TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 24 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 24
விடையுடன் இலவச பதிவிறக்கம்
11 & 12 ஆம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்வாணையத்தின் பொதுத்தமிழ் தேர்விற்கு பத்தாம் வகுப்பு தரம் என்று குறிப்பிட்டிருந்தாலும், அத்தேர்விற்கு வகுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள் சில 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
எனவே இந்த பதிவில் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளை கருத்தில் கொண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் மற்றும் சிறப்புத் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
மாதிரி வினாத்தாள்- 24 (100 வினாக்கள்)
1. “பகடு நடந்த கூழ்" என்று கூறுவது ----
(A) நாலடியார்
(B) குறுந்தொகை
(C) ஐங்குறுநூறு
(D) கலித்தொகை
2. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க.
கூற்று A: நரிவெரூஉத் தலையாரால் பாடப்பட்டோன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேலிரும் பொறை
கூற்று B: இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும் பதிற்றுப்பத்திலும் உள்ளது.
(A) கூற்று A சரி. ஆனால் கூற்று B தவறு
(B) கூற்று A தவறு. ஆனால் கூற்று B சரி
(C) கூற்று இரண்டுமே தவறு
(D) கூற்று இரண்டுமே சரி
3. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை
(A) 4 அடி முதல் 8 அடி வரை
(B) 9 அடி முதல் 12 அடி வரை
(C) 13 அடி முதல் 31 அடி வரை
(D) 9 அடி முதல் 13 அடி வரை
4. இலக்கண குறிப்புத் தேர்க - உணர்மின், காண்கிலர்
(A) ஏவல் வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று
(B) இரண்டுமே தன்மை ஒருமை வினைமுற்றுகள்
(C) இரண்டுமே ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
(D) வினைத்தொகை, பண்புத்தொகை
5. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாக கொண்டு விளங்கும் நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) குறுந்தொகை
(D) கலித்தொகை
6. கீழ்க்கண்டவற்றில் குமரகுருபரர் இயற்றியது
(A) மதுரைக்கலம்பகம்
(B) மயிலைக் கலம்பகம்
(C) திருவரங்கக்கலம்பகம்
(D) திருக்கலம்பகம்
7. “கிறித்துவர்களின் தேவாரம்" எனப்படுவது
(A) இயேசு காவியம்
(B) இரட்சண்ய மனோகரம்
(C) இரட்சண்ய சமய நிர்ணயம்
(D) சத்திய வேத கீர்த்தனை
8. சார்பெழுத்துக்கள் மூன்று எனக் கூறியவர்
(A) பவணந்தி முனிவர்
(B) தொல்காப்பியர்
(C) நல்லாதனார்
(D) குணவீரபண்டிதர்
9. குடைவரைக் கோயில்களை அமைத்தவர்கள்
1. பல்லவர்கள்
2. பாண்டியர்கள்
3. அதியர்
4. முத்தரையர்
(A) 1, 2, 4 மட்டும்
(B) 1 மற்றும் 4 மட்டும்
(C) 1 மற்றும் 2 மட்டும்
(D) இவை அனைத்தும்
10. “சந்து இலக்கியம்" என அழைக்கப்படுவது
(A) தூது இலக்கிய நூல்கள்
(B) பள்ளு இலக்கிய நூல்கள்
(C) பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்கள்
(D) கலம்பக இலக்கிய நூல்கள்
11. கீழ்க்கண்டவற்றில் பெரியபுராணம் தோன்றக் காரணமாக இருந்த வழி நூல்
(A) திருத்தொண்டர் திருவந்தாதி
(B) திருவாலங்காட்டு திருப்பதிகம்
(C) திருவேங்கடத்தந்தாதி
(D) திருமறைக்காட்டுப் புராணம்
12. காசியில் மடம் அமைத்து சைவ நெறியை வளர்த்தவர்
(A) திருவரங்கத்து அமுதனார்
(B) குமரகுருபரர்
(C) தாயமான சுவாமிகள்
(D) இராமலிங்க வள்ளலார்
13. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல்
(A) சத்தியவேத கீர்த்தனை
(B) திருக்காவலூர்க் கலம்பகம்
(C) அன்னை அழுங்கல் அந்தாதி
(D) அடைக்கல மாலை
14. ‘திருக்குறளுக்கு இணையாக போற்றப்படும் உரை பரிமேலழகர் உரை’ - என்று சிறப்பித்தவர் யார்?
