29 - TNPSC GROUP II & IV - GENARAL TAMIL - Eligibility cum Scoring Test - MODEL QUESTION PAPER 29 WITH ANSWER KEY FREE DOWNLOAD - Full Test -5 (2022 New Syllabus) - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 29 ( முழுத்தேர்வு-5) விடையுடன் இலவச பதிவிறக்கம் - முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள்-5

 

TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 29 

WITH ANSWER KEY 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 29

விடையுடன் இலவச பதிவிறக்கம்

முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-5

Full Syllabus - Full Test -5




2022 புதிய பாடத்திட்டம்

இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நான்கு மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று 29வது வினாத்தாளாக 5வது முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

MODEL QUESTION PAPER 29 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 




















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)














மாதிரி வினாத்தாள் -29  👇

மாதிரி வினாத்தாள்- 29 (100 வினாக்கள்)


1. மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்படுவது யார் காலத்திலிருந்து தொடங்கியது ?

A) கரிகால சோழன்

B) முதலாம் இராசராசன்

C) முதலாம் பராந்தக சோழன்

D) முதலாம் இராசேந்திரன்



2. நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல்?

A) புறநானூறு

B) சிலப்பதிகாரம்

C) தொல்காப்பியம்

D) பதிற்றுப்பத்து



3. பொருத்துக

1. பாசவர் - அ) எண்ணெய் விற்போர்

2. ஓசுநர் - ஆ) சிற்பி

3. மண்ணுள் வினைஞர் - இ ) வெற்றிலை விற்போர்

4. மண்ணீட்டாளர் - ஈ) ஓவியர்

 

1.          

2.         

3.         

4.         

A.     

B.     

C.     

D.     











4. “எனது போராட்டம்” என்பது யாருடைய தன்வரலாற்று நூல் ?

A) திரு.வி.க

B) பாரதிதாசன்

C) டாக்டர் மு.வரதராசனார்

D) ம.பொ.சிவஞானம்



5. உதவி செய்தலை “உதவியாண்மை" என்று குறிப்பிட்டவர் யார் ?

A) திருவள்ளுவர்

B) திவாகர முனிவர்

C) ஈழத்து பூதன் தேவனார்

D) பவணந்தி முனிவர்



6. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடியான திருமுழுக்கு யோவானை வீரமாமுனிவர் தம் காப்பியத்தில் எவ்வாறு குறிப்பிடுகிறார் ?

A) சூசையப்பர்

B) அருளாளன்

C) புனித அந்தோணியார்

D) கருணையன்



7. “உரைப்பாட்டு மடை" என்னும் தமிழ்நடை பயின்று வரும் நூல் எது ?

A) கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) யசோதர காவியம்



8. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க ?

A) அதைச் செய்தது நான் அன்று

B) பானையை உடைத்தது கண்ணன் அல்ல

C) பகைவர் நீவீர் அல்லீர்

D) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.



9. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் யார் ?

A) சுந்தரர் B) அதிபத்தர்

C) ஏனாதிநாயனார் D) திருமூலர்



10. தவறான கூற்று எது ?

A) அந்த இந்த என்னும் சுட்டுத் திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்

B) எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்

C) இரண்டாம் வேற்றுமைத் தொகையை அடுத்து வல்லினம் மிகும்

D) நான்காம் வேற்றுமை விரியை அடுத்து வல்லினம் மிகும்



11. I . திருச்சியை ஆண்ட சாந்தாசாகிப்பை சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருதுமொழியைக் கற்றுக் கொண்டவர் யார் ?

II. சாந்தா சாகிப் இவருக்கு வழங்கிய பட்டம் யாது ?

A) வேலுநாச்சியார், வீரமங்கை

B) வீரமாமுனிவர், இஸ்மத் சன்னியாசி

C) மருது சகோதரர்கள், வீரமருதிருவர்

D) தீரன் சின்னமலை, சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை



12. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) தந்தை பெரியார்

B) அண்ணல் அம்பேத்கர்

C) அயோத்திதாச பண்டிதர்

D) இரட்டைமலை சீனிவாசன்



13. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை முதன்முதலில் இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்?

