TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 18 WITH ANSWER KEY
Free download
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 18
விடையுடன் இலவச பதிவிறக்கம்
2022 புதிய பாடத்திட்டம்
1.(பகுதி-அ) எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை
தேர்ந்தெழுதுதல்.
2.(பகுதி-இ) உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள்
தொடர்பான செய்திகள்.
3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர்,
இராமலிங்க அடிகளார்,
திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான
செய்திகள் - மேற்கோள்கள்.
DOWNLOAD PDF FILES - LINKS
மாதிரி வினாத்தாள்- 18 (100 வினாக்கள்)
1. தொடை விகற்பங்கள் எத்தனை வகைப்படும் ?
A) 53
B) 35
C) 25
D) 32
2. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் - இக்குறளில் உள்ள எதுகையைக் காண்க ?
A) கூழை எதுகை
B) மேற்கதுவாய் எதுகை
C) கீழ்க்கதுவாய் எதுகை
D) முற்றெதுகை
3. தானம் தவமிரண்டம் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்- இக்குறளில் உள்ள மோனையைக் காண்க ?
B) மேற்கதுவாய் மோனை
C) கீழ்க்கதுவாய் மோனை
D) முற்றுமோனை
4. பிள்ளைப்பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பில் பாடல்களை இயற்றியவர் யார் ?
A) திரு.வி.க
B) இராமலிங்க அடிகள்
C) பாரதியார்
D) குமரகுருபரர்
5. இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று இராமலிங்க அடிகளாரை கூறியவர் யார் ?
A) பாரதியார்
B) திகம்பர சாமியார்
C) குன்றக்குடி அடிகளார்
D) ஆலய அந்தனர்
6. தில்லையில் இறையருள் பெற்ற திருக்குழந்தை என யாரை ஆலய அந்தணர் குறிப்பிடுகிறார் ?
A) திருஞான சம்பந்தர்
B) இராமலிங்க அடிகள்
C) மாணிக்க வாசகர்
D) திருநாவுக்கரசர்
7. வள்ளலார் பதிப்பித்த நூல்/நூல்கள் கூறு ?
A) சின்மய தீபிகை
B) ஒழிவிலொடுக்கம்
C) தொண்டை மண்டல சதகம்
D) இவையனைத்தும்
8. சிங்கவல்லி என்றழைக்கப்படும் மூலிகை எது
B) தூதுவளை
C) கற்றாழை
D) கீழாநெல்லி
9. தொடை எத்தனை வகைப்படும்
A) எட்டு
B) எண்ணிலடங்கா
C) ஐந்து
D) ஆறு
10. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை வகையை கூறு
A) மோனைத் தொடை
B) எதுகைத் தொடை
C) முரண்தொடை
D) இவையனைத்தும்
11. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை வகையை கூறு
A) அடி மோனைத் தொடை
B) அடி எதுகைத் தொடை
C) A மற்றும் B
D) கூழை மோனை
12. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் - இக்குறளில் பயின்று வந்துள்ளது தொடை எது?
A) எதுகை மட்டும் வந்துள்ளது
B) மோனை மட்டும் வந்துள்ளது
C) எதுகை, மோனை மற்றும் இயைபு வந்துள்ளது.
D) எதுகை மற்றும் மோனை வந்துள்ளது
13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று டற்றும் பசி. - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?
A) ஒரூஉ மோனை
B) பொழிப்பு மோனை
C) மேற்கதுவாய் மோனை
D) இணைமோனை
14. உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றுமாறு செய்தவர் யார் ?
A) கடுவெளிச் சித்தர்
B) வள்ளலார்
C) தாயுமானவர்
D) குமரகுருபரர்
15. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம் என்று கூறியவர் யார் ?
A) கால்டுவெல்
B) ஜி.யு போப்
C) வள்ளலார்
D) திரு.வி.க
16. உயிரிக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றவர் ?
A) திருவள்ளுவர்
B) திருஞான சம்பந்தர்
C) வள்ளலார்
D) திருநாவுக்கரசர்
17. இராமலிங்க வள்ளலாரை புதுநெறி கண்ட புலவர் என்று போற்றியவர் யார் ?
B) வீரமாமுனிவர்
C) பாரதிதாசன்
D) திரு.வி.க
18. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும் இச்செய்யுளில் வந்துள்ள தொடை எது ?
B) எதுகை மற்றும் மோனை மட்டும் வந்துள்ளது.
C) எதுகை, மோனை மற்றும் இயைபு வந்துள்ளது.
