TNPSC GROUP -2 GENARAL TAMIL
MODEL QUESTION PAPER - 4
கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
மாதிரி வினாத்தாள் - 4
விடையுடன் இலவச பதிவிறக்கம்
புதிய பாடத்திட்டம் (2022)
மாதிரி வினாத்தாள் 4-க்கான
பாடத்திட்ட தலைப்புகள்
பகுதி (அ)
1. எதிர்ச்சொல்லை
எடுத்தெழுதுதல்
பகுதி (ஆ)
2. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையரை, எட்டுத்தொகை , பத்துப் பாட்டு நூல்களில் உள்ள பிற
செய்திகள்.
பகுதி (இ)
3. தமிழில் கடித
இலக்கியம் - நாட்குறிப்பு, நேரு - காந்தி - மு.வ - அண்ணா -
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான
செய்திகள்
----------------------------------------------------------------
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து தேர்வர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 1)
மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 2)
மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 3)
மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 4)
மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)
மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)
மாதிரி வினாத்தாள்- 4 (100 வினாக்கள்)
1. தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து என்று கூறியவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) டாக்டர் மு.வ
C) மகாத்மா காந்தி
D) ஜவஹர்லால் நேரு
2. தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா இல்லையா என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியதில்லை என்று உரைத்தவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) டாக்டர் மு.வ
C) மகாத்மா காந்தி
D) ஜவஹர்லால் நேரு
3. சாதி சமய வேறுபாடுகளை மறக்க கற்றுக்கொள், மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள் என்று கூறியவர் யார் ?
A) டாக்டர் மு.வ
B) டாக்டர் அம்பேத்கர்
C) தந்தை பெரியார்
D) மகாத்மா காந்தி
4. புத்தகப் படிப்பு என்பது ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையை புரிந்துகொள்ள பயன்படும் என்று கூறியவர் யார் ?
A) க.சச்சிதானந்தன்
B) அறிஞர் அண்ணா
C) டாக்டர் மு.வ
D) ஜவஹர்லால் நேரு
5. பொருத்துக
1. ஆனந்தரங்கர் கோவை - அ) அறிமதி தென்னகன்
2. ஆனந்தரங்கர் பிள்ளைத் தமிழ் - ஆ) சீனிவாசக்கவி
3. ஆனந்தரங்கர் விஜயசம்பு - இ) தியாகராச தேசிகர்
4. ஆனந்தரங்கர் ராட்சந்தமு - ஈ) கஸ்தூரிரங்கக் கவி
1. 2. 3. 4.
A. ஆ இ ஈ அ
B. இ அ ஆ ஈ
C. ஆ இ அ ஈ
D. அ இ ஈ ஆ
6. சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை எந்த புலவருக்கு கவரி வீசினான் ?
A) மோசிகீரனார்
B) கோவூர்கிழார்
C) இளந்தத்தனார்
D) ஔவையார்
7. மறம் செய்தலையும் அறம் செய்தலையும் குறிக்கும் சொல் எது ?
A) வீரம்
B) ஈகை
C) வண்மை
D) புறம்
8. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதிய காலம் ?
A) 1761 - 1782
B) 1736 - 1761
C) 1732 - 1762
D) 1713 - 1716
9. சாலார் என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது ?
A) சாலர்
B) சாளுக்கியர்
C) சான்றோர்
D) மூடர்
10. டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம் கடித இலக்கியத்தில் கூறாத செய்தி எது ?
A. தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே எண்ணாதே.
B. வெளிநாட்டுத் துணியை மறுப்பது போல் தமிழ்மொழி அல்லாத பிறமொழிகளை விலக்க வேண்டும்.
C. கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களை விட நாட்டுமக்களின் நன்மையே பெரிது.
D. தலைமை உன்னைத் தேடிவந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே
11. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் எனத் தொடங்கும் செய்யுளின் மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்தி எது ?
A) கரிகாலச் சோழன் கல்லணையை கட்டினான்.
B) கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பு
C) கோப்பெரும் பேகன் கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கினான்.
D) அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கினான்.
12. மகாத்மா காந்தி அவர்கள் தம் கடித இலக்கியத்தில் கூறியுள்ள செய்தி எது?
A) தாய்மொழி மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றி இருப்பார்கள்.
B) தாய்மொழி ஒன்றே தமிழரை பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்.
C) ஆட்சிமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்.
D) கடிதம், பணவிடை, விளம்பரபலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
13. பழந்தமிழகம் பற்றிய செய்திகளில் புறநானூற்றில் மூலம் அறியப்படாதது எது ?
A) மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு மற்றும் கல்விப் பெருமை.
B) புலவர்களின் பெருமிதம், செய்யுள் இயற்றும் திறம், மன்னர்களுக்கு அறிவு புகட்டியமை.
C) தலைவன், தலைவியின் ஊடல் மற்றும் இல்லற மாண்பு மற்றும் அக ஒழுக்கம்
D) மக்களின் நாகரிகம் மற்றும் பண்பாடு.
14. பொருந்தாத இணையை கண்டறிக.
A) ஆற்றுதல் என்பது - ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
B) போற்றுதல் என்பது - புணர்ந்தாரைப் பிரியாமை
C) பண்பெனப்படுவது - கேடுஅறிந்து ஒழுகுதல்
D) அன்பெனப்படுவது - தன்கிளை செறாஅமை
15. கண்ணகனார் எந்த மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார் ?
A) வள்ளல் பாரி
B) சேரமான் இளந்திரையன்
C) கோப்பெருஞ்சோழன்
D) ஓய்மாநாட்டு நல்லியக் கோடன்
16. தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது என்று கூறியவர் யார் ?
A) அண்ணல் அம்பேத்கர்
B) மகாத்மா காந்தி
C) டாக்டர் மு.வ
D) ஜவஹர்லால் நேரு
17. போரில் வென்ற மன்னன் போர்க்களத்தில் ஆடும் கூத்து எது ?
A) குரவைக் கூத்து
B) வெறி
C) துணங்கை
D) சாதாரி
18. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் யார் ?
A) காப்பியாற்றுக் காப்பியனார்
B) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
C) களங்காய்கண்ணி நார்முடிச் சேரல்
D) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
19. பெருஞ்சித்திரனாருக்கு யானையை பரிசாகத் தந்த வள்ளல் யார் ?
A) வெளிமாண்
B) இளவெளிமான்
C) காரி
D) குமணன்
20. "எழுமுடி மார்பின் எய்திய சேரல்" என்று புகழப்படுபவன் யார் ?
A) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
B) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C) பல்யாணைச் செல்கெழு குட்டுவன்
D) களங்காய்கண்ணி நார்முடிச் சேரல்
21. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து பாடியதற்காக கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வருவாயும், அவன்மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர் யார்?
A) குமட்டூர் கண்ணனார்
B) பாலைக் கோதமனார்
C) பரணர்
D) கபிலர்
22. புறநானூறு எந்த பாவகையால் ஆனது ?
A) வெண்பா
B) அகவற்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா
23. அகநானூற்றுப் பாடல்களின் திணை வைப்புமுறை தொடர்பான தவறான கூற்று எது ?
A) 2, 3 என வருவன - குறிஞ்சித் திணை
B) 4, 14 என வருவன - முல்லைத் திணை
C) 6, 16 என வருவன - மருதத் திணை
D) 10, 20 என வருவன - நெய்தல் திணை
24. கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொகுப்பித்த நூல் எது?
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) நாலடியார்
D) ஐங்குறுநூறு
25. எந்தநில மக்கள் குரவைக் கூத்தாடுவர் ?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
26. இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும் இரந்தவர்க்கும் இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுப்பது என்பது ?