A) எம்.எஸ்.விஸ்வநாதன்

B) ஜவஹர்லால் நேரு

C) பண்டித ரமாபாய்

D) முத்துலட்சுமி ரெட்டி







14. வழங்குவதற்கு பொருள் உள்ளதா ? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்று புகழ்ந்தவர் யார் ?

A) ஏணிச்சேரி முடமோசியார்

B) குடவாயிற் நல்வேட்டுவனார்

C) கழைதின் யானையார்

D) நக்கீரர்



15. “இல்லோர் ஒக்கல் தலைவன்" என்றும் “பசிப்பிணி மருத்துவன்" என்றும் போற்றப்பட்டவர் யார் ?

A) வள்ளல்கள்

B) திருவாலவாய் சொக்கநாதர்

C) திருவரங்கத்துறையும் திருமால்

D) நன்னன் செய் நன்னன்



16. கீழ்க்காணும் குறிப்புடன் சரியாகப் பொருந்தும் தமிழ்ச்சான்றோர் யார் என தேர்வு செய்க?

1. முதற்குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக இருந்தார்.

2. இவரை பலபட்டடை சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்

3. இவர் இயற்றிய நூலை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.

4. இவர் தீபங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்

A) கம்பர்

B) செயங்கொண்டார்

C) புகழேந்திப் புலவர்

D) சீத்தலைச் சாத்தனார்



17. நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) ஜெயகாந்தன்

C) கல்யாண்ஜி

D) நாகூர் ரூமி



18. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்று குறிப்பிடும் நூல் ?

A) கம்பராமாயணம்

B) சிலப்பதிகாரம்

C) பட்டினப்பாலை

D) புறநானூறு



19. இராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்கள் தொடர்பான பொருந்தாத இணையைக் கண்டறிக?

A) உப்பள தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பற்றியது - கரிப்பு மணிகள்

B) நீலகிரியில் வாழும் படுகர் இனமக்களின் வாழ்க்கையைப் பற்றியது - குறிஞ்சித் தேன்

C) கடலோர மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றியது - சேற்றில் மனிதர்கள்

D) வேளாண் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியது - வேருக்கு நீர்



20. இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர் யார் ?

A) தந்தை பெரியார்

B) பேரறிஞர் அண்ணா

C) பாரதிதாசன்

D) கவிக்கோ அப்துல் ரகுமான்



21. பிரித்து எழுதுக - போலுடன்றன?

A) போல் + உடன்றன

B) போலும் + உறன்டன

C) போலுடன் + உண்டன

D) போலுடன் + றன



22. முக்குழல் என்ற தொகைச் சொல்லுக்கு பொருந்தாத சொல் எது

A) கொன்றை

B) ஆம்பல்

C) மூங்கில்

D) மொளவல்



23. ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது ?

A) தீவக அணி

B) சொல்பின்வரு நிலையணி

C) பொருள்பின்வரு நிலையணி

D) பிறிதுமொழிதல் அணி



24. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Renaissance

A) மழைக்காலம்

B) மறுமலர்ச்சி

C) புதுமை

D) இவற்றில் எதுவுமில்லை



25. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Revivalism

A) மீட்டுருவாக்கம்

B) அகழாய்வு பொருட்கள்

C) புன்செய் நிலம்

D) மறுமலர்ச்சி



26. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் ?

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பல்லவர் காலம்

D) நாயக்கர் காலம்



27. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் ?

A) நாயக்கர்கள்

B) சம்புவராயர்கள்

C) பல்லவர்கள்

D) சோழர்கள்



28. மைவனம் என்பது ?

A) காடு

B) மலைநெல்

C) சண்பக தோட்டம்

D) இவற்றில் எதுவுமில்லை



29. முருகு என்ற சொல்லின் பொருள் அல்லாத சொல் எது ?

A) தேன்

B) அழகு

C) தின்பண்டம்

D) மணம்



30. பகுத்தறிவுப் பிரசாரத்திற்கும், சீர்திருத்த கருத்துகளுக்கும் தந்தை பெரியாரின் முன்னோடியாக விளங்கியவர் யார் ?

A) பண்டிதமணி அயோத்திதாசர்

B) தங்கவயல் அப்பாதுரையார்

C) A மற்றும் B

D) மாணிக்கவேல் நாயக்கர்



31. “கோத்தல்" என்ற பெயர்ச்சொல்லின் வேர்ச்சொல் எது ?

