11 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 11 WITH ANSWER KEY (2022 new syllubus) - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 11 விடையுடன்

TNPSC GROUP II & IV GENARAL TAMIL
MODEL QUESTION PAPER 11
FREE DOWNLOAD

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 11

விடையுடன் இலவச பதிவிறக்கம்



2022 புதிய பாடத்திட்டம்

மாதிரி வினாத்தாள் 11-க்கான பாடத்திட்ட தலைப்புகள்.

1. (பகுதி-அ) வேர்ச் சொல்லை கொடுத்து வினை முற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல்.

2.(பகுதி-இ)தேவநேயபாவாணர் - அகர முதலி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் - தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள்

MODEL QUESTION PAPER 11 WITH ANSWER KEY PDF FILE FREE DOWNLOAD

👇 

 CLICK HERE


DAY 11 - FREE ONLINE MODEL EXAM > CLICK HERE


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -11  👇

மாதிரி வினாத்தாள்- 11 (100 வினாக்கள்)


1.       உலக வராலாற்றிலே மேதையான மாணிக்க வாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தை           பொறுத்தல், இடையறா நிலையான பத்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை என்று புகழ்ந்தவர் யார் ?

A)      வீரமாமுனிவர்                                             

B)      வள்ளலார்

C)      குன்றக்ககுடி அடிகளார்                               

D)      ஜி.யு.போப்

                  

2.       கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்றிய தந்தை பெரியார் அவர்கள் தனது   பிரார்த்தனை என எதனைக் குறிப்பிட்டார் ?

A)      பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்பது                                                      

B)      ஆங்கிலேயர் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது

C)      தமிழர்களுக்கு தாய்மொழிப்பற்று பெருக வேண்டும்

D)      கைம்பெண் மணம் ஒழிய வேண்டும் என்பது

 

3.       பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள் எத்தனை வகைப்படும் ?

A)      நான்கு                                                        

B)      இரண்டு

C)      மூன்று                                                                 

D)      ஐந்து

                                                                  

4.       உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல           சமுதாயமாக உருவாகும் என்றவர் யார் ?

A)      காந்தியடிகள்                                                        

B)      அண்ணல் அம்பேத்கர்

C)      திரு.வி.க                                                    

D)      தந்தை பெரியார்

 

5.       அம்பேத்கர் மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்திய நாள்

A)      02.03.1927                                                

B)      03.02.1927

C)      20.03. 1927                                              

D)      30. 02.1927

 

6.       1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் தலைமை உரை ஆற்றியவர் யார் ?

A)      மறைமலை அடிகள்                                              

B)      தேவநேயப் பாவாணர்

C)      காந்தி                                                         

D)      டாக்டர் மு.வ

 

7.       பயிற்று மொழிக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல்           கட்டடத்தை எழுப்புவதைப் போன்றது என்று கூறியவர் யார்?

A)      டாக்டர் மு.வ                                                

B)      தாயுமானவர்

C)      காந்தியடிகள்                                                        

D)      விவேகானந்தர்

 

8.       தேம்பாவணி, காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சியளிக்கின்றது தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது ; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது ; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று புகழ்ந்தவர் யார் ?

A)      கண்ணதாசன்                                             

B)      வாணிதாசன்

C)      ரா.பி. சேதுப்பிள்ளை                                              

D)      முடியரசன்

 

9.       சமுதாயத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர்  யார் ?

A)      அண்ணல் அம்பேத்கர்                                 

B)      அயோத்திதாசப் பண்டிதர்

C)      காமராசர்                                                     

D)      பாரதியார்

 

10.     ஜி.யு.போப் 1858-ல் எங்கு பள்ளி தொடங்கினார் ?

A)      சாயர்புரம்                                                     

B)      சாந்தோம்    

C)      திருச்சி                                                       

D)      உதக மண்டலம்

 

11.      ஜி.யு.போப் தம் இறுதி காலத்தில் பதிப்பித்த நூல்?

A)      புறப்பொருள் வெண்பா மாலை                     

B)      புறநானூறு

C)      திருவருட்பயன்                                           

D)      இவை அனைத்தும்

 

12.     காமராசரின் ஆட்சிக் காலத்தில் தொழிலமைச்சராக இருந்தவர் யார் ?

