20 - TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER 20 FREE DOWNLOAD - 7th STD TAMIL - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 20 - 7ஆம் வகுப்பு - விடையுடன் இலவச பதிவிறக்கம்.

 

TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 20 WITH ANSWER KEY 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 20 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

ஏழாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்




2022 புதிய பாடத்திட்டம்

இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் வைக்கிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • இந்த பதிவில், 2022ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின்படி, ஏழாம் வகுப்பு புதிய மற்றும் பழைய பாடப் புத்தகத்திலிருந்து வினாக்கள்  தொகுக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ஆகியவற்றின் அடிப்படையிலும், பாடத்திட்டத்தில் இடம்பெறாத வினாக்கள் இதற்கு முன்பாக தேர்வுகளில் பாடப்புத்தகத்தில் இருந்து எவ்வாறு வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன என்ற முன் நிகழ்வுகளின் அடிப்படையிலும் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

MODEL QUESTION PAPER 20 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 
































மாதிரி வினாத்தாள் -20  👇



1. நீ தந்த கனி இது; நீ தந்த கரும்பிது
நீ தந்த நெற்கதிர் இது; என யாரை ந.பிச்சமூர்த்தி போற்றுகிறார்?
A) சூரியன்
B) கண்ணபிரான்
C) மயிலைநாதர்
D) சொக்கநாதர்

2. சூழ்வினையை நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி காக்கும்கை என எவரின் கையை கம்பர் புகழ்ந்து பாடுகிறார் ?
A) காராளர்
B) புலவர்
C) வேந்தர்
D) நெசவாளர்

3. கம்பர் எழுதாத நூல் எது ?
A) ஈட்டி எழுபது
B) ஏரெழுபது
C) திருக்கை வழக்கம்
D) சடகோபரந்தாதி

4. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் என்ற குறளின் படி இயற்கை வேளாண்மைக் கூறுகளில் எதனைப் பற்றி வள்ளுவர் விளக்குறார்?
A) உழுதல்
B) விதைத்தல்
C) தொழு உரமிடுதல்
D) நீர் பாய்ச்சுதல்

5. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது ?
A) நீர்வளமிக்கது நன்செய் நிலம். இந்நிலத்தில் நெல், கரும்பு, வாழை முதலிய பயிர்கள் விளையும்
B) நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை வானம் பார்த்த பூமி என நம் வேளாண் மக்கள் கூறுவர்.
C) இயற்கை வேளாண்மையும் அங்கக வேளாண்மையும் வெவ்வேறானவை. இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை எனப்படும். செயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்வது அங்கக வேளாண்மை எனப்படும்.
D) ஐந்து பொருள்கள் அதாவது கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே பஞ்சகவ்வியம் ஆகும்.


6. வேளாண்தொழிலில் உள்ள கூறுகள் எத்தனை ?
A) இரண்டு
B) நான்கு
C) ஆறு
D) எட்டு

7. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி?
1. பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர்.
2. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும்.
3. வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடிவது எழுவாய் வேற்றுமை ஆகும்.
4. பெயர்ச்சொல்லினது பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது மூன்றாம் வேற்றுமை ஆகும்.

A) 1, 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) அனைத்தும் தவறு
D) அனைத்தும் சரி

8. ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன ?
A) இரண்டாம் வேற்றுமை உருபுகள்
B) மூன்றாம் வேற்றுமை உருபுகள்
C) நான்காம் வேற்றுமை உருபுகள்
D) ஐந்தாம் வேற்றுமை உருபுகள்

9. ஏழாம் வேற்றுமைத் தொடரைக் காண்க ?
1. வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது.
2. பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
3. கூரையின்மேல் சேவல் உள்ளது.
4. கட்டிலின்கீழ் நாய் படுத்துள்ளது.
A) 1, 2 மட்டும் சரி
B) 1, 2, 4 மட்டும் சரி
C) 1 மட்டும் சரி
D) அனைத்தும் சரி

10. போலிகள் தொடர்பான பொருந்தாத தொடரைக் காண்க.
A) அகனமர்ந்து ஈதலின் நன்றே
B) மல்லிகைப் பந்தரின் கீழே தங்கினான்.
C) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
D) அஞ்சு பழங்கள் வாங்கி வா.

