19 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 19 (2022 New Syllabus) WITH ANSWER KEY PDF FREE DOWNLOAD - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 19 - விடையுடன் இலவச பதிவிறக்கம் - ஆறாம் வகுப்பு

TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 19 WITH ANSWER KEY 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 19 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

ஆறாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



2022 புதிய பாடத்திட்டம்

இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் வைக்கிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • ஏற்கனவே நம் இந்த வலைதளப் பக்கத்தில் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
  • இனிவரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் வினாக்கள் தொகுக்கப்பட்டு, வகுப்புகள் வாரியாகவும், முழு பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் முழு மாதிரி வினாத்தாள்கள் (Full Test) இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில், பதிவேற்றம் செய்யப்படும்.
  • இந்த பதிவில், 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி, ஆறாம் வகுப்பு புதிய மற்றும் பழைய பாடப் புத்தகத்திலிருந்து வினாக்கள்  தொகுக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் அடிப்படையிலும், பாடத்திட்டத்தில் இடம்பெறாத வினாக்கள் இதற்கு முன்பாக தேர்வுகளில் பாடப்புத்தகத்தில் இருந்து எவ்வாறு வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன என்ற முன் நிகழ்வுகளின் அடிப்படையிலும் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

MODEL QUESTION PAPER 19 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 

































DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download


மாதிரி வினாத்தாள் -19  👇


1. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்று பொருள்படும் நூல் எது ?

A) நீதிநெறி விளக்கம் 
B) பழமொழி நானூறு
C) ஆசாரக் கோவை 
D) விவேக சிந்தாமணி

2. மாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார் ?

A) பாவலரேறு 
B) பன்மொழிப் புலவர்
C) கவிஞரேறு 
D) ஆடலேறு

3. பாரதிதாசன் தம் கவிதைகளில் இதில் எந்த கருத்தை முன்மொழியவில்லை ?

A) பெண்கல்வி 
B) ஆணாதிக்க சிந்தனை
C) கைம்பெண் மறுமணம் 
D) பொதுவுடைமை

4. தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் என்று தமிழைப் பாடியவர் யார் ?

A) பாரதிதாசன் 
B) காசி ஆனந்தன்
C) அறிவுமதி 
D) வாணிதாசன்

5. தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே ! நீ தோன்றி வளர்ந்தாய் ! வாழி என்று பாடியவர் யார் ?

A) இளங்கோவடிகள் 
B) வாணிதாசன்
C) பாரதியார் 
D) கம்பர்

6. மருந்து என்ற சொல் முதலில் கையாளப்பட்ட நூல் எது ?

A) அகநானூறு 
B) புறநானூறு
C) தொல்காப்பியம் 
D) திருக்குறள்

7. உதித்த என்ற சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ?

A) மறைந்த 
B) நிறைந்த
C) குறைந்த 
D) தோன்றிய

8. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை எந்த விழாவாக கொண்டாடப்பட்டது ?

A) மகரசங்கராந்தி 
B) இந்திர விழா
C) இல்லுறை வழிபாடு விழா 
D) இவற்றில் எதுவுமில்லை

9. லோரி என்ற பெயரில் பொங்கல் திருவிழா நடைபெறும் மாநிலம் எது ?

A) உத்திர பிரதேசம் 
B) ஆந்திரா
C) குஜராத் 
D) பஞ்சாப்

10. தவறான கூற்றினைக் காண்க

A) இரதத் கோவில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது
B) தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கூடமாக மாமல்லபுரம் திகழ்கிறது
C) கலைகளின் புகலிடம் என தாரசுரம் ஐராதீஸ்வரர் கோவில் அழைக்கப்படுகிறது
D) நால்வகைச் சிற்பங்களும் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது

11. மயங்கொலி எழுத்துகள் எத்தனை?

A) ஐந்து 
B) ஏழு
C) ஆறு 
D) எட்டு

12. மோப்பக் குழையும் அனிச்சம் ---------
நோக்கக் குழையும் விருந்து - இக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைக் காண்க.

A) விருந்து 
B) மலர்திரிந்து
C) உணவு 
D) முகந்திரிந்து

13. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைச் சொற்கள் ?

A) உள்ளுவது - தள்ளுவது 
B) உள்ளுவது - உயர்வுள்ளல்
C) மற்றது - நீர்த்து 
D) தள்ளுவது - உயர்வுள்ளல்

14. "ஊக்கமது கைவிடேல்" என்ற ஔவையாரின் வரியோடு தொடர்புடைய திருக்குறள் எது ?

A) விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் அன்று
B) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
C) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்
D) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

15. எக்களிப்பு என்ற சொல்லின் பொருள்?
A) மகிழ்ச்சி 
B) பெருமகிழ்ச்சி
C) கழுத்து 
D) உணவு

16. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் யார் ?

A) அறிஞர் அண்ணா 
B) புவியரசு
C) புலவரேறு 
D) முடியரசன்

17. பொருந்தாத சொல்லைக் கண்டறிக ?

A) எயிற்றியர் 
B) உழத்தியர்
C) பரதர் 
D) எயினர்

18. தொழில்பாடல் எது ?

A) கும்மி 
B) ஒப்பாரி
C) தாலாட்டு 
D) ஓடப்பாட்டு

19. பொருத்துக

1. அருகு - அ) தாள்
2. வரகு - ஆ) மடல்
3. மல்லி - இ ) புல்
4. சப்பாத்திக்கள்ளி - ஈ) தழை

       1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. இ அ ஈ ஆ

20. நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலை எழுதியவர் யார் ?

A) சு.சக்தி வேல் 
B) சு.வெங்கடேசன்
C) வானமாமலை 
D) கி.ராஜநாராயணன்

21. பொருத்துக

1. விடிவெள்ளி - அ) ஊஞ்சல்
2. மணல் - ஆ) விளக்கு
3. புயல் - இ) பஞ்சுமெத்தை
4. பனிமூட்டம் - ஈ) போர்வை

       1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ அ ஈ
D. அ இ ஈ ஆ

22. தாழம்பூ எந்த நிலத்திற்குரிய பூ ?

A) குறிஞ்சி 
B) முல்லை
C) மருதம் 
D) நெய்தல்

23. பொன்னொடு வந்து கரியோடு பெயரும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ?

A) நெடுந்தொகை 
B) வஞ்சி நெடும்பாட்டு
C) முல்லைப்பாட்டு 
D) கலித்தொகை

24. இவற்றில் எது பண்டைக்காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை ?

A) துகில் 
B) கண்ணாடி
C) கற்பூரம் 
D) பட்டு

25. தமிழக வணிகரை நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்று பாடிய நூல் எது ?

A) பட்டினப்பாலை 
B) புறநானூறு
C) அகநானூறு 
D) நெடுநல்வாடை

26. அகச்சுட்டு எது?

A) அவன் 
B) அந்நீர்விழ்ச்சி
C) இம்மலை 
D) இந்நூல்

27. சேய்மைச் சுட்டு அல்லாதது எது ?

A) அவ்வீடு 
B) அம்மரம்
C) அசை 
D) இவ்வீடு

28. இவற்றில் சுட்டுத் திரிபு எது ?

A) இம்மரம் 
B) இந்த வீடு
C) இவ்வீடு 
D) இது

29. புறவினா எது ?

A) எது 
B) அவனா
C) யார் 
D) எப்படி

30. சரியான கூற்றினை கண்டறிக ?

A) வினா எழுத்துகளில் முதலில் வருபவை - ஆ, ஓ
B) வினா எழுத்துகளில் இறுதியில் வருபவை - எ, யா
C) வினா எழுத்துகள் - எ, யா, ஆ, ஓ, ஏ
D) மொழி முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் - ஓ

31. தாராபாரதியின் இயற்பெயர் ?

A) இராமு வசந்தன் 
B) இராம கோபாலன்
C) இராமகிருஷ்ணன் 
D) இராதாகிருஷ்ணன்

32. பொருத்துக

1. காமராசர் - அ) ஆசிரியர் தினம்
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் - ஆ) மாணவர் தினம்
3. அப்துல்கலாம் - இ ) குழந்தைகள் தினம்
4. விவேகானந்தர் - ஈ) கல்வி வளர்ச்சி நாள்
5. ஜவஹர்லால் நேரு - உ) தேசிய இளைஞர் தினம்


       1. 2. 3. 4. 5.
A. உ ஆ இ ஈ அ
B. ஈ இ அ உ ஆ
C. ஈ அ ஆ இ உ
D. ஈ அ ஆ உ இ

33. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) Kowledge of realting  - மெய்யுணர்வு
B) Patriotism - நாட்டுப்பற்று
C) Escalator - மின்படிக்கட்டு
D) Mercy - பெருங்கோபம்

34. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதி எந்த நூலைக் குறிப்பிட்டார் ?

