TNPSC GROUP IV & II GENARAL TAMIL MODEL QUESTION PAPER -12
TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 12 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 12
விடையுடன்
2022 புதிய பாடத்திட்டம்
மாதிரி வினாத்தாள் 12-க்கான பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்தல்
2. (பகுதி-ஆ) ஜி.யு.போப் - வீரமாமுனிவர், தமிழ்த் தொண்டு சிறப்புத் தொடர்கள்.
3.(பகுதி-இ) பெரியார் --அண்ணா -- முத்துராமலிங்கத் தேவர் -- அம்பேத்கர் - - காமராசர் -- சமுதாயத் தொண்டு.
MODEL QUESTION PAPER 12 WITH ANSWER KEY PDF FILE FREE DOWNLOAD
மாதிரி வினாத்தாள் 12-க்கான பாடத்திட்ட தலைப்புகள்
1. (பகுதி-அ) அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்தல்
2. (பகுதி-ஆ) ஜி.யு.போப் - வீரமாமுனிவர், தமிழ்த் தொண்டு சிறப்புத் தொடர்கள்.
3.(பகுதி-இ) பெரியார் --அண்ணா -- முத்துராமலிங்கத் தேவர் -- அம்பேத்கர் - - காமராசர் -- சமுதாயத் தொண்டு.
👇
DAY 12 GENARAL TAMIL ONLINE EXAM
மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇
1. "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று கூறி தேவநேயப் பாவாணர் அவர்கள் எங்கிருந்து வெளியேறினார் ?
A) தான் பணியாற்றிய
இதழிலிருந்து
B) தான் பணியாற்றிய கல்வி
நிறுவனத்திலிருந்து
C) தான் பணியாற்றிய வணிக நிறுவனத்திலிருந்து
D) நான்காம்
தமிழ்ச்சங்கத்திலிருந்து
2. மன்னிப்பு என்ற சொல் எந்த மொழியைச் சார்ந்தது ?
A) உருது
B) தமிழ்
C) தெலுங்கு
D) போர்ச்சுகீசியம்
3. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A. தமிழின் தொன்மையை உலகறியச்
செய்தவர் - கால்டுவெல்.
B. தனித்தமிழுக்கு
வித்திட்டவர் -
வீரமாமுனிவர்
C. தமிழைத் தழைக்கச் செய்த
செம்மல் -
மறைமலையடிகள்.
D. தமிழை ஆலென வளர்த்து
மாண்புறச் செய்தவர் - தேவநேயப்
பாவாணர்.
4. தேவநேயப் பாவாணயருக்கு
வழங்கப்பெறாத பட்டம் எது ?
A) தனித்தமிழ் ஊற்று
B) அறிவியல் தமிழறிஞர்
C) செந்தமிழ் ஞாயிறு
D) இலக்கியப் பெட்டகம்
5. தேவநேயப் பாவாணர் தன்
வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவிய கோட்பாடு எது?
1. உலக முதன்மொழி தமிழ்
2. இந்திய மொழிகளுக்கு மூலமும்
வேரும் தமிழ்
3. உலக முதன்மொழி தமிழ்
4. தமிழின் கிளைமொழியே
சமஸ்கிருதம்
A) 1 மட்டும் சரி
B) 1, 2, மட்டும் சரி
C) 1, 2, 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
6. மதுரை உலகத் தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும்
தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தேவநேயப் பாவாணர் அவர்கள் சொற்பொழிவாற்றிய நாள் ?
A) 05.01.1981
B) 01.05.1981
C) 05.01.1891
D) 01.05.1891
7. பாவாணர் கோட்டம் அமைந்துள்ள
இடம் ?
A) பறம்பு
B) முறம்பு
C) சென்னை
D) திருமயிலை
8. பாவாணரது ஆய்வுப்புலத்தின்
இரு கண்களாக கருதப்படுவது எது ?
1. உலகின் முதல் மாந்தன்
தமிழன்; தமிழன் தோன்றிய
இடம் குமரிக்கண்டமே
2. மொகஞ்சதாரோ, அரப்பா
நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே
3. தமிழனின் நாகரிகமே தலை
சிறந்தது
4. தமிழனே தலைசிறந்த வீரனாக
திகழ்ந்நதான்
A) 1, 3 மட்டும் சரி
B) 1, 2, மட்டும் சரி
C) 2, 3 மட்டும் சரி
D) 3, 4 மட்டும் சரி
9. தேவநேயப் பாவாணர் இயற்றிய
நூல்களின் எண்ணிக்கை ?
