10 - TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL EXAM 10 - கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 10 - விடையுடன் இலவச பதிவிறக்கம்


TNPSC GROUP II & IV GENARAL TAMIL
MODEL QUESTION PAPER 10
FREE DOWNLOAD

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 10

விடையுடன் இலவச பதிவிறக்கம்

பாடத்திட்டம்

மாதிரி வினாத்தாள் 10-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்

2.(பகுதி-ஆ)சமய முன்னோடிகள்அப்பர்சம்பந்தர்சுந்தரர்மாணிக்க வாசகர்திருமூலர்குல சேகர ஆழ்வார்ஆண்டாள்சீத்தலைச் சாத்தனார்எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளைஉமறுப் புலவர் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள்சிறப்புப் பெயர்கள்.  

3. (பகுதி-இ)உ.வே.சாமிநாத அய்யர்தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்சி.இலக்குவனார் - தமிழ்பணி தொடர்பான செய்திகள்.  


MODEL Q PAPER 10 PDF FREE DOWNLOAD CLICK HERE 
> CLICK HERE


DAY 10 ONLINE TEST  
> CLICK HERE


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -10  👇

மாதிரி வினாத்தாள்- 10 (100 வினாக்கள்)


1.       தேவாரத்தின் பண்ணடைவு முறைக்கு முன்னோடியாக திகழ்ந்த நூல் எது?

A)      குறிஞ்சிப்பாட்டு                                           

B)      பரிபாடல்

C)      கலித்தொகை                                             

D)      தொல்காப்பியம்

         

2.       தமிழ் பன்னியன் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)      எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை                            

B)      திருவள்ளுவர்

C)      திருஞான சம்பந்தர்                                      

D)      திருநாவுக்கரசர்

 

3.   திருஞான சம்பந்தருக்கு கொஞ்சு தமிழ், திருநாவுக்கரசருக்கு கெஞ்சு தமிழ்சுந்தரருக்கு மிஞ்சு தமிழ் என்று சொன்னவர் யார்?                                        

A)      வள்ளலார்                                                   

B)      கி.வா.ஜகந்நாதன்              

C)      குன்றக்குடி அடிகளார்                                 

D)      சுவாமி விபுலானந்தர்

 

4.   கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது அக்கல்லினையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்  யார் ?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      சுந்தரர்                                                        

D)      மாணிக்கவாசகர்

 

5.       காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால்... என்று பாடியவர் யார்?

A)      ஆண்டாள்                                                  

B)      திரு.வி.க

C)      பாரதிதாசன்                                                 

D)      கி.ஆ.பெ.விஸ்வநாதன்

 

6.       தேவாரப் பாடல் எவ்வகையைச் சார்ந்தது ?

A)      இசைத் தமிழ்                                                        

B)      இயல் தமிழ்

C)      நாடகத் தமிழ்                                                        

D)      பண்ணிசை

 

7.       உயிரினக் குன்றின் மணிமுடியாக வீற்றிருப்பது யார் ?

A)      இறைவன்                                                  

B)      மனிதன்                         

C)      ஞானிகள்                                                    

D)      புலவர்

 

8.    பராபரக் கண்ணி, எக்காலக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலியவற்றை பாடியவர் யார் ?

A)      குணங்குடி மஸ்தான் சாகிபு                                   

B)      தாயுமானவர்

C)      திருத்தணிகைச் சரவணப் பெருமாள்            

D)      அப்பூதியடிகள்

 

9.       எச்.ஏ. கிருட்டினனார் யாரிடம் தமிழிலக்கியங்களை கற்றார்

A)      சங்கரநாராயணர்                                 

B)      மாணிக்கவாசகத்தேவர்

C)      பிலவணச் சோதிடர்                                     

D)      தெய்வநாயகி அம்மாள்

 

10.     உமறுப்புலவர் தொடர்பான தவறான கூற்றினை காண்க.

A)      சீறா புராணத்தை இயற்றினார்                                                   

B)      எட்டயபுரம் கடிகை முத்துப் புலவருக்கு ஆசிரியராக விளங்கினார்

C)      அப்துல் காதிர் மரைக்காரயர் என்ற வள்ளல் சீதக்காதி கேண்டுக் கொண்டதற்கு இணங்க சீறாபுராணத்தை இயற்றினார்                       

D)      சீதக்காதியின் மறைiக்குப் பின்னர் அபுல்காசிம் உதவியால் சீறாபுராணத்தை நிறைவு செய்தார்

 

11.      பரசமயக்கோளரி என்று அழைக்கப்படுபவர் யார்?

