5 - TNPSC GROUP IV & II GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 5 (2022 New Syllabus)

TNPSC GROUP -2 & 4 GENARAL TAMIL 

MODEL QUESTION PAPER - 5

PDF FREE DOWNLOAD


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 மற்றும் தொகுதி 2 தேர்வுகளுக்கு தயாராகும் அன்பிற்கினிய தேர்வர் சொந்தங்களே வணக்கம்.
    தேர்வில் வெற்றிக் கனியை பறிப்பதற்கு மிக முக்கியமானது பொதுத்தமிழ் கட்டாய மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் 100/100 வினாக்களுக்கு சரியான விடையளிப்பதே ஆகும். தன்னம்பிக்கையும், ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தால் இதனை சாத்தியப்படுத்துவது மிக மிக எளிது. தொகுதி 4 மற்றும் தொகுதி 2 தேர்வுகளை பொருத்தமட்டில் பொதுத்தமிழ் தாளுக்கு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே பாடத்திட்டமாக இருப்பதால் தேர்வுக்கு தயாராவதில் எந்தவித குழப்பமும் கொள்ள வேண்டியதில்லை.
 பொதுத்தமிழ் தாளினை பொருத்தமட்டில் தேர்வுக்கு தயாராவதற்கு, படிப்பதற்கு பாடத்திட்ட தலைப்புகளை கீழ்க்காணும் பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

1. படிக்க வேண்டியவை
2. பழக வேண்டியவை
3. நினைவூட்டல் (திருப்புதல்)

படிக்க வேண்டியவை
    பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் படித்து மனப்பாடம் செய்ய வேண்டிய தலைப்புகளை தேர்வு செய்து தினமும் படிக்க வேண்டும். படிப்பதற்கு உரிய கால அட்டவணையை நமக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள வேண்டும். படிக்க வேண்டிய தலைப்புகளை பொருத்தமட்டில் ஒரு புறம் நாம் படித்துக்கொண்டே இருக்கும் போது மறுபுறம் படித்தவை மறந்து கொண்டே வரும். இது இயற்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இது பொருந்தும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏற்கனவே படித்தவற்றை மீண்டும் மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு 5 முறை படித்தால் மறக்காமல் இருக்கும் ஆனால் சிலருக்கு 10 அல்லது 20 முறை படித்தால் மட்டுமே மறக்காமல் இருக்கும். போட்டித் தேர்வினை வெற்றி கொள்வதற்கு மிகமிக முக்கியமானது தன்னம்பிக்கையும், விடா முயற்சியும்தான் என பயிற்றுநர்கள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். எனவே படிப்பதற்கான பாடம், நேரத்துடன் கால அட்டவணையை உருவாக்கி படிக்கத் தொடங்கினால் வெற்றி பெறுவது உறுதி. 

பழக வேண்டியவை
    புரிந்து கொண்டால் மட்டுமே வினாக்களுக்கு விடையளிக்க இயலும் என்ற வகை தலைப்புகளை பொருத்திப் பார்த்து படிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இலக்கண குறிப்பறிதல், எதுகை மோனை இயைபுத் தொடை, பிழைதிருத்தம், உள்ளிட்ட தலைப்புகள். இதற்கு பாடத்தலைப்பின் பாடக்குறிப்புகளை படித்து மனதில் நிறுத்தி அதற்கான வினாக்களுக்கு தினமும் விடையளித்து பழக வேண்டும்.