(A) பேராசிரியர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) ஔவை துரைசாமிப் பிள்ளை
(D) உமாபதி சிவாச்சாரியார்
15. பொருத்துக.
சொல் பொருள்
(a) ஆக்கம் 1. மேன்மை
(b) உரம் 2. குற்றம்
(c) ஏதம் 3. வலிமை
(d) விழுப்பம் 4. செல்வம்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 3 1 4 2
(D) 4 3 1 2
16. குறிப்புப் பொருள் உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டவர்கள் என கூறப்படுபவர்கள்
(A) சங்ககாலப் புலவர்கள்
(B) பதினான்கு நாயன்மார்கள்
(C) பதினெட்டு சித்தர்மரபினர்
(D) இரட்டைப் புலவர்கள்
17. “பொய்யா நாவிற் கபிலன்" என கபிலரை புகழ்ந்தவர்
(A) நக்கீரர்
(B) மாற்றோக்கத்து நப்பசலையர்
(C) பொருந்தில் இளங்கீரனார்
(D) பெருங்குன்றூர்க் கிழார்
18. பழங்கால இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும் (The Culture and Civilization of Ancient India) என்ற நூலை எழுதியவர்
(A) டி. டி. கோசாம்பி
(B) மாக்ஸ் முல்லர்
(C) எட்வர்டு ஜான்சன்
(D) ஸ்டீபன் ஸ்மித்
19. அஞ்சரதன், கோவன் என்று முறையே அழைக்கப்படுவர்கள். (வரிசைக்கிடமாக தேர்ந்தெடுக்க)
(A) பிரம்மன், சிவன்
(B) பிரம்மன், திருமால்
(C) திருமால், சிவன்
(D) திருமால், பிரம்மன்
20. சங்க மருவிய காலத்தில் எழுந்த இலக்கியமான முத்தொள்ளாயிரம் என்பது ----
(A) அகமும் புறமும் கலந்த நூல்
(B) அகத்தை மட்டுமே கொண்ட நூல்
(C) புறத்தை மட்டுமே கொண்ட நூல்
(D) இந்நூலை பற்றி வரலாற்றாசிரியர்களால் இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை
21. முச்சங்கங்கள் பற்றிக் விரிவாகக் குறிப்பிடும் இலக்கண நூல்
(A) இறையனார் அகப்பொருள்
(B) நம்பியகப்பொருள்
(C) தண்டியலங்காரம்
(D) தொல்காப்பியம்
22. தனித்தனி குன்றுகளை செதுக்கி கோயிலாக்கும் முறை யாருடைய காலத்தில் இருந்தது
(A) பல்லவர் காலத்தில் மட்டும்
(B) பாண்டியர் மற்றும் பல்லவர் காலத்தில்
(C) பாண்டியர் மற்றும் சோழர் காலத்தில்
(D) சோழர் மற்றும் பல்லவர் காலத்தில்
23. கோயில்களில் அதிட்டானத்தில் காணப்படும் சிறுசிற்பங்கள் யார் காலத்து சிற்பிகளின் வல்லமையை புலப்படுத்துவனதாகும்.
(A) சேரர் கால சிற்பிகளின்
(B) சோழர் கால சிற்பிகளின்
(C) பல்லவ கால சிற்பிகளின்
(D) பாண்டியர் கால சிற்பிகளின்
24. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் மிகப் பழமையானது எது
(A) பிள்ளையார்பட்டி கோயில்
(B) புதுக்கோட்டை சித்தன்வாசல் கோயில்கள்
(C) பனமலை மண்டபக் குகை கோயில்கள்
(D) மகாபலிபுரம் குகைக் கோயில்கள்
25. கோயில்களில் கோபுரம் அமைத்தல் யாருடைய காலத்தில் மிகவும் உன்னத நிலை எய்தியது
(A) பல்லவர்
(B) விஜயநகர மன்னர்கள்
(C) சோழர்கள்
(D) பாண்டியர்கள் காலத்தில்
26. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்க.
