6 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 6 - FREE DOWNLOAD - கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 6 விடையுடன் இலவச பதிவிறக்கம்

TNPSC GROUP II & IV GENARAL TAMIL 
MODEL QUESTION PAPER 6  
FREE DOWNLOAD

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 6

விடையுடன் இலவச பதிவிறக்கம்



புதிய பாடத்திட்டம் (2022)

மாதிரி வினாத்தாள் 6-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

பகுதி (அ)

1. பிழைத் திருத்தம்  (I) சந்திப் பிழையை நீக்குதல் (II) ஒருமை பன்மை , பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

பகுதி (ஆ)

2. பெரிய புராணம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் - திருவிளையாடல் புராணம் -  தேம்பாவணி - சீறாப் புராணம் தொடர்பான செய்திகள்.

பகுதி (இ)

3. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்

----------------------------------------------------------------

மாதிரி வினாத்தாள் 6 ஐ பதிவிறக்கம் செய்ய 

இங்கே கிளிக் செய்யவும் 👇



மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -6  👇

மாதிரி வினாத்தாள்- 6 (100 வினாக்கள்)




1. திருவிளையாடல் புராணம் எந்த பாவால் ஆனது

A) கலிப்பா

B) வெண்பா

C) வஞ்சிப்பா

D) விருத்தப்பா



2. சீறா புராணத்தில் உள்ள ஹிஜ்ரத்துக் காண்டத்தின் வேறு பெயரைக் குறிப்பிடுக

A) பிறப்பியற் காண்டம்

B) செம்பொருட் காண்டம்

C) செலவியற் காண்டம்

D) சுந்தர காண்டம்



3. ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று பாராட்டியவர் யார் ?

A) சுந்தரர்

B) திருஞான சம்பந்தர்

C) மாணிக்க வாசகர்

D) திருநாவுக்கரசர்



4. வழுவுச் சொல்லை நீக்கி எழுதுக

A) சுடுதண்ணி

B) அரிவாமனை

C) தாவாரம்

D) வெந்நீர்



5. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைக் காண்க ?

A. அகிலம் போற்றும் வகையில் நம் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.

B. பார்வை நேரம் முடிந்ததனால், மாவட்ட ஆட்சியரைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

C. பண்டைத் தமிழர் வில், வேல், வாள் முதலிய ஆயுதங்களை ஏந்திப் போர் புரிந்தனர்.

D. நாம் எழுதுவதற்கு தாள்களை பயன்படுத்துகிறோம்.



6. உமர்கய்யாம் எதில் புலமை மிக்கவர் ?

A) உருது, தமிழ்

B) வடமொழி, தமிழ்

C) ஹீப்ரு, பாரசீகம்

D) கணிதம், வானவியல்



7. திருஞான சம்பந்தருக்கு கொஞ்சு தமிழ், திருநாவுக்கரசருக்கு கெஞ்சு தமிழ், சுந்தரருக்கு மிஞ்சு தமிழ் என்று சொன்னவர் யார்? 

 A) வள்ளலார்

B) கி.வா.ஜகந்நாதன்

C) குன்றக்குடி அடிகளார்

D) சுவாமி விபுலானந்தர்



8. கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது அக்கல்லினையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவர் யார் ?

A) திருஞான சம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்



9. தேவாரப் பாடல் எவ்வகையைச் சார்ந்தது ?

A) இசைத் தமிழ்

B) இயல் தமிழ்

C) நாடகத் தமிழ்

D) பண்ணிசை



10. பிழையற்ற தொடரைக் காண்க

A) விறலியர் தன் போஜனத்திற்காக இசையை கற்றனர்.

B) விறலியர் இசையை ஜாக்கிரதையாக பாதுகாத்தனர்

C) அனுமன் தன்புகழை தக்க வைத்துக் கொண்டான்

D) அனுமன் தன்புகழை தங்க வைத்துக் கொண்டான்



11. எந்த வழுக்கள் வழுவமைதியாக எற்றுக்கொள்ளப்படும்?