மிக மிக முக்கியம்

  பொதுத்தமிழ் பாடத்தினை பொருத்தமட்டில் தினம் ஒரு வினாத்தாளுக்கு விடையளித்து பழக வேண்டும். அவ்வாறு செய்யும் போது நாம் எந்த தலைப்பில் நன்றாக படித்திருக்கிறோம், எந்த தலைப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ள இயலும். தினம் ஒரு வினாத்தாளுக்கு விடையளிக்கப் பழகும் போது, தேர்வுக் கூடத்தில் எந்தவிதமான கட்டுக் கோப்புடன் தேர்வு  எழுதுவீர்களோ அதே கட்டுப்பாட்டுடன் இந்த மாதிரித் தேர்வுகளையும் எழுத வேண்டும். பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவிற்குமான 200 வினாக்களுக்கு உங்களுக்கு 3 மணி நேரம் கொடுக்கப்படும். இதில் பொதுத் தமிழுக்கு நீங்கள் 1 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் பொது அறிவு 75 வினாக்கள் மற்றும் அறிவுணர்திறன் (கணிதம்) 25 வினாக்கள் ஆகியவற்றை எழுதுவதற்கு நமக்கு நேரம் கிடைக்கும்.

பொதுத்தமிழ் என்ற தாள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பதால் இந்த வலைதளப்பக்கத்தில் பாடத்திட்ட தலைப்புகளை உள்ளடக்கி மாதிரி வினாத்தாள்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறோம். 

மாதிரி வினாத்தாள்களை தேர்வுக்கூட சூந்நிலையில் எழுத வழிவகை இல்லாத தேர்வர்களை மனதில் கொண்டு மாதிரி வினாத்தாளுக்கான இணைய வழித் தேர்வினை (ONLINE TEST) இந்த வலைதளப் பக்கத்தில் எழுதி பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு (லிங்க்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் தொடர் வண்டி பயணத்தின் போதும் தங்களின் கைபேசி மூலமாக இணைய வழி தேர்வில் பங்கேற்று தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள இயலும்.

மேலும், தேர்வுக் கூட சூழலில் பொதுத்தமிழ் தாளினை எழுதும் வகையில் PDF file வினாத்தாள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்பிற்கினிய எதிர்கால அரசு ஊழியர் சொந்தங்கள் இதனை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


புதிய பாடத்திட்டம் (2022) 

மாதிரி வினாத்தாள் 5-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

பகுதி (அ)

1. பொருந்தாச் சொல்லை கண்டறிதல்

பகுதி (ஆ)

2. சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறும் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

பகுதி (இ)

3. நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.

----------------------------------------------------------------



போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து தேர்வர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்


MODEL QUESTION PAPER - 5 pdf file - FREE DOWNLOAD CLICK HERE 👉 DOWNLOAD




மாதிரி வினாத்தாளை PDF file ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👉  DOWNLOAD

அனைத்து மாதிரி வினாத்தாள்கள் இணைய வழித் தேர்வுக்கு  (All ONLINE TEST)  இங்கே கிளிக் செய்யவும் 👉 CLICK HERE 



All downloads Click Here 👉 DOWNLOAD

TNPSC GROUP - II SYLLABUS

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்

வல்லினம் மிகும் - மிகா இடங்கள், சந்திப்பிழைகளை நீக்குதல்

அணி இலக்கணம்

தமிழ் இலக்கணம் - வழக்கு

தமிழ் இலக்கணம் - தொகாநிலைத் தொடர்கள்

தமிழ் இலக்கணம் - தொகை நிலைத் தொடர்கள்

பெயர்ச்சொல் வகை அறிதல் - சொல் இலக்கணம்

பெயர்ச்சொல் வகை அறிதல் - சொல் இலக்கணம் -2

பெயர்ச்சொல் வகை அறிதல் - வினைச்சொல்

தமிழ் இலக்கணம் - சார்பெழுத்துகள்

பிரித்து எழுதுக - 1

பிரித்து எழுதுக - 2

பிரித்து எழுதுக - 3

பிரித்து எழுதுக - 4

பிரித்து எழுதுக - 5

பிரித்து எழுதுக - 6

பிரித்து எழுதுக - 7


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)















மாதிரி வினாத்தாள் -5  👇

மாதிரி வினாத்தாள்- 5 (100 வினாக்கள்)


1. வாயிற் கடைமணி நடுநா நடுங்க என்ற சிலப்பதிகாரத் தொடரின் மூலம் எவரைப் பற்றிய வரலாறு அறிய முடிகிறது

A) மனுநீதிச் சோழன்

B) சிபிச் சக்கரவர்தி

C) சிரவணன்

D) கரிகாலச் சோழன்



2. நடந்தாய் வாழி காவேரி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) புறநானூறு

B) அகநானூறு

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை



3. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) பொய்கையார்

B) அதிபத்தர்

C) இயற்பகையார்

D) ஏனாதிநாயனார்



4. பொருந்தா சொல்லை கண்டறிக ?

