1 - TNPSC GROUP-2 Genaral Tamil Model question paper -1 (2022 New Syllabus) கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 1

 

TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 1 

WITH ANSWER KEY 

 கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் தகுதித் தேர்வு  
மாதிரி வினாத்தாள் - 1

விடையுடன் இலவச பதிவிறக்கம்

புதிய பாடத்திட்டம் (2022) 

மாதிரி வினாத்தாள் 1-க்கான பாடத்திட்ட தலைப்புகள்

1.     (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)

2.     (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.

3.     (பகுதி-ஆ) திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்    தொடரை  நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல் வகை, வினைத் திட்பம், இனியவை கூறல்.

4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.

----------------------------------------------------------------

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் அன்பிற்கினியவர்களே !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வின் பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் விடையுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தேர்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இனிவரும் நாட்களில் மாதிரி வினாத்தாள்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். மறவாமல் இந்த இணைய தள பக்கத்தினை Follow செய்யுங்கள். இந்த இணைய பக்கத்தில் புதியதாக பதிவேற்றம் செய்யப்படும் போது உங்களுக்கு Notification வரும். எனவே தவறாமல் இந்த பக்கத்தை Follow செய்யுங்கள்.  

FREE PDF FILE DOWNLOAD

👇


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)















மாதிரி வினாத்தாள் - 1 (100 வினாக்கள்)


1. "நெறிநாலு" இச்சொல்லின் பொருளோடு தொடர்பில்லாதது எது ?
A) அதர்வணம்
B) வைதருப்பம்
C) கௌடம்
D) பாஞ்சாலம்

2. பொருத்துக
A. கனல் - அ) பல்
B. எயிறு - ஆ) காடு
C. புலால் - இ) நெருப்பு
D. வனம் - ஈ) இறைச்சி
     1. 2. 3. 4.
A. அ இ ஈ ஆ
B. ஆ இ ஈ அ
C. ஆ ஈ அ இ
D. இ அ ஈ ஆ

3. பொருத்துக
1. மடங்கல் - அ) கொழுப்பு
2. நிணம் - ஆ) தந்தம்
3. கோடு - இ) சிங்கம்
4. உரும் - ஈ) இடி

      1. 2. 3. 4.
A. ஈ இ அ ஆ
B. இ அ ஆ ஈ
C. அ ஈ ஆ இ
D. ஈ அ ஆ இ

4. சீத்தையரைக் குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம் வெட்டி - இத்தொடரில் சீத்தையர் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?
A) இராமனின் மனைவி சீதை
B) பார்வதி
C) போலிப் புலவர்
D) புரவலர்

5. பொருத்துக
1. மேதி - அ) மான்
2. கேழல் - ஆ) எருமை
3. எண்கு - இ) கரடி
4. மரை - ஈ) பன்றி

      1. 2. 3. 4.
A. ஆ ஈ இ அ
B. ஈ இ அ ஆ
C. ஆ ஈ அ இ
D. இ ஈ ஆ அ

6. வள்ளுவரின் கருத்துப்படி அரியவற்றுள் எல்லாம் அரிது எது ?
A) பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
B) பெற்றியார்ப் பேணிக் கொளல்
C) திறனறிந்து தேர்ந்து கொளல்
D) சூழ்வாரை சூழ்ந்து கொளல்

7. "அறனறிந்து" என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பைக் காண்க ?
A) வினையெச்சம்
B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
C) வினைத் தொகை
D) பண்புத் தொகை

8. பொருத்துக
1. வாசிக கலாநிதி - அ) சி.சு செல்லப்பனார்
2. சைவ மணி - ஆ) வேங்கடாசலம் பிள்ளை
3. கரந்தை கவியரசு - இ) கி.வா.ஜெகந்நாதன்
4. சிலம்பொலியார் - ஈ) அ.ச. ஞானசம்பந்தன்

       1. 2. 3. 4.
A. அ இ ஈ ஆ
B. இ ஆ ஈ அ
C. இ ஈ ஆ அ
D. ஈ ஆ இ அ

9. தவறான இணையைக் கண்டறிக.
A) பண்பு - பாடறிந்து ஒழுகல்
B) அன்பு - தன்கிளை செறுமை
C) அறிவு - பேதையார் சொல் நோன்றல்
D) செறிவு - கூறியது மறாஅமை

10. தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் - இக்குறளில் உள்ள தக்கார் என்ற சொல்லின் பொருள் ?
A) கிளைஞர்
B) பகைவர்
C) அன்புடையோர்
D) தகுதியுடைய பெரியோர்

11. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொளல்ல தில்லை பொருள் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது ?
A) சொற்பொருள் பின்வரு நிலையணி
B) உருவக அணி
C) சொல் பின்வரு நிலையணி
D) இல்பொருள் உவமையணி

12. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் - இக்குறளில் இடம்பெற்றுள்ள கடைப்போலி சொற்களை எடுத்து எழுதுக
A) அறன் - திறன்
B) அறனீனும் - ஈனும்
C) திறனறிந்து - தீதின்றி
D) இன்பமும் - ஈனும்

13. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் - இக்குறளில் உள்ள விடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு தருக.

A) வியங்கோள் வினைமுற்று

B) தொழிற்பெயர்

C) வினையாலனையும் பெயர்

D) பண்புத் தொகை



14. தவறான இணையைக் கண்டறிக.

A) பணை - மூங்கில்

B) கவிகை - பல்லக்கு

C) வானகம் - தேவருலகம்

D) புயல் - மேகம்



15. உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள் - இக்குறளின்படி வேந்தDக்குரிய பொருள்கள் எத்தனை?

A) ஆறு

B) ஐந்து

C) நான்கு

D) மூன்று



16. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்

செல்வச் செவிலியால் உண்டு - இக்குறளின்படி உவமையோடு பொருந்தாத பொருளைக் காண்க. ?

A) அன்பு - தாய்

B) அருள் - குழந்தை

C) மருள் - செவிலி

D) பொருள் - வளர்ப்புத் தாய்



17. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - குன்றேறி யானைப்போர் கண்டற்றால்

A) பாதுகாப்பு

B) வேண்டாத வேலை

C) பயனற்ற செயல்

D) கருமி



18. வள்ளுவரின் கருத்துப்படி செறுநர் செருக்கறுக்கும் எஃகு எது ?

A) புகழ்

B) பொருள்

C) கல்வி

D) கேள்விச் செல்வம்



19. செல்வத்தை நிலையாகக் கட்டும் கயிறாக வள்ளுவர் எதனைக் கூறுகிறார் ?

A) காலமறிதல்

B) ஒழுக்கம்

C) அடக்கமுடைமை

D) சினம்



20. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல் - இக்குறளில் பயின்று வந்துள்ளது தொடை எது?

A) எதுகை மட்டும் வந்துள்ளது

B) மோனை மட்டும் வந்துள்ளது

C) எதுகை, மோனை மற்றும் இயைபு வந்துள்ளது.

D) எதுகை மற்றும் மோனை வந்துள்ளது



21. பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது ?

A) ஒழுக்கம்

B) பொருள்

C) சான்றாண்மை

D) நட்பு



22. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுக்குப் பொது என்றவர் யார் ?

A) ஜி.யு.போப்

B) கால்டுவெல்

C) கி.ஆ.பெ.விசுவநாதம்

D) திரு.வி.க



23. திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்Dம் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்Dம் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்Dம் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்றவர் யார் ?

A) ஜி.யு.போப்

B) கால்டுவெல்

C) கி.ஆ.பெ.விசுவநாதன்

D) திரு.வி.க









24. பொருத்துக

1. ஆசுகவி - அ) முத்து மீனாட்சி கவிராயர்

2. குருபாததாசர் - ஆ) சுப்பிரமணிய சிவா

3. பழைய நாரதர் - இ) மா.ராமலிங்கம்

4. எழில் முதல்வன் - ஈ) வீரகவிராயர்



1. 2. 3. 4.

A. ஈ அ ஆ இ

B. இ ஈ அ ஆ

C. ஆ அ ஈ இ

D. ஈ இ அ ஆ



25. நடலை என்ற சொல்லின் பொருளைத் தருக ?

A) துன்பம்

B) நடராசர்

C) நடனம்

D) நடனமாடும் பெண்



26. கொடுந்தடக்கரித் திரளெனும் குழுவினுள் ஒருவன்

அடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால் - இத்தொடரில் பெரிய யானை என்னும் பொருள் தரும் சொல்லைத் தேர்க ?

