8 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER -கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரித் தேர்வு 8

TNPSC GROUP II & IV GENARAL TAMIL 
MODEL QUESTION PAPER 8  
FREE DOWNLOAD

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 8

விடையுடன் இலவச பதிவிறக்கம்




புதிய பாடத்திட்டம் (2022)

மாதிரி வினாத்தாள் 8-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

பகுதி (அ)

1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

பகுதி (ஆ)

2. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காள மேக புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)

பகுதி (இ)

3. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்புதிராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.

----------------------------------------------------------------

GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 8 

PDF FREE DOWNLOAD CLICK HERE

👇


Q PAPER 8 - ONLINE TEST > CLICK HERE 

Download All Model question Paper Click Here > DOWNLOAD
FOR ALL ONLINE TEST CLICK HERE  CLICK HERE

மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -8  👇

மாதிரி வினாத்தாள்- 8 (100 வினாக்கள்)

1.       ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          அலை                            அழை                             அளை        

A.       திரை                    கூப்பிடு                  புற்று 

B.       கடல் அலை           ஒருவகை மரம்      திரை

C.       புற்று                     கூப்பிடு                  திரை

D.       வெள்ளம்               கூப்பிடு                  புற்று 

                  

2.       ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

அலகு                                      அளகு                                      அழகு                            

A.       பறவையின் மூக்கு           ஆண்மயில்                     எழில்

B.       பெண்மயில் மூக்கு           வான்கோழி                     வனப்பு        

C.       பறவையின் மூக்கு           பெண்மயில்                    கவின்        

D.       பெண்மயில்                    பறவையின் மூக்கு           எழில்

 

3.       ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

தலை                    தளை                    தழை                             

A.       ஓர் உறுப்பு             விலங்கு                தழைத்தல்  

B.       விலங்கு                கட்டுதல்                செடி 

C.       முடி                      வேண்டாத பயிர்     தழைத்தல்  

D.       வேண்டாத பயிர்     ஓர் உறுப்பு             ஒரு வகை கொடி 

 

4.       ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.    

கலை                    களை                             கழை                             

A.       வேண்டாத பயிர்     கவின் கலைமகள்           கூத்து         

B.       கவின் கலைமகள் நீக்கு                               மூங்கில்      

C.       ஆடற்கலை           பயிர்க்கலை                    வாழை        

D.       நீக்கு                     பயிர்க்களை                    தாழை        

 

5.       உலக முதன்மொழியாய்த் தோன்றியும் தமிழ் இன்றும் இளமை மாறாமல் கன்னித் தமிழாய் இருக்க காரணம் என்ன ?

A)      தமிழ் மெல்லோசை மொழியாய் இருப்பதால்                                         

B)      தமிழில் காரணப் பெயர்கள் அதிகமாக இருப்பதால்

C)      இளஞர்கள் அதிகமாக தமிழைப் பேசுவதால்

D)      தமிழ் வல்லோசை மொழியாக இருப்பதால்

 

6.       தொண்டை நாட்டின் பொன்விளைந்த களத்தூர் என்னும் ஊரில் பிறந்த தமிழ்ச் சான்றோர்?

A)      ஒட்டக்கூத்தர்                                             

B)      புகழேந்தி

C)      கம்பர்                                                          

D)      தாராபாரதி

 

7.       இந்திய நாட்டை, ‘மொழிகளின்காட்சிச்சாலை(Museum of Languages) எனக் குறிப்பிட்டவர்?

A)      ஈராஸ் பாதிரியார்                                          

B)      ஜி.யு.போப்

C)      ச.அகத்தியலிங்கம்                                      

D)      கால்டுவெல்

 

8.       மொழியியல் அறிஞர்கள் தொடக்கக் காலத்தில் எந்த மொழியை தமுலிக் என்று           அழைத்தனர் ?

A)      தமிழ்                                                          

B)      தெலுங்கு

C)      கன்னடம்                                                    

D)      இவையனைத்தும்

 

9.       பர்ஜி  என்ற சொல் எதனோடு தொடர்புடையது

A)      தமிழிலிருந்து கிரேக்க மொழிக்கு சென்ற சொல்    

B)      திராவிட மொழிகள்

C)      கடல் வழிப் பயணம்                                               

D)      புதுக் கவிதை

 

10.     உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி கம்பர் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?

A)      தமிழ் தழீஇய சாயல்...                                   

B)      உன் சீரிளமை திறம்வியந்து..

C)      கல்தோன்றி மண்தோன்றா காலத்தே...         