A) திணை வழு, கால வழு, இட வழு

B) கால வழு, பால் வழு, இட வழு

C) பால்வழு, இட வழு, திணை வழு

D) திணை வழு, பால் வழு, கால வழு



12. காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்

கட்டி அரிசி அவல் அமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால்... என்று பாடியவர் யார்?

A) ஆண்டாள்

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) கி.ஆ.பெ.விஸ்வநாதன்



13. தேம்பாவணி தொடர்பான தவறான கூற்றினைக் கண்டறிக.

A) தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர்

B) கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

C) இந்நூலில் 3615 பாடல்கள் உள்ளன.

D) இந்நூலின் பாட்டுடைத் தலைவர் சூசையப்பரின் மகனான யேசுநாதர்.



14. உமறுப்புலவர் தொடர்பான தவறான கூற்றினை காண்க.

A) சீறா புராணத்தை இயற்றினார்

B) எட்டயபுரம் கடிகை முத்துப் புலவருக்கு ஆசிரியராக விளங்கினார்

C) அப்துல் காதிர் மரைக்காரயர் என்ற வள்ளல் சீதக்காதி கேண்டுக் கொண்டதற்கு இணங்க சீறாபுராணத்தை இயற்றினார்

D) சீதக்காதியின் மறைiக்குப் பின்னர் அபுல்காசிம் உதவியால் சீறாபுராணத்தை நிறைவு செய்தார்



15. பொருந்தாத இணையைக் காண்க

A) அரசன் வந்தது - திணைவழு

B) கபிலன் பேசினாள் - பால்வழு

C) குயில்கள் கூவியது - எண்வழு

D) கமலா சிரித்தாய் - காலவழு



16. மன்னிப்பு என்ற சொல் எந்த மொழியைச் சார்ந்தது ?

A) தமிழ்

B) தெலுங்கு

C) கன்னடம்

D) உருது



17. ஜன்னல் என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது ?

A) சமஸ்கிருதம்

B) போர்த்துகீசியம்

C) அரபு

D) தெலுங்கு





18. நபிகள் நாயகத்தின்திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார் ?

A) உமறுப்புலவர்

B) பனு அகுமது மரைக்காயர்

C) குணங்குடி மஸ்தான்

D) ஆப்பிரகாம் பண்டிதர்



19. தேம்பாவணி, காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது, தொன்னூல் விளக்கம் பொன் நூலாக இலங்ககின்றது, சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது, வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுல் ஒருவராக விளங்குகின்றார் என வீரமாமுனிவரைப் புகழ்ந்தவர் யார்?

A) ரா.பி. சேதுப்பிள்ளை

B) கால்டுவெல்

C) மறைமலையடிகளார்

D) ஜி.யு.போப்



20. நீலாம்பிகை என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடு.

A) நீலாயி

B) கருப்பாயி

C) வேலாயி

D) நற்சேனை



21. மரபுப் பிழையுள்ள சொல்லைக் காண்க.

A) நெற்றாள்

B) பலாத் தோட்டம்

C) கமுகங்கூந்தல்

D) நீர் குடி



22. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - விசாரி ?

A) உசாவு

B) தெரிதல்

C) தேர்வுகொள்ளல்

D) அறிதல்



23. பிழையற்ற தொடரைக் காண்க

A. மறுத்தல் என்பது செருக்கு இல்லை

B. மருத்தல் என்பது செறுக்கு இல்லை

C. மறுத்தல் என்பதுச் செறுக்கு இல்லை

D. மறுத்தல் என்பதுச் செருக்கு இல்லை



24. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க. - ஹைக்கூ

A) வெண்பா

B) சிறுப்பா

C) ஐக்கூ

D) துளிப்பா



25. சீறா என்பதன் பொருள் ?

A) சீர்மை

B) வாழ்க்கை

C) அழகு

D) கதை



26. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) நான் வாங்கிய நூல் இது அன்று

B) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக் கருவி என்ற கருவி பயன்படுகின்றன.

