21 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 21 WITH ANSWER KEY FREE DOWNLOAD - 8th std (2022 New Syllabus) - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 21 (எட்டாம் வகுப்பு) விடையுடன் இலவச பதிவிறக்கம் - எட்டாம் வகுப்பு

 

TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 21 WITH ANSWER KEY 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 21 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

எட்டாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



2022 புதிய பாடத்திட்டம்

இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அன்பிற்கினிய தேர்வர் சொந்தங்களே ! கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக தேர்வாணையத்தின் தேர்வுகளில், திருக்குறளை எழுதியவர் யார் ? கம்பராமாயணத்தை எழுதியவர் யார் ? என்ற வினாக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வினாக்கள் தங்களுக்கு தற்போது எவ்வளவு எளிதான வினாவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அவ்வாறான மிக எளிமையான வினாக்கள் கேட்கப்படுகின்றனவா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
  • இதை தற்போது ஏன் தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றால், தேர்வர்களின் அறிவு முதிர்ச்சியின் காரணமாகவும், தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாகவும், தேர்வாணையத்தின் வினாக்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து,  தங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே.
  • கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் கடினத் தன்மை தேர்வுக்கு தேர்வு அதிகரித்து வந்திருப்பதை பழைய வினாக்களை பார்க்கும் போது தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
  • எனவேதான் இந்த மாதிரித்  தேர்வு, கடினமாக இருக்கும் வகையில் சில வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. கடினமான வினாக்களை அணுகிவிட்டால், எளிமையான வினாக்களுக்கு விடையளிப்பது உங்களுக்கு சுலபமாகிவிடும் என்ற எண்ணத்திலும், தேர்வாணையத்தின் வினா தொகுக்கும் முறையில் அவ்வப்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டும், இந்த மாதிரித் தேர்வு 21 (எட்டாம் வகுப்பு புதிய புத்தகம்) வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதே போன்றுதான் கடிமாக தேர்வாணைய தேர்வில் வினாக்கள் அமைக்கப்படும் என்று பொருள் கொள்ள வேண்டாம். இப்படியாக சில கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. 
  • இந்த பதிவில், 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு புதிய மற்றும் பழைய பாடப் புத்தகத்திலிருந்து வினாக்கள்  தொகுக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் அடிப்படையிலும், பாடத்திட்டத்தில் இடம்பெறாத வினாக்கள் இதற்கு முன்பாக தேர்வுகளில் பாடப்புத்தகத்தில் இருந்து எவ்வாறு வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன என்ற முன் நிகழ்வுகளின் அடிப்படையிலும் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

MODEL QUESTION PAPER 21 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 

































மாதிரி வினாத்தாள் -21  👇

மாதிரி வினாத்தாள்- 21 (100 வினாக்கள்)

1. வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்- என்று பாடியவர் யார்?

A) முடியரசன்

B) வள்ளலார்

C) திருத்தணிகைச் சரவணப் பெருமாள்

D) குணங்குடி மஸ்தான் சாகிபு



2. சரியாக பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க ?

A) கண்டபோதெல்லாம் = கண்டுபோது + எல்லாம்

B) பசியறாது = பசி + யறாது

C) வீடுதோறிரந்தும் = வீடுதோறும் + இரந்தும்

D) கண்டுளம் = கண்டு + உள்ளம்



3. உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழைமையானது எது ?

A) வானியல்

B) தருக்கவியல்

C) ரசாயணவியல்

D) பௌதிகம்



4. ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்... என்று குறிப்பிடும் நூல் எது ?

A) தொல்காப்பியம்

B) பட்டினப்பாலை

C) கலித்தொகை

D) புறநானூறு



5. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது ?

A) ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.

B) தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும், ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று

ஒளிவிடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர்.

C) செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என பழந்தமிழர் அழைத்தனர்.

D) வெண்மை நிறமுடைய கோளை வியாழன் என அழைத்தனர்.



6. உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என பதினைந்தாம் நூற்றாண்டில் முறையாகக் கணித்துக் கூறிய நிக்கோலஸ்கிராப்ஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

A) போலந்து

B) கிரேக்கம்

C) ஜெர்மனி

D) இத்தாலி



7. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி?

