TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 22 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 22
விடையுடன் இலவச பதிவிறக்கம்
ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்
2022 புதிய பாடத்திட்டம்
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அன்பிற்கினிய தேர்வர் சொந்தங்களே! கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக தேர்வாணையத்தின் தேர்வுகளில், திருக்குறளை எழுதியவர் யார்? கம்பராமாயணத்தை எழுதியவர் யார்? என்ற வினாக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வினாக்கள் தங்களுக்கு தற்போது எவ்வளவு எளிதான வினாவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அவ்வாறான மிக எளிமையான வினாக்கள் கேட்கப்படுகின்றனவா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
- இதை தற்போது ஏன் தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றால், தேர்வர்களின் அறிவு முதிர்ச்சியின் காரணமாகவும், தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாகவும், தேர்வாணையத்தின் வினாக்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து, தங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே.
- கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் கடினத் தன்மை தேர்வுக்கு தேர்வு அதிகரித்து வந்திருப்பதை பழைய வினாக்களை பார்க்கும் போது தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
- எனவேதான் இந்த மாதிரித் தேர்வு, கடினமாக இருக்கும் வகையில் சில வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. கடினமான வினாக்களை அணுகிவிட்டால், எளிமையான வினாக்களுக்கு விடையளிப்பது உங்களுக்கு சுலபமாகிவிடும் என்ற எண்ணத்திலும், தேர்வாணையத்தின் வினா தொகுக்கும் முறையில் அவ்வப்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டும், இந்த மாதிரித் தேர்வு 22 (ஒன்பதாம் வகுப்பு புதிய புத்தகம்) வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதே போன்றுதான் கடிமாக தேர்வாணைய தேர்வில் வினாக்கள் அமைக்கப்படும் என்று பொருள் கொள்ள வேண்டாம். இப்படியாக சில கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
- இந்த பதிவில், 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி, ஒன்பதாம் வகுப்பு புதிய மற்றும் பழைய பாடப் புத்தகத்திலிருந்து வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
- மேலும், தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் அடிப்படையிலும், பாடத்திட்டத்தில் இடம்பெறாத வினாக்கள் இதற்கு முன்பாக தேர்வுகளில் பாடப்புத்தகத்தில் இருந்து எவ்வாறு வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன என்ற முன் நிகழ்வுகளின் அடிப்படையிலும் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
மாதிரி வினாத்தாள்- 22 (100 வினாக்கள்)
1. கீழ்க்காணும் குறிப்புகளுடன் சரியாகப் பொருந்தும் தமிழ்ச்சான்றோர் யார் என தேர்வு செய்க?
1. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னுத் தலைப்பில் சுதேச மித்திரன் வார இதழில் எழுதினார்
2. ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக் கடலும் என்னும் தலைப்பில் 1974 ல் நூலாக வெளியிட்டார்.
3. தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். இவரின் மற்றொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
4. இவரின் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது
A) தி.ஜானகிராமன்
B) அறிஞர் அண்ணா
C) பசுவய்யா
D) ஈரோடு தமிழன்பன்
2. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்களில் தவறாக பொருந்தியுள்ள இணை எது ?
A) 1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
B) 1979 - ஒரு சிறு இசை - வண்ணதாசன்
C) 1987 - முதலில் இரவு வரும் - ஆதவன்
D) 1996 - அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்
3. நாதஸ்வரம் என்னும் இசைக்கருவி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழகத்தில் வாசிக்கப்படுகிறது ?
A) 600
B) 1200
C) 2000
D) 3000
4. வருக்கை என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?
A) விருந்தினர்
B) பலாப்பழம்
C) விறகு
D) சருகு
5. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது ?
A) ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பு - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
B) ஆண்டாள் பாடியவை - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
C) ஆண்டாள் திருமங்கையாழ்வாரின் வளர்ப்பு மகள்.
D) சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுபவர் - ஆண்டாள்
6. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்சான்றோர் யார்?
A) உ.வே.சாமிநாதர்
B) மௌனி
C) தி.ஜானகிராமன்
D) இவர்கள் அனைவரும்
7. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி?
1. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாண சுந்தரம்
2. கல்யாண்ஜி அவர்கள் வாணிதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.
3. கல்யாண்ஜியின் நூல்கள் - புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு, சில இறகுகள் சில பறவைகள், கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது
4. கல்யாண்ஜியின் புனைப்பெயர் - யமன்
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) அனைத்தும் தவறு
D) அனைத்தும் சரி
8. தமிழ்ப் பண்பாடு என்ற பத்திரிகையை தொடங்கியர் யார் ?
A) பரிதிமாற்கலைஞர்
B) தனிநாயகம் அடிகளார்
C) வ.வே.சு. ஐயர்
D) சுப்பிரமணிய சிவா
9. உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்ற நாடு, இடம், ஆண்டு தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி ?
1. முதல் மாநாடு - மலேசியா - கோலாலம்பூர் - 1966
2. இரண்டாம் மாநாடு - இந்தியா - சென்னை - 1968
3. மூன்றாம் மாநாடு - பிரான்சு - பாரீஸ் - 1970
4. நான்காம் மாநாடு - இந்தியா - மதுரை - 1981
A) 1, 2, 3 மட்டும் சரி
B) 1, 2, 4 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
10. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது
A) வஞ்சப் புகழ்ச்சி அணி
B) இரட்டுற மொழிதல் அணி
C) தற்குறிப்பேற்ற அணி
D) உருவக அணி
11. குறுந்தொகை எந்த ஆண்டு, யாரால் பதிப்பிக்கப்பட்டது ?
A) 1812, மயிலை ஞானப்பிரகாசம்
B) 1912, உ.வே.சாமிநாதர்
C) 1915, சௌரிப் பெருமாள் அரங்கனார்
D) 1915, ஆறுமுக நாவலர்
12. தமிழக அரசின் விருதுபெற்ற சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை எது?
A) வாடாமல்லி
B) பாலைப்புறா
C) மண் சுமை
D) குற்றம் பார்க்கில்
13. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாடம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான் - என்ற செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது
A) திருப்பாவை
B) நாச்சியார் திருமொழி
C) திருவெண்பாவை
D) வாரணம் ஆயிரம்
14. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும் ?
A) குறிஞ்சி
B) மருதம்
C) பாலை
D) நெய்தல்
15. திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மரங்கள் ?
A) பனை, புன்னை
B) பனை, மூங்கில்
C) புன்னை, வேம்பு
D) ஆல், பனை
16. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதிய தமிழ்ச்சான்றோர் யார்?
A) சி. இலக்குவனார்
B) டாக்டர் கலைஞர்
C) பெரியார்தாசன்
D) புலவர் குழந்தை
17. இராவண காவியம் தொடர்பான சரியற்ற கூற்று எது
A) தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களை உடையது
B) மூன்றாயிரத்து முந்நூற்று மூன்று பாடல்களைக் கொண்டது
C) இதன் ஆசிரியர் புலவர் குழந்தை ஆவார்.
D) கம்பராமாயணத்துக்கு மறுப்பாக, இராவணனை கதைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட காப்பியம் இது.
18. பிழை நீக்கிய தொடரைக் காண்க. ?
A) அவன் எழுதிய தொடர் கோர்வையாக இல்லை
B) Cசியில் பருத்தி நூலை கோர்த்தான்
C) Cசியில் நூலை கோத்தான்
D) மாமல்லபுரம் அனைத்து சிற்பக்கலையின் கோர்வையாக அமைந்துள்ளது.
19. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார் ?
A) மயிலைநாதர்
B) மணக்குடவர்
C) பரிமேலழகர்
D) ஐயடிகள்
20. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை ?
A) அப்துல்கலாம்
B) விக்ரம் சாராபாய்
C) ஆரிய பட்டர்
D) இவர்களில் எவருமிலர்
21. சரியான பொருளுடன் பொருந்தியுள்ள சொல்லைத் தேர்க
A) வருக்கை - இருக்கை
B) அள்ளல் - சேறு
C) புள் - தாவரம்
D) மடிவு - தொடக்கம்
22. "அதிரப் புகுதக் கனாக் கண்டேன்" யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
A) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
B) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
C) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
D) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
23. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த நூலைக் குறிப்பிடுகிறார்.