A) திருக்குறள் 
B) பகவத் கீதை
C) திரிகடுகம் 
D) திருப்பாவை

35. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ?

A) வைகைக் கரை 
B) காவிரிக் கரை
C) கங்கைக் கரை 
D) யமுனைக் கரை

36. இந்திய நாட்டின் சொத்து என காந்தியால் புகழப்பட்டவர் யார் ?

A) பாரதிதாசன் 
B) திரு.வி.க
C) இராஜாஜி 
D) பாரதியார்

37. ஜி.யு. போப்பின் எந்த படைப்பு காந்தியை வெகுவாகக் கவர்ந்தது ?

A) தமிழ்க்கையேடு
B) திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு
C) திருக்குறள் ஆங்கி மொழிபெயர்ப்பு
D) இவற்றில் எதுவுமில்லை

38. இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ்கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என காந்தியடிகள் யாரைக் குறிப்பிட்டார் ?

A) திரு.வி.க 
B) தந்தை பெரியார்
C) உ.வே.சாமிநாதர் 
D) சி. இலக்குவனார்

39. கவி ஞாயிறு என்று சிறப்பிக்கப்படுபவர் யார் ?
A) தேவநேயப் பாவாணர் 
B) தாராபாரதி
C) பரிதிமாற் கலைஞர் 
D) குணங்கடி மஸ்தான் சாகிபு

40. பழந்தமிழர் உலோகக் கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்குவது எது?

A) தில்லை நடராசர் செப்புத் திருமேனி
B) கூரம் நடராசர் செப்புத் திருமேனி
C) தாராசுரம் ஐராதீசுவரர் கோவில்
D) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

41. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ?

A) கொல்கத்தா 
B) சபர்மதி ஆசிரமம்
C) மதுரை 
D) டெல்லி

42. இராமலிங்க அடிகள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) இராமலிங்க அடிகள் கடலூர் மாவட்டம், மருதூர் என்னும் ஊரில் பிறந்தார்
B) இராமலிங்க அடிகளின் பாடல்கள் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.
C) அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக ஞானசபையை நிறுவினார்
D) பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலை அமைத்தார்.


43. வேலு நாச்சியாரை காட்டிக்கோடுக்க மறுத்ததால் ஆங்கிலேயரால் படுகொலை செய்யப்பட்டவர் யார் ?

A) குயிலி 
B) தாண்டவராயன்
C) உடையாள் 
D) நற்சேனை

44. அகர வரிசையில் அமைக்க
A. புஷ்பராகம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து
B. கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புஷ்பராகம்
C. பவளம், புஷ்பராகம், கோமேதகம், மாணிக்கம், முத்து
D. கோமேதகம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், முத்து

45. தந்தை பெரியார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
B) 1978 ஆம் ஆண்டு சமுதாய சீர்திருத்த செயல்பாடுகளுக்காக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது
C) கதர் அணிய வேண்டும் என்று பரப்புரை செய்தார்
D) மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்Dம் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.

46. நால்வகைச் சிற்பங்களுல் அல்லாத வகை எது

A. குடவரைக் கோவில்கள்
B. ஒற்றைக் கல் கோயில்கள்
C. கட்டுமானக் கோயில்கள்
D. குகைக் கனலிகள்


47. உ.வே.சாமிநாதய்யர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) உ.வே.சா 18 புராணங்களை பதிப்பித்துள்ளார்
B) உ.வே.சா தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் எழுதினார்.
C) உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என் சரிதம்.
D) உ.வே.சா வின் தமிழ்ப்பணிகளை ஜி.யு போப் மற்றும் சூலியல் வின்சோன் முதலிய வெளிநாட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.

48. காமராசருக்கு அரசு சார்பில் செய்யப்பட்ட சிறப்புகள் தொடர்பான தவறான கூற்று எது ?

A) சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
B) கன்னியாகுமரியில் காமராசருக்கு 02.10.2000 அன்று மணிமண்டபம் அமைக்கப்பட்டது
C) நடுவண் அரசு 1978-ல் பாரதரத்னா விருது வழங்கியது
D) மதுரை பல்கலைகழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.


49. யாருக்கு எஸ்.ஆர் அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது?