A) பண்டாரம்

B) நூலகம்

C) சுவடியகம்

D) ஏடு



5. பொருந்தாத இணையை கண்டறிக ?

A) நாடகமேத்தும் நாடகக் கணிகை - சிலப்பதிகாரம்

B) சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - திருக்குறள்

C) காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் - முடியரசன்

D) நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - வள்ளலார்



6. பொருந்தாத சொல்லைக் கண்டறிக ?

A) பஃறி

B) அம்பி

C) வங்கம்

D) பௌவம்



7. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) நாணம்

B) அறிவு

C) நிறை

D) ஓர்ப்பு



8. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) மண்டூகம் - குதிரை

B) சமுதாயம் - குமுகியம்

C) மசோதா - வரைமுறி

D) லோபி - கஞ்சன்



9. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) அமாவாசை - காருவா

B) அகங்காரம் - மிடுக்கு

C) இன்குலாப் - புரட்சி

D) காலி - போக்கிலி



10. பம்மல் சம்பந்தனார் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.

A. தமிழ்நாடக தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுகிறார்.

B. சேக்சுபியரின் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

C. மனோகரன் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.

D. நாடக மேடை நினைவுகள் மற்றம் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி என்னும் தலைப்பில் தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.



11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

A) அருவி

B) சோலை

C) ஆறு

D) கடல்



12. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) காவுந்தியடிகள் - அறச் செல்வி

B) கண்ணகி - வீரச் செல்வி

C) மாதவி - அன்புச் செல்வி

D) மணிமேகலை - தவச் செல்வி



13. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மையின் நேர்ப் பொருளை கூறுக ?

A) அரசியல் செய்வோர் அறவழியில் இருந்து தவறக் கூடாது.

B) அரசியலை பிழைப்பாக கருதாமல் அறத்தின் வழி நிற்க வேண்டும்.

C) அரசியல் நெறியினின்றும் வழுவியவர்க்கு அறக்கடவுளே தண்டணை தரும்

D) அரசியல் அதர்மத்தின் திறவுகோல்



14. மணிமேகலை தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக?

A) மணிமேகலையும் சேர இளவரசன் உதய குமாரனும் முற்பிறவியில் கணவன் மனைவியர்

B) கோமுகிப் பொய்கையில் அள்ள அள்ள உணவு வரும் அட்சயப்பாத்திரத்தை புத்தன் அருளாள் பெற்றாள் மணிமேகலை

C) சோழ அரசி ராசமாதேவி இழைத்த கொடுமைகளை எதிர்கொண்டு அவளை நல்வழிப்படுத்தினாள் மணிமேகலை

D) சாவகநாடு சென்று புண்ணியரசனுக்கு அறவுரை பகர்ந்தாள் மணிமேகலை.



15. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) மங்கை - 11 வயது முதல் 13 வயது வரை

B) மடந்தை - 14 வயது முதல் 19 வயது வரை

C) அரிவை - 20 வயது முதல் 25 வயது வரை

D) தெரிவை - 26 வயது முதல் 32 வயது வரை



16. பொருந்தாத சொல்லைக் கண்டறிக ?

A) வெற்பு

B) தத்தை

C) சிலம்பு

D) பொருப்பு



17. தொழில்முறை நாடக அரங்குகளைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்து நாடகத் தமிழ் என்னும் நூலில் தந்தவர் யார் ?