A) கலிங்கத்துப்பரணி
B) திருக்குறள்
C) இராவண காவியம்
D) கம்பரசம்
24. ந.பிச்சமூர்த்தி தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க ?
1. புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
2. புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.
3. பிட்கூ, ரேவதி ஆகிய புனைப்பெயர்களில் எழுதினார்.
4. இவரின் முதல் சிறுகதை - ஸயன்ஸுக்கு பலி
5. ஹனுமன், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக இருந்துள்ளார்
6. 1931-ல் கலைமகள் பரிசு பெற்றார்
A) 2, 4, 5, மட்டும் சரி
B) 1, 2, 3, 5, 6 மட்டும் சரி
C) 1, 2, 4, 5 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
25. இருசொற்கள் இணையும் போது குறிப்பிட்ட சில வல்லின எழுத்துகள் மிகுவதைப்போன்று, மெல்லினத்தில் எந்த எழுத்துகள் மிகும் ?
A) ங், ஞ், ந், ம்
B) க், ச், த், ப்
C) மெல்லின எழுத்துகள் மிகாது.
D) ங், ஞ், ந், ண், ம், ன்
26. முருகு என்ற சொல்லின் பொருள் ?
A) தேன்
B) மணம்
C) அழகு
D) இவை அனைத்தும்
27. திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ?
A) விலங்கு உருவங்கள்
B) தீர்த்தங்கரர் உருவங்கள்
C) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
D) தெய்வ உருவங்கள்
28. இவற்றில் இசைநூல் அல்லாதது எது
A) பஞ்சமரபு
B) இசை நுணுக்கம்
C) பெருநாரை
D) சாகுந்தலம்
29. பொருந்தாத இணையை கண்டறிக ?
A) வெட்சி - 14 துறை
B) வஞ்சி - 13 துறை
C) உழிஞை - 15 துறை
D) தும்பை - 12 துறை
30. முத்தொள்ளாயிரம் எந்த நாட்டை நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்று குறிப்பிடுகிறது ?
A) சேர நாடு
B) சோழ நாடு
C) பாண்டிய நாடு
D) பல்லவ நாடு
31. Wrestling என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது ?
A) மற்போர்
B) மல்யுத்தம்
C) குத்துச் சண்டை
D) களச் சண்டை
32. மரபுப் பிழை நீக்கிய தொடரைக் காண்க.
A. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
B. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்
C. நேற்று தென்றல் வீசியது
D. அணில் பழம் சாப்பிட்டது.
33. தவறான இணையைக் கண்டறிக.
A) தேமாங்கனி - பண்புத்தொகை
B) விளைக - வியங்கோல் வினைமுற்று
C) இறைஞ்சி - இடவாகுபெயர்
D) செய்கோலம் - வினைத் தொகை
34. பரிதி ஒத்த பூ, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக ?
A) உருவகத் தொடர், வினைத் தொகை
B) உவமைத் தொடர், வினைத் தொகை
C) வினைத் தொகை, பண்புத் தொகை
D) வினைத் தொகை, உருவகத் தொடர்
35. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் ?
A) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தினர்
B) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தினர்
C) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
D) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
36. பொருத்துக
1. மைவனம் - அ) காற்று
2. முருகியம் - ஆ) மான்
3. உழை - இ) மலை நெல்
4. வளி - ஈ) குறிஞ்சிப் பாறை
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஆ இ அ
C. இ ஈ ஆ அ
D. ஈ இ ஆ அ
37. பூவை என்ற சொல்லின் பொருள் ?
