TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 26 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 26
விடையுடன் இலவச பதிவிறக்கம்
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-2
Full Syllabus - Full Test -2
2022 புதிய பாடத்திட்டம்
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நேற்று 25வது மாதிரி வினாத்தாளாக முதல் முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இன்று 26வது வினாத்தாளாக 2வது முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
MODEL QUESTION PAPER 26 WITH ANSWER KEY
PDF FILE FREE DOWNLOAD
👇
மாதிரி வினாத்தாள்- 26 (100 வினாக்கள்)
1. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் - என்று பாடியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
D) கவிஞர் காசி ஆனந்தன்
2. மாணிக்கம் அவர்கள் நடத்தாத இதழ் எது ?
A) தென்மொழி
B) இந்தியன் சஞ்சிகை
C) தமிழ்ச் சிட்டு
D) தமிழ்நிலம்
3. தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி - என்று பாடியவர் யார் ?
A) பொற்கோ
B) வாணிதாசன்
C) வண்ணதாசன்
D) இவர்களில் எவருமிலர்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன ?
A) உள்ளம்
B) மணம்
C) குணம்
D) இவை அனைத்தும்
5. பறவைகள் இடம்பெயர அடிப்படையாக அமைவது ?
A) நிலவு
B) விண்மீன்
C) புவி ஈர்ப்புப் புலம்
D) இவை அனைத்தும்
6. சிலப்பதிகார நூல் எதை வாழ்த்துவதாக தொடங்குகிறது ?
A) தமிழ்த்தாயை
B) சோழநாட்டை
C) இயற்கையை
D) சேரநாட்டை
7. கழுத்தில் சூடுவது ?
A) மேகலை
B) தண்டை
C) தார்
D) கழல்
8. ரோபோ (Robot) என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார் ?
A) பியர்ல் கார்சன்
B) காரல் கபெக்
C) ஜே.எல். பெயர்டு
D) ஜே.ஜே.தாம்சன்
9. அறிவியல் ஆத்திச்சூடியை இயற்றியவர் யார் ?
A) நெல்லை சு.முத்து
B) பாரதியார்
C) ஓளவையார்
D) அப்துல் ரகுமான்
10. திருஞான சம்பந்தருக்கு கொஞ்சு தமிழ், திருநாவுக்கரசருக்கு கெஞ்சு தமிழ், சுந்தரருக்கு மிஞ்சு தமிழ் என்று சொன்னவர் யார்?
A) வள்ளலார்
B) கி.வா.ஜகந்நாதன்
C) குன்றக்குடி அடிகளார்
D) சுவாமி விபுலானந்தர்
11. கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது அக்கல்லினையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவர் யார் ?
A) திருஞான சம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
12. பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை எனும் பாடலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த திருத்தாண்டகப் பாடலை எழுதியவர் யார் ?
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) மாணிக்கவாசகர்
D) சுந்தரர்
13. தலபுராணங்கள் பாடும் மரபை துவக்கி வைத்தவர் யார் ?
A) திருநாவுக்கரசர்
B) மீனாட்சி சுந்தரனார்
C) திருஞான சம்பந்தர்
D) உமாபதி சிவம்
14. அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) திருஞான சம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) மாணிக்க வாசகர்
D) சுந்தரர்
15. பொருத்துக
1. இரக்கம் ஒன்றிலீர் - அ) திருநாவுக்கரசர்
2. கூற்றாயின வாறு - ஆ) சுந்தரர்
3. பித்தா பிறை சூடி - இ) மாணிக்க வாசகர்
4. நமச்சிவாயம் வாழ்க - ஈ) திருஞான சம்பந்தர்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ அ ஆ ஈ
C. ஆ அ ஈ இ
D. ஈ அ ஆ இ
16. தாண்டவம் பாடுவதில் வல்லவர் யார் ?
A) திருஞான சம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) மாணிக்க வாசகர்
D) சுந்தரர்
17. சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையாக உள்ளது எது ?
A) திருவாசகம்
B) திருக்கோவையார்
C) A மற்றும் B
D) இவற்றுள் ஏதுமில்லை
18. அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியேன் யான் என்று பாடியவர்
A) அப்பூதியடிகள்
B) அப்பர்
C) ஞானசம்பந்தர்
D) சுந்தரர்
19. திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதல் பாடல் எது ?
A) உலகெலாம் உணர்ந்து . . .
B) பித்தா பிறைசூடி . . .
C) மெய்தான் அரும்பி . . .
D) உலகம் யாவையும் . . .
