1. திருக்குற்றால குறவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார் ?
A) கம்பர்
B) ஒட்டக்கூத்தர்
C) திரிகூட ராசப்பக் கவிராயர்
D) வீரமாமுனிவர்
2. Tea என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
A) டீ
B) கொட்டை வடிநீர்
C) தேனீர்
D) தேநீர்
3. துன்னலர் என்ற சொல்லின் பொருளைக் கூறுக.
A) பகைவர்
B) அழகிய மலர்
C) செறுநர்
D) இவை அனைத்தும்
4. மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது ?
A) குத்துதூசி
B) எழுதுகோல்
C) பேனா
D) தந்தம்
5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது ?
A) பன்னிரு பாட்டியல்
B) நன்னூல்
C) புறப்பொருள் வெண்பாமாலை
D) தொல்காப்பியம்.
6. பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின் எனத் தொடங்கும் பாடலில் யாருடைய வீரம் போற்றப்படுகிறது ?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
7. ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலை எழுதியவர் யார் ?
A) குன்றக்குடி அடிகளார்
B) கண்ணதாசன்
C) பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
D) அறிஞர் அண்ணா
8. திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே, மொய்யிலைவேல்
மாறன் களிறு - இத்தொடரில் மாறன் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A) சேரன்
B) சோழன்
C) பாண்டியன்
D) பல்லவன்
9. அறிஞர் அண்ணாவுக்கு விருப்பமான இலக்கியம் எது ?
A) கலிங்கத்துப் பரணி
B) புறநானூறு
C) கம்பரசம்
D) சிலப்பதிகாரம்
10. இணையான தமிழ்ப் பழமொழியை அறிக - Look before you leap.
A) மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை.
B) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை.
C) புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்டாற்போல்
D) ஆழம் அறியாமல் காலை விடாதே.
11. இணையான தமிழ்ப் பழமொழியை அறிக - There is danger in men’s smiles.
A) தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்
B) நிழலின் அருமை வெயிலில் தெரியும்
C) பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல
D) கோபம் குலத்தைக் கெடுக்கும்
12. Every tids has its ebb - இணையான தமிழ்த் தொடரைக் காண்க
A) ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
B) செய்வன திருந்தச் செய்
C) பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்
D) நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
13. Order of nature என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க?
A) இயற்கை ஆணை
B) இயற்கை ஒழுங்கு
C) இயல்பாணை
D) இயற்கை அழகு
14. பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக கிடைக்கப்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் நூல் வெண்பாக்களின் எண்ணிக்கை யாது ?
A) 22
B) 108
C) 599
D) 1975
15. துறை, தாழிசை, அகங்காரம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேருழவர் உழவு செய்ய வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுள் நன்னெறிகளே விதைகளாகும் என்னும் கருத்தை தெரிவிக்கும் நூல் எது
A) இராஜராஜ சோழன் உலா
B) தமிழ்விடுதூது
C) அழகர்கிள்ளை விடுதூது
D) சிலப்பதிகாரம்
16. கலம்பக நூல்களில் முதல் நூல் எது ?
A) நந்திக் கலம்பகம்
B) திருவஞ்சைக் கலம்பகம்
C) திருவாரூர் கலம்பகம்
D) காந்தளூர்க் கலம்பகம்
17. அரியா சனமுனக்கே யானால் உனக்குச் சரியாகும் உண்டோ தமிழே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A) பள்ளிப்பறவைகள்
B) திருக்கை வழக்கம்
C) தமிழ்விடு தூது
D) யேசுகாவியம்
18. பொருத்துக
1. Optimist - அ) கிளை மொழி
2. abstract - ஆ) புலம்படு நிகழ்ச்சி
3. concrete - இ) இன்முகச் செவ்வியல்
4. Dialects - ஈ) கருத்தியல்
1. 2. 3. 4.
A. அ இ ஈ ஆ
B. ஈ இ அ ஆ
C. ஆ ஈ அ இ
D. இ ஈ ஆ அ
19. அகத்தியரை குறுமுனி என்று குறிப்பிடும் நூல் எது ?