A) குளவி
B) ஆம்பல் மலர்
C) நெல் குத்தும் உலக்கை
D) நாகணவாய்ப் பறவை
38. இவற்றில் எந்த இதழை பெரியார் நடத்தவில்லை
A) சுயமரியாதை
B) குடியரசு
C) விடுதலை
D) உண்மை
39. பொருந்தாத இணையை கண்டறிக
A) மின்சாரப் பூ - மேலாண்மை பொன்Dசாமி
B) சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
C) தமிழ்ப் பழமொழிகள் -பக்தவத்சல பாரதி
D) ஒரு சிறு இசை - வண்ணதாசன்
40. பொருந்தாத இணையை கண்டறிக
A) நேர் நேர் - தேமா
B) நிரை நேர் - புளிமா
C) நிரை நிரை - காவிளம்
D) நேர் நிரை - கூவிளம்
41. கூற்று ( A) : பெரியார் உயிர் எழுத்துகளில் ஐ என்பதனை அய் எனவும் ஔ என்பதனை அவ் எனவும் சீரமைத்தார்
காரணம் (R) : சில எழுத்துகளை குறைப்பதன் வாயிலாக தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று எண்ணினார்.
A) (A) &(R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.
B) (A) சரி ஆனால் (R) தவறு
C) (R) சரி ஆனால் (A) தவறு
D) (A) & (R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.
42. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது
A) ஆத்திச்சூடி
B) யசோதர காவியம்
C) கொன்றை வேந்தன்
D) புறநானூறு
43. பொருத்துக
1. பாலை இறக்கு - அ) நீட்டலளவையாகுபெயர்
2. வள்ளுவர் சொல் - ஆ) தொழிலாகுபெயர்
3. வற்றல் உண்டான் - இ) தானியாகுபெயர்
4. 2 மீட்டர் கொடு - ஈ) சொல்லாகுபெயர்
1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
44. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) மூன்று சீர் - குறளடி
B) நான்கு சீர் - அளவடி
C) ஐந்து சீர் - நெடிலடி
D) ஆறு சீர் மற்றும் அதற்கும் மேல் - கழிநெடிலடி
45. தவறான இணையைக் கண்டறிக.
A. மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது - இயற்சீர் வெண்டளை
B. விளமுன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத் தளை
C. காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை
D. காய்முன் நிரை வருவது - ஒன்றிய வஞ்சித்தளை
46. பொருத்துக
1. பொருட்பெயர்ப் பகுபதம் - அ) சென்னையான்
2. இடப்பெயர்ப் பகுபதம் - ஆ) மூக்கன்
3. காலப்பெயர்ப் பகுபதம் - இ) பொன்னன்
4. சினைப்பெயர்ப் பகுபதம் - ஈ) சித்திரையான்
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. இ ஈ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. அ இ ஈ ஆ
47. இராணி மங்கம்மாள் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டிய மைசூர் மன்னன் யார்?
A) இரவிவர்மன்
B) ஹைதர் அலி
C) அரங்க கிருட்டிண முத்துவீரப்பன்
D) சிக்கதேவராயன்
48. செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப் பையுள் கொண்டஅப் பனவன் என்னை
நீ - இவ்வடியில் பனவன் என்பது யாரைக் குறிக்கும் ?
A) சொக்கநாதர்
B) நக்கீரர்
C) தருமி
D) உமையம்மை
49. எழுத்துகளின் தோற்றம் பற்றிய பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A. மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துதல் - த், ந்
B. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துதல் - ப், ம்
C. நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துதல் - ய்
D. மேல்வாயை நாக்கின் நுனி தடவுதல் - ம், த்
50. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?
அலை அழை அளை
A. திரை கூப்பிடு புற்று
B. கடல் அலை ஒருவகை மரம் திரை
C. புற்று கூப்பிடு திரை
D. வெள்ளம் கூப்பிடு புற்று
51. தென்னிந்திய மொழிகளை தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்று கருதியவர் யார் ?
A) ஸ்டென்கனோ
B) ஹோக்கன்.
C) கமில்சுவலபில்
D) பிரான்சிஸ் எல்லிஸ்.
52. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி என்ற வரிகள் இடம்பெற்ற நுhல் எது ?
A) பன்னிரு பாட்டியல்
B) நன்னூல்
C) புறப்பொருள் வெண்பாமாலை
D) தொல்காப்பியம்.
53. சொல்லணி அமைத்து சுவைவளம் செழிக்கப் பாடுபவர் யார் ?
A) ஆசு கவி
B) மதுரகவி
C) சித்திரக் கவி
D) வித்தாரக் கவி
54. பாடநூல் ஆசிரியர் பைந்தமிழ் ஆசான் எனப் போற்றப்படுபவர் யார் ?