20. பொருத்துக
சமயப் பெரியோர்கள் - மார்க்கம்
1. திருஞான சம்பந்தர் - அ) தாச மார்க்கம்
2. திருநாவுக்கரசர் - ஆ) சத்புத்ர மார்க்கம்
3. சுந்தரர் - இ) சக மார்க்கம்
4. மாணிக்க வாசகர் - ஈ) சற்குரு மார்க்கம்
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. ஆ அ இ ஈ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
21. ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து என்றெல்லாம் அழைக்கப்படும் நூல் எது ?
A) திருக்கோவையார்
B) சீவக சிந்தாமணி
C) திருப்பள்ளி எழுச்சி
D) திருவாசகம்
22. பொருத்துக
சமயப் பெரியோர்கள் - இறையடி சேர்ந்த இடங்கள்
1. திருஞான சம்பந்தர் - அ) கைலாயம்
2. திருநாவுக்கரசர் - ஆ) பெருமணநல்லூர்
3. சுந்தரர் - இ) சிதம்பரம்
4. மாணிக்க வாசகர் - ஈ) திருப்புகலூர்
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. ஆ அ இ ஈ
C. ஆ ஈ அ இ
D. அ இ ஈ ஆ
23. திருப்பாவை மற்றும் திருவெண்பாவை என்ற நூல்களின் காரணமாக த்ரியெம்பாவ - த்ரிபாவ என்ற விழா எந்த நாட்டில் கொண்டாடப்படுகிறது ?
A) இலங்கை
B) தாய்லாந்து
C) மலேசியா
D) சிங்கப்பூர்
24. திருநாவுக்கரசரின் பாடல் வரி அல்லாதது எது ?
A) பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
B) மாசில் வீணையும் மாலை மதியமும்
C) இன்பமே எந்நாளும் துன்பமில்லை
D) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
25. திருஞான சம்பந்தர் தொடர்பான தவறான கூற்று எது ?
A) சீர்காழியில் உமையாள் கொடுத்த ஞானப்பாலை உண்டார்.
B) திருஞான சம்பந்தரின் பாடல்களை திருநீலகண்டர் யாழில் பாடினார்.
C) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
D) தருமபுரத்தில் யாழ்முறி பதிகம் பாடினார்
26. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர் என சேக்கிழாரால் புகழப்பட்டவர் யார்?
A) திருஞான சம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) மாணிக்க வாசகர்
D) சுந்தரர்
27. பொருத்துக
சமயப் பெரியோர்கள் - ஆட்கொண்ட இடங்கள்
1. திருஞான சம்பந்தர் - அ) திருப்பெருந்துறை
2. திருநாவுக்கரசர் - ஆ) திருவெண்ணெய்நல்லூர்
3. சுந்தரர் - இ) திருவதிகை
4. மாணிக்க வாசகர் - ஈ) சீர்காழி
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
28. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ?
A) பொய் + அகற்றும்
B) பொய் + கற்றும்
C) பொய்ய + கற்றும்
D) பொய் + யகற்றும்
29. மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கூறுக ?
A) விலங்கு
B) வயல்
C) வண்டு
D) இவை அனைத்தும்
30. அருகு என்ற தாவரத்தின் இலைப்பெயரைக் குறிப்பிடுக ?
A) தாள்
B) இலை
C) மடல்
D) புல்
31. பிரித்து எழுதுக - பாகற்காய்
A) பாகல் + காய்
B) பாகற் + காய்
C) பாகு + அல் + காய்
D) பாகற்ற + காய்
32. பிரித்து எழுதுக - சீரிளமை
A) சீர்மை + இளமை
B) சீர் + இளமை
C) சீரி + இளமை
D) சீரிளம் + மை
33. தவறான கூற்றினை கண்டறிக.
A) போர் வீரன் மார்பில் ஏற்பட்ட காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி - குறுந்தொகை
B) சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி - நற்றிணை
C) தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்து - கபிலர், திருவள்ளுவமாலை
D) கடல்நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் கருத்து - முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை
34. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்
A) 30
B) 12
C) 18
D) 10
35. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - ளயnஉவரயசல
A) புகலிடம்
B) எழுதுபொருட்கள்
C) சட்டமுறை ஆவணம்
D) இவற்றில் எதுவுமில்லை
36. புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை யாருக்கு
வழங்கியது ?
A) சாக்ரடீஸ்
B) தந்தை பெரியார்
C) அண்ணல் அம்பேத்கர்
D) சோபியா
37. தவறான கூற்று எது ?