D)      என்றுமுள தென்தமிழ்...

 

11.      சங்க இலக்கியங்கள் அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்று கூறியவர்?

A)      மாக்சுமுல்லர்                                                        

B)      குமரிலபட்டர்

C)      கமில் சுவலபில்                                           

D)      ஈராஸ் பாதிரியார்

 

12.     இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணப்பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் ?

A)      கெல்லட்                                                    

B)      மாக்சுமுல்லர்

C)      ஈராஸ் பாதிரியார்                                          

D)      முனைவர் எமினோ

 

13.     பொருந்தாத இணையைக் கூறுக.

A)      பெருங்கடல்                    -        பண்புத் தொகை                       

B)      குக்குவென           -        இரட்டைக் கிளவி

C)      பாவியேன்             -        தன்மை பன்மை வினைமுற்று

D)      பழகு பாட்டு            -        வினைத் தொகை

 

14.     மனோன்மணீயம் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக

A)      சிவகாசி சரிதம் என்னும் துணைக்கதை இடம்பெற்றுள்ளது

B)      லிட்டன் பிரபு எழுதிய இரகசியவழி என்னும் நூலைத் தழுவி இயற்றப்பட்டது.

C)      ஐந்து அங்கங்களையும், இருபது காட்சிகளையும் கொண்ட நாடகநூல் இது.

D)      பேராசியர் பெ.சுந்தரனார் அவர்களுக்கு சென்னை மாகாண அரசு ராவ் பகதூடர என்ற           பட்டத்தை வழங்கி சிறப்பித்தது

15.     மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதாத நூல் எது ?

A)      திருவஞ்ஞை கலம்பகம்                               

B)      நூல் தொகை விளக்கம்

C)      திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி

D)      திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி

 

16.     ஒரு மொழிக்கு தேவைப்படும் ஒலிகள் எண்ணம் எவ்வளவு? தமிழில் உள்ள ஒலிகள்           எண்ணிக்கை எவ்வளவு?

A)      33 - 500                                                    

B)      600 - 44

C)      44 - 600                                                    

D)      500 - 33

 

17.     மனோன்மணியம் நூலில் இடம்பெற்றுள்ள துணைக்கதை எது ?

A)      சாதுவன் கதை                                            

B)      உதயணகுமாரன் சரிதம்

C)      பகவத் கீதை                                                         

D)      சிவகாமி சரிதம்

 

18.     பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா என்று பாடியவர் யார் ?

A)      கவிமணி                                                     

B)      பாரதியார்

C)      நாமக்கல் கவிஞர்                                        

D)      பாரதிதாசன்

 

19.     பாரதியாரின் வசனகவிதை எந்த கவிஞரின் கவிதைகளோடு ஒப்பிடப்படுகிறது ?

A)      வால்ட் விட்மன்                                          

B)      கலீல் கிப்ரான்

C)      பெர்னாட்ஷா                                                        

D)      A  மற்றும் B

 

20.     தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் : கூடில்லாத பறவை என்று பாடியவர் யார்  ?

A)      கண்ணதாசன்                                             

B)      பாரதிதாசன்

C)      பாரதியார்                                                     

D)      ரசூல் கம்சதேவ்

 

21.     "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A)      அகநானூறு                                                 

B)      புறநானூறு

C)      சிலப்பதிகாரம்                                              

D)      மணிமேகலை

 

22.    சிந்துக்குத் தந்தை, கற்பூர சொற்கோ என்று புகழப்படும் மகாகவி பாரதியாரின்

கவிதைகளை முதலில் அறிமுகம் செய்தவர் யார் ?

A)      எட்டயபுரம் மன்னர்                                      

B)      பரலி.சு.நெல்லையப்பர்

C)      பாஷியம்                                                     

D)      வா.ராமசாமி

 

23.    பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் என்னும் நூல் எவ்வகையைச் சார்ந்தது

A)      குறுங்காப்பியம்                                            

B)      உரைநடை நூல்

C)      பெருங்காப்பியம்                                          

D)      புதினம்

 

24.    போர்க்குறி காயம் புகழின் காயம் என்றவர் ?

A)      மனோன்மணியம் சுந்தரனார்                         

B)      நல்லாதனார்

C)      அறிஞர் அண்ணா                                       

D)      பரணர்

 

25.    அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த இடம்  எது ?