A) சங்கரதாசு சுவாமிகள்

B) தி.க. சண்முகனார்

C) பம்மல் சம்பந்தனார்

D) சுவாமி விபுலானந்தர்



18. சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் தற்போது எவ்வாறு அழக்கப்படுகிறது ?

A) கோவன்புத்தூர்

B) கோவலன் பொட்டல்

C) பூம்புகார்

D) உறையூர்



19. உருவகம் அல்லாத சொல்லைக் காண்க

A) மாற்றார்

B) மருப்பூசி

C) மார்போலை

D) பதமலர்



20. நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ள ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல் எது/எவை ?

A) முறுவல்

B) சயந்தம்

C) செயிற்றியம்

D) இவையனைத்தும்



21. நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) பம்மல் சம்பந்தனார்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) தி.க. சண்முகனார்

D) காசி விசுவநாதர்



22. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) பொறுப்பு

B) பொருப்பு

C) வெற்பு

D) சிலம்பு



23. சீவக சிந்தாமணி தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) இயற்றியவர் - திருத்தக்க தேவர்

B) சிறப்புப் பெயர் - மணநூல்

C) நாமகள் இலம்பகம் முதல் முத்தியிலம்பகம் வரை 13 இலம்பகங்களை கொண்டது.

D) இந்நூலை ஜி,யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.



24. மனோன்மணீயம் நூலில் இடம்பெற்றுள்ள துணைக் கதை எது ?

A) சாதுவன் கதை

B) ஜாதகக் கதைகள்

C) ராம சரிதம்

D) சிவகாமி சரிதம்



25. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) தத்தை

B) மயில்

C) கிள்ளை

D) சுகம்



26. கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகம் எது ?

A) இலவகுசா

B) பவளக்கொடி

C) சிறுதொண்டர்

D) நந்தனார் சரித்திரம்



27. பொருத்துக

1. மதங்க சூளாமணி - அ) மறைமலையடிகள்

2. சாகுந்தலம் - ஆ) மகேந்திரவர்மன்

3. மத்தவிலாசம் - இ) விபுலானந்தர்

4. டம்பாசாரி விலாசம் - ஈ) காசி விசுவநாதர்

1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. இ அ ஆ ஈ

C. ஆ அ ஈ இ

D. ஆ இ அ ஈ



28. மாலை என்று பொருள் தரும் சொல்லைத் தேர்க.

A) தார்

B) அலங்கல்

C) ஆரம்

D) இவை அனைத்தும்



29. காவலன் வாயிற் கடையிடை சென்று கணவனின் புகழைக் காத்தவள் யார் ?

A) தமயந்தி

B) சீதை

C) சாவித்திரி

D) கண்ணகி



30. சரியான கூற்று எது?

1. முதன் முதலில் இந்திர விழா எடுத்தவர் - தொடிதோட் செம்பியன்

2. அமிழ்தில் சிறந்த தமிழினும் மடந்தை என்ற தொடர் மணிமேகலையைக் குறிக்கும்.

3. மணிமேகலை பூம்புகாரில் பிறந்து காஞ்சிபுரத்தில் இறந்தாள்.

4. ஆதிரையின் கணவன் பெயர் சீவகன்

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 4 மட்டும் சரி

C) 1,2, 3 மட்டும் சரி

D) 2, 3, 4 மட்டும் சரி



31. பொருந்தாத இணையை கண்டறிக ?

A) மாயோன் - காடுறை உலகம்

B) சேயொன் - மைவரை உலகம்

C) வேந்தன் - தீம்புனல் உலகம்

D) வருணன் - தெண்டிரை உலகம்



32. கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட மாதவி வாழ்க்கையை வெறுத்தவளாய் தன் மகள் மணிமேகலையுடன் யாரிடம் சென்று தம்மை அடைக்கலப்படுத்திக் கொண்டார் ?

A) மாதரி

B) அப்பூதியடிகள்

C) மாநாய்க்கன்

D) அறவண அடிகள்



33. மணிமேகலைக்கு கண்ணகி காட்சி தந்த இடம் எது ?