A)      பொட்டி ஸ்ரீராமலு                                         

B)      வெங்கட்ராமன்

C)      சி. சுப்பிரமணியன்                                        

D)      பிரகாசம்

 

13.     தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தி எந்த நூல்/இதழில் குறிப்பிட்டுள்ளார்?

A)      தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்                   

B)      இந்தியன் ஒப்பீனியன்

C)      சத்திய சோதனை                                        

D)      இவற்றில் எதுவுமில்லை

 

14.     காமராசர் தனது  ஆட்சிக்காலத்தில் நில உச்சவரம்பு  அளவை எவ்வளவு  ஏக்கராக மாற்றினார்

A)      30                                                              

B)      40

C)      50                                                              

D)      60

 

15.     தெருதோறும் தொடக்கப் பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளி என்ற நோக்கத்தைக் கொண்டவர் யார் ?

A)      காமராசர்                                                     

B)      இராஜாஜி

C)      குமாரசாமி                                                   

D)      பிரகாசம்

 

16.     லெனின், கரிபால்டி, நெப்போலியன்ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை படித்து திறமையாக பேசவும் வாதம் புரியவும் தொடங்கியவர் யார்  ?

A)      காமராசர்                                                     

B)      அறிஞர் அண்ணா

C)      திரு.வி.க                                                    

D)      டாக்டர் மு.வ

17.     தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் என்று பெரியார் எதனைக் கருதினார்

A)      தீண்டாமை                                                 

B)      மூடப்பழக்கம்

C)      மணக்கொடை                                            

D)      கையூட்டு

 

18.     காமராசர் திட்டத்தால் (K Plan) அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர்/ஈடுபட்டவர்கள்  யார் ?

A)      மொரார்ஜி தேசாய்                               

B)      லால்பகதூர் சாஸ்திரி       

C)      காமராசர்                                            

D)      A B மற்றும் C

 

19.     சந்தனமெடுத்துச் செய்த உருவமொன்று நடந்து வருகிறது. கையிலோர் ஊன்றுகோல். தரைக்கு வலிக்கமே என்று அஞ்சியோ என்னவோ மெதுவாக ஊன்றப்படுகிறது என்ற புகழ்வரிகள் மூலம் அறியப்படுபவர் யார் ?

A)      அன்னை தெரசா                                        

B)      வள்ளலார்

C)      தந்தை பெரியார்                                           

D)      மகாத்மா காந்தி

 

20.     தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகள் சந்திப்பு நிகழ காரணமான அமைந்தது எது  ?

A)      இந்தியர்களுக்கு எதிரான தென்னாப்பிரிக்க மக்களின் நிறவெறி

B)      இந்தியர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க பிரதமர் செய்த உடன்படிக்கை

C)      தமிழர்கள் தமிழ்மொழி மாநாடு நடத்தியத்தற்கு எதிரான சதி.

D)      இந்தியர்களுக்கு எதிரான திருமணம் குறித்த தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு

 

21.     தமது முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்த சிறப்புக்குரியவர் யார் ?

A)      ஜி.யு போப்                                                  

B)      வீரமாமுனிவர்

C)      குணங்குடி மஸ்தான் சாகிபு                                   

D)      தனிநாயகம் அடிகளார்

 

22.    தேம்பாவணி தொடர்பான தவறான கூற்றினைக் கண்டறிக.

A)      தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர்

B)      கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

C)      இந்நூலில் 3615 பாடல்கள் உள்ளன.                                        

D)      இந்நூலின் பாட்டுடைத் தலைவர் சூசையப்பரின் மகனான யேசுநாதர்.

 

23.    நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக் கூடும் என்று கூறியவர் யார்?

A)      முத்துராமலிங்கர்                                         

B)      மகாத்மா காந்தி

C)      காமராசர்                                                     

D)      பாரதிதாசன்

 

 24.   பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குவது தமிழ் என்றவர்           என்று கூறியவர் யார் ?

A)      முனைவர். சு. அகத்தியலிங்கம்                    

B)      ஜி.யு.போப்

C)      வீரமாமுனிவர்                                             

D)      கால்டுவெல்

25.    குஜராத்தி பாடல் மூலம் காந்தியடிகள் கற்றது எது ?

A)      இன்னா செய்யாமை                                              

B)      பெற்றோரிடம் அன்பு

C)      சத்தியவானாய் இருத்தல்                             

D)      பகைவரிடமும் அன்பு

 

26.    மலைச்சொற்பொழிவின் மூலம் காந்தியடிகள் கற்றது எது ?