A)      தண்டலம், காஞ்சிபுரம்                                  

B)      இடையன்குடி,திருநெல்வேலி

C)      தச்சநல்லூர், திருநெல்வேலி                                  

D)      திருத்து, திருநெல்வேலி

 

26.    குயில்பாட்டில் எதன் பெருமை பேசப்படுகிறது ?

A)      குயில்                                                         

B)      குரங்கு

C)      பாரதமாதா                                                   

D)      இசை

 

27.     பொருத்துக

1.       இந்தனம்                        - அ) பகைவர்களே

2.       திருந்தலீர்                       - ஆ) முடிவுற்றது

3.       அனந்தம்                        - இ) விறகு

4.       செயமாது                        - ஈ) வெற்றித் திருமகள்

 

          1.       2.       3.       4.      

A.       இ      அ      ஆ     ஈ      

B.       இ      அ      ஆ     ஈ      

C.       ஆ     அ      ஈ       இ     

D.       ஆ     இ      அ      ஈ      

 

28.    கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினை தேர்க.

A)      காளமேகப்புலவர் சமண சமயத்தில் இருந்து சைவ  சமயத்திற்கு மாறினார்

B)      காளமேகப்புலவர் சமண சமயத்தில் இருந்து வைணவ  சமயத்திற்கு மாறினார்

C)      காளமேகப்புலவர் சைவ சமயத்தில் இருந்து வைணவ  சமயத்திற்கு மாறினார்

D)      காளமேகப்புலவர் வைணவ சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினார்

 

29.    உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலை எழுதியவர் யார் ?

A)      தால்சுதாய்                                                   

B)      ரசூல் கம்சதேவ்

C)      ஜேன் ஆஸ்டின்                                          

D)      அநுத்தமா

 

30.     நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அக்காலத்தில் இருந்து இருக்கலாம் என்பதை உறுதிபடுத்தும் அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் எது?      

A)      பெருங்கதை                                                        

B)      ஏலாதி                                     

C)      திரிகடுகம்                                                   

D)      இவற்றில் ஏதுமில்லை

 

31.     ஞாயிறு வட்டம், அதன் இயக்கம், அந்தரமாய் நிற்கும் வான்வெளி மண்டலம் என்பதைப் பற்றி விளக்கும் செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரப்புச் சூழ்ந்த மண்டிலமும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

A)      தொல்காப்பியம்                                            

B)      புறநானூறு            

C)      அகநானூறு                                                 

D)      சிலப்பதிகாரம்

 

32.    மறைந்துபோன நூல்களான ஆசிரிய மாலை, தகடூர் யாத்திரை ஆகியவற்றை   வெளிக் கொணர்ந்தவர் யார்  ?

A)      உ.வே.சாமிநாதய்யர்                                               

B)      மறைமலையடிகள்

C)      முனைவர் ச. பார்த்தசாரதி                            

D)      தேவநேயப் பாவாணர்

 

33.    வானிலையைப் பற்றி கணித்துக் கூறுபவர்களை பண்டைய தமிழ் மக்கள் எவ்வாறு அழைத்தனர் ?

A)      அறிவன்                                                     

B)      கணியன்

C)      நாழிகைக் கணக்கர்                                              

D)      இவையனைத்தும்

 

34.    தமிழ் மொழியியல் ஆய்வின் முன்னோடி யார்  ?

A)      உ.வே.சாமிநாதய்யர்                                               

B)      மறைமலையடிகள்

C)      தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்                        

D)      தேவநேயப் பாவாணர்

 

35.    ஆன் என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை கூறுக

A)      பெண்                                                                  

B)      மரை

C)      அழகின்மை                                               

D)      ஆண்

 

36.    இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும்

          நின்றுகம் பலவும் நிகழ்த்துமே இந்தப் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

A)      மனோன்மணீயம்                                         

B)      பாஞ்சாலி சபதம்

C)      குயில்பாட்டு                                                

D)      கண்ணன்பாட்டு

 

37.     கீழ்க்கண்ட இணைகளை கவனி

1.       ஆகுக                             -        வியங்கோள் வினைமுற்று

2.       ஆகுக ஆகுக                  -        அடுக்குத் தொடர்

3.       போர்க்குறி             -        ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

4.       கணங்கணம்                   -        அடுக்குத் தொடர்

A)      2, 4 மட்டும் சரி                                            

B)      1, 2, 3 மட்டும் சரி

C)      அனைத்தும் தவறு                                      

D)      அனைத்தும் சரி

 

38.    ஆ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் எதிர்ச்சொல்லைக் கூறுக.