A) மணிபல்லவத் தீவு

B) புகார் நகரம்

C) வஞ்சி

D) கோவலன் பொட்டல்



34. விருத்தம் என்னும் பாவினத்தால் ஆன முதல் தமிழ்க் காப்பியம் எது?

A) நரிவிருத்தம்

B) சீவக சிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை



35. இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறும் ?

A) 26

B) 28

C) 18

D) 3



36. கருணாமிர்த சாகரம் என்ற நூலை ஆபிரகாம் பண்டிதர் எந்த ஆண்டு வெளியிட்டார் ?

A) 1917

B) 1907

C) 1971

D) 1970



37. ஏழிசை என்ற குறிக்கப்பெறுவனவற்றுள் பொருந்தாத சொல்லைக் காண்க.

A) வனப்பு

B) குரல்

C) துத்தம்

D) கைக்கிளை



38. அக்கினி சாட்சியாக என்ற சமூக நாடகத்தை எழுதியவர் யார்?

A) சங்கரதாசு சுவாமிகள்

B) இலக்குவனார்

C) பம்மல் சம்பந்தனார்

D) காவிரி நாடன்



39. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) அகநானூறு

B) புறநானூறு

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை



40. விடை என பொருள்தரும் சொல் அல்லாதது எது ?

A) ஏவல்

B) இறை

C) செப்பு

D) பதில்



41. பொருத்துக

1. இந்திரவிழவூரெடுத்த காதை - அ) குறிஞ்சி

2. கானல் வரி - ஆ) முல்லை

3. வேட்டுவ வரி - இ) மருதம்

4. ஆய்ச்சியர் குரவை - ஈ) நெய்தல்

5. குன்றக் குரவை - உ) பாலை

1. 2. 3. 4. 5.

A. அ ஆ இ உ ஈ

B. உ அ ஆ ஈ இ

C. ஆ அ உ இ ஈ

D. இ ஈ உ ஆ அ



42. சிலப்பதிகாரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து இத்தகைய இலக்கியம் தம் மொழியில் அமைந்திருக்கவில்லை யாதலின், தமிழ்மொழிபால் பொறாமை கொள்வதாக வியந்து பாராட்டிய ஆந்திர அறிஞர் யார் ?

A) திரு. பி.வி. நரசிம்மராவ்

B) திரு. வெங்கடராசுலு

C) திரு.சி.ஆர்.ரெட்டி

D) திரு.பி.வி.ரெட்டி



43. மணிமேகலை காப்பியத்திற்கு வழங்கப்பெறாத சிறப்புப் பெயர் எது ?

A) அறக்காப்பியம்

B) முதல் சமயக்காப்பியம்

C) வரலாற்றுக் காப்பியம்

D) கலைக் காப்பியம்



44. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பெறும் சிறப்பு பெயர் எது ?

1. சமுதாயக் காப்பியம்

2. நாடகக் காப்பியம்

3. ஒற்றுமைக் காப்பியம்

4. கலைக்காப்பியம்

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1,2,4 மட்டும் சரி

D) 1,2,3 மட்டும் சரி





45. முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) சீவக சிந்தாமணி

C) மணிமேகலை

D) கம்பராமாயணம்



46. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) தொழல்

B) தொடுஉணர்வு

C) உண்ணல்

D) உயிர்த்தல்



47. சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி பம்மல் சம்பந்தனார் எழுதாத நாடகம் எது ?

A) வாணிபுரத்து வணிகன்

B) விரும்பிய விதமே

C) யயாதி

D) அமலாதித்யன்



48. நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து

மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத் - இச்செய்யுள் அடியில் உள்ள நாத்தொலைவில்லை என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?

