TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 25 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 25
விடையுடன் இலவச பதிவிறக்கம்
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-1
Full Syllabus - Full Test -1
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இன்று 25வது மாதிரி வினாத்தாளாக முதல் முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
மாதிரி வினாத்தாள்- 25 (100 வினாக்கள்)
1. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைபடுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் யார்?
A) ஸ்டென்கனோ
B) ஹோக்கன்.
C) கமில்சுவலபில்
D) பிரான்சிஸ் எல்லிஸ்.
2. தென்னிந்திய மொழிகளை தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்று கருதியவர் யார் ?
A) ஸ்டென்கனோ
B) ஹோக்கன்.
C) கமில்சுவலபில்
D) பிரான்சிஸ் எல்லிஸ்.
3. கீழ்க்காண்பவற்றுள் அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழி அல்லாதது எது ?
A) எருகலா
B) பெங்கோ
C) குறும்பா
D) சோழிகா
4. திணை, பால், எண் ஆகியவற்றை காட்டும் பாலறி கிளவிகள் இல்லாத மொழி எது ?
A) மலையாள மொழி
B) ஜெர்மன் மொழி
C) சமஸ்கிருத மொழி
D) தமிழ் மொழி
5. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும், இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளன என குறிப்பிட்டவர் யார் ?
A) ஸ்டென்கனோ
B) கே.வி.சுப்பையா
C) கால்டுவெல்
D) ஆந்திரனோவ்
6. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே ! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே ! என்று பாடியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) தேவநேயப் பாவாணர்
C) ஈரோடு தமிழன்பன்
D) பாரதியார்
7. ஈரோடு தமிழன்பன் இயற்றிய வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது ?
A) 2002
B) 2003
C) 2004
D) 2005
8. ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று தாம் இயற்றிய ஒரு கவிதை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டவர் யார் ?
A) கண்ணதாசன்
B) வாணிதாசன்
C) ரா.பி. சேதுப்பிள்ளை
D) ஈரோடு தமிழன்பன்
9. இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் என்று கூறும் நூல் எது ?
A) பிங்கல நிகண்டு
B) தொல்காப்பியம்
C) சிலப்பதிகாரம்
D) பன்னிருபடலம்
10. உலகத் தாய்மொழி நாள் ?
A) ஜனவரி 28
B) மார்ச் 16
C) ஏப்ரல் 21
D) பிப்ரவரி 21
11. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என அழைக்கப்படுவது எது ?
A) பள்ளு
B) குறவஞ்சி
C) உலா
D) தூது
12. தூது இலக்கியம் எந்தப் பாவால் பாடப்பெறும் ?
A) விருத்தப்பா
B) கலிவெண்பா
C) ஆசிரியப்பா
D) வஞ்சிப்பா
13. தமிழ்விடு தூது தொடர்பான தவறான கூற்று எது?
A) இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணகனார்.
B) மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளது.
C) இந்நூலை 1930-ல் உ.வே.சாமிநாதர் முதன்முதலில் பதிப்பித்தார்.
D) இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
14. முக்குணம் என்று சுட்டப்படுவனவற்றுள் பொருந்தாதது எது ?
A) ஒழுகிசை
B) சத்துவம்
C) இராசசம்
D) தாமசம்
15. பொருத்துக
A. நாவின் சுவை - 1) ஒன்பது
B. செவியின் சுவை - 2) ஆறு
C. தமிழின் வனப்புகள் - 3) நூறு
D. தமிழின் வண்ணங்கள் - 4) எட்டு
a. b. c. d.
A. 2 3 4 1
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 1 4
16. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் யார் ?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) திரு.வி.க
D) டாக்டர் மு.வ
17. ஈரோடு தமிழன்பன் படைத்தது எது ?
A) ஹைக்கூ
B) சென்ரியு
C) லிமரைக்கூ
D) இவை அனைத்தும்
18. சரியற்ற இலக்கணக் குறிப்பையுடைய இணையைக் காண்க ?
A) முத்திக்கனி - உருவகம்
B) தெள்ளமுது - பண்புத் தொகை
C) செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத் தொகை
D) குற்றமிலா - வினையெச்சம்
19. காதொளிரும் குண்டலும் கைக்கு வளையாபதியும் கரணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க என்று பாடியவர் யார்?
A) அந்தகக்கவி வீரராகவ முதலியார்
B) புரட்சிக்கவி பாரதிதாசன்
C) மகாகவி பாரதியார்
D) கவியோகி சத்தானந்த பாரதியார்
20. தமிழ் வடமொழியின் மகளன்று. அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி. தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறியவர் யார் ?
