TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 16 WITH ANSWER KEY
Free download
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 16
விடையுடன் இலவச பதிவிறக்கம்
2022 புதிய பாடத்திட்டம்
மாதிரி வினாத்தாள் 16-க்கான பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்
2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.
4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 1)
மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 2)
மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 3)
மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 4)
மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)
மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)
மாதிரி வினாத்தாள்- 16 (200 வினாக்கள்)
1. ஒர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது எத்தொடர் ?
A) கலவைத் தொடர்
B) தொடர்நிலைத் தொடர்
C) தனிநிலைத் தொடர்
D) இவற்றில் எதுமில்லை
2. ஒரு தனி சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது எத்தொடர் ?
A) கலவைத் தொடர்
B) தொடர்நிலைத் தொடர்
C) தனிநிலைத் தொடர்
D) இவற்றில் எதுமில்லை
3. நினைவாற்றலை வளர்த்துக் கொள்க - எவ்வகைத் தொடர் ?
A) செய்வினைத் தொடர்
B) செயப்பாட்டுவினைத் தொடர்
C) கட்டளைத் தொடர்
D) வியங்கோள் தொடர்
4. செய்வினை தொடரை செயப்பாட்டு வினை தொடராக மாற்றுதல் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.
A) எழுவாயைச் செயப்படுபொருளாக்குதல் வேண்டும்.
B) செயப்படுபொருளுடன் மன்றாம் வேற்றுமை உருபை சேர்த்தல் வேண்டும்.
C) எழுவாயுடன் படு, பட்டது என்னும் துணைவினை சேர்த்தல் வேண்டும்
D) செயப்படு பொருளில் உள்ள ஐ என்ற வேற்றுமை உருபை நீக்கி எழுவாயாக மாற்றுதல் வேண்டும்
5. குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது - எவ்வகை தொடர் எனக் கண்டறிக ?
A) தொடர்நிலைத் தொடர்
B) கலவைத் தொடர்
C) செயப்பாட்டுவினைத் தொடர்.
D) வினாத் தொடர்
6. எவ்வகைத் தொடர் என அறிக - உழைப்பின்றி ஊதியம் இல்லை
A) வினாத் தொடர்
B) எதிர்மறைத் தொடர்
C) கட்டளைத் தொடர்
D) உடன்பாட்டுத் தொடர்
7. எவ்வகைத் தொடர் என கண்டறிக - தென்னை மரத்துக்கு கிளைகள் இல்லை.
A) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்
B) வினாத் தொடர்
C) உடன்பாட்டுத் தொடர்
D) எதிர்மறைத் தொடர்
8. "கதிர்வேல் வெற்றிலை தின்றான்" என்ற தொடர் எதற்கு பொருத்தமுடையதாக இருக்கும் ?
A) அடுக்குத் தொடர்
B) பொருளாகுபெயர்
C) இனங்குறித்தல்
D) காரியவாகு பெயர்
9. வினைமுற்றுத் தொடரை பெயரெச்சத் தொடராக மாற்றுக - அப்பா சினம் கொண்டார்
A) சினம் கொண்டா அப்பா
B) சினம் கொண்ட அப்பா
C) அப்பா கொண்டாரா சினம்
D) கொள்வரோ சினம் அப்பா
10. எவ்வகைத் தொடர் எனக் காண்க - மைதிலி வந்தனள் பாடினள்.
A) வினையெச்சத் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) முற்றெச்சத் தொடர்
D) பெயரெச்சத் தொடர்
11. எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக - நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை.
A) கலவைத் தொடர்
B) தொடர்நிலைத் தொடர்
C) வினாத்தொடர்
D) செய்வினைத் தொடர்
12. எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக - மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
A) செய்வினைத் தொடர் மற்றும் எதிர்மறைத் தொடர்
B) செய்வினைத் தொடர் மற்றும் தன்வினைத் தொடர்
C) செய்தித் தொடர் மற்றும் கலவைத் தொடர்
D) செய்வினைத் தொடர், தன்வினைத் தொடர் மற்றும் செய்தித் தொடர்
13. எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக - உலகத் தமிழ்மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டது.