வாலை வாழை வாளை
(A) மீன்வகை மரவகை கம்பு
(B) இளம்பெண் மரவகை மீன்வகை
(C) மரவகை மீன்வகை இளம்பெண்
(D) மீன்வகை மரவகை இளம்பெண்
27. “உயர்திற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்று பாடியவர்
(A) மாணிக்கவாசகர்
(B) திருநாவுக்கரசர்
(C) சுந்தரர்
(D) அருண் மொழி வர்மன்
28. பெருங்காப்பிய இலக்கணம் அனைத்தும் கொண்ட நூலாக இருந்தும் சிறுகாப்பியத்துள் இடம்பெற்றுள்ள ஐஞ்சிறுகாப்பிய நூல்
(A) சூளாமணி
(B) நீலகேசி
(C) யசோதர காவியம்
D) உதயணகுமார காவியம்
29. சைவர்களால் மார்கழித் திங்களில் வைகறையில் பக்தியோடும் சுவையோடும் பாடப்படும் பாடல்கள்
(A) திருஞானசம்பந்தரது பாடல்கள்
(B) திருநாவுக்கரசரது பாடல்கள்
(C) சுந்தரரது பாடல்கள்
(D) மாணிக்கவாசகரது பாடல்கள்
30. கர்நாடக இசை மும்மூர்த்திகளில் அடங்கப் பெறாதவர்
(A) தியாகராஜர்
(B) புரந்தரராசர்
(C) முத்துசுவாமி தீட்சிதர்
(D) சியாமாசாஸ்திரிகள்
31. பிறமொழிச் சொற்களை தவிர்த்து தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துக.
(A) உத்தரவு
(B) கம்பீரம்
(C) கிராமம்
(D) உசாவு
32. நடவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
(A) 1996
(B) 1995
(C) 1997
(D) 1998
33. முப்புரம் எரித்தவன் யார்?
(A) முதலாம் பராந்தகன்
(B) திரிபுராந்தகன்
(C) லிங்கோத்பவர்
(D) இரதிமன்மதன்
34. புறநானூற்றின் கண் ---- எடுத்தாளப்பட்டன
(A) 11 புறத்திணைகளும் 65 துறைகளும்
(B) 13 புறத்திணைகளும் 55துறைகளும்
(C) 15 புறத்திணைகளும் 45 துறைகளும்
(D) 12 புறத்திணைகளும் 65 துறைகளும்
35. பொருத்துக.
சொல் பொருள்
(a) அழுவம் 1. போர்க்களம்
(b) அருப்பம் 2. அரண்
(c) துளங்கு 3. அசைவு
(d) துவன் 4. நெருகு
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 3 1 4 2
(D) 4 3 1 2
36. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் மற்றும் திருவிரட்டை மணிமாலைகள் இயற்றியவர்
(A) காரைக்கால் அம்மையார்
(B) திருஞானசம்பந்தர்
(C) நம்பியாண்டர் நம்பி
(D) திருநாவுக்கரசர்
37. தமிழகத்தில் உலவும் பன்னருந்தமிழ் பாவலர்க்குத் தலைமைப் பாவலர் என்று அழைக்கப்படுபவர்
(A) கவிஞர் சுரதா
(B) கவிஞர் பிரமிள்
(C) கவிஞர் வாணிதாசன்
(D) கவிஞர் சு. ரா.
38 . சதுர்த்தம், சதுரங்கம், சுழிகுளம், வினாவுத்தரம் கோமுத்திரி, பங்கி இவையெல்லாம்
(A) சித்திரக்கவியின் பல வகைகள்
(B) வித்தாரக்கவியின் பல வகைகள்
(C) மதுரக்கவியின் பல வகைகள்
(D) ஆசுக்கவியின் பல வகைகள்
39. தந்தச்சிற்பக் கலை யாருடைய காலத்தில் சிறப்புப் பெற்றிருக்கிறது
(A) நாயக்க மன்னர்கள் காலத்தில்
(B) சோழ மன்னர்கள் காலத்தில்
(C) சேர மன்னர்கள் காலத்தில்
(D) பல்லவ மன்னர்கள் காலத்தில்
40. பதிற்றுப்பத்து முழுவதிலும் ---- என்னும் ஒரே புறத்திணையில் அமைந்த பாடல்களே உள்ளன
(A) கைக்கிளை
(B) பொதுவியல் திணை
(C) பெருந்திணை
(D) பாடண்திணை
41. பொருத்துக.
திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் அதன் ஆசிரியர்களை பொருத்துக.
