TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 28 WITH ANSWER KEY
பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் - 28
விடையுடன் இலவச பதிவிறக்கம்
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-4
Full Syllabus - Full Test -4
2022 புதிய பாடத்திட்டம்
இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மூன்று மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று 28வது வினாத்தாளாக 4வது முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
MODEL QUESTION PAPER 28 WITH ANSWER KEY
PDF FILE FREE DOWNLOAD
👇
மாதிரி வினாத்தாள்- 28 (100 வினாக்கள்)
1. சிலப்பதிகாரம் தொடர்பான தவறான கூற்று எது ?
A) முதல் காதை - மங்கல வாழ்த்துப்பாடல்
B) இறுதி காதை - வரந்தரு காதை
C) சிறந்த காதை - குன்றக் குரவைக் காதை
D) திருப்புமுனைக் காதை - கானல் வரிக் காதை
2. முதன்முதலாக சந்திப்படலம் என்று சந்திக்கென ஒரு படலத்தை அமைத்த நூல் எது ?
A) நன்னூல்
B) வீர சோழியம்
C) தொல்காப்பியம்
D) தண்டியலங்காரம்
3. நூல்களை சிறந்த உரையாசிரியர்களுடன் பொருத்துக
1. நற்றிணை - அ) அடியார்க்கு நல்லார்
2. நன்னூல் - ஆ) பின்னத்தூர் நாராயணசாமி
3. சிலப்பதிகாரம் - இ ) நச்சினார்க்கினியர்
4. தொல்காப்பியம் - ஈ) சங்கர நமச்சிவாயர்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. ஆ ஈ அ இ
C. ஈ ஆ அ இ
D. ஈ இ ஆ அ
4. மிஞ்சினான் என்னும் சொல்லை பகுபத உறுப்பிலக்கப்படி பிரித்தால் இ என்னும் எழுத்து எந்த உறுப்பாக அமையும் ?
A) பகுதி
B) விகுதி
C) சந்தி
D) சாரியை
5. கீழ்க்காணும் குறிப்புடன் சரியாகப் பொருந்தும் தமிழ்ச்சான்றோர் யார் என தேர்வு செய்க?
1. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னுத் தலைப்பில் சுதேச மித்திரன் வார இதழில் எழுதினார்
2. ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக் கடலும் என்னும் தலைப்பில் 1974 ல் நூலாக வெளியிட்டார்.
3. தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். இவரின் மற்றொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
4. இவரின் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது
A) தி.ஜானகிராமன்
B) அறிஞர் அண்ணா
C) பசுவய்யா
D) ஈரோடு தமிழன்பன்
6. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி?
1. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாண சுந்தரம்
2. கல்யாண்ஜி அவர்கள் வாணிதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.
3. கல்யாண்ஜியின் நூல்கள் – புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு, சில இறகுகள் சில பறவைகள், கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது
4. கல்யாண்ஜியின் புனைப்பெயர் - யமன்
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) அனைத்தும் தவறு
D) அனைத்தும் சரி
7. உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்ற நாடு, இடம், ஆண்டு தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி ?
1. முதல் மாநாடு – மலேசியா – கோலாலம்பூர் - 1966
2. இரண்டாம் மாநாடு – இந்தியா – சென்னை - 1968
3. மூன்றாம் மாநாடு – பிரான்சு – பாரீஸ் - 1970
4. நான்காம் மாநாடு – இந்தியா – மதுரை - 1981
A) 1, 2, 3 மட்டும் சரி
B) 1, 2, 4 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
8. இராவண காவியம் தொடர்பான சரியற்ற கூற்று எது
A) தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரிக் காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களை உடையது
B) மூன்றாயிரத்து முந்நூற்று மூன்று பாடல்களைக் கொண்டது
C) இதன் ஆசிரியர் புலவர் குழந்தை ஆவார்.
D) கம்பராமாயணத்துக்கு மறுப்பாக, இராவணனை கதைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட காப்பியம் இது.