A) 43
B) 34
C) 64
D) 46
10. பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக
பணியமர்த்தப்பட்ட நாள் ?
A) 05.08.1947
B) 08.05.1974
C) 08.05.1976
D) 05.08.1976
11. தேவநேயப் பாவாணர் பெயரில்
எங்கு மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது?
A) சென்னை
B) மதுரை
C) காஞ்சிபுரம்
D) திருநெல்வேலி
12. தேவநேயப் பாவாணர் தொடர்பான தவறான செய்தி எது ?
A. பெற்றோர் : ஞானமுத்து - பரிபூரணம்
B. ஊர் : திருவை குண்டம்
C. கல்வி :
பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
D. காலம் : 07.02. 1902 - 15.01. 1981
13. தேவநேயப் பாவாணர் தம் வாழ்நாளில் வலியுறுத்திக்
கூறிய கருத்து எது ?
A) கோவில்களில் தமிழில்
வழிபாடு நடைபெறவேண்டும்
B) பிறப்பு இறப்புத் தொடர்பான
சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும்
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை.
14. தேவநேயப் பாவாணர் எழுதாத நூல் எது ?
A) தொல்காப்பிய பூங்கா
B) தமிழர் மதம்
C) பண்டைத் தமிழர் நாகரிகமும்
பண்பாடும்
D) திருக்குறள் மரபுரை
15. தேவநேயப் பாவாணர் கல்வி பயின்று அதே இடத்தில்
பணியாற்ளினார். எந்த இடம் எங்கு உள்ளது ?
A) குறம்பு
B) முறம்பு
C) சங்கரன்கோவில்
D) இராச பாளையம்
16. அகராதி என்னும் சொல் முதலில் இடம்பெற்ற நூல் எது ?
A) சதுரகராதி
B) ஆட்சி சொல் அகராதி
C) திருமந்திரம்
D) சூடாமணி நிகண்டு
17. தமிழின் முதல் அகராதி எது ?
A) இராமநாதன் அகராதி
B) சதுரகராதி
C) தமிழ்ச்சொல் அகராதி
D) அபிதான கோஷம்
18. நிகண்டுகளில் மிகப் பழமையானது எது ?
A) திவாகர நிகண்டு
B) சூடாமணி நிகண்டு
C) அகராதி நிகண்டு
D) செந்தமிழ் சொற்பிறப்பியல்
19. நிகண்டுகளில் மிகச் சிறந்தது எது ?
A) திவாகர நிகண்டு
B) சூடாமணி நிகண்டு
C) அகராதி நிகண்டு
D) செந்தமிழ் சொற்பிறப்பியல்
20. தமிழ்ச்சொல் அகராதியை வெளியிட்டவர் யார்?
A) சிங்கார வேலனார்
B) வீரமாமுனிவர்
C) கதிரை வேலன்
D) லெவிஸ் பாட்டில்ஸ்
21. படங்களுடன் கூடிய அகர முதலியை வெளியிட்டவர் யார்?
A) சிங்கார வேலனார்
B) இராமநாதன்
C) கதிரை வேலன்
D) லெவிஸ் பாட்டில்ஸ்
22. தமிழ் அகராதி வரலாற்றில் பாதி இடத்தைப் பெறும்
சொற்பொருள் துறை நூல்கள் ?
A) அகராதிகள்
B) இலக்கியங்கள்
C) நிகண்டுகள்
D) வானசாஸ்திர நூல்கள்
23. தவறான இணையைக் கண்டறிக.
A) மூணு - தமிழ்
B) மூடு - தெலுங்கு
C) மூரு - கன்னடம்
D) மூஜி - துளு
24. அகர முதலி தோன்றுவதற்கு திருப்புமுனையாக அமைந்த நூல் எது
?
A) திருமந்திரம்
B) அகராதி நிகண்டு
C) களவழி நாற்பது
D) சூடாமணி நிகண்டு
25. வீரமாமுனிவர் அவர்களால் உருவாக்கப்படாத அகர முதலி எது ?