11. இவற்றில் இனமில்லா அடைமொழி எது ?
A) பாற்குடம்
B) ஊர்மன்றம்
C) செந்தாமரை
D) செஞ்ஞாயிறு

12. ஆட்டனத்தி எந்த நாட்டுத் தலைவன் ?
A) தொண்டை நாடு
B) சோழநாடு
C) பாண்டியநாடு
D) சேர நாடு

13. சரியான இணையை தேர்ந்தெடு ?
A) தூரத்து ஒளி - க. கௌ. முத்தழகர்
B) பொங்கல் வழிபாடு - கம்பர்
C) உழவின் சிறப்பு - ந. பிச்சமூர்த்தி
D) நண்பன் - வலம்புரி ஜான்

14. பிறமொழிச்சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க. ?
A) குபேரனிடம் ஜாஸ்தியான பணம் இருந்ததால் மக்களை இம்சித்தான்
B) குபேரனிடம் அதிகமான பணம் இருந்ததால் மக்களை இம்சித்தான்
C) குபேரனிடம் அதிகமான பணம் இருந்ததால் மக்களை துன்புறுத்தினான்
D) பெருஞ்செல்வனிடம் அதிகமான பணம் இருந்ததால் மக்களை துன்புறுத்தினான்

15. உபயம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க?
A) நன்கொடை
B) திருப்பணியாளர் கொடை
C) உதவி
D) காத்தல்

16. பொங்கல்விழா நடைபெறும் காலம் இனிய காலம்; கால் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம்; இயற்கையன்னை பசுமையான புடைவை உடுத்துப் பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும் கனியும் கரும்பும் அணிந்து இன்பக்காட்சி தருங்காலம் என கூறியவர் யார் ?
A) பாரதியார்
B) கம்பர்
C) பாரதிதாசன்
D) ரா. பி. சேதுப்பிள்ளை

17. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - இக்குறளில் மகிழ என்னும் பொருள் தரும் சொல் எது ?
A) தொழில் 
B) உவப்ப
C) தலை 
D) உள்ள

18. பாரதிக்குப்பின் கவிதை மரபில் யாருடைய படைப்புகள் திருப்பம் விளைவித்தன?
A) பாரதிதாசன்
B) முடியரசன்
C) வல்லிக்கண்ணன்
D) ந. பிச்சமூர்த்தி

19. செய்தித்தொடரைக் காண்க
A) நேற்று, எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.
B) உன் இருப்பிடம் எங்குள்ளது?
C) இளமையில் கல்.
D) என்னே, இந்த ஓவியத்தின் அழகு!

20. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து - இக்குறளில் பாதுகாப்பு என்னும் பொருள் தரும் சொல் எது?
A) எழுமை
B) ஏமாப்பு
C) உடைத்து
D) ஒருவற்கு

21. எதிர்மறையற்ற தொடரைக் காண்க
A) உழைப்பின்றி ஊதியம் இல்லை
B) தொல்காப்பியன் வீட்டுக்கு வந்திலன்.
C) புறத்திணை இலக்கணம் பிறமொழியில் இல்லை.
D) உன் கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது.

22. மாறியுள்ள குறளை முறைப்படுத்தி எழுதுக.?
A) எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப உயிர்க்கு இவ்விரண்டும் வாழும்
B) எழுத்தென்ப எண்என்ப ஏனை கண்என்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு.
C) இவ்விரண்டும் எண்என்ப ஏனை எழுத்தென்ப கண்என்ப வாழும் உயிர்க்கு.
D) எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு.

23. பெரும்பித்தனாகிய சிவபெருமான் இந்த பூவை விரும்பிச் சூடுவார் என முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது ?