A) வினாத் தொடர்
B) பிறவினைத் தொடர்
C) செயப்பாட்டுவினைத் தொடர்
D) செய்வினைத் தொடர்
14. எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக - பாத்திமா திருக்குறள் கற்றாள்
A) தன்வினைத் தொடர்
B) செய்வினைத் தொடர்
C) A மற்றும் B
D) வினையெச்சத் தொடர்
15. ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிமைறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் இடப்படுவது ?
A) அரைப்புள்ளி
B) காற்புள்ளி
C) முக்காற்புள்ளி
D) முற்றுப்புள்ளி
16. எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக - மாறன் திருக்குறள் கற்பித்தான்
A) எதிர்மறைத் தொடர்
B) கலவைத் தொடர்
C) பிறவினைத் தொடர்
D) தொடர்நிலைத் தொடர்
17. "உடம்பிடை தோன்றிய றொன்றை அறுந்ததின்" என்ற வரியின் மூலம் அறியப்படும் செய்தி எது ?
A) பண்டைக்கால அறிவியல்
B) பண்டைக்கால வானியல்
C) பண்டைக்கால அறுவை மருத்துவம்
D) பண்டைக்கால சோதிடம்
18. "ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்கு கதிர் விடூம் நலங்கெழ மணிகளும்" என்ற வரிகள் மூலம் அறியப்படும் பண்டைத் தமிழரின் அறிவு எது?
A) வானியல் அறிவு
B) நீரியல் அறிவு
C) அறிவியல் அறிவு
D) கனிமவியல் அறிவு
19. பண்டைத் தமிழர் மண்ணை செம்மண், களர்நிலம் மற்றும் உவர்நிலம் என எதன் அடிப்படையில் பிரித்தனர் ?
B) சுவை
C) தன்மை
D) இவையனைத்தும்
20. வாக்கிய வகை அறிக - நாடகக் கலைஞர்கள் நாட்டுப் பற்றை வளர்த்தனர்.
B) நேர்கூற்றுத் தொடர்
C) செயப்பாட்டு வினைத் தொடர்
D) எதிர்மறைத் தொடர்
21. வாக்கிய வகை அறிக - இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது
A) செய்வினைத் தொடர்
B) நேர்கூற்றுத் தொடர்
C) செயப்பாட்டு வினைத் தொடர்
D) தொடர்நிலைத் தொடர்
22. வாக்கிய வகை அறிக - திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
A) செய்வினைத் தொடர்
B) செய்தித் தொடர்
C) தனிநிலைத் தொடர்
D) இவையனைத்தும்
23. நேர்கூற்றுத் தொடர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக
B) தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
C) தன்மை முன்னிலைப்பெயர்கள் படர்க்கை பெயர்களாக மாறும்
D) நேற்று, இன்று, நாளை எனக் காலப்பெயர்களும் வரும்
24. நீ விஜய் சேதுபதியை பாராட்டினாய் - வாக்கிய வகை அறிக
A) செய்வினை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) தொடர் வாக்கியம்
D) எதிர்மறை வாக்கியம்
25. தேவாரம் மூவரால் பாடப்பட்டது - வாக்கிய வகை அறிக
A) செய்வினை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) தொடர் வாக்கியம்
D) எதிர்மறை வாக்கியம்
26. சரிதாபானு நன்கு படித்தாள்
A) தன்வினை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) பிறவினை வாக்கியம்
D) எதிர்மறை வாக்கியம்
27. பொருத்துக
A. Ferries - 1) கலப்படம்
B. Voyage - 2) பயணப்படகுகள்
C. Adulteration - 3) பண்டம்
D. Commodity - 4) கடற்பயணம்
a. b. c. d.
A. 1 3 4 2
B. 3 1 4 3
C. 2 4 1 3
D. 2 1 4 3
28. முதலமைச்சர் கோட்டையில் கொடியேற்றினார் - வாக்கியவகை அறிக
A) பிறவினை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) செய்தி வாக்கியம்
D) எதிர்மறை வாக்கியம்
29. வயலில் மாடுகள் மேய்ந்தில - வாக்கியவகை அறிக
A) பிறவினை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) செய்தி வாக்கியம்
D) எதிர்மறை வாக்கியம்
30. கனிமொழி வேலை செய்யாமல் இல்லை - வாக்கியவகை அறிக
A) எதிர்மறை வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) உடன்பாட்டு வாக்கியம்
D) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
31. ஐயோ அப்பா அடிப்பாரே ! - வாக்கியவகை அறிக
A) உணர்ச்சி வாக்கியம்
B) செயப்பாட்டு வினை வாக்கியம்
C) உடன்பாட்டு வாக்கியம்
D) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
32. நீயும் நானும் வீட்டைக் கட்டினோம் - வாக்கியவகை அறிக
A) உணர்ச்சி வாக்கியம்
B) தனி வாக்கியம்
C) தொடர் வாக்கியம்
D) கலவை வாக்கியம்
33. "கர்நாடக அரசே காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடு அதுவே நியாயம்" என்று தமிழன மக்கள் கூறினர் - வாக்கிய வகை அறிக.