A) திருக்குற்றாலக் குறவஞ்சி
B) அகத்தியம்
C) தொன்னூல் விளக்கம்
D) ஏலாதி
20. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்த இலக்கியம் எது ?
A) பள்ளு
B) தூது
C) உலா
D) பிள்ளைத் தமிழ்
21. தூது இலக்கியம் எந்த பாவால் பாடப்பெறல் வேண்டும் ?
A) வெண்டளை விரவிய வெண்பா
B) வெண்டளை விரவிய வஞ்சிப்பா
C) வெண்டளை விரவிய கலிவெண்பா
D) அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
22. கருணாகரத் தொண்டைமானின் வெற்றியைக் குறித்து பாடும் நூல் எது ?
A) கலிங்கத்துப் பரணி
B) முல்லைப்பாட்டு
C) பட்டினப்பாலை
D) முதுமொழிக் காஞ்சி
23. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல் எது ?
A) முக்கூடற்பள்ளு
B) திருமந்திரம்
C) திருவாசகம்
D) திருக்குறள்
24. குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச் சிறப்பாக அமைவது எது ?
A) சொல்லமைப்பு
B) இன்னோசை
C) மொழிநடை
D) பக்திச் சுவை
25. பொருத்துக
1. இராசராசசோழனுலா - அ) பொன்சிவம்
2. திருவேங்கடத்தந்தாதி - ஆ) குமரகுருபரர்
3. மதுரைக் கலம்பகம் - இ) ஒட்டக்கூத்தர்
4. செந்தீயில் வெந்த தாமரை - ஈ) திவ்வியகவி
1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. ஆ ஈ அ இ
C. அ ஈ ஆ இ
D. இ அ ஆ ஈ
26. மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டு வளன், குறிகேட்டல், மழைவேண்டி வழிபடல் முதலான பல உறுப்புகளைக் கொண்டு எழுதப்பெறும் இலக்கியம் எது ?
A) தூது இலக்கியம்
B) பள்ளு இலக்கியம்
C) பிள்ளைத் தமிழ்
D) குறவஞ்சி இலக்கியம்
27. செயங்கொண்டார் எம்மன்னரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்
A) வரகுண பாண்டியன்
B) பாண்டிய நெடுஞ்செழியன்
C) முதலாம் குலோத்துங்கச் சோழன்
D) சூடாமணி பாண்டியன்
28. அறம் வைத்து பாடப்பட்ட நூல் எது ?
A) நந்திக் கலம்பகம்
B) கலிங்கத்துப்பரணி
C) புறநானூறு
D) திருக்குறள்
29. கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை
A) 12
B) 6
C) 18
D) 24
30. பொருத்துக
1. வைதருப்பம் - அ) சித்திரக் கவி
2. கௌடம் - ஆ) ஆசுகவி
3. பாஞ்சாலம் - இ) மதுர கவி
4. மாகதம் - ஈ) வித்தாரக் கவி
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ ஆ அ
C. ஆ அ ஈ இ
D. ஆ இ அ ஈ
31. "ஐஸ்வாட்டர்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைக் காண்க.
A) குளுநீர்
B) பனிநீர்
C) குளிர்நீர்
D) தண்ணீர்
32. "ஃபிரிட்ஜ்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைக் காண்க.
A) குளிர்சாதனப் பெட்டி
B) குளிரூட்டும் பெட்டி
C) குளிர்பதனப் பெட்டி
D) குளுநீர் பெட்டி
33. "கூல் ட்ரிங்ஸ்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைக் காண்க.
A) பனிச்சாறுகள்
B) குளிர்பழரசச் சாறுகள்
C) குளிர்சாறுகள்
D) குளிர்பானம்
34. எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் இருந்ததை தெளிவுபடுத்தும்
நூல்கள் எவை ?
A) குறுந்தொகை, சிலப்பதிகாரம்
B) குறுந்தொகை, பரிபாடல்
C) பரிபாடல், சிலப்பதிகாரம்
D) பரிபாடல், நற்றிணை
35. மறைந்து கொண்டிருந்த ஓவியக் கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் யார் ?