9. இராணி மங்கம்மாள் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டிய மைசூர்
மன்னன் யார்?
A) இரவிவர்மன்
B) ஹைதர் அலி
C) அரங்க கிருட்டிண முத்துவீரப்பன்
D) சிக்கதேவராயன்
10. ந.பிச்சமூர்த்தி தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க ?
1. புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
2. புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.
3. பிட்கூ, ரேவதி ஆகிய புனைப்பெயர்களில் எழுதினார்.
4. இவரின் முதல் சிறுகதை – ஸயன்ஸுக்கு பலி
5. ஹனுமன், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக இருந்துள்ளார்
6. 1931-ல் கலைமகள் பரிசு பெற்றார்
A) 2, 4, 5, மட்டும் சரி
B) 1, 2, 3, 5, 6 மட்டும் சரி
C) 1, 2, 4, 5 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
11. பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது எது ?
A) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
B) அளைமறிபாப்புப் பொருள்கோள்
C) அடிமறிமாற்றுப் பொருள்கோள்
D) மொழிமாற்றுப் பொருள்கோள்
12. இராமலிங்க அடிகளாரின் அருட்பாவிற்கு எதிராக மருட்பா இயற்றியவர் யார் ?
A) சுவாமி விபுலானந்தர்
B) குணங்குடி மஸ்தான் சாகிபு
C) குன்றக்குடி அடிகளார்
D) ஆறுமுக நாவலர்
13. எருதந் குஞ்சர மல்லி என்ற பெண் அதிகாரி இராச ராசன் காலத்தில் இருந்த செய்தியை தெரிவிக்கும் கல்வெட்டு எது ?
A) குடுமியான்மலை கல்வெட்டு
B) திருவையாறு ஒலோகமாதேவீச்சுரம் கல்வெட்டு
C) உத்திரமேரூர் கல்வெட்டு
D) இவை அனைத்தும்
14. " ழ " என்னும் சிற்றிதழை தொடங்கியவர் யார் ?
A) ஆத்மாநாம்
B) பிரமிள்
C) வைரமுத்து
D) கல்யாண்ஜி
15. சாழல் என்பது ?
A) பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு
B) ஒருவரை சாடி (ஏசுதல்) இயற்றப்படும் செய்யுள் வகை
C) மரத நிலத்தில் விளையும் ஒருவகை மரம்
D) அறம் வைத்து இயற்றப்படும் பாடல்
16. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க" என்று கோவில் கல்வெட்டில் கோவில் கட்ட உதவியவர்களை சிறப்பித்தவர் யார்?
A) இராச சிம்மன்
B) முதலாம் மகேந்திரவர்மன்
C) இரசேந்திரன்
D) இராச ராசன்
17. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையை நிறுவியவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) சங்கரதாசு சுவாமிகள்
C) பம்மல் சம்பந்தனார்
D) ஈராஸ் பாதிரியார்
18. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சித்தர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர்?
A) பிறப்பறுத்தவர்கள்
B) கிளர்ச்சியாளர்
C) சத்துவர்
D) நிறைமொழி மாந்தர்
19. பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
"ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ " என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) ஈரோடு தமிழன்பன்
B) கல்யாண்ஜி
C) பிரமிள்
D) அப்துல்ரகுமான்
20. 1980 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்"
என சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
A) மயிலை சீனி.வேங்கடசாமி
B) ஆறுமுக நாவலர்
C) ஈரோடு தமிழன்பன்
D) வண்ணக் களஞ்சிய புலவர்
21. தேர்க்கவி என்பது எந்த வகையுள் அடங்கும் ?