A) சிறந்த தொல்பொருள் ஆய்வாளருக்கு
B) சிறந்த அறிவியல் அறிஞருக்கு
C) சிறந்த நூலகர்களுக்கு
D) சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு


50. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது ?

A) கல்வி 
B) மஞ்சள்
C) வந்தான் 
D) தம்பி

51. தவறான சொல்லைக் காண்க ?

A) கண்டான் 
B) நண்டு
C) வென்ரான் 
 D) வண்டு

52. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?

A) தமிழ்நாடு 
B) இலங்கை
C) மலேசியா 
D) சீனா

53. பொருத்துக

1. சிறந்த ஊர் - அ) குப்பம்
2. கடற்கரை நகரம் - ஆ) பாக்கம்
3. கடற்கரை சிற்றூர் - இ) புரம்
4. நெய்தல் நிலம் - ஈ) பட்டினம்

       1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. அ இ ஈ ஆ

54. காமராசரை கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார் ?

A) இந்திராகாந்தி 
B) அறிஞர் அண்ணா
C) தந்தை பெரியார் 
D) இவர்களில் எவருமிலர்

55. யாருடைய பாடல்கள் தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுகிறது.

A) வள்ளலார் 
B) மாணிக்கவாசகர்
C) தாயுமானவர் 
D) பெரியாழ்வார்

56. லெபனான் நாட்டைச் சேர்ந்த கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து தீர்க்கதரிசி என்னும் நூலாகத் தந்தவர் யார் ?

A) கரந்தைக் கவியரசு 
B) புவியரசு
C) கவிமணி 
D) கவியரசு

57. மணிமேகலையில் குறிப்பிடப்படும் பசுவின் முகம் போன்ற குளம் எங்குள்ளது ?

A) இலட்சத் தீவு 
B) பூம்புகார்
C) மணிபல்லவத்தீவு 
D) கொற்கை

58. உப பாண்டவம், கதா விலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?

A) இராதாகிருஷ்ணன் 
B) எஸ்.இராமகிருஷ்ணன்
C) உடுமலை நாராயணகவி 
D) இராஜாஜி

59. மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் யார் ?

A) சித்திரை 
B) ஆதிரை
C) காயசண்டிகை 
D) தீவதிலகை

60. கும்பி என்ற சொல்லின் பொருள்

A) பானை 
B) நீர்க்குடம்
C) வயிறு 
D) அரியாசனம்

61. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது ?

A) ஜவஹர்லால் நேரு 
B) கவிமணி
C) புத்தர் 
D) அம்பேத்கர்

62. மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு என்று கூறியவர் யார் ?

A) கருமுத்து தியாகராசர் 
B) பாரதிதாசன்
C) மயிலை. சீனி. வேங்கடசாமி 
D) அப்துல் ரகுமான்

63. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர் யார் ?

A) தாயுமானவர் 
B) வள்ளலார்
C) மாணிக்க வாசகர் 
D) திருநாவுக்கரசர்

64. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர் ?

A) அன்னை தெரசா 
B) புத்தர்
C) கண்ணதாசன் 
D) பெருஞ்சித்திரனார்

65. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தை குழந்தைகளின் கண்கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்றவர் யார் ?

A) ஜவஹர்லால் நேரு
B) கைலாஷ் சத்யார்த்தி
C) அப்துல்கலாம்
D) இவர்களில் எவருமிலர்

66. உத்தராயன் விழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?
A) மகாராஸ்டிரா 
B) பஞ்சாப்
C) இராஜஸ்தான் 
D) கர்நாடகா

67. உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல் என்றவர் யார் ?

A) திருவள்ளுவர் 
B) இளங்கோவடிகள்
C) கம்பர் 
D) சீத்தலைச் சாத்தனார்

68. இந்திய நூலக அறிவியலின் தந்தை ?

A) ஆனந்தரங்கன் 
B) விஸ்வேஸ்வரய்யா
C) இரா.அரங்கநாதன் 
D) அப்துல்கலாம்

69. தாராசுரம் கோவிலின் விமானமும் மண்டபமும் எதனைக் காட்டுவதாக
கார்ல் சேகன் என்பவர் கூறுகிறார் ?