A) தமிழ் - இலத்தீன் அகரமுதலி
B) இலத்தீன் - தமிழ் அகரமுதலி
C) போர்ச்சுகீசியம் - தமிழ் அகர முதலி
D) தமிழ் - பிரெஞ்சு அகர முதலி
26. தமிழ் - தமிழ் அகராதியை வெளியிட்டவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) லெவிஸ் பாட்டில்ஸ்
C) சிங்கார வேலனார்
D) தேவநேயப் பாவாணர்
27. பொருத்துக
a. கண் - 1) மலையாளம், கன்னடம்
b. கண்ணு - 2) குரூக்
c. கன்னு - 3) தமிழ்
d. ஃகன் - 4) தெலுங்கு, குடகு
a. b. c. d.
A. 1 3 4 2
B. 4 3 1 2
C. 2 4 1 3
D. 3 1 4 2
28. சங்க அகராதி என அழைக்கப்படுவது எது ?
A) தமிழ்ச்சொல் அகராதி
B) சூடாமணி நிகண்டு
C) அகராதி நிகண்டு
D) செந்தமிழ் சொற்பிறப்பியல்
29. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது
?
A) சென்னை பல்கலை கழக அகர
முதலி
B) சதுரகராதி
C) க்ரியாவின் தற்கால அகராதி
D) அபிதான கோஷம்
30. தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி என அழைக்கப்படுவது
?
A) அபிதான சிந்தாமணி
B) சதுரகராதி
C) செந்தமிழ் சொற்பிறப்பியல்
D) அபிதான கோஷம்
31. முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் அகர
முதலி எது ?
A) சென்னை பல்கலை கழக அகர
முதலி
B) சதுரகராதி
C) க்ரியாவின் தற்கால அகராதி
D) அபிதான கோஷம்
32. இலக்கிய செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன்
முதலாக சேர்த்து வெளிவந்த அபிதான சிந்தாமணியை வெளியிட்டவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) தேவநேயப் பாவாணர்
C) சிங்கார வேலனார்
D) கதிரை வேலன்
33. நில் - என்ற வேர்ச்சொல்லை பலர்பால் வினைமுற்றாக மாற்றுக.
A) நின்றார்
B) நின்றான்
C) நின்றனள்
D) நின்றாரை
34. செய் - என்ற வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக மாற்றுக.
A) செய்தனர்
B) செய்வாள்
C) செய்தல்
D) செய்வான்
35. மருண்டனென் என்ற செல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A) மருள்
B) மருண்
C) மருளல்
D) மரு
36. ஆழ் என்ற வேர்ச்சொல்லை வியங்கோள் வினைமுற்றாக மாற்றுக.
A) ஆளுக
B) அழகு
C) ஆழ்க
D) அழிவு
37. வளர் - என்ற வேர்ச்சொல்லை முன்னிலை ஒருமை வினைமுற்றாக
மாற்றுக.
A) வளர்ப்போம்
B) வளர்த்தல்
C) வளர்ப்பாய்
D) வளர்ச்சி
38. தமிழ் படித்தால் அறம் பெருகும் அகத்தில் ஒளிபெருகும்
திறம் பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும் என்று பாடியவர் யார்?
A) தேவநேயப் பாவாணர்
B) ரசூல் கம்சதேவ்
C) பாரதிதாசன்
D) பெருஞ்சித்திரனார்
39. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது ?
A) எண்ணாயிரம்
B) துள்ளம்
C) சமுத்திரம்
D) சின்னமருதூர்
40. வீறுடை செம்மொழி செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய
நாள் முதல் உயர்மொழி என்றவர் யார் ?
A) பாவலரேறு
B) புரட்சிக் கவிஞர்
C) கவிஞரேறு
D) சிலம்புச் செல்வர்
41. சரியான அகர வரிசையில் அமைந்த தொடரைக் காண்க.
A) சாட்டை, சங்கு, சிந்தனை, சூளாமணி
B) சிந்தனை, சங்கு, சாட்டை, சூளாமணி
C) சங்கு, சாட்டை, சிந்தனை, சூளாமணி
D) சூளாமணி, சங்கு, சாட்டை, சிந்தனை
42. சரியான அகர வரிசையில் அமைந்த தொடரைக் காண்க.
A) சட்டம், சிறுகதை, சார்பு, சீர், சுக்கு
B) சுக்கு, சீர், சிறுகதை, சார்பு, சட்டம்
C) சட்டம், சார்பு, சிறுகதை, சீர், சுக்கு
D) சார்பு, சட்டம், சிறுகதை, சுக்கு, சீர்
43. அகரமுதலியாக அமைந்த ஓரடிச் செய்யுள் தொகுதியை
முதன்முதலாகப் பாடியவர் யார்?