A) ஊமத்தம்பூ 
B) நெறிஞ்சிப்பூ
C) தாழம்பூ 
D) ஆத்திப்பூ

24. முக்கூடற்பள்ளு நூல் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க ?
1. இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
2. நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் எனச் சிலர் கூறுவர்.
3. சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில், கன்னியாகுமரி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்
4. பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவதாக அமைந்த நூல், பள்ளு.
A) 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) 1, 2, 4 மட்டும் சரி
D) அனைத்தும் சரி

25. எந்த மூன்று ஆறுகள் சேருமிடம் முக்கூடல் என முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது ?
1. தண்பொருநை
2. கோதண்டராம ஆறு
3. பொன்னி
4. வைகை
5. பாலாறு
6. சிற்றாறு
A) 1, 2, 6
B) 1, 2, 3
C) 4, 5, 6
D) 1, 3, 5

26. ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு எந்த நிலத்தில் நடைபெற்றது ?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்

27. கோழியூர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற மூவேந்தர்களில் ஒருவரின் பழைய தலைநகரம் எது ?
A) வஞ்சி
B) பூம்புகார்
C) மதுரை
D) உறந்தையூர்

28. தவறான கூற்றினை கண்டறிக ?
A) அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர்
B) தமிழரின் தற்காப்புக்கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது
C) உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடி (சடுகுடு)க்குத் தனியிடம் கிடைத்துள்ளது.
D) தருக்கம் மைதானம் யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.

29. 1938 முதல் 1954வரை கோவில் நிருவாக அலுவலராக பணிபுரிந்த தமிழ்ச் சான்றோர் யார்?
A) வல்லிக்கண்ணன்
B) ந.பிச்சமூர்த்தி
C) கு.ப.ராஜகோபாலன்
D) இவர்கள் அனைவரும்

30. பழைமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள் எவை?
A) பம்பரம் , கிளித்தட்டு , உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன்
B) கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்துவிளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல்
C) மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், நீரில் மூழ்கி மணல் எடுத்தல்
D) பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம்

31. பொருந்தாத சொல்லைக் கண்டறிக ?
A) பதம்
B) மொழி
C) கிளவி
D) இறை

32. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியற்றது எது
A) ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி
B) ஒருபொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சியணி
C) ‘விண்ணைத் தொடும் மலை’, ‘வானை முட்டும் வைக்கோல்போர்’ - உயர்வுநவிற்சியணி
D) தமிழ் மொழி இனிமையானது - உயர்வுநவிற்சியணி

33. வனப்பு என்னும் சொல்லின் பொருள்
A) அழகு
B) அறிவு
C) வளமை
D) இளமை

34. இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்; கடாரத்தை வென்றவன் தமிழன்; ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்; இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்; எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன் என்றவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) ரா.பி.சேதுப்பிள்ளை
C) பரிதிமாற்கலைஞர்
D) தேவநேயப் பாவாணர்

35. ஐயன், ஐயை என யாரை அழைப்பர்?
A) பாணன், பாடினி
B) தந்தை, தாய்
C) சேவல், பேடு
D) எயினன், எயிற்றி

36. பாரதிதாசன் எதில் புலமைமிக்கவராக இருந்தார் ?
A) தமிழ்
B) பிரெஞ்சு
C) ஆங்கிலம்
D) இவை அனைத்தும்

37. கோட்டோவியங்களுக்கு அடிப்படையாக அமைவது ?
A) நேர்கோடு
B) கோணக்கோடு
C) வளைகோடு
D) இவை அனைத்தும்

38. தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே - இச்செய்யுள் அடியில் தேன் உண்ணும் வண்டு எனப் பொருள்தரும் சொல் எது?
A) முழவின்
B) மதுகரம்
C) உ.வே.சாமிநாதர்
D) மாமயி

39. அறம் தவறாது செயல்படும் ஆற்றல் இல்லாதவன் பெற்ற தலைமை, ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம், மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் பெற்ற அழகு ஆகிய இம்மூன்றும் எதைப்போன்றது என நல்லாதனார் குறிப்பிடுகிறார்?
A) பயன்பழமரம் பழுத்தது போன்றது
B) புதரில் விதைத்த விதை போன்றது
C) ஈயாதார் கைச்செல்வம் போன்றது
D) சகடக்கால் போன்றது

40. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி ?
1. கலிங்கத்துப் பரணியில், ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
2. நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை `ஓவிய எழினி’ கொண்டு அறிகிறோம்.
3. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஓவியம் என்றழைத்தனர்.
4. ஓவியம் வi ரயப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம் , சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன.
5. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஓவியம் என்றழைத்தனர்.
6. நரசிம்மவர்மன் காலத்தில் ஓவியக்கலை எழுச்சியுற்று உயர்நிலையை எட்டியது.
7. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்Dம் குகைக்கோவில் ஓவியங்களை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் வரைந்தார்.
A) 1, 2, 3, 4, 5, 7 மட்டும் சரி
B) 2, 3, 4, 5, 7 மட்டும் சரி
C) 4, 5, 6, 7 மட்டும் சரி
D) அனைத்தும் சரி