A)      இன்னா செய்யாமை                                              

B)      பெற்றோரிடம் அன்பு

C)      சத்தியவானாய் இருத்தல்                             

D)      பகைவரிடமும் அன்பு

 

27.     பொருத்துக

A.       இலக்கிய மாநாடு             - 1)  பாரதியார்

B.       தமிழ்நாட்டின் சொத்து     - 2) அருவி

C.       குற்றாலம்                        - 3) ஜி.யு.போப்

D.       தமிழ்க்கையேடு               - 4) சென்னை

          a.       b.       c.       d.      

A.       1        3       4       2      

B.       3       1        2       4      

C.       4       1        2       3      

D.       3       1        4       2      

 

28.    உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலை எழுதியவர் யார் ?

A)      தால்சுதாய்                                                   

B)      ரசூல் கம்சதேவ்

C)      ஜேன் ஆஸ்டின்                                          

D)      அநுத்தமா

 

29.    அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர், மிகவும் ஆர்வத்துடன் விரைந்து தன்னந்தனியாக செயல்பட்டவர், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று பாராட்டியவர் யார்?

A)      டாக்டர் ராஜேந்திர பிரசாத்                             

B)      அண்ணல் காந்தியடிகள்

C)      ஜவஹர்லால் நேரு                                      

D)      தந்தை பெரியார்

 

30.     பசும்பொன் முத்துராமலிங்கர் பிறந்த நாள் ?

A)      30.10.1809                                                 

B)      30.09.1908

C)      30.09.1809                                                

D)      30.10.1908

 

31.     பசும்பொன் முத்துராமலிங்கர் தொடர்பான தவறான கூற்று எது ?

A)      தந்தையார் பெயர் உக்கிர பாண்டியனார்

B)      தாயார் பெயர் இந்திராணி அம்மையார்.

C)      தாயின் இறப்புக்குப் பின் முத்துராமலிங்கருக்கு கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர்                           தாயாகிப் பாலூட்டி வளர்த்தார்.

D)      பாட்டியின் வீட்டில் வளர்ந்த நாள்களில் இவருக்குக் கற்பித்த ஆசிரியர் குறைவற                         வாசித்தான் என்பவர் ஆவார்.

 

32.    முத்துராமலிங்கர் தம் தொடக்கக் கல்வியை யாரிடம் கற்றார் ?

A)      சைவ பெரிரியார்களிடம்                               

B)      இசுலாமிய ஆசிரியர்களிடம்

C)      கிறித்தவப் பாதிரியார்களிடம்                         

D)      இவற்றில் எதுவுமில்லை

 

33.    முத்துராமலிங்கர் கல்வி பயிலாத இடம் எது?

A)      மதுரை அரசு உயர்நிலைப் பள்ளி        

B)      கமுதியில் உள்ள தொடக்கப் பள்ளி

C)      பசுமலை உயர்நிலைப் பள்ளி                        

D)      ஐக்கியக் கிறித்தவப் பள்ளி

 

34.    அண்ணல் அம்பேத்கருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது

A)      1970                                                           

B)      1980

C)      1960                                                          

D)      1990

 

35.    இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கர் கல்வி பயின்ற போது எந்த நோய் பரவியதால்

          அவரின் கல்வி தடைபட்டது ?

A)      பிளேக்                                                                 

B)      காலரா

C)      பறவை காய்ச்சல்                                          

D)      பன்றிக் காய்ச்சல்

 

36.    முத்துராமலிங்கர் கற்றுத் தேர்ந்தது எது ?

1.       சிலம்பம்

2.       குதிரை ஏற்றம்

3.       துப்பாக்கிச் சுடுதல்

4.       சோதிடம்

5.       மருத்துவம்

A)      1,2,3 மற்றும் 4 மட்டும்                                 

B)      1 மற்றும் 2 மட்டும்

C)      1, 2, 4 மட்டும்                                                        

D)      1, 2, 3, 4 மற்றும் 5

 

37.     முத்துராமலிங்கர் தொடர்பான தவறான கூற்று எது ?

A.       நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.

B.       சமபந்தி முறைக்கு  Cக்கமளித்தார்.

C.       ஆங்கில அரசின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராடினார்.

D.       பாலகங்காதர திலகர் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்

 

38.    எந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் முத்துராமலிங்கர் வெற்றி பெற்றார்?