A) ஔவையார்
B) வீரமாமுனிவர்
C) ஜி.யு போப்
D) பாரதிதாசன்
44. அகர
வரிசையில் அமைக்க.
A) அப்பம், அன்னம், அரங்கம், அழுத்தம்
B) அரங்கம், அழுத்தம், அன்னம், அப்பம்
C) அப்பம், அரங்கம், அன்னம், அழுத்தம்
D) அன்னம், அழுத்தம், அரங்கம், அப்பம்
45. சரியாக அகர வரிசையில் அமைக்கப்பட்ட தொடரைக் காண்க.
A) அம்மா, கண்ணன், எல்லை, ஏன், ஆசை, சட்டை, இன்பம், குடம்
B) அம்மா, ஆசை, இன்பம், எல்லை, ஏன், கண்ணன், குடம், சட்டை
C) கண்ணன், அம்மா, ஆசை, இன்பம், எல்லை, ஏன், குடம், சட்டை
D) எல்லை, அம்மா, கண்ணன், ஏன், ஆசை, சட்டை, இன்பம், குடம்
46. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
A) தங்கம், துணை, திண்ணை, தோழன்
B) தோழன், துணை, திண்ணை, தங்கம்
C) திண்ணை, தங்கம், துணை, தோழன்
D) தங்கம், திண்ணை, துணை, தோழன்
47. எந்த சொல் கேம்பிரிட்ஜ் அகராதியின் 2017 ஆம்
ஆண்டிற்கான வார்த்தையாக அறிவிக்கப்பட்டுள்ளது
?
A) Populism
B) Patron
C) Humanitarian
D) kwaussie
48. பாடு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் யாது ?
A) பாடுதல்
B) பாடினான்
C) பாடிய
D) பாடு
49. மலர் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க
A) மலர்ந்தது
B) மலர்ந்து
C) மலர்ந்தாள்
D) மலர்ந்த
50. எடு என்ற வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக்கு
A) எடுத்த
B) எடுத்து
C) எடுத்தது
D) எடுத்தவன்
51. நில் என்ற வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக்கு
A) நிற்பவன்
B) நின்றான்
C) நின்றாள்
D) நின்றது
52. வேர்ச்சொல் காண்க - இடுக்குதல்
A) இடு
B) இடுக்கு
C) இடுகு
D) இடுதல்
53. வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக்கு - ஏந்து
A) ஏந்தினான்
B) ஏந்துதல்
C) ஏந்துவார்
D) ஏந்துக
54. கொடு என்ற வேர்ச்சொல்லை எதிர்மறை வினைமுற்றாக்கு
A) கொடுத்தான்
B) கொடுத்தாள்
C) கொடான்
D) கெடுத்தாள்
55. வேர்ச்சொல்லை ஆண்பால் இறந்த கால வினைமுற்றாக்கு - நட
A) நடந்தாள்
B) நடப்பாள்
C) நடப்பான்
D) நடந்தான்
56. கூடு என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்கு.
A) கூடுதல்
B) கூடும்
C) கூடினார்
D) கூடிய
57. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) நகம், மாசு, யோகி, வீறு
B) மாசு, வீறு, நகம், யோகி
C) யோகி, நகம், வீறு, மாசு
D) வீறு, யோகி, நகம், மாசு
58. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) காட்சி, கேணி, கை, கோபுரம்
B) கேணி, கோபுரம், காட்சி, கை
C) கை, காட்சி, கேணி, கோபுரம்
D) கோபுரம், கை, காட்சி, கேணி
59. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) ஐயம், எழில், ஈசன், ஔடதம்
B) எழில், ஐயம், ஔடதம், ஈசன்
C) ஈசன், எழில், ஐயம், ஔடதம்
D) ஔடதம், ஈசன், ஐயம், எழில்
60. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) இடி, ஒலி, அகிலம், எள்
B) ஒலி, எள், இடி, அகிலம்
C) அகிலம், எள், ஒலி, இடி
D) அகிலம், இடி, எள், ஒலி
61. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) தமிழ்நாடு, மகாராஸ்டிரா, பூடான், கேரளா
B) மகாராஸ்டிரா, தமிழ்நாடு, கேரளா, பூடான்
C) கேரளா, தமிழ்நாடு, பூடான், மகாராஸ்டிரா
D) பூடான், தமிழ்நாடு, கேரளா, மகாராஸ்டிரா
62. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) நவில்தல், நீலம், நேற்று, நோய்
B) நோய், நேற்று, நீலம், நவில்தல்
C) நேற்று, நவில்தல், நீலம், நோய்
D) நீலம், நோய், நவில்தல், நேற்று
63. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக.