A. ஞ வரிசையில் வரும் மொழி முதல் எழுத்து - ஞ, ஞா, ஞெ, ஞௌ
B. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்
C. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது
D. அளபெடை அல்லாத சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வரும்.
38. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை என்று அழைக்கப்படும் நூல் எது
A) திரு-குர்-ஆன்
B) பைபிள்
C) திருவாசகம்
D) திருக்குறள்
39. உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தூய்மை வெளிப்படுத்துவது எது ?
A) இன்னாச்சொல்
B) பழிச்சொல்
C) வாய்மை
D) பொய்மை
40. தன்னே ரிலாத தமிழ் என்று கூறும் நூல்
A) தண்டியலங்காரம்
B) கலிங்கத்துப்பரணி
C) கம்பராமாயணம்
D) தொல்காப்பியம்
41. இன்பத் தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
1. விளைவுக்கு - அ) வேல்
2. அறிவுக்கு - ஆ) பால்
3. இளமைக்கு - இ) தோள்
4. புலவர்க்கு - ஈ) நீர்
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
42. ஆங்கிலச் சொல்லுக்கு நேராக தமிழ்ச்சொல்லைக் காண்க - Clock wise
A) இடஞ்சுழி
B) கடிகார சுற்று
C) வலஞ்சுழி
D) வட்டக் கடிகாரம்
43. The fall of the sparrow என்ற நூலை எழுதியவர் யார் ?
A) வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்
B) டாக்டர் சலீம்அலி
C) லியோ டால்ஸ்டாய்
D) ரசூல் கம்சதேவ்
44. பொருந்தாத இணையைக் கண்டறிக
A. ஆழிப்பெருக்கு - கடல்கோள்
B. மேதினி - எருமை
C. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
D. உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை
45. பொருத்துக
தமிழ்ச்சொற்கள் - முதலில் ஆளப்பட்ட இலக்கியம்
1. தமிழ் - அ) கலித்தொகை
2. தமிழ்நாடு - ஆ) தொல்காப்பியம்
3. தமிழன் - இ) சிலப்பதிகாரம்
4. வேளாண்மை - ஈ) அப்பர் தேவாரம்
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
46. தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் மறைந்த இடம் ?
A) இடையன்குடி
B) உதகமண்டலம்
C) புதுச்சேரி
D) கொடைக்கானல்
47. ஊர்ப்பெயருடன் பாளையம் என்ற சொல்லை சேர்த்து வழங்கியவர்கள் யார் ?
A) நாயக்கர்கள்
B) பாளையக்காரர்கள்
C) பல்லவர்கள்
D) மராத்தியர்கள்
48. எந்த புலவர் அரசனுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது சேரமான்பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசினான் ?
A) மோசிகீரனார்
B) இளந்தத்தனார்
C) நக்கீரர்
D) பலைக்கடுங்கோ
49. எதிர்ச்சொல்லுடன் பொருத்துக
A. அணுகு - 1) தெளிவு
B. ஐயம் - 2) சோர்வு
C. ஊக்கம் - 3) பொய்மை
D. உண்மை - 4) விலகு
a. b. c. d.
A. 4 1 2 3
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 1 4
50. சிறந்த பத்து என்னும் தலைப்பில் செய்யுள்களைக் கொண்டுள்ள நூல் எது ?
A) பதிற்றுப்பத்து
B) நெடுநல்வாடை
C) பரிபாடல்
D) முதுமொழிக் காஞ்சி
51. பொருத்துக
A. பெயர்ச்சொல் - 1) வந்தான்
B. வினைச்சொல் - 2) வேலன்
C. இடைச்சொல் - 3) மாவீரன்
D. உரிச்சொல் - 4) ஐந்தும் ஆறும்
a. b. c. d.
A. 2 4 1 3
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 1 4
52. உ.வே.சாமிநாதர் அவர்களின் ஆசிரியராக விளங்கியர் யார் ?
A) திரு.வி.கலியாணசுந்தனார்
B) ம.பொ.சிவஞானம்
C) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
D) சி.இலக்குவனார்
53. திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்த புலவர் யார் ?
A) குமரகுருபரர்
B) தாயுமானவர்
C) காளமேகப் புலவர்
D) பாரதியார்
54. காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் என்று பாடியவர் யார் ?