C) இன்று பேருந்துகள் ஓடாது

D) ஓர் அணில் மரத்தில் ஏறின.



27. பொருத்துக

1. திரிபுராந்தகன் - அ) மீனாட்சி

2. கஜசம்ஹார மூர்த்தி - ஆ) அண்ணாமலையார்

3. லிங்கோத்பவர் - இ ) யானை உரி போர்த்தவர்

4. அங்கயற்கண்ணி - ஈ) முப்புரம் எரித்தவன்

1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. ஈ இ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. ஈ இ ஆ அ



28. மரபுத் தொடருக்கேற்ற பொருள் தொடர்பான தவறான இணையைக் கண்டறிக.

A) ஆகாய தாமரை - இல்லாத ஒன்று

B) கொட்டியளத்தல் - தானியத்தை அளத்தல்

C) பஞ்சாய்ப் பறத்தல் - அலைந்து திரிதல்

D) குட்டிச் சுவர் - பயனிற்றி இருத்தல்



29. சந்திப்பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) பாரியைக் கண்டான்

B) எனக்கு கொடு

C) தை பொங்கல்

D) தேட சென்றாள்



30. பொருத்துக

1. மக்கள் - அ) கற்றை

2. வீரர் - ஆ) கட்டு

3. விறகு - இ) கூட்டம்

4. சுள்ளி - ஈ) படை

1. 2. 3. 4.

A. இ ஈ ஆ அ

B. இ ஈ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. ஈ இ ஆ அ



31. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

B) ஆண்டாள்

C) மாணிக்க வாசகர்

D) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்



32. சந்திப்பிழை நீக்கிய சொல்லைத் காண்க.

A) விடுக்கணை

B) வாழ்க தமிழ்

C) விரிச்சுடர்

D) பாய்ப்புலி



33. பிழையற்ற தொடரைக் காண்க.

A) அன்னவர்கே சரன் நாங்களோ

B) அன்னவர்க் கேசரண் நாங்களே

C) அண்ணவர்க் கேசரண் நாங்கேள

D) அன்னவர் கேசரண் நாங்களே



34. சந்திப்பிழை, மயங்கொலிப்பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

B) கயிறு கட்டிலிள் தண்னை மரந்து உரங்கினான்

C) கயிற்றுக் கட்டிலில் தன்னை மரந்து உறங்கினான்

D) கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்



35. வழுவுச் சொல்லற்ற தொடரைக் காண்க.

A) வலதுப் பக்கச் சுவற்றில் எழுதாதே

B) வலதுபக்க சுவற்றில் எழுதாதே

C) வலப்பக்க சுவரில் எழுதாதே

D) வலப்பக்கச் சுவரில் எழுதாதே



36. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க

A) பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை

B) நான் உண்ட பழங்கள் அவை அன்று

C) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தார்

D) செடியில் பூ பூத்தன



37. தலபுராணங்கள் பாடும் மரபை துவக்கி வைத்தவர் யார் ?

A) திருநாவுக்கரசர்

B) மீனாட்சி சுந்தரனார்

C) திருஞான சம்பந்தர்

D) உமாபதி சிவம்



38. குலசேகர ஆழ்வார் வடமொழியில் எழுதிய நூல் எது?

A) பெருமாள் திருமொழி

B) முகுந்த மாலை

C) பெரிய திருவந்தாதி

D) திருவாசகம்



39. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க

A) அவன் அல்ல

B) அவள் அல்ல

C) அவர் அல்லர்

D) அவர் இல்லை



40. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைக் காண்க

A) வைத்தியர் அண்ணா பிரிட்ஜ் அருகாமையில் ஆஸ்பிடல் ஆரம்பித்தார்

B) மருத்துவர் அண்ணா மேம்பாலம் அருகாமையில் ஆஸ்பிடல் ஆரம்பித்தார்

C) மருத்துவர் அண்ணா மேம்பாலம் அருகில் ஆஸ்பித்திரி தொடங்கினார்

D) மருத்துவர் அண்ணா மேம்பாலம் அருகில் மருத்துவமனை தொடங்கினார்



41. பொருத்துக

1. எக்கச்சக்கம் - அ) தெலுங்கு

2. நபர் - ஆ) உருது

3. இனாம் - இ) அரபி

4. துட்டு - ஈ) டச்சு

1. 2. 3. 4.