D) எதுகை, மோனை, முரண் மற்றும் அளபெடை வந்துள்ளது
19. பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்று கூறும் நூல்?
A) மணிமேகலை
B) சிலப்பதிகாரம்
C) புறநானூறு
D) அகநானூறு
20. பெண், அடிமை வாழ்வு நடத்த நேரிடின் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன் என்று கூறியவர் யார் ?
A) திரு.வி.க
B) தாயுமானவர்
C) பாரதியார்
D) இராமலிங்க அடிகள்
21. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல் எது
A) புறநானூறு
B) மணிமேகலை
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை.
22. உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கும் குருதி தூய்மை பெறுவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் நாளொன்றுக்கு உடலுக்கு தேவையான குறைந்த பட்ச நீரின் அளவு
A) மூன்று லிட்டர்
B) இரண்டு லிட்டர்
C) ஐந்து லிட்டர்
D) ஒரு லிட்டர்
23. மீதூண் விரும்பேல் எனக் கூறியவர் யார்
A) இளங்கோவடிகள்
B) திருமூலர்
C) ஔவையார்
D) அகத்தியர்
24. உணவு உண்ணும் அளவு குறித்த தவறான கூற்று எது
A) சோறும் காய்கறியும் அரைவயிறு
B) பால், மோர், நீர் ஆகியவை கால்வயிறு
C) நீர் மட்டும் அரை வயிறு
D) கால்வயிறு வெற்றிடமாக இருத்தல் வேண்டும்
25. நோய்க்கு முதல் காரணம் எது ?
A) உப்பு
B) நீர்
C) மது
D) புகையிலை
26. ஞானப்பச்சிலை என வள்ளலார் எதனைக் குறிப்பிட்டார் ?
A) மஞ்சள்
B) கற்றாழை
C) சிங்கவல்லி
D) இவற்றில் எதுவுமில்லை
27. திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்
B) தென்றல் இதழில் ஆசிரியராக இருந்தார்
C) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்
D) விருதாசலனார், சின்னம்மை இணையருக்கு மகனாகத் தொன்றினார்.
28. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று பாடியவர் யார் ?
B) அகத்தியர்
C) கடுவெளிச் சித்தர்
D) இவற்றில் எதுவுமில்லை
29. குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது ?
A) மஞ்சள்
B) கற்றாழை
C) சிங்கவல்லி
D) தூதுவளை
30. கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறு பெயர் ?
A) கையாந்தகரை
B) பிருங்கராசம்
C) தேகராசம்
D) இவை அனைத்தும்
31. மார்புச்சளி, நீர்க்கோவை மற்றும் தலைவலியை நீக்கும் மூலிகை எது ?
A) வல்லாரை
B) கற்றாழை
C) துளசி
D) கறிவேப்பிலை
32. குளிர்ச்சியை உண்டாக்கி இரத்தத்தை தூய்மைப்படுத்துவது ?
A) பூண்டு
B) வெங்காயம்
C) மஞ்சள்
D) புழுங்கலரசி
33. மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது?
A) கொத்துமல்லி
B) சீரகம்
C) கறிவேப்பிலை
D) மிளகு
34. எவ்வுணவினை தவிர்க்க வேண்டும் ?
A) கார உணவு
B) புளிப்பு உணவு
C) பொறித்த உணவு
D) இவை அனைத்தும்
35. மஞ்சள் காமாலைக்கு எளிய மருந்தாகப் பயன்படும் மூலிகை ?
A) துளசி
B) கீழாநெல்லி
C) தூதுவளை
D) குப்பைமேனி
36. "இளைஞர்களே! தமிழுலகின் இழிந்தநிலையை ஓருங்கள்; ஓர்ந்து (எண்ணி) உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள்கொண்டெழுங்கள், எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்"" என்று அறைகூவல் விடுத்தவர் யார் ?
A) இராமலிங்க வள்ளலார்
B) தாயுமானவர்
C) திரு.வி.க
D) வீரமாமுனிவர்
37. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கவல்லது எது ?
A) கீழாநெல்லி
B) கற்றாழை
C) குப்பைமேனி
D) துளசி
38. சொறி சிரங்கு நீக்கவல்ல மூலிகை எது?
A) குப்பைமேனி
B) முருங்கை
C) கற்றாழை
D) கரிசலாங்கண்ணி
39. இளைப்பு இருமல் போக்கும் மூலிகை எது ?
A) தூதுவளை
B) குப்பைமேனி
C) துளசி
D) கீழாநெல்லி
40. "வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி" எனும் நூலின் ஆசிரியர் ?