A) தமிழர் கலைத்திறன்
B) வான்வெளி இரகசியம்
C) கவித்திறன்
D) அழகியல்

70. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
B) பிறந்த ஊர் - செங்கப்படுத்தான் காடு
C) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1956 வரை
D) உழைக்கும் மக்களின் துயரங்களையும், பொதுவுடைமை சிந்தனைகளை தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கினார்

71. பொருத்துக

1. படிறு - அ) அன்பு
2. ஈரம் - ஆ) வறுமை
3. துவ்வாமை - இ) விருப்பம்
4. அமர் - ஈ) வஞ்சம்

        1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ ஈ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. அ இ ஈ ஆ

72. விடுதலைப் போர் கடுமையாக இருந்த நாட்களில் ஆங்கில அரசு தென்னிந்தியாவில் யாருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது?

A) முத்துராமலிங்கர் 
B) திலகர்
C) பாரதியார் 
D) வ.உ.சி

73. தனியொரு மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது. புத்தகங்களில் மனிதர்களின் ஏராளமான பட்டறிவுச் சிந்தனைகள் அடங்கியுள்ளன. அவற்றை வாசிக்கும் போது, நாம் வசிக்கும் சிறு முலையிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறியவர் யார் ?

A) தந்தை பெரியார் 
B) முத்துராமலிங்கர்
C) நேரு 
D) இராமலிங்க அடிகள்

74. பொருத்துக
1. சொலவடை - அ) பாலைநிலம்
2. அரையன் - ஆ) பெண்கள்
3. வன்பால் - இ) பழமொழி
4. மின்னார் - ஈ) அரசன்

        1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ உ அ ஆ
C. இ ஈ அ ஆ
D. அ இ ஈ ஆ

75. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் உலகின் மிகச்சிறந்த நூல்களுன்
ஒன்று என்று எந்த நூலைக் குறிப்பிடுகிறார் ?

A) சாகுந்தலம் 
B) போரும் அமைதியும்
C) கம்பராமாயணம் 
D) திருக்குறள்

76. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என அழைக்கப்படுவது எது ?

A) பள்ளு 
B) குறவஞ்சி
C) உலா 
D) தூது

77. மே தினமே வருக என்ற நூலை எழுதியவர் யார் ?

A) கவிஞர் தமிழ் ஒளி 
B) பூவரசு
C) வெ.இறையன்பு 
D) மலர்மன்னன்

78. ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காந்தியடிகள் ஆலோசனை
கூட்டத்தை நடத்திய இடம் ?

A) காமராசரின் வீடு
B) தீரர் சத்தியமூர்த்தியின் வீடு
C) இராஜாஜியின் வீடு
D) சர்தார் வல்லபாய்பட்டேல் வீடு

79. பொருத்துக

1. அழகின் சிரிப்பு - அ) பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் - ஆ) கோமல் சுவாமிநாதன்
3. தண்ணீர் தேசம் - இ) வைரமுத்து
4. வாய்க்கால் மீன்கள் - ஈ) வெ.இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும்- உ) மா.கிருஷ்ணன்

       1. 2. 3. 4. 5.
A. ஈ இ ஆ அ உ
B. ஆ அ இ ஈ உ
C. ஆ ஈ அ இ உ
D. அ இ ஈ ஆ உ

80. தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார் ?

A) தாராபாரதி
B) வைரமுத்து
C) ஈரோடு தமிழன்பன்
D) கவிஞர் அறிவுமதி

81. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார் ?

A) மு.மேத்தா
B) நெல்லை.சு.முத்து
C) விவேக்
D) மயில்சாமி அண்ணாதுரை

87. ஆசாரக் கோவையை இயற்றிய பெருவாயின் முள்ளியார் பிறந்த இடம் ?

A) வண்கயத்தூர் 
B) மருதூர்
C) தண்டலம் 
D) சிக்கல்

83. பொருத்துக

1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ) அ.தட்சிணா மூர்த்தி
2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - ஆ) மா. இராச மாணிக்கனார்
3. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - இ) கா. ராஜன்
4. தொல்லியல் நோக்கில் சங்க காலம் - ஈ) சு.வித்யானந்தன்
5. தமிழர் சால்பு - உ) க.ரத்னம்

       1. 2. 3. 4. 5.
A. ஈ இ ஆ அ உ
B. ஆ அ இ ஈ உ
C. அ ஆ உ இ ஈ
D. அ இ ஈ ஆ உ

84. சேரிடம் அறிந்து சேர் எனும் ஆத்திச்சூடி கருத்தை எதிர்மறையில் உணர்த்தும் திருக்குறள் எது

A. பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
B. இனனும் அறிந்து யாக்க நட்பு
C. கொடுத்துங் கொளல் வேண்டும் நட்பு
D. கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளிDம் உள்ளஞ்சுடும்

85. ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று தாம் இயற்றிய ஒரு கவிதை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டவர் யார் ?