A) சோழர்கள்
B) பாண்டியர்கள்
C) பல்லவர்கள்
D) களப்பிரர்கள்
36. நோக்கினாற் கண்ணிடத்து தம் தொழில் நிறுத்துவோர் என ஓவியர்களுக்கு இலக்கணம் வகுத்தவர் யார் ?
A) இளங்கோவடிகள்
B) நச்சினார்க்கினியர்
C) இளம்பூரணர்
D) பேராசிரியர்
37. பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் குழந்தையின் எந்த மாதம் முதல், பத்து பருவங்கள் பாடப்பெறுகின்றன ?
A) இரண்டாவது மாதம்
B) மூன்றாவது மாதம்
C) நான்காவது மாதம்
D) ஐந்தாவது மாதம்
38. சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்றான பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சாம, தான, வேத, தண்டம் அமையப் பாடப்பெறும் பருவம் எது ?
A) சப்பாணி
B) வருகை
C) முத்தம்
D) அம்புலி
39. பேய்களின் தோற்றம் குறித்து நகைச்சுவையுடன் பாடியவர் யார் ?
A) ஜெயங்கொண்டார்
B) ஒட்டக்கூத்தர்
C) கம்பர்
D) புகழேந்திப் புலவர்
40. பேர் லாகர்கவிஸ்ட் சிறுகதைகளை தமிழில் எழுதியவர் யார் ?
A) ஜி.யு. போப்
B) ஜி.குப்புசாமி
C) அரங்கநாயகம்
D) கா.சு.பிள்ளை
41. கீழ்க்கண்டவற்றுள் கலம்பக உறுப்பு எது ?
A) வண்டு
B) சம்பிரதம்
C) தூது
D) இவையனைத்தும்
42. புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக கிடைக்கப்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் நூல் வெண்பாக்களின் எண்ணிக்கை
A) 108
B) 22
C) 900
D) 801
43. கட்புலனாம் இன்பத்தை தரவல்லது என பழந்தமிழர் எதனைக் கருதினர் ?
A) பேச்சுக் கலை
B) ஆடற்கலை
C) அழகுக் கலை
D) பாடல் கலை
44. ஜெயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
A) துள்ளம்
B) ஒட்டப்பிடாரம்
C) எண்ணெய்க்கிராமம்
D) தீபங்குடி
45. மொழி என்பது கருத்தை பிறர்க்கு உணர்ச்சியோடு விளக்கக் கூடிய ஆற்றல் உடையதாக் இருந்து மொழி அழகு பெறுவதை தொல்காப்பியம் எவ்வாறு சுட்டுகிறது?
A) சுவை
B) குரல்
C) விறல்
D) விரல்
46. நல்லொழுக்கக் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
A) ஆழி.வே.இராமசாமி
B) ஔவையார்
C) தூரன்
D) அப்துல் ரகுமான்
47. "பார்புகழும் பரமார்த்த குரு கதைகள்" என்னும் நூலை எழுதியவர் யார் ?
A) மாயுரம் வேதநாயகம் பிள்ளை
B) வீரமாமுனிவர்
C) ஸ்ரீமதி எஸ். இலட்சுமி
D) ராஜம் கிருஷ்ணன்
48. சிறுகதையின் வள்ளுவர் என அழைக்கப்படுபவர் யார் ?
A) புதுமைப்பித்தன்
B) வ.வே.சு ஐயர்
C) கு.ப.ராஜ கோபாலன்
D) மௌனி
49. சிறுகதை மன்மதன் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) புதுமைப்பித்தன்
B) வ.வே.சு ஐயர்
C) கு.ப. ராஜ கோபாலன்
D) மௌனி
50. பழந்தமிழர் உலோகக் கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்குவது எது?
A) தில்லை நடராசர் செப்புத் திருமேனி
B) கூரம் நடராசர் செப்புத் திருமேனி
C) தாராசுரம் ஐராதீசுவரர் கோவில்
D) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
51. கலிங்கத்துப் பரணிக்கு முன்னோடியாக திகழ்ந்த நூல் எது ?
A) புறநானூறு
B) களவழி நாற்பது
C) ஐந்திணை எழுபது
D) திணைமாலை நூற்றைம்பது
52. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினை தேர்க.
