TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 27 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 27
விடையுடன் இலவச பதிவிறக்கம்
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-3
Full Syllabus - Full Test -3
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இரண்டு மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று 27வது வினாத்தாளாக 3வது முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
MODEL QUESTION PAPER 27 WITH ANSWER KEY
PDF FILE FREE DOWNLOAD
👇
மாதிரி வினாத்தாள்- 27 (100 வினாக்கள்)
1. தவறான கூற்று எது ?
A) கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று ஓளவையார் பாடினார்
B) மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்
C) புதிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகிய நூல்களை ஓளவையார் எழுதியுள்ளார்.
D) மூதுரை நூலில் 31 பாடல்கள் உள்ளன.
2. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார் ?
A) மக்கள் கவிஞர்
B) புரட்சிக் கவிஞர்
C) கவிஞரேறு
D) புலவரேறு
3. பள்ளிகளில் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார் ?
A) எம்.ஜி.ராமச்சந்திரன்
B) காமராசர்
C) செல்வி.ஜெ.ஜெயலலிதா
D) அறிஞர் அண்ணா
4. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு இனவெழுத்து இல்லை ?
A) உயிர் எழுத்து
B) ஆய்த எழுத்து
C) மெய்யெழுத்து
D) இவை அனைத்தும்
5. வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்த தமிழ்ச் சான்றோர் யார் ?
A) காளமேகப் புலவர்
B) பெருவாயின் முள்ளியார்
C) இளங்கோவடிகள்
D) சீத்தலைச் சாத்தனார்
6. முத்தேன் என்னும் வகையில் சேராத தேன் எது ?
A) குடைத் தேன்
B) கொம்புத் தேன்
C) பொந்துத் தேன்
D) கொசுத் தேன்
7. 2021 என்ற ஆங்கில ஆண்டின் திருவள்ளுவர் ஆண்டு எது ?
A) 2052
B) 2051
C) 2021
D) 2031
8. புதியதொரு விதி செய்வோம் என்ற நூலை எழுதியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) முடியரசன்
C) பாரதியார்
D) தாராபாரதி
9. பண்டைத் தமிழகத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து எதனைப் பெற்றனர் ?
A) மிளகாய்
B) உப்பு
C) காய்கறிகள்
D) தானியங்கள்
10. நாட்டுப்புறப் பாடல் எது ?
1. ஏற்றப்பாட்டு
2. ஓடப்பாட்டு
3. விளையாட்டுப் பாடல்கள்
4. தாலாட்டுப் பாடல்கள்
A) 1, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) 1, 2, 4 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
11. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?
A) மகரசங்கராந்தி
B) லோரி
C) பொங்கல்
D) உத்தராயன்
12. பண்டைக் காலத்தில் வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி குழுவாக செல்வார்கள். அந்தக் குழுவின் பெயர் என்ன ?
A) யவனர் குழு
B) உவனர் குழு
C) எண்பேராயம்
D) வணிகச் சாத்து
13. கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைபடாது என்று பண்டைக் கால வணிகம் பற்றி குறிப்பிடும் நூல் எது ?
A) பட்டினப்பாலை
B) நெடுநல்வாடை
C) அகநானூறு
D) புறநானூறு
14. மயங்கொலிப் பிழைகள் திருத்திய தொடரைக் காண்க. ?
A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
B) தேர்த் திருவிலாவிற்கு சென்றனர்
C) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது
D) பூனையின் வாலைக் கண்டு போர்க்களத்தின் வாள் அஞ்சாது
15. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதை சுட்டிக்காட்ட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுட்டெழுத்து எது?
A) அ
B) உ
C) இ
D) இவை அனைத்தும்
16. நீராடிய பின் உண்ணுதல், பெரும்பயன் கிடைத்தாலும் பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல், உடல்வாடித் தளர்ந்தபோதும் அறிவு ஒழுக்கங்களில் குன்றாது இருத்தல் ஆகிய இம்மூன்றும் மனம், மொழி, மெய்களால் தூய்மை உடையவரின் செய்கைகளாம் என்று கூறும் நூல்?
A) பழமொழி நானூறு
B) ஆசாரக் கோவை
C) திருக்குறள்
D) திரிகடுகம்
17. தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையாக உள்ள தகுதியும், அவற்றிலும் மிக்க மேன்மை உடையதுமான மொழியே உயர்தனிச் செம்மொழி என்று கூறியவர் யார் ?