A) உடல் சோர்வின்மை

B) அதிக தூரமில்லை

C) குறைந்த தூரமில்லை

D) சொல் சோர்வின்மை



49. தீவினை என்பது என்னவெனில் கொலை, களவு, காமமெனும் கொடிய விருப்பம் ஆகிய உடலில் தோன்றும் மூன்றும்; பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்றசொல் எனச் சொல்லில் தோன்றும் நான்குமாம் எனக் கூறும் நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) சீவக சிந்தாமணி

C) மணிமேகலை

D) குண்டலகேசி



50. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) இளங்கோவடிகள்

D) கவிமணி தேசிக விநாயகம்



51. பொருந்தாத இலக்கணக் குறிப்புச் சொல்லைக் காண்க - பண்புத் தொகை ?

A) பல்லுயிர்

B) நல்வினை

C) காமத்தீ

D) தீவினை



52. பரத்தைத் தொழிலிற் கன்றிய சித்திராபதியின் பேர்த்தியை தலைவியாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியப் புரட்சிக்கு வித்திட்ட நூல் எது ?

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) சீவக சிந்தாமணி

D) மணிமேகலை



53. பொற்பின் செல்வி என்று அழைக்கப்படுபவள் யார் ?

A) தீவத் திலகை

B) மணிமேகலை

C) மாதவி

D) கண்ணகி



54. பொருத்துக

1. நாடகவியல் - அ) மு.கதிரேச செட்டியார்

2. மண்ணியல் சிறுதேர் - ஆ) பம்மல் சம்பந்தனார்

3. மனோகரா - இ) திருமாறன்

4. சாணக்ய சபதம் - ஈ) பரிதிமாற் கலைஞர்

1. 2. 3. 4.

A. ஈ அ ஆ இ

B. இ ஈ அ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ





55. இயற்படு பொருளால் கண்டது மறந்து

முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் - இவ்வடியில் உள்ள கோடு என்ற சொல்லின் பொருளைக் கூறுக.

A) மலை

B) தந்தம்

C) கொம்பு

D) இவை அனைத்தும்



56. நல்வினைப் பயன் எதுவெனின், பத்துவகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கி ஒழுக்கத்தை மேற்கொள்வதும் பிறருக்குக் கொடையளிப்பதும் ஆகும் என்று கூறும் நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) உதயண குமார காவியம்

D) சீவக சிந்தாமணி



57. நவகோடி நாராயணன் என்ற புகார் வணிகனின் வரலாற்றை கூறும் நூல் எது?

A) வளையாபதி

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) சீவகசிந்தாமணி



58. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையின் எத்தனையாவது காதை?

A) 24

B) 30

C) 23

D) 18



59. "உடோப்பியா என்ற இலட்சிய நாட்டை மேனாட்டார் கற்பனை செய்தமை போன்றதொரு தமிழ் முயற்சி" என எந்த நூலில் இடம்பெற்றுள்ள நகர வருணனையைப் பற்றி

தெ.பொ.மீ அவர்கள் பாராட்டுகிறார் ?

A) சிலப்பதிகாரம்

B) சூளாமணி

C) சீவக சிந்தாமணி

D) குண்டலகேசி



60. ஸ்ரீபுராணம் எனப்படும் ஆருகத மகாபிராணத்தை தழுவி இயற்றப்பட்ட நூல் எது ?

A) சிலப்பதிகாரம்

B) சூளாமணி

C) சீவக சிந்தாமணி

D) இவையனைத்தும்



61. கற்பு மேம்பாட்டில் சிறந்த பத்தினியைத் தேவரும் தொழுவர் என்ற செய்தி சிலப்பதிகாரத்தில் எந்த காண்டத்தில் சிறப்பாக பேசப்படுகிறது ?

A) புகார் காண்டம்

B) மதுரைக் காண்டம்

C) திருஆலவாய்க் காண்டம்

D) வஞ்சிக் காண்டம்



62. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வடநாட்டு வேந்தன் யார் ?

A) சதகர்ணிகள்

B) கயவாகு

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை.



63. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் வீரமேம்பாடு மற்றும் வென்றிச் சிறப்பை பற்றி விளக்கும் காண்டம் எது ?