A) மு.மேத்தா
B) கா. நமச்சிவாயனார்
C) பாரதிதாசன்
D) தமிழன்பன்
55. ரூபாயத் என்ற பாடல் எதனை விளக்குகிறது ?
A) வாழ்க்கைத் தத்துவம்
B) சமய நெறி
C) பொருளீட்டல்
D) கடற்பயணம்
56. கணப்புரை எதனோடு தொடர்புடையது ?
A) கோடைக் காலம்
B) குளிர்காலம்
C) மழைக் காலம்
D) வசந்த காலம்
57. ‘நீ மீண்டும் தோன்றிய பாரதியடா’ எனக் கல்யாணசுந்தரத்தைப் பாராட்டியவர் யார் ?
A) மு.மேத்தா
B) தோழர் ஜீவானந்தம்
C) பாரதிதாசன்
D) அறிஞர் அண்ணா
58. வெண்பா தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக
A) இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வரும்
B) இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வரும்
C) பிற தளைகளும் வரும்
D) ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்
59. பள்ளிப்பறவைகள் என்ற நூலின் பாடல்கள் பலவும் எந்த இதழ்களில் வெளிவந்தவை ?
A) தமிழ்மலர்
B) தென்மொழி
C) தமிழ்ச்சிட்டு
D) B மற்றும் C
60. குறில் எழுத்து நெடிலாக மாறி பின் அளபெடுக்கும் அளபெடை எது ?
A) இன்னிசை அளபெடை
B) செய்யுளிசை அளபெடை
C) சொல்லிசை அளபெடை
D) ஒற்றளபெடை
61. வெ.ராமலிங்கனார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) பிறந்த ஊர் - மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
B) பெற்றோர் - முனுசாமி, மங்களம்
C) தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.
D) காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
63. பொருத்துக
1. இன்மை - அ) வலிமை
2. திண்மை - ஆ) தவம்
3. ஆழி - இ) வறுமை
4. நோன்மை - ஈ) கடல்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ அ ஈ ஆ
C. ஈ அ ஆ இ
D. ஈ இ ஆ அ
63. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை எது?
A) இன்னிசை அளபெடை
B) செய்யுளிசை அளபெடை
C) சொல்லிசை அளபெடை
D) ஒற்றளபெடை
64. வெ.ராமலிங்கனார் அவர்களின் படைப்புகள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) இசை நாவல்கள் - 3
B) கட்டுரைகள் - 12
C) தன்வரலாறு - 3
D) புதினங்கள் - 4
65. "அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும் முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது; பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்படவேண்டும்" என்றெல்லாம் மகனுக்கு அறிவுரை கூறியவர் யார் ?
A) முத்து கிருட்டிணிப்ப நாயக்கர்
B) இராணி மங்கம்மாள்
C) விஜயரங்கசொக்கநாத நாயக்கர்
D) கரிகால் சோழன்
66. தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தி எந்த நூல்/இதழில் குறிப்பிட்டுள்ளார்?
A) தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்
B) இந்தியன் ஒப்பீனியன்
C) சத்திய சோதனை
D) இவற்றில் எதுவுமில்லை
67. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A) பொறுப்பு
B) பொருப்பு
C) வெற்பு
D) சிலம்பு
68. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு என்னும் ஊரில், 23.03.1827 ஆம் நாள் பிறந்தார்.
B) கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற இப்பெருங்கவிஞர் 1900ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் இயற்கை எய்தினார்.
C) மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்
D) இரட்சணிய யாத்ரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் என்னும் நூல்களை இயற்றினார்
69. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவருவது ?
A) காரியாகுபெயர்
B) கருவியாகுபெயர்
C) சொல்லாகுபெயர்
D) கருத்தாவாகுபெயர்
70. கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலையின் பெயர் ?
A) மங்கம்மாள் சாலை
B) NH 4
C) NH 5
D) NH 7
71. பெண், அடிமை வாழ்வு நடத்த நேரிடின் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன் என்று
கூறியவர் யார் ?