A) தேவநேயப் பாவாணர்
B) பரிதிமாற்கலைஞர்
C) கால்டுவெல்
D) ஈராஸ் பாதிரியார்
18. தாய்மொழியை வளமுறச் செய்வதற்குத் தேவையானவை, தங்கள் தாய்மொழியில் உள்ள பற்றும் மதிப்பும்தானே தவிர, ஆங்கில அறிவு இல்லை என்பதனை யாரை மேற்கொள்காட்டி காந்தியடிகள் கூறினார்?
A) இரவீந்திரநாத தாகூர்
B) முன்சிராம்
C) உ.வே.சாமிநாதர்
D) A மற்றும் B
19. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்" என எந்த நகரத்தில் அமைந்துள்ள கோவிலைப் பற்றி பரிபாடல் கூறுகிறது ?
A) உறையூர்
B) மதுரை
C) வஞ்சி
D) தென்கமலை
20. பெயர்ச்சொல் வகையறிக - சித்திரையான்
A) காலப்பெயர்
B) பொருட்பெயர்
C) தொழிற்பெயர்
D) பண்புப் பெயர்
21. திரைக்கவித் திலகம் பிறந்த இடம் ?
A) மேலக்குடிகாடு
B) மருதூர்
C) தண்டலம்
D) சிக்கல்
22. "தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது " என்று கூறியவர் யார் ?
A) தேவநேயப் பாவாணர்
B) பரிதிமாற்கலைஞர்
C) கால்டுவெல்
D) ஈராஸ் பாதிரியார்
23. "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா"" இத்தொடர் எவ்வகைப் பொருத்தத்திற்கு சான்றாக அமைந்துள்ளது?
A) சிறப்புப் பொருத்தம்
B) இடப்பொருத்தம்
C) எண் பொருத்தம்
D) பால் பொருத்தம்
24. பூங்கோயில் என அழைக்கப்படுவது?
A) திருவாரூர்க் கோவில்
B) திருவதிகை கோவில்
C) சண்டிகேசுவரம் கோவில்
D) பழனிமலைக் கோவில்
25. நற்பெயர் எடுத்திட வேண்டும்! - நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! என்று பாடியவர் யார் ?
A) வாணிதாசன்
B) பாரதிதாசன்
C) மனைவை முஸ்தபா
D) முடியரசன்
26. பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
A) வாணிதாசன்
B) பாரதிதாசன்
C) தேசிக விநாயகம் பிள்ளை
D) மு.கதிரேச செட்டியார்
27. உக்கிரகுமாரப் பாண்டியனாக மதுரையை ஆண்டவர் யார் ?
A) உமையம்மை
B) சிவபெருமான்
C) குலச்சிறையார்
D) செவ்வேள்
28. பெயர்ச்சொல் வகையறிக - வாழைத்தோட்டம்
A) காலப்பெயர்
B) இடப்பெயர்
C) பொருட்பெயர்
D) தொழிற்பெயர்
29. பார்வதிநாதன் என்ற புனைப்பெயரைக் கொண்டவர் யார் ?
A) திருஞான சம்பந்தர்
B) கண்ணதாசன்
C) திருநாவுக்கரசர்
D) இவர்களில் எவருமிலர்
30. சரியான கூற்றினை கண்டறிக ?
A) வினா எழுத்துகளில் முதலில் வருபவை - ஆ, ஓ
B) வினா எழுத்துகளில் இறுதியில் வருபவை - எ, யா
C) வினா எழுத்துகள் - எ, யா, ஆ, ஓ, ஏ
D) மொழி முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் - ஓ
31. திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்குத் தொண்டராய் இருந்த தமிழ்ச்சான்றோர் யார்?
A) குமரகுருபரர்
B) உமறுப்புலவர்
C) பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
D) ஈசான தேசிகர்
32. பொருத்துக
1. காமராசர் - அ) ஆசிரியர் தினம்
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் - ஆ) மாணவர் தினம்
3. அப்துல்கலாம் - இ ) குழந்தைகள் தினம்
4. விவேகானந்தர் - ஈ) கல்வி வளர்ச்சி நாள்
5. ஜவAர்லால் நேரு - உ) தேசிய இளைஞர் தினம்
1. 2. 3. 4. 5.
A. உ ஆ இ ஈ அ
B. ஈ இ அ உ ஆ
C. ஈ அ ஆ இ உ
D. ஈ அ ஆ உ இ
33. அசலாம்பிகை அம்மையார் தொடர்பான தவறான கூற்றைக் காண்க.
A. திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் பிறந்தார்.
B. திரு.வி.க வால் இக்கால ஔவையார் என்று புகழப்பட்டார்.
C. பாரதமாதாவை கதை மாந்தராகக் கொண்டு காந்தி புராணம் இயற்றினார்
D. ஆத்திக்சூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
34. விவேகசிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர் யார்
A) யாரெனத் தெரியவில்லை
B) என்னயினாப் புலவர்
C) ஐயனாரிதனார்
D) ஒட்டக்கூத்தர்
35. எவ்வகைத் தொடர் என கண்டறிக - உழைத்துப் பிழை.
A) செயப்பாட்டு வினைத் தொடர்
B) கட்டளைத் தொடர்
C) செய்வினைத் தொடர்
D) அயற்கூற்றுத் தொடர்
36. பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?
A) பாரதிதாசன்
B) திரு.வி.க
C) இராஜாஜி
D) காந்தியடிகள்
37. அஞ்சலையம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) கி.பி.1895 ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
B) 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்
C) இவரை மகாத்மா காந்தியடிகள் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்.
D) நீலன்சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், வெள்ளையனே வேளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டார்.
38. திருவருட்பா நூலில் உள்ள " வாடிய பயிரை கண்டபோதெல்லாம் " என்ற பாடல் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது ?
A) துகிலுரிதல் படலம்
B) மங்கலம்
C) கங்கைகாண் படலம்
D) பிள்ளைப்பெரு விண்ணப்பம்
39. வள்ளை என்ற சொல்லின் பொருளைக் கூறுக ?
A) உலக்கைப் பாட்டு
B) ஒருவகை நீர்க்கொடி
C) நிறப்பெயர்
D) A மற்றும் B
40. அம்புஜத்தம்மாள் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.
B) கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
C) 08.02.1899-ல் விருதுநகரில் பிறந்தார்
D) வை.மு. கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக் கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்.
41. ஓர் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள், எத்தனை பேர்களுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான உயிர்க்காற்றைக் கிடைக்கச் செய்கின்றன.?
A) 17
B) 27
C) 18
D) 28
42. அடுக்குத்தொடர் எப்பொருள் காரணமாக தோன்றும்
A) விரைவு
B) வெகுளி
C) உவகை
D) இவை அனைத்தும்
43. காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என குறிப்பிடும் நூல் எது ?
A) தொல்காப்பியம்
B) அகத்தியம்
C) நன்னூல்
D) பன்னிருபடலம்
44. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) கோங்கு - மென்தொடர் குற்றியலுகரம்
B) குத்து - வன்தொடர் குற்றியலுகரம்
C) பாலாறு - நெடில்தொடர் குற்றியலுகரம்
D) கொய்பு - இடைத் தொடர் குற்றியலுகரம்
45. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் எது
A) திருவாசகம்
B) திருமந்திரம்
C) வாரணம் ஆயிரம்
D) இவை அனைத்தும்
46. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப்படும் பயன்படும் வேற்றுமை ?
A) இரண்டாம் வேற்றுமை
B) மூன்றாம் வேற்றுமை
C) ஐந்தாம் வேற்றுமை
D) விளி வேற்றுமை
47. வீரமாமுனிவர் அறிந்திராத மொழி எது
A) உருசியம்
B) எபிரேயம்
C) கிரேக்கம்
D) இத்தாலியம்
48. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) நாடகவியல் - பரிதிமாற்கலைஞர்
B) மதங்க சூளாமணி - சுவாமி விபுலானந்தர்
C) சாகுந்தலம் - மறைமலையடிகள்
D) நாடகத் தமிழ் - சங்கரதாசு சுவாமிகள்
49. பொருத்துக
1. ஆடுகொடி - அ) வேற்றுமைத் தொகை
2. வெண்ணிலவு - ஆ) உம்மைத் தொகை
3. இட்டலி வடை - இ ) பண்புத் தொகை
4. வேலன் மகன் - ஈ) வினைத் தொகை
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. ஈ இ ஆ அ
50. தொகாநிலைத் தொடர்கள் மொத்தம் எத்தனை ?
A) ஒன்பது
B) ஏழு
C) எட்டு
D) ஆறு
51. நாயக்கர் காலத்தில் தோன்றிய நாடகம் எது ?
