17 - TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER 17 (2022 New syllabus) WITH ANSWER KEY PDF FILE FREE DOWNLOAD - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 17 விடையுடன் இலவச பதிவிறக்கம்

 

TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 17 WITH ANSWER KEY 

Free download 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 17 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

2022 புதிய பாடத்திட்டம்

மாதிரி வினாத்தாள் 17-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
2. (பகுதி-இ) தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள்)
3. பகுதி (இ) தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்.

MODEL QUESTION PAPER 17 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -17  👇

மாதிரி வினாத்தாள்- 17 (200 வினாக்கள்)

1. "அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்க வேண்டும்" என்று கூறியவர்


A) மகாத்மா காந்தி

B) அண்ணல் அம்பேத்கர்

C) இராணி மங்கம்மாள்

D) தந்தை பெரியார்



2. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டிட இடிபாடுகள் கண்டறியப்பட்ட இடம் எது ?

A) புதுகே

B) கீழார்வெளி

C) பல்லாவரம்

D) அரிக்கமேடு



3. தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகள் சந்திப்பு நிகழ காரணமான அமைந்தது எது ?

A) இந்தியர்களுக்கு எதிரான தென்னாப்பிரிக்க மக்களின் நிறவெறி

B) இந்தியர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க பிரதமர் செய்த உடன்படிக்கை

C) தமிழர்கள் தமிழ்மொழி மாநாடு நடத்தியத்தற்கு எதிரான சதி.

D) இந்தியர்களுக்கு எதிரான திருமணம் குறித்த தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு



4. வேலுநாச்சியார் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.

A) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி

B) வேலுநாச்சியாரின் கணவர் பெயர் - முத்துவடுகநாதர்

C) ஆங்கிலேயரை எதிர்க்க ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு 5000 படைவீரர்களை அனுப்பிவைத்தார்.

D) வேலுநாச்சியார் தன் கணவரை கொன்றவர்களைக் கொன்று 1790-ல் சிவகங்கையை மீட்டார்



5. அஞ்சலையம்மாள் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.

A) அஞ்சலையம்மாள் தம் பொதுவாழ்க்கையை 1921 -ல் தொடங்கினார்.

B) நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றார்

C) அஞ்சலையம்மாளின் மகள் அம்மாகண்ணுக்கு லீலாவதி என பெயரிட்டு வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் காந்தி படிக்க வைத்தார்

D) அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்சிராணி என திலகர் புகழ்ந்தார்.



6. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க - அரைக்கின்ற சந்தனந்தான் மணப்பதைப் போல ?

A) அரைத்தல்

B) குருதி ஊறுதல்

C) மணத்தல்

D) தேய்த்தல்



7. அம்புஜத்தம்மாள் தொடர்பான தவறான கூற்றினைக் கூறுக.

A) அம்புஜத்தம்மாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டும் கற்றார்.

B) வை.மு கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்

C) காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.

D) சீனிவாச காந்தி நிலையம் என்னும் பெயரில் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்



8. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - பழுமரம் இருக்கும் இடத்திற்கு பறவைகள் நாடிச் செல்வது போல ?

A) அரசர்கள் புலவர்களை நாடிச் செல்வார்கள்

B) செல்வர்கள் புலவர்களை நாடிச் செல்வர்

C) ஏழைகள் புலவர்களை நாடிச் செல்வார்கள்

D) புலவர்கள் வள்ளல்களை நாடிச் செல்வர்



9. தருமபுரி, கரூர், மதுரை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட பழங்கால நாணயங்களில் உள்ள முத்திரைகளில் காணப்படாதது எது ?

A) ஸ்வஸ்திகம்

B) சூரியன்

C) ஆடு

D) மலைமுகடு



10. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - பசுமரத்தாணி போல

A) புகழ் பெறுதல்

B) வேகமாக படித்தல்

C) மேன்மை

D) இளமையில் கல்வி



11. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - குன்றின் மேலிட்ட விளக்கு போல

A) இருள்

B) புகழ்

C) மருள்

D) நட்பு



12. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - அடியற்ற மரம் போல

A) விழுதல்

B) சாய்தல்

C) வீழ்தல்

D) மடிதல்



13. நிலத்திற்கு அணி : நெல்லும் கரும்பும், எனில் பெண்ணுக்கு அணி :------- ?