A)      திருஞான சம்பர்                                          

B)      திருநாவுக்கரசர்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      முத்துராமலிங்கர்

 

12.     யார்காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவரும், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அழைக்கடும், உ.வே.சாமிநாதய்யரின் அஞ்சல்தலை நடுவணரசால் வெளியிடப்பட்ட ஆண்டு எது ?

A)      2003                                                          

B)      2006

C)      2004                                                          

D)      2007

 

13.     எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A)      திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு என்னும் ஊரில், 23.03.1827 ஆம் நாள் பிறந்தார்.     

B)      கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற இப்பெருங்கவிஞர் 1900ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் இயற்கை எய்தினார்.

C)   மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்                           

D)      இரட்சணிய யாத்ரிகம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் என்னும் நூல்களை இயற்றினார்

 

14.     உ.வே.சாமிநாதய்யர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A)      உ.வே.சா 18 புராணங்களை பதிப்பித்துள்ளார்

B)     உ.வே.சா தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் எழுதினார்.

C)      உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என் சரிதம்.          

D)      உ.வே.சா வின் தமிழ்ப்பணிகளை ஜி.யு போப் மற்றும் சூலியல் வின்சோன் முதலிய வெளிநாட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.

 

15.    அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

A)      தமிழ்விடுதூது                                             

B)      உமர்கய்யாம் பாடல்கள்    

C)      திருக்குறள்                                                 

D)      நாலடியார்

 

16.     தமிழ் மொழியியல் ஆய்வின் முன்னோடி யார்  ?

A)      உ.வே.சாமிநாதய்யர்                                               

B)      மறைமலையடிகள்

C)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்                        

D)      தேவநேயப் பாவாணர்

 

17.     நபிகள் நாயகத்தின்திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார் ?

A)      உமறுப்புலவர்                                                       

B)      பனுஅகுமது மரைக்காயர்

C)      குணங்குடி மஸ்தான்                                            

D)      ஆப்பிரகாம் பண்டிதர்

 

18.     பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை எனும் பாடலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த திருத்தாண்டகப் பாடலை எழுதியவர் யார் ?

A)      திருநாவுக்கரசர்                                           

B)      திருஞானசம்பந்தர்

C)      மாணிக்கவாசகர்                                          

D)      சுந்தரர்

 

19.     தலபுராணங்கள் பாடும் மரபை துவக்கி வைத்தவர் யார் ?

A)      திருநாவுக்கரசர்                                           

B)      மீனாட்சி சுந்தரனார்

C)      திருஞான சம்பந்தர்                                      

D)      உமாபதி சிவம்

 

20.     அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      சுந்தரர்

 

21.     குலசேகர ஆழ்வார் வடமொழியில் எழுதிய நூல் எது?

A)      பெருமாள் திருமொழி                                  

B)      முகுந்த மாலை

C)      பெரிய திருவந்தாதி                                               

D)      திருவாசகம்

 

22.    சீதக்காதியின் மறைவிற்குப் பின்னர் யாருடைய உதவியால் சீறாபுராணம் நிறைவுற்றது ?

A)      சடையப்ப வள்ளல்                                       

B)      சந்திரன் சுவர்க்கி

C)      அபுல்காசிம்                                                 

D)      அப்துல் காதிர்

 

23.    தவறான இணையைக் கண்டறிக.

A)      செழுந்துயில்                   - அன்மொழித் தொகை

B)      இகலவர்                         - குறிப்பு வினையாலனையும் பெயர்

C)      திகழ்சிரம்                        - வினைத் தொகை                                    

D)      அறிகிலார்                       - எதிர்மறை வினையாலனையும் பெயர்

 

 24.   தாண்டவம் பாடுவதில் வல்லவர்  யார் ?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      சுந்தரர்

 

25.    முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலம் அமைந்துள்ள ஊர் எது ?

A)      திருவல்லிக்கேணி                                       

B)      மயிலாப்பூர்

C)      A மற்றும் B                                                  

D)      இவற்றில் எதுவுமில்லை

 

26.    நம்மாழ்வாழ்வார் பிறந்த ஊர் எது?