A) காலக் கவி
B) சித்திரக் கவி
C) வித்தாரக் கவி
D) ஆசு கவி
22. பொருந்தாத இணையை கண்டறிக
A) மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - பத்திரகிரியார்
B) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்
C) ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு - பட்டினத்தார்
D) நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள் - சிவவாக்கியர்
23. எவ்வகைத் தொடர் என காண்க - மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறை. மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
A) கலவைத் தொடர்
B) பொருள்மாறா எதிர்மறைத் தொடர்
C) தொடர்நிலைத் தொடர்
D) வினையெச்சத் தொடர்
24. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Pseudonym
A) புனைப்பெயர்
B) கொடையாளர்
C) பண்பாளர்
D) இவற்றில் எதுவுமில்லை.
25. நம்ரதா கே சாகர் என்னும் பாடலை எழுதியவர் யார் ?
A) ரவீந்திரநாத் தாகூர்
B) ரசூல் கம்சதேவ்
C) காளிதாசர்
D) மகாத்மா காந்தி
26. ஜனப்பிரளயம் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
A) மக்கள் அலை
B) உயிர் அலை
C) மக்கள் வெள்ளம்
D) மக்கள் அவை
27. சைவத் திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் எந்த பண்களில் பாடியுள்ளார் ?
A) நட்டபாடை, இந்தளம்
B) நோதிறம், பாலையாழ்
C) காந்தாரம், பஞ்சமுகி
D) சாளரபாணி, நைவளம்
28. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி?
1. தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு 2010 ல் நிறைவடைந்தது
2. முதலாம் நரசிம்மவர்மன் விசித்திரசித்தன் என்று அழைக்கப்படுகிறான்.
3. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலே இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்படுகிறது.
4. சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக்கலை நுட்பம் ஃப்ரெஸ்கோ எனப்படும்.
5. ஃப்ரெஸ்கோ என்ற இத்தாலிய சொல்லின் பொருள் "புதுமை" என்பதாகும்.
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) 1, 4, 5 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
29. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் "தமிழன்னை விருது" பெற்றவர் யார் ?
A) சாலினி இளந்திரையன்
B) அப்துல் ரகுமான்
C) சாலை இளந்திரையன்
D) அரூப் சிவராம்
30. சரியான இணையை கண்டறிக ?
A) Typhoid - குடற்காய்ச்சல்
B) Subsidy - மானியம்
C) Myth - வன்மம்
D) Carrom - நாலாங்குழி ஆட்டம்
31. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
A) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
B) குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவன்
C) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
D) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
32. பொருத்துக
1. விரியன் - அ) தண்டை
2. திருமுருகு - ஆ) காலாழி
3. நாங்கூழ்புழு - இ ) சிலம்பு
4. குண்டலப்பூச்சி - ஈ) பாடகம்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ அ ஈ ஆ
C. ஈ அ ஆ இ
C. ஆ அ ஈ இ
33. பசுவய்யா தொடர்பான தவறான கூற்றைக் காண்க.
A. இயற்பெயர் - சுந்தர ராமசாமி
B. இயற்றிய சிறுகதை - ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள்
C. இயற்றிய புதினம் - ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.
D. இவர் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த நூல்கள் - தேரோட்டியின் மகள்.
34. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ்வடிவில் தந்தவர் யார் ?
A) ஜி.யு.போப்
B) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
C) பாரதிதாசன்
D) வீரமாமுனிவர்
35. கீழ்க்காணும் குறிப்புடன் சரியாகப் பொருந்தும் தமிழ்ச்சான்றோர் யார் என தேர்வு செய்க?
1. இயற்பெயர் - சிவராமலிங்கம்
2. பிறந்த இடம் - இலங்கை
3. புனைப்பெயர்கள் - பானு சந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்
4. இயற்றிய சிறுகதை - லங்காபுரி ராஜா
5. இயற்றிய நாடகம் - நக்ஷ்த்திரவாசி
6. இயற்றிய கட்டுரை - வெயிலும் நிழலும்
A) தி.ஜானகிராமன்
B) பிரமிள்
C) கல்யாண்ஜி
D) ஈரோடு தமிழன்பன்
36. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது ?
A) குண்டலகேசி
B) அகத்தியம்
C) தொல்காப்பியம்
D) நீலகேசி
37. பாரதிதாசன் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.
A) வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி 1937-ல் புரட்சிக்கவி என்னும் காவியத்தை எழுதினார்.
B) இவரின் காப்பியங்கள் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம்.
C) இவரின் "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக உள்ளது.
D) இவரின் பிசிராந்தையார் நாடகத்துக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
38. குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையை சித்தர்கள் எந்த சொல்லின் மூலம் குழூஉக் குறியாக உணர்த்தினர் ?
A) யோக சித்தம்
B) ஞானம்
C) முக்திப்பால்
D) மாங்காய்ப் பால்
39. காவடிச் சிந்தின் தந்தை யார் ?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) அருணகிரிநாதர்
D) அண்ணாமலையார்
40. இவற்றில் எந்த வரியை திருமூலர் எழுதவில்லை ?
A) உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
B) உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
C) சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
D) ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை.
41. ஒப்புரவு என்பதன் பொருள்?
A) அடக்கமுடையது
B) ஊருக்கு உதவுவது
C) செல்வமுடையது
D) பண்புடையது
42. தகப்பன்கொடி என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர் யார் ?
A) சு.வெங்கடேசன்
B) அழகிய பெரியவன்
C) தேவதேவன்
D) அரூப் சிவராம்
43. பாயிரத்திற்கரிய பெயர்களில் பொருந்தாதது எது ?
A) புறவுரை
B) தந்துரை
C) வாயுரை
D) நூன்முகம்
44. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) வட ஆரி நாடு - திருமலை
B) தென் ஆரி நாடு - குற்றாலம்
C) இடங்கணி என்பது - கிணறு
D) ஆரளி என்பதன் பொருள் - மொய்க்கின்ற வண்டு
45. ஆடுகம் விரைந்தே என்ற தலைப்பில் அமைந்த ஐங்குறுநூறு பாடலின் திணை ?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
46. சீயகங்கன் என்னும் சிற்றரசனின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்ட நூல் எது ?
A) யேசு காவியம்
B) புறத்திரட்டு
C) நன்னூல்
D) வீரசோழியம்
47. பழந்தமிழகம் பற்றிய செய்திகளில் புறநானூற்றில் மூலம் அறியப்படாதது எது ?
A) மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு மற்றும் கல்விப் பெருமை.
B) புலவர்களின் பெருமிதம், செய்யுள் இயற்றும் திறம், மன்னர்களுக்கு அறிவு புகட்டியமை.
C) தலைவன், தலைவியின் ஊடல் மற்றும் இல்லற மாண்பு மற்றும் அக ஒழுக்கம்
D) மக்களின் நாகரிகம் மற்றும் பண்பாடு.
48. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு - இக்குறளின்படி உவமையோடு பொருந்தாத பொருளைக் காண்க. ?
A) அன்பு - தாய்
B) அருள் - குழந்தை
C) மருள் - செவிலி
D) பொருள் - வளர்ப்புத் தாய்
49. பொருத்துக
1. மேதி - அ) மான்
2. கேழல் - ஆ) எருமை
3. எண்கு - இ) கரடி
4. மரை - ஈ) பன்றி
1. 2. 3. 4.
A. ஆ ஈ இ அ
B. ஈ இ அ ஆ
C. ஆ ஈ அ இ
D. இ ஈ ஆ அ
50. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க - குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
A) பாதுகாப்பு
B) வேண்டாத வேலை
C) பயனற்ற செயல்
D) கருமி
51. சந்த மென்மணிக் கரத்தினால் சிரமுகம் தடவி - இத்தொடரில் சந்தம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க ?
A) சந்தனம்
B) இசை
C) பாட்டு
D) அழகு
52. தானத்தால் போகம், தவத்தால் சுகம் சுகமா
ஞானத்தால் வீடாகும் நாட்டு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A) முதுமொழிக் காஞ்சி
B) நாலடியார்
C) சிறுபஞ்ச மூலம்
D) பழமொழி நானூறு
53. பொருத்துக
1. இயற்கை ஓவியம் - அ) திருக்குறள்
2. இயற்கை இன்பக்கலம் - ஆ) பத்துப்பாட்டு
3. இயற்கை வாழ்வில்லம் - இ) கலித்தொகை
4. இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - ஈ) சிலப்பதிகாரம்
1. 2. 3. 4.