A) கண்ணதாசன் 
B) வாணிதாசன்
C) ரா.பி. சேதுப்பிள்ளை 
D) ஈரோடு தமிழன்பன்

86. பறவைகள் இடம்பெயர அடிப்படையாக அமைவது ?

A) நிலவு 
B) விண்மீன்
C) புவி ஈர்ப்புப் புலம் 
D) இவை அனைத்தும்

87. தவறான கூற்று எது ?

A. ஞ வரிசையில் வரும் மொழி முதல் எழுத்து - ஞ, ஞா, ஞெ, ஞௌ
B. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்
C. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது
D. அளபெடை அல்லாத சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வரும்.

88. திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்த புலவர் யார் ?

A) குமரகுருபரர் 
B) தாயுமானவர்
C) காளமேகப் புலவர் 
D) பாரதியார்

89. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) அக்கினிச் சிறகுகள் - அப்துல்கலாம்
B) மின்மினி - ஆயிஷா நடராஜன்
C) கடல்புறா - ந.காமராசன்
D) ஏன், எதற்கு, எப்படி - சுஜாதா

90. தவறான இணையை கண்டறிக
A) திருக்குறள் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1816
B) திருக்குறளில் இடம்பெறம் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
C) திருக்குறளிர் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
D) திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

91. நாலடியாரை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என பகுத்து உரை கண்டவர் யார்?

A) பரிமேலழகர் 
B) மணக்குடவர்
C) நச்சினார்க்கினியர் 
D) தருமர்

92. தனிப்பாடல் திரட்டினை தொகுப்பித்தவர் யார் ?

A) பொன்னுசாமி 
B) பாண்டித்துரை தேவர்
C) சந்திரசேகர கவிராசப் பண்டிதர் 
D) சடையப்ப வள்ளல்

93. உயிர்மெய் எழுத்துகள் ----------- வகையில் அடங்கும்

A) சுட்டெழுத்து 
B) சார்பெழுத்து
C) முதல் எழுத்து 
D) இவற்றில் எதுவுமில்லை.

94. உலகத் தாய்மொழி நாள் ?

A) ஜனவரி 28 
B) மார்ச் 16
C) ஏப்ரல் 21 
D) பிப்ரவரி 21

95. பொருத்துக

1. திரிபுராந்தகன் - அ) மீனாட்சி
2. கஜசம்ஹார மூர்த்தி - ஆ) அண்ணாமலையார்
3. லிங்கோத்பவர் - இ ) யானை உரி போர்த்தவர்
4. அங்கயற்கண்ணி - ஈ) முப்புரம் எரித்தவன்

       1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. ஈ இ ஆ அ

96. முத்துராமலிங்கர் தொடர்பான தவறான கூற்று எது ?

A. நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
B. சமபந்தி முறைக்கு ஊக்கமளித்தார்.
C. ஆங்கில அரசின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராடினார்.
D. பாலகங்காதர திலகர் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்

97. தமிழ்க்கும்மி பாடலை இயற்றியவர் யார் ?

A) அ.தட்சிணாமூர்த்தி 
B) பெருஞ்சித்திரனார்
C) கா.ராஜன் 
D) சு.வித்யானந்தன்

98. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழ்த் தாயைப் பற்றி பாடியவர் யார் ?

A) பாரதியார் 
B) பாரதிதாசன்
C) அப்துல் ரகுமான் 
D) அறிஞர் அண்ணா

99. வியன் புலம் என்னும் இலக்கிய இதழை நிறுவியவர் யார்

A) கண்ணதாசன் 
B) திரு.வி.கலியாண சுந்தரனார்
C) துரை ஜெயப்பிரகாஷ் 
D) உ.வே.சாமிநாதய்யர்

100. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்?

A) குழந்தைகள் உரிமை நல இயக்கம்
B) குழந்தைகளை பாதுகாப்போம் இயக்கம்
C) குழந்தைகள் காப்பகம்
D) சிப்கோ இயக்கம்

Download All Model question Paper Click Here > DOWNLOAD

FOR ONLINE TEST CLICK HERE >  CLICK HERE  


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post