A)      காஞ்சிபுரம்                                                  

B)      குருகூர்

C)      மயிலை                                                      

D)      சிதம்பரம்

 

27.     பொருத்துக

a.       விரை                   - 1)  அணிகலன்

b.       கழல்                     - 2) பெருகி

c.       ததும்பி                  - 3) மணம்

d.       மெய்                     - 4) உடல்

         

a.       b.       c.       d.      

A.       1        3       4       2      

B.       4       3       1        2      

C.       2       4       1        3      

D.       3       1        2       4      

 

28.    பண்ணமைவு உடைய பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A)      பாசுரம்                                                                  

B)      பதிகம்

C)      சதகம்                                                         

D)      விருத்தம்

 

29.    தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் எது ?

A)      திருமந்திரம்                                                

B)      திருவாசகம்

C)      தொல்காப்பியம்                                            

D)      அகத்தியம்

 

30.     சி.இலக்குவனார் தொடர்பாக சரியான கூற்று எது?

1.       தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மைமேடு என்ற கிராமத்தில் பிறந்தார்.

2.       இவரின் பெற்றோர் சிங்காரவேலர் மற்றும் இரத்தினத்தாச்சி அம்மையார்

3.       இவரின் இயற்பெயரான இலட்சுமணன் என்பதை இவரின் ஆசிரியர் திரு.சாமி           சிதம்பரனார் அவர்கள் இலக்குவன் என மாற்றினார்

4.       திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936 ல் புலவர் பட்டம் பெற்றார்.

A)      1, 2 மட்டும் சரி                                             

B)      1, 4 மட்டும் சரி

C)      1,2, 3 மட்டும் சரி                                          

D)      அனைத்தும்  சரி

 

31.     மாணிக்கவாசகர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A.       மாணிக்க வாசகர் பிறந்த ஊர் - மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர்

B.       மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராக பணியாற்றினார்

C.       பாண்டியனுக்காக குதிரை வாங்க சென்றபோது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றார்.

D.       இவரின் காலம் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு.

 

32.    சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள்  எட்டாம் திருமுறையாக உள்ளது எது ?

A)      திருவாசகம்                                                 

B)      திருக்கோவையார்

C)      A மற்றும் B                                                  

D)      இவற்றுள் ஏதுமில்லை

 

33.    தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே என்று பாடியவர் யார் ?

A)      குலசேகர ஆழ்வார்                                                

B)      திருஞான சம்பந்தர்

C)      திருநாவுக்கரசர்                                           

D)      மாணிக்க வாசகர்

 

34.    களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீக்கியவராய் திருநாவுக்கரசரின் தொண்டராக விளங்கியவர் யார் ?

A)      மாணிக்க வாசகர்                                         

B)      திருஞான சம்பந்தர்

C)      சுந்தரர்                                                        

D)      அப்பூதியடிகள்

 

35.    சபதம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் காண்க     

A)      உறுதி                                                                 

B)      வஞ்சம்                          

C)      ஆகடியம்                                                    

D)      வீரவுரை

 

36.    சீறாபுராணம் என்னும் நூல் பெயரில் சீறா என்பது எதைக்குறிக்கும்

A)      ஒழுக்கம்                                                     

B)      நன்னடத்தை

C)      வாழ்க்கை                                                    

D)      நன்னெறி

 

37.     திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதல் பாடல் எது ?

A)      உலகெலாம் உணர்ந்து . . .                                    

B)      பித்தா பிறைசூடி . . .

C)      மெய்தான் அரும்பி . . .                                 

D)      உலகம் யாவையும் . . .

 

38.    வேர்ச்சொல் அறிக - அறிந்தான் ?

A)      அறிந்து                                                      

B)      அறிந்த

C)      அறிக                                                         

D)      அறி

 

39.    உலகம் என்ற சொல்லின் வேர்ச்சொல் தருக 

A)      உலகு                                                                  

B)      உலக

C)      உலவு                                                                  

D)      உல

 

40.     வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்று - ஏங்கு

A)      ஏங்கி                                                          

B)      ஏக்கம் 

C)      ஏங்கினான்                                                 

D)      ஏமாற்றம்

 

41.     பொருத்துக

1.       இரக்கம் ஒன்றிலீர்          - அ) திருநாவுக்கரசர்

2.       கூற்றாயின வாறு             - ஆ) சுந்தரர்

3.       பித்தா பிறை சூடி            - இ) மாணிக்க வாசகர்

4.       நமச்சிவாயம் வாழ்க                   - ஈ) திருஞான சம்பந்தர்

          1.       2.       3.       4.      

