பொருள் யாது ?

A) கல்வி நிலையம்

B) பெண்கள் கழுத்தில் அணியும் ஆரம்

C) புத்த விகாரம்

D) பெண்கள் கழுத்தில் அணியும் தோள்வளை



23. நாலடியார் தொடர்பான சரியற்ற கூற்றிணை காண்க. ?

A) கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்கள், 2 இயல்கள், 400 பாடல்கள் உள்ளன.

B) நச்சினார்க்கினியர், பரிமேலழகர் மற்றும் அடியார்க்கு நல்லார் ஆகியோர் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.

C) நாலடியாரை தொகுத்தவர் பதுமனார் அல்லது வச்சிரநந்தி என கருதப்படுகிறது.

D) இந்நூல் குட்டித் திருவாசகம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.



24. சமய வேறுபாடற்ற துறவி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) வள்ளலார்

B) விவேகானந்தர்

C) தாயுமானவர்

D) இளங்கோவடிகள்



25. நல்லாதனார் பிறந்த ஊர் ?

A) திருத்து

B) துள்ளம்

C) தேரெழுந்தூர்

D) தண்டலம்



26. சிறுபஞ்சமூலம் என்ற மருந்துப்பொருளோடு தொடர்பில்லாத மூலிகை எது ?

A) கண்டங்கத்திரி

B) சிறுவழுதுணை

C) நெருஞ்சி

D) தூதுவளை



27. திரிகடுகம் தொடர்பான சரியற்ற தொடரைக் காண்க. ?

A) நன்மை தருபவை 66 பாடல்களிலும், தீமைபயப்பவை 34 பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.

B) வருவாயில் காற்பகுதியை அறஞ்செய்தல், கொடுங்கோல் மன்னனால் மழை பெய்யாமை, குளித்தபின்பே உணவுண்ணுதல் முதலிய கருத்துகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

C) கணவன் மனைவு வாழ்க்கை பற்றி 35 செய்யுள்கள் உள்ளன.

D) கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 100 வெண்பாக்கள் உள்ளன.



28. இன்னா நாற்பது நூல் எந்த பாவினத்தால் ஆனது ?

A) கலிவெண்பா

B) கலித்தாழிசை

C) ஆசிரிய விருத்தம்

D) இன்னிசை வெண்பா



29. இனியவை நாற்பது தொடர்பான தவறான கூற்றைக் காண்க.

A) இன்னது இனியவை எனக் கூறும் 40 செய்யுள்களைக் கொண்டது.

B) கடவுள் வாழ்த்தில் திருமால், சிவன், நான்முகன் ஆகிய மும்மூர்த்திகள் போற்றப்பட்டுள்ளனர்.

C) இதில் இனிய மூன்று பொருள்களை கூறும் செய்யுகளின் எண்ணிக்கை - 36

D) இதில் இனிய நான்கு பொருள்களைக் கூறும் செய்யுள்களின் எண்ணிக்ரக - 36



30. தொல்காப்பியம் குறிப்பிடும் அம்மை என்னும் வனப்பிற்குரிய அமைப்பில் செய்யுள்கள் அமைந்த நூல் ?

A) புறப்பொருள் வெண்பாமாலை

B) ஏலாதி

C) பரிபாடல்

D) நான்மணிக் கடிகை



31. நான்மணிக் கடிகை தொடர்பான சரியற்ற இணையைக் காண்க.

A) இந்நூலில் கல்வியின் பயன், வீடு, கொலை, தீது எல்லாம் பொருளில் பிறந்துவிடும் என்பன போன்ற கருத்துகள் உள்ளன

B) இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்

C) ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் செய்யுளின் முதல் அடியும் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் எனத் தொடங்கும்

D) இரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுளையும் சேர்த்து மொத்தம் 104 வெண்பாக்கள் உள்ளன.



32. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) சிறுபஞ்சமூலம்

B) ஏலாதி

C) நான்மணிக்கடிகை

D) நாலடியார்



33. ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை என்று பாடியவர் யார் ?

A) பதுமனார்

B) முன்றுறையரையனார்

C) கணிமேதாவியார்

D) காரியாசான்



34. இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வே சிறந்தது என்று கூறும் நூல் எது ?

A) திருக்குறள்

B) குற்றாலக் குறவஞ்சி

C) முதுமொழிக் காஞ்சி

D) தனிப்பாடல் திரட்டு



35. விளம்பிநாகனாரின் கருத்துப்படி கல்வி விளக்கு போன்றது எது ?

A) உயர்வு

B) அன்பு

C) நல்லெண்ணம்

D) அறம்



36. எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) இனியவை நாற்பது

B) திரிகடுகம்

C) புறநானூறு

D) இன்னா நாற்பது



37. சிறுபஞ்சமூலம் நூல் தொடர்பான சரியான கூற்றினை கண்டறிக ?

A) மூன்று கடவுள் வாழ்த்து செய்யுள் உள்ளது

B) கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம் சேர்த்து மொத்தம் 102 செய்யுள்கள் உள்ளன.

C) இரண்டு சிறப்புப் பாயிரம் உள்ளது

D) இந்நூலில் செல்வம் சகடக்கால் போல வரும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.



38. உள்ளத்திற்கு உறுதிசேர்க்கும் ஆறு கருத்துகளை ஒவ்வொரு செய்யுளிலும் கொண்டமைந்த நூல் எது ?

A) ஏலாதி

B) திரிகடுகம்

C) சிறுபஞ்ச மூலம்

D) வாயுரை வாழ்த்து



39. "ஆற்றுணா" என்ற சொல்லின் பொருள்

A) கட்டுச்சோறு

B) வழிநடை உணவு

C) A மற்றும் B

D) வினையாலனையும் பெயர்



40. எதை விடச் சிறந்தது ஒழுக்கமுடைமை என முதுமொழிக் காஞ்சி கூறுகிறது ?

A) கற்றலை விட சிறந்தது

B) பகைவரை தண்டிப்பதை விடச் சிறந்தது

C) குலப்பெருமையை விடச் சிறந்தது

D) A மற்றும் C



41. "அவல்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை அறிக.

A) அவன்

B) இவன்

C) மிசை

D) உணா



42. "நூல் நோக்கி வாழ்வான் நுனித்து" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) ஏலாதி

D) சிறுபஞ்சமூலம்



43. அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) திருஞான சம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) மாணிக்க வாசகர்

D) சுந்தரர்



44. மதுரை கூடலூர்க் கிழார் பிறந்த ஊர் ?

A) கூடலூர்

B) மதுரை

C) சிறுகூடல்பட்டி

D) திருத்து



45. ஔவையார் தொடர்பான சரியற்ற கூற்றினைக் காண்க.

A) அதியமானின் நண்பர்

B) சங்கப்பாடல் பாடிய ஔவையாரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் ஒருவரே

C) சங்ககால பெண் கவிஞர்களில் மிகுதியான பாடல்களைப் பாடியவர்

D) அறிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்



46. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) சந்திரசேகர கவிராயர்

B) உடுமலை நாராயணகவி

C) வாணிதாசன்

D) பாரதிதாசன்



47. "இவை மூன்றும் தூஉயம் என்பார் தொழில்" என்ற திரிகடுக செய்யுள் அடியோடு தொடர்பில்லா ஒன்று எது ?

A) தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை

B) இல்லார்க் கொன்றீயும் உடைமை

C) எப்பெறினும் பால்பற்றிச் சொல்லாவிடுதல்

D) உண்பொழுது நீராடி உண்டல்



48. தான் உயிரோடு இருக்கும்போதே தனக்குத் தானே இரங்கற்பா பாடியவர் யார் ?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) கண்ணதாசன்

D) வாணிதாசன்



49. தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், இன்ப இலக்கியம், பொங்கல் பரிசு ஆகிய தலைப்புகளில் கவிதை தொகுப்புகளை வெளியிட்டவர் யார் ?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) கண்ணதாசன்

D) வாணிதாசன்



50. தனிப்பாடல் திரட்டினை தொகுப்பித்தவர் யார் ?