A)      1937,           1947,           1952,           1957 மற்றும் 1962

B)      1932,           1947,           1952,           1957, 1962  மற்றும் 1964

C)      1937,           1946,           1952,           1957 , 1962 மற்றும் 1964

D)      1937,           1946,           1952,           1957 மற்றும் 1962

 

39.    காமராசரை கல்விக் கண் திறந்தவர் என பாராட்டியவர் யார் ?

A)      அறிஞர் அண்ணா                                       

B)      கக்கன்

C)      தந்தை பெரியார்                                          

D)      வேங்கடாசலம்

40.     "சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மிகத்திற்கும் இல்லை" எனச் சாதியைப்           பற்றிக் கூறியவர் யார்

A)      முத்துராமலிங்கர்                                         

B)      அண்ணல் அம்பேத்கர் 

C)      சுவாமி விவேகானந்தர்                                 

D)      தந்தை பெரியார்

 

41.     தந்தை பெரியார் எதனை எதிர்க்கவில்லை ?

A.       இந்தி திணிப்பு

B.       குலக்கல்வி திட்டம்

C.       மணக்கொடை

D.       வயதுவந்தோர் வாக்குரிமை

 

42.    குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க காமராசர் அறிமுகப்படுத்தியது எது ?

A)      சத்துணவுத் திட்டம்                                               

B)      மதிய உணவுத் திட்டம்

C)      சீருடைத் திட்டம்                                         

D)      குலக்கல்வித் திட்டம்

 

43.    கர்மவீரர் காமராசர் அவர்கள் கல்விக்காக கொண்டுவந்த திட்டங்களில் பொருந்தாதது எது ?

A)      இலவச கட்டாயக் கல்விச் சட்டம்                           

B)      குலக்கல்வித் திட்டம்

C)      மதிய உணவுத் திட்டம்                                

D)      சீருடைத் திட்டம்

 

44.    தந்தை பெரியார் மக்கள் மனதில் விதைக்காத கருத்து எது

A.       கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு

B.       பெண்களுக்கான இட ஒதுக்கீடு

C.       கடவுள் நம்பிக்கை ஏற்பு

D.       கலப்புத் திருமணம், சீர்திருத்தச் திருமணச் சட்டம் ஏற்பு

 

45.    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு எவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது

A)      காமராசர்                                                       

B)      முத்துராமலிங்கர்

C)      தந்தை பெரியார்                                          

D)      அண்ணல் அம்பேத்கர்

 

46.    கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராசர் மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்ட நாள் ?

A)      02.10.2012                                                 

B)      15.08.2000

C)      15.08.2012                                                 

D)      02.10.2000

 

47.     விடுதலைப்போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வடஇந்தியாவில் திலகருக்கு  வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது போல் தென்னிந்தியாவில் யாருக்கு வாய்ப்பூட்டுச்        சட்டம் போட்டது

A)      முத்துராமலிங்கர்                                         

B)      தந்தை பெரியார்

C)      வ.உ.சிதம்பரனார்                                        

D)      அயோத்திதாச பண்டிதர்

 

 48.   காட்டாறு என்ற சொல் எவ்வாறு பிரியும் ?

A)      காடு + ஆறு                                                 

B)      காட்டு + ஆறு

C)      காட்டா + ஆறு                                             

D)      கட்டு + ஆறு

49.    காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் ?

A)      சென்னை                                                  

B)      மதுரை

C)      தூத்துக்குடி                                                 

D)      திருநெல்வேலி

 

50.     "சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங் கொடுமை;           ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல"         என்று கூறியவர் யார் ?

A)      அண்ணல் அம்பேத்கர்                                           

B)      தந்தை பெரியார்    

C)      அண்ணல் காந்தியடிகள்                              

D)      முத்துரரமலிங்கர்

 

51.     காந்தியடிகள் முதன்முறையாக சென்னைக்கு வந்த ஆண்டு ?

A)      1919 மார்ச்                                                   

B)      1919 பிப்ரவரி        

C)      1918 மார்ச்                                                   

D)      1919 மார்ச்

 

52.    ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காந்தியடிகள் ஆலோசனை

கூட்டத்தை நடத்திய இடம் ?