A) கமில் சுவலபில்
B) ஈராஸ் பாதிரியார்
C) வீரமாமுனிவர்
D) கால்டுவெல்.
21. சைபர்ஸ்பேஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க?
A) வட்டநிலம்
B) இணையவெளி
C) சுழியநிலம்
D) இணையதளகுற்றங்கள்
22. வேற்றுமைத் தொடரைக் காண்க.
A) மன்னன் வந்தான்
B) வந்தான் மன்னன்
C) நண்பா கேள்
D) அண்ணனோடு வருவான்
23. பெயர்ப் பயனிலைத் தொடரைக் காண்க.
A) பூக்களைப் பறிக்காதீர்
B) அவன் மாணவன்
C) எவ்வளவு உயரமான மரம்
D) என் அண்ணன் நாளை வருவான்
24. பாவின் சுவைகளில் துன்பச் சுவையினை சுட்டுவது எது ?
A) மருட்கை
B) நகை
C) இளிவரல்
D) இவற்றில் எதுவுமில்லை
25. பாடல் என்னும் பொருளைத் தரும் பா என்னும் ஓரெழுத்து ஒருமொழி கிரேக்கமொழி காப்பியமாகிய இலியாத்தில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது ?
A) பாய்யியோனா
B) சாப்போ
C) இளிகியா
D) எறிதிரேசியன்
26. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
A) சேப்பிக் ஸ்டேன்சா
B) பெற்றோரிடம் அன்பு
C) நீரியோஸ்
D) சாப்போ
27. பொருத்துக
A. முந்திரி - 1) 1/80
B. அரைக்காணி - 2) 1/320
C. அரைக்காணி முந்திரி - 3) 1/160
D. காணி - 4) 3/320
A. 1 3 4 2
B. 3 1 2 4
C. 2 3 4 1
D. 3 1 4 2
28. எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என்னும் நூலின் பெயரில் உள்ள தமிழ்ச்சொல் எது ?
A) எறிதிரை
B) புலன்
C) ஏசியன்
D) பெரிபுலஸ்
29. வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A) தன்வினை
B) பிறவினை
C) காரணவினை
D) துணை வினை
30. விறகுநான்; வண்டமிழே உன்னருள் வாய்த்த பிறகுநான் வீணையாய்ப் போனேன் என்று பாடியவர் யார் ?
A) மீ.ராஜேந்திரன்
B) கண்ணதாசன்
C) இலட்சுமி
D) கவிஞர் வாலி
31. செயப்பாட்டு வினைத் தொடரைக் காண்க ?
A) கோவலன் கொலையுண்டான்
B) ஓவியம் குமரனால் வரையப்பட்டது
C) வீடு கட்டியாயிற்று
D) இவை அனைத்தும்
32. குழுவில் விடுபட்ட வரிசையை தேர்ந்தெடுக்க
குழு-1 குழு-2 குழு-3 குழு-4
நாவாய் மரம் துறை தன்வினை
- - - -
தோணி மர விருத்தம் காரணவினை
A) 1-வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
B) 1- மானு, 2- வங்கம், 3- தாழிசை, 4- பிறவினை
C) 1- பிறவினை, 2-வங்கம், 3- தாழிசை, 4-மானு
D) 1- தாழிசை, 2- பிறவினை, 3-வங்கம், 4-மானு
33. புறநானூற்றில் இடம்பெறாத வரிகள் எது?
A) நீரின்று அமையாது உலகம்
B) உற்றுழி உதவியும் உறுபொருள் பொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
C) யாதும் ஊரே யாவரும் கேளிர்
D) உண்பது நாழி உடுப்பவை இரண்டே
34. தமிழில் ஏறத்தாழ ------- துணை வினைகள் உள்ளன.
A) 96
B) 99
C) 64
D) 40
35. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Conical Stone
A) குமிழிக் கல்
B) ஜாதகக் கல்
C) நவரத்தினம்
D) சிறுநீரகக் கல்
36. போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும் ஓர் கனவோ - இந்த
ஞாலமும் பொய்தானோ- என்று பாடியவர் யார் ?
A) கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
B) பாரதிதாசன்
C) கவிஞர் கண்ணதாசன்
D) பாரதியார்
37. முத்துராமலிங்கர் தொடர்பான தவறான கூற்று எது ?
A. நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
B. சமபந்தி முறைக்கு ஊக்கமளித்தார்.
C. ஆங்கில அரசின் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராடினார்.
D. பாலகங்காதர திலகர் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்
38. உலக சுற்றுச்சூழல் தினம்
A) ஜனவரி 30
B) மார்ச் 28
C) ஜூலை 5
D) ஜூன் 5
39. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடியவர் யார் ?