1. கோள்களின் நிறம், வடிவம், அதன் தன்மை முதலியவற்றைத் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்

2. சங்க காலத்திலேயே ஓட்டுநர் இல்லா வானவூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தி புறப்பாடல் வரியின் மூலம் அறிய முடிகிறது.

3. சிலம்பு, மணிமேகலையில் வான்வழிப் பயணங்கள்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

4. சீவகசிந்தாமணியில் மயிற்பொறி விமானத்தின் செயல்திறனும், கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானமும், பெருங்கதையில் வானூர்தி வடிவமும், அதனை இயக்கும் முறைமையும்பற்றிய வான்பயணச் செய்திகள் காணப்படுகின்றன.

A) 1, 2, 4 மட்டும் சரி

B) 1, 2, 3 மட்டும் சரி

C) அனைத்தும் தவறு

D) அனைத்தும் சரி



8. உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப்பற்றிய உரையாடல் என்னும் தலைப்பிலும், புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்னும் தலைப்பிலும் மிகச்சிறந்த நூல்களை எழுதி வெளியிட்டவர் யார் ?

A) ஐசக் நியூட்டன்

B) கலீலியோ

C) கோபர்நிகசு

D) அரிஸ்டாட்டில்



9. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க ?

1. பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் கண்ணதாசனுக்கு வழங்கப்பெற்றது.

2. பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு, முடியரசனுக்கு பரிசு வழங்கியது.

3. பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் வாணிதாசன் ஆவார்.

4. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக கண்ணதாசன் பணியாற்றினார்.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 2, 4 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி



10. சரியற்ற தொடரைக் காண்க.

A) நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால், அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.

B) விகாரப்புணர்ச்சி தோன்றல், கெடுதல், திரிதல் என மூவகைப்படும்.

C) இருசொற்கள் இணைவதற்குப் விகாரம் என்பது பெயர்.

D) நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது இயல்புப் புணர்ச்சி



11. புணர்ச்சி தொடர்பான சரியான இணையைக் கண்டறிக ?

A) இயல்புப்புணர்ச்சி - பாடம் + வேளை

B) தோன்றல் - பொன் + குடம்

C) திரிதல் - பல் + பொடி

D) கெடுதல் - தமிழ் + மண்



12. எட்டயபுரத்து அரசவையில் பாரதி சின்னப் பயல் என்னும் ஈற்றடியைக் கொடுத்துப் பாரதியாரிடம் பாடல் ஒன்றனைப் பாடச்சொன்னவர் யார்?

A) எட்டயபுரம் மன்னர்

B) சோமசுந்தர பாரதியார்

C) சொக்கநாதப்புலவர்

D) காந்திமதிநாதன்



13. சந்திப்பிழை நீக்கிய தொடரைக் காண்க ?

A) வெள்ளிக் கிண்ணம் விலையதிகம்.

B) நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி.

C) தைதிங்கள் நன்னாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

D) பால்பருக தந்தான்.



14. வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் யார் ?

A) சடையப்ப வள்ளல்

B) அபுல்காசிம் மரைக்காயர்

C) சந்திரன் சுவர்க்கி

D) வரபதி ஆட்கொண்டான்



15. ‘பொய் சொல்லா மாணிக்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) திரு.வி.க

B) வ. சுப. மா

C) கு.ப.ரா

D) மீரா



16. இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைந்த நூலின் பெயர் என்ன?

A) இரகசிய வழி

B) திருவருட்பா

C) திருவாசகம்

D) தேம்பாவணி



17. சொற்கள் முறையாக அமைந்துள்ள திருக்குறளைக் காண்க.

A) எண்பதத்தால் எய்தல் யார்மாட்டும் எளிதென்ப

பண்புடைமை என்னும் வழக்கு.

B) பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

C) அன்புடைமை குடிப்பிறத்தல் ஆன்ற இவ்விரண்டும்

வழக்கு என்னும் பண்புடைமை.

D) நகையுள்ளும் பாடறிவார் மாட்டு பண்புள

பகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி.



18. ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்

உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன் - இவ்வடியில் நின் திருநாமம் என்பது யாரைக் குறிக்கும் ?

A) நளன்

B) கன்னன்

C) கண்ணன்

D) சிவபெருமான்



19. தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்

தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன் என்று பாடியவர் யார் ?