A) பள்ளு நாடகம்
B) நொண்டி நாடகம்
C) ஓரங்க நாடகம்
D) குறவஞ்சி நாடகம்
52. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்ற வரிகள் தமிழ் செம்மொழிக்கான எத்தகுதிப்பாட்டினை வெளிப்படுத்துகின்றன ?
A) நடுவு நிலைமை
B) உயர்சிந்தனை
C) பொதுமைப் பண்பு
D) பண்பாடு, கலை பட்டறிவு
53. பொருத்துக
1. சிறந்த ஊர் - அ) குப்பம்
2. கடற்கரை நகரம் - ஆ) பாக்கம்
3. கடற்கரை சிற்றூர் - இ) புரம்
4. நெய்தல் நிலம் - ஈ) பட்டினம்
1. 2. 3. 4.
A. இ ஈ ஆ அ
B. இ ஈ அ ஆ
C. ஆ அ ஈ இ
D. அ இ ஈ ஆ
54. திருக்குறள் என்னும் நூல் தோன்றியராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்து இருக்காது என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) திரு.வி.க
C) பாரதிதாசன்
D) கி.ஆ.பெ.விஸ்வநாதன்
55. ஊனுக்கு ஊன் என்னும் செய்தியை மெய்ப்பிப்பது எது
A) கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு
B) சிரவணன் வரலாறு
C) கோவலன் வரலாறு
D) மணிமேகலை வரலாறு
56. இதைச் செய்வாயா ? என்று வினவியதற்கு கை வலிக்கும் என விடையளிப்பது எவ்வகை விடை எனக் கூறுக.
A) உற்றது உரைத்தல் விடை
B) இனமொழி விடை
C) உறுவது கூறல் விடை
D) ஏவல் விடை
57. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட ஆண்டு ?
A) 1876 மற்றும் 2003
B) 1987 மற்றும் 2013
C) 1789 மற்றும் 2014
D) 1986 மற்றும் 2017
58. எம்.ஜி.ஆர்-ன் பணியை பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத்ரத்னா (இந்திய மாமணி) எந்த ஆண்டு வழங்கப்பட்டது ?
A) 1988
B) 1987
C) 1983
D) 1998
59. கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது அக்கல்லினையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவர் யார் ?
A) திருஞான சம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
60. பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக கிடைக்கப்பெற்றுள்ள முத்தொள்ளாயிரம் நூல் வெண்பாக்களின் எண்ணிக்கை யாது ?
A) 22
B) 108
C) 599
D) 1975
61. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) இளவேனில் - சித்திரை, வைகாசி
B) முதுவேனில் - ஆனி, ஆடி
C) முன்பனிக் காலம் - ஐப்பசி, கார்த்திகை
D) கார்காலம் - ஆவணி, புரட்டாசி
62. செடிகள் பூப்பதற்குமன் ஓய்வெடுப்பதில்லை. செடியின் வெற்றி பூவில் உள்ளதைப் போல் உன் வெற்றிகளால் துன்பங்கள் யாவும் ஓடிவிடும் என்றவர் யார்?
A) தெ.பொ.மீ
B) கலாப்பிரியா
C) சாலை இளந்திரையன்
D) அப்துல் ரகுமான்
63. விடை எத்தனை வகைப்படும் ?
A) ஆறு
B) எட்டு
C) ஐந்து
D) ஏழு
64. கொள்கையில்லாத அரசியல், உழைப்பில்லா ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயம் இல்லாத அறிவியல், நியாமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றவர் யார் ?
A) அறிஞர் அண்ணா
B) எம்.ஜி.ராமச்சந்திரன்
C) மகாத்மா காந்தி
D) நேரு
65. துறை, தாழிசை, அகங்காரம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேருழவர் உழவு செய்ய வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுள் நன்னெறிகளே விதைகளாகும் என்னும் கருத்தை தெரிவிக்கும் நூல் எது
A) புறநானூறு
B) தமிழ்விடுதூது
C) அகநானூறு
D) சிலப்பதிகாரம்
66. இந்தியத் தொல்லியல் துறையினர் 1963-ஆம் ஆண்டு பூம்புகார் அரகில் உள்ள கீழார்வெளி என்னும் இடத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது எந்த நூற்றாண்டைச் சார்ந்த கட்டிட இடிபாடுகள் கண்டறியப்பட்டன ?
A) கி.மு. நான்காம்
B) கி.பி. நான்காம்
C) கி.மு. மூன்றாம்
D) கி.பி. நான்காம்
67. காந்தியடிகள் ஆளுநர் ஸ்டம்ஸ்க்கு எதை வழங்கினார் ?