A) வினா வாக்கியம்
B) தனி வாக்கியம்
C) தொடர் வாக்கியம்
D) கலவை வாக்கியம்
34. மாண்புமிகு முதலமைச்சர் பாரத பிரதமரை கண்டார்; கோரிக்கை மனுவை அளித்தார்; கோட்டைக்கு திரும்பினார் - வாக்கியவகை அறிக
A) விழைவு வாக்கியம்
B) தனி வாக்கியம்
C) தொடர் வாக்கியம்
D) கலவை வாக்கியம்
35. "ஆம், அவன் நல்லவன் அல்லன்" இவ்விடைக்கேற்ற வினைவை தேர்ந்தெடு
B) அவன் எப்பொழுது நல்லவன்?
C) அவன் நல்லவன் இல்லையா?
D) நான் நல்லவனா இல்லையா என்று சொல்?
36. திண்டுக்கல் ஆலோசனைக் கூட்டத்தில் வேலுநாச்சியாருடன் ஆலோசனையில் இடம்பெற்றிருந்தவர்கள் யார் ?
1. அமைச்சர் தாண்டவராயன்
2. தளபதி பெரிய மருது
3. தளபதி சின்னமருது
4. குறுநில மன்னர்கள்
5. ஹைதர் அலி
A) 1,2,3 மற்றும் 4 மட்டும்
B) 1 மற்றும் 2 மட்டும்
C) 1, 2, 4 மட்டும்
D) 1, 2, 3, 4 மற்றும் 5
37. அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறியவர் யார் ?
A) திருமூலர்
B) மாணிக்கவாசகர்
C) திருவள்ளுவர்
D) திருநாவுக்கரசர்
38. இயற்கையோடு இணைந்த வாழ்வினை மேற்கொண்டோர் யார்?
A) கிரேக்கர்
B) அமெரிக்கர்
C) யவனர்
D) தமிழர்
39. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்ற பாடலடி இடம்பெற்ற நூல் ?
A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) தேவாரம்
D) நாலடியார்
40. உலகம் உருண்டை என மேலை நாட்டினர் உறுதி செய்த காலம் ?
A) 14 ஆம் நூற்றாண்டு
B) 15 ஆம் நூற்றாண்டு
C) 16 ஆம் நூற்றாண்டு
D) 17 ஆம் நூற்றாண்டு
41. திருவாசகம் மூலம் தமிழரின் எந்த அறிவு வெளிப்படுகிறது ?
A) மொழி
B) வானியல்
C) ஆன்மவியல்
D) இவற்றில் எதுவுமில்லை
42. உலவு எனும் அடிச்சொல் மூலம் பிறந்த சொல் ?
A) உலோகம்
B) லோகம்
C) உழவு
D) உலகம்
43. சுற்றுதல் எனும் பொருளை உணர்த்தும் சொல் ?
A) உலவு
B) உலா
C) உழவு
D) உலந்து
44. ஞால் என்னும் அடிச்சொல்லால் உருவான தமிழ்ச்சொல் ?
A) ஞாலம்
B) தொங்குதல்
C) உலகம்
D) இவை எதுவுமில்லை
45. வறிது நிலைஇய காயமும் எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது ?
A) நற்றிணை
B) புறநானூறு
C) குறுந்தொகை
D) அகநானூறு
46. வலவன் ஏவா வானூர்தி எனும் தொடரால் உணரப்படும் பொருள் ?
A) இயந்திரப் பொறி
B) வானூர்தி
C) மரபொம்மை
D) இவை எதுவுமில்லை
47. வலவன் ஏவா வானூர்தி எனும் தொடர் இடம்பெறும் நூல் ?
A) கலித்தொகை
B) குறுந்தொகை
C) புறநானூறு
D) நற்றிணை
48. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த எனும் பாடலடி இடம்பெற்ற நூல் எது ?