A)      காமராசரின் வீடு                                          

B)      தீரர் சத்தியமூர்த்தியின் வீடு 

C)      இராஜாஜியின் வீடு                                      

D)      சர்தார் வல்லபாய்பட்டேல் வீடு

 

53.    காந்தியடிகள் பாரதியாரை எவ்வாறு பாராட்டினார் ?

A)      தமிழ்நாட்டின் சொத்து                                 

B)      மகாகவி

C)      இந்தியாவின் சொத்து                                  

D)      தேசிய கவி

 

54.    நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்று கூறியவர் யார் ?

A)      காமராசர்                                                     

B)      அண்ணல் அம்பேத்கர்

C)      தந்தை பெரியார்                                          

D)      ஆபிரகாம் லிங்கன்

 

55.    காந்தியை கவர்ந்த நூல் எது?

A)      திருக்குறள்                                                 

B)      ஜி.யு போப் எழுதிய தமிழ்க்கையேடு

C)      சிலப்பதிகாரம்                                                       

D)      A  மற்றும் B

 

56.    இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று காந்தி யாரைப் புகழ்ந்து குறிப்பிட்டார் ?

A)      உ.வே.சா                                                    

B)      திரு.வி.க                       

C)      பாரதியார்                                                     

D)      முத்துராமலிங்கர்

 

57.     முத்துராமலிங்கரை தேசியம் காத்த செம்மல் என்று அழைத்தவர் யார் ?

A)      வ.உ.சிதம்பரனார்                                         

B)      திரு.வி.க    

C)      தந்தை பெரியார்                                          

D)      அறிஞர் அண்ணா

 

58.    காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் எது ?

A)      சென்னை                                                  

B)      மதுரை        

C)      டெல்லி                                                       

D)      மும்பை

 

59.    அண்ணல் அம்பேத்கர் கல்வி பயின்ற ஊர் ?

A)      அம்பவாடே                                                 

B)      பரோடா

C)      தபோலி                                                       

D)      மும்பை

 

60.     மக்கள் கல்வி கழகத்தை தோற்றுவித்தவர் யார் ?

A)      தந்தை பெரியார்                                          

B)      காமராசர்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      அண்ணல் அம்பேத்கர்

 

61.     அம்பேத்கர் உலக தலைவர்களுள் நடுவர், பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம்,           மக்களின் மாபெரும் வழிகாட்டி என்று புகழ்ந்தவர் யார் ?

A)      அறிஞர் அண்ணா                                       

B)      ஜவஹர்லால் நேரு

C)      இராஜாஜி                                                    

D)      தந்தை பெரியார்

 

62. சமூகத்தின் மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையம் வாழ்கிறது என்று கூறியவர் ?

A)      தந்தை பெரியார்                                          

B)      காமராசர்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      அண்ணல் அம்பேத்கர்

 

63.    “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்என எடுத்துரைத்தவர் ?

A)      திரு.வி.க                                                    

B)      சுவாமி விவேகானந்தர்

C)      தந்தை பெரியார்                                          

D)      முத்துராமலிங்கர்

 

64.    ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை அம்பேத்கரை சாரும் என்று புகழ்ந்தவர் யார் ?

A)      அறிஞர் அண்ணா                                       

B)      ஜவஹர்லால் நேரு

C)      இராஜாஜி                                                    

D)      தந்தை பெரியார்

 

65.    சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து என்று புகழப்படுபவர் யார் ?  

A)      அண்ணல் அம்பேத்கர்                                 

B)      பாரதியார்

C)      பாரதிதாசன்                                                 

D)      திரு.வி.க

 

66.    அம்பேத்கரின் முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

A)      ஹைதராபாத்                                                         

B)      மும்பை

C)      கொல்கத்தா                                                

D)      புதுடெல்லி

 

67.     விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக,           நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில்          கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக வாழ்ந்தவர் என      புகழப்படுபவர் யார் ?

A)      காமராசர்                                                     

B)      மகாத்மா காந்தி

C)      தந்தை பெரியார்                                          

D)      முத்துராமலிங்கர்

 

68. மக்களின் மதியைக் கெடுக்கும் எடுகள் நமக்குத் தேவையில்லை. தமிழரை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை. தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை என்று கூறியவர் யார் ?

A)      காமராசர்                                                     

B)      மகாத்மா காந்தி

C)      தந்தை பெரியார்                                          

D)      அறிஞர் அண்ணா

 

69.    இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற பொருளாதார நூலை இயற்றியவர் யார் ?