A)      ஈ                                                                

B)      மா

C)      கோவேறு                                                    

D)      ஆவேறு

 

39.    மனோன்மணீயம் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.

1.       மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்

2.       மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அமைச்சர் குடிலன்.

3.       ஜீவகனின் மகள் மனோன்மணி சேரநாட்டரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதலிக்கிறாள்.

4.       புருடோத்தமனிடம் மனோன்மணியின் திருமணம் குறித்து ஜீவகனின் ஆணையின் பேரில் குடிலனின் மகன் பலதேவன் தூது போகிறான்.

5.       பலதேவனுடைய முறையற்ற பேச்சால் சினம்கொண்ட சேரமன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறான்.

A)      1, 2, 5 மட்டும் சரி                                         

B)      1, 2, 3, 4 மட்டும் சரி

C)      2, 3, 4, 5 மட்டும் சரி                                              

D)      அனைத்தும் சரி

 

40.     மதுர மொழியிற் குசலங்கள் பேசி

          மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார் - என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?

A)      பாஞ்சாலி சபதம்                                           

B)      குயில் பாட்டு

C)      மனோன்மணீயம்                                         

D)      இரட்டுற மொழிதல்

 

41.     பொருத்துக

1.       நாள்மீன்                          - அ) வியாழன்

2.       செந்நிற கோள்                - ஆ) புதன்

3.       வெண்ணிற கோள்           - இ) செவ்வாய்

4.       அறிவன்                         - ஈ) ஞாயிறு

5.       பெரிய கோள்                             - உ) வெள்ளி

          1.       2.       3.       4.       5.      

A.       அ      ஆ     இ      உ      ஈ      

B.       ஈ       இ      உ      ஆ     அ     

C.       ஆ     அ      உ      இ      ஈ      

D.       இ      ஈ       உ      ஆ     அ     

 

42.    பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்

          பாவியேன் துணைபுரியும் பான்மை யென்னே! என்று வருந்தியவன் யார் ?

 A)     துரியோதனன்                                             

B)      திருதராட்டிரன்

C)      விதுரன்                                                      

D)      பீமன்

 

43.    பிழையற்ற தொடரைக் காண்க ?

A)      பேறரமும் பெருந்தொழிளும் பிறங்கு நாடு                                                     

B)                 பேறறமும் பெருந்தொழிளும் பிறங்கு நாடு

C)      பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு

D)      பேரறமும் பெருந்தொழிளும் பிறந்கு நாடு

 

44.    கூற்று (A)    :  தொல்காப்பியத்திற்கு முன்பே பல நூல்கள் தமிழில் இருந்துள்ளன.

காரணம் (B)  :  தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். இலக்கியத்திற்கே இலக்கணம் வகுக்க      முடியும் என்பது தெளிவு. 

A)      கூற்று (A)  மற்றும்  காரணம் (B) இரண்டும் தவறு

B)      கூற்று (A)  மற்றும்  காரணம் (B) இரண்டும் சரி ஆனால் A க்கு B தகுந்த விளக்கமல்ல.

C)      கூற்று (A)  மற்றும்  காரணம் (B) இரண்டும் சரி A க்கு B தகுந்த விளக்கம்

D)      கூற்று (A)  சரி  காரணம் (B)  தவறு

 

45.    பொருத்துக

1.       ஐம்பெரும் பூதத்து இயற்கை போல்                - அ) சிலப்பதிகாரம்

2.       ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின்                  - ஆ) புறநானூறு

3.       சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்           - இ) தொல்காப்பியம்

4.       ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்         - ஈ) திருக்குறள்

5.       வலவன் ஏவா வானவூர்தி                    - உ) புறப்பொருள் வெண்பாமாலை

 

          1.       2.       3.       4.       5.      

A.       அ      ஆ     இ      உ      ஈ      

B.       ஈ       இ      உ      ஆ     அ     

C.       ஆ     அ      உ      இ      ஈ      

D.       ஆ     இ      ஈ       அ      ஆ    

 

46.    திங்களை பாம்பு கொண்டற்று என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?

A)      திருக்குறள்                                                 

B)      புறப்பொருள் வெண்பாமாலை   

C)      சிலப்பதிகாரம்                                              

D)      புறநானூறு

 

47.     கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.

1.       வான்வழிப் பயணங்கள் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

2.       மயில்பொறி விமானத்தின் செயல்திறன் பற்றிய குறிப்புகள் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன.

3.       இராவணன் செலுத்திய புட்பக விமானம் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது.