A.       அ      ஆ     இ      ஈ      

B.       இ      அ      ஆ     ஈ      

C.       ஆ     அ      ஈ       இ     

D.       ஈ       அ      ஆ     இ     

42.    சரியாக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க.

A)      மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விறை யார்கழற்கென்.

B)      மெய்தான் அறும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

C)      மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

D)      மெய்தான் அரும்பி விதிற்விதிற்த் துன்விரை யார்கழற்கென்

 

43.    தேவாரம் மூவரால் பாடப்பட்டது - வாக்கிய வகை அறிக

A)      செய்வினை வாக்கியம்                                

B)      செயப்பாட்டு வினை வாக்கியம்

C)      தொடர் வாக்கியம்                              

D)      எதிர்மறை வாக்கியம்

 

44.    பொருத்தமான பொருளை தேர்வு செய்க

1.       கடுகி                     - அ)  மோதிரம்

2.       மேழி                     - ஆ)  கலப்பை, ஏர்

3.       வேந்தர்                 - இ)   மன்னர்

4.       ஆழி                      - ஈ)    விரைந்து

          1.       2.       3.       4.      

A.       அ      ஆ     இ      ஈ      

B.       ஈ       ஆ     இ      அ     

C.       ஆ     அ      ஈ       இ     

D.       உ      இ      ஈ       ஆ    

 

45.    ஆடவல்லான் அடிக்கீழ் என்றும் இருக்கும் வரத்தினை பெற்றவர் யார்

A)      காரைக்காலம்மையார்                                    

B)      திருஞானசம்பந்தர்

C)      மாணிக்கவாசகர்                                          

D)      இராவணன்

 

46.    வடக்கிருந்து வந்த வாலை வாரிதி என்ற புலவரோடு வாதிட்டு வென்றவர்

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      பிசிராந்தையார்                                            

D)      உமறுப்புலவர்

 

47.     காரைக்காலம்மையார் தலையால் நடந்து சென்று வழிபட்ட திருவாலங்காட்டில் அடிவைத்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியே தங்கியவர்

A)      திருஞானசம்பந்தர்                                      

B)      மாணிக்கவாசகர்

C)      திருநாவுக்கரசர்                                           

D)      சுந்தரர்

 

48.    கைந்நிலைக்கு மாறாக இன்னிலையை பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் பட்டியலில் இணைத்தவர்

A)      வ.உ.சிதம்பரனார்                                         

B)      உ. வே. சாமிநாதய்யர்

C)      நல்லாதனார்                                                

D)      பாண்டித்துரை தேவர்

 

49.    தொகை, வகை, விரி என்று அழைக்கப்படும் நூல்கள் எவை

A.       திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரிய புராணம்

B.       எட்டுத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரிய புராணம்

C.       எட்டுத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, மகாபாரதம்

D.       திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரிய புராணம்

 

50.     அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியேன் யான் என்று பாடியவர்

          A)      அப்பூதியடிகள்                                                     

B)      அப்பர்         

          C)      ஞானசம்பந்தர்                                             

D)      சுந்தரர்        

 

51.     எந்த இறைவன் திருவருளால் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்டார்.

          A)      சிதம்பரரேசர்                                                          

B)      திருப்பெருந்துறை

          C)      திருச்செந்தூர்                                                       

D)      கைலாயம்

52.    வேர்ச்சொல் காண்க - இடுக்குதல்

A)      இடு                                                            

B)      இடுக்கு 

C)      இடுகு                                                         

D)      இடுதல்

 

53.    வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக்கு - ஏந்து

A)      ஏந்தினான்                                                  

B)      ஏந்துதல் 

C)      ஏந்துவார்                                                    

D)      ஏந்துக

 

54.    பொருத்துக

          சமயப் பெரியோர்கள்         - ஆட்கொண்ட இடங்கள்

1.       திருஞான சம்பந்தர்          -  அ) திருப்பெருந்துறை

2.       திருநாவுக்கரசர்                -  ஆ) திருவெண்ணெய்நல்லூர்

3.       சுந்தரர்                            -   இ) திருவதிகை

4.       மாணிக்க வாசகர்              -   ஈ) சீர்காழி

          1.       2.       3.       4.      

