13 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 13 FREE DOWNLOAD (2022 New syllabus) - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 13 விடையுடன் இலவச பதிவிறக்கம்

 

TNPSC GROUP IV & II GENARAL TAMIL MODEL QUESTION PAPER -13

 TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 13 WITH ANSWER KEY 

free download 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 13 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

2022 புதிய பாடத்திட்டம்

மாதிரி வினாத்தாள் 13-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

3. (பகுதி - இ) உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -  பெருமையும்  - தமிழ்ப் பணியும்.

MODEL QUESTION PAPER 13 WITH ANSWER KEY

 PDF FILE FREE DOWNLOAD

👇 


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -13  👇

மாதிரி வினாத்தாள்- 13 (100 வினாக்கள்)


1. சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் தற்போது எவ்வாறு அழக்கப்படுகிறது ?

A) கோவன்புத்தூர்
B) கோவலன் பொட்டல்
C) பூம்புகார் 
D) உறையூர்

2. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி கம்பர் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
A) தமிழ் தழீஇய சாயல்...
B) உன் சீரிளமை திறம்வியந்து..
C) கல்தோன்றி மண்தோன்றா காலத்தே...
D) என்றுமுள தென்தமிழ்...

3. தமிழர்களை புதுச்சேரி, காரைக்காலிருந்து கொண்டு சென்று ஒப்பந்தக் கூலியாக ரியூனியன் தீவில் குடியமர்த்தியவர்கள் யார் ?
A) போர்த்துகீசியர்கள்
B) டச்சுக்காரர்கள்
C) பிரஞ்சுகாரர்கள் 
D) மராட்டியர்கள்

4. தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றிய அமெரிக்க நாட்டு பேராசிரியர் யார் ?
A) வி.எஸ். இராஜன்
B) ஜார்ஜ் எல். ஹார்ட்
C) சிம். லிண்ட் ஹோம்
D) இவையனைத்தும்

5. தொல்காப்பியச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்? 
A) கலைஞர் மு.கருணாநிதி
B) புலவர் தமிழன்பன்
C) மா.பொ.சிவஞானம்
D) முனுசாமி

6. பண்டைக் காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A) அத்திப்பட்டு 
B) அத்திக்காடு
C) அத்தியூர் 
D) ஆர்க்காடு

7. மறைந்துபோன நூல்களான ஆசிரிய மாலை, தகடூர் யாத்திரை ஆகியவற்றை வெளிக் கொணர்ந்தவர் யார் ?
A) உ.வே.சாமிநாதய்யர்
B) மறைமலையடிகள்
C) முனைவர் ச. பார்த்தசாரதி
D) தேவநேயப் பாவாணர்

8. நல்லொழுக்கக் கதை எழுதியவர் யார்
A) ஆழி.வே.இராமசாமி
B) ஔவையார்
C) தூரன் 
D) அப்துல் ரகுமான்

9. பொய் சொல்லா மாணிக்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) திருவள்ளுவர்
B) திருக்குறள் முனுசாமி
C) வ.சுப. மாணிக்கம் 
D) கி.ஆ.பெ.விஸ்வநாதன்

10. தமது முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்த சிறப்புக்குரியவர் யார் ?
A) ஜி.யு போப் 
B) வீரமாமுனிவர்
C) குணங்குடி மஸ்தான் சாகிபு
D) தனிநாயகம் அடிகளார்

11. தமிழ் மொழியியல் ஆய்வின் முன்னோடி யார் ?
A) உ.வே.சாமிநாதய்யர்
B) மறைமலையடிகள்
C) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D) தேவநேயப் பாவாணர்

12. எருதுவிடும் திருவிழா மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
A) மஞ்சுவிரட்டு 
B) சல்லிக்கட்டு
C) A மற்றும் B 
D) எருதுகட்டு

13. பழந்தமிழர் உலோகக் கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்குவது எது?
A) தில்லை நடராசர் செப்புத் திருமேனி
B) கூரம் நடராசர் செப்புத் திருமேனி
C) தாராசுரம் ஐராதீசுவரர் கோவில்
D) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

14. பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடு எது ?
A) வல்லநாடு
B) கொரநாடு
C) கானாடு 
D) முரப்பு நாடு

15. உறையூர் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A) திரிசரபுரம் 
B) கோழிமாநகரம்
C) திருச்சிராப்பள்ளி
D) பூம்புகார்

16. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊருடன் தொடர்புடையவர் யார் ?
A) கோவலன் 
B) வீரமாமுனிவர்
C) கால்டுவெல் 
D) மருது பாண்டியர்

17. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
A) எல்லையில்லாக் கடலிலே எங்கும் பார்த்தும் படகு இல்லை
B) எங்கு பார்த்தும் எல்லையில்லாக் கடலிலே படகு இல்லை
C) எங்கும் பார்த்தும் படகு இல்லை எல்லையில்லாக் கடலிலே
D) படகு இல்லை எங்கு பார்த்தும் எல்லையில்லாக் கடலிலே

18. சொற்களை ஒழுங்குபடத்தி சொற்றொடராக்குக.
A) பார்விட் டந்தர மடைந்தா னன்றே அஞ்சலை அரக்க !
B) அரக்க அஞ்சலை ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே
C) அஞ்சலை அரக்க ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே
D) பார்விட் டந்தர அரக்க ! மடைந்தா னன்றே அஞ்சலை

19. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக ?
A) பொறுத்தல் என்றும் அதனை இறப்பினை
B) அதனை பொறுத்தல் என்றும் இறப்பினை
C) பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
D) பொறுத்தல் அதனை இறப்பினை என்றும்

20. 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டரசின் ஒழுக்கப் பொன்மொழியாக எந்த தொடரை அறிவித்தார் ?
A. வாய்மையே வெல்லும்
B. யாதும் ஊரே யாவரும் கேளிர்
C. நீரின்றி அமையாது உலகு
D. பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்

21. ஊர் என்னும் பெயரில் ஒரு நகரும், ஊர்நம்மு என்னும் ஊரும் எங்குள்ளது ?
A) டோக்கியோ அருகில்
B) பாபிலோன் அருகில்
C) மலேசியா 
D) சிங்கப்பூர்

22. சரியாக அமைந்த தொடரைக் காண்க.
A) இறுவரை காணின் கிழக்காம் தலை
B) இருவரை கானின் கிழக்காம் தளை
C) இறுவரை கானின் கிழக்காம் தலை
D) இருவரை காணின் கிழக்காம் தலை

23. நிரப்புக - ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி ------- எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததனை --------------- எனவும், குன்றிலும் உயரத்தில் குறைந்ததனை -------------------------- எனவும்,-------------------------- எனவும் மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.

A) குன்று, கரடு, பாறை, மலை
B) மலை, குன்று, கரடு, பாறை
C) பாறை, மலை, குன்று, கரடு
D) மலை, கரடு, பாறை, குன்று

24. கிருஷ்ணகிரி, கோத்தகிரி, சிவகிரி, நீலகிரி ஆகிய பெயர்கள் எந்த நிலத்தை ஒட்டி எழுந்த பெயர்கள் ?
A) கடல் 
B) காடு
C) ஆறு 
D) மலை

25. ஆடு மாடுகள் அடைக்கப்படுமிடம் ----- எனப்படும்.?
A) பட்டி 
B) கொட்டகை
C) தொழுவம் 
D) கொட்டில்

26. காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் எவ்வாறு என்றழைக்கப்பெற்றன ?
A) புரம் 
B) குறிச்சி
C) சிவகிரி
D) பட்டி, பாடி

27. சொற்களை வரிசை படுத்தி சொற்றொடராக்குக.
A. பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி
B. இயற்கை பண்ணினை வைத்த பண்பனே போற்றி
C. இயற்கை வைத்த பண்ணினை போற்றி பண்பனே
D. பண்பனே போற்றி பண்ணினை இயற்கை வைத்த

28. நிலவளமும் நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் எவ்வாறு வழங்கப்பட்டது ?
A) ஊர் 
B) பாக்கம்
C) பட்டி 
D) பட்டினம்