A) பாரதியார்
B) தாயுமானவர்
C) குமரகுருபரர்
D) வள்ளலார்
55. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி
1. தற்போது வெகுவாக அழிந்துவரும் பறவை இனம் - சிட்டுக்குருவி
2. உலகில் நெடுந்தொலைவு 22,000 கி.மீ பயணம் செய்யும் பறவையினம் - ஆர்டிக் ஆலா
3. பறவை பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி
4. உலக சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் 20
A) 1 மற்றும் 3 மட்டும் சரி
B) 1, 3 மற்றும் 4 மட்டும் சரி
C) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி
D) 1, 2, 3 மற்றும் 4 சரி
56. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ?
A) நெல்லை.சு.முத்து
B) மயில்சாமி அண்ணாதுரை
C) நடிகர் விவேக்
D) வாஜ்பாய்
57. சரியான வரிசையில் அமைந்த தொடரைக் காண்க.
A) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனை
B) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்
C) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
D) சாண்டியாகோ மீனைப் பிடித்தார் மிகப்பெரிய
58. வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - என்று பாடியவர் யார் ?
A) மேதகு அப்துல்கலாம்
B) பாரதியார்
C) வெ.இறையன்பு
D) முடியரசன்
59. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) வள்ளலார்
D) ஈரோடு தமிழன்பன்
60. திரு.வி.க தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளை கவனி.
1. பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
2. பிறந்த ஊர் : காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர் , தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது.
3. சிறப்பு : இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்.
4. மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
5. தாயுமானவரின் முன்னோடி என கருதப்படுகிறார்.
A) 1, 2, 3 மற்றும் 4 சரி
B) 2, 3, 4 மற்றும் 5 சரி
C) 3, 4 மற்றும் 5 சரி
D) அனைத்தும் சரி
61. ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் எனத் தொடங்கும் காளமேகப் புலவர் பாடலில் எந்த இரு பொருள்களுக்கு சிலேடை அமைக்கப்பட்டுள்ளது ?
A) வாள் மற்றும் பார்வை
B) வாழை மற்றும் பெண்
C) பாம்பு மற்றும் எள்
D) குதிரை மற்றும் காவிரி
62. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு - ஒப்பற்ற ஆசான் சொல் கேட்கவேண்டும்
A) ஒப்பற்ற ஆசான் சொல்லைக் கேட்க வேண்டுமா ?
B) ஆசான் சொல்லைக் கேட்க வேண்டுமா ?
C) எத்தகைய சொல்லைக் கேட்க வேண்டும் ?
D) யாருடைய சொல்லைக் கேட்கவேண்டும்?
63. கணிததேதை இராமானுஜத்தின் 15 காசு அஞ்சல்தலை நடுவணரசால் வெளியிடப்பட்ட நாள் ?
A) 11.06.1986
B) 22.11.1963
C) 03.12.1962
D) 22.12.1962
64. கோவூர்கிழார் தொடர்பான தவறான சரியற்ற கூற்றினைக் காண்க.
A) கோவூர்கிழார் ஆவூர்க்கோட்டையினுள் சென்றார் நெடுங்கிள்ளியைக் கண்டு அறிவுரை வழங்கினார்.
B) கோவூர்கிழார் உறையூர்க் கோட்டையினுள் சென்றார் நெடுங்கிள்ளியைக் கண்டு அறிவுரை வழங்கினார்.
C) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமானின் பிள்ளைகள் இருவரையும் பட்டத்து யானையின் காலால் இடறிக் கொல்ல முடிவு செய்தபோது அதனை கோவூர்கிழார் தடுத்து நிறுத்தினார்
D) எதிரிநாட்டுப் புலவர் இளந்தத்தனாரை சிறையிலடைக்கு வழி செய்து சோழமாண்பைக் காத்தார்
65. சொற்களை அகர வரிசையில் அமைக்க ?
A) இரண்டு, ஐந்து, ஒன்று, நான்கு, மூன்று
B) ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து
C) ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று
D) இரண்டு, ஐந்து, ஒன்று, மூன்று, நான்கு
66. "இரண்டு" என்ற சொல் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
1. இது ஒரு எண்ணுப்பெயர்
2. அறுவகை பெயர்ச்சொற்களில் இச்சொல் பண்புப்பெயரில் அடங்கும்
3. இது ஒரு குற்றியலிகரச் சொல்
4. இது ஒரு மென்தொடர் குற்றியலுகரச் சொல்
A) 2 மற்றும் 4 சரி
B) 1, 2 மற்றும் 4 சரி
C) 1, 2 மற்றும் 3 சரி
D) அனைத்தும் சரி
67. வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைந்த வற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினில் அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே என்று பாடியவர் யார்?