A) கரி

B) கொடுந்தடக்கரி

C) மதினடி

D) தடக்கரி



27. நிகழந் தாரையில் காவதத் துள்ளுறை நெடுநீர்

அகழி போன்றவோர் ஓடையுண் டதனிDக் கணித்தாய் - இச் செய்யுளில் "வழி" என்னும் பொருளைத் தரும் சொல்லைத் தேர்க.

A) அகழி

B) நெடுநீர்

C) துள்ளுறை

D) தாரை



28. மலை என்னும் பொருள் தரும் சொல்லைத் தேர்க.

A) பொருப்பு

B) மாதிரம்

C) பூதரம்

D) இவையனைத்தும்



29. சிங்கம் என்னும் பொருள் தராத சொல்லைத் தேர்க.

A) கேசரி

B) மடங்கல்

C) ஏறு

D) வேங்கை



30. சந்த மென்மணிக் கரத்தினால் சிரமுகம் தடவி - இத்தொடரில் சந்தம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க ?

A) சந்தனம்

B) இசை

C) பாட்டு

D) அழகு



31. தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் - இத்தொடரில் தார் என்பதன் பொருள் என்ன

A) அந்தி மாலை

B) வாழை

C) மலர் மாலை

D) அழகு



32. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) சொல் பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



33. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) சொல் பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



34. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) சொல் பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



35. வள்ளுவரின் கருத்துப்படி எம்முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் நல்ல துணையாக வருவது ?

A) நட்பு

B) அன்பு

C) ஒழுக்கம்

D) அறம்



36. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) சொல் பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



37. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) சொல் பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



38. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தற்கு வேண்டும் பொழுது - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) எடுத்துக்காட்டு உவமையணி

B) பின்வரு நிலையணி

C) பிறிதுமொழிதலணி

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



39. "கொளல்" என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பைக் காண்க.

A) அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

B) வினைத் தொகை

C) தொழிற்பெயர்

D) வினையாலனையும் பெயர்



40. வள்ளுவரின் கருத்துப்படி பொறாமை உடையவனிடம் செல்வம் நிலைக்காது ; அது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் ------- இருக்காது.

A) பண்பு

B) உயர்வு

C) செல்வம்

D) அன்பு



41. "உரவோர்" என்ற சொல்லின் பொருளை அறிக.

A) உறவினர்

B) பண்புடையாளர்

C) மனவலிமையுடையோர்

D) அறவுடையோர்



42. பொருத்துக

A. ஆரிருள் - அ) பகை

B. ஏமாப்பு - ஆ) நரகம்

C. கதம் - இ) பாதுகாப்பு

D. இகல் - ஈ) சினம்



1. 2. 3. 4.

A. அ இ ஈ ஆ

B. ஆ இ ஈ அ

C. ஆ ஈ அ இ

D. இ ஈ ஆ அ





43. பொருத்துக

1. சிலை - அ) கழுத்து

2. மிடறு - ஆ) காடு

3. கடம் - இ) அகிற்புகை

4. தூமம் - ஈ) வில்

1. 2. 3. 4.

A. ஈ இ அ ஆ

B. ஆ இ ஈ அ

C. அ ஈ ஆ இ

D. ஈ அ ஆ இ





44. வேம் என்ற சொல்லின் பொருளைக் கூறுக.

A) வேப்பமரம்

B) வேகின்றது

C) பிடவ மரம்

D) விரைவு



45. பொது நெறி காட்டிய புலவர் யார் ?

A) இராமலிங்க அடிகள்

B) திருவள்ளுவர்

C) நாமக்கல் கவிஞர்

D) பாரதிதாசன்



46. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் - இக்குறளில் உலகம் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?

A) மக்கள்

B) உறவினர்

C) உரவோர்

D) உயர்ந்தோர்



47. மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்ட இடத்தினையும் ஆண்டினையும் கூறுக.