4.       வானவூர்தி வடிவம் மற்றும் அதனை இயக்கும் முறை பற்றிய குறிப்புகள் பெருங்கதையில் காணக்கிடைக்கின்றன.

A)      1 மற்றும் 4 மட்டும் சரி                                  

B)      3 மற்றும் 4 மட்டும் சரி

C)      1, 2, 3 மட்டும் சரி                                                  

D)      அனைத் தும் சரி

 

48.    "கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்" - இத்தொடரில் மடப்பிடி என்ற சொல் யாரைக் குறிக்கும்

A)      சீதை                                                          

B)      திரிசலை

C)      குந்தி                                                          

D)      பாஞ்சாலி

 

49.    வாழ்வியலுக்கான இலக்கணத்தை கூறுவது ?

A)      அகம்                                                         

B)      புறம்

C)      பொருளிலக்கணம்                                      

D)      வஞ்சி

 

50.     சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.

A)      வானூர்தி = வானம் + ஊர்தி                                   

B)      தென்திசை = தென் + திசை

C)      வானியல் = வான் + இயல்                             

D)      ஐம்பூதம் = ஐம் + பூதம்

 

51.     இலக்கணக் குறிப்பு தருக - அடவிமலையாறு 

A)      வினைத்தொகை                                        

B)      தொழிற்பெயர்

C)      உம்மைத் தொகை                                      

D)      எண்ணும்மை

 

52.    பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கூறுக - சொர்ணபுரீச்சுரர்

A)      அறம்வளர்த்தாள்                                         

B)      பழமலைநாதர்

C)      ஐயாறப்பர்                                                    

D)      செம்பொன்பள்ளியார்

 

53.    பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கூறுக - கட்க நேத்ரி

A)      வாள்நெடுங்கண்ணி                                              

B)      நீள்நெடுங்கண்ணி

C)      தேன்மொழிப்பாவை                                              

D)      யாழினம் நன்மொழியாள்

 

54.    பொருத்துக

1.       வாரி                      -  அ) புல்லாங்குழல்

2.       கோற்றொடியார்      -  ஆ) கடல்

3.       பண்ணை              -   இ) பெண்கள்

4.       வேயின்குழல்                  -   ஈ) வயல்வெளி

          1.       2.       3.       4.      

A.       ஆ     இ      ஈ       அ     

B.       இ      ஈ       அ      ஆ    

C.       ஆ     இ      ஈ       அ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

55.    தமிழ்மொழி "செந்தமிழ்" என அழைக்கப்படுவதன் காரணம் என்ன ?

A)      மெல்லோசை மொழியாக இருப்பதால்                                                 

B)      இடுகுறிப் பெயர்கள் குறைவாக இருப்பதால்

C)      இலக்கண வரம்பு மற்றும் சொற்களுக்கு திருந்திய வடிவம் இருப்பதால்.                   

D)      இவற்றில் எதுவுமில்லை.

 

56.    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          ஒலி                      ஒழி                                 ஒளி  

A.       ஓசை                    ஆறு                               பதுங்கிக்கொள்     

B.       இசை                    அழித்துவிடு                    ஓசை

C.       ஓசை                    தொலைத்துவிடு              வெளிச்சம்  

D.       அழித்துவிடு           பதுங்கிக்கொள்                தெலைத்துவிடு    

 

57.     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

கலை                    கழை                    களை                            

A.       சரஸ்வதி                கூத்து                             நாட்டியம்    

B.       வித்தை                 வெண்டாத பயிர்    வாழை        

C.       கலைந்து போதல்   வாழை                             முகத்தின் ஒளி     

D.       வித்தை                 மூங்கில்                 வேண்டாத பயிர்    

 

58.    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

கிலி                      கிழி                                கிளி                               

A.       அச்சம்                            துண்டாக கிழித்தல்                    ஒரு பறவை

B.       பலம்                     கோடு கிழித்தல்                ஒருவகை மரம்     

C.       ஒருவகை மரம்      நீக்கு                     வாழை மரம்

D.       ஒருவகை பறவை  தாண்டுதல்             ஒருவகை மலர்     

 

59.    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

தலை                    தழை                              தளை                            

A.       சிரசு                      இலை                                      வெட்டுதல்  

B.       முதன்மை             புல்                                  கட்டுதல்     

C.       முதன்மை             வெட்டு                           சிரசு  

D.       முடி                      கட்டு                               ஒன்றுதல்   

 

60.     மலை, குன்றுகளின் பெயர்களின் குறித்த ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A)      ONKALOGY                                        

B)      OROLOGY

C)      HYDROLOGY                                      

D)      HERMATOLOGY

 

61.     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          தாலி                     தாழி                                தாளி 

A.       மாங்கல்யம்             குடம்                              ஒரு வகை பனை  

B.       ஒருவகை மரம்      வாயகன்ற பாண்டம்                   குழம்பு தாளித்தல்  

C.       குடம்                     ஒருவகை மரம்                சுரபுன்னை மரம்    

D.       இளம்பெண்           குடம்                               ஒருவகை மரம்     

 

62.    நடுத்திராவிட மொழி எது  ?