A. அ இ ஆ ஈ

B. ஆ ஈ அ இ

C. அ ஈ ஆ இ

D. இ அ ஆ ஈ



42. மரபுப் பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) திராட்சைக் கொத்து

B) யானைக் குட்டி

C) கீரிக் குட்டி

D) குதிரைக் குட்டி



43. ஒருமை பன்மை நீங்கிய தொடரைக் காண்க

A) வயலில் மாடுகள் மேய்கிறது

B) அறைகள் சிறியதாய் உள்ளன

C) பழங்கள் எல்லாம் அழுகிப் போயின

D) பறவைகள் பறந்தது



44. தெர்மாகூல் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க.

A) வெண்மிதப்பு

B) நெட்டிகள்

C) வெண்தக்கை

D) நெகிழி



45. இன்றைய கண் தானத்திற்கு அன்றே எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் யார் ?

A) கண்ணப்ப நாயனார்

B) திருஞான சம்பந்தர்

C) மாணிக்க வாசகர்

D) திருநாவுக்கரசர்



46. பிறமொழிச் சொல் நீங்கிய தொடரைக் காண்க.

A) அர்ச்சுனன் வில் வித்தையில் சிறந்தவன்

B) தர்மம் தலைகாக்கும் என்பது பழமொழி

C) கர்ப்பூரம் ஏற்றி இறைவனை வழிபடுவது இயல்பு

D) விருந்து வர கரைந்தது காக்கை



47. நம்மாழ்வார் பிறந்த ஊர் எது?

A) காஞ்சிபுரம்

B) குருகூர்

C) மயிலை

D) சிதம்பரம்



48. பிழையற்ற தொடரைக் காண்க.

A. இராணி மட்டும் பயமின்றிப் பாம்பை நெருங்கினாள்

B. இராணியும் வேணியும் வந்தாள்

C. தோட்டத்தில் ஒரு பாம்பு ஓடின

D. தோட்டத்தில் பூக்கள் பூத்து இருந்தது.



49. பிழையற்ற சொல்லைக் காண்க.

A) கடப்பாறை

B) கோடரி

C) அருவாள்

D) வேல்கொம்பு



50. பிழையற்ற தொடரைக் காண்க

A) கிணரில் போட்டேன்

B) சுவற்றில் எழுதினேன்

C) வயிர் பசிக்கிறது

D) கூரை வேய்ந்தேன்



51. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற தொடர் எவ்வகை பொருத்தத்திற்கு சான்றாக அமைந்துள்ளது?

A) திணைப் பொருத்தம்

B) எண் பொருத்தம்

C) பால் பொருத்தம்

D) சிறப்புப் பொருத்தம்



52. பிழையற்ற தொடரைக் காண்க.

A) பள்ளிக்கு அருகாமையில் என் வீடு இருக்கிறது

B) என் வீட்ல யாருமே இல்லே

C) எம் ஊர் ஆத்துல தண்ணியே இல்லே

D) என் அப்பா அதிகமாக செலவு செய்கிறார்





53. பிழையற்ற தொடரைக் காண்க.

A) வண்டுகள் தேன் குடித்தாள்

B) விண்கலங்கள் விண்ணில் பறந்தான்

C) அவன் பாடம் படித்தாள்

D) கோல மயில் ஒயிலாக ஆடியது



54. பொருத்துக

1. சிங்கம் - 1) முரலும்

2. வண்டு - 2) கொக்கரிக்கும்

3. கோழி - 3) முழங்கும்

4. பூனை - 4) சீறும்

1. 2. 3. 4.

A. 1 3 4 2

B. 4 3 1 2

C. 2 4 1 3

D. 3 1 2 4



55. மரபுப் பிழையுள்ள சொல்லைக் காண்க.