A) புகார் காண்டம்

B) மதுரைக் காண்டம்

C) திருஆலவாய்க் காண்டம்

D) வஞ்சிக் காண்டம்



64. ஐஞ்சிறும் காப்பியம் என்னும் வழக்கத்தை உருவாக்கியவர் யார் ?

A) உ.வே.சாமிநாதய்யர்

B) வீரமாமுனிவர்

C) உய்யவந்த தேவர்

D) சி.வை.தாமோதரன் பிள்ளை



65. சரியான இணையைக் காண்க.

A) மண் தேய்த்த புகழினான் - கோவலன்

B) பொய்யா குலக்கொடி - காவிரி

C) இருநிதிக் கிழவன் - மாநாய்கன்

D) ஏழிசை வல்லோன் - இராவணன்

66. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) மலர்

B) மா

C) அலர்

D) வீ



67. ‘அருந்தவர்க் கமைந்த ஆசனம் ......’ - மணிமேகலை காப்பியத்தில் உள்ள இவ்வடியில் ‘அருந்தவர்’ எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?

A) மணிமேகலா தெய்வம்

B) காவுந்தியடிகள்

C) மணிமேகலை

D) அறவண அடிகள்



68. சிலப்பதிகாரத்தில் இடம்பெறாத தொடர் எது ?

A) ஓங்குசீர் மதுரை தென்தமிழ் நாட்டு தீதுதீர் மதுரை

B) மாங்குடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை

C) பதியெழு வரியால் பண்பு மேற்பட்ட மதுரை மூதூர்

D) தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை



69. மா பாவியோர் கூடிவாழும் மாநகருக்கு மன்னா போகாதே எனப் பாடியவர் யார் ?

A) இளங்கோவடிகள்

B) பம்மல் சம்பந்தனார்

C) பாரதிதாசன்

D) சங்கரதாஸ் சுவாமிகள்



70. கேளிக்கை நாடக வகைகளையும் நையாண்டியையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

A) சங்கரதாஸ் சுவாமிகள்

B) அவ்வை சண்முகம்

C) பம்மல் சம்பந்த முதலியார்

D) பரிதிமாற் கலைஞர்



71. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) மாயோன்

B) அரி

C) ஞால்

D) மால்



72. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) ஆம்பல்

B) முண்டகம்

C) பதுமம்

D) பங்கயம்



73. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) விளி

B) மாருதல்

C) கால்

D) வளி



74. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) கொண்டல்

B) அகில்

C) எழிலி

D) முகில்



75. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) பனை

B) வேய்

C) கழை

D) வேரல்



76. பொருந்தாத இணையைக் காண்க

A) பெண் சமயத் துறவி - கௌந்தி அடிகள்

B) ஆண் சமயத்துறவி - அரவண அடிகள்

C) மாதவியின் மகள் - மணிமேகலை

D) மாதரியின் மகள் - ஐயை



77. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) வலம்

B) எழில்

C) பொலம்

D) முருகு



78. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) எல்

B) ஞாயிறு

C) வெய்யோன்

D) மதி



79. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) பொதும்பர்

B) தொடை

C) கோதை

D) ஆரம்



80. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) கலைமான்

B) வேழம்

C) கரி

D) மத்தமான்



81. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) பேதை

B) காரிகை

C) காளை

D) அணங்கு



82. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) கோடு

B) வரை

C) பொறுப்பு

D) வெற்பு



83. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) அரம்பை

B) நுதல்

C) கதலி

D) வாழை



84. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) பன்னகம்

B) கீரி

C) பாதம்பூ

D) உரகம்



85. நாண் என்ற சொல்லின் பொருள் அல்லாதது எது

A) வெட்கம்

B) அம்பு

C) அன்பு

D) கயிறு



86. கட்டுக் குலையாத நாடகக் குழுவை நடத்திக் காட்டியதால் "கலைஞர்" என அழைக்கப்பட்டவர் யார் ?