(a) ஆங்கிலம் 1. கிரால்
(b) தெலுங்கு 2. வீரமாமுனிவர்
(c) ஜெர்மன் 3. வைத்யநாதபிள்ளை
(d) லத்தீன் 4. K. M. பாலசுப்பிரமணியன்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 3 1 4 2
(D) 4 3 1 2
42. “புரோட்டோகால்" என்பதன் தமிழ்ச்சொல்
(A) மரபுத்தகவு
(B) மரபுவழிமுறை
(C) மரபுவழி நின்றல்
(D) மரபாக்கம்
43. நீர்வழிப்படூஉம் புணைபோலாருயிர் முறைவழிப்படூஉ மென்பது திறவோர் --- எனும்
புறநானூற்று அடிகள் பண்டைக் காலச் சமுதாயத்தின் எந்நிலையினை உணர்த்துகிறது.
(A) ஊழ் நம்பிக்கை
(B) மன்னர் பால் பெருமதிப்பு
(C) பெரியோர்க்கு அடங்கி நடத்தல்
(D) இனியனவே செய்தல்
44. “பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக" இவ்வரிகளோடு தொடர்புடையவர்கள்
(A) திருஞானசம்பந்தரும் சிவபெருமானும்
(B) மாணிக்கவாசகரும் சிவபெருமானும்
(C) அருணந்தியாரும் சிவபெருமானும்
(D) மெய்கண்டாரும் சிவபெருமானும்
45. வில்லிபாரதம் எத்தனை பருவங்கள் கொண்டது
(A) பத்து பருவங்கள்
(B) பத்து காதைகள்
(C) பன்னிரெண்டு படலங்கள்
(D) பன்னிரெண்ட சருக்கங்கள்
46. மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையில் அலுவலராய் பணியாற்றிவர்
(A) அழகிய மணவாளதாசர்
(B) மாணிக்கவாசகர்
(C) அறிவுடை நம்பி
(D) நம்பியாண்டார் நம்பி
47. கூற்று A: சிற்ப இயல் வல்லுநர்கள் பல்லவர் காலத்து சிற்பிகளை பாராட்டிப் பேசுவர்
காரணம் R: பல்லவர் காலத்து சிற்பிகள் கோயிலையே ஒரு சிற்பமாக வடிவெடுத்தால்
(A) A சரி, ஆனால் R தவறு
(B) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது Aவிற்கு சரியான விளக்கம்
(C) A தவறு, ஆனால் R சரி
(D) A மற்றும் R இரண்டும் தவறு
48. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளை தேர்க.
அலை அழை அளை
(A) கடலலை தயிர் பிசை
(B) நுரை ஆம்பல் தயிர்
(C) புற்று மிசை பிசை
(D) கடலலை கூப்பிடு தயிர்
49. கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய பாடல் திணை மற்றும் எண்ணிக்கை
(A) முல்லைக்கலி / முப்பத்துமூன்று பாடல்
(B) மருதகலி / முப்பத்துமூன்று பாடல்
(C) நெய்தல் கலி / முப்பத்துமூன்று பாடல்
(D) பாலைக்கலி / முப்பத்துமூன்று பாடல்
50. “கடுககைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று கூறியவர்
(A) இடைக்காடனார்
(B) கபிலர்
(C) ஔவையார்
(D) எயிற்றியார்
51. குமரகுருபரர் தொடர்பான சரியான கூற்று எது?
(A) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையில் சிறந்த நூலை இயற்றினார்
(B) குமரகுருபரின் தனிச்சிறப்பு இன்னோசை
(C) சொக்கநாதப் பெருமானை பாட்டுடைத்தலைவராக பாடப்பட்ட நூல் மதுரை கலம்பகம்
(D) அனைத்தும்
52. கம்பனின் கோட்டம் …. ஊரில் உள்ளது
(A) காரைக்குடி
(B) நாட்டரசன் கோட்டை
(C) திருவழுந்தூர்
(D) ஸ்ரீரங்கம்
53. கம்பராமாயணத்தின் சிறப்பு கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இதனை தமிழுக்கு கதி என்றவர்.
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) செல்வக்கேசவராய முதலியார்
(D) அருணாச்சல கவிராயர்
54. பொருந்தாத இணைக் காண்க.
(A) சேரர் வரலாற்றுப்பெட்டகம் - பதிற்றுப்பத்து
(B) திருத்தொண்டர் மாக்கதை - பெரியபுராணம்
(C) திராவிட வேதம் - திராவிடம்
(D) தாயுமானவர் பாடல் – திராவிட உபநிடதம்
55. “பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயுமானந் திரியும் "- இப்பாடல் இடம்பெற்ற நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) பட்டினப்பாலை
(D) குறுந்தொகை
56. களபம், மாதங்கம், வேழம், பகடு ஆகியவை யானையைக் குறிப்பிடும் சொல். மேலும் அவை ----- இவற்றாலும் முறையே குறிப்பிடப்படும்.