A) தானே தைத்த கதராடை
B) சத்தியசோதனை நூல்
C) தானே தைத்த செருப்பு
D) இவை அனைத்தும்
68. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைத் போன்றது எது ?
A) தனியொருவரிடம் இருக்கும் நூல் பொதுநூலகத்தில் வைக்கப்படுதல்
B) கற்றதை அவையில் விரித்துரைத்தல்
C) தனியொருவர் அதிக நூல்களைப் படித்தல்
D) வன்சொல் விடுத்து இன்சொல் புகல்வார்
69. ஓலைச் சுவடிகளை பாதுகாக்க பழங்கால தமிழர் மேற்கொள்ளாத பாதுகாப்பு முறை எது?
A) சுவடிகளின் மேலும் கீழும் தண்டுப்பலகைகளை வைத்து கட்டினர்
B) ஓலைச் சுவடிகள் வைக்கப்படும் பெட்டியில் துளசி, வேப்பிலையை இட்டுவைத்தனர்
C) ஓலைச் சுவடிகளை வாசனைதிரவியங்களில் நனைத்து பாதுகாத்தனர்
D) ஓலைச் சுவடிகளை மஞ்சள் நீரில் நனைத்து பாதுகாத்தனர்
70. கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் - சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன் - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது ?
A) இரட்டுறமொழிதல் அணி
B) தற்குறிப்பேற்ற அணி
C) வஞ்சப்புகழ்ச்சி அணி
D) இயல்புநவிற்சி அணி
71. கி.மு. 2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண்பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கக்கட்ட இடம் ?
A) புதுகே - இந்தியா
B) கீழடி - தமிழ்நாடு
C) நிப்பூர் - பாபிலோனியா
D) லோத்தல் - இந்தியா
72. வினைமரபுவழு நீக்கிய தொடரைக் காண்க.
A) உமி கருக்கினாள்
B) ஆடை புனைந்தார்
C) ஓவியம் தீட்டினான்
D) சுவர் கட்டினான்
73. பேர் லாகர்கவிஸ்ட் சிறுகதைகளை தமிழில் எழுதியவர் ?
A) ஜி.யு. போப்
B) ஜி.குப்புசாமி
C) அரங்கநாயகம்
D) கா.சு.பிள்ளை
74. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என கருதப்படுவது எது?
A) இயல்பு வழக்கு
B) வழு நிலை
C) வாழா நிலை
D) வழுவமைதி
75. சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என்றவர் ?
A) வீரமாமுனிவர்
B) ஜி.யு.போப்
C) மகாத்மா காந்தி
D) கால்டுவெல்
76. தொழிப்பெயர் குறித்த தவறான கூற்றினை கண்டறிக.
A) தொழிற்பெயர் விகுதிகள் உண்டு
B) தொழிலுக்க பெயராய் வரும்.
C) மூவிடத்திலும் வரும்
D) காலம் காட்டாது.
77. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) என் மாமா வந்ததது - திணை வழு
B) நாய் கத்தும் - வழுவமைதி
C) கண்ணகி வந்தான் - பால் வழு
D) நாங்கள் வந்தார்கள் - இடவழுவமைதி
78. செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்தி பொருளைத் தருவது ?
A) பூட்டுவிற் பொருள்கோள்
B) மொழிமாற்று பொருள்கோள்
C) கொண்டுகூட்டு பொருள்கோள்
D) இவற்றில் எதுவுமில்லை
79. பொருத்துக
1. அழகின் சிரிப்பு - அ) பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் - ஆ) கோமல் சுவாமிநாதன்
3. தண்ணீர் தேசம் - இ) வைரமுத்து
4. வாய்க்கால் மீன்கள் - ஈ) வெ.இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும் - உ) மா.கிருஷ்ணன்
1. 2. 3. 4. 5.
A. ஈ இ ஆ அ உ
B. ஆ அ இ ஈ உ
C. ஆ ஈ அ இ உ
D. அ இ ஈ ஆ உ
80. திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே, மொய்யிலைவேல் மாறன் களிறு - இத்தொடரில் மாறன் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
A) சேரன்
B) சோழன்
C) பாண்டியன்
D) பல்லவன்
81. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் யார் ?
A) ஐடாய் சோபியா ஸ்கட்டர்
B) முத்துலட்சுமி ரெட்டி
C) சண்முகம் செட்டியார்
D) சிதம்பரம்
87. பொருந்தாத சொல்லை கண்டறிக ?