A) திரு.வி.க
B) இராமலிங்க அடிகள்
C) பரிதிமாற்கலைஞர்
D) கி.வ.ஜெகன்நாதன்
41. வள்ளலாரின் ஞானகுரு யார் ?
A) திருஞான சம்பந்தர்
B) திருமூலர்
C) மாணிக்க வாசகர்
D) இவர்கள் அனைவரும்
42. "இளைஞர்களே! உங்கள் தமிழ்த்தாய் நேற்றுப் பிறந்தவள் அல்லள்; இன்று பிறந்தவள் அல்லள். அவள் மிகத் தொன்மையுடையவள்; கலைகளையுடையவள். அவளையா கொல்வது? தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்? வீரத்துக்குரிய தங்கள் இளமுகம் நோக்கிக் கேட்கின்றேன் என்று அறைகூவல் விடுத்தவர் யார் ?
A) இராமலிங்க வள்ளலார்
B) தாயுமானவர்
C) திரு.வி.க
D) பாரதிதாசன்
43. திரு.வி.க வுக்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்றவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C) தந்தை பெரியார்
D) சி.இலக்குவனார்
44. நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறியவர் யார் ?
A) இராமலிங்க வள்ளலார்
B) தாயுமானவர்
C) திரு.வி.க
D) பாரதிதாச
45. தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிறமொழியை வெறுக்கவேண்டும் என்பது பொருளன்று என்றவர் யார்?
A) வள்ளலார்
B) தாயுமானவர்
C) திரு.வி.க
D) பாரதியார்
46. தாயுமானவரின் பராபரக் கண்ணியைப் போல் ஓசைநயமிக்க இசுலாமிய பாடல்களை அருளியவர் யார் ?
A) உமறுப் புலவர்
B) அபுல்காசிம் மரைக்காயர்
C) சந்திரன் சுவர்க்கி
D) குணங்குடி மஸ்தான் சாகிபு
47. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலை எழுதியவர்
A) அஞ்சலையம்மாள்
B) வ.உ.சிதம்பரனார்
C) ம.பொ.சிவஞானம்
‘D) தாயுமானவர்
48. தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது ?
A) மாணிக்கவாசகரின் பாடல்கள்
B) தேவாரப் பாடல்கள்
C) ஆழ்வார் பாசுரங்கள்
D) தாயுமானவர் பாடல்கள்
49. தாயுமானவர் நினைவல்லம் அமைந்துள்ள இடம் ?
A) திருச்சி
B) மதுரை
C) இலட்சுமிபுரம்
D) தருமபுரம்
50. தாயுமானவரின் காலம் ?
A) கி.பி. 17-ம் நூற்றாண்டு
B) கி.பி 19-ம் நூற்றாண்டு
C) கி.பி. 16-ம் நூற்றாண்டு
D) கி.பி. 18-ம் நூற்றாண்டு
51. விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கணக்கராக பணிபுரிந்தவர்
A) தாயுமானவர்
B) மாணிக்கவாசகர்
C) உமறுப்புலவர்
D) கடிகைமுத்துப்புலவர்
52. நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள வாராய் என்று பாடியவர் யார் ?
A) வள்ளலார்
B) தாயுமானவர்
C) திரு.வி.க
D) உமறுப்புலவர்
53. இராமலிங்க அடிகள் உருவாக்கிய சங்கம் எது ?
A) சத்திய ஞானசபை
B) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
C) சத்திய தருமச் சாலை
D) இவை அனைத்தும்
54. தாயுமானவர் முக்தி அடைந்த இடம் ?
A) வேதாரண்யம்
B) வடகாடு
C) இலட்சுமிபுரம்
D) வேதபுரி
55. இராமலிங்க அடிகளின் பெற்றோர் ?
A) கேடிலியப்ப பிள்ளை - கெஜவல்லி
B) இராமையா - சின்னம்மை
C) கேடிலியப்ப பிள்ளை - அமுதவள்ளி
D) இராமையா - கெஜவல்லி
56. சோழர் சரித்திரம் நூலின் ஆசிரியர் யார் ?
A) திரு.வி.க
B) மு.வ
C) மயிலை முத்து
D) வள்ளலார்
57. தாயுமானவரின் ஆசிரியர் யார் ?
A) திருமூலர்
B) கேடிலியப்பர்
C) மௌனகுரு
D) விஜயரங்க சொக்கநாதர்
58. திருவருட்பா நூலில் உள்ள " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் " என்ற பாடல் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது ?