A) வாழைப் பிஞ்சு

B) வெள்ளரிப் பிஞ்சு

C) மாவடு

D) தென்னங்குரும்பை



56. மரபுப் பிழையுள்ள சொல்லைக் காண்க.

A) புலிப்பறழ்

B) மான்குட்டி

C) சிங்கக் குருளை

D) கீரிப்பிள்ளை



57. மரபுப் பிழையற்ற சொல்லைக் காண்க.

A) காய்கறி அரி

B) இலை பரி

C) பழம் திண்

D) மலர் கொய்



58. ரூபாயத் என்ற பாடல் எதனை விளக்குகிறது ?

A) வாழ்க்கைத் தத்துவம்

B) சமய நெறி

C) பொருளீட்டல்

D) கடற்பயணம்



59. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைக் காண்க.

A) குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் பிரதானத்தொழில்

B) குசேலபுரி அரசாங்கத்துக்கு உழவுதான் பிரதானத்தொழில்

C) குசேலபுரி சமஸ்தானத்துக்கு உழவுதான் முதன்மைத்தொழில்

D) குசேலபுரி அரசுக்கு உழவுதான் முதன்மைத்தொழில்



60. பிழையற்ற தொடரைக் காண்க ?

A) அழகன் பாடினாள்

B) புலவர்கள் பாடல்களை இயற்றினார்கள்

C) வள்ளி வாடினான்

D) மான்கள் ஓடியது



61. சரியாக அமைந்த தொடரைக் காண்க.

A) இறுவரை காணின் கிழக்காம் தலை

B) இருவரை கானின் கிழக்காம் தளை

C) இறுவரை கானின் கிழக்காம் தலை

D) இருவரை காணின் கிழக்காம் தலை



62. திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியவர் யார் ?

A) திருமலை நாயக்கர்

B) குலசேகர ஆழ்வார்

C) இராணி மங்கம்மாள்

D) கிருஷ்ணதேவராயர்



63. திருவிளையாடல் புராணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை ?

A) 24

B) 46

C) 42

D) 64



64. சரியான இணையை கண்டறிக.

A) திருவிருத்தம் - திருமங்கையாழ்வார்

B) பெரிய திருவந்தாதி - பேயாழ்வார்

C) இரண்டாம் திருவந்தாதி - பொய்கையாழ்வார்

D) திருச்சந்த விருத்தம் - திருமழிசை ஆழ்வார்



65. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.

A) கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு

B) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு

C) உதிக்கின்ற ஞாயிறு திசைக்குப் பெயர் கிழக்கு

D) ஞாயிறு திசைக்குப் பெயர் உதிக்கின்ற கிழக்கு



66. சபதம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் காண்க

A) உறுதி

B) வஞ்சம்

C) ஆகடியம்

D) வீரவுரை



67. பொருத்துக

1. ஆடு - அ) குருளை

2. மான் - ஆ) பிள்ளை

3. கீரி - இ) கன்று

4. சிங்கம் - ஈ) குட்டி

1. 2. 3. 4.

A. அ இ ஈ ஆ

B. ஆ ஈ அ இ

C. ஈ இ ஆ அ

D. இ ஈ ஆ அ





68. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) செங்கமலமும் ஒரு சோப்பும் - பசுவய்யா

B) ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்

C) அனுமதி - சுஜாதா

D) விழிப்பு - வண்ணநிலவன்



69. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) திருப்பல்லாண்டு - பெரியாழ்வார்

B) நாச்சியார் திருமொழி - ஆண்டாள்

C) திருச்சந்த விருத்தம் - திருமழிசை ஆழ்வார்

D) திருப்பள்ளியெழுச்சி - மதுரகவியாழ்வார்





70. சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தியவர் யார் ?

A) ஆண்டாள்

B) தருமி

C) சூடாமணிப் பாண்டியன்

D) சொக்கநாதப் பெருமான்



71. கொங்குதேர் வாழ்க்கை எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் ?