A) அச்சம்

B) மடம்

C) நாணம்

D) பயிர்ப்பு



14. பெண்களின் பெருவீரத்தினைப் பாடிய சங்க கால பெண்புலவர் யார் ?

A) காக்கைப் பாடினியார்

B) ஒக்கூர் மாசாத்தியார்

C) வெள்ளி வீதியார்

D) ஔவையார்



15. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் என்று அழைத்தவர் யார் ?

A) திரு.வி.க

B) அறிஞர் அண்ணா

C) தந்தை பெரியார்

D) மகாத்மா காந்தி



16. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1938 ல் மொழிப்போர் பேரணியில் எந்த இரு நகரங்களுக்கிடையே நடைபயணம் மேற்கொண்டார் ?

A) திருச்சி - வேதாரண்யம்

B) கன்னியாகுமரி - சென்னை

C) உறையூர் - சென்னை

D) மதுரை - சென்னை



17. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனை எந்நூல் தெரிவிக்கிறது?

A) புறநானூறு

B) பட்டினப்பாலை

C) அகநானூறு

D) மதுரைக்காஞ்சி



18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

A) ஆலி

B) பௌவம்

C) ஆர்கலி

D) புணரி



19. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - உடுக்கை இழந்தவன் கை போல ?

A) நட்பு

B) அன்பு

C) பரிவு

D) இரக்கம்



20. அசலாம்பிகை அம்மையார் தொடர்பான தவறான கூற்றைக் காண்க.

A. திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் பிறந்தார்.

B. திரு.வி.க வால் இக்கால ஔவையார் என்று புகழப்பட்டார்.

C. பாரதமாதாவை கதை மாந்தராகக் கொண்டு காந்தி புராணம் இயற்றினார்

D. ஆத்திக்சூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.



21. வேலுநாச்சியார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) கி.பி. 1735 ல் பிறந்தார்

B) சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

C) ஆங்கிலேயரை எதிர்க்க 5000 படை வீரர்களை வேலுநாச்சியாருடன் ஹைதர் அலி அDப்பி வைத்தார்

D) மருது சகோதர்களுடன் வீரர்படைக்கு தலைமையேற்றுச் சென்று தன் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780 ல் சிவகங்கையை மீட்டார்.



22. அஞ்சலையம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) கி.பி.1895 ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்

B) 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்

C) இவரை மகாத்மா காந்தியடிகள் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்.

D) நீலன்சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், வெள்ளையனே வேளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டார்.



23. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - நவில்தொறும் நூல்நயம் போலும்

A) அறிவுடையார் தொடர்பு

B) அறிவிலார் தொடர்பு

C) பண்புடையாளர் தொடர்பு

D) இணை பிரியாமை



24. அம்புஜத்தம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.

B) கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.

C) 08.02.1899-ல் விருதுநகரில் பிறந்தார்

D) வை.மு. கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக் கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.



25. அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எழுதிய நூல் எது?

A) நான் கண்ட பாரதம்

B) குழந்தை சுவாமிகள் பதிகம்,

C) திலகர் புராணம்

D) காந்திபுராணம்



26. 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் பொருட்கள் அண்மையில் கண்டறியப்பட்ட இடம் ?

A) ஆரோவில்

B) ஆதிச்சநல்லூர்

C) மண்டகப்பட்டு

D) கீழடி



27. பொருத்துக

A. Ferries - 1) கலப்படம்

B. Voyage - 2) பயணப்படகுகள்

C. Adulteration - 3) பண்டம்

D. Commodity - 4) கடற்பயணம்



a. b. c. d.

A. 1 3 4 2

B. 3 1 4 3

C. 2 4 1 3

D. 2 1 4 3



28. 1863 ஆம் ஆண்டு சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தவர் யார் ?