A) திரு.வி.க
B) தந்தை பெரியார்
C) பாரதியார்
D) அம்பேத்கர்
72. சிறுபஞ்சமூலம் நூலோடு தொடர்பில்லாத மூலிகை எது ?
A) நெருஞ்சி
B) சிறுவழுதுணை
C) திப்பிலி
D) கண்டங்கத்தரி
73. நாவற்பழம் கருமை. ஆனால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபளவென இருக்கும்; ஆனால், கொடிய நஞ்சைக் கக்கும். ஆகவே, உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
என்று கூறியவர் யார் ?
A) வ.உ. சிதம்பரனார்
B) பாரதிதாசன்
C) கிருபானந்த வாரியார்
D) திரு.வி.க
74. இலக்கிய நோக்கில் இருபதாம் நூற்றாண்டை எவ்வாறு அழைக்கலாம் ?
A) புதுக்கவிதைக் காலம்
B) உரைநடைக் காலம்
C) ஹைக்கூ காலம்
D) சமய இலக்கியங்கள் காலம்
75. அமெரிக்கக் கவிஞர் வால்ட்விட்மனின் சாயலில் வசன கவிதை எழுதியவர் யார் ?
A) பாரதியார்
B) மு.மேத்தா
C) பாரதிதாசன்
D) தாராபாரதி
76. பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது எது ?
A) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
B) அளைமறிபாப்புப் பொருள்கோள்
C) அடிமறிமாற்றுப் பொருள்கோள்
D) மொழிமாற்றுப் பொருள்கோள்
77. எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த
சிங்கமே! இன்றே, இன்னே
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய்
புத்துணர்வைக் கொணர்வாய் - என்று பாடியவர் யார் ?
A) முடியரசன்
B) வாணிதாசன்
C) பாரதிதாசன்
D) பாரதியார்
78. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) கொண்டல் - மேகம்
B) ஆகுலம் - வருத்தம்
C) புரிசை - மதில்
D) தாமம் - ஆடை
79. ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி எழுதப்பெற்ற நூல் எது ?
A) இரட்சண்ய யாத்திரிகம்
B) மனோன்மணீயம்
C) சீறாப்புராணம்
D) தேம்பாவணி
80. இலக்கணக் குறிப்பறிக - வெண்குடை
A) வினைத் தொகை
B) பண்புத் தொகை
C) உவமைத் தொகை
D) உம்மைத் தொகை
81. குறுந்தொகையை தொகுத்தவர் யார் ?
A) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
B) உருத்திர சன்மன்
C) பூரிக்கோ
D) பெருந்தேவனார்
82. பொருத்துக
1. இயல்பு புணர்ச்சி - அ) கற்கோட்டை
2. தோன்றல் விகாரம் - ஆ) வாழைப்பழம்
3. கெடுதல் விகாரம் - இ) பொன்வளையல்
4. திரிதல் விகாரம் - ஈ) மரவேல்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ ஈ அ ஆ
C. இ ஆ ஈ அ
D. அ இ ஈ ஆ
83. அகர வரிசையில் அமைக்க.
A) அப்பம், அன்னம், அரங்கம், அழுத்தம்
B) அரங்கம், அழுத்தம், அன்னம், அப்பம்
C) அப்பம், அரங்கம், அன்னம், அழுத்தம்
D) அன்னம், அழுத்தம், அரங்கம், அப்பம்
84. எட்டுத் திசையிலும் தமிழ்நாடு ஏற்றமுற்று விளங்கும். அந்த நிலையினை இன்று எண்ணிப் பாரீர்! அதனை எய்தியே தீர்வோம்! பணி செய்ய வாரீர்! என்று பாடியவர் யார் ?
A) இராமலிங்க அடிகள்
B) பாரதியார்
C) ரா.பி.சேதுப்பிள்ளை
D) பாரதிதாசன்
85. உயிரினக் குன்றின் மணிமுடியாக வீற்றிருப்பது ?
A) இயற்கை
B) கடல்
C) இறைவன்
D) மனிதன்
86. தொடை எத்தனை வகைப்படும் ?
A) எட்டு
B) ஏழு
C) ஆறு
D) ஐந்து
87. பண்டையத் தமிழர்கள் அறிவன், கணியன், நாழிகைக் கணக்கர் என யாரை அழைத்தனர் ?