A) கோ

B) கோவை

C) கோர்

D) கோர்


32. பொருத்துக

1. தளைகள் - அ ) நான்கு வகைப்படும்

2. அடி - ஆ ) ஐந்து வகைப்படும்

3. தொடை - இ ) ஏழு வகைப்படும்

4. பா - ஈ ) எட்டு வகைப்படும்

 

1.          

2.         

3.         

4.         

A.     

B.     

C.     

D.     






33. இராவண காவியத்தின் நான்காவது காண்டம் எது ?

A) தமிழகக் காண்டம்

B) இலங்கைக் காண்டம்

C) பழிபுரிக் காண்டம்

D) போர்க்காண்டம்



34. மெல்லினத்தில் மிகும் எழுத்துகள் எவை ?

A) க, ச, த, ப

B) ங, ஞ, ந, ம

C) வ, ய, ல, ள

D) ங, ஞ, ந, ம, ண



35. மலைக்குகை என்று பொருள் தரும் சொல்லைத் தேர்க ?

A) பிலம்

B) முழை

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை


36. பொருந்தாத மரபுத் தொடரைக் காண்க?

A) ஆயிரங்காலத்து பயிர் - நீண்டகாலமாக இருப்பது

B) கல்லில் நார் உரித்தல் - இயலாத செயல்

C) கம்பி நீட்டுதல் - நீண்ட தூரம் இழுத்துச் செல்லுதல்

D) கண்ணை மூடிக்கொண்டு - ஆராய்ந்து பாராமல்



37. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார் ?

A) மீரா

B) முகம்மது மீரான்

C) கவிஞர் கண்ணதாசன்

D) பாரதிதாசன்



38. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்தியவர் யார் ?

A) பேரறிஞர் அண்ணா

B) டாக்டர் எம்.ஜி.ஆர்

C) செல்வி. ஜெ. ஜெயலலிதா

D) இவர்களுல் எவருமிலர்



39. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என்று கூறியவர் யார் ?

A) பசும்பொன் முத்துராமலிங்கர்

B) பேரறிஞர் அண்ணா

C) அண்ணல் அம்பேத்கர்

D) தந்தை பெரியார்



40. திராவிட மகாஜன சங்கத்தை 1892-ல் ஏற்படுத்தியவர் யார் ?

A) அயோத்திதாசர்

B) இரட்டைமலை சீனிவாசன்

C) பேரறிஞர் அண்ணா

D) நடேச முதலியார்



41. கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது - இச்செய்யுளில் பயின்று வந்துள்ள அணி யாது

A) பிறிதுமொழிதல் அணி

B) உவமை அணி

C) ஏகதேச உருவக அணி

D) இயல்பு நவிற்சி அணி



42. கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது ?

A) உயிர் அமுதாய்

B) அன்னை பூமி

C) நிகழ்கால நட்சத்திரங்கள்

D) அன்பின் சிதறல்





43. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க.

A) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினான்

B) மாணவன் தனது கையால் பரிசு பெற்றுக்கொண்டார்

C) மாடுகள் தனது தலையை ஆட்டின

D) மாணவர்கள் தனது தலையை ஆட்டினார்கள்.



44. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார் ?

A) காவற்பெண்டு

B) மாறோக்கத்து நப்பசலையார்

C) ஒக்கூர் மாசாத்தியார்

D) மாதிரை



45. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடில்லாத வகையில், தமிழனத்தை ஒன்றுபடுத்த எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டன்றால் அது சிலப்பதிகாhத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன் என்று கூறியவர்?

A) சிலம்பொலியார்

B) சிலம்புச் செல்வர்

C) திருக்குறளார்

D) மொழி ஞாயிறு



46. யாப்பதிகாரம், தொடையதிகாரம் முதலான நூல்களை எழுதியவர் யார் ?

A) புலவர் குழந்தை

B) பவணந்தி முனிவர்

C) கலைஞர் மு.கருணாநிதி

D) பிங்கல முனிவர்



47. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப்
பணிபுரிந்தவர் யார் ?