A) இராபர்ட் புரூஸ்புட்

B) மாக்ஸ்முல்லர்

C) ஜேன் ஆஸ்டின்

D) ஆல்பிரட் மார்ஷல்



29. அரிக்கமேடு அகழாய்வின் மூலம் எந்த வெளிநாட்டவரின் மட்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றன?

A) ரோமானியர்

B) கிரேக்கர்

C) அரேபியர்

D) மெசபடோமியர்



30. 1914 ஆம் ஆண்டு முதுமக்கள் தாழி கண்டறியப்பட்ட இடம் ?

A) பல்லாவரம்

B) ஆதிச்சநல்லூர்

C) அரிக்கமேடு

D) கீழடி



31. கஞ்சுகம் என்றால் என்ன ?

A) பொருளிருந்து தர மறுப்பவர்

B) உள்ளத்தூய்மை அற்றோர்

C) சங்ககால ஆண்களின் மேலாடை

D) சங்ககால மகளிர் ஆடை



32. துன்னக்காரர் என்றால் என்ன ?

A) அசைவ உணவு உண்போர்

B) அதிக உணவு உண்போர்

C) சங்ககாலத்தில் துணி தைப்பவரின் பெயர்

D) மலர் அலங்காரம் செய்பவர்



33. ஐம்படைத் தாலி என்பது?

A) சிறுவர் அணியும் கழுத்தணி

B) அரசி அணியும் திருமாங்கல்யம்

C) ஐம்படை வீரர்கள் அணியும் கழல்

D) இவற்றில் எதுவுமில்லை



34. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி

------------------------ உமனர் போகலும் - என்ற வரிகள் இம்பெற்ற நூல் ?

A) புறநானூறு

B) குறுந்தொகை

C) அகநானூறு

D) நற்றிணை



35. பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் ?

A) புறநானூறு

B) குறுந்தொகை

C) அகநானூறு

D) நற்றிணை



36. திண்டுக்கல் ஆலோசனைக் கூட்டத்தில் வேலுநாச்சியாருடன் ஆலோசனையில் இடம்பெற்றிருந்தவர்கள் யார் ?

1. அமைச்சர் தாண்டவராயன்

2. தளபதி பெரிய மருது

3. தளபதி சின்னமருது

4. குறுநில மன்னர்கள்

5. ஹைதர் அலி


A) 1,2,3 மற்றும் 4 மட்டும்

B) 1 மற்றும் 2 மட்டும்

C) 1, 2, 4 மட்டும்

D) 1, 2, 3, 4 மற்றும் 5



37. பொன்னொடு வந்து கரியொடு பெயரும் என்ற வரிகள் இம்பெற்ற நூல் ?

A) புறநானூறு

B) குறுந்தொகை

C) அகநானூறு

D) நற்றிணை



38. சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கியது எது?

A) கொற்கை

B) முசிறி

C) தொண்டி

D) பூம்புகார்



39. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க 5000 குதிரைப்படை வீரர்களை அனுப்பியவர் யார் ?

A) வீரத்தாய் குயிலி

B) தீரன் சின்னமலை

C) ஹைதர் அலி

D) இராணி மங்கம்மாள்



40. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார் ?

A) வீரத்தாய் குயிலி

B) அம்புஜத்தம்மாள்

C) ஒக்கூர் மாசாத்தியார்

D) ஜான்சி ராணி

41. சிவகங்கையை மீட்கும் பொருட்டு படை உதவி வேண்டி வேலுநாச்சியார் ஹைதர் அலியுடன் எந்த மொழியில் பேசினார் ?

A) தமிழ்

B) தெலுங்கு

C) ஆங்கிலம்

D) உருது



42. சிவகங்கையை மீட்க படையை திரட்டி வேலுநாச்சியார் பயிற்சி அளித்த இடம் ?

A) காளையார் கோவில்

B) நெற்கட்டும் செவல்

C) திண்டுக்கல் கோட்டை

D) பாளையங்குறிச்சி



43. இராமாமிர்தம் அம்மையாருக்கு இசையும் நாட்டியமும் கற்றுத் தந்தவர் ?