A) மதுரை - 1812

B) தஞ்சாவூர் - 1812

C) மதுரை - 1912

D) தஞ்சாவூர் - 1912



48. பொருத்துக

1. வாடா மலர் - அ) டாக்டர் மு.வ

2. கயல்விழி - ஆ) சுந்தரராமசாமி

3. ஜே.ஜே. சில குறிப்புகள் - இ) வைரமுத்து

4. தண்ணீர் தேசம் - ஈ) அகிலன்

1. 2. 3. 4.

A. ஈ அ ஆ இ

B. இ ஈ ஆ அ

C. அ ஈ ஆ இ

D. ஈ இ ஆ அ



49. பொருத்துக

1. மணிமேகலை வெண்பா - அ) தெ.பொ.கிருஷ்ணசாமி

2. குடிமக்கள் காப்பியம் - ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

3. கதரின் வெற்றி - இ) வீரமாமுனிவர்

4. வேதியர் ஒழுக்கம் - ஈ) பாரதிதாசன்



1. 2. 3. 4.

A. ஈ ஆ அ இ

B. இ ஈ ஆ அ

C. அ ஈ ஆ இ

D. ஈ இ ஆ அ



50. திருக்குறளின் பெருமைகைளை போற்றிப் புகழும் நூல் ?

A) திருவள்ளுவமாலை

B) விவேக சிந்தாமணி

C) தமிழ்விடு தூது

D) குண்டலகேசி



51. திருவள்ளுவர் நாளாக எந்த நாளை தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது ?

A) சித்திரை, 2

B) சித்திரை, 1

C) தை, 2

D) தை, 1



52. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) தேசிக விநாயகம் பிள்ளை

D) நாமக்கல் கவிஞர்



53. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் அல்லாது எது ?

A) நாவலர்

B) முதற்பாவலர்

C) தெய்வப் புலவர்

D) பெரு நாவலர்



54. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பாடியவர் யார் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) தேசிக விநாயகம் பிள்ளை

D) நாமக்கல் கவிஞர்



55. இரும்பனை என்ற சொல்லின் பொருளைக் கூறுக

A) பெரிய பனை

B) இரும்பால் செய்த பானை

C) இரும்பால் ஆன அணை

D) இவற்றில் ஏதுமில்லை.



56. "தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்" என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார் ?

A) பரணர்

B) கபிலர்

C) இடைக்காடனார்

D) இறையனார்



57. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்து எழுதுக - எய்துவர்

A) எய்து + வ் + அர்

B) எய் + து + வர்

C) எய் + துவ் + அர்

D) எய் + த் +த் + உ + வ் + அர்



58. வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்

உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து என்று புகழ்ந்தவர் யார் ?

A) பரணர்

B) கபிலர்

C) இடைக்காடனார்

D) இறையனார்



59. உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளும் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார்

A) மாங்குடி மருதனார்

B) தேனிக்குடி கீரனார்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) இறையனார்



60. பாரதிதாசனின் நூல்களில் கல்லாத பெண்களின் இழிவைப் பற்றி கூறும் நூல் எது ?

A) குடும்ப விளக்கு

B) இருண்ட வீடு

C) அழகின் சிரிப்பு

D) முதியோர் காதல்



61. பொய்ப்போல பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத

மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே முப்பாலின்

தெய்வத் திருவள்ளுவர்செய் திருக்குறளால்

வையத்து வாழ்வார் மனத்து - என்று பாடியவர் யார் ?

A) மாங்குடி மருதனார்

B) தேனிக்குடி கீரனார்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) இறையனார்



62. புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்

சித்தம் கலங்கித் திகைப்பதேன் - வித்தகன்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன

பொய்யில் மொழி இருக்கும் போது என்று பாடியவர் யார் ?

A) மாங்குடி மருதனார்

B) தேனிக்குடி கீரனார்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) இறையனார்



63. திருக்குறளை செந்தமிழ்ச் செல்வத் திருக்குறள் என்று புகழ்ந்தவர் யார் ?

A) மாங்குடி மருதனார்

B) தேனிக்குடி கீரனார்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) இறையனார்



64. நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்

ஓதித் தொழுது எழுக ஓர்ந்து என்று பாடியவர் யார் ?

A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

B) இளங்கோவடிகள்

C) ஔவையார்

D) பரணர்



65. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) ஊழியல்

B) அரசியல்

C) அங்கவியல்

D) ஒழிபியல்



66. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள் என்று பாடியவர் யார் ?