A) முடியரசன்

B) வில்லிபுத்தூரார்

C) பாரதியார்

D) தாராபாரதி



20. வில்லிபாரதத்தின் எட்டாம் பருவம் எது ?

A) குருஷேத்திர பருவம்

B) கன்னபருவம்

C) துவாரகா பருவம்

D) முக்தி பருவம்



21. சரியான பொருளுடன் பொருத்தப்படாத சொல்லைத் தேர்க

A) களபம் - சந்தனம்

B) பகழி - பொய்கை

C) துழாய் அலங்கல் - துளசிமாலை

D) நாமம் - பெயர்



22. தவறான கூற்றினை கண்டறிக.?

A) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் கால்டுவெல்.

B) தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்.

C) தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

D) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர்.



23. தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர் யார்?

A) தமிழ்ப்பெருங் காவலர்

B) பெருநாவலர்

C) தமிழ்த்தென்றல்

D) மக்கள் கவிஞர்



24. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க ?

1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ்

2. இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ்.

3. பத்துப் பருவங்கள் அமைத்துப் பருவத்திற்குப் பத்துப் பாடலென நூறு பாடலால்

4. பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்து இயம்புவது பிள்ளைத்தமிழ்.

5. பத்துப் பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை.

6. இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும், அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.

7. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் சுவாமிமலை முருகன் மீது பாடப்பட்டுள்ளது

A) 2, 4, 5, 7 மட்டும் சரி

B) 1, 2, 3, 4, 5, 6 மட்டும் சரி

C) 1, 2, 4, 5 மட்டும் சரி

D) அனைத்தும் சரி



25. ‘எள்ளல், இளமை, அறியாமை, மடமை’ ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்று கூறும் நூல் ?

A) தொல்காப்பியம்

B) திருக்குறள்

C) நன்னூல்

D) புறானூறு



26. மன்னிப்பு என்ற சொல் எந்த மொழிச் சொல் ?

A) தமிழ்

B) உருது

C) இந்தி

D) மலையாளம்



27. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் எவ்வெழுத்துகள் மிகும்?

A) க்ச்த்ப்

B) க்ச்ட்த்ப்ற்

C) ய்ர்ல்வ்ழ்ல்

D) ங்ஞ்ண்ந்ம்ன்



28. திருவள்ளுவமாலை தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்ட தனிநூல்.

B) இதில் ஐம்பத்தைந்து பாடல்களை ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.

C) இதில் கபிலர் இயற்றிய மூன்றாவது பாடல் பண்டைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகின்றது.

D) திருவள்ளுவலையை தொகுத்தவர் மலையத்துவசன் மகன்



29. எந்த இதழின் செய்தியாளர் இந்தியா - சீனா போரின் போது, நேரடியாக போர் நடைபறும் இடத்திற்கே சென்று செய்திகளைத் திரட்டினார் ?

A) இண்டியா டுடே

B) டைம்ஸ் ஆஃப் இண்டியா

C) லண்டன் டைம்ஸ்

D) அமெரிக்கன் டைம்ஸ்



30. தான் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்த போது, எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு என்று வெளியேறிய தன்மானமிக்க தமிழ்ச் சான்றோர் யார் ?

A) பாரதிதாசன்

B) தேவநேயப் பாவாணர்

C) இராமலிங்க அடிகள்

D) பரிதிமாற்கலைஞர்



31. நகைச்சுவைக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) மருமக்கள் வழி மான்மியம்

B) சிரிக்கும் பூக்கள்

C) கண்ணகி புரட்சிக் காப்பியம்

D) திருக்காவலூர்க் கலம்பகம்



32. அசலாம்பிகை அம்மையார் தொடர்பான தவறான கூற்றைக் காண்க.

A. திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் பிறந்தார்.

B. திரு.வி.க வால் இக்கால ஔவையார் என்று புகழப்பட்டார்.

C. பாரதமாதாவை கதை மாந்தராகக் கொண்டு காந்தி புராணம் இயற்றினார்

D. ஆத்திக்சூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.



33. வேலுநாச்சியார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) கி.பி. 1735 ல் பிறந்தார்

B) சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

C) ஆங்கிலேயரை எதிர்க்க 5000 படை வீரர்களை வேலுநாச்சியாருடன் ஹைதர் அலி அனுப்பி வைத்தார்

D) மருது சகோதர்களுடன் வீரர்படைக்கு தலைமையேற்றுச் சென்று தன் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780 ல் சிவகங்கையை மீட்டார்.



34. உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் யாருடைய ஆய்வுப்புலத்தின் இரு கண்களாக விலங்கியது?

A) எல்லீஸ்

B) ரா.பி.சேதுப்பிள்ளை

C) பரிதிமாற்கலைஞர்

D) தேவநேயப் பாவாணர்



35. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க ?

1. தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

2. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் யாப்பின் உறுப்புகளாகும்.

3. ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.

4. அசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.

5. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.

6. இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.

7. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகியன பாவின் வகைகள்.

A) 1, 2, 3, 4 மட்டும் சரி

B) 4, 5, 6, 7 மட்டும் சரி

C) 2, 3, 4, 5, 6, 7 மட்டும் சரி

D) அனைத்தும் சரி



36. பொருத்துக

1. மக்கள் - அ) கற்றை

2. வீரர் - ஆ) கட்டு

3. விறகு - இ) கூட்டம்

4. சுள்ளி - ஈ) படை



1. 2. 3. 4.

A. இ ஈ ஆ அ

B. இ ஈ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. ஈ இ ஆ அ



37. கதிரவன் வழிபட்ட இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) கதிராமங்கலம்

B) வெய்யோன்படுகை

C) கோனார்க்

D) பரிதிபுரி



38. அஞ்சலையம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) கி.பி.1895 ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்

B) 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்

C) இவரை மகாத்மா காந்தியடிகள் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்.

D) நீலன்சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், வெள்ளையனே வேளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டார்.



39. அம்புஜத்தம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.

B) கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.

C) 08.02.1899-ல் விருதுநகரில் பிறந்தார்

D) வை.மு. கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக் கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.



40. தேம்பாவணி தொடர்பான தவறான கூற்றைக் கண்டறிக.

A) கிறித்தவச் சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

B) தேம்பாவணி நூலை வாடாத மாலை, தேன் போன்ற இனிய பாடல்கiளால் ஆன மாலை என பொருள் கொள்ளலாம்.

C) இந்நூலில் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.

D) இந்நூல் சூசையப்பரின் வளர்ப்பு மகனான யேசு நாதரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது.



41. பம்மல் சம்பந்தனார் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.

A. தமிழ்நாடக தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுகிறார்.

B. சேக்சுபியரின் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

C. மனோகரன் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.

D. நாடக மேடை நினைவுகள் மற்றம் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி என்னும் தலைப்பில் தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.



42. கம்பர் தொடர்பான தவறான கூற்றினைக் கண்டறிக.

A) நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.

B) கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்

C) கம்பர் இயற்றிய நூல் - திருக்கை வழக்கம்

D) கம்பர் வாழ்ந்த காலம் - கி.பி 15 ஆம் நூற்றாண்டு



43. பொருத்துக

1. ஆடுகொடி - அ) வேற்றுமைத் தொகை

2. வெண்ணிலவு - ஆ) உம்மைத் தொகை

3. இட்டலி வடை - இ ) பண்புத் தொகை

4. வேலன் மகன் - ஈ) வினைத் தொகை



1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. ஈ இ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. ஈ இ ஆ அ



44. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) பேதையார் நட்பு - தேய்பிறை போன்றது

B) பண்புடையாளர் தொடர்பு - நவில்தொறும் நூல்நயம் போன்றது

C) அறிவுடையாளர் நட்பு - வளர்பிறை போன்றது

D) இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்தவர் தாள் போன்றது



45. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) கணினியின் தந்தை - சார்லஸ் பாபேஜ்

B) முதல் செயல்திட்ட வரைவாளர் - லேடி லவ்லேஸ்

C) கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தவர் - பிளேஸ் பாஸ்கல்

D) இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் - பிம்பெர்னர் லீ



46. பொருத்துக

1. துயில் - அ) வினைத் திரிசொல்

2. கேணி - ஆ) பெயர்ச் திரிசொல்

3. புஷ்பம் - இ) திசைச் சொல்

4. விளி - ஈ) வடசொல்

1. 2. 3. 4.