A) காரைக்காலம்மையார்
B) அள்ளூர் நன்முல்லையார்
C) நக்கண்ணையார்
D) காவற்பெண்டு
83. சாரதா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
A) 1956
B) 1964
C) 1935
D) 1929
84. உலக இலக்கியத் துறையில் நிகழ்ந்த ஒரு மாபெரும் புரட்சி எது ?
A) சங்க இலக்கியங்கள் தோன்றியது
B) கம்பர் பிறந்தது
C) காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது
D) வள்ளுவர் பிறந்தது
85. சென்றிளைப் பாறுக முற்றிடத்தே - தம்பி
தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே - என்று பாடியவர் யார்?
A) பாரதிதாசன்
B) சாலை இளந்திரையன்
C) தேவநேயப் பாவாணர்
D) பாரதியார்
86. 16வது வயதில் தந்தையின் படையில் தளபதியானவர் யார் ?
A) கரிகால்பெருவளத்தான்
B) வள்ளல் பாரி
C) வல்வில் ஓரி
D) அலெக்சாண்டர்
87. நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து
கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிக்க - அடி எதுகையைக் காண்க.
A) வால்நிலம் - கால்மடி
B) நீண்ட - கூண்ட
C) நிமிர்ந்து - கொப்பளிக்க
D) கிடந்துடல் - கனல்கள்
88. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தியவர் யார் ?
A) குமரகுருபரர்
B) தாயுமானவர்
C) வள்ளலார்
D) பாரதியார்
89. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) அக்கினிச் சிறகுகள் - அப்துல்கலாம்
B) மின்மினி - ஆயிஷா நடராஜன்
C) கடல்புறா - ந.காமராசன்
D) ஏன், எதற்கு, எப்படி - சுஜாதா
90. பொறிமயிர் வாரணம்...
கூட்டுறை வயமாப் புலியொடு குழும என்ற மதுரைக் காஞ்சி அடிகள் மூலம் அறியப்படுவது
A) மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்தது
B) மதுரையில் மருத்துவமனை இயங்கியது
C) மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்
D) மதுரை நான்மாடக் கூடல் என அழைக்கப்படுகிறது.
91. ஓரெதுகை பெற்று இரண்டு அடிகள் அளவொத்து வரும் பாவகை ?
A) வஞ்சிப்பா
B) வெண்பா
C) கலிப்பா
D) சிந்து
92. காந்த ஊசியைப் பற்றிய செய்தி எந்த நூலின் மூலம் அறிய முடிகிறது ?
A) மணிமேகலை
B) கம்பராமாயணம்
C) பட்டினப்பாலை
D) அகநானூறு
93. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A) சார்பெழுத்து
B) எழுத்துப்பேறு
C) உடன்படுமெய்
D) இவற்றில் எதுவுமில்லை.
94. உலகில் சாகா வரம்பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்றவர் ?
A) சூலியன் கக்சுலி
B) சாக்ரடீஸ்
C) அறிஞர் அண்ணா
D) கதே
95. பொருத்துக
1. திரிபுராந்தகன் - அ) மீனாட்சி
2. கஜசம்ஹார மூர்த்தி - ஆ) அண்ணாமலையார்
3. லிங்கோத்பவர் - இ ) யானை உரி போர்த்தவர்
4. அங்கயற்கண்ணி - ஈ) முப்புரம் எரித்தவன்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஈ இ அ ஆ
C. ஈ அ ஆ இ
D. ஈ இ ஆ அ
96. ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிமைறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் இடப்படுவது ?
A) அரைப்புள்ளி
B) காற்புள்ளி
C) முக்காற்புள்ளி
D) முற்றுப்புள்ளி
97. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்று கூறியவர் யார் ?
A) அ.தட்சிணாமூர்த்தி
B) அறிஞர் அண்ணா
C) கா.ராஜன்
D) சு.வித்யானந்தன்
98. அண்ணா நூற்றாண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது ?
A) 2010
B) 2011
C) 2012
D) 2014
99. இலக்கண குறிப்பறிக - தவிர்க்க ஒணா
A) வினைத்தொகை
B) அன்மொழித் தொகை
C) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
D) வினையெச்சம்
100. பரமாணுப் புராணம் என்ற அறிவியல் நூலை எழுதியவர் யார்?
A) நீலாம்பிகை
B) ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்
C) சர்.சி.வி.இராமன்
D) மயில்சாமி அண்ணாதுரை