A) அறம்
B) படை மடம்
C) மறம்
D) கொடை மடம்
27. சரியான இணையை கண்டறிக
A) அறிவெனப்படுவது - கூறியது மறாஅமை
B) செறிவெனப்படுவது - பேதையார் சொல் நோன்றல்
C) பொறையெனப்படுவது - போற்றாரைப் பொறுத்தல்
D) முறையெனப்படுவது - மறைபிறர் அறியாமை
28. இயன்மொழித் துறை எதைப் பற்றியது?
A) எதிரிநாட்டு மன்னனின் சிறப்பை தம்நாட்டு மன்னனிடம் உரைப்பது
B) இருமன்னர்களிடையே போரை நிறுத்த வேண்டி உரையாற்றுவது
C) இன்ன மன்னன் இன்ன பொருள் பரிசிலளிப்பான் எனக் கூறுவது
D) வேந்தனெதிர்சென்று அவன் தன்மையை கூறி புகழ்வது.
29. நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் என்று பாடியவர் யார் ?
A) மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்
B) பரணர்
C) மிளைகிழை நல்வேட்டனார்
D) நரிவெருஉத் தலையார்
30. அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின் - இச்செய்யுளில் எந்த நிலம் பற்றி பாடப்படுகிறது?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
31. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் உலகின் மிகச்சிறந்த நூல்களுன் ஒன்று என்று எந்த நூலைக் குறிப்பிடுகிறார் ?
A) சாகுந்தலம்
B) போரும் அமைதியும்
C) கம்பராமாயணம்
D) திருக்குறள்
32. வளவன் என்ற பெயரில் கடித இலக்கியங்களை படைத்தவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) டாக்டர் மு.வ
C) மு.பி. பாலசுப்பிரமணியம்
D) திரு.வி.க
33. நலிந்தோறும் கூட, இந்நாளில் புதுத்தெம்பு வரக்காண்கின்றனர். இந்நாளில் மட்டுமே உழைப்பின் பெருமையை உணர்ந்து உரையாடி மகிழ்ந்திட வாய்ப்பு கிடைக்கின்றது என்ற கடித இலக்கியக் கூற்று யாருடையது ?
A) டாக்டர் மு.வ
B) ஜவஹர்லால் நேரு
C) திரு.வி.க
D) அறிஞர் அண்ணா
34. யாருடைய புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்று நேரு கூறுகிறார் ?
A) தால்சுதாய்
B) சாக்ரடீஸ்
C) பிளேட்டோ
D) பிட்ராந்து ரஸ்ஸல்
35. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி என்றவர் யார் ?
A) பெப்பிசு
B) வ.வே.சு ஐயர்
C) கே.கே.பிள்ளை
D) உ.வே.சா
36. தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார் என்றவர் யார் ?
A) பெப்பிசு
B) வ.வே.சு ஐயர்
C) கே.கே.பிள்ளை
D) உ.வே.சா
37. அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது ?
A) உத்தராஞ்சல்
B) உத்தரபிரதேசம்
C) மத்திய பிரதேசம்
D) பீகார்
38. பயிற்று மொழியைப் பற்றி சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்று கூறியவர் யார் ?
A) மகாத்மா காந்தி
B) டாக்டர் இராதாகிருஷ்ணன்
C) அறிஞர் அண்ணா
D) தந்தை பெரியார்
39. நேருவுக்கு பிடித்தமான ஆங்கிலச் சிந்தனையாளர் யார் ?
A) பிளேட்டோ
B) காளிதாசர்
C) அரிஸ்டாடில்
D) பிட்ராந்து ரஸ்ஸல்
40. எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே என்று பாடியவர் யார் ?
A) பரணர்
B) ஔவையார்
C) கபிலர்
D) மோசிகீரனார்
41. நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார் ?