29. தெங்கூர் எதனோடு தொடர்புடையது ?
A) தென்னை 
B) தென்றல்
C) மருதீஸ்வரர் 
D) சொக்கநாதர்

30. நீர்நிலைகளின் பெயரால் உருவாகாத ஊர் எது ?
A) புளியங்குளம் 
B) பேராவூரணி
C) மாங்குளம் 
D) அரவக்குறிச்சி

31. சொற்களை வரிசை படுத்தி சொற்றொடராக்குக.
A) வாய்மை யாதொன்றும் எனப்படுவ(து) யாதெனின்
B) வாய்மை யாதெனின் யாதொன்றும் எனப்படுவ(து)
C) வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
D) யாதெனின் வாய்மை யாதொன்றும் எனப்படுவ(து)

32. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A) தேம்பாவணி கிறித்தவ சமய தமிழ்க்காப்பியம் ஆகும்.
B) கிறித்துவ சமய தமிழ்க் காப்பியம் தேம்பாவணி ஆகும்.
C) தமிழ்க்காப்பியம் தேம்பாவணி கிறித்தவ சமயம் ஆகும்
D) தேம்பாவணி சமய தமிழ்க்காப்பியம்கிறித்தவ ஆகும்.

33. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A) புறநானூறு 
B) சிலப்பதிகாரம்
C) பட்டினப்பாலை
D) மதுரைக்காஞ்சி

34. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினார்கள்?
A) எண்பத்தேழு 
B) எண்பத்திரண்டு
C) எழுபத்தாறு 
D) எழுபத்திரண்டு

35. முதனிலை ஊர்ப்பெயர்களும் தனித்தன்மைமிக்க ஊர்ப்பெயர்களும் சிதைந்து, திரிந்து, மருவி, மாறி வழங்க காரணம் என்ன ?
A) காலச்சுழற்சி 
B) ஆட்சிமாற்றம்
C) வேற்றினக்கலப்பு 
D) இவை அனைத்தும்

36. கல்வெட்டுகளில் மதுரை எவ்வாறு வழங்கப்படுகிறது ?
A) மதூர் 
B) மதுரா
C) மிதிரை 
D) மதிரை

37. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A. விளக்கல்ல எல்லா விளக்கும் சான்றோர்க்கு
B. விளக்கல்ல எல்லா விளக்கும் சான்றோர்க்கு
C. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
D. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு

38. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A) நீரான் அமையும் புறந்தூய்மை அகந்தூய்மை
B) நீரான் புறந்தூய்மை அகந்தூய்மை அமையும்
C) அகந்தூய்மை நீரான் அமையும் புறந்தூய்மை
D) புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

39. நாயக்கர்களின் ஆளுகைக்குப் பின் உருவான ஊர் பெயர் எது ?
A) நாட்டரசன்கோட்டை
B) கோயமுத்தூர்
C) குமாரபாளையம் 
D) தென்பழஞ்சி

40. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தொன்மையைக் கூறும் நூல் எது?
A) புறப்பொருள் வெண்பாமாலை
B) தொல்காப்பியம்
C) நன்னூல் 
D) திருவள்ளுவமாலை

41. திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தவர் யார் ?
A) சிவசுப்பிரமணியம்
B) கால்டுவெல்
C) ஈராஸ் பாதிரியார் 
D) கமில் சுவலபில்

42. ஏறத்தாழ எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது ?
A) 130 
B) 120
C) 150 
D) 98

43. சாதுவன் வாணிகம் செய்யும்பொருட்டுக் கடல்கடந்து சென்ற குறிப்பு எதில் உள்ளது ?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) புறப்பொருள் வெண்பாமாலை
D) நெடுந்தொகை

44. தமிழர்கள் புலம்பெயரக் காரணம் என்ன
A. வாணிகம், வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களுக்காகத் தமிழர்கள் அயல்
நாடுகளுக்குச் சென்றார்கள்.
B. ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தமிழர் சிலரை அடிமைக்
கூலிகளாக்கி, அவர்தம் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளுக்கு அழைத்துச்
சென்றார்கள்.
C. நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாகவும் மற்றும் சிலர், அன்னியப்
படையெடுப்பின் காரணமாகவும் தமிழகத்தைவிட்டுப் பிழைக்கச் சென்றனர்.
D. இவை அனைத்தும்

45. திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் யார்
A) ஔவையார் 
B) திருவள்ளுவர்
C) இளங்கோவடிகள்
D) சீத்தலைச் சாத்தனார்

46. தமிழ் ஆட்சிமொழியாக இல்லாத நாடு எது ?
A) இலங்கை 
B) சிங்கப்பூர்
C) மலேசியா 
D) மொரீசியஸ்

47. தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் ?
A) நாமக்கல் கவிஞர் 
B) கவிமணி
C) உவமைக் கவிஞர் 
D) புதுமைக் கவிஞர்

48. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர் யார் ?
A) கணியன் பூங்குன்றனார்
B) திருவள்ளுவர்
C) பாரதியார் 
D) முடியரசன்

49. ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை ?
A) 186 
B) 192
C) 196 
D) 180

50. கோட்டை என்று முடியும் இடப்பெயர்கள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன ?
A) 290 
B) 198
C) 220 
D) 248

51. பண்டைத் தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் குவிந்து கிடந்தவற்றுள் இமயத்திலுண்டானது எது ?
A) குதிரை 
B) மிளகு
C) சந்தனம், அகில் 
D) மணி, பொன்

52. பண்டைத் தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் குவிந்து கிடந்தவற்றுள் குடகு மலைக்குண்டானது எது?
A) குதிரை 
B) மிளகு
C) சந்தனம், அகில் 
D) மணி, பொன்

53. கடல் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறும் நூல் எது ?
A) தொல்காப்பியம் 
B) நன்னூல்
C) அகத்தியம் 
D) அகநானூறு

54. பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்ட ஊர்களில் பெரும்பாலும் வசித்து
வந்தவர்கள் யார் ?
A) வேளாளர் 
B) வணிகர்
C) நெசவாளர் 
D) புலவர்

55. ஸ்டீன்மெட்ஸ் என்பவர் யார் ?
A) ஆங்கிலக் கவிஞர்
B) ஆங்கில நாடக ஆசிரியர்
C) அறிவியல் அறிஞர்
D) கிரேக்க சிந்தனையார்

56. பழந்தமிழகத்தின் இறக்குமதிப் பொருள் எது ?
A) கருமருது 
B) வெண்துகில்
C) இரத்திணம் 
D) சருக்கரை

57. உலகில் உள்ள ஆட்சிப் புலங்களின் எண்ணிக்கை ?
A) 34 
B) 43
C) 51 
D) 15

58. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு என்றவர் யார் ?
A) டாக்டர் மு.வ 
B) வீரமாமுனிவர்
C) பாரதிதாசன் 
D) திரு.வி.க

59. ரியூனியன் தீவு எந்த நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது ?
A) பிரான்ஸ் 
B) போர்ச்சுகல்
C) இங்கிலாந்து 
D) சீனா

60. தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடு எது ?
A) அமெரிக்கா 
B) கியூபா
C) சிங்கப்பூர் 
D) தைவான்

61. பழந்தமிழகத்தில் சுள்ளி என்னும் பெரிய ஆற்றில் யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள் என்ற செய்தியை தெரிவிக்கும் நூல் எது ?
A) புறநானூறு 
B) அகநானூறு
C) பட்டினப்பாலை
D) மதுரைக்காஞ்சி

62. ----- என்னும் தமிழ்ச்சொல் உலகில் பல நாடுகளில் வழங்கி வருகிறது ?
A) இல் 
B) ஊர்
C) பாடி 
D) குடி

63. கீழ்க்கண்டவற்றுள் எது குறிஞ்சி நில ஊர்ப் பெயர் ?
A) மலை 
B) குன்று
C) ஊர் 
D) இவையனைத்தும்

64. குறிச்சி என்பது ------ என்ற சொல்லில் இருந்து வந்த சொல்லாகும் ?