A) போலி புலவர்களை குட்டுவதற்கு - அதிவீரராம பாண்டியன்
B) போலி புலவர்கள் தலையை வெட்டுவதற்கு - ஒட்டக்கூத்தர்
C) போலி புலவர்கள் செவியை அறுப்பதற்கு - வில்லிபுத்தூரார்
D) போலி புலவர்கள் குறைகளை சுட்டாமல் விடுவதற்கு - நக்கீரன்
53. சித்திர சபை என்பது எது ?
A) சித்திரம் வரையும் இடம்
B) ஓவியக் கலைஞர்கள் சங்கம்
C) ஓவியங்கர் உணவருந்தும் இடம்
D) இறை நடனம் புரியும் இடம்
54. உலா இலக்கியம் மலர வழிகாட்டியாக இருந்த நூல்
A) முத்தொள்ளாயிரம்
B) யசோதர காவியம்
C) உதயண குமார காவியம்
D) நாககுமார காவியம்
55. உயிரிளங்குமரன், இலங்கை வளம் முதலிய நூல்களை எழுதியர்
A) கல்கி
B) க.சோமசுந்தரப் புலவர்
C) கு.ப.ராஜகோபாலன்
D) வாணிதாசன்
56. பதினாறு நூறாயிரம் பொன் புலவனுக்கு பரிசாகத் தந்து எழுதப்பட்ட நூல் என எந்நூலைப்பற்றி கலிங்கத்து பரணியும், சங்கர சோழனுலாவும் கூறுகின்றது.
A) கம்பராமாயணம்
B) பெரியபுராணம்
C) பட்டினப்பாலை
D) சீறாபுராணம்
57. தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலின் விமானமும் மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுகிறது என்று கூறியவர் யார் ?
A) காரல் லின்னேயஸ்
B) காரல் சேகன்
C) காரல் மார்க்ஸ்
D) ஆரியபட்டர்
58. அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த இடம் எது ?
A) தண்டலம், காஞ்சிபுரம்
B) இடையன்குடி,திருநெல்வேலி
C) தச்சநல்லூர், திருநெல்வேலி
D) திருத்து, திருநெல்வேலி
59. தவறான கூற்று எது
A. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1830
B. எட்வர்டு மைபிரிட்சு என்பவர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றார்
C. ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார்.
D. எடிசன் புதிய படவிழ்த்தி உருவாக காரணமாக இருந்தார்.
60. தமிழ்விடு தூது இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
A) தமிழ்
B) மதுரை சொக்கநாதர்
C) பாண்டிய நெடுஞ்செழியன்
D) திருக்குற்றால நாதர்
61. பொருந்தாத இணையைக் கண்டறிக
A. ஈஸ்ட்மென் - படச்சுருள்
B. எடிசன் - ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி
C. எட்வர்டு மைபிரிட்சு - படவீழ்த்தி
D. வால்ட் டிஸ்னி - கருத்துப் படம்
62. தமிழ்விடுதூது இலக்கியத்தின் செய்யுளில் உவமிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
1. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா - வரப்புகள்
2. துறை, தாழிசை, விருத்தம் - மடைகள்
3. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - ஏர்கள்
4. வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் - விதைகள்
5. அறம், பொருள், இன்பம், வீடு - விளைபொருள்கள்
A) 1, 3, 4, 5 மட்டும் சரி
B) 2, 3, 4, 5 மட்டும் சரி
C) 1, 4, 5 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
63. பேச்சுக் கலையில் அணு ஆற்றல் போல்வன என விளிக்கப்படுவது எது ?
A) கருத்துகள்
B) குரல் வளம்
C) உவமைகள்
D) அணிகள்
64. சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினான்- என்ற அடிகளின் மூலம் அறியப்படுபவன் யார் ?
A) கரிகாலன்
B) சிபிச் சக்கரவர்த்தி
C) கோப்பேரும் பேகன்
D) திருக்குற்றால நாதர்
65. தவறான பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க.
A) தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
B) மொய்யிலை - மொய் + விலை
C) வில்லெழுதி = வில் + எழுதி
D) பூட்டுமின் - பூட்டு + மின்
66. பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு வானகம் ஆள்வாரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A) நந்திக் கலம்பகம்
B) பெத்லகேம் குறவஞ்சி
C) அழகர் கிள்ளைவிடு தூது
D) இராஜ ராஜ சோழனுலா
67. முத்தொள்ளாயிர செய்யுள்படி மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலையாக எங்ஙனம் எழுதும் ?
A) செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் சேரருக்குரியது
B) செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் சோழருக்குரியது
C) செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்குரியது
D) செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பல்லவர்க்குரியது
68. இலக்கணக் குறிப்பறிக - மல்லல் நெடுமதில்
A) தொழிற்பெயர்
B) பண்புத்தொகை
C) வினைத் தொகை
D) உரிச்சொற்றொடர்
69. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) இலைவேல் - உவமைத்தொகை
B) மாறன்களிறு - ஆறாம் வேற்றுமைத்தொகை
C) உயர்துலை - வினைத்தொகை
D) வாங்குவில் - பண்புத் தொகை
70. குமரகுருபரர் தொடர்பான தவறான கூற்று எது ?
A) தமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
B) திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி உள்ளார்
C) இவர் வாழ்ந்த காலம் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டு
D) காசியில் இறைவனது திருவடியடைந்தார்
71. முக்கூடல் என்று அழைப்படும் Cரின் மற்றொரு பெயர் என்ன ?
A) ஆசூர் வடகரை நாடு
B) சீவலமங்கைத் தென்கரை நாடு
C) ஆசூர் தென்கரை நாடு
D) சீவலமங்கைத் வடகரை நாடு
72. மருதூரில் வீற்றிருக்கும் சிவபெருமான் விரும்பி அணியும் பூ எது ?
A) ஊமத்தம்பூ
B) ஆத்திப்பூ
C) வேப்பம்பூ
D) செங்காந்தள் மலர்
73. ஓவியக்கலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் எது ?
A) வட்டிகைச் செய்தி
B) படாம்
C) ஓவம்
D) இவை அனைத்தும்
74. சொற்களை வரிசைப்படுத்தி சரியான சொற்றொடர் அமைக்க
A) ஒழுகும் அமுத கிரணமே உலகு குளிர எமது மதியில்
B) உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
C) எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே உலகு குளிர
D) கிரணமே உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத
75. பேச்சுக் கலையின் மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றது எது ?
A) இலக்கியக் கூறுகள்
B) சொல்லாட்சிகள்
C) சிறுசிறு கதைகள்
D) கருத்துப் பொலிவு
76. கலிங்கத்துப்பரணி தொடர்பான தவறான கூற்று எது ?
A) கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்
B) பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
C) சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்
D) கலிங்க மன்னன் இரண்டாம் புலிகேசி மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து பெற்ற வெற்றியை இந்நூல் விளக்குகிறது.
77. ஓவியக் கலை தொடர்பான தவறான கூற்றைக் கண்டறிக.
A) ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்
B) ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்
C) அகநானூறில், ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
D) ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்
78. சித்தன்னவாசல் குகைக் கோவில் ஓவியங்களை வரைந்தவர் யார் ?
A) அவனிப சேகர ஸ்ரீவல்லபன்
B) இராஜ சிம்மன்
C) மூன்றாம் நந்திவர்மன்
D) மதுரை ஆசிரியர் இளம்கௌதமன்
79. தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் ஆகிய ஓவியங்கள் எங்கு உள்ளது ?
A) சித்தன்னவாசல்
B) தஞ்சைப் பெரியகோவில்
C) திருவரங்கம்.
D) மதுரை
80. அம்மானை என்பது ?
A) ஒருவகைக் காய் விளையாட்டு
B) இது பெண்கள் விளையாடுதற்குரியது
C) இது ஓர் சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு
D) இவை அனைத்தும்
81. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
B) யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி
C) அண்ணாமலையார் - லிங்கோத்பவர்
D) நீண்ட கூந்தலையுடையவள் - நீலாம்பிகை
82. மின்னார் என்பதன் பொருள் ?
A) மின்னல்
B) இடியோசை
C) பெண்கள்
D) வயல்
83. பார்வதி தேவியை ஞானப்பூங்கோதை என அழைத்தவர் யார் ?