A) துகிலுரிதல் படலம்
B) மங்கலம்
C) கங்கைகாண் படலம்
D) பிள்ளைப்பெரு விண்ணப்பம்
59. சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்று தமிழைப் புகழ்ந்தவர் யார் ?
A) குமரிலபட்டர்
B) ச.அகத்தியலிங்கம்
C) வள்ளலார்
D) ஈராஸ் பாதிரியார்
60. சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன், இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் இகழ்ந்தவர் யார் ?
A) வள்ளலார்
B) திருஞான சம்பந்தர்
C) தாயுமானவர்
D) மாணிக்க வாசகர்
61. தமிழ்மொழியே இறவாத நிலைதரும் என்ற பெருந்தகை யார் ?
A) தாயுமானவர்
B) திரு.வி.க
C) வள்ளலார்
D) திருநாவுக்கரசர்
62. கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார் இணையருக்கு மகனாகத் தோன்றிய தமிழ்ச்சான்றோர் யார் ?
B) பாரதிதாசன்
C) தாயுமானவர்
D) திரு.வி.க
63. கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்றவர் யார்?
A) தாயுமானவர்
B) சரவணப் பெருமாள்
C) வள்ளலார்
D) மாணிக்க வாசகர்
64. சென்னையில் உள்ள கந்த கோட்டத்து இறைவனைப் பற்றி பாடல்களின் தொகுப்பு?
A) சின்மய தீபிகை
B) ஒழிவிலொடுக்கம்
C) தொண்டைமண்டல சதகம்.
D) தெய்வமணிமாலை
65. அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே என்று பாடியவர் யார்?
A) அப்பூதியடிகள்
B) தாயுமானவர்
C) திருநாவுக்கரசர்
D) வள்ளலார்
66. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A) அஞ்சலையம்மாள்
B) பாரதியார்
C) அம்புஜத்தம்மாள்
D) திரு.வி.க
67. திரு.வி.க. மறைந்த நாள் ?
A) 13.09.1953
B) 19.07.1955
C) 18.07.1954
D) 17.09. 1953
68. மாயோன்மேய காடுறை உலகமும்
B) சேயோன்மேய - வைவரை
C) உலகமும் - உலகமும்
D) காடுறை - உலகமும்
69. பூக்களில் சிறந்த பூ என்று திரு.வி.க எந்த பூவைக் குறிப்பிடுகிறார்?
B) மல்லிகை
C) பருத்திப்பூ
D) வாழைப் பூ
70. உரிமை என்பது பிறர் கொடுப்பதுமன்று ; மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது என்றவர் யார்?
A) அண்ணல் அம்பேத்கர்
B) தந்தை பெரியார்
C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
D) பாரதியார்
71. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை யாது?
A) இயைபுத் தொடை
B) மோனைத் தொடை
C) முரண் தொடை
D) எதுகைத் தொடை
72. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை யாது?
A) இயைபுத் தொடை
B) மோனைத் தொடை
C) முரண் தொடை
D) எதுகைத் தொடை
73. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டத் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம்விளை யாடும் - இச்செய்யுளில் பயின்று வந்துள்ள தொடை யாது?
A) இயைபுத் தொடை
B) மோனைத் தொடை
C) முரண் தொடை
D) எதுகைத் தொடை
74. கூற்று( A) : திரு.வி.க தமது ஆசிரியர் பணியையும் துறந்தார்.
B) (A) சரி ஆனால் (B) தவறு
C) (B) சரி ஆனால் (A) தவறு
D) (A) & (B) இரண்டும் சரி மற்றும்(சு) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.
75. பொறுமையைப் பூணுங்கள், பொறுமையின் ஆற்றலை உணருங்கள், உணர்ந்து உலகை நோக்குங்கள் என்றவர் யார் ?
A) திரு.வி.க
B) டாக்டர் மு.வ
C) மறைமலையடிகள்
D) வையாபுரிப் பிள்ளை
76. திரு.வி.க என்ற பெயர் தமிழ் நெஞ்சங்களில் வாழும் பெயர் என்று கூறியவர் யார் ?
A) சி.பாலசுப்பிரமணியம்
B) பாரதிதாசன்
C) டாக்டர் மு.வ
D) அறிஞர் அண்ணா
77. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பாடியவர் யார்?
B) திரு.வி.க
C) வள்ளலார்
D) சுவாமி விபுலானந்தர்
78. அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று பாடியவர் யார்?