A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

B) இடைக்காடனார்

C) ஔவையார்

D) பரணர்



67. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள் என்று பாடியவர் யார் ?

A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

B) இடைக்காடனார்

C) ஔவையார்

D) பரணர்



68. பொருத்துக

1. இரட்டை மனிதன் - அ) சா.கந்தசாமி

2. கமலாம்பாள் சரித்திரம் - ஆ) கு.ப.ராஜகோபாலன்

3. சாயாவனம் - இ) வாணிதாசன்

4. எழிலோவியம் - ஈ) ராஜம் அய்யர்



1. 2. 3. 4.

A. அ இ ஈ ஆ

B. ஆ ஈ அ இ

C. அ ஈ ஆ இ

D. இ ஈ ஆ அ



69. பொருத்துக

1. விரை - அ) அணிகலன்

2. நெகிழ - ஆ) பெருகி

3. ததும்பி - இ) தளர

4. கழல் - ஈ) மணம்

1. 2. 3. 4.

A. அ இ ஈ ஆ

B. ஆ ஈ அ இ

C. ஈ இ ஆ அ

D. இ ஈ ஆ அ



70. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) ஏகதேச உருவக அணி

B) தொழிலுவமை அணி

C) உவமையணி

D) வேற்றுமை அணி



71. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) ஏகதேச உருவக அணி

B) தொழிலுவமை அணி

C) உவமையணி

D) வேற்றுமை அணி



72. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) ஏகதேச உருவக அணி

B) தொழிலுவமை அணி

C) உவமையணி

D) வேற்றுமை அணி



73. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) ஏகதேச உருவக அணி

B) தொழிலுவமை அணி

C) உவமையணி

D) வேற்றுமை அணி



74. தமிழ்மாதின் இனிய உயிர்நிலை என்று அழைக்கப்படும் நூல் எது ?

A) மணிமேகலை

B) திருக்குறள்

C) கண்ணகி புரட்சிக் காப்பியம்

D) திருப்பாவை



75. என்றும் புலரா தியாணர்நாட் சொல்லுகினும்

நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத

செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் என்று திருவள்ளுவரைப் புகழ்ந்தவர் யார் ?

A) மாங்குடி மருதனார்

B) தேனிக்குடி கீரனார்

C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

D) இறையனார்



76. திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார் ?

A) தருமர்

B) பரிமேலழகர்

C) மணக்குடவர்

D) நச்சர்



77. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - நவில்தொறும் நூல்நயம் போலும்

A) புகழ்

B) அறிவுடையாளர் தொடர்பு

C) பண்புடையாளர் தொடர்பு

D) புத்தகம்



78. இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல் எது ?

A) திருக்குறள்

B) விவிலியம்

C) A மற்றும் B

D) எதுவுமில்லை



79. வீரமாமுனிவர் திருக்குறளை எம்மொழியில் மொழிபெயர்த்தார்?

A) இலத்தீன்

B) ஆங்கிலம்

C) உருசியம்

D) கிரேக்கம்



80. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும் - இக்குறளில் உரிமை என்Dம் பொருள் தரும் சொல்லைத் தேர்க ?

A) கிழமை

B) உணர்ச்சி

C) நட்பு

D) பழகுதல்



81. திருக்குறள் --------- நூல்களுல் ஒன்று.

A) எட்டுத் தொகை

B) பத்துப்பாட்டு

C) பதிணென் மேற்கணக்கு

D) பதிணென் கீழ்க்கணக்கு



82. மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட ! - இத்தொடரில் உள்ள "வள்ளை" என்ற சொல்லின் பொருளைக் காண்க.

A) ஒரு வகை நீர்க்கொடி

B) நாரை

C) உலக்கைப்பாட்டு

D) காட்டுக் கோழி



83. இரவெல்லாம் பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்

வள்ளைக் குருநாடர் மன் - இச்செய்யுளில் உள்ள "வள்ளை" என்ற சொல்லின்

பொருளைக் கூறுன ?

A) ஒரு வகை நீர்க்கொடி

B) நாரை

C) உலக்கைப்பாட்டு

D) காட்டுக் கோழி



84. காசினி என்ற சொல்லின் பொருளைக் கூறுக.