A) கிருஷ்ணசாமி

B) சுயம்பு

C) கண்ணபிரான்

D) மருதையா



44. இராமாமிர்தம் அம்மையார் பிறந்த குடி ------- ஆகும்

A) தேவதாசி

B) இசை வேளாளர்

C) மருத்துவம்

D) இவை எதுவுமில்லை



45. இராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு ?

A) 1883

B) 1938

C) 1917

D) 1940



46. கதர் ஆடை என்பது ?

A) பட்டாடை

B) பருத்தி ஆடை

C) செயற்கையிழை ஆடை

D) இவை எதுவுமில்லை



47. இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார் ?

A) தில்லையாடி வள்ளியம்மை

B) இராணி மங்கம்மாள்

C) இராமாமிர்தம் அம்மையார்

D) அறிஞர் அண்ணா



48. இராமமிர்தம் அம்மையார் மொழிப்போர் பேரணியில் கலந்து கொண்ட ஆண்டு ?

A) 1938

B) 1939

C) 1940

D) 1941



49. இராமாமிர்தம் அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர் ?

A) விடுதலை விடுதலை

B) தேவதாசி முறை ஒழிக

C) கதர் அணிந்தவர் உள்ளே வரலாம்

D) சத்தியமேவ ஜெயதே



50. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவாக தமிழக அரசு உருவாக்கிய திட்டம் எது ?

A) தேவதாசிகள் உதவித் திட்டம்

B) பெண் போராளிகள் விருது

C) கதராடை அபிவிருத்தி திட்டம்

D) திருமண உதவித் திட்டம்



51. டாக்டர் முத்துலட்சமி ரெட்டி பிறந்த ஆண்டு ?

A) 1886

B) 1887

C) 1888

D) 1889



52. டாக்டர் முத்துலட்சமி ரெட்டி எச்சட்டம் கொண்டு வர உதவினார் ?

A) சாதி ஒழிப்பு

B) தேவதாசி முறை

C) கந்துவட்டி ஒழிப்பு

D) இவை அனைத்தும்



53. ஔவை இல்லம் அமைத்தவர் யார் ?

A) மூவலூர் இராமாமிர்தம்

B) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

C) ராணி மங்கம்மாள்

D) தில்லையாடி வள்ளியம்மை



54. புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தை சென்னையில் தொடங்கியர் யார் ?

A) மூவலூர் இராமாமிர்தம்

B) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

C) ராணி மங்கம்மாள்

D) தில்லையாடி வள்ளியம்மை



55. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு ?

A) 1898

B) 1897

C) 1896

D) 1895



56. டாக்டர் முத்துலட்சமி ரெட்டி மறைந்த ஆண்டு ?

A) 1968

B) 1969

C) 1970

D) 1971



57. இராணி மங்கம்மாளின் கணவர் யார் ?

A) வீரப்ப நாயக்கர்

B) சொக்கநாத நாயக்கர்

C) கிருட்டின முத்து வீரப்ப நாயக்கர்

D) இவர்களில் எவருமிலர்



58. இராணி மங்கம்மாளின் மகன் யார் ?

A) முத்து வீரப்பன்

B) விசயரங்கன்

C) சொக்கநாதன்

D) நரசப்பையன்



59. இராணி மங்கம்மாளின் தளபதி யார்?

A) முத்து வீரப்பன்

B) ரவி வர்மா

C) ஹாஜி

D) நரசப்பையன்



60. மனித நாகரிக தொட்டில் எனப்படுவது ?

A) இலெமூரியா

B) நாவலந்தீவு

C) குமரிக்கோடு

D) பரதக் கண்டம்



61. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள எனும் பாடலடி இடம்பெற்ற நூல் ?

A) பெருங்கதை

B) சிலப்பதிகாரம்

C) சீவக சிந்தாமணி

D) மணிமேகலை



62. சென்னை மாகாணத்தின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர் யார் ?