A)      தந்தை பெரியார்                                          

B)      காமராசர்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      அண்ணல் அம்பேத்கர்

 

70.     கேரளாவில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு

A)      1930                                                          

B)      1920 

C)      1924                                                          

D)      இவற்றில் எதுவுமில்லை.

 

71. அண்ணல் அம்பேத்கர் யாருடைய பொருளுதவியுடன் பம்பாய் எம்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ?

A)      கிழக்கிந்திய கம்பெனி                                 

B)      முகமது அலி ஜின்னா

C)      பரோடா மன்னர்                                           

D)      மகாத்மா காந்தி

 

72.     காமராசர் காலத்தில் எந்த இயக்கம் தமிழகத்தில் வேரூன்றியது ?

A)      கூட்டுறவு இயக்கம்                                               

B)      போலியோ ஒழிப்பு இயக்கம்       

C)      இரத்தான இயக்கம்                                               

D)      சிறுசேமிப்பு இயக்கம்

 

73.     காமராசர் கொண்டுவந்த திட்டம் எது ?

1.       நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை

2.       கூடங்குளம் அணுமின் நிலையம்

3.       உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை

4.       கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

5.       பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை

6.       டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை

7.       மேட்டூர்க் காகிதத் தொழிற்சாலை

A)      1, 3, 4, 5, மற்றும் 7                                      

B)      1, 2, 3, 4 மற்றும் 7

C)      3, 4, 5, 6 மற்றும் 7                                      

D)      இவை அனைத்தும்

74.     கூற்று( A)    : காமராசர் அவர்களால் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.

காரணம் (B)  :பள்ளிகளுக்கான அடிப்படைப்பொருள்களும் கருவிகளும் நன்கொடையாக   பெறும் பொருட்டு பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டது.

            A)             (A) &(B)  இரண்டும் சரி மற்றும்  (B) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.

             B)             (A)  சரி ஆனால் (B) தவறு

             C)   (B) சரி ஆனால் (A) தவறு

     D)   (A& (B)  இரண்டும் சரி மற்றும்(B) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.

 

75.     மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் யார்

A)      இராமலிங்க அடிகள்                                             

B)      முத்துராமலிங்கர்

C)      தந்தை பெரியார்                                          

D)      காமராசர்

 

76.     பொருத்துக

1.       1945 இல் முதலமைச்சர்           -  அ) காமராசர்

2.       1947 இல்  முதலமைச்சர்          -  ஆ) குமாரசாமி

3.       1949 இல் முதலமைச்சர்           -   இ) ஓமந்தூர் இராமசாமி

4.       1954 இல் முதலமைச்சர்           -   ஈ) பிரகாசம்

          1.       2.       3.       4.      

A.       ஈ       இ      ஆ     அ     

B.       ஆ     அ      இ      ஈ      

C.       ஆ     ஈ       அ      இ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

77.     காமராசர் அவர்கள் தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு எத்தனை விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார் ?

A)      அறுபது                                                       

B)      ஐம்பது

C)      நாற்பது                                                       

D)      முப்பது

 

78.     1947இல்  முதலமைச்சராக இருந்தவர் யார் ?

A)      குமாரசாமி                                                   

B)      பிரகாசம்

C)      காமராசர்                                                     

D)      ஓமந்தூர் இராமசாமி

 

79.     எந்த முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் காமராசர் அவர்கள்        முதலமைச்சராக பதவியேற்றார் ?

A)      இராஜாஜி                                                    

B)      பிரகாசம்

C)      குமாரசாமி                                                   

D)      ஓமந்தூர் இராமசாமி

 

80.     காமராசர் அவர்கள் பெரிய தொழிற்பேட்டை அமைத்த இடம் எது ?

A)      கிண்டி                                                                 

B)      அம்பத்தூர்

C)      இராணிப்பேட்டை                                        

D)      இவை அனைத்தும்

 

81.     நடுவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்த ஆண்டு ?

A)      1965                                                          

B)      1972

C)      1995                                                          

D)      1969

 

82.    எந்த இடத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார். ?

A)      கொல்கத்தா                                                

B)      மும்பை

C)      சென்னை                                                 

D)      புவனேஸ்வர்

 

83.    "காமராசர் திட்டம்" செயல்படுத்த வேண்டியதன் தேவை காமராசருக்கு எந்த ஆண்டிற்கு

பின் எழுந்தது ?