A) வெள்ளி, புதன், திங்கள், செவ்வாய்
B) செவ்வாய், திங்கள், புதன், வெள்ளி
C) புதன், செவ்வாய், வெள்ளி, திங்கள்
D) திங்கள், வெள்ளி, செவ்வாய், புதன்
64. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது ?
A) தண்டலம்
B) துள்ளம்
C) எண்ணாயிரம்
D) சமுத்திரம்.
65. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ?
A) துரை. மாணிக்கம்.
B) வரதன்
C) சுப்புரத்தின தாசன்
D) எத்திராசலு
66. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் ?
A) 10.07.1936
B) 10.03.1933
C) 03.10.1936
D) 07.10.1933
67. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது ?
A) கனிச்சாறு
B) ஐயை
C) கொய்யாக்கனி
D) தமிழ்ச் சிட்டு
68. இந்தியன் சஞ்சிகை மற்றும் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
ஆகிய ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்
யார் ?
A) காந்தியடிகள்
B) வீரமாமுனிவர்
C) தேவநேயப் பாவாணர்
D) ஜி.யு போப்
69. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எச்சங்கத்தை சார்ந்த
புலவர் ?
A) முதற்சங்கம்
B) இடைச் சங்கம்
C) கடைச் சங்கம்
D) நான்காம் தமிழ்ச்சங்கம்
70. வீரமாமுனியவர் திருக்குறளை மொழிபெயர்த்த மொழி ?
A) ஆங்கிலம்
B) பாரசீகம்
C) இலத்தீன்
D) உருது
71. ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்த மொழி?
A) ஆங்கிலம்
B) பாரசீகம்
C) இலத்தீன்
D) உருது
72. தம் கல்லறையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்
கொண்டிருக்கிறான்" என எழுதுமாறு தமது உயிலில் (இறுதி முறிவு) எழுதிவைத்தவர்
யார் ?
A) ஜி.யு.போப்
B) வீரமாமுனிவர்
C) பரிதிமாற்கலைஞர்
D) இவற்றில் எதுவுமில்லை
73. 1885 முதல் 1908 வரை 23 ஆண்டுகளாக இங்கிலாந்து பல்கலைகழகத்தில் ஜி.யு.போப் எப்பணியை
மேற்கொண்டார் ?
A) தமிழ் மற்றும் தெலுங்கு
கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
B) தமிழ் மற்றும் வடமொழி
கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
C) ஆங்கிலம் மற்றும் தமிழ்
கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
D) தமிழும் வடமொழியும் ஒரே
மொழிக்குடும்பம் என்ற ஆய்வை மேற்கொண்டார்
74. ஜி.யு.போப் தம் இறுதி காலத்தில் பதிப்பித்த நூல் எது ?
A) புறப்பொருள் வெண்பா மாலை
B) புறநானூறு
C) திருவருட்பயன்
D) இவையனைத்தும்
75. ‘தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன்
என்னைப் படைத்தான்’ என்று கூறியவர் ?
A) நாமக்கல் கவிஞர்
B) தேவநேயப் பாவாணர்
C) கண்ணதாசன்
D) வள்ளலார்
76. 600 பாடல்களை அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து
அப்பாடல்களுக்கு விளக்கமும் தந்து ஜி.யு.போப் வெளியிட்ட நூல்
A) சதுரகராதி
B) தமிழ்ச் செய்யுட் கலம்பகம்
C) தனிப்பாடல் திரட்டு
D) பாவிய கொத்து
77. அமுதசுரபி முற்பிறப்பில் யாரிடம் இருந்தது என்பதனை
அறிந்து மணிமேகலை அவரைக் காணச் சென்றாள்?
A) ஆபுத்திரன்
B) அறவண அடிகள்
C) மந்திரமாலா
D) நளன்
78. சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப்
பாராட்டியவர் யார் ?
A) சேரன் செங்குட்டுவன்
B) இளங்கண்டீரக்கோ
C) சேரமான் பெருமாள் நாயனார்
D) இளங்கோவடிகள்
79. தென்மொழி என்ற இதழின் மூலம் தமிழரிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தியவர் யார் ?