A) டாக்டர் சாந்தா

B) டாக்டர் மலர்க்கொடி

C) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

D) இவர்களில் எவருமிலர்



63. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் ?

A) ஜோகன்ஸ்பர்க்

B) நியூயார்க்

C) தில்லையாடி

D) லண்டன்



64. தென்னாப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மை கைதான ஆண்டு ?

A) 1918

B) 1915

C) 1914

D) 1913



65. சிறை தண்டனைக்காக நீ வருந்துகிறாயா என தில்லையாடி வள்ளியம்மையிடம் கேட்டவர் யார் ?

A) ஜவஹர்லால் நேரு

B) மகாத்மா காந்தி

C) அறிஞர் அண்ணா

D) பெரியார்



66. தில்லையாடி வள்ளியம்மை மறைந்த ஆண்டு ?

A) 1910

B) 1912

C) 1913

D) 1914



67. தமிழரின் தனிப்பண்பு என்பது ?

A) நாகரிகம்

B) பொறை

C) நடுவுநிலைமை

D) இவை அனைத்தும்



68. தமிழர்களின் விற்பனை பொருள் ?

A) நெல்

B) சாமை

C) உளுந்து

D) இவை அனைத்தும்



69. கிரேக்க நாட்டிற்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள் ?

A) அரிசி

B) மயில்தோகை

C) சந்தனம்

D) இவை அனைத்தும்



70. தமிழர் சிறந்து விளங்கிய வணிகம் எது ?

A) கடல் வணிகம்

B) உப்பு வணிகம்

C) துணி வணிகம்

D) குதிரை வணிகம்



71. பழந்தமிழகத்தில் வணிகர் வாழ்ந்த பெரு நகரம் எது ?

A) காயல்பட்டினம்

B) விளந்தை

C) கொற்கை

D) பூம்புகார்



72. கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள் எது ?

A) யானைத் தந்தம்

B) மயில் தோகை

C) வாசனைப் பொருட்கள்

D) இவை அனைத்தும்



73. காவிரிப் பூம்பட்டினத்தில் துறைமுகப் பொருட்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததைக் குறிப்பிடும் நூல் எது ?

A) அகநானூறு

B) பட்டினப்பாலை

C) புறநானூறு

D) கலித்தொகை



74. கூற்று( A) : ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்து முத்துவடுகநாதரைக் கொன்று சிவகங்கையை கைப்பற்றினர்.

காரணம் (B) : தன் கணவர் முத்துவடுகநாதரை கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டார்.

A) (A) &(B) இரண்டும் சரி மற்றும் (B) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.

B) (A) சரி ஆனால் (B) தவறு

C) (B) சரி ஆனால் (A) தவறு

D) (A) & (B) இரண்டும் சரி மற்றும்(B) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.



75. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

A) மதுரைக்காஞ்சி

B) கூத்தராற்றுப்படை

C) பட்டினப்பாலை

D) பொருநராற்றுப்படை



76. பொருத்துக

1. காந்தல் போன்ற - அ) கண்

2. கயல் போன்ற - ஆ) இதழ்

3. முத்து போன்ற - இ) விரல்

4. கோவை போன்ற - ஈ) பல்

1. 2. 3. 4.

A. இ அ ஈ ஆ

B. ஆ அ இ ஈ

C. ஆ ஈ அ இ

D. அ இ ஈ ஆ



77. தொல்லியலின் முதன்மையான நோக்கம் என்பது ?

A) மக்களின் வாழ்க்கையை ஆய்வது

B) மக்கள் விட்டு சென்ற எச்சங்களை ஆய்வது

C) செப்பேடுகளை ஆய்வது

D) இவை அனைத்தும்



78. ஆர்க்கியாலஜி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் துறை ?

A) கணக்கீட்டுத் துறை

B) புள்ளி விவரத்துறை

C) தடவியல் துறை

D) தொல்லியல் துறை



79. மணிமேகலை சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் துறைமுகநகர் எது ?