A)      தெலுங்கு                                                   

B)      துளு

C)      கன்னடம்                                                    

D)      இருளா

 

63.    திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானது. தமிழ் -> திரமிள -> திரவிட -  > திராவிட என உருவாயிற்று எனக் கூறியவர் ?

A)      முனைவர் எமினோ                                               

B)      குமரிலபட்டர்

C)      ச.அகத்தியலிங்கம்                                      

D)      ஈராஸ் பாதிரியார்

 

64.    தவறான கூற்றினை கண்டறிக.

A)      இன்று இருபத்து மூன்றனுக்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் உள்ளன.                 

B)      மொழிகளைத் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று வகையாகப் பிரிப்பர்

C)      தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் எனப்படும்                            

D)      தனக்கெனத் தனிச்சிறப்பும் பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள  மொழியே தாய்மொழி

 

65.    மனோன்மணீயம் பெ.சுந்தரனார் தொடர்பான தவறான கூற்று  எது ?

A)      பிறந்த ஊர் - தீபங்குடி    

B)      பெற்றோர் - பெருமாள் பிள்ளை மற்றும் மாடத்தி அம்மையார்

C)      பணி - திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியர்                     

D)      இவரின் ஞான ஆசிரியர் - கோவிந்தநல்லூர் சுப்பிரமணிய சுவாமிகள்

 

66.    இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பம் எது?

A)      இந்தோ-ஆசிய மொழிகள்                                     

B)      திராவிட மொழிகள்

C)      ஆஸ்திரோ- ஆசிய மொழிகள்                      

D)      இவை அனைத்தும்

 

67.     பொருந்தாத இணையை கண்டறிக

A)      பகடு நடந்த கூழ் - நாலடியார்                                

B)      வாழ்க அந்தணர் வாழ்க ஆனினம் - திருஞான சம்பந்தர்

C)      தன்னேரிலாத தமிழ் - தண்டியலங்காரம்                                                      

D)      தமிழ்பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும்           செய்யும் - ஈராஸ் பாதிரியார்

 

68.    அரன் என்ற சொல்லின் பொருளைத் தேர்க ?

A)      மதில்                                                          

B)      பாதுகாப்பு

C)      கோட்டை                                                   

D)      சிவன்

 

 

 

69.    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          வலை                             வழை                              வளை         

A.       மீன்பிடி வலை                 சுரபுன்னை மரம்               பொந்து       

B.       வளைவு                 ஒருவகை மரம்                எலி வளை 

C.       சிலந்தி வலை                 வாழ்                                வளைவு      

D.       வளைவு                 வளையல்                       எலி வளை 

 

70.     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          வால்                                வாழ்                                வாள் 

A.       விலங்கின் வால் பகுதி     உயிர்வாழ்                       நாக்கு

B.       வெண்மை                       பிழைத்திரு                     ஒளி பொருந்திய   

C.       ஒளி பொருந்திய              உயிர்வாழ்                       வெண்மை  

D.       ஒரு வகை மீன்               உயிர்வாழ்                       வெட்டும் கருவி    

 

71.     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          வாலை                                     வாழை                            வாளை       

A.       இளம்பெண்                              பிழைத்திரு            மீன் வகை  

B.       எலி வலை                               ஒருவகை மரம்      பிழைத்திரு 

C.       மீன்வகை                                 கதலி                    இளம்பெண்

D.       இளம்பெண்                              ஒருவகை மரம்      மீன்வகை

         

72.     ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க ?

          இலை                                      இளை                                      இழை         

A.       நாற்று                              உடல் மெலிதல்               புற்று 

B.       தளிர்                               உடல் மெலிதல்               அழித்தல்    

C.       தாவரத்தின் இலை                    உடல் இளைத்தல்           நூல்  

D.       உடல் மெலிதல்               உடல் பருத்தல்                புற்று

 

73.     மேல்வாய் என்று பொருள் தரும் சொல்லைக் காண்க.