A) சி.இலக்குவனார்
B) பெருஞ்சித்திரனார்
C) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D) உ.வே.சாமிநாதர்
80. ஜி.யு.போப் தமிழகம் வர பாய்மரக் கப்பலில் பயணம் செய்த
காலத்தில் எம்மொழியைக் கற்றார் ?
A) தமிழ் மற்றும் வடமொழி
B) தமிழ் மற்றும் இந்துத்தாணி
C) தமிழ் மற்றும் தெலுங்கு
D) வடமொழி மற்றும்
இந்துத்தாணி
81. வீரமாமுனிவர் அறிந்த மொழி எது ?
A) ஆங்கிலம்
B) எபிரேயம்
C) தெலுங்கு
D) இவை அனைத்தும்
82. தனித் தமிழ் ஊற்று என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) மறைமலையடிகள்
B) பரிதிமாற் கலைஞர்
C) கால்டுவெல்
D) தேவநேயப் பாவாணர்
83. பாவியக்கொத்து என்ற நூலை இயற்றியவர் யார் ?
A) பாவலரேறு
B) கவிஞரேறு
C) இலக்கிய புலவர் சிங்கம்
D) தமிழ்நாட்டின்
ரசூல்கம்சதேவ்
84. வீரமாமுனிவர் இயற்றிய நூல் எது ?
A) இலக்கண சுருக்கம்
B) பரமார்த்த குரு கதை
C) இலக்கண சூறாவளி
D) பெரியபுராணம்
85. வீரமாமுனிவர் பிறந்த நாடு ?
A) பிரான்ஸ்
B) அமெரிக்கா
C) இத்தாலி
D) எட்வர்டு தீவு
86. கல்கி அவர்களால் ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப்பட்டவர்
யார் ?
A) பம்மல் சம்பந்தனார்
B) சங்கரதாசு சுவாமிகள்
C) தி.க.சண்முகம்
D) அறிஞர் அண்ணா
87. தமிழகத்தில் இருமொழிச் சட்டத்தை உருவாக்கியவர் ?
A) அறிஞர் அண்ணா
B) காமராசர்
C) பக்தவச்சலம்
D) குமாரசாமி
88. சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மனிதர்களை
இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றவர் யார்
?
A) தந்தை பெரியார்
B) அண்ணல் அம்பேத்கர்
C) அறிஞர் அண்ணா
D) முத்துராமலிங்கர்
89. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
A) 1935
B) 1923
C) 1925
D) 1952
90. அழை என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது ?
A) அழைத்தான்
B) அழைத்தல்
C) அழைத்து
D) அழைத்தாரை
91. கண் என்னும் பொருளைத் தரும் கொண் என்னும் அடிச்சொல்
எம்மொழியைச் சார்ந்தது?
A) தோடா
B) பர்ஜி
C) தெலுங்கு
D) கன்னடம்
92. நூறாசிரியம் என்ற நுலை இயற்றியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) அப்துல் ரகுமான்
C) பெருஞ்சித்திரனார்
D) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
93. திரையுலக அகத்தியர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
A) அ.மருதகாசி
B) கே.பாலச்சந்தர்
C) அறிஞர் அண்ணா
D) கே.பாக்யராஜ்
94. கொய் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க ?
A) கொய்து
B) கொய்த
C) கொய்தல்
D) கொய்தாரை
95. அறிஞர் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது ?
A) நம்நாடு
B) ஹோம்ரூல்
C) திராவிட நாடு
D) குடியரசு
96. எதையும்
தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறியவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) கண்ணதாசன்
C) தந்தை பெரியார்
D) காமராசர்
97. ஜி.யு.போப் பிறந்த இடம் ?
A) பிஜித் தீவு
B) எட்வர்டு தீவு
C) ஆஸ்திரேலியா
D) கரீபியன் தீவு
98. மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பிறந்த
சீத்தலை என்னும் ஊர் எதன் அருகில் உள்ளது ?
A) மதுரை
B) திருச்சிராப்பள்ளி
C) கோவன்புத்தூர்
D) திருச்சீரலைவாய்
99. துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றிய தமிழ்ச்சான்றோர்
யார்?
A) டாக்டர் மு.வரதராசனார்
B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C) உ.வே.சாமிநாதர்
D) பெருஞ்சித்திரனார்
100. 1966-ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதி
வெளியிட்டவர்
A) மறைமலையடிகள்
B) தேவநேயபாவாணர்
C) பரிதிமாற்கலைஞர்
D) ஜி.யு.போப்
DOWNLOAD PDF FILES - LINKS