A. அ ஆ இ ஈ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ அ ஈ
D. அ இ ஈ ஆ
54. நான்மணிக் கடிகை தொடர்பான சரியற்ற இணையைக் காண்க.
A) இந்நூலில் கல்வியின் பயன், வீடு, கொலை, தீது எல்லாம் பொருளில் பிறந்துவிடும் என்பன போன்ற கருத்துகள் உள்ளன
B) இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்
C) ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் செய்யுளின் முதல் அடியும் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் எனத் தொடங்கும்
D) இரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுளையும் சேர்த்து மொத்தம் 104 வெண்பாக்கள் உள்ளன.
55. திரிகடுகம் தொடர்பான சரியற்ற தொடரைக் காண்க. ?
A) நன்மை தருபவை 66 பாடல்களிலும், தீமைபயப்பவை 34 பாடல்களிலும் கூறப்பட்டுள்ளன.
B) வருவாயில் காற்பகுதியை அறஞ்செய்தல், கொடுங்கோல் மன்னனால் மழை பெய்யாமை, குளித்தபின்பே உணவுண்ணுதல் முதலிய கருத்துகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
C) கணவன் மனைவு வாழ்க்கை பற்றி 35 செய்யுள்கள் உள்ளன.
D) கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 100 வெண்பாக்கள் உள்ளன.
56. ஔவையார் தொடர்பான சரியற்ற கூற்றினைக் காண்க.
A) அதியமானின் நண்பர்
B) சங்கப்பாடல் பாடிய ஔவையாரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் ஒருவரே
C) சங்ககால பெண் கவிஞர்களில் மிகுதியான பாடல்களைப் பாடியவர்
D) அறிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்
57. "இவை மூன்றும் தூஉயம் என்பார் தொழில்" என்ற திரிகடுக செய்யுள் அடியோடு தொடர்பில்லா ஒன்று எது ?
A) தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை
B) இல்லார்க் கொன் றீயும் உடைமை
C) எப்பெறினும் பால்பற்றிச் சொல்லாவிடுதல்
D) உண்பொழுது நீராடி உண்டல்
58. திரிகடுக செய்யுள்படி புதரில் விதைத்த விதை அல்லாத செய்கை எது ?
A) முறைசெய்யான் பெற்ற தலைமை
B) இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடு
C) நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவம்
D) நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு
59. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க
A) அறிவுண்டாம் = அறிவு + வுண்டாம்
B) செவ்விதழ் = செம்மை + இதழ்
C) உடற்குண்டாம் = உடல் + குண்டாம்
D) விலையில்லா = வீலை + இல்லா
60. வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) நம்மாழ்வார்
B) தாயுமானவர்
C) நாதமுனிகள்
D) பெரியாழ்வார்
61. ஆரணம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A) திருக்கோவையார்
B) திருப்பாவை
C) கம்பராமாயணம்
D) மகாபாரதம்
62. சரியான இணையை தேர்ந்தெடு ?
A) தோமறு மாக்கலை - சிலப்பதிகாரம்
B) நெடுந்தொகை - முல்லைப்பாட்டு
C) சிற்றதிகாரம் - நன்னூல்
D) கலைக்காப்பியம் - சிலப்பதிகாரம்
63. அறிஞர் க. கைலாசபதி சித்தர்களை எவ்வாறு அழைத்தார் ?
A) உருவமற்றவர்கள்
B) யோகிகள்
C) பிறப்பறுத்தவர்கள்
D) கிளர்ச்சியாளர்கள்
64. மாக்பெத்து என்ற ஆங்கில நாடகத்துடன் ஒப்பிடப்படும் நூல் எது ?