(A) சந்தனம், பொன், கரும்பு, எருது
(B) எருது, சந்தனம், பொன், கரும்பு
(C) பொன், கரும்பு, எருது, சந்தனம்
(D) சந்தனம், கரும்பு, எருது, பொன்
57. திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணியை எழுத கீழ்க்கண்ட எந்த நூலை சான்றாக கொள்ளவில்லை
(A) க்ஷத்திர சிந்தாமணி
(B) கத்திய சிந்தாமணி
(C) க்ஷத்திர சூடாமணி
(D) ஸ்ரீபுராணம்
58. உடைவாள் ஏந்தியவன்.
(A) அங்கதன்
(B) பரதன்
(C) சத்ருகன்
(D) ராமன்
59. ராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் யார்?
(A) அனுமன்
(B) பரதன்
(C) அங்கதன்
(D) சுக்ரீவன்
60. சிலப்பதிகாரத்திற்கு விளக்கவுரை எழுதியவர் யார்?
(A) அடியார்க்கு நல்லார்
(B) புலவர் குழந்தை
(C) அரும்பத உரைகாரர்
(D) ஏதுமில்லை
61 . சிலப்பதிகாரத்தை ‘சிறப்பதிகாரம்’ எனக் கூறியவர் யார்?
(A) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
(B) உ.வே. சா
(C) புலவர் குழந்தை
(D) பாரதியார்
62. சரியான காலவரிசை
(A) திருமூலர்- திருநாவுக்கரசர்- திருஞானச்சம்பந்தர் - சேக்கிழார்
(B) திருமூலர்- திருஞானச்சம்பந்தர்- திருநாவுக்கரசர்- சேக்கிழார்
(C) திருஞானச்சம்பந்தர் - திருநாவுக்கரசர்- திருமூலர்- சேக்கிழார்
(D) திருநாவுக்கரசர் - திருஞானசம்பந்தர்- திருமூலர் - சேக்கிழார்
63. இந்திர விழா…… நாள்கள் நடைபெறும்
(A) 30
(B) 28
(C) 48
(D) 10
64. “எள்ளுறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" - இது யாரை குறிப்பிடுகிறது?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) கோவலன்
(D) சிபிமன்னன்
65. சரியான பொருள் தருக. ‘வேலை’
(A) மலை
(B) கடல்
(C) ஒருவகை நோய்
(D) அலை
66. சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
(A) பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, தெரிவை, அரிவை, பேரிளம்பெண்
(B) பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
(C) பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
(D) பேதை, பெதும்பை, மடந்தை, மங்கை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
67. பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) கயன்முள் 1. 2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
(b) சிறைப்பறவை 2. 6ம் வேற்றுமைத்தொகை
(c) பொலம்புனை 3. வினைத்தொகை
(d) உயர் எண்ணம் 4. 3ம் வேற்றுமைத்தொகை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 3 1 4
(C) 2 1 4 3
(D) 3 1 4 2
68. பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) கிழிசல் 1. நாஞ்சில்நாடன்
(b) சட்டை 2. வண்ணதாசன்
(c) பழிக்குப்பழி 3. சேனாதிபதி
(d) ஓர் உல்லாசப்பயணம் 4. ஜெயகாந்தன்
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 2 3 1 4
(C) 2 1 4 3
(D) 3 1 4 2
69. “இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை பயம்பெறு மேகம் பூவை பாங்கி - நயந்தகுயில் பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை" – என்ற பாட்டில் எகினம், பூவை, பாங்கி, பிரமரம் என்பவை
(A) தோழி, அன்னம், வண்டு, மைனா
(B) அன்னம், தோழி, வண்டு, மைனா
(C) தோழி, அன்னம், மைனா, வண்டு
(D) அன்னம், மைனா, தோழி, வண்டு
70. செவியாற் சுவைத்து உண்ணப்படும் ஒன்பது பொருட் சுவையுள் “ சமனிலை" என்பது
(A) வெகுளி
(B) உவகை
(C) இளிவரல்
(D) சாந்தம்
71. படூஉம் என்பது
(A) இன்னிசை அளபெடை
(B) சொல்லிசை அளபெடை
(C) இசைநிறையளபெடை
(D) உயிரளபெடை
72. வரதநஞ்சையப்பிள்ளை பற்றிய செய்திகளில் தவறானது எது?