A) பொன்னுசாமி

B) பாண்டித்துரை தேவர்

C) சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

D) சடையப்ப வள்ளல்

51. வாணிதாசனின் பாடல்கள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன ?

A) இலத்தீன், உருசியம்

B) ஆங்கிலம், கிரேக்கம்

C) உருசியம், ஆங்கிலம்

D) இலத்தீன், ஆங்கிலம்



52. தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் பதுமை என்னும் சொல்லின் பொருள் ?

A) புதுமை

B) நிழல்

C) பத்து

D) உருவம்



53. திரிகடுக செய்யுள்படி புதரில் விதைத்த விதை அல்லாத செய்கை எது ?

A) முறைசெய்யான் பெற்ற தலைமை

B) இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடு

C) நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவம்

D) நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு



54. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 81 வெண்பாக்களை கொண்டுள்ள நூல் எது ?

A) வேளாண் வேதம்

B) ஏலாதி

C) வாயுரை வாழ்த்து

D) நெடுந்தொகை



55. மெத்த வெறும்பந் தயம்கூற வேண்டா ; புலவீர்

எறும்புந்தன் கையால்எண் சாண் என்று பாடியவர் யார் ?

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) ஔவையார்

D) முடியரசன்



56. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) அறிவுண்டாம் = அறிவு + வுண்டாம்

B) செவ்விதழ் = செம்மை + இதழ்

C) உடற்குண்டாம் = உடல் + குண்டாம்

D) விலையில்லா = வீலை + இல்லா



57. அரங்க.திருக்காமு - துளசியம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றிய தமிழறிஞர் யார் ?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) கண்ணதாசன்

D) வாணிதாசன்



58. சரியாக அமைந்த தொடரைக் காண்க.

A) கணக்காயர் உரையினில் இரு செவி சேரே

B) இரு செவி சேரே கணக்காயர் உரையினில்

C) சேரே இரு செவி உரையினில் கணக்காயர்

D) கணக்காயர் இரு செவி உரையினில் சேரே



59. தனிப்பாடல் திரட்டு நூலில் சில பாடல்களை இயற்றிய ஔவையாரின் சமகாலப் புலவர் அல்லாதவர் யார் ?

A) வீரகவிராயர்

B) ஒட்டக்கூத்தர்

C) கம்பர்

D) புகழேந்திப் புலவர்



60. திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) கண்ணதாசன்

B) மருதகாசி

C) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

D) உடுமலை நாராயணகவி



61. தேசத்தை தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்

தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்- இத்தொடரில் உள்ள தேட்டை என்ற சொல்லின் பொருள் என்ன ?

A) புகழ்

B) செல்வம்

C) ஆணவம்

D) வஞ்சம்



62. முடியரசனுக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கியவர் யார் ?

A) குன்றக்குடி அடிகளார்

B) பாரதிதாசன்

C) தந்தை பெரியார்

D) வாணிதாசன்



63. எண்வனப்பு என்ற சொல்லின் பொருள் ?

A) அளவற்ற அழகு

B) வரிசை எண்களின் அழகு

C) ஆராய்ச்சி அழகு

D) வளைகாப்பு



64. இலக்கணக் குறிப்பு அறிக - கண்ணோட்டம்

A) தொழிற்பெயர்

B) வினையாலனையும் பெயர்

C) சினைப் பெயர்

D) பண்புப் பெயர்



65. காரியாசான் எந்த சமயத்தைச் சார்ந்த தமிழ்ப்புலவர் ?