A) கடல்

B) நிலம்

C) தாவரம்

D) வானம்



85. மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்

ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே - இச்செய்யுளில் கமுகத் தோட்டம் என்று பொருள் தரும் சொல் எது ?

A) மாதவி

B) உடம்பு

C) பூகவனம்

D) வயல்கள்



86. யாணர் என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?

A) புதுவருவாய்

B) அயல்நாட்டினர்

C) கால்வாய்

D) பரதவர்



87. அனைவரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் தந்தவர் யார் ?

A) பாரதிதாசன்

B) கம்பர்

C) பாரதியார்

D) இளங்கோவடிகள்



88. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாருக்கு நடுவணரசு வழங்கிய விருது எது

A) பத்மபூஷண் விருது

B) பாவேந்தர் விருது

C) கலைமாமணி விருது

D) பத்மவிபூஷன் விருது



89. வதுவை என்ற சொல்லின் பொருள் கூறுக

A) பெண்

B) உடல் மெலிவு

C) திருமணம்

D) நெல்குத்தும் உலக்கை



90. தமிழ்ச்சாதி என்ற தலைப்பில் கவிதை எழுதியவர்

A) க. சச்சிதானந்தன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) முடியரசன்



91. ‘புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில், புத்தக சாலைவேண்டும் நாட்டில் யாண்டும்’ என்றவர் யார் ? A) பாரதிதாசன்

B) பெருஞ்சித்திரனார்

C) தேவநேயப் பாவாணர்

D) பாரதியார்



92. எற்பாடு என்ற சொல்லில் பாடு என்பது எதனைக் குறிக்கும் ?

A) சூரியன்

B) மறையும் நேரம்

C) இசை

D) மாலை



93. பொருத்துக

1. ஆயம் - அ) பெருவிப்பம்

2. வெகுளல் - ஆ) குற்றம் நீங்கிய

3. புரைதீர் - இ) புறங்கூறல்

4. குறளை - ஈ) கடுஞ்சினம்

5. வெஃகல் - உ) தோழியர் கூட்டம்

1. 2. 3. 4. 5.

A. உ ஈ ஆ இ அ

B. உ ஈ அ ஆ இ

C. ஆ இ ஈ அ உ

D. அ இ ஈ ஆ உ



94. பொருத்துக

1. மடநாகு - அ) மேன்மை

2. மழவிடை - ஆ) வளம்

3. மல்லல் - இ) இளம் காளை

4. மீட்சி - ஈ) இளைய பசு

1. 2. 3. 4.

A. ஈ இ ஆ அ

B. இ உ அ ஆ

C. ஆ அ ஈ இ

D. C இ ஈ ஆ



95. பொருத்துக

1. வைதருப்பம் - அ) சித்திரக் கவி

2. கௌடம் - ஆ) ஆசுகவி

3. பாஞ்சாலம் - இ) மதுர கவி

4. மாகதம் - ஈ) வித்தாரக் கவி

1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. ஈ இ ஆ உ

C. ஆ அ ஈ இ

D. ஆ இ அ ஈ



96. மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் என்பவை யாவை ?

A) செய்யுள் நெறிகள்

B) நாற்றிசை

C) நாற்படை

D) நாற்கரணங்கள்



97. ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ என்ற புறப்பாட்டின் தொடரின் மூலம் அறியப்படும் அறம் என்று அழைக்கப்படும் நூல் எது?

A) தேவாரம்

B) திருவாசகம்

C) திருக்குறள்

D) புறநானூறு



98. ஒண்டமிழ்த்தாய் சிலம்பிடியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது ?

A) தமிழியக்கம்

B) தமிழச்சியின் கத்தி

C) இருண்ட வீடு

D) அழகின் சிரிப்பு



99. தானம் தவமிரண்டம் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்- இக்குறளில் உள்ள மோனையைக் காண்க ?

A) கூழை மோனை

B) மேற்கதுவாய் மோனை

C) கீழ்க்கதுவாய் மோனை

D) முற்றுமோனை



100. தமிழரின் கவி, தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றிய கவி, தமிழரின் புகழ் மேதினியோங்க வேண்டுமெனப் பிறந்த கவி என்று புகழப்படுபவர் யார் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கவிமணி

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post