A) திகம்பர சாமியார்
B) ஆலய அந்தணர்
C) வள்ளலார்
D) உமறுப்புலவர்
79. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற நூலை இயற்றியவர் யார் ?
A) திருநாவுக்கரசர்
B) திரு.வி.க
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்க வாசகர்
80. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்குப் பொது என்று கூறியவர் யார் ?
A) பாரதியார்
B) திரு.வி.க
C) பாரதிதாசன்
D) தாயுமானவர்
81. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை யாது?
A) இயைபுத் தொடை
B) மோனைத் தொடை
C) முரண் தொடை
D) அளபெடைத் தொடை
82. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?
A) ஒரூஉ மோனை
B) பொழிப்பு மோனை
C) கூழைமோனை
D) இணைமோனை
83. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?
A) ஒரூஉ மோனை
B) பொழிப்பு மோனை
C) கூழைமோனை
D) இணைமோனை
84. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?
A) ஒரூஉ மோனை
B) பொழிப்பு மோனை
C) கூழைமோனை
D) இணைமோனை
85. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?
A) ஒரூஉ மோனை
B) பொழிப்பு மோனை
C) கீழ்க்கதுவாய் மோனை
D) இணைமோனை
86. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
B) பொழிப்பு மோனை
C) கீழ்க்கதுவாய் மோனை
D) முற்று மோனை
87. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) ஒரூஉ எதுகை
B) பொழிப்பு எதுகை
C) கூழை எதுகை
D) இணை எதுகை
88. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) ஒரூஉ எதுகை
B) பொழிப்பு எதுகை
C) கூழை எதுகை
D) இணை எதுகை
89. அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு. - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) ஒரூஉ எதுகை
B) பொழிப்பு எதுகை
C) கூழை எதுகை
D) இணை எதுகை
90. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) ஒரூஉ எதுகை
B) பொழிப்பு எதுகை
C) கூழை எதுகை
D) இணை எதுகை
91. அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) ஒரூஉ எதுகை
B) பொழிப்பு எதுகை
C) கூழை எதுகை
D) மேற்கதுவாய் எதுகை
92. தொடை என்பதன் பொருள் யாது?
A) தொடுக்கப்படுவது
B) மாலை
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை.
93. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைத் தொடை யாது?
A) கீழ்க்கதுவாய் எதுகை
B) முற்றெதுகை
C) கூழை எதுகை
D) மேற்கதுவாய் எதுகை
94. முதல், மூன்று, நாலாம் சீர்களில் மோனை ஒத்து வருவது.
A) முரண்
B) மேற்கதுவாய்
C) கீழ்க்கதுவாய்
D) கூழை
95. பொருத்துக.
1. கூழை - அ) 1,3,4 சீர்களில் வரும்.
2. மேற்கதுவாய் - ஆ) 1,2,3,4 சீர்களில் வரும்.
3. கீழ்க்கதுவாய் - இ) 1,2,3 சீர்களில் வரும்
4. முற்று - ஈ) 1,2,4 சீர்களில் வரும்.
1. 2. 3. 4.
A. இ அ ஈ ஆ
B. ஆ அ இ ஈ
C. ஆ ஈ அ இ
D. அ இ ஈ ஆ
96. "இளஞாயிறுகளே உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்கு மருந்து, அவ்வொளி வீசி எழுங்கள்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A) இளமை விருந்து
B) முருகன் அல்லது அழகு
C) முகுந்தமாலை
D) கதரின் வெற்றி
97. செந்தமிழ் நடையினை மக்கள் நடையாக மாற்றிய அதே நேரத்தில் தமிழ்மரபு கெடாது எழுதிய பேசிய பேரறிஞர் யார் ?
A) இரா.பி.சேதுப்பிள்ளை
B) வள்ளலார்
C) வையாபுரிப் பிள்ளை
D) திரு.வி.க
98. தமிழ்ச்சோலை என்ற நூலை இயற்றியவர் யார் ?
A) அருணாசல கவிராயர்
B) திரு.வி.க
C) வள்ளலார்
D) க.சச்சிதானந்தன்
99. திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது எழுத்தறியும் பெருமாள் மாலை என்னும் நூலை பாடியவர் யார் ?
A) தாயுமானவர்
B) திரு.வி.க
C) வள்ளலார்
‘D) திருநாவுக்கரசர்
100. அகத்தே கறுத்தப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தெ திருத்த என்று இறைவன் தம்மை வருவிக்க உள்ளதாக கூறியவர் யார் ?
A) தாயுமானவர்
B) திரு.வி.க
C) வள்ளலார்
D) திருநாவுக்கரசர்