A) பாரதியார்

B) தி. ஜானகிராமன்

C) திரு.வி.க

D) கு.ப.ராஜ கோபாலன்



48. கோபரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் ?

A) முதலாம் இராசராசன்

B) இரண்டாம் இராசராசன்

C) கண்டராதித்தர்

D) முதலாம் பராந்தக சோழன்


49. பொருத்துக

A. என் கதை - 1) மு.வரதராசனார்

B. நாற்காலிக்காரர் - 2) நாமக்கல் கவிஞர்

C. எண்ணங்கள் - 3) ந.முத்துசாமி

D. அறமும் அரசியலும் - 4) எம்.எஸ். உதயமூர்த்தி

 

a.      

b.      

c.      

d.      

A.     

2

4

1

3

B.     

2

3

4

1

C.     

3

1

4

2

D.     

2

3

1

4



50. அடிகள் நீரே அருளுக என்றவர் யார் ?

A) இளங்கோவடிகள்

B) சீத்தலைச் சாத்தனார்

C) கம்பர்

D) ஒட்டக்கூத்தர்



51. சொல்லுடன் பொருந்தாத பொருளைக் கண்டறிக ?

A) சேக்கை - படுக்கை

B) அசும்பு - அழிவு

C) துணர் - மலர்கள்

D) படலை - மாலை



52. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார் ?

A) கபிலர்

B) குமரகுருபரர்

C) ஔவையார்

D) முன்றுறையரையனார்



53. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்ற இலக்கணக் குறிப்புக்கு பொருந்தி வரும் சொல் யாது ?

A) மெய்முறை

B) கைமுறை

C) மணமலர்

D) செய்தொழில்


54. பொருத்துக

1. செப்பலோசை - அ ) வஞ்சிப்பா

2. அகவலோசை - ஆ ) கலிப்பா

3. துள்ளலோசை - இ ) ஆசிரியப்பா

4. தூங்கலோசை - ஈ ) வெண்பா

 

1.          

2.         

3.         

4.         

A.     

B.     

C.     

D.     


55. பாண்டியர் கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ள இடம் எது

A) திருமயம்

B) குன்றக்குடி

C) திருப்பரங்குன்றம்

D) இவை அனைத்தும்



56. பொருந்தாத இணையை கண்டறிக

A) இயல் - உயிர் முதல் மெய்யீறு

B) புதிது - மெய்ம்முதல் உயிரீறு

C) ஆணி - உயிர் முதல் உயிரீறு

D) வரம் - உயிர் முதல் மெய்யீறு


57. சரியான இணையைக் கண்டறிக ?

A. இடி குரல் - வினைத் தொகை

B. இன்னுயிர் - அடுக்குத் தொடர்

C. பிடி பசி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

D. தேமாங்கணி - பண்புத் தொகை



58. இவற்றில் இசைநூல் எது ?

A) பஞ்ச பாரதீயம்

B) பஞ்ச மரபு

C) பெருங்குருகு

D) இவை அனைத்தும்



59. பொருத்துக

A. தஞ்சை பெரிய கோவில் - 1) இரண்டாம் குலோத்துங்க சோழன்

B. கங்கை கொண்ட சோழபுரம் - 2) இரண்டாம் இராசராசன்

C. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில் - 3) முதலாம் இராசேந்திரன்

D. திரிபுவன வீரேசுவரம் கோவில் - 4) முதலாம் இராசராசன்

 

a.      

b.      

c.      

d.      

A.     

4

3

2

1

B.     

2

1

3

4

C.     

2

1

4

3

D.     

2

3

1

4












60. மன்னர்குரிய கூத்து எது ?

A) வேத்தியல்

B) நிருத்தம்

C) பரதநாட்டியம்

D) குடக்கூத்து



61. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி

1. கஞ்சுகம் என்பது பழங்கால ஆடவர் மேற்சட்டை

2. ஐம்படைத்தாலி என்பது பழங்கால சிறுவர் கழுத்தணி

3. கடகம் என்பது பழங்கால பெண்கள் அணிகலன்

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி



62. இலம்பகம் என்ற உட்பிரிவைக் கொண்ட காப்பியம் எது ?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) குண்டலகேசி





63. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Tanning

A) தோல் பதனிடுதல்

B) தேயிலைத் தோட்டம்

C) உருக்குதல்

D) இவற்றில் எதுவுமில்லை.