A) சிவபெருமான்
B) திருஞான சம்பந்தர்
C) அப்பூதியடிகள்
D) திருநாவுக்கரசர்
184. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க- டநளேந
A) நுண்ணோக்கி
B) உருப்பெருக்கி
C) படவீழ்த்தி
D) கூட்டுப்பெருக்கி
85. மையறு படிவத்து வானவர் முதலா எவ்வுயிர்களும் உவமங்காட்டி என ஓவியக்கலை குறித்து தெரிவிக்கும் நூல் எது ?
A) சிலப்பதிகாரம்
B) மதுரைக் காஞ்சி
C) மணிமேகலை
D) புறநானூறு
86. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது ?
A) சோழர்கள் காலம்
B) பல்லவர்கள் காலம்
C) நாயக்கர்கள் காலம்
D) பாண்டியர்கள் காலம்
87. தந்தச் சிற்பக் கலை யார் காலத்தில் சிறப்புற்றிருந்தது ?
A) சோழர்கள் காலம்
B) பல்லவர்கள் காலம்
C) நாயக்கர்கள் காலம்
D) பாண்டியர்கள் காலம்
88. எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி என்று குறிப்பிடும் நூல் எது ?
A) சிலப்பதிகாரம்
B) மதுரைக் காஞ்சி
C) மணிமேகலை
D) புறநானூறு
89. ஒட்டக்கூத்தர் யாருடைய அவையில் செல்வாக்கோடு விளங்கினார் ?
A) விக்கிரமசோழன்
B) இரண்டாம் குலோத்துங்கன்
C) இரண்டாம் இராச ராசன்
D) இவை அனைத்தும்
90. ஒட்டம் என்பதன் பொருள் என்ன ?
A) வேகமான நடை
B) வீட்டில் படிந்துள்ள அழுக்கு
C) பந்தயம்
D) இவற்றில் எதுவுமில்லை
91. மகோததி என்ற சொல்லின் பொருள்?
A) ஆறு
B) வெள்ளம்
C) கடல்
D) மலை
92. மேகவிடுதூது இயற்றியவர் ?
A) திருத்தக்க தேவர்
B) கம்பர்
C) ஒட்டக்கூத்தர்
D) குமரகுருபரர்
93. தென்றல்விடுதூது இயற்றியவர்
A) திருத்தக்க தேவர்
B) கம்பர்
C) பலபட்டடை சொக்கநாதபுலவர்
D) குமரகுருபரர்
94. பரணி என்ற நாள்மீனின் தெய்வம் எது ?
A) காளி
B) எமன்
C) A மற்றும் B
D) துர்க்கை
95. இலக்கணக் குறிப்பு தருக - நுண்டுளி
A) தொழிற்பெயர்
B) உரிச்சொல் தொடர்
C) வினையாலனையும் பெயர்
D) பண்புத் தொகை
96. ஞானத்தச்சன், ஞானவுலா மற்றும் ஆரணாதிந்தம் என்ற நூல்களை இயற்றியவர் யார் ?
A) வேதநாயக சாஸ்திரி
B) குமரகுருபரர்
C) உமறுப்புலவர்
D) இவற்றில் எதுவுமில்லை
97. பெத்லகேம் குறவஞ்சியில் உவமிக்கப்படும் பொருள்களில் தவறானது எது ?
A) உலா மன்னர் - யேசு
B) குறவஞ்சி - மக்கள்
C) நூவன் - உபதேசி
D) சிங்கன் - குரு
98. வேதநாயக சாஸ்திரி யாருடைய நண்பராக திகழ்ந்தார்
A) சொக்கநாத நாயக்கர்
B) எட்டயபுரம் மன்னர்
C) பூலித் தேவன்
D) சரபோஜி மன்னர்
99. தூதின் இலக்கணம் கூறம் நூல் ?
A) புறப்பொருள் வெண்பாமாலை
B) நன்னூல்
C) தொல்காப்பியம்
D) இலக்கண விளக்கம்
100. இலக்கணக் குறிப்பு தருக - வன்கானகம்
A) வினைத் தொகை
B) பண்புத் தொகை
C) பெயரெச்சம்
D) உரிச்சொல் தொடர்
DOWNLOAD PDF FILES - LINKS