A) கலித்தொகை
B) பதிற்றுப்பத்து
C) புறநானூறு
D) நற்றிணை
49. எந்திரயானை பற்றிக் குறிப்பிடும் தமிழ்க்காப்பியம் எது ?
A) சிலப்பதிகாரம்
B) பெருங்கதை
C) மணிமேகலை
D) சீவகசிந்தாமணி
50. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் பற்றி குறிப்பிடும் நூல் ?
A) பெருங்கதை
B) சீவகசிந்தாமணி
C) மணிமேகலை
D) இவற்றில் எதுவுமில்லை
51. "ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்கு கதிர் விடூம் நலங்கெழ மணிகளும்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) குறுந்தொகை
D) பெருங்கதை
52. செம்மண் என்பது எந்த அடிப்படையிலான வகைப்பாடு ?
A) நிறம்
B) சுவை
C) தன்மை
D) இவற்றில் எதுவுமில்லை
53. பயவாக் களரனையர் கல்லாதவர் எனும் திருக்குறள் வரிகள் மூலம் உணரப்படும் நிலம் ?
B) களர்நிலம்
C) செந்நிலம்
D) இவை அனைத்தும்
54. செம்புலப் பெயல் நீர்போல எனும் அடி இடம்பெறும் நூல் எது ?
A) குறுந்தொகை
B) அகநானூறு
C) கலித்தொகை
D) புறநானூறு
55. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா என்ற வரிகள் எந்த நிலத்தைக் குறிக்கும் ?
A) பாலை நிலம்
B) குறிஞ்சி நிலம்
C) உவர் நிலம்
D) களர் நிலம்
56. அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என உரைத்தவர் யார் ?
A) ஔவையார்
B) கபிலர்
C) ஒட்டக்கூத்தர்
D) காளமேகப் புலவர்
57. ஒர் அணுவினைச் சதகூறிட்ட கோணிணும் உளன் என்ற பாடலைப் பாடியவர் ?
A) சீத்தலைச் சாத்தனார்
B) கம்பர்
C) கபிலர்
D) கணியன் பூங்குன்றன்
58. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் என்று கூறியவர் யார் ?
A) இளங்கோவடிகள்
B) திருமூலர்
C) காரியாசான்
D) திருவள்ளுவர்
59. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று பாடியவர் யார் ?
A) திருமூலர்
B) திருநாவுக்கரசர்
C) திருஞான சம்பந்தர்
D) இவர்களில் எவருமிலர்
60. தமிழரின் அறுவை மருத்துவம் பற்றி பேசும் நூல் ?
A) கம்பராமாயணம்
B) மணிமேகலை
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை
61. டிராய் போருடன் தொடர்புடையது எது ?
A) எந்திர யானை
B) எந்திர குதிரை
C) புட்பக விமானம்
D) இவை அனைத்தும்
62. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A) மணிமேகலை
B) சிலப்பதிகாரம்
C) திருக்குறள்
D) கம்பராமாயணம்
63. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A) வசிஸ்டர்
B) புலிப்பாணி
C) தேரையர்
D) போகர்
64. கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு தமிழரின் எந்த தொழில்நுட்பத்தை மெய்ப்பிக்கிறது ?
A) கணிதம்
B) வானியல்
C) மருந்தில்லா மருத்துவம்
D) அறுவை மருத்துவம்
65. புல்லாகிப் பூடாய் எனும் திருவாசக வரிகள் எதனை விவரிக்கிறது ?
A) உயிர்களின் பரிணாம வளர்ச்சி
B) அறுவை மருத்துவம்
C) வானியல் சாஸ்திரம்
D) இவற்றில் எதுவுமில்லை.
66. பண்டைக் காலத்தில் கரும்புகள் பிழிவதற்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருந்ததை எந்த நூல் குறிப்பிடுகிறது ?
A) புறநானூறு
B) கலித்தொகை
C) தொல்காப்பியம்
D) பதிற்றுப்பத்து
67. நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அக்காலத்தில் இருந்து இருக்கலாம் என்பதை எந்த நூல் வழியாக அறிய முடிகிறது?
A) சிலப்பதிகாரம்
B) பதிற்றுப்பத்து
C) குறுந்தொகை
D) பெருங்கதை
68. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - உணவு வாங்க உணவகத்துக்குப் போனான்.