64. நகைமுத்த வெண்குடையான் நாடு எது?

A) சேர நாடு

B) சோழ நாடு

C) பாண்டிய நாடு

D) பல்லவ நாடு



65. நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும் என்றவர் யார்

A) மகாத்மா காந்தி

B) நேதாஜி

C) பேரறிஞர் அண்ணா

D) திலகர்



66. பழந்தமிழர் கொண்டாடாத விழா எது?

A) தைத்திங்கள் நோன்பு

B) வேலன் வெறியாட்டு விழா

C) இளவேனில் விழா

D) முதுவேனில் விழா



67. உருவகம் அல்லாத சொல்லைக் காண்க ?

A) தேன்மொழி

B) பிறவிஇருள்

C) ஒளியமுது

D) வாழ்க்கைப்போர்



68. யசோதரன் என்னும் ------- நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுவது யசோதர காவியம்

A) சோழ

B) அவந்தி

C) இந்திர

D) மதுராபுரி



69. தந்தை பெரியார் நடத்திய இதழ் எது ?

A) குடியரசு

B) விடுதலை

C) உண்மை

D) இவை அனைத்தும்


70. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளை காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்று புகழ்ந்தவர்?

A) கி.வா.ஜெகந்நாதன்

B) வல்லிக் கண்ணன்

C) கு.ப.ராஜ கோபாலன்

D) சாண்டில்யன்



71. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) நேர் நேர் - தேமாங்கனி

B) நேர் நிரை - கூவிளம்

C) நிரை நேர் நேர் - புளிமாங்காய்

D) நேர் நேர் நேர் - தேமாங்காய்



72. தகடூர் தற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) தருமபுரி

B) கிருஷ்ணகிரி

C) சேலம்

D) திருச்சி



73. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து



74. சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) காரைக்காலம்மையார்

B) ஆண்டாள்

C) அணிலாh முன்றிலார்

D) ஒக்கூர் மாசாத்தியார்



75. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது ?

A) திண்டுக்கல்

B) சிவகாசி

C) மதுரை

D) இவற்றில் எதுவுமில்லை



76. இவற்றில் எது சேரநாட்டின் துறைமுகம் இல்லை ?

A) தொண்டி

B) முசிறி

C) கொற்கை

D) காந்தளூர்

77. தவறான இணையைக் காண்க ?

A) மட்பாண்டம் - திரிதல் விகாரம்

B) மணிமுடி - இயல்பு புணர்ச்சி

C) மரவேர் - கெடுதல் விகாரம்

D) இடிமுழக்கம் - தோன்றல் விகாரம்



78. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை
இயற்றியவர் ?

A) குமரகுருபரர்

B) தாயுமானவர்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) திருத்தணிச் சரவணப் பெருமாள்



79. மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பாவை நோன்பு

B) பள்ளியெழுச்சி

C) மார்கழி நீராடல்

D) திருமால் நோன்பு



80. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்?

A) புலவர் குழந்தை

B) மணக்குடவர்

C) நச்சினார்க்கினியர்

D) தருமர்



81. வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி திரு.பின்ஹே அவர்கள் யாருடைய பிரசங்கத்தையும் யாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

A) திரு.வி.க - பாரதிதாசன்

B) வ.உ.சி - பாரதியார்

C) பேரறிஞர் அண்ணா - பாரதிதாசன்

D) ஆறுமுக நாவலர் - பாரதியார்



82. தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A) திரு.வி.க

B) முத்துராமலிங்கர்

C) திலகர்

D) நேதாஜி



83. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் ?

A) ஏலாதி

B) திரிகடுகம்

C) திருமந்திரம்

D) சிறுபஞ்ச மூலம்



84. 2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற நூல் எது

A) சூடிய பூ சூடற்க

B) மின்சாரப் பூ

C) அப்பாவின் சிநேகிதர்

D) ஒரு சிறு இசை



85. கோட்டையைக் காத்தல் என்பது

A) நொச்சித் திணை

B) கரந்தைத் திணை

C) காஞ்சித் திணை

D) வஞ்சித் திணை



86. வெறுக்கை என்ற சொல்லின் பொருள்?