A.       ஈ       இ      ஆ     அ     

B.       இ      ஈ       அ      ஆ    

C.       ஆ     இ      ஈ       அ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

55.    வேர்ச்சொல்லை ஆண்பால் இறந்த கால வினைமுற்றாக்கு - நட

A)      நடந்தாள்                                                     

B)      நடப்பாள்

C)      நடப்பான்                                                    

D)      நடந்தான்

 

56.    520 என்ற எண்ணின் தமிழ் உரு எது

A)      ருஉ0                                                          

B)      ௧௨௪                              

C)      ௬௮௩                                                  

D)      ௲௧௪

 

57.     கைதான் நெகிழ விடேன். இதில் நெகிழ என்பதன் பொருள்

A)      வளர                                                           

B)      தளர           

C)      நெருங்க                                                     

D)      விரைவு

 

58.    திராவிட ஆச்சாரியார் என்று அழைக்கப்படுபவர் யார் ?

          A) பெரியாழ்வார்                                                    

B) திருமழிசையாழ்வார்    

          C) நம்மாழ்வார்                                                       

D) குலசேகர ஆழ்வார்

 

59.    முதுமொழி மாலை யார் மீது பாடப்பட்டது ?

A)      மதுரை சொக்கநாதர்                                              

B)      சூசையப்பர்

C)      நபிகள் நாயகம்                                            

D)      யேசுநாதர்

 

60.     ‘வெல்என்ற  வேர்ச்சொல்லின்  வினைமுற்றைக் காண்க ?

A)      வென்றவன்                                               

B)      வெல்லுதல்

C)      வென்று                                                     

D)      வென்றான்

 

61.     தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பிறந்த இடம் எது ?

A)      திரிசிரபுரம்                                                   

B)      துள்ளம்

C)      எண்ணாயிரம்                                              

D)      சிந்தாதிரிப் பேட்டை

 

62.    மாணவர் ஆற்றுப்படை என்ற நூலை இயற்றியவர் யார் ?

A)      சி.இலக்குவனார்                                         

B)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

C)      திரு.வி.க                                                    

D)      இவற்றில் எதுவுமில்லை.

 

63.    தமிழ்ச்சான்றோர் திரு.சி.இலக்குவனார் அவர்களுக்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர் எது ?

A)      பயிற்சி மொழிக் காவலர்                               

B)      தமிழர் தளபதி

C)      தமிழ் அரிமா                                                

D)      இவை அனைத்தும்

 

64.    தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள்அறிந்திராத மொழி எது ?

A)      சமஸ்கிருதம்                                                        

B)      தெலுங்கு

C)      ஜெர்மன்                                                     

D)      உருது

 

65.    உமறுப் புலவரின் காலம் ?  

A)      கி.பி. 17 ஆம் நூற்றாண்டு                             

B)      கி.பி. 18 ஆம் நூற்றாண்டு

C)      கி.பி. 19 ஆம் நூற்றாண்டு                            

D)      கி.பி. 20 ஆம் நூற்றாண்டு

 

66.    மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் யார் ?

A)      மனோன்மணீயம் சுந்தரனார்                        

B)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

C)      சி.இலக்குவனார்                                         

D)      சாலினி இளந்திரையன்

 

67.     உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று பாடியவர் யார் ?

A)      திருநாவுக்கரசர்                                           

B)      மாணிக்க வாசகர்

C)      சுந்தரர்                                                        

D)      திருமூலர்

 

68.    பொருத்துக

          சமயப் பெரியோர்கள்                  - மார்க்கம்

1.       திருஞான சம்பந்தர்                    -  அ) தாச மார்க்கம்

2.       திருநாவுக்கரசர்                          -  ஆ) சத்புத்ர மார்க்கம்

3.       சுந்தரர்                                      -   இ) சக மார்க்கம்

4.       மாணிக்க வாசகர்                       -   ஈ) சற்குரு மார்க்கம்

          1.       2.       3.       4.      