A) கம்பராமாயணம்
B) சிலப்பதிகாரம்
C) மணிமேகலை
D) திருக்குறள்
65. சிற்பி பாலசுப்பிரமணியம் தொடர்பான தவறான கூற்று எது ?
A) பிறந்த ஊர் - ஆத்துப்பொள்ளாட்சி, கோயம்புத்தூர் மாவட்டம். B) பெற்றோர் - பொன்னுசாமி - கண்டியம்மாள்
C) எழுதிய நூல்கள் - செயல்மணக்கும் தோள்கள், நெஞ்நோடு நெஞ்சம்
D) பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.
66. கம்பராமாயண நிகழ்வினை வரிசைப்படுத்துக.
1. சீதைக்கு நல்லமொழி சொல்லி இணங்குவிக்குமாறு அரக்கியரை ஏவி இராவணன் சென்றான்.
2. இராவணனை சீதை கடிந்துரைத்து ஒதுக்கினாள்.
3. இராமதூதன் யான் என அனுமன் சீதைமுன் தோன்றி அடையாள மொழிகளைக்கூறி கணையாழியைத் தந்தான்
4. அசோகவனத்தில் சீதையிடம் இராவணன் வந்து உரையாடினான்.
A) 1, 2, 3, 4
B) 4, 2, 1, 3
C) 2, 3, 4, 1
D) 4, 1, 2, 3
67. கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் என்று பாடியவர் யார் ?
A) வாணிதாசன்
B) சுரதா
C) முடியரசன்
D) திருவள்ளுவர்
68. சரியாண இணையை கண்டறிக.
A) தடந்தோள் - உவமைத் தொகை
B) தெண்டிரை - வினைத் தொகை
C) இப்பிறப்பு - ஏழாம் வேற்றுமைத் தொகை
D) உம்பி - உருவகம்
69. கூவா முன்னம் இளையோன் குறுகுநீ
ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்- இவ்வடியில் இளையோன் என்பது யாரைக் குறிக்கும் ?
A) இலக்குவன்
B) பரதன்
C) சத்துருக்கன்
D) குகன்
70. பொருத்துக
1. சாயாவனம் - அ) அப்துல் ரகுமான்
2. பால் வீதி - ஆ) மு.மேத்தா
3. கண்ணீர் பூக்கள் - இ) நா. காமராசன்
4. கருப்பு மலர்கள் - ஈ) சா. கந்தசாமி
1. 2. 3. 4.
A. ஈ அ ஆ இ
B. இ ஈ அ ஆ
C. ஆ இ ஈ அ
D. அ இ ஈ ஆ
71. சிறுகதையின் வள்ளுவர் என அழைக்கப்படுபவர் யார் ?
A) புதுமைப்பித்தன்
B) வ.வே.சு ஐயர்
C) கு.ப.ராஜ கோபாலன்
D) மௌனி
72. பொருந்தாத இணையைக் காண்க
A) உருவகக் கவிஞர் - நா. காமராசன்
B) உவமைக் கவிஞர் - சுரதா
C) படிமக் கவிஞர் - மு. மேத்தா
D) கரிசல் இலக்கியத் தந்தை - வைரமுத்து
73. பொருத்துக
I. ஆனந்தரங்கர் கோவை - அ) அறிமதி தென்னகன்
II. ஆனந்தரங்கர் பிள்ளைத் தமிழ் - ஆ) சீனிவாசக்கவி
III. ஆனந்தரங்கர் விஜயசம்பு - இ) தியாகராச தேசிகர்
IV. ஆனந்தரங்கர் ராட்சந்தமு - ஈ) கஸ்தூரிரங்கக் கவி
I. II. III. IV.
A. ஆ இ ஈ அ
B. இ அ ஆ ஈ
C. ஆ இ அ ஈ
D. அ இ ஈ ஆ
74. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும் எனத் தொடங்கும் செய்யுளின் மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்தி எது ?
A) கரிகாலச் சோழன் கல்லணையை கட்டினான்.
B) கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பு
C) கோப்பெரும் பேகன் கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கினான்.
D) அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கினான்.
75. கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்ற செய்யுளில் இடம்பெற்றுள்ள "மா" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கூறுக
A) பெரிய
B) ஒரு வகை மரம்
C) விலங்கு
D) கலைமகள்
76. எட்டுத்தொகை நூல்களில் மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள் எவை ?
A) புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல்
B) பரிபாடல், ஐங்குநூறு, கலித்தொகை, அகநானூறு
C) நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
D) புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை
77. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) காவுந்தியடிகள் – அறச் செல்வி
B) கண்ணகி - வீரச் செல்வி
C) மாதவி - அன்புச் செல்வி
D) மணிமேகலை - தவச் செல்வி
78. எதிர்ச்சொல் தருக - ஏகுவீர்
A) வருவீர்
B) ஓடுவீர்
C) பாடுவீர்
D) நாடுவீர்
79. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மையின் நேர்ப் பொருளை கூறுக ?
A) அரசியல் செய்வோர் அறவழியில் இருந்து தவறக் கூடாது. B) அரசியலை பிழைப்பாக கருதாமல் அறத்தின் வழி நிற்க வேண்டும்.
C) அரசியல் நெறியினின்றும் வழுவியவர்க்கு அறக்கடவுளே தண்டணை தரும்
D) அரசியல் அதர்மத்தின் திறவுகோல்
80. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A) நாணம்
B) அறிவு
C) நிறை
D) ஓர்ப்பு
81. கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகம் எது ?
A) இலவகுசா
B) பவளக்கொடி
C) சிறுதொண்டர்
D) நந்தனார் சரித்திரம்
87. சரியான கூற்று எது?
1. முதன் முதலில் இந்திர விழா எடுத்தவர் - தொடிதோட் செம்பியன்
2. அமிழ்தில் சிறந்த தமிழினும் மடந்தை என்ற தொடர் மணிமேகலையைக் குறிக்கும்.
3. மணிமேகலை பூம்புகாரில் பிறந்து காஞ்சிபுரத்தில் இறந்தாள்.
4. ஆதிரையின் கணவன் பெயர் சீவகன்
A) 1, 2 மட்டும் சரி
B) 1, 4 மட்டும் சரி
C) 1,2, 3 மட்டும் சரி
D) 2, 3, 4 மட்டும் சரி
83. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A) அகநானூறு
B) புறநானூறு
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
84. பொருத்துக
1. இந்திரவிழவூரெடுத்த காதை - அ) குறிஞ்சி
2. கானல் வரி - ஆ) முல்லை
3. வேட்டுவ வரி - இ) மருதம்
4. ஆய்ச்சியர் குரவை - ஈ) நெய்தல்
5. குன்றக் குரவை - உ) பாலை
1. 2. 3. 4. 5.
A. அ ஆ இ உ ஈ
B. உ அ ஆ ஈ இ
C. ஆ அ உ இ ஈ
D. இ ஈ உ ஆ அ
85. "உடோப்பியா என்ற இலட்சிய நாட்டை மேனாட்டார் கற்பனை செய்தமை போன்றதொரு தமிழ் முயற்சி” என எந்த நூலில் இடம்பெற்றுள்ள நகர வருணனையைப் பற்றி தெ.பொ.மீ அவர்கள் பாராட்டுகிறார் ?
A) சிலப்பதிகாரம்
B) சூளாமணி
C) சீவக சிந்தாமணி
D) குண்டலகேசி
86. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வடநாட்டு வேந்தன் யார் ?
A) சதகர்ணிகள்
B) கயவாகு
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை.
87. எந்த வழுக்கள் வழுவமைதியாக எற்றுக்கொள்ளப்படும்?
A) திணை வழு, கால வழு, இட வழு
B) கால வழு, பால் வழு, இட வழு
C) பால்வழு, இட வழு, திணை வழு
D) திணை வழு, பால் வழு, கால வழு
88. ஜன்னல் என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது ?