A. அ இ ஆ ஈ

B. இ அ ஈ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ



47. புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பரிபாடல்

D) கலித்தொகை



48. சுயம்வரக் காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் ஆகிய காண்டங்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) திருவருட்பா

B) தேம்பாவணி

C) பாஞ்சாலி சபதம்

D) நளவெண்பா



49. சந்திப்பிழை நீக்கிய தொடரைக் காண்க

A) சித்திரைத் திங்களில் வந்து பார்க்கும்படி கூறினார்.

B) வ. உ. சிதம்பரனார்ச் செய்ந்நன்றி மறவா செம்மல் ஆவார்.

C) இராமன் மாயமானை தேடி சென்றான்.

D) சொற்களை பகாபதம், பகுப்பதம் என இருவகைபடுத்துவர்.



50. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

அலகு அளகு அழகு

A. பறவையின் மூக்கு ஆண்மயில் எழில்

B. பெண்மயில் மூக்கு வான்கோழி வனப்பு

C. பறவையின் மூக்கு பெண்மயில் கவின்

D. பெண்மயில் பறவையின் மூக்கு எழில்



51. மயங்கொலிப் பிழைகள் நீக்கிய தொடரைக் காண்க.

A) ‘இன்று பணி ப்பொழிவு மிகுதியாக உள்ளதனால், இரவுப் பனி செய்வது கடினம்’ எனக் கண்ணன் கூறினான்.

B) வேல்விழி கோடை விடுமுறையைக் கலிப்புடன் கழிக்க விரும்பினாள்.

C) வளி சுழன்று வீசியதனால் வழி தவறிய வளவன் கல்லில் மோதிக் கீழே

விழுந்து வலியால் துடித்தான்

D) யாரோ தன்னை விழிக்கும் குரல் கேட்ட முருகன், கண் விளித்துப் பார்த்தான்.



52. நகைச்சுவை களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல் ?

A) இருண்ட வீடு

B) அழகின் சிரிப்பு

C) சாம்புவின் கதைகள்

D) மருமக்கள்வழி மான்மியம்



53. வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில்

வரும் தொடர் எது ?

A) வினாத் தொடர்

B) செய்வினைத் தொடர்

C) விழைவுத் தொடர்

D) தன்வினைத் தொடர்



54. "பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீட்டு அறையிலே நடப்பதனை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம்; மயில் அப்படிப் பார்க்காதாம்" எனக் நகைச்சுவையுடன் கூறியவர் யார் ?

A) ஈசான தேசிகர்

B) மயிலேறும் பெருமாள்

C) நாஞ்சில் நாட்டுக் கவிஞர்

D) பாரதிதாசன்



55. இவற்றில் சோறு என்னும் பொருள் தராத சொல் எது ?

A) துற்றி

B) பதம்

C) உரை

D) பாத்து



56. வளைகதிர் வல்சிகொண் டளைமல்க என்னும் புறாநானூற்றுப் வரியில் சோறு என்று பொருள்தரும் சொல் எது ?

A) கதிர்

B) வல்சி

C) வளை

D) அளை



57. பொருந்தாத சொல்லைக் கண்டறிக?

A) கூறு

B) விளம்பு

C) மொழி

D) கூர்



58. கண்இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி

நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்

அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு - இந்த செய்யுளின் பாவகையைக் குறிப்பிடுக

A) குறள் வெண்பா

B) நேரிசை வெண்பா.

C) கலிப்பா

D) வஞ்சிப்பா



59. புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

A) உருவக அணி

B) எடுத்துக்காட்டு உவமையணி

C) சொற்பொருள் பின்வருநிலையணி

D) ஏகதேச உருவக அணி



60. தவறான கூற்றினை கண்டறிக

A) நகைச்சுவையுணர்வு இல்லாதவர்க்குப் பகலும் இருளாகத் தோன்றும் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்

B) காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கூறினார்.

C) ‘‘உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும், எழுச்சிக்கும் நகைப்பு ஓர் அறிகுறி’’ என மேனாட்டு அறிஞர்கள் கூறினர்.

D) கவி காளமேகம் இருபொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர்.



61. சம்புவின் கனி என்று அழைக்கப்படுவது எது ?

A) நெருஞ்சிப் பழம்

B) மாங்கனி

C) நாவல் பழம்

D) கொய்யாக் கனி



62. காந்தி புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

A) 3024

B) 1824

C) 2034

D) 3000



63. காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எது ?