A.       ஈ       இ      ஆ     அ     

B.       ஆ     அ      இ      ஈ      

C.       ஆ     இ      ஈ       அ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

69.    மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோவில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

A)      திருச்சி                                                       

B)      மதுரை

C)      தஞ்சாவூர்                                                    

D)      புதுக்கோட்டை

 

70.     திராவிட கூட்டரசு என்ற இதழை வெளியிட்ட தமிழ்ச்சான்றோர் யார்

A)      உ.வே.சாமிநாதய்யர்                                               

B)      திரு.வி.க 

C)      சி.இலக்குவனார்                                         

D)      அன்பில் தருமலிங்கம்

 

71.     திருப்பெருந்துரை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்   

A)      திருநாவுக்கரசர்                                           

B)      அரிமர்த்தன பாண்டியன்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      சுந்தரர்

 

72.     சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பு சைவ சமய முதல் நூலாக விளங்கிய நூல் எது ?

A)      திருமந்திரம்                                                

B)      திருவாசகம்          

C)      நாலாயிர திவ்விய பிரபந்தம்                                    

D)      இவற்றில் எதுவுமில்லை

 

73.     தேவாரத்தின் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார் ?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      இவை அனைத்தும்

 

74.     மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்தபோது பெற்ற பட்டம் யாது ?

A)      ஏழிசை வல்லபர்                                          

B)      தென்னவன் பிரம்மராயர்

C)      நின்றசீர் நெடுமாறன்                                            

D)      இரண்டாம் அகத்தியர்

 

75.     ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து என்றெல்லாம் அழைக்கப்படும் நூல் எது ?

A)      திருக்கோவையார்                                       

B)      சீவக சிந்தாமணி

C)      திருப்பள்ளி எழுச்சி                                      

D)      திருவாசகம்

 

76.     பொருத்துக

          சமயப் பெரியோர்கள்                  - இறையடி சேர்ந்த இடங்கள்

1.       திருஞான சம்பந்தர்                    -  அ) கைலாயம்

2.       திருநாவுக்கரசர்                         -  ஆ) பெருமணநல்லூர்

3.       சுந்தரர்                                      -   இ) சிதம்பரம்

4.       மாணிக்க வாசகர்                       -   ஈ) திருப்புகலூர்

          1.       2.       3.       4.      

A.       ஈ       இ      ஆ     அ     

B.       ஆ     அ      இ      ஈ      

C.       ஆ     ஈ       அ      இ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

77.     திருமந்திரத்திற்கு திருமூலர் இட்டபெயர் எது ?

A)      திருமந்திர மாலை                                       

B)      தமிழ் மூவாயிரம்

C)      திருமாலை                                                 

D)      திருமாலை தந்திரம்

 

78.     திருப்பாவையை இயற்றியவர் யார் ?

A)      சுந்தரர்                                                        

B)      மாணிக்க வாசகர்

C)      சேரமான் பெருமாள் நாயனார்                       

D)      ஆண்டாள்

 

79.     இரண்டாம் நக்கீரர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)      சி.இலக்குவனார்                                         

B)      மீனாட்சி சுந்தரம் பிள்ளை

C)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்                        

D)      உ.வே.சாமிநாதர்

 

80.     குன்றக்குடி ஆதினம்  யாருக்கு பன்மொழிப் புலவர் என்ற பட்டத்தை வழங்கினார் ?

A)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்                        

B)      கா. அப்பாதுரையார்

C)      சுவாமி விபுலானந்தர்                                             

D)      செய்குதம்பி பாவலர்

 

81.     தமிழ்க்காப்புக் கழகத்தை தொடங்கிய தமிழ்ச்சான்றோர் யார்

A)      திரு.வி.க                                                    

B)      உ.வே.சாமிநாதர்

C)      சி.இலக்குவனார்                                         

D)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

 

82.    திருக்கோவையார் எவ்வகை நூல் ?

A)      புறநூல்                                                       

B)      வைணவ நூல்

C)      அகநூல்                                                      

D)      இவற்றில் எதுவுமில்லை

 

83.    திருப்பாவை மற்றும் திருவெண்பாவை என்ற நுல்களின் காரணமாக த்ரியெம்பாவ - த்ரிபாவ என்ற விழா எந்த நாட்டில் கொண்டாடப்படுகிறது ?