A) மதுரை

B) காவிரிப் பூம்பட்டிணம்

C) கொற்கை

D) வேலூர்



80. தொல்லியல் துறையினர் பூம்புகாரில் ஆய்வு மேற்கொண்ட ஆண்டு எது ?

A) 1962

B) 1963

C) 1964

D) 1965



81. வெண்கலத்தாலான புத்தர் பாதம் தொல்லியல் துறையினருக்கு கிடைத்த இடம் ?

A) கீழார் வெளி

B) புத்தப் பள்ளி

C) அரிக்கமேடு

D) போந்தை



82. அகழாய்வு செய்யத் தேவையான பண்பு என்பது ?

A) பொறுமை

B) சிறுகச் சிறுகத் தோண்டுதல்

C) நுட்பமான கலை நுணுக்கம்

D) இவை அனைத்தும்



83. தமிழகத்தில் பழங்கால காசுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது ?

A) தர்மபுரி

B) மதுரை

C) கரூர்

D) இவை அனைத்தும்



84. முந்நீர் வழக்கம் என்பது குறிப்பது என்ன ?

A) தரைப்பயணம்

B) குதிரைப் பயணம்

C) கடற்பயணம்

D) தேர் உலா



85. முசிறி எம்மன்னருக்குரிய துறைமுகம் ?

A) பாண்டியர்

B) சேரர்

C) சோழர்

D) பல்லவர்



86. பழந்தமிழர் கடல்வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடு ?

A) சீனம்

B) மெசபடோமியா

C) பாலஸ்தீனம்

D) இவை அனைத்தும்



87. பழங்காலக் கப்பல்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது ?

A) பத்துப்பாட்டு

B) குறுந்தொகை

C) புறநானூறு

D) அகநானூறு



88. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - கீரியும் பாம்பும் போல

A) பகை

B) உறவு

C) விழுதல்

D) வாட்டம்



89. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - இருதலைக்கொல்லி எறும்பு போல

A) துன்பம்

B) அரிய செயல்

C) தவிப்பு

D) புகழ்



90. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - இலவு காத்த கிளி போல

A) பகை

B) மறைபொருள்

C) ஏமாற்றம்

D) மகிழ்ச்சி



91. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - மேகம் கண்ட மயில் போல

A) மகிழ்ச்சி

B) முகம்

C) நீங்குதல்

D) வாட்டம்



92. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - தமிழும் சுவையும் போல

A) வலிமை

B) உறவு

C) இனிமை

D) அருமை



93. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - நிலத்தறைந்தான் கை பிழையாதற்று

A) வள்ளன்மை

B) பெருமகிழ்ச்சி

C) கேடு

D) வலிமை



94. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - விரிகதிர் பரப்பிய வெய்யோன் போல

A) தாங்குதல்

B) நீங்குதல்

C) எதிர்பாராத நிகழ்வு

D) உலகில் நடைபெறாத செயல்



95. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல

A) ஏளனம்

B) வேதனை

C) திட்டமிடாமை

D) பிறரை ஏமாற்றுதல்



96. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - கிள்ளுக் கீரை போல

A) ஏளனம்

B) வேதனை

C) கல்வி

D) அரியாமை



97. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - அடைகாத்த கோழி போல

A) வருமுன் காவாமை

B) பாதுகாப்பு

C) விட்டு விடுதல்

D) துன்பம்



98. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - கோடாரி காம்புகள் போல

A) பாதுகாப்பு

B) தன் இனத்தை தானே அழித்தல்

C) காலமறிந்து செயல்படுதல்

D) வேண்டாத செயல்



99. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - ஆற்றில் போட்டாலும் அளந்து

போடுவது போல.

A) விடாமை

B) ஏமாற்றுதல்

C) கொட்டியளத்தல்

D) சிக்கனம்



100. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - கோல் எடுத்தால் குரங்கு ஆடுவது போல

A) வஞ்சனை

B) பலம்

C) அச்சம்

D) தவிப்பு

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download

Download All Model question Paper Click Here > DOWNLOAD

FOR ONLINE TEST CLICK HERE                                CLICK HERE  


thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post