A) கவிபாடும் புலவர்களை
B) வானியலைப் பற்றிக் கணித்துக் கூறுபவர்களை
C) அரண்மனை ராஜ குருக்களை
D) இவர்களில் யாரும் இல்லை
88. உலகின் எட்டாவது அதியசம் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) ஜெசிக்கா காக்ஸ்
B) இராஜாஜி
C) கெலன் கெல்லர்
D) இவற்றில் ஏதுமில்லை
89. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைக் காண்க.
A) குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் பிரதானத்தொழில்
B) குசேலபுரி அரசாங்கத்துக்கு உழவுதான் பிரதானத்தொழில்
C) குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் முதன்மைத்தொழில்
D) குசேலபுரி அரசுக்கு உழவுதான் முதன்மைத்தொழில்
90. திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே, மொய்யிலைவேல்
மாறன் களிறு - இத்தொடரில் மாறன் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A) சேரன்
B) சோழன்
C) பாண்டியன்
D) பல்லவன்
91. நால்வகைக் கவிகளையும் பாட வல்லவரை எவ்வாறு அழைப்பர் ?
A) இலக்கிய புலவர் சிங்கம்
B) பாவலரேறு
C) பைந்தமிழ் ஆசான்
D) நன்னூற் புலவன்
92. அறிஞர் அண்ணாவுக்கு விருப்பமான இலக்கியம் எது ?
A) கலிங்கத்துப் பரணி
B) புறநானூறு
C) கம்பரசம்
D) சிலப்பதிகாரம்
93. காமராசர் தனது ஆட்சிக்காலத்தில் நில உச்சவரம்பு அளவை எவ்வளவு ஏக்கராக மாற்றினார்
A) 30
B) 40
C) 50
D) 60
94. நக்கீரர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டார்.
B) எட்டுதொகையில் அதிக பாடல்களை எழுதியவர்.
C) பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றினார்.
D) மதுரைக் கணக்காயனார் மகன்
95. தமிழ்விடு தூது தொடர்பான தவறான கூற்று எது?
A) இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணகனார்.
B) மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளது.
C) இந்நூலை 1930-ல் உ.வே.சாமிநாதர் முதன்முதலில் பதிப்பித்தார்.
D) இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
96. தமிழ் வடமொழியின் மகளன்று. அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி. தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறியவர் யார் ?
A) கமில் சுவலபில்
B) ஈராஸ் பாதிரியார்
C) வீரமாமுனிவர்
D) கால்டுவெல்.
97. செயப்பாட்டு வினைத் தொடரைக் காண்க ?
A) கோவலன் கொலையுண்டான்
B) ஓவியம் குமரனால் வரையப்பட்டது
C) வீடு கட்டியாயிற்று
D) இவை அனைத்தும்
98. புறநானூற்றில் இடம்பெறாத வரிகள் எது?
A) நீரின்று அமையாது உலகம்
B) உற்றுழி உதவியும் உறுபொருள் பொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
C) யாதும் ஊரே யாவரும் கேளிர்
D) உண்பது நாழி உடுப்பவை இரண்டே
99. பொருந்தாத இணையைக் கண்டறிக
A. இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
B. குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
C. கூவல் - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
D. பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
100. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டியவர் யார் ?
A) கர்னல் பென்னிகுயிக்
B) ஜேம்ஸ் கேமரூன்
C) அயன் வில்மன்
D) சர் ஆர்தர் காட்டன்
S.No | Subject | Download links |
1. | INDEX (all question Papers downloads) | |
2. | சார்பெழுத்துகள் | |
3. | வினைச்சொல் | |
4. | சொல் இலக்கணம் | |
5. | தொகைநிலைத் தொடர் | |
6. | தொகாநிலைத் தொடர் | |
7. | தமிழ் இலக்கணம் – வழக்கு | |
8. | அணி இலக்கணம் | |
9. | வல்லினம் மிகும் - மிகா இடங்கள் |
Download All Model question Paper Click Here > DOWNLOAD
FOR ONLINE TEST CLICK HERE > CLICK HERE