A)      இலங்கை                                                   

B)      தாய்லாந்து

C)      மலேசியா                                                    

D)      சிங்கப்பூர்

 

84.    எவர் பொருட்டு வந்தி என்னும் கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு

மண் சுமந்தார் ?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      மாணிக்க வாசகர்

C)      சந்தரர்                                                                  

D)      திருநாவுக்கரசர்

 

85.    ஆதி சங்கரர் தம் நூலான சௌந்தர்யலகரியில் திருஞான சம்பந்தரை எவ்வாறு புகழ்ந்துள்ளார் ?

A)      காழி வள்ளல்                                                        

B)      தோணிபுரத் தோன்றல்

C)      திராவிட சிசு                                                

D)      ஆளுடைய பிள்ளை

 

86.    இறைவனையே மனைவியிடம் தூது அனுப்பியவர் யார்  ?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்                        

C)      மாணிக்க வாசகர்                                         

D)      சுந்தரர்

 

87.     தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பெற்ற விருது எது ?

A)      பத்ம பூஷன் விருது                                               

B)      தமிழ்வளர்ச்சித் துறை விருது

C)      பத்ம விபூஷன் விருது                                 

D)      இவை அனைத்தும்

 

88.    திருநாவுக்கரசரின் பாடல் வரி அல்லாதது எது ?

A)      பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து                                

B)      மாசில் வீணையும் மாலை மதியமும்

C)      இன்பமே எந்நாளும் துன்பமில்லை                                  

D)      நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

 

89.    திருஞான சம்பந்தர் தொடர்பான தவறான கூற்று எது ?

A)      சீர்காழியில் உமையாள் கொடுத்த ஞானப்பாலை உண்டார்.                            

B)      திருஞான சம்பந்தரின் பாடல்களை திருநீலகண்டர் யாழில் பாடினார்.

C)      நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்                                                         

D)      தருமபுரத்தில் யாழ்முறி பதிகம் பாடினார்

 

90.     அறு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது   ?

A)      அறுத்தல்                                                    

B)      அறுத்தார்

C)      அறுத்து                                                      

D)      அறுத்தவனை

 

91.     வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர் என சேக்கிழாரால் புகழப்பட்டவர் யார்?

A)      திருஞான சம்பந்தர்                                      

B)      திருநாவுக்கரசர்

C)      மாணிக்க வாசகர்                                         

D)      சுந்தரர்

 

92.    செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)      பாரதிதாசன்                                                 

B)      அப்துல் ரகுமான்

C)      சி.இலக்குவனார்                                         

D)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

 

 93.   சென்றவனை என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது ?

A)      சென்று                                                      

B)      செல்வி

C)      செல்                                                           

D)      சென்ற

 

94.    கொய் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க ?

A)      கொய்து                                                      

B)      கொய்த

C)      கொய்தல்                                                    

D)      கொய்தாரை

 

95.    பூஞ்சோலையிலுள்ள மலர்களில் கண்ணனைக் கண்டு அதற்கு கோவை மணாட்டி, முல்லை பிராட்டி என்று பெயரிட்டு அழைத்தவர் யார் ?

A)      குலசேகர ஆழ்வார்                                      

B)      பெரியாழ்வார்

C)      பொய்கையாழ்வார்                                        

D)      ஆண்டாள்

 

96.    குருமாண வாழ்த்து என்ற நூலை இயற்றியவர் யார் ?        

A)      உமறுப்புலவர்                                                       

B)      எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

C)      சீத்தலைச் சாத்தனார்                                   

D)      ஆண்டாள்

 

97.     தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று புகழ்ந்தவர் யார்?

A)      சீத்தலைச் சாத்தனார்                                   

B)      இளங்கோவடிகள்

C)      ஆதி சங்கரர்                                                

D)      சேக்கிழார்

 

98.    போற்றித் திருவகவல் என்ற நூலை இயற்றியவர் யார் ?

A)      உமறுப்புலவர்                                                       

B)      எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

C)      சீத்தலைச் சாத்தனார்                                   

D)      ஆண்டாள்

 

99.    டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆசிரியராக விளங்கிய தமிழ்ச்சான்றோர்            யார்?

A)      டாக்டர் மு.வரதராசனார்                                

B)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

C)      உ.வே.சாமிநாதர்                                          

D)      சி.இலக்குவனார்

 

100.   தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கு பல்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார் ?

A)      திரு.வி.க                                                    

B)      தருமபுரம் ஆதீனம்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      குன்றக்குடி அடிகளார்


DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post