A) உணவு பக்கமா ?
B) என்ன வாங்க உணவகம் போனான் ?
C) யாரெல்லாம் உணவகம் சென்றது ?
D) உணவு வாங்கினாயா ?
69. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - மாணவர்கள் போராட்டம் செய்தனர்
A) மாணவர்கள் செய்தது சரியா?
B) மாணவர்கள் எங்கே?
C) போராட்டம் எங்கே நடந்தது ?
D) மாணவர்கள் என்ன செய்தனர்?
70. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - அடுத்தது நம்ம ஆட்சி தான்
A) யாருடையது அடுத்த ஆட்சி ?
B) யார் அடுத்த ஆட்சி?
C) அடுத்தது யார் ஆட்சி?
D) அடுத்தது நம்ம ஆட்சியா ?
71. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - வளர்த்த கடா மார்பில் பாய்கிறது
A) உன் மார்பில் கடாவா பாய்ந்தது ?
B) எவன் மார்பில் பாய்ந்தது ?
C) வளர்த்த கடா எங்கே ?
D) எது மார்பில் பாய்கிறது ?
72. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - இப்போது அம்மா வந்து விடுவாள்
A) அம்மா வருவாளா ?
B) அம்மா எங்கு போனாள் ?
C) அம்மா எப்போது வருவாள் ?
D) அம்மா எங்கே ?
73. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - சாமந்தியின் நிறம் மஞ்சள்
A) சாமந்தியின் நிறம் என்ன ?
B) சாமந்தியின் நிறம் கருப்பா ?
C) சாந்தி எங்கே ?
D) சாமந்திக்கு நிறம் இருக்கா ?
74. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - தந்தை சொல்லைத் தட்டக் கூடாது
A) யார் சொல்லைத் தட்டக் கூடாது ?
B) தந்தை சொல்லை தட்டலாமா ?
C) தந்தை சொல் யாது ?
D) தந்தை என்ன சொன்னார் ?
75. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - நேற்று ஊட்டி போனேன்.
A) நீ நேற்று இங்கில்லையா ?
B) எங்கு சென்றாய் ?
C) நேற்று எங்கு போனாய் ?
D) Cருக்கு போனாயா ?
76. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - என் ஆசிரியர் எனக்கு நல்வழி கூறியுள்ளார்
A) உன் ஆசிரியரை உனக்கு பிடிக்குமா ?
B) உன் ஆசிரியர் உனக்கு என்ன கூறினார் ?
C) உன் ஆசிரியர் உனக்கு உதவுவாரா ?
D) உன் ஆசிரியர் யார் ?
77. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - பத்துப்பாட்டில் பத்து நூல்கள் உள்ளன.
A) பத்துப்பாட்டு எவை ?
B) பத்துப்பாட்டு என்றால் என்ன ?
C) பத்து நூல்கள் கொண்டது எவை ?
D) பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன ?
78. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - அறம் செய்ய விரும்பு
A) எதை செய்ய விரும்ப வேண்டும் ?
B) அறம் செய்ய வேண்டுமா ?
C) எவற்றை செய்தல் நல்லது ?
D) விருப்பமான செயல் அறமா ?
79. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - ஆம் இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது
A) இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா ?
B) எப்படி இரயில் புறப்பட்டது ?
C) இரயில் எப்பொழுது புறப்பட்டது ?
D) இரயில் சரியான நேரத்தில் புறப்படுமா ?
80. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - கோயில் மணி விழுந்து நொறுங்கியது
A) எப்படி விழுந்தது ?
B) கோயில் மணிக்கு என்னவாயிற்று ?
C) எது விழுந்து நொறுங்கியது ?
D) எந்த கோயில் மணி விழுந்து நொறுங்கியது ?
81. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்
A) செய்ய வேண்டிய பல்கலைகழகம் ?
B) நல்ல குடும்பம் எப்படி ?
C) நல்ல குடும்பம் என்பது என்ன ?
D) நல்ல குடும்பம் எத்தகையது ?
82. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
A) கைத்தொழிலை யார் கற்றுக்கொள்ள வேண்டும் ?
B) கைத்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டுமா ?
C) எத்தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் ?
D) தொழில் என்றால் என்ன ?
83. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - தென்றல் மென்மையாக வீசும்
A) புயல் எப்படி வீசும் ?