(A) கரந்தை தமிழ்ச்சங்கம் - ஆசிரியர் பட்டம்
(B) தங்கதோடா பரிசு – குன்றக்குடி அடிகளார் தலைமை
(C) தமிழ்வேள் – உமாமகேஸ்வரனார்
(D) கரந்தை தமிழ்ச்சங்கம் வெள்ளிவிழா - ஞானியாரடிகள் அரங்கேற்றம்
73. மாச்சிறைப் பறவை – பொருள்
(A) பெரிய சிறையில் அடைக்கப்பட்ட பறவை
(B) வெண்மையான சிறகுகளையுடைய அன்னப்பறவை
(C) பசுமையான சிறகுகளையுடைய கிள்ளை
(D) கரிய சிறகுகளையுடைய வௌவால்
74. பொருத்துக
மரங்கள் நிலம்
(A) அகில், சந்தனம்,வேங்கை 1. குறிஞ்சி
(B) வஞ்சி, காஞ்சி 2. நெய்தல்
(C) புன்னை, தாழை 3. மருதம்
(D) கொன்றை, குருத்து, காயா 4. முல்லை
(E) இருப்பை, ஓமை, உழிஞை 5. பாலை
(a) (b) (c) (d) (E)
(A) 1 2 3 4 5
(B) 5 4 3 2 1
(C) 3 1 4 5 2
(D) 1 3 2 4 5
75. “அன்னாய் வாழிப்பத்து, அம்ம வாழிப்பத்து" போன்ற சொல்லாட்சியாலும், பொருளமைதியாலும் பெயர் பெற்றவை
(A) நெடுநல்வாடை
(B) பதிற்றுப்பத்து
(C) முல்லைப்பாட்டு
(D) ஐங்குறுநூறு
76. “திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து" என்று கூறியவர்
(A) இராமானுஜர்
(B) நம்மாழ்வார்
(C) பிள்ளை பெருமாள் ஐயங்கார்
(D) மணவாளமாமுனி
77. ஐங்குறுநூற்றை தொகுத்தவர்
(A) கோச்சேரமான் யானைக்கண் சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை
(B) புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
(C) பன்னாட்டு தந்த பாண்டிய மாறன் வழுதி
(D) பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
78. தமிழ்நாட்டில் கருங்கோயில்களை முதலில் அமைத்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்
(A) பல்லவ வழி வந்த மன்னர்கள்
(B) சோழ வழி வந்த மன்னர்கள்
(C) பாண்டிய வழி வந்த மன்னர்கள்
(D) சேர வழி வந்த மன்னர்கள்
79. பொருத்துக:
a முதுமரம் - 1. இனமிகல்
b.பெருங்களிறு - 2. முன்னின்ற மெடீநுதிரிதல்
c, வெஞ்சினம் - 3. ஈறுபோதல்
d. பச்சூன் - 4. தன்னொற்றிரட்டல்
a b c d
அ 1 4 3 2
ஆ 3 1 2 4
இ 2 1 3 4
ஈ 4 3 1 2
80. புறநானூற்றில் 83,84,85ம் பாடல்களின் ஆசிரியர்
(A) நக்கீரர்
(B) ஔவையார்
(C) ஒக்கூர் மாசாத்தியார்
(D) பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
81. பொருத்துக
(A) வாய்மொழிக்கபிலன் 1. இளங்கீரனார்
(B) வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் 2. நப்பசலையார்
(C) நல்லிசைக் கபிலன் 3. நக்கீரர்
(D) பொய்யாநாவிற்கபிலன் 4. பெருங்குன்றூர்க்கிழார்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 2 1 4 3
82. திருக்குறளை ரஷ்ய மொழியில் மொழிப்பெயர்த்தவர் யார்?
(A) ஜெயின்
(B) டாக்டர் கிரௌல்
(C) ஏரியாள்
(D) யூரிகில்சேவ்
83. போரில் வென்ற மன்னன் போர்க்களத்தில் ஆடும் கூத்து எது ?