A) கம்பர்
B) சீத்தலைச் சாத்தனார்
C) இளங்கோவடிகள்
D) வில்லிபுத்தூரார்
40. மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு என்ன பெயர்
A) ஊருணி
B) ஆழிக்கிணறு
C) கேணி
D) உறைக்கிணறு
41. இந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
A. காலிங்கராயன்
B. கரிகால சோழன்
C. கர்னல் பென்னிகுயிக்
D. சர் ஆர்தர் காட்டன்
42. குமிழித் தூம்பு எதனுடன் தொடர்புடையது ?
A) ஆறு
B) கடல்
C) ஏரி
D) வாய்க்கால்
43. கர்மவீரர் காமராசர் அவர்கள் கல்விக்காக கொண்டுவந்த திட்டங்களில் பொருந்தாதது எது ?
A) இலவச கட்டாயக் கல்விச் சட்டம்
B) குலக்கல்வித் திட்டம்
C) மதிய உணவுத் திட்டம்
D) சீருடைத் திட்டம்
44. பொருந்தாத இணையைக் கண்டறிக
A. இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
B. குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
C. கூவல் - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
D. பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
45. மே தினமே வருக என்ற நூலை எழுதியவர் யார் ?
A) கவிஞர் தமிழ் ஒளி
B) பூவரசு
C) வெ.இறையன்பு
D) மலர்மன்னன்
46. கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராசர் மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்ட நாள் ?
A) 02.10.2012
B) 15.08.2000
C) 15.08.2012
D) 02.10.2000
47. விடுதலைப்போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வடஇந்தியாவில் திலகருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது போல் தென்னிந்தியாவில் யாருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது ?
A) முத்துராமலிங்கர்
B) தந்தை பெரியார்
C) வ.உ.சிதம்பரனார்
D) அயோத்திதாச பண்டிதர்
48. காட்டாறு என்ற சொல் எவ்வாறு பிரியும் ?
A) காடு + ஆறு
B) காட்டு + ஆறு
C) காட்டா + ஆறு
D) கட்டு + ஆறு
49. பொருத்துக
A. தரளம் - 1) பொய்கை
B. பணிலம் - 2) முத்து
C. வாவி - 3) தேன்
D. வேரி - 4) சங்கு
a. b. c. d.
A. 2 4 1 3
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 1 4
50. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டியவர் யார் ?
A) கர்னல் பென்னிகுயிக்
B) ஜேம்ஸ் கேமரூன்
C) அயன் வில்மன்
D) சர் ஆர்தர் காட்டன்
51. பொருத்துக
A. பகடு - 1) வட்டம்
B. பாண்டில் - 2) எருமைக்கடா
C. கோளி - 3) ஆற்றுப்பூவரசு
D. காஞ்சி - 4) அரசமரம்
a. b. c. d.
A. 2 4 1 3
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 1 4
52. ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காந்தியடிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்திய இடம் ?
A) காமராசரின் வீடு
B) தீரர் சத்தியமூர்த்தியின் வீடு
C) இராஜாஜியின் வீடு
D) சர்தார் வல்லபாய்பட்டேல் வீடு
53. காந்தியடிகள் பாரதியாரை எவ்வாறு பாராட்டினார் ?
A) தமிழ்நாட்டின் சொத்து
B) மகாகவி
C) இந்தியாவின் சொத்து
D) தேசிய கவி
54. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்று கூறியவர் யார் ?
A) காமராசர்
B) அண்ணல் அம்பேத்கர்
C) தந்தை பெரியார்
D) ஆபிரகாம் லிங்கன்
55. காந்தியை கவர்ந்த நூல் எது?
A) திருக்குறள்
B) ஜி.யு போப் எழுதிய தமிழ்க்கையேடு
C) சிலப்பதிகாரம்
D) A மற்றும் B
56. இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று காந்தி யாரைப் புகழ்ந்து குறிப்பிட்டார் ?
A) உ.வே.சா
B) திரு.வி.க
C) பாரதியார்
D) முத்துராமலிங்கர்
57. முத்துராமலிங்கரை தேசியம் காத்த செம்மல் என்று அழைத்தவர் யார் ?
A) வ.உ.சிதம்பரனார்
B) திரு.வி.க
C) தந்தை பெரியார்
D) அறிஞர் அண்ணா
58. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் எது ?
A) சென்னை
B) மதுரை
C) டெல்லி
D) மும்பை
59. அண்ணல் அம்பேத்கர் கல்வி பயின்ற ஊர் ?