A)      1964                                                          

B)      1962

C)      1972                                                          

D)      1977

 

84.    1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவு எந்த இடத்தில் நிகழ்ந்தது

A)      மும்பை                                                       

B)      தாஸ்கண்ட்

C)      கொல்கத்தா                                                

D)      புதுடெல்லி

 

85.    அறிஞர் அண்ணாவுக்கு பிடித்தமான இலக்கியம் ?

A)      சிலப்பதிகாரம்                                              

B)      கம்பராமாயணம்

C)      கலிங்கத்துப் பரணி                                      

D)      மணிமேகலை

 

86.    எந்த புத்தகம் எழுதியதற்காக அறிஞர் அண்ணா சிறையில் அடைக்கப்பட்டார்  ?

A)      கம்ப ரசம்                                                     

B)      ஓர் இரவு                        

C)      தசாவதாரம்                                                 

D)      ஆரிய மாயை

 

87.     அறிஞர் அண்ணா அவர்கள் எழுதாத நூல் எது ?

A)      வெள்ளிக் கிழமை                                       

B)      ரங்கோன் ராதா

C)      நிலையும் நினைப்பும்                                            

D)      குமரக்கோட்டம்,

 

88.    அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சரான ஆண்டு ?

A)      1967                                                          

B)      1969

C)      1972                                                          

D)      1957

 

89.    ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று கூறியவர் யார் ?

A)      பாரதிதாசன்                                                 

B)      அறிஞர் அண்ணா

C)      தந்தை பெரியார்                                          

D)      புலவர் குழந்தை

 

90.     புத்துலகத் தொலை நோக்காளர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)      அறிஞர் அண்ணா                                       

B)      காமராசர்

C)      தந்தை பெரியார்                                          

D)      அண்ணல் அம்பேத்கர்

 

91.     காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்று எந்த நூலைப்பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார் ?

A)      இராவண காவியம்                                       

B)      கலிங்கத்துப் பரணி

C)      முத்தொள்ளாயிரம்                                       

D)      ஆரிய மாயை

 

92.    தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார் ?

A)      பாரதிதாசன்                                                 

B)      பெரியார் தாசன்

C)      புலவர் குழந்தை                                          

D)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

 

93.    அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை நடுவணரசு வெளியிட்ட ஆண்டு ?

A)      2008                                                          

B)      2010

C)      2009                                                          

D)      2011

 

94.    அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆண்டு ?

A)      2008                                                          

B)      2010

C)      2009                                                          

D)      2011

 

95.    இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்று முழக்கமிட்டவர் யார் ?

A)      முத்துராமலிங்கர்                                         

B)      அண்ணல் அம்பேத்கர்

C)      தந்தை பெரியார்                                          

D)      அறிஞர் அண்ணா

 

96.    அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய இதழ் அல்லாதது எது ?

A)      விடுதலை                                                  

B)      ஹோம் லேண்ட்

C)      நம்நாடு                                                        

D)      திராவிட நாடு

 

97.     இலக்கணக் குறிப்பறிக - அண்ணாவை படித்திருக்கிறேன்.

A)      காரியவாகு பெயர்                                         

B)      கருத்தாவாகு பெயர்

C)      தானியாகு பெயர்                                          

D)      இடவாகு பெயர்

 

98.    27.06.1970 ல் ஐ.நா சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு வழங்கிய பட்டம் ?

A)      தென்னாட்டு பெர்னாட்ஷா                                                       

B)      தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்

C)      பகுத்தறிவுப் பகலவன்

D)      பெண்ணின போர் முரசு

 

99.    மெய்கண்டான் புத்தகச்சாலை என்னும் நூல்நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் திறமையாகப் பேசவும் வாதம் புரியவும் தொடங்கியவர் யார்?

A)      அண்ணல் அம்பேத்கர்                                 

B)      தந்தை பெரியார்

C)      முத்துராமலிங்கர்                                         

D)      காமராசர்

 

100.   முப்பத்திரண்டு சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுத   தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்த தலைவர் யார் ?

A)      அண்ணல் அம்பேத்கர்                                 

B)      தந்தை பெரியார்

C)      முத்துராமலிங்கர்                                         

D)      மகாத்மா காந்தி

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post