A) தெரிநிலை பெயெரெச்சம்

B) குறிப்பு பெயரெச்சம்

C) ஈறுகெட்ட எதிர்மறை பெயெரெச்சம்

D) வினைத் தொகை



64. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. என்று பாடியவர் யார் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) இளங்கோவடிகள்

D) கவிமணி



65. பொருந்தாத இணையை கண்டறிக ?

A) தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை - உறவுமுறை

B) ஆடிப்பட்டம் தேடி விதை - உழவு

C) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே - அறிவுரை

D) பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு - நம்பிக்கை



66. ஜி.யு போப் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்ட ஆண்டு ?

A) 1896

B) 1901

C) 1900

D) 1897



67. பெயர்ச் சொல்லின் பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை எது?

A) இரண்டாம் வேற்றுமை

B) மூன்றாம் வேற்றுமை

C) நான்காம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



68. எவ்வகைத் தொடர் என கண்டறிக - நீடூழி வாழ்க !

A) விழைவுத் தொடர்

B) வினாத் தொடர்

C) உணர்ச்சித் தொடர்

D) எதிர்மறைத் தொடர்



69. குணங்குடி மஸ்தான் சாகிபு தொடர்பான சரியற்ற கூற்றினைக் காண்க?

A) "மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு.

B) சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று, தனித்திருந்து

ஞானம் பெற்றார். குணங்குடி மஸ்தான் சாகிபு.

C) வள்ளலாரின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்; எனவே அவருடைய பாடல்களைப் போலவே ஓசைநயமிக்க இசுலாமியப் பாடல்களை இயற்றி அருளினார்.

D) பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலியன இவர் பாடிய வேறு சில கண்ணிகள்.



70. நான்கு பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து வந்து தெய்வம், அரசன், வள்ளல் குரு முதலியோரின் சிறப்பினைக் கற்பனை செய்து பாடுவது ?

A) பேரிலக்கியம்

B) சிற்றிலக்கியம்

C) இதிகாசம்

D) புராணம்



71. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) பிரகலாதன்

B) சிறுதொண்டர்

C) இலவகுசா

D) மனோகரன்



72. நீலாம்பிகை என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடு.

A) நீலாயி

B) கருப்பாயி

C) வேலாயி

D) நற்சேனை



73. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார் ?

A) கம்பர்

B) திருமூலர்

C) இளங்கோவடிகள்

D) சுப்பிரமணிய பாரதி



74. வள்ளை என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?

A) உலக்கைப் பாட்டு

B) ஒருவகை நீர்க்கொடி

C) நிறப்பெயர்

D) A மற்றும் B



75. நாடகம் என்னும் சொல்லின் பொருள் யாது ?

A) உன்னுள் நோக்கு

B) உன்னை உணர்

C) அகத்தை நாடு

D) இவையனைத்தும்



76. திருவருட்பா நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

A) 5188

B) 8515

C) 5818

D) 8155



77. காசியிலும், திருப்பனந்தாலிலும் தம்பெயரால் மடம் நிறுவியவர் யார் ?

A) இராமலிங்க வள்ளலார்

B) ஆதி சங்கரர்

C) குமரகுருபரர்

D) தாயுமானவர்



78. திருவருட்பா நூலில் உள்ள " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் " என்ற பாடல் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது ?

A) துகிலுரிதல் படலம்

B) மங்கலம்

C) கங்கைகாண் படலம்

D) பிள்ளைப்பெரு விண்ணப்பம்



79. சரியான பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க

A) அருளென்றாள் = அருளென்று + ஆள்

B) கோடிடறி = கோடு + இடறி

C) நுண்ணறிவு = நுண்மை + அறிவு

D) பசுந்தலை = பசு + தலை



80. நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் ஆதலின்... என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) இசையமுது

B) திருவருட்பா

C) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

D) தொல்காப்பியம்



81. கண் + அழகு = கண்ணழகு இப்புணர்ச்சியில் எந்த புணர்ச்சி விதி பொருந்தும் ?

A) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்

B) தனிக்குறில் முன்றொற் றுயிர்வரி னிரட்டும்

C) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

D) இ, ஈ, ஐ வழி யவ்வும்



82. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப்படும் பயன்படும் வேற்றுமை ?

A) இரண்டாம் வேற்றுமை

B) மூன்றாம் வேற்றுமை

C) ஐந்தாம் வேற்றுமை

D) விளி வேற்றுமை



83. சொற்களை ஒழுங்குபடத்தி சொற்றொடராக்குக.