A) அம்பவாடே
B) பரோடா
C) தபோலி
D) மும்பை
60. மக்கள் கல்வி கழகத்தை தோற்றுவித்தவர் யார் ?
A) தந்தை பெரியார்
B) காமராசர்
C) அறிஞர் அண்ணா
D) அண்ணல் அம்பேத்கர்
61. அம்பேத்கர் உலக தலைவர்களுள் நடுவர், பகுத்தறிவுச் செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி என்று புகழ்ந்தவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) ஜவஹர்லால் நேரு
C) இராஜாஜி
D) தந்தை பெரியார்
62. சமூகத்தின் மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையம் வாழ்கிறது என்று கூறியவர் ?
A) தந்தை பெரியார்
B) காமராசர்
C) அறிஞர் அண்ணா
D) அண்ணல் அம்பேத்கர்
63. வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என எடுத்துரைத்தவர் ?
A) திரு.வி.க
B) சுவாமி விவேகானந்தர்
C) தந்தை பெரியார்
D) முத்துராமலிங்கர்
64. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை அம்பேத்கரை சாரும் என்று புகழ்ந்தவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) ஜவஹர்லால் நேரு
C) இராஜாஜி
D) தந்தை பெரியார்
65. சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து என்று புகழப்படுபவர் யார் ?
A) அண்ணல் அம்பேத்கர்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) திரு.வி.க
66. அம்பேத்கரின் முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
A) ஹைதராபாத்
B) மும்பை
C) கொல்கத்தா
D) புதுடெல்லி
67. விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக வாழ்ந்தவர் என புகழப்படுபவர் யார் ?
A) காமராசர்
B) மகாத்மா காந்தி
C) தந்தை பெரியார்
D) முத்துராமலிங்கர்
68. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை. தமிழரை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை. தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை என்று கூறியவர் யார் ?
A) காமராசர்
B) மகாத்மா காந்தி
C) தந்தை பெரியார்
D) அறிஞர் அண்ணா
69. இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற பொருளாதார நூலை இயற்றியவர் யார் ?
A) தந்தை பெரியார்
B) காமராசர்
C) அறிஞர் அண்ணா
D) அண்ணல் அம்பேத்கர்
70. கேரளாவில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு ?
A) 1930
B) 1920
C) 1924
D) இவற்றில் எதுவுமில்லை.
71. அண்ணல் அம்பேத்கர் யாருடைய பொருளுதவியுடன் பம்பாய் எம்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ?
A) கிழக்கிந்திய கம்பெனி
B) முகமது அலி ஜின்னா
C) பரோடா மன்னர்
D) மகாத்மா காந்தி
72. காமராசர் காலத்தில் எந்த இயக்கம் தமிழகத்தில் வேரூன்றியது ?
A) கூட்டுறவு இயக்கம்
B) போலியோ ஒழிப்பு இயக்கம்
C) இரத்தான இயக்கம்
D) சிறுசேமிப்பு இயக்கம்
73. காமராசர் கொண்டுவந்த திட்டம் எது ?
1. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை
2. கூடங்குளம் அணுமின் நிலையம்
3. உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை
4. கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
5. பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை
6. டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை
7. மேட்டூர்க் காகிதத் தொழிற்சாலை
A) 1, 3, 4, 5, மற்றும் 7
B) 1, 2, 3, 4 மற்றும் 7
C) 3, 4, 5, 6 மற்றும் 7
D) இவை அனைத்தும்
74. கூற்று( A) : காமராசர் அவர்களால் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
காரணம் (R) : பள்ளிகளுக்கான அடிப்படைப்பொருள்களும் கருவிகளும் நன்கொடையாக பெறும் பொருட்டு பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டது.
A) (A) &(R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.
B) (A) சரி ஆனால் (R) தவறு
C) (R) சரி ஆனால் (A) தவறு
D) (A) & (R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.
75. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் யார் ?
A) இராமலிங்க அடிகள்
B) முத்துராமலிங்கர்
C) தந்தை பெரியார்
D) காமராசர்
76. பொருத்துக
1. அழகின் சிரிப்பு - அ) பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் - ஆ) கோமல் சுவாமிநாதன்
3. தண்ணீர் தேசம் - இ) வைரமுத்து
4. வாய்க்கால் மீன்கள் - ஈ) வெ.இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும் - உ) மா.கிருஷ்ணன்
1. 2. 3. 4. 5.
A. ஈ இ ஆ அ உ
B. ஆ அ இ ஈ உ
C. ஆ ஈ அ இ உ
D. அ இ ஈ ஆ உ
77. காமராசர் அவர்கள் தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு எத்தனை விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார் ?