A)      அன்னம்                                                     

B)      அங்காப்பு

C)      அனுஷம்                                                    

D)      அண்ணம்

 

 

74.     பொருந்தாத இணையை கண்டறிக

A.       லம்சம்                            - திரட்சித் தொகை        

B.       புரோட்டோகால்      - மரபுத் தகவு        

C.       ஆட்டோகிராப்        - வரலாறு   

D.       டெலிகேட்             - பேராளர்    

 

75.     ‘எள்ளல், இளமை, அறியாமை, மடமைஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை           தோன்றும் என்று கூறும் நூல் எது ?

A)      நாலடியார்                                                   

B)      தொல்காப்பியம்

C)      பழமொழி நானூறு                                                 

D)      திருக்குறள்

 

76.     பொருந்தாத இணையைக்  காண்க

A)      மலேரு                           -        தட்சிண கன்னடா, கர்நாடகம்                       

B)      கோட்டா                          -        ஏற்காடு, தமிழ்நாடு

C)      கொண்டா தோரா             -        ஆந்திரப்பிரதேசம்

D)      கோண்டு, கொய்ட்டெர்     -        ஒடிஸா

 

77.     காளமேகப் புலவர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A.       திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார்.

B.       வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.

C.       கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார்.

D.       இவர், அறம்வைத்துப்  பாடுவதில் வல்லவர்.

 

78.     ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - என்ற காளமேகப் புலவரின் பாடல் வரிகளில் எந்த இருபொருள் விளங்குகிறது ?

A)      குதிரையும் காவிரியும்                                  

B)      பாம்பும் எள்ளும்

C)      மயில்தோகையும் மாட்டுவண்டியும்                         

D)      இவற்றில் எதுவுமில்லை

 

 

79.     பொருந்தாத இணையைக் கண்டறிக

          A)      சுழி              - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி          

          B)      துன்னலர்    - பகைவர், அழகிய மலர்

          C)      சாடும்                    - தாக்கும், இழுக்கும்;                                                      

          D)      ஆடுபரி        - ஆடுகுதிரை.

 

80.     எந்த மன்னனின் நாட்டில்  ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த்           தலைசாய்க்கும் என காளமேகப் புலவர் பாடுகிறார் ?

A)      திருமலைராயன்                                          

B)      செல்வக்கடுங்கோ வாழியாதன்

C)      கோப்பெரும் பேகன்                                                                 

D)      ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்

 

81.     திராவிடர்களை "மலை நிலை மனிதர்கள்" என்று அழைத்தவர் யார்

A)      கால்டுவெல்                                                

B)      ஈராஸ் பாதிரியார்

C)      கமில் சுவலபில்                                           

D)      ச.அகத்தியலிங்கம்

 

82.    "சேயோன் மேய மைவரை உலகம்" என்று குறிப்பிடும் நூல் எது ?

A)      திருமுருகாற்றுப்படை                                  

B)      புறநானூறு

C)      தொல்காப்பியம்                                            

D)      சிலப்பதிகாரம்

 

83.    "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று குறிப்பிடும் நூல் எது ?

A)      குறுந்தொகை                                             

B)      திருமுருகாற்றுப்படை

C)      திருச்செந்தூர் கலம்பகம்                              

D)      குறிஞ்சிப்பாட்டு

 

84.    நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கூறியவர் யார் ?

A)      அழகிய சொக்கநாதப் புலவர்                        

B)      மகாத்மா காந்தி

C)      காளமேகப் புலவர்                                        

D)      இந்திரா காந்தி

 

85.    நகைச்சுவையுணர்வு இல்லாதவர்க்குப் பகலும் இருளாகத் தோன்றும் என்றவர் யார் ?

A)      அழகிய சொக்கநாதப் புலவர்                        

B)      மகாத்மா காந்தி

C)      காளமேகப் புலவர்                                        

D)      திருவள்ளுவர்

 

86.    நாங்கள் கவிராசர்கள் என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி           என்பதற்குக் குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு வாலெங்கே? நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே? எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்  ?

A)      கவி காளமேகம்                                           

B)      அழகிய சொக்கநாதர்

C)      பாரதியார்                                                     

D)      பெ.சுந்தரனார்

 

87.     "கார் என்று பேர்படைத்தாய்...." எனத் தொடங்கும் பாடலை அமைத்து, அப்பாடலில் நீ வானவெளியில் மேகமாகத் திரியும்போது கார் என்றும், மழையாகப் பூமியில் பெய்யும்போது நீர் என்றும், ஆய்ச்சியர் கையில் வந்தவுடன் மோர் என்றும் முப்பேரும் பெற்றாய் என நகைச்சுவை ததும்ப பாடியவர் யார் ?