B) தென்றல் எப்படி வீசும் ?
C) தென்றல் மென்மையாக வீசுமா ?
D) தென்றல் பலமாக வீசுகிறதா ?
84. வினாவிற்கேற்ற விடையைத் தேர்ந்தெடு - நீ நல்ல மாணவனா ?
A) உங்களுக்கு தெரியாதா இது.
B) நானும் கண்ணனும் நல்ல மாணவர்கள்.
C) நான் நல்ல மாணவன் இல்லையா.
D) ஆம் நான் நல்ல மாணவன்.
85. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - பூனையைக் கண்டு எலி பயந்தது
A) எதைக்கண்டு எலி பயந்தது ?
B) பூனையைக் கண்டு எலி பயந்ததா ?
C) எலியின் நிலை என்ன ?
D) பூனையைக் கண்டு பயந்தது எது ?
86. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ?
A) எழுவாய்
B) செயப்படுபொருள்
C) பயனிலை
D) இவை அனைத்தும்
87. காரண வினைத் தொடர் எது ?
A) பந்து உருளும்
B) பந்து உருண்டது
C) பந்தை உருட்டச் செய்தான்
D) பந்தை உருட்டினான்
88. ஆடு என்ற தன்வினைச் சொல்லின் காரணவினையை காண்க.
A) ஆட்டுவி
B) ஆடு
C) ஆட்டம்
D) ஆடுவி
89. செயப்பாட்டு வினையாக அமையும் துணைவினை யாது ?
A) படு
B) உண்
C) பெறு
D) இவை அனைத்தும்
90. எவ்வகை தொடர் எனக் காண்க - வீடு கட்டியாயிற்று
A) செய்வினை தொடர்
B) எதிர்மறைத் தொடர்
C) செயப்பாட்டுவினை தொடர்
D) வினாத் தொடர்
91. எவ்வகை தொடர் எனக் காண்க - பணம் காணாமல் போனது
A) செய்வினை தொடர்
B) எதிர்மறைத் தொடர்
C) செயப்பாட்டுவினை தொடர்
D) கட்டளைத் தொடர்
92. எவ்வகை தொடர் எனக் காண்க - மன்னன் வந்தான்
A) வினையெச்சத் தொடர்
B) முற்றெச்சத் தொடர்
C) எழுவாய்த் தொடர்
D) இவற்றில் எதுவுமில்லை.
93. எவ்வகை தொடர் எனக் காண்க - வந்தான் மன்னன்
A) வினையெச்சத் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) எழுவாய்த் தொடர்
D) இவற்றில் எதுவுமில்லை.
94. எவ்வகை தொடர் எனக் காண்க - அண்ணனோடு வருவான்
A) வினையெச்சத் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) எழுவாய்த் தொடர்
D) வேற்றுமைத் தொடர்
95. எவ்வகை தொடர் எனக் காண்க - பாம்பு பாம்பு
A) வினையெச்சத் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) அடுக்குத் தொடர்
D) வேற்றுமைத் தொடர்
96. எவ்வகை தொடர் எனக் காண்க - குமரன் மழையில் நனைந்தான்
A) வினையெச்சத் தொடர்
B) உடன்பாட்டு வினைத்தொடர்
C) அடுக்குத் தொடர்
D) வேற்றுமைத் தொடர்
97. எவ்வகை தொடர் எனக் காண்க - எவ்வளவு உயரமான மரம்
A) உணர்ச்சித் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) அடுக்குத் தொடர்
D) வேற்றுமைத் தொடர்
98. எவ்வகை தொடர் எனக் காண்க - பூக்களைப் பறிக்காதீர்
A) உணர்ச்சித் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) அடுக்குத் தொடர்
D) கட்டளைத் தொடர்
99. எவ்வகை தொடர் எனக் காண்க - என் அண்ணன் நாளை வருவான்
A) செய்தித் தொடர்
B) வினைமுற்றுத் தொடர்
C) அடுக்குத் தொடர்
D) வேற்றுமைத் தொடர்
100. தவறான கூற்றினை கண்டறிக
A) ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
B) பயனிலை, தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.
C) ஒரு தொடரில் செயப்படுபொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.
D) செயப்படுபொருள் தோன்றும் தொடர் விளக்கமாக இருக்கும்.
DOWNLOAD PDF FILES - LINKS
FOR ONLINE TEST CLICK HERE >
CLICK HERE