A) பலாப் பழம்

B) செல்வம்

C) துன்பம்

D) வெறுப்பு



87. சிங்கவல்லி என்றழைக்கப்படும் மூலிகை எது

A) துளசி

B) தூதுவளை

C) கற்றாழை

D) கீழாநெல்லி



88. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன் - இக்குறளில் பயின்று வந்துள்ள தொடை வகையை கூறு

A) மோனைத் தொடை

B) எதுகைத் தொடை

C) முரண்தொடை

D) இவையனைத்தும்



89. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்

துள்நின்று டற்றும் பசி. - இக்குறளில் பயின்று வந்துள்ள மோனைத் தொடை யாது?

A) ஒரூஉ மோனை

B) பொழிப்பு மோனை

C) மேற்கதுவாய் மோனை

D) இணைமோனை



90. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று பாடியவர் யார் ?

A) திருமூலர்

B) அகத்தியர்

C) கடுவெளிச் சித்தர்

D) இவற்றில் எதுவுமில்லை



91. தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது ?

A) மாணிக்கவாசகரின் பாடல்கள்

B) தேவாரப் பாடல்கள்

C) ஆழ்வார் பாசுரங்கள்

D) தாயுமானவர் பாடல்கள்



92. லெபனான் நாட்டைச் சேர்ந்த கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து தீர்க்கதரிசி என்னும் நூலாகத் தந்தவர் யார் ?

A) கரந்தைக் கவியரசு

B) புவியரசு

C) கவிமணி

D) கவியரசு



93. தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார் ?

A) தாராபாரதி

B) வைரமுத்து

C) ஈரோடு தமிழன்பன்

D) கவிஞர் அறிவுமதி



94. செய்வினை தொடரை செயப்பாட்டு வினை தொடராக மாற்றுதல் தொடர்பான தவறான கூற்றினைக் காண்க.

A) எழுவாயைச் செயப்படுபொருளாக்குதல் வேண்டும்.

B) செயப்படுபொருளுடன் மன்றாம் வேற்றுமை உருபை சேர்த்தல் வேண்டும்.

C) எழுவாயுடன் படு, பட்டது என்னும் துணைவினை சேர்த்தல் வேண்டும்

D) செயப்படு பொருளில் உள்ள ஐ என்ற வேற்றுமை உருபை நீக்கி எழுவாயாக மாற்றுதல் வேண்டும்



95. வினைமுற்றுத் தொடரை பெயரெச்சத் தொடராக மாற்றுக - அப்பா சினம் கொண்டார்

A) சினம் கொண்டா அப்பா

B) சினம் கொண்ட அப்பா

C) அப்பா கொண்டாரா சினம்

D) கொள்வரோ சினம் அப்பா



96. தேவாரம் மூவரால் பாடப்பட்டது – வாக்கிய வகை அறிக

A) செய்வினை வாக்கியம்

B) செயப்பாட்டு வினை வாக்கியம்

C) தொடர் வாக்கியம்

D) எதிர்மறை வாக்கியம்




97. பொருத்துக

1. இடுகுறி பொதுப்பெயர் - அ) பனை

2. இடுகுறிச் சிறப்புப்பெயர் - ஆ) மரங்கொத்தி

3. காரணப் பொதுப்பெயர் - இ ) காடு

4. காரணச் சிறப்புப்பெயர் - ஈ) பறவை

 

1.          

2.         

3.         

4.         

A.     

B.     

C.     

D.     



98. கிழமைப் பொருளில் வரும் வேற்றுமை உருபு எது ?

A) ஆறாம் வேற்றுமை உருபு

B) ஐந்தாம் வேற்றுமை உருபு

C) நான்காம் வேற்றுமை உருபு

D) மூன்றாம் வேற்றுமை உருபு



99. பலர் முன்னே கூறுவதற்கு இடர்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கி தகுந்த சொற்களால் அப்பொருளைத் தருவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) மங்கலம்

B) இடக்கரடக்கல்

C) குழூஉக்குறி

D) மரூஉ



100. நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் மூன்றாம் வேற்றுமை உருபேற்கும்போது எவ்வாறு மாறும் ?

A) நின்னால்

B) உன்னால்

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை.

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post