A) சைவம்

B) சமணம்

C) பௌத்தம்

D) வைணவம்



66. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க - கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல்

A) கண் அழகானதா ?

B) இரக்கம் கொள்வதா அழகு ?

C) கண்ணுக்கு அழகு எது ?

D) கண்ணில் இரக்கம் உள்ளதா ?



67. கண்ணதாசன் இயற்றிய நெடுங்கவிதை நூல் எது ?

A) ஆயிரம்தீவு அங்கயர்கண்ணி

B) வேலங்குடி திருவிழா

C) மாங்கனி

D) தமிழ் மலர்



68. வாணிதாசனை தமிழ்நாட்டு தாகூர் என்று புகழ்ந்தவர் யார் ?

A) மயிலை சிவமுத்து

B) அறிஞர் அண்ணா

C) பாரதிதாசன்

D) தந்தை பெரியார்



69. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினை தேர்க.

A) போலி புலவர்களை குட்டுவதற்கு - அதிவீரராம பாண்டியன்

B) போலி புலவர்கள் தலையை வெட்டுவதற்கு - ஒட்டக்கூத்தர்

C) போலி புலவர்கள் செவியை அறுப்பதற்கு - வில்லிபுத்தூரார்

D) போலி புலவர்கள் குறைகளை சுட்டாமல் விடுவதற்கு - நக்கீரன்



70. வாணிதாசன் பிறந்த இடம் ?

A) வில்லிபுத்தூர்

B) மருதூர்

C) வில்லியனூர்

D) மழுவூர்



71. கண்ணதாசன் பணிபுரியாத இதழ் எது ?

A) தென்றல்

B) தேன் மலர்

C) முல்லை

D) கண்ணதாசன்



72. சுரதா எழுதாத நூல் எது ?

A) தேன்மழை

B) துறைமுகம்

C) நூறாசிரியம்

D) சுவரும் சுண்ணாம்பும்



73. சுரதா தொடர்பான தவறான கூற்றை காண்க. ?

A) இயற்பெயர் - இராச கோபாலன்

B) பிறந்த ஊர் - பழையனூர்

C) பெற்றோர் - திருவேங்கடம் - செண்பகம்

D) உவமைக் கவிஞர் என்ற பட்டத்தை வழங்கியர் - இயலிசை நாடக மன்றம்



74. பூங்கொடி என்னும் காவியத்திற்கு எந்த ஆண்டு தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்து ?

A) 1964

B) 1966

C) 1956

D) 1976



75. சாகித்ய அகாடமி பரிசினைப் பெற்ற கண்ணதாசனின் நூல் எது ?

A) இராச தண்டனை

B) யேசு காவியம்

C) ஆட்டணத்தி ஆதி மந்தி

D) சேரமான் காதலி



76. தமிழ்வளர்ச்சித் துறை பரிசினைப் பெற்ற சுரதாவின் நூல் எது ?

A) தேன்மழை

B) துறைமுகம்

C) சுரதாவின் கவிதைகள்

D) சுவரும் சுண்ணாம்பும்



77. உவமைத் தொகை எது ?

A) சிற்றினம்

B) பழந்தமிழ்

C) தளிர்க்கை

D) வழங்கி



78. தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர் யார் ?

A) டாக்டர் மு.வ

B) கால்டுவெல்

C) பூரணலிங்கம் பிள்ளை

D) வீரமாமுனிவர்



79. தமிழ் மாமுனி என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) திருவள்ளுவர்

B) அகத்தியர்

C) திரு.வி.க

D) வீரமாமுனிவர்



80. வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) நம்மாழ்வார்

B) தாயுமானவர்

C) நாதமுனிகள்

D) பெரியாழ்வார்



81. தனித் தமிழ் இசைக் காவலர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) தேவநேயப் பாவாணர்

B) பரிதிமாற் கலைஞர்

C) இராசா.அண்ணாமலை செட்டியார்

D) அண்ணாமலை ரெட்டியார்



82. கூடலர் கோன், கொல்லி கூவலன் என்று புகழப்படுபவர் யார் ?