A) இறையனார்

B) வீரமாமுனிவர்

C) பாரதிதாசன்

D) திரு.வி.க



72. கற்றைவார் சடையான் யார் ?

A) இந்திரன்

B) சிவபெருமான்

C) அருகர்

D) திருமால்



73. பொற்பங்கயத்தடம் என்ற சொல் எவ்வாறு பிரியும் ?

A) பொற்பங்கயம் + தடம்

B) பொற்பங்கம் + தடம்

C) பொற்பங்கய + தடம்

D) பொன் + பங்கயம் + தடம்



74. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் என்று பாடியவர் யார் ?

A) இளங்கோவடிகள்

B) திரிகூடராசப்ப கவிராயர்

C) சீத்தலைச் சாத்தனார்

D) பாரதியார்



75. மைக்ராஸ்கோப் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க.

A) உரு பெருக்கி

B) கூட்டு நுண்ணோக்கி

C) ஒளி பெருக்கி

D) நுண்ணோக்கி



76. சைக்கிள் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க.

A) மிதி வண்டி

B) மகிழுந்து

C) ஈருருளி

D) இரு சக்கர வாகனம்



77. தெர்மாகூல் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க.

A) வெண்மிதப்பு

B) நெட்டிகள்

C) வெண்தக்கை

D) நெகிழி



78. முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலம் அமைந்துள்ள ஊர் எது ?

A) திருவல்லிக்கேணி

B) மயிலாப்பூர்

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை



79. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க - சொத்து

A) உடமை

B) ஆஸ்தி

C) சேமம்

D) உடைமை



80. இரவின் அறுவடை என்ற சிறுகதை நூலை எழுதியவர் ?

A) புவியரசு

B) கண்ணதாசன்

C) அறிஞர் அண்ணா

D) பாரதியார்



81. தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே என்று பாடியவர் யார் ?

A) குலசேகர ஆழ்வார்

B) திருஞான சம்பந்தர்

C) திருநாவுக்கரசர்

D) மாணிக்க வாசகர்



82. குருதிக் கொடை என்ற நூலை எழுதியவர் யார் ?

A) நா.பார்த்தசாரதி

B) இந்திரா பார்த்தசாரதி

C) வெற்றியழகன்

D) ரா.பி.சேதுப்பிள்ளை



83. கரவந்தபுரத்துக் காரிகை என்ற நூலை எழுதியவர் யார் ?

A) கு.ப.ராசகோபாலன்

B) பொன்சிவம்

C) அகிலன்

D) தேவதேவன்



84. பிறமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களின் தவறான இணையை கண்டறிக

A) கரோரா - கருவூர்

B) கபிரில் - காவிரி

C) கொமாரி - கோமரி

D) திண்டிஸ் - தொண்டி



85. செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப் பையுள் கொண்டஅப் பனவன் என்னை

நீ - இவ்வடியில் பனவன் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?

A) சொக்கநாதர்

B) நக்கீரர்

C) தருமி

D) உமையம்மை



86. வடக்கிருந்து வந்த வாலை வாரிதி என்ற புலவரோடு வாதிட்டு வென்றவர்

A) திருஞான சம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) பிசிராந்தையார்

D) உமறுப்புலவர்



87. பிறமொழிச் சொல் நீங்கிய தொடரைக் காண்க.

A. குழந்தைக்குக் கண்திருஷ்டி சுற்றிப்போடு

B. குழந்தைக்குக் கண்ணேறு கழி

C. குழந்தைக்கு திருஷ்டி கழி

D. குழந்தைக்கு கண்ணாறு சுற்றிப் போடு



88. அப்பாவின் சிநேகிதர் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசினைப் பெற்றவர்

A) கல்கி

B) அசோகமித்திரன்

C) ஞானக் கூத்தன்

D) கல்யாண்ஜி



89. திருவிளையாடல் புராணம் தொடர்பான சரியற்ற கூற்றினைக் காண்க.

A) திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர் - பரஞ்சோதி முனிவர்

B) இறைவனிடமிருந்து பாடலைப் பெற்றுச் சென்ற புலவர் - தருமி

C) பொற்கிழி பெறச் சென்ற தருமியைத் தடுத்தவர் - சொக்கநாதர்

D) தருமியின் பாடலில் குற்றம் இருப்பதாக கூறியவர் - நக்கீரர்



90. பரஞ்சோதி முனிவர் தொடர்பான தவறான கூற்று எது ?

A) பிறந்த ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு

B) தந்தை - மீனாட்சி சுந்தர தேசிகர்

C) மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் வேண்டுகோளுக்கிணங்க திருவிளையாடல் புராணத்தை இயற்றினார்

D) பரஞ்சோதி முனிவர் தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்றிருந்தார்.



91. ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்

காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்- இவ்வடியில் நாவலன் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?

A) மன்னர்

B) இறைவன்

C) புலவர்

D) இவற்றில் எதுவுமில்லை



92. கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்?

A) பூதத்தாழ்வார்

B) பெரியாழ்வார்

C) ஆண்டாள்

D) குலசேகர ஆழ்வார்



93. பொருத்துக

1. ஒருநாள் கழிந்தது - அ) விந்தன்

2. தேங்காய் துண்டுகள் - ஆ) நீல.பத்மநாபன்

3. மறுமணம் - இ) மு.வ

4. மண்ணின் மகன் - ஈ) புதுமைப் பித்தன்

1. 2. 3. 4.

A. ஈ இ அ ஆ

B. இ ஈ அ ஆ

C. ஆ அ ஈ இ

D. அ இ ஈ ஆ



94. பொருத்துக

1. அஞ்சான் - அ) வினைத் தொகை

2. குற்றம் - ஆ) பெயரெச்சம்

3. புனைமலர் - இ) வினையாலனையும் பெயர்

4. ஆய்ந்த பொற்கிழி - ஈ) தொழிற்பெயர்

1. 2. 3. 4.

A. அ இ ஈ ஆ

B. இ ஈ அ ஆ

C. ஈ இ ஆ அ

D. இ ஈ ஆ அ





95. அபிநயக் கதைகளை எழுதியவர் யார் ?

A) தாண்டவராய முதலியார்

B) வ.வே.சு ஐயர்

C) கு.ப.ராச கோபாலன்

D) செல்வக் கேசவராய முதலியார்



96. சரியற்ற இணையைக் கூற்றைக் கண்டறிக.

A) தமிழின் முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

B) தமிழின் முதல் சிறுகதைத் தொகுதி - மங்கையர்கரசியின் காதல்

C) சிறுகதைச் செல்வர் என அழைக்கப்படுபவர் - கு.ப. ராசகோபாலன்

D) சிறுகதையில் நனவோட்ட உத்தியைக் கையாண்டவர் - புதுமைப் பித்தன்



97. கல்கி அவர்கள் எழுதாத சிறுகதை எது ?

A) ஒற்றை ரோஜா

B) தேவாணை

C) அழகின் கண்ணீர்

D) மாடத்தேவன் சுனை



98. பொருத்துக

1. படித்த மனைவி - அ) சிவசங்கரி

2. அம்மாவுக்காக ஒரு பொய் - ஆ) லட்சுமி

3. சிறை - இ) சுஜாதா

4. பாரதி ராஜ்ஜியம் - ஈ) அணுராதா ரமணன்

1. 2. 3. 4.

A. ஆ அ ஈ இ

B. இ ஈ அ ஆ

C. ஈ இ ஆ அ

D. இ ஈ ஆ அ



99. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை எது ?

A) பேசும் உள்ளங்கள்

B) இருபரம்பரை

C) நப்பசலையின் காதல்

D) சுமைதாங்கி



100. புலி நகம் என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?

A) டாக்டர் கலைஞர்

B) அறிஞர் அண்ணா

C) டாக்டர் மு.வ

D) புதுமைப் பித்தன்


DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download




thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post