41. பெயர்ச்சொல் வகை அறிக - குயில் ?
A) காரணப் பொதுப்பெயர்
B) இடுகுறி பொதுப்பெயர்
C) காரண சிறப்புப் பெயர்
D) இடுகுறி சிறப்புப்பெயர்

42. வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான சொற்களை உடைய தொடர் எது
A) பள்ளிக்கு அருகாமையில் என் வீடு இருக்கிறது.
B) என் வீட்லே யாருமே இல்லே.
C) எம் ஊர் ஆத்துல தண்ணியே இல்லே.
D) என் அப்பா அதிகமாக செலவு செய்கிறார்.

43. பிரித்து எழுதுக - என்றுருகுவார்
A) என்று + உகுவார்
B) என்றுரு + உகுவாவார்
C) என்று + உருகுவார்
D) என்றுரு + உருகுவார்

44. வழுநீக்கிய தொடரைக் காண்க
A. அரசர் பலர் வந்தார்கள்.
B. மயில்கள் ஆடியது.
C. கனிமொழி பாடம் படித்தாய்.
D. ஔவையார், அதியமானிடம் பரிசில் பெறச் சென்றார்.

45. திருவாரூர் நான்மணிமாலை எந்த பாடல்களால் ஆனது ?
A) வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா
B) வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா
C) கலிப்பா, கட்டளைக் கலித்துறை, ஒன்றிய வஞ்சித் தளை, கலித்தாழிசை
D) ஆசிரியப்பா, வஞ்சி விருத்தம், வெண்பா விருத்தம், ஆசிரிய விருத்தம்.

46. மதுரைக்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர் அல்லாதது எது ?
A) கோவில்களின் நகர்
B) கோவில் மாநகர்
C) தென்னிந்தியாவின் ஏதென்ஸ்
D) திருவிழா நகர்

47. குழந்தை இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார் ?
A) வாணிதாசன்
B) அழ.வள்ளியப்பா
C) பாரதிதாசன்
D) இவர்களில் எவருமிலர்

48. சரியான கூற்று எது ?
A) திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்ததனால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் மதுரைக்கு வழங்கலாயிற்று.
B) ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததனால், ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயரமைந்தது.
C) மதுரையை காக்க இறைவன் அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் மதுரைக்கு நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டது
D) இவை அனைத்தும்.

49. சரியான இணையைக் கண்டறிக
A) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் - மணிவாசகம்
B) தமிழ்கெழு கூடல் - அகநானூறு
C) தமிழ்வேலி - சிலப்பதிகாரம்
D) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - கலித்தொகை

50. கூற்று ( A) : மருதை என வழங்கிய இடம் மதுரை என்றாகியது.
காரணம் (R) : மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என அழைக்கப்பட்டது.
A) (A) &(R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.
B) (A) சரி ஆனால் (R) தவறு
C) (R) சரி ஆனால் (A) தவறு
D) (A) & (R) இரண்டும் சரி மற்றும்(R) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.

51. பெயர்ச்சொல் வகை அறிக - ஆர்க்காடு ?
A) பொருட்பெயர்
B) காலப்பெயர்
C) இடப்பெயர்
D) சினைப்பெயர்

52. அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றிய தமிழ்ச்சான்றோர் யார்?
A) வாலிபக் கவிஞர்
B) மயிலேறும் பெருமாள்
C) மக்கள் கவிஞர்
D) திரைக்கவித் திலகம்


53. பொருத்துக
1. சிறந்த ஊர் - அ) குப்பம்
2. கடற்கரை நகரம் - ஆ) பாக்கம்
3. கடற்கரை சிற்றூர் - இ) புரம்
4. நெய்தல் நிலம் - ஈ) பட்டினம்

      1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. அ இ ஈ ஆ

54. திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A) ஈசான தேசிகர்
B) மயிலேறும் பெருமாள்
C) சுவாமிநாத தேசிகர்
D) A மற்றும் C

55. பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ எனக் குறிப்பிட்டவர் யார் ?
A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
B) கண்ணதாசன்
C) திரு.வி.க
D) இவர்களில் எவருமிலர்

56. பாவுநூல் மற்றும் ஊடைநூல் இணைந்து உருவாவது ?
A) காவியநூல்
B) கலிங்கம்
C) இதிகாசம்
D) கலிங்கத்துப்பரணி

57. காய்களின் இளமை மரபு பெயர்களில் தவறானது எது?
A) அவரைப்பிஞ்சு
B) கத்தரிப்பிஞ்சு
C) வாழைக்கச்சல்
D) தென்னம்பிள்ளை

58. விலங்குகளின் இளமை மரபுப் பெயர்களில் தவறானது எது?
A) புலிப்பறழ்
B) குருவிக்குஞ்சு
C) சிங்கக்குருளை
D) மான்குட்டி

59. வினைமரபுச்சொற்களில் தவறானது எது ?
A) அப்பம் தின்
B) காய்கறி நறுக்கு
C) இலை பறி
D) மலர் கொய்

60. பிறமொழிச்சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க.
A) ஸ்டெயிட்டாபோயி லெப்ட்ல திரும்புங்க. அங்க கார்னர்ல ஒரு போர்டு இருக்கும்.
B) நேராகப் போயி லெப்ட்ல திரும்புங்க. அங்க கார்னர்ல ஒரு போர்டு இருக்கும்.
C) நேராகச் சென்று இடப்பக்கம் திரும்புங்கள். அங்கு மூலையில் ஒரு பலகை இருக்கும்.
D) நேராகச் சென்று இடது பக்கம் திரும்புங்கள். அங்கு மூலையில் ஒரு பலகை இருக்கும்.

61. பொதுமை வேட்டல் நூலின் முதல் தலைப்பு எது ?
A) இறைவாழ்த்து
B) மொழிவாழ்த்து
C) தெய்வநிச்சயம்
D) போற்றி

62. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை எது?
A) திருவாசகம்
B) மகாபாரதம்
C) திருக்குறள்
D) அறவுரைக் கோவை

63. பேச்சு வழக்கில் இல்லாத செம்மொழி எது ?
A) கிரேக்கம்
B) இலத்தீன்
C) சமற்கிருதம்
D) இவை அனைத்தும்

64. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ?
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) பன்னிருபாட்டியல்
D) நன்னூல்

65. கண்ணதாசன் தொடர்பான சரியற்ற கூற்று எது ?
A) கவியரசு கண்ணதாசன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ளார்.
B) தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்.
C) இவருக்குக் காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் பல உண்டு.
D) இவர் 1983 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

66. பட்டி, பாடி என்ற ஊர்கள் எங்கு அமைந்திருந்தன?
A) நெய்தல் நிலத்தில்
B) மலைப்பகுதியில்
C) காட்டின் நடுவில்
D) ஆற்றின் கரையில்

67. வீறுடை செம்மொழி செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி என்றவர் யார் ?
A) பாவலரேறு
B) புரட்சிக் கவிஞர்
C) கவிஞரேறு
D) சிலம்புச் செல்வர்

68. பஞ்சிலிருந்து நூற்கப்படும் நூல் எண் 10, எண் 20, எண் 40, எண் 60, எண் 80, எண் 100, எண் 120 என எதன் அடிப்படையில் பெயரிட்டு அழைக்கின்றோம்.?
A) நூலின் நீளம்
B) நூளின் விட்டம்
C) மென்மைத் தன்மை
D) இவை அனைத்தும்

69. நேர் இணைச்சொற்கள் இடம்பெறாத தொடரைக் காண்க?
A) காவேரி கண்ணுங்கருத்துமாகப் படிப்பாள்.
B) கோபாலன் உயர்வுதாழ்வின்றி அனைவரிடமும் பழகும் பண்பாளர்.
C) வளவனின் தந்தை பேரும்புகழும் மிக்கவர்.
D) காந்தியடிகள் ஈடுஇணையற்ற பண்பாளர்.