A) ஔவையார்
B) நக்கீரர்
C) இடைக்காடனார்
D) பாரதிதாசன்
68. பரிதிமாற்கலைஞர் அவர்கள் யாரை வசனநடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டினார் ?
A) ஆறுமுக நாவலர்
B) திரு.வி.க
C) நாவலர் நெடுஞ்செழியன்
D) அறிஞர் அண்ணா
69. இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர் ?
A) வீரமாமுனிவர்
B) கால்டுவெல்
C) பரிதிமாற்கலைஞர்
D) ஜி.யு. போப்
70. குற்றியலுகரச் சொல் அல்லாதது எது ?
A) சுக்கு
B) மருந்து
C) மது
D) சார்பு
71. நான்கு, ஆறு, எட்டு இவற்றின் அயலெழுத்தை நோக்க எவ்வகைக் குற்றியலுகரச் சொற்கள் என எழுதுக ?
A) மென்தொடர் - உயிர்த்தொடர் - இடைத்தொடர்
B) வன்தொடர் - நெடில்தொடர் - இடைத்தொடர்
C) மென்தொடர் - நெடில்தொடர் - வன்தொடர்
D) நெடில்தொடர் - உயிர்த்தொடர் - வன்தொடர்
72. தவறான இணையைக் கண்டறிக.
A) தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை - உடன்பாட்டுத்தொடர்
B) இந்தச் செயலைச் செய்தது யார் - வினாத்தொடர்
C) இளமையில் கல் - கட்டளைத் தொடர்
D) மணிமொழி நன்கு பாடினாள் - உடன்பாட்டுத் தொடர்
73. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி
1. ரோபோ (Robot) என்னும் சொல்லுக்கு அடிமை என்று பொருள்
2. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் - தானியங்கி
3. டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினியை ( Super Computer) உருவாக்கிய நிறுவனம் - ஐ.பி.எம்
4. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் - சோபியா
A) 1, 3 மற்றும் 4 சரி
B) 1, 2 மற்றும் 4 சரி
C) 2, 3 மற்றும் 4 சரி
D) இவை அனைத்தும்
74. கூற்று( A) : காமராசர் அவர்களால் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
காரணம் (R) : பள்ளிகளுக்கான அடிப்படைப்பொருள்களும் கருவிகளும் நன்கொடையாக பெறும் பொருட்டு பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்பட்டது.
A) (A) &(R) இரண்டும் சரி மற்றும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம்.
B) (A) சரி ஆனால் (R) தவறு
C) (R) சரி ஆனால் (A) தவறு
D) (A) & (R) இரண்டும் சரி மற்றும்(சு) ஆனது (A) க்கான சரியான விளக்கமல்ல.
75. சலவர் என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக ?
A) துரோகி
B) நண்பர்
C) பகைவர்
D) இவற்றில் எதுவுமில்லை
76. பொருத்துக
1. கொங்கு - அ) அச்சம் தரும் கடல்
2. திகிரி - ஆ) ஆணைச்சக்கரம்
3. நாமநீர் - இ) மகரந்தம்
4. அளி - ஈ) கருணை
1. 2. 3. 4.
A. ஈ இ ஆ அ
B. இ ஆ அ ஈ
C. ஆ ஈ அ இ
D. அ இ ஈ ஆ
77. செய்தியைப் பெறுதல் என்பது எதைப்போன்றது ?
A) துப்பறிதல்
B) வேளாண்மை
C) உளவு பார்த்தல்
D) இவை அனைத்தும்
78. எயிறு, வேய், மடி, நல்குரவு - என்பன எதற்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது ?
A) திசைச் சொல்
B) வினை திரிசொல்
C) வடசொல்
D) பெயர் திரிசொல்
79. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) பேதையார் நட்டு - இமயம் போன்றது
B) பண்புடையாளர் தொடர்பு - நவில்தொறம் நூல்நயம் போன்றது
C) அறிவுடையார் நட்பு - வளர்பிறை போன்றது
D) இடுக்கண் களையும் நட்பு
80. சந்திப்பிழை நீங்கிய தொடரைக் காண்க.
A) திருவளர்செல்வன்
B) பழங்களை பறிக்காதீர்கள்
C) வங்கி கடன்
D) இவை அனைத்தும்
81. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) அக்கினிச் சிறகுகள் - அப்துல்கலாம்
B) மின்மினி - ஆயிஷா நடராஜன்
C) கடல்புறா - ந.காமராசன்
D) ஏன், எதற்கு, எப்படி - சுஜாதா
82. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி
1. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்
2. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
3. திறன்அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்
A) 1, 2 மட்டும் சரி
B) 1, 3 மட்டும் சரி
C) 2, 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
83. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது ?