A) நல்லூர் நத்தத்தனார்
B) தேவகுலத்தார்
C) மோசிகீரனார்
D) மிளைகிழான் நல்வேட்டனார்
42. சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) ஐங்குறுநூறு
D) பதிற்றுப்பத்து
43. கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்ற செய்யுளில் இடம்பெற்றுள்ள "மா" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கூறுக
A) பெரிய
B) ஒரு வகை மரம்
C) விலங்கு
D) கலைமகள்
44. புறநானூற்றில் சேரமான் கருவூரேறிய ஒன்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறையை பாடிய புலவர் யார் ?
A) நரிவெரூஉத் தலையர்
B) கபிலர்
C) மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
D) இறையனார்
45. இறைவன் தருமிக்கு அருளிய "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள சங்க நூல் எது ?
A) அகநானூறு
B) குறுந்தொகை
C) திருவிளையாடல் புராணம்
D) புறநானூறு
46. நல் என்னும் அடைமொழியைப் பெற்ற நூல் எது ?
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) அகநானூறு
D) கலித்தொகை
47. அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் என்னும் செய்யுள் அடியில் உள்ள அரி என்னும் சொல்லின் பொருளைக் கூறுக
A) திருமால்
B) நெற்கதிர்
C) சிங்கம்
D) வெட்டு
48. சான்றோர் சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் ஆகுபவே - என்ற புறநானூற்று செய்யுள் அடிகளோடு பொருத்தப்பாடுடைய பழமொழி எது ?
A) இனம் இனத்தோடு சேரும்
B) கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு
C) பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
D) இளமையில் கல்
49. துகிர் என்ற சொல்லின் பொருள் தருக
A) மயில் தோகை
B) நகம்
C) பவளம்
D) சந்தனம்
50. கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே - இச்செய்யுளில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக ?
A) கொண்டு - நட்பே
B) குறிஞ்சிப்பூ - இழைக்கும்
C) கருங்கோற் - பெருந்தேன்
D) நாடனொடு - நட்பே
51. ஒருமை பன்மை பிழைநீக்கிய தொடரைக் காண்க.
A) குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்தது.
B) காற்று வந்ததால் மரங்கள் அசைந்தது
C) தலைவனது நட்பு நிலத்தினைவிடப் பெரியது.
D) மூன்று முறை மழைபெய்ததால் ஆற்றில் வெள்ளம் வந்தன.
52. குறுந்தொகையின் அடிவரையரையைக் கூறுக
A) 8 - 16
B) 13 - 31
C) 3 - 6
D) 4-8
53. உயர்வு சிறப்பும்மை அல்லாத சொல் எது ?
A) நாயினும்
B) நிலத்தினும்
C) வானினும்
D) நீரினும்
54. பொருத்துக
1. முல்லைக் கலி - அ) நல்லுருத்திரன்
2. மருதக் கலி - ஆ) பெருங்கடுங்கோன்
3. நெய்தற்கலி - இ) மருதனிள நாகனார்
4. பாலைக் கலி - ஈ) நல்லந்துவனார்
1. 2. 3. 4.
A. அ இ ஈ ஆ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ ஈ இ ஆ
55. வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர் - இத்தொடரில் உள்ள வட்டி என்ற சொல்லின் பொருளைக் கூறுக.
A) அசலுக்கான மிகை ஊதியம்
B) பனையோலைப் பெட்டி
C) பெண்கள் இடுப்பில் அணியும் அணிகலன்
D) செல்வம்
56. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) பதிற்றுப்பத்து
D) பரிபாடல்
57. இறையனார் களவியல் உரை எழுதியவர் யார் ?
A) நக்கீரர்
B) இறையனார்
C) பரிமேலழகர்
D) இடைக்காடனார்
58. குறுந்தொகையை தொகுத்தவர் யார் ?
A) பூரிக்கோ
B) தேவகுலத்தார்
C) காக்கைப் பாடினியார்
D) கூடலூர் கிழார்
59. ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அறிவிப்பதற்காக பாடப்பட்ட நூல் எது
A) குறிஞ்சிப்பாட்டு
B) பரிபாடல்
C) கலித்தொகை
D) தொல்காப்பியம்
60. பொருந்தாத இணையை கண்டறிக
A) திருமுருகாற்றுப்படை - 317அடிகள்
B) சிறுபாணாற்றுப்படை - 269 அடிகள்
C) பெரும்பாணாற்று ப்படை - 400 அடிகள்
D) பொருணராற்றுப் படை - 248 அடிகள்
61. ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார் ?
A) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
B) பன்னாடு தந்த மாறன் வழுதியார்
C) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
D) பூரிக்கோ
62. குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது - எவ்வகை தொடர் எனக் கண்டறிக ?
A) தொடர்நிலைத் தொடர்
B) கலவைத் தொடர்
C) செயப்பாட்டுவினைத் தொடர்.
D) வினாத் தொடர்
63. பட்டினப்பாலையின் பாட்டுடை தலைவன் யார் ?
A) ஓய்மாநாட்டு நல்லியக் கோடன்
B) முருகவேள்
C) கரிகால் பெருவளத்தான்
D) நன்னன்
64. எட்டுத்தொகை நூலில் உள்ள அகநூல்களின் எண்ணிக்கை
A) 8
B) 5
C) 3
D) 2
65. பொருணராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார் ?
A) ஓய்மாநாட்டு நல்லியக் கோடன்
B) முருகவேள்
C) கரிகால் பெருவளத்தான்
D) நன்னன்
66. சங்க இலக்கியங்கள் அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்று கூறியவர்?
A) மாக்சுமுல்லர்
B) குமரிலபட்டர்
C) கமில் சுவலபில்
D) ஈராஸ் பாதிரியார்
67. மணமுழா, நெல்லரிகிணை ஆகியவை எந்த திணைக்குரிய பறைகள் ?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
68. தன்நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது எத்திணை?
A) வெட்சித் திணை
B) காஞ்சித் திணை
C) கரந்தைத் திணை
D) தும்பைத் திணை
69. புன்னை மரத்தை தமக்கையாக எண்ணி அதன்முன் காதலனோடு பேச நாணும் தலைவியைப் பற்றிய செய்தி எந்நூலின் மூலம் அறியலாகிறது ?
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) ஐங்குறுநூறு
D) பதிற்றுப் பத்து
70. பொருத்துக
1. திருமுருகாற்றுப்படை - அ) நல்லியக் கோடன்
2. சிறுபாணாற்றுப்படை - ஆ) முருகவேள்
3. பெரும்பாணாற்றுப்படை - இ) கரிகாலன்
4. பொருணராற்றுப்படை - ஈ) இளந்திரையன்
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. அ இ ஈ ஆ
71. புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
A) கம்பராமாயணம்
B) சிலப்பதிகாரம்
C) புறநானூறு
D) நற்றினை
72. பிரித்து எழுதுக - அங்கண்
A) அம் + கண்
B) அ + கண்
C) அங் + கண்
D) அங்கு + கண்
73. துய்ப்பேம் - துய் + ப் + ப் + ஏம் - பகுபத உறுப்பிலக்கணப்படி பிரிக்கப்பட்ட இச்சொல்லில் ஏம் என்பது யாது ?
A) தன்மை பன்மை வினைமுற்று விகுதி
B) சந்தி
C) எதிர்கால இடைநிலை
D) முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
74. பொருந்தாத இணையை கண்டறிக
A) வெண்குடை - பண்புத் தொகை
B) கல்லா ஒருற்கும் - வினைமுற்று
C) நாழி - ஆகுபெயர்
D) துய்ப்பேம் - தன்மை பன்மை வினைமுற்று
75. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி ?
A) பெப்பிசு
B) ஆனந்தரங்கர்
C) ஜான் பன்யான்
D) வால்ட் விட்மன்
76. எட்டுத்தொகை நூல்களில் மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள் எவை ?
A) புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல்
B) பரிபாடல், ஐங்குநூறு, கலித்தொகை, அகநானூறு
C) நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
D) புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை
77. திராவிடநாடு என்ற இதழில் கடிதங்களை எழுதியவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) டாக்டர் மு.வ
C) கண்ணதாசன்
D) பாரதிதாசன்
78. பள்ளிக்கூடம் வீட்டைப்போன்று இருக்க வேண்டும், குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்றவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) மகாத்மா காந்தி
C) பாரதிதாசன்
D) கோத்தாரி கல்விக் குழு
79. எதிர்சொல் தருக - கீர்த்தி
A) புகழ்
B) இகழ்
C) நட்பு
D) அயல்
80. எதிர்ச்சொல் தருக - அவிதல்
A) வாழ்தல்
B) காய்தல்
C) உவத்தல்
D) மருள்
81. எதிர்ச்சொல் தருக - விழைந்தார்
A) விரும்பினார்
B) பொறுத்தார்
C) வெறுத்தார்
D) மறுத்தார்
82. எதிர்ச்சொல் தருக - களிப்பு
A) மகிழ்ச்சி
B) மறுமை
C) துயரம்
D) இன்பம்
83. எதிர்ச்சொல் தருக - பிணக்கம்
A) சுணக்கம்
B) இணக்கம்
C) வணக்கம்
D) இலக்கம்
84. எதிர்ச்சொல் தருக - நுண்மை
A) நொய்மை
B) பருமை
C) வலிமை
D) வாய்மை
85. எதிர்ச்சொல் தருக - மங்குதல்
A) தொங்குதல்
B) வாங்குதல்
C) ஒளிர்தல்
D) தேங்குதல்
86. எதிர்ச்சொல் தருக - தக்கார்
A) தகவிலார்
B) அன்புடையார்
C) பண்புடையார்
D) உணர்விலார்
87. எதிர்ச்சொல் தருக - ஆடூஉ
A) தகடூஉ
B) காடூஉ
C) மகடூஉ
D) நாடூஉ
88. எதிர்ச்சொல் தருக - தண்ணீர்
A) வெந்நீர்
B) சுடுநீர்
C) குளுநீர்
D) கொதிநீர்
89. எதிர்ச்சொல் தருக - தமர்
A) அவர்
B) நம்மவர்
C) பிறர்
D) அயல்
90. எதிர்ச்சொல் தருக - மங்கலம்
A) சுமங்கலம்
B) அமங்கலம்
C) இடக்கரடக்கல்
D) குழூஉக்குறி
91. எதிர்ச்சொல் தருக - வன்மை
A) மென்மை
B) வலிமை
C) கஞ்சம்
D) கருமி
92. எதிர்ச்சொல் தருக - விருப்பு
A) வெருப்பு
B) வெறுப்பு
C) விழைவு
D) துயரம்
93. எதிர்ச்சொல் தருக - அடி
A) முடி
B) தலை
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை.
94. எதிர்ச்சொல் தருக - ஏகுவீர்
A) வருவீர்
B) ஓடுவீர்
C) பாடுவீர்
D) நாடுவீர்
95. எதிர்ச்சொல் தருக - நோதல்
A) தனிதல்
B) உகுதல்
C) தணிதல்
D) வருந்துதல்
96. எதிர்ச்சொல் தருக - மடி
A) சோம்பல்
B) சுறுசுறுப்பு
C) மூடர்
D) கால்
97. எதிர்ச்சொல் தருக - நொய்மை
A) பொய்மை
B) புலமை
C) திட்பம்
D) உரிமை
98. எதிர்ச்சொல் தருக - செய்வோம்
A) செய்யோம்
B) செய்யும்
C) செய்கும்
D) அறிகும்
99. எதிர்ச்சொல் தருக - உடன்பாடு
A) உடன்படிக்கை
B) ஒப்பந்தம்
C) மாறுபாடு
D) கோட்பாடு
100. எதிர்ச்சொல் தருக - அவல்
A) பள்ளம்
B) மிசை
C) இகழ்ச்சி
D) குன்று
DOWNLOAD PDF FILES - LINKS