70. திராவிடமொழிகளின் தாய் ‘தமிழ்’ என உலகுக்குப் பறைசாற்றியவர் யார் ?
A) பரிதிமாற்கலைஞர்
B) தேவநேயப் பாவாணர்
C) கால்டுவெல்
D) அயோத்திதாசப் பண்டிதர்

71. பொருத்துக
1. திருப்பூர் - அ) போர்வைகள்
2. ம து ரை - ஆ) பட்டாடைகள்
3. உறையூர் - இ) கண்டாங்கிச் சேலைகள்
4. காஞ்சி - ஈ) சுங்குடிப்புடவைகள்
5. சென்னிமலை - உ) பின்னலாடைகள்
       1. 2. 3. 4. 5.
A. அ ஆ இ ஈ உ
B. ஈ இ ஆ உ அ
C. ஆ அ ஈ இ உ
D. உ ஈ இ ஆ அ

72. எதன் காரணங்களால் முதனிலை ஊர்ப்பெயர்களும் தனித்தன்மைமிக்க ஊர்ப் பெயர்களும் சிதைந்து, திரிந்து, மருவி, மாறி வழங்கலாயின ?
A) காலச்சுழற்சி
B) ஆட்சிமாற்றம்
C) வேற்றினக்கலப்பு
D) இவை அனைத்தும்

73. பொருந்தாத இணையை கண்டறிக
A) வினையே ஆடவர்க்கு உயிரே என்ற வரிகள் இடம்பெற்ற நூல்- குறுந்தொகை
B) சீரைத் தேடின் ஏரைத் தேடு என்ற வரிகள் இடம்பெற்ற நூல் - ஔவையார்
C) தமிழை என்Dயிர் என்பேன் கண்டீர் என்றவர் - பாரதியார்
D) என் கடன் பணி செய்து கிடப்பதே என்றவர் - திருநாவுக்கரசர்

74. செயங்கொண்டார் எம்மன்னரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்
A) வரகுண பாண்டியன்
B) பாண்டிய நெடுஞ்செழியன்
C) முதலாம் குலோத்துங்கச் சோழன்
D) சூடாமணி பாண்டியன்

75. மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்?
A) பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை
B) புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை
C) நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
D) புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

76. வந்தி என்னும் கிழவிக்காக மண் சுமந்து பாண்டியனிடம் பிறம்படி படி இறைவன் யார் ?
A) சிவன்
B) திருமால்
C) முருகன்
D) நான்முகன்

77. அறவுரைக் கோவை நூலில் உள்ள அதிகாரங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை ?
A) 100 - 10
B) 30 - 300
C) 50 - 400
D) 10 - 100

78. உலக முதன்மொழியாய்த் தோன்றியும் தமிழ் இன்றும் இளமை மாறாமல் கன்னித் தமிழாய் இருக்க காரணம் என்ன ?
A) தமிழ் மெல்லோசை மொழியாய் இருப்பதால்
B) தமிழில் காரணப் பெயர்கள் அதிகமாக இருப்பதால்
C) இளஞர்கள் அதிகமாக தமிழைப் பேசுவதால்
D) தமிழ் வல்லோசை மொழியாக இருப்பதால்

79. நீதிநெறி வழுவாமல் நிற்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
A) ஏன் நிற்க வேண்டும் ?
B) நீதிநெறி வழுவாமல் நிற்க வேண்டுமா ?
C) எப்படி நிற்க வேண்டும் ?
D) நீதிநெறி என்றால் என்ன ?

80. திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்
B) தென்றல் இதழில் ஆசிரியராக இருந்தார்
C) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்
D) விருதாசலனார், சின்னம்மை இணையருக்கு மகனாகத் தொன்றினார்.

81. தவறான கூற்றினை கண்டறிக.
A) உரிச்சொல் பெயருடனும் வினையுடனும் சேர்ந்து பொருள்தரும்
B) உரிச்சொல் தனியாக நின்று பொருள் தராது
C) இடைச்சொல் தனியாக செயல்படாமல் பெயர்ச்சொல்லுடன் வினைச்சொல்லுடன் சேர்ந்து வரும்
D) இடைச் சொல், இணைச் சொல்லாகவும், அசையாகவும் வேற்றுமை உருபாகவும் உவம உருபுடனும் இணைந்து வராது.

82. நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?
A) காரியாசான்
B) மோசி கீரனார்
C) திருவள்ளுவர்
D) கோவூர்கிழார்

83. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) தமிழ்கெழு கூடல் - புறநானூறு
B) தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை - நல்லூர்நத்தத்தனார்
C) தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை - இளங்கோவடிகள்
D) வானவர் உறையும் மதுரை - சீத்தலைச் சாத்தனார்

84. பயிற்று மொழிக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதைப் போன்றது என்று கூறியவர் யார்?
A) டாக்டர் மு.வ
B) தாயுமானவர்
C) காந்தியடிகள்
D) விவேகானந்தர்

85. பொருத்துக
1. இடுகுறி பொதுப்பெயர் - அ) பனை
2. இடுகுறிச் சிறப்புப்பெயர் - ஆ) மரங்கொத்தி
3. காரணப் பொதுப்பெயர் - இ ) காடு
4. காரணச் சிறப்புப்பெயர் - ஈ) பறவை
     1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. இ அ ஈ ஆ

86. கோவூர்கிழார் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) நற்றினை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் கோவூர்கிழாரின் 18 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
B) போரைத் தவிர்த்த புலவர் என்று அழைக்கப்படுகிறார்.
C) கிள்ளிவளவன் மலையமானின் பிள்ளைகள் இருவரை யானைக்காலில் இட்டு கொல்வதற்கு வழிகோலினார்.
D) புலவர் இளந்தத்தனாரை சிறை மீட்டார்.

87. மதுரையை விழா நிறைந்த நகரமாக விளக்கமுறச் செய்தவர் யார் ?
A) திருமலை நாயக்கர்
B) கிருஷ்ணதேவராயர்
C) விஸ்வநாத நாயக்கர்
D) சண்முக பாண்டியன்

88. பொருத்துக
1. எழிலி - அ) தொழிற் பெயர்
2. நொடி - ஆ) பொருட் பெயர்
3. தலை - இ) சினைப் பெயர்
4. கற்பித்தல் - ஈ) காலப் பெயர்
     1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ ஈ அ ஆ
C. ஆ ஈ இ அ
D. அ இ ஈ ஆ

89. சோ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருளைத் தருக ?
A) தலைவன்
B) அம்பு
C) அரண்
D) பத்திரிகையாளர்

90. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க - சொத்து
A) உடமை
B) ஆஸ்தி
C) சேமம்
D) உடைமை

91. தவறான எதிர்ச்சொல்லைக் கண்டறிக
A) இரவு X பகல்
B) ஈடு X இணை
C) ஏற்றம் X தாழ்வு
D) கற்றாரும் X மற்றாரும்

92. ஓதலின் சிறந்தன்று எது ?
A) கண்ணஞ்சப் படுதல்
B) கற்றது மறவாமை
C) ஒழுக்கமுடைமை
D) வாய்மையுடைமை

93. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு என்று கூறியவர் ?
A) டாக்டர் கிரௌல்
B) ச. அகத்தியலிங்கம்
C) பாரதியார்
D) ஈராஸ் பாதிரியார்

94. குமர குருபரர் தொடர்பான தவறான கூற்று எது ?
A) பெற்றோர் - சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி அம்மையார்
B) ஊர் - திருவை குண்டம்
C) திருவாரூர் நான்மணி மாலையை இயற்றியுள்ளார்.
D) காலம் - கி.பி. பத்தாம் நூற்றாண்டு

95. நீரின்றி அமையாது உலகு என்ற அடிகள் இடம்பெற்ற நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) நாலடியார்
C) கம்பராமாயணம்
D) திருக்குறள்

96. கண்ணதாசனின் இயற்பெயர் ?
A) முத்தையா
B) வரதன்
C) எத்திராசலு
D) மௌனி

97. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார் ?
A) வாணிதாசன்
B) முடியரசன்
C) கண்ணதாசன்
D) பாரதிதாசன்

98. கரும்பு பயிருக்கு எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும் ?
A) நண்டு
B) வண்டி
C) தேர்
D) ஏர்

99. நல்லாதனார் பிறந்த ஊர் ?
A) திருத்து
B) துள்ளம்
C) மருதூர்
D) தண்டலம்

100. திருச்சி தொன்மைக் காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
A) திருச்சிராப்பள்ளி
B) திரிசிரபுரம்
C) உறையூர்
D) இவற்றில் எதுவுமில்லை

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download


Download All Model question Paper Click Here > DOWNLOAD

FOR ONLINE TEST CLICK HERE  CLICK HERE  

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post