A) பம்மல் சம்பந்தனார்

B) மு.கருணாநிதி

C) பரிதிமாற்கலைஞர்

D) சங்கரதாஸ் சுவாமிகள்



87. கடக்களிறு அடக்கிய கருணை மறவன் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) இளங்கோவடிகள்

B) சீவகன்

C) கோவலன்

D) சேரன் செங்குட்டுவன்



88. சீவக சிந்தாமணியை "இலியட் ஒடிசி" யுடன் ஒப்பிட்டுக் கூறியவர் யார் ?

A) ஜி.யு போப்

B) கால்டுவெல்

C) சி.வை.தாமோதரன் பிள்ளை

D) பாரதியார்



89. நீலகேசி என்பதன் பொருள் ?

A) கறுமையான கூந்தலை உடையவள்

B) சுருண்ட கூந்தலை உடையவள்

C) கருமையான கூந்தலை உடையவள்

D) நீளமான கூந்தலை உடையவள்



90. நாட்டியத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு இடம்தரும் வகையில் அமைந்திருப்பது எது ?

A) இசைத் தமிழ்

B) இயல் தமிழ்

C) நாடகத் தமிழ்

D) பண்ணிசை





91. தமிழக இயலிசை நாடக மன்றம் வழங்கும் விருது எது?

A) சரஸ்வதி விருது

B) கிராமி விருது

C) கலைமாமணி விருது

D) பத்ம ஸ்ரீ



92. சாதுவன் கடல்கடந்து சென்ற குறிப்பு எந்நூலில் உள்ளது ?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) குண்டலகேசி

D) மணிமேகலை



93. பொருத்துக

1. இளங்கொடி - அ) பிடாரி

2. கன்னியர் எழுவரில் இளையவள் - ஆ) பத்ரகாளி

3. இறைவனை நடனமாடச் செய்தவள்- இ) காளி

4. காட்டை விரும்புவள் - ஈ) கொற்றவை



1. 2. 3. 4.

A. ஈ அ ஆ இ

B. இ ஈ அ ஆ

C. ஆ அ ஈ இ

D. அ இ ஈ ஆ



94. இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்ற கணியன் கருத்தை பொய்ப்பிக்கும் பொருட்டு துறவு பூண்டு இளங்கோவடிகள் தங்கிய இடம் ?

A) மதுரை

B) உறையூர்

C) குணவாயிற் கோட்டம்

D) சத்தியாவந்தன மேடை



95. கீழ்க்கண்டவற்றுள் சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் அல்லாதது எது ?

A) முதற்காப்பியம்

B) ஒற்றுமைக்காப்பியம்

C) முத்தமிழ்க்காப்பியம்

D) மக்கள் காப்பியம்



96. மாடு முட்டி சரிந்த குடலை புத்தத் துறவி சரிசெய்த செய்தியை தெரிவிக்கும் நூல் எது ?

A) மணிமேகலை

B) ஏலாதி

C) புறநானூறு

D) சிலப்பதிகாரம்



97. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்றவர் யார்

A) ஔவை சண்முகனார்

B) கவிமணி

C) பம்மல் சம்பந்தனார்

D) சங்கரதாசு சுவாமிகள்



98. சிலப்பதிகாரம் தொடர்பான தவறான கூற்றினை காண்க.

A) கண்ணகியின் காற்சிலம்பில் இருந்தவை - மாணிக்கப் பரல்கள்

B) பாண்டிமாதேவியின் காற்சிலம்பில் இருந்தவை - முத்துக்கள்

C) கண்ணகியின் தந்தை - மாநாய்கன்

D) இந்திர விழாவில் கானல்வரிப் பாடலைப் பாடியவள் - மாதரி



99. சமய வேறுபாடற்ற துறவி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) வள்ளலார்

B) விவேகானந்தர்

C) தாயுமானவர்

D) இளங்கோவடிகள்



100. உலகின் சூளாமணியாக உயர்ந்து நின்றவர் யார் ?

A) மாதவி

B) பயாபதி மன்னன்

C) கண்ணகி

D) மணிமேகலை

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download





 




    

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post