A) தேசிய திறனாய்வுத் தேர்வு
B) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
C) தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகை தேர்வு
D) இவை அனைத்தும்
84. ஒற்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே - இவ்வடிகளில் அதனொடு நாவே என்பது எதைக் குறிக்கிறது ?
A) நுகர்தல்
B) தொடு உணர்வு
C) கேட்டல்
D) காணல்
85. விடை வரிசையை தேர்க.
1. இது செயற்கைகோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்
2. இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
A) நேவிக், சித்தாரா
B) நேவிக், வானூர்தி
C) சித்தாரா, நேவிக்
D) வானூர்தி, சித்தாரா
86. தவறான இணையை கண்டறிக
A) திருக்குறள் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1816
B) திருக்குறளில் இடம்பெறம் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
C) திருக்குறளிர் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
D) திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
87. மலையாள மொழியின் பழமையான இலக்கியம் எது ?
A) ராமசரிதம்
B) பாரதம்
C) கவிராஜ மார்க்கம்
D) சங்க இலக்கியங்கள்
88. கோளி என்பதன் பொருள் ?
A) அரசமரம்
B) ஆச்சாமரம்
C) பச்சிலை மரங்கள்
D) ஆற்றுப்பூவரசு
89. இலக்கணக் குறிப்பறிக - கொடுத்தோர்
A) முற்றெச்சம்
B) வினைத்தொகை
C) வினையாலனையும் பெயர்
D) வியங்கோள் வினைமற்று
90. சரியற்ற இணையைக் கண்டறிக.
A) உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறம் 18
B) உண்பதுநாழி உடுப்பவை இரண்டே - புறம் 189
C) யாதும் Cரே யாவரும் கேளிர் - 129
D) சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே - புறம் 312
91. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A. தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் - கால்டுவெல்.
B. தனித்தமிழுக்கு வித்திட்டவர் - வீரமாமுனிவர்
C. தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் - மறைமலையடிகள்.
D. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் - தேவநேயப் பாவாணர்.
92. வீரமாமுனிவர் அவர்களால் உருவாக்கப்படாத அகர முதலி எது ?
A) தமிழ் - இலத்தீன் அகரமுதலி
B) இலத்தீன் - தமிழ் அகரமுதலி
C) போர்ச்சுகீசியம் - தமிழ் அகர முதலி
D) தமிழ் - பிரெஞ்சு அகர முதலி
93. பொருத்துக
A. கண் - 1) மலையாளம், கன்னடம்
B. கண்ணு - 2) குரூக்
C. கன்னு - 3) தமிழ்
D. ஃகன் - 4) தெலுங்கு, குடகு
a. b. c. d.
A. 1 3 4 2
B. 4 3 1 2
C. 2 4 1 3
D. 3 1 4 2
94. மருண்டனென் என்ற செல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A) மருள்
B) மருண்
C) மருளல்
D) மரு
95. ‘தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்’ என்று கூறியவர் ?
A) நாமக்கல் கவிஞர்
B) தேவநேயப் பாவாணர்
C) கண்ணதாசன்
D) வள்ளலார்
96. உலக வராலாற்றிலே மேதையான மாணிக்க வாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தை பொறுத்தல், இடையறா நிலையான பத்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை என்று புகழ்ந்தவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) வள்ளலார்
C) குன்றக்ககுடி அடிகளார்
D) ஜி.யு.போப்
97. ஜி.யு.போப் தம் இறுதி காலத்தில் பதிப்பித்த நூல்?
A) புறப்பொருள் வெண்பா மாலை
B) புறநானூறு
C) திருவருட்பயன்
D) இவை அனைத்தும்
98. அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர், மிகவும் ஆர்வத்துடன் விரைந்து தன்னந்தனியாக செயல்பட்டவர், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று பாராட்டியவர் யார்?
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) அண்ணல் காந்தியடிகள்
C) ஜவஹர்லால் நேரு
D) தந்தை பெரியார்
99. அண்ணல் அம்பேத்கருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது
A) 1970
B) 1980
C) 1960
D) 1990
100. தந்தை பெரியார் எதனை எதிர்க்கவில்லை ?
A. இந்தி திணிப்பு
B. குலக்கல்வி திட்டம்
C. மணக்கொடை
D. வயதுவந்தோர் வாக்குரிமை