A) அறுபது
B) ஐம்பது
C) நாற்பது
D) முப்பது
78. 1947இல் முதலமைச்சராக இருந்தவர் யார் ?
A) குமாரசாமி
B) பிரகாசம்
C) காமராசர்
D) ஓமந்தூர் இராமசாமி
79. எந்த முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார் ?
A) இராஜாஜி
B) பிரகாசம்
C) குமாரசாமி
D) ஓமந்தூர் இராமசாமி
80. காமராசர் அவர்கள் பெரிய தொழிற்பேட்டை அமைத்த இடம் எது ?
A) கிண்டி
B) அம்பத்தூர்
C) இராணிப்பேட்டை
D) இவை அனைத்தும்
81. நடுவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்த ஆண்டு ?
A) 1965
B) 1972
C) 1995
D) 1969
82. எந்த இடத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார். ?
A) கொல்கத்தா
B) மும்பை
C) சென்னை
D) புவனேஸ்வர்
83. "காமராசர் திட்டம்" செயல்படுத்த வேண்டியதன் தேவை காமராசருக்கு எந்த ஆண்டிற்கு
பின் எழுந்தது ?
A) 1964
B) 1962
C) 1972
D) 1977
84. 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவு எந்த இடத்தில் நிகழ்ந்தது
A) மும்பை
B) தாஸ்கண்ட்
C) கொல்கத்தா
D) புதுடெல்லி
85. அறிஞர் அண்ணாவுக்கு பிடித்தமான இலக்கியம் ?
A) சிலப்பதிகாரம்
B) கம்பராமாயணம்
C) கலிங்கத்துப் பரணி
D) மணிமேகலை
86. எந்த புத்தகம் எழுதியதற்காக அறிஞர் அண்ணா சிறையில் அடைக்கப்பட்டார் ?
A) கம்ப ரசம்
B) ஓர் இரவு
C) தசாவதாரம்
D) ஆரிய மாயை
87. அறிஞர் அண்ணா அவர்கள் எழுதாத நூல் எது ?
A) வெள்ளிக் கிழமை
B) ரங்கோன் ராதா
C) நிலையும் நினைப்பும்
D) குமரக்கோட்டம்,
88. அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சரான ஆண்டு ?
A) 1967
B) 1969
C) 1972
D) 1957
89. ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று கூறியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) அறிஞர் அண்ணா
C) தந்தை பெரியார்
D) புலவர் குழந்தை
90. புத்துலகத் தொலை நோக்காளர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) காமராசர்
C) தந்தை பெரியார்
D) அண்ணல் அம்பேத்கர்
91. காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்று எந்த நூலைப்பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார் ?
A) இராவண காவியம்
B) கலிங்கத்துப் பரணி
C) முத்தொள்ளாயிரம்
D) ஆரிய மாயை
92. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) பெரியார் தாசன்
C) புலவர் குழந்தை
D) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
93. அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை நடுவணரசு வெளியிட்ட ஆண்டு ?
A) 2008
B) 2010
C) 2009
D) 2011
94. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆண்டு ?
A) 2008
B) 2010
C) 2009
D) 2011
95. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்று முழக்கமிட்டவர் யார் ?
A) முத்துராமலிங்கர்
B) அண்ணல் அம்பேத்கர்
C) தந்தை பெரியார்
D) அறிஞர் அண்ணா
96. அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய இதழ் அல்லாதது எது ?
A) விடுதலை
B) ஹோம் லேண்ட்
C) நம்நாடு
D) திராவிட நாடு
97. இலக்கணக் குறிப்பறிக - அண்ணாவை படித்திருக்கிறேன்.
A) காரியவாகு பெயர்
B) கருத்தாவாகு பெயர்
C) தானியாகு பெயர்
D) இடவாகு பெயர்
98. 27.06.1970 ல் ஐ.நா சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு வழங்கிய பட்டம் ?
A) தென்னாட்டு பெர்னாட்ஷா
B) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
C) பகுத்தறிவுப் பகலவன்
D) பெண்ணின போர் முரசு
99. மெய்கண்டான் புத்தகச்சாலை என்னும் நூல்நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் திறமையாகப் பேசவும் வாதம் புரியவும் தொடங்கியவர் யார்?
A) அண்ணல் அம்பேத்கர்
B) தந்தை பெரியார்
C) முத்துராமலிங்கர்
D) காமராசர்
100. முப்பத்திரண்டு சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுத தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்த தலைவர் யார் ?
A) அண்ணல் அம்பேத்கர்
B) தந்தை பெரியார்
C) முத்துராமலிங்கர்
D) மகாத்மா காந்தி