A) பார்விட் டந்தர மடைந்தா னன்றே அஞ்சலை அரக்க !

B) அரக்க அஞ்சலை ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே

C) அஞ்சலை அரக்க ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே

D) பார்விட் டந்தர அரக்க ! மடைந்தா னன்றே அஞ்சலை



84. ஜி.யு.போப் தம் இறுதி காலத்தில் பதிப்பித்த நூல்?

A) புறப்பொருள் வெண்பா மாலை

B) புறநானூறு

C) திருவருட்பயன்

D) இவை அனைத்தும்



85. தமிழ்நாட்டின் முதல் தேசிய நாடகம் எது ?

A) கதரின் வெற்றி

B) டம்பாசாரி விலாசம்

C) தேசியக் கொடி

D) தேச பக்தி



86. இயல்புப் புணர்ச்சி சொல் எது என கண்டறிக ?

A) பனைமரம்

B) பாடவேளை

C) பொற்குடம்

D) வாழைக்குலை



87. கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு ; நானோர் தும்பி என்று பாடியவர் யார் ?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) முடியரசன்

D) வாணிதாசன்



88. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார் ?

A) ஔவையார்

B) கபிலர்

C) இடைக்காடனார்

D) நக்கீரர்



89. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே என்று பாடியவர் யார் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) க.சச்சிதானந்தன்

D) பூதஞ்சேந்தனார்



90. "நெடுநாளாக பள்ளத்தில் நாம் வீழ்ந்து கிடந்தோம், நம்மை எல்லாம் குள்ளத்தில் அகத்தியராம் அறிஞர் அண்ணா கோபுரத்தில் கலசம்போல் தூக்கி வைத்தார்" என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்ந்தவர் யார் ?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) முடியரசன்

D) சுரதா



91. மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படும் இடம் எது ?

A) கீழார்வெளி

B) மெசபடோமியா

C) அரிக்கமேடு

D) லெமூரியா



92. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) நான் வாங்கிய நூல் இது அன்று

B) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக் கருவி என்ற கருவி பயன்படுகின்றன.

C) இன்று பேருந்துகள் ஓடாது

D) ஓர் அணில் மரத்தில் ஏறின.



93. பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை எனும் பாடலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த திருத்தாண்டகப் பாடலை எழுதியவர் யார் ?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) மாணிக்கவாசகர்

D) சுந்தரர்



94. தவறான இணையைக் கண்டறிக.

A) செழுந்துயில் - அன்மொழித் தொகை

B) இகலவர் - குறிப்பு வினையாலனையும் பெயர்

C) திகழ்சிரம் - வினைத் தொகை

D) அறிகிலார் - எதிர்மறை வினையாலனையும் பெயர்



95. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - பசுமரத்தாணி போல

A) புகழ் பெறுதல்

B) வேகமாக படித்தல்

C) மேன்மை

D) இளமையில் கல்வி



96. நிலத்திற்கு அணி : நெல்லும் கரும்பும், எனில் பெண்ணுக்கு அணி :------- ?

A) அச்சம்

B) மடம்

C) நாணம்

D) பயிர்ப்பு



97. இந்திய அரசியலில் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) தீரர் சத்தியமூர்த்தி

B) காமராஜர்

C) அறிஞர் அண்ணா

D) மூதறிஞர் இராஜாஜி



98. சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற செம்மை நலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம் என பாரதியை புகழ்ந்தவர் யார்?

A) வாணிதாசன்

B) குணங்குடிமஸ்தான் சாகிபு

C) மறைமலையடிகள்

D) பாரதிதாசன்



99. பெயர்ச்சொல் வகை அறிக - கண்ணன்

A) சினைப்பெயர்

B) இடப்பெயர்

C) காலப்பெயர்

D) தொழிற்பெயர்



100. எவ்வகைத் தொடர் எனக் காண்க - மைதிலி வந்தனள் பாடினள்.

A) வினையெச்சத் தொடர்

B) வினைமுற்றுத் தொடர்

C) முற்றெச்சத் தொடர்

D) பெயரெச்சத் தொடர்

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download


Download All Model question Paper Click Here > DOWNLOAD

FOR ONLINE TEST CLICK HERE  CLICK HERE  

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post