(A) குரவைக் கூத்து
(B) வெறி
(C) துணங்கை
(D) சாதாரி
84. இலக்கணக்குறிப்பு தருக. – ‘வேற்காளை’
(A) வினைத்தொகை
(B) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
(C) பண்புத்தொகை
(D) அன்மொழித்தொகை
85. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது
(A) நொச்சி
(B) தும்பை
(C) காஞ்சி
(D) உழிஞை
86. “அருள் பழுத்த, பழச்சுவையே" - எனும் பாடலில் உள்ள பாவகை
(A) எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(B) கலிப்பா
(C) வஞ்சிப்பா
(D) ஆசிரியப்பா
87. நீ. கந்தசாமிப் புலவர் யார் எழுதிய கவிதையை மொழிப்பெயர்த்து ‘இரங்கற்பா’ என்னும் தலைப்பில் நமக்கு தந்தார்.
(A) ஜி.யு. போப்
(B) காஸ்திரி கிளியோன்
(C) தாமஸ்கிரே
(D) டாக்டர் கிரௌல்
88. “பேராண்மை பெயன்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு"- இக்குறட்பாவில் வள்ளுவர் மேற்கோள் காட்டுவது
(A) பகைவர்மேற் செய்யும் வன்கண்மை
(B) நண்பருக்கு செய்யும் பேரூதவி
(C) அந்தணர்களுக்கு அளிக்கும் உதவி
(D) ஊருணி ஊருக்குச் செய்யும் நன்மை
89. பண்டைய கால மகளிர்கள் கடற்கரையில் நண்டுகளைப் பிடித்தாடும் விளையாட்டு
(A) அலவன் அட்டு
(B) குரவை கூத்தாடல்
(C) நண்டு நவிழ்தல்
(D) நெய்தற் கலிகட்டு
90. கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்
(A) சுந்தரர்
(B) ஆளுடையபிள்ளை
(C) ஆளுடையரசு
(D) மாணிக்கவாசகர்
91. பொருத்துக:
a செறு - 1. பனையோலைப் பெட்டி
b.அரி - 2. புது வருவாய்
c, யாணர் - 3. நெற்கதிர்
d. வட்டி - 4. வயல்
a b c d
அ 4 3 2 1
ஆ 3 4 1 2
இ 2 3 1 4
ஈ 1 2 4 3
92. தோரமங்கலத்தில் பிறந்தவர்
(A) வரதநஞ்சையப்பிள்ளை
(B) நீ. கந்தசாமி புலவர்
(C) சுரதா
(D) உடுமலை நாராயணகவி
93. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாகக் கருதப்படுவது
(A) காசிக்கலம்பகம்
(B) முக்கூடற் பள்ளு
(C) சகலகலாவல்லி மாலை
(D) நீதிநெறி விளக்கம்
94. பொருந்தா இணையைக் கண்டறிக.
திணை பறை
(A) குறிஞ்சி - தொண்டகப்பறை
(B) முல்லை - ஏறுகோட் பறை
(C) மருதம் - வெறியாட்டுப்பறை
(D) பாலை - போர்ப்பறை
95. விவேகபானு எனும் இதழில் பாரதியின் …… முதல் பாடல் அச்சாகியது
(A) தனிமை இரக்கம்
(B) கண்ணன் பாட்டு
(C) குயில் பாட்டு
(D) பாப்பாபாட்டு
96. எது/எவை சரியானது?
1. உத்திரவேதம்- திருக்குறள்
2. 5ம் வேதம் - திருக்குறள்
3. தமிழ்மறை – புறநானூறு
(A) 1
(B) 2
(C) 1 & 3
(D) 2 & 3
97. பாரதியார் …….. தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
(A) ஆங்கில நாடகம்
(B) பிரெஞ்சுகட்டுரைகள்
(C) பைபிள்
(D) பகவத்கீதை
98. ‘மலைக்கள்ளன்’ எனும் நூலை எழுதியவர் யார்?
(A) சுரதா
(B) நாமக்கல்லார்
(C) துரைமாணிக்கம்
(D) சாலை இளந்திரையன்
99. பொருந்தாதது எது?
(A) மயரி-மயக்கம்
(B) கழறும்-பேசும்
(C) மன்னுயிர்-நிலைபெற்ற உயிர்
(D) புனைதல்-இகழ்தல்
100. கொங்குநாடு என்னும் இலக்கண நூலை எழுதியவர்
(A) இராமலிங்க அடிகள்
(B) சுரதா
(C) புலவர் குழந்தை
(D) பாரதியார்