A) கு.ப.இராஜ கோபாலன்

B) திருமங்கை ஆழ்வார்

C) குலசேகர ஆழ்வார்

D) பெரியாழ்வார்



83. இராமலிங்க அடிகளுக்கு வழங்கப் பெறும் சிறப்புப் பெயர் அல்லாதது எது ?

A) ஓதாது உணர்ந்த பெருமான்

B) தமிழ்மாறன்

C) சன்மார்க்க கவி

D) அடிகளார்



84. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) இராமலிங்க அடிகள்

B) வே.ராமலிங்கம் பிள்ளை

C) திரு.வி.க

D) கொத்தமங்கலம் சுப்பு



85. சன்மார்க்க சண்டமாருதம் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) இராமலிங்க அடிகள்

B) திரு.வி.க

C) முத்துராமலிங்க

D) கல்கி



86. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர் அல்லாது எது ?

A) முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்

B) முத்தமிழ்க் காப்பியம்

C) சமுதாயக் காப்பியம்

D) ஒற்றுமைக் காப்பியம்



87. மூதுரை என்ற அடைமொழியைப் பெற்ற நூல் எது ?

A) வாக்குண்டாம்

B) முதுமொழிக் காஞ்சி

C) பழமொழி

D) அகநானூறு



88. ஆரணம் என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) திருக்கோவையார்

B) திருப்பாவை

C) கம்பராமாயணம்

D) மகாபாரதம்



89. சரியான இணையை தேர்ந்தெடு ?

A) தோமறு மாக்கலை - சிலப்பதிகாரம்

B) நெடுந்தொகை - முல்லைப்பாட்டு

C) சிற்றதிகாரம் - நன்னூல்

D) கலைக்காப்பியம் - சிலப்பதிகாரம்



90. வஞ்சி நெடும்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) முல்லைப்பாட்டு

B) பட்டினப்பாலை

C) அகநானூறு

D) புறநானூறு



91. ஐந்திணை அறுபது என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) கைந்நிலை

B) மலைபடுகடாம்

C) மூதுரை

D) வெற்றிவேற்கை



92. அகவற்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) பெருங்கதை

C) மணிமேகலை

D) குண்டலகேசி



93. நாடக அரசி என்று போற்றப்படுபவர் யார் ?

A) மனோரமா

B) பாலமணி அம்மையார்

C) கே.பி.சுந்தராம்பாள்

D) மாதவி



94. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார் ?

A) இராமச்சந்திரக்கவிராயர்

B) உடுமலை நாராயணகவி

C) திரிகூட ராசப்பக்கவிராயர்

D) கடுவெளிச் சித்தர்



95. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் யார் ?

A) மாணிக்க வாசகர்

B) பெருஞ்சித்திரனார்

C) திருவள்ளுவர்

D) தொல்காப்பியர்



96. ஏலாதியில் வலியுறுத்திக் கூறப்படும் சமணசமயத்திற்குரிய பொருள் யாது ?

A) தீண்டாமை

B) கொல்லாமை

C) ஆசையே துன்பத்திற்கு காரணம்

D) பொறையுடைமை



97. அறிவியல் தமிழறிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) வாணிதாசன்

B) வண்ணக்களஞ்சிய புலவர்

C) முஸ்தபா

D) தேவதேவன்



98. பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது ?

A) நாலடியார்

B) ஏலாதி

C) சிறுபஞ்சமூலம்

D) திருக்குறள்



99. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரிடம் தமிழ் பயின்றவர் யார் ?

A) நாமக்கல் கவிஞர்

B) முடியரசன்

C) கண்ணதாசன்

D) உடுமலைநாராயணகவி



100. கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் என்று பாடியவர் யார் ?

A) வாணிதாசன்

B) சுரதா

C) முடியரசன்

D) திருவள்ளுவர்

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post