A) சமஸ்கிருதம்
B) போர்த்துகீசியம்
C) அரபு
D) தெலுங்கு
89. நபிகள் நாயகத்தின்திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார் ?
A) உமறுப்புலவர்
B) பனு அகுமது மரைக்காயர்
C) குணங்குடி மஸ்தான்
D) ஆப்பிரகாம் பண்டிதர்
90. சந்திப்பிழை நீக்கிய தொடரைக் காண்க.
A) பாரியைக் கண்டான்
B) எனக்கு கொடு
C) தை பொங்கல்
D) தேட சென்றாள்
91. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க
A) பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
B) நான் உண்ட பழங்கள் அவை அன்று
C) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தார் D) செடியில் பூ பூத்தன
92. தலபுராணங்கள் பாடும் மரபை துவக்கி வைத்தவர் யார் ?
A) திருநாவுக்கரசர்
B) மீனாட்சி சுந்தரனார்
C) திருஞான சம்பந்தர்
D) உமாபதி சிவம்
93. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) செங்கமலமும் ஒரு சோப்பும் - பசுவய்யா
B) ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்
C) அனுமதி - சுஜாதா
D) விழிப்பு - வண்ணநிலவன்
94. உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலை எழுதியவர் யார் ?
A) தால்சுதாய் B) ரசூல் கம்சதேவ்
C) ஜேன் ஆஸ்டின் D) அநுத்தமா
95. பொருத்துக
1. இந்தனம் - அ) பகைவர்களே
2. திருந்தலீர் - ஆ) முடிவுற்றது
3. அனந்தம் - இ) விறகு
4. செயமாது - ஈ) வெற்றித் திருமகள்
1. 2. 3. 4.
A. இ அ ஆ ஈ
B. இ அ ஆ ஈ
C. ஆ அ ஈ இ
D. ஆ இ அ ஈ
96. ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தருக
கா தூ நூ
A. யானை சுத்தம் காத்தல்
B. புகழ் அயலார் நஞ்சு
C. தீங்கு அண்மை யானை
D. காத்தல் சுத்தம் யானை
97. பொருத்துக
1. மு.அருணாசலம் - அ) இருசொல் அலங்காரம்
2. கருணானந்த சுவாமிகள் - ஆ) காற்றிலே மிதந்த கவிதை
3. தாண்டவராய முதலியார் - இ) பவளக்கொடி மாலை
4. அருணாசல முதலியார் - ஈ) கதாமஞ்சரி
1. 2. 3. 4.
A. இ அ ஆ ஈ
B. இ அ ஆ ஈ
C. ஆ அ ஈ இ
D. ஆ இ அ ஈ
98. பொருத்துக
1. நொ - அ) அரசன்
2. கோ - ஆ) குபேரன்
3. சு - இ) துன்பம்
4. சீ - ஈ) நன்மை
5. த - உ) கலைமகள்
1. 2. 3. 4. 5.
A. அ ஆ இ உ ஈ
B. ஈ இ உ ஆ அ
C. ஆ அ உ இ ஈ
D. இ அ ஈ உ ஆ
99. தவறான கூற்றினை கண்டறிக.
A) உரிச்சொல் பெயருடனும் வினையுடனும் சேர்ந்து பொருள்தரும்
B) உரிச்சொல் தனியாக நின்று பொருள் தராது
C) இடைச்சொல் தனியாக செயல்படாமல் பெயர்ச்சொல்லுடன் வினைச்சொல்லுடன் சேர்ந்து வரும்
D) இடைச் சொல், இணைச் சொல்லாகவும், அசையாகவும் வேற்றுமை உருபாகவும் உவம உருபுடனும் இணைந்து வராது.
100. இலக்கணக் குறிப்பு தருக - திருக்குறள்.
A) அடையடுத்த காரியவாகுபெயர்
B) காரியவாகுபெயர்
C) அடையடுத்த கருவியாகுபெயர்
D) இவற்றில் எதுவுமில்லை