A) கரடு 
B) பாறை
C) குறிஞ்சி 
D) குன்று

65. ஆர்க்காடு என்பது ------- மரங்கள் மிகுந்த பகுதியாக விளங்கியது ?
A) வேம்பு 
B) அத்தி
C) ஆலமரம் 
D) மாமரம்

66. பழங்கால மக்களால் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு -------
எனப்பெயர்?
A) பாடி 
B) காடு
C) நெய்தல் 
D) முல்லை

67. மாங்காடு என்ற பகுதியில் மிகுந்து இருந்த மரங்கள் ?
A) புளிய மரம் 
B) அத்தி மரம்
C) மாமரம்
D) ஆலமரம்

68. பட்டி எனப்படுவது -------- அடைக்கும் இடமாகும்
A) கோழிகள் 
B) ஆடு மாடு
C) பன்றிகள் 
D) குதிரைகள்

69. ஊர் என முந்தைய காலத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியில் மிகுந்திருந்த வளம் ?
A) நிலவளம் 
B) நீர் வளம்
C) பயிர் வளம் 
D) இவை அனைத்தும்

70. கடம்பத்தூர் என்னும் பகுதியில் சூழ்ந்து இருந்த மரம் ?
A) புளிய மரம் 
B) அத்தி மரம்
C) தென்னை மரம்
D) கடம்பரம்

71. வேப்பேரி, சீவலப்பேரி ஆகியன ------ ஆல் பெயர்பெற்ற ஊர்கள் ஆகும் ?
A) நீர்நிலைகள் 
B) மரங்கள்
C) குன்றுகள் 
D) இவற்றில் ஏதுமில்லை

72. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ------- எனப்பட்டன.
A) பாக்கம்
B) பட்டினம்
C) கரை
D) குப்பம்

73. கீழ்க்கண்டவற்றுள் நெய்தல் நில ஊர்ப்பெயரை குறிப்பது எது ?
A) கரை 
B) குப்பம்
C) பாக்கம்
D) இவை அனைத்தும்

74. மீனவர்கள் வாழும் பகுதி தற்போது ------- எனும் பெயர் சேர்த்து வழங்கப்படுகிறது.
A) கோட்டை
B) ஊர்
C) கரை 
 D) குப்பம்

75. கோடியக்கரை, நீலாங்கரை எனும் பகுதி குறிக்கும் நிலப்பகுதி ?
A) குறி
B) முல்லை
C) நெய்தல் 
D) மருதம்

76. ஊருக்கு கிழக்கே எழுந்த பகுதியை பழந்தமிழர் ------- என்றனர்.
A) கரை 
B) குப்பம்
C) கீழூர் 
D) மேலூர்

77. கோயம்புத்தூருக்கு வழங்கப்பட்ட பழந்தமிழாக்கப் பெயர் ?
A) கோவை 
B) கோவன்புத்தூர்
C) பேரூர் 
D) கோவிலூர்

78. கீழ்க்கண்ட எந்த ஊரில் கோட்டை அமைந்திருக்கிறது ?
A) கந்தர்வக் கோட்டை
B) தேவக்கோட்டை
C) நிலக்கோட்டை
D) இவை அனைத்தும்

79. தென்பழஞ்சி எனம் ஊர் குறிக்கும் திசை ?
A) கிழக்கு 
B) மேற்கு
C) வடக்கு
D) தெற்கு

80. இராசபாளையம், குமாரபாளையம் போன்ற ஊர்களை ஆட்சி செய்தவர்கள் ?
A) சேரர் 
B) சோழர்
C) நாயக்கர் 
D) பல்லவர்

81. ஆற்றூர் என்பது ------ பாய்வதால் உண்டான பெயராகும் ?
A) தண்ணீர் 
B) ஆறு
C) வெள்ளம் 
D) இவற்றில் ஏதுமில்லை.

82. உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதன் யார் ?
A) தமிழர் 
B) சீனர்
C) கிரேக்கர் 
D) ரோமானியர்

83. உலகில் இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் வாழும் நாடுகள் ?
A) 10 
B) 20
C) 30 
D) 40

84. தமிழர்களை அடிமையாக்கி அவர்தம் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றோர் யார் ?
A) ஆங்கிலேயர் 
B) பிரெஞ்சுகாரர்கள்
C) A மற்றும் B 
D) இவற்றில் ஏதுமில்லை

85. தமிழர்கள் அயல்நாடுகளுக்கு செல்ல காரணம் ?
A) வாணிகம் 
B) வேலைவாய்ப்பு
C) A மற்றும் B 
D) வறுமை

86. எந்த நாட்டில் கோவில்கட்டி தமிழர்கள் அண்டுதோறும் திருவிழா நடத்துகின்றனர் ?
A) சிங்கப்பூர் 
B) மலேசியா
C) பினாங்குத் தீவு
D) இவை அனைத்தும்

87. திருவிழாக்களில் தமிழர்கள் ---- எடுப்பது இன்றும் நடைபெறுகிறது.
A) காவடி 
B) துணி
C) பிச்சை 
D) உடை

88. இலங்கையில் ----- விழுக்காடு தமிழர் தொடக்க கல்வி முதல் பல்கலைக்கல்வி வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர் ?
A) 50 
B) 60
C) 90 
D) 95

89. தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படும் நாடு ?
A) பிரிட்டன் 
B) மொரிசியசு
C) மலேசியா 
D) இவை அனைத்தும்

90. அமெரிக்க நாட்டு பேராசிரியர் யார் ?
A) வி.எஸ்.ராஜன்
B) நார்மன்
C) ஏ.கே.இராமானுஜம்
D) இவர்கள் அனைவரும்

91. பலநாடுகளுக்குச் சென்ற தமிழர் தமிழை வளர்க்கக் காரணம் ?
A) அதிக வருவாய்
B) மொழிப்பற்று
C) இனப்பற்று 
D) உயர்நோக்கு

92. ஜார்ஜ் எல். ஹார்ட் எந்நாட்டு பேராசிரியர் ?
A) இங்கிலாந்து 
B) அமெரிக்கா
C) இலங்கை 
D) வியட்நாம்

93. ஜேம்ஸ் பிராங்கா மற்றும் டபிள்யூ.குளோத்தி ஆகியோர் எந்நாட்டு பேராசிரியர்கள் ?
A) இங்கி
B) அமெரிக்கா
C) இலங்கை 
D) வியட்நாம்

94. தமிழர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் நாடு ?
A) இலங்கை 
B) மலேசியா
C) சிங்கப்பூர் 
D) இவை அனைத்தும்

95. தமிழர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்த நாடு எது ?
A) இலங்கை 
B) மலேசியா
C) சிங்கப்பூர் 
D) இவை அனைத்தும்

96. தமது பண்பாட்டு அடையாளங்களை மறவாது காத்து வருவோர் ?
A) தமிழர் 
B) கிரேக்கர்
C) யவனர் 
D) சீனர்

97. சொற்களை ஒபங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
A) கடலூர் மாவட்டம், இராமலிங்க அடிகள் மருதூர் என்னும் ஊரில் பிறந்தார்
B) மருதூர் என்னும் ஊரில் இராமலிங்க அடிகள் கடலூர் மாவட்டம், பிறந்தார்
C) இராமலிங்க அடிகள் கடலூர் மாவட்டம், மருதூர் என்னும் ஊரில் பிறந்தார் 
D) இராமலிங்க அடிகள் மருதூர் என்னும் ஊரில் கடலூர் மாவட்டம், பிறந்தார்

98. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக ?
A) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
B) தொழிலுக்கும் உழவுக்கும் வந்தனை செய்வோம்
C) உழவுக்கும் வந்தனை தொழிலுக்கும் செய்வோம்
D) செய்வோம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை

99. நான் அவன் வீட்டுக்குப் போனேன். ஆனால் நீ வரவில்லை - இத்தொடரில் உள்ள படர்க்கை இடத்தை குறிக்கும் சொல் எது ?
A) நான் 
B) அவன்
C) நீ 
D) இவற்றில் எதுவுமில்லை

100. பெயர்ச்சொற்களையும் வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம் ?
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு 
D) ஏழு

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post