A)      கவி காளமேகம்                                           

B)      அழகிய சொக்கநாதர்

C)      பாரதியார்                                                     

D)      பெ.சுந்தரனார்

 

88.    மிருதங்கத்திலிருந்து எழும் ஓசை இனிமையாக இல்லாமல், எரு தட்டும் ஓசைபோல் இருந்ததாம். அதனைக்கேட்ட பெண்கள் எரு வாங்க, கூடையை எடுத்துக்கொண்டு, ஓசை           வந்த திசையை நோக்கி ஓடினார்களாம் என்று நகைச்சுவையாகக் கூறியவர் யார் ?

          A)      கவி காளமேகம்                                           

B)      அழகிய சொக்கநாதர்

          C)      பாரதியார்                                                     

D)      பெ.சுந்தரனார்

 

89.    ஒரு வீட்டில் பெண் ஒருத்தி பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு, காணாமல்போன தன்           கழுதை திரும்ப வந்தது என்று எண்ணிக் கண்டேன் கண்டேன்என்று, அதன்           உரிமையாளர் ஓடி வந்தாராம் என நகைச்சுவை தோன்றப் பாடியவர் யார் ?

          A)      கவி காளமேகம்                                           

B)      அழகிய சொக்கநாதர்

          C)      பாரதியார்                                                     

D)      பெ.சுந்தரனார்

 

90.     ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க. - Shell seeds

A)      விதையுறை                                                

B)      விதை

C)      ஒட்டு விதை                                                         

D)      மரபு விதை

 

91.     பிரித்து எழுதுக - புத்துணர்ச்சி

A)      புத்து + உணர்ச்சி                                         

B)      புது + உணர்ச்சி

C)      புதுமை + உணர்ச்சி                                               

D)      புதுமை + உனர்ச்சி

 

92.    ஜீவகன் புதிய கோட்டையை நிறுவிய இடம் எது ?

A)      உறையூர்                                                    

B)      மதுரை

C)      பூம்புகார்                                                      

D)      திருநெல்வேலி

 

93.    பொருத்துக

1.       வனப்பு                            - அ)  பெண்யானை

2.       பிடி                       - ஆ) காடு

3.       அடவி                             - இ)  பக்கம்

4.       மருங்கு                 - ஈ) அழகு

          1.       2.       3.       4.      

A.       ஈ       ஆ     அ      இ     

B.       ஈ       அ      ஆ     இ     

C.       ஆ     அ      ஈ       இ     

D.       அ      இ      ஈ       ஆ    

 

94.    மனோன்மணீயம் நூலில் களம் என்பது யாது ?

A)      இலம்பகம்                                                   

B)      காண்டம்

C)      காட்சி                                                         

D)      காதை

 

95.    பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குவது தமிழ் என்றவர் என்று கூறியவர் யார் ?

A)      முனைவர். சு. அகத்தியலிங்கம்                    

B)      ஜி.யு.போப்

C)      வீரமாமுனிவர்                                             

D)      கால்டுவெல்

 

96.    திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் யார் ?

A)      கால்டுவெல்                                                

B)      குமரிலபட்டர்

C)      ஈராஸ் பாதிரியார்                                          

D)      தேவநேய பாவணர்

 

97.     கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனை எந்நூல் தெரிவிக்கிறது?

A)      புறநானூறு                                                  

B)      பட்டினப்பாலை

C)      அகநானூறு                                                 

D)      மதுரைக்காஞ்சி

 

98.    வீறுடை செம்மொழி செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி என்றவர் யார் ?

A)      பாவலரேறு                                                  

B)      புரட்சிக் கவிஞர்

C)      கவிஞரேறு                                                 

D)      சிலம்புச் செல்வர்

 

99.    குமரிக்கண்டத்தில்  தமிழ் தோன்றியதென கூறும் நூல்  எது  ?

A)      தொல்காப்பியம்                                            

B)      புறநானூறு

C)      மாறன் அலங்காரம்                                      

D)      தண்டியலங்காரம்

 

100.   தனிப்பாடல் திரட்டினை தொகுப்பித்தவர்  யார் ?

A)      இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி           

B)      சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

C)      தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்                         

D)      யாரெனத் தெரியவில்லை


DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download




thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post