30 - TNPSC GROUP II & IV - GENARAL TAMIL - Eligibility cum Scoring Test - MODEL QUESTION PAPER 30 WITH ANSWER KEY FREE DOWNLOAD - Full Test -6 (2022 New Syllabus) - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 30 ( முழுத்தேர்வு-6) விடையுடன் இலவச பதிவிறக்கம் - முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள்-6

 

TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 30 

WITH ANSWER KEY 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 30

விடையுடன் இலவச பதிவிறக்கம்

முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-6

Full Syllabus - Full Test -6


2022 புதிய பாடத்திட்டம்

இந்த வலைதளப் பக்கத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் அளித்துவரும் ஆதரவு மன மகிழ்வைத் தருகிறது. ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வின் பாடத்திட்டத்தில், (பகுதி அ, பகுதி ஆ மற்றும் பகுதி இ ) இடம் பெற்றுள்ள தலைப்புகள் அடிப்படையில் 18 மாதிரி வினாத்தாள்களும், வகுப்புகள் அடிப்படையில் 6 மாதிரி வினாத்தாள்களும் ஆக மொத்தம் இதுவரையில் 24 வினாத்தாள்கள் விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


இனிவரும் காலங்களில் முழு பாடத்திட்டத்தின்படி 6 முழுத் தேர்வு மாதிரிவினாத்தாள்கள் விடையுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐந்து மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று 30வது வினாத்தாளாக 6வது முழுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தேர்வர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

MODEL QUESTION PAPER 30 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாளை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)















மாதிரி வினாத்தாள் -30  👇

மாதிரி வினாத்தாள்- 30 (100 வினாக்கள்)


1. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் யார் ?

A) பெருஞ்சேரல் இரும்பொறை

B) மோசிகீரனார்

C) இளந்தத்தனார்

D) நக்கீரன்



2. மையோ ? மரகதமோ? மறிகடலோ? மழைமுகிலோ? ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் என்று புகழப்படுபவன் யார்?

A) சீவகன்

B) இராமன்

C) கோவலன்

D) நளன்



3. பொருத்துக

1. குட்டி இளவரசன் - அ) அ.கா.பெருமாள்

2. ஆசிரியன் டைரி - ஆ) உமா மகேஸ்வரி

3. கற்பாவை - இ ) வெ. ஸ்ரீராம்

4. நாட்டார் கலைகள் - ஈ) எம்.பி.அகிலா


 

1.         

2.        

3.        

4.       

A.    

B.    

C.    

D.   














4. “திருக்குறள் நீதி இலக்கியம்” நூலை இயற்றியவர் யார் ?

A) திருவள்ளுவர்

B) கபிலர்

C) க.த.திருநாவுக்கரசு

D) ஔவையார்



5. ஒரு விரலைக் காட்டி சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல் என்பது ?

A) வினா வழு

B) வினாவழா நிலை

C) மரபு வழு

D) கால வழு



6. சோழர்கால சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட கோவில் சீனாவில் எங்குள்ளது ?

A) அபுதலா

B) பெய்ஜிங்

C) செகந்திராபாத்

D) சூவன்சௌ



7. “இல்நுழை கதிர்" என்ற சொல்லின் மூலம் விளக்கப்படும் அறிவியல் கருத்து எது ?

A) அண்டத்தின் தோற்றம்

B) உயிர்களின் தோற்றம்

C) ஒளி விலகல்

D) அறுவை மருத்துவம்



8. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது ?

A) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.

B) பெருமாள் திருமொழியில் 108 பாடல்கள் உள்ளன.

C) பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார்

D) குலசேகராழ்வாரின் காலம் - எட்டாம் நூற்றாண்டு.





9. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது ?

A) குறிஞ்சிப் பாட்டு

B) மலைபடுகடாம்

C) முல்லைப் பாட்டு

D) பரிபாடல்



10. தவறான இணையை தேர்க ?

A) என் அம்மை வந்தாள் என மாட்டைப் பார்த்து கூறுவது - மரபு வழுவமைதி

B) வாடா ராசா, வாடா கண்ணா என்று மகளை அழைப்பது - பால் வழுவமைதி

C) மாறன் என்பான் தன்னைப் பற்றி “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்”
என கூறுவது - இட வழுவமைதி

D) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - கால வழுவமைதி



11. I . குலசேகர ஆழ்வார் “வித்துவக் கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்து பாடுகிறார்.

II. பூனையார் பால்சோற்றை கண்டதும் வருகிறார். இவ்விரு தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே

A) மரபு வழுவமைதி, பால் வழுவமைதி

B) இட வழுவமைதி, கால வழுவமைதி

C) திணை வழுவமைதி, பால் வழுவமைதி

D) மரபு வழுவமைதி, பால் வழுவமைதி



12. அஃறிணை எத்தனை பிரிவுகளை உடையது ?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து



13. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறாரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்?

A) மணவை முஸ்தபா

B) ச.தமிழ்ச் செல்வன்

C) ஸ்டீபன் ஹாக்கிங்

D) நீலமணி



14. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று பாடியவர் யார் ?

A) திருநாவுக்கரசர்

B) மாணிக்க வாசகர்

C) வள்ளலார்

D) கழைதின்யானையார்



15. பயன்கலை என்று குறிப்பிடப்படுவது ?

A) ஓவியக் கலை

B) மொழிபெயர்ப்பு

C) நாடகக் கலை

D) நாட்டியக் கலை



16. கீழ்க்காணும் குறிப்புடன் சரியாகப் பொருந்தும் தமிழ்ச்சான்றோர் யார் என தேர்வு செய்க?

1. 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதாணி என்று பாராட்டு பெற்றுள்ளார்.

2. கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரில் பிறந்தார்

3. பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.

4. சீறா புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.



A) தி.ஜானகிராமன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) கல்யாண்ஜி

D) கா.ப.செய்குதம்பிப் பாவலர்



17. வேதாரண்யப் புராணம், மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?

A) மயிலை முனிவர்

B) பரஞ்சோதி முனிவர்

C) வீரமாமுனிவர்

D) இவர்களில் எவருமிலர்.



18. குறிப்பு விடைகள் எத்தனை வகைப்படும் ?

A) எட்டு

B) ஆறு

C) ஐந்து

D) மூன்று



19. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்"என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?

A) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

B) வேத காலத்திற்கு முன்பே மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது

C) பக்தி இலக்கிய காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது,

D) சங்கம் மருவிய காலத்தில் மதுரையில் மொழி பெயர்ப்பு நூல்கள் இருந்தன.



20. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை
வரிசையாக நிறுத்தி, அவi ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப் படியே நிறுத்திக்
கொள்ளுதல் என்பது எவ்வகை பொருள்கோள் ?

A) முறை நிரல்நிறைப் பொருள்கோள்

B) தாப்பிசை பொருள்கோள்

C) எதிர்நிரல் நிறைப் பொருள்கோள்

D) கொண்டுகூட்டுப் பொருள்கோள்



21. பிரித்து எழுதுக - அருந்துணை ?

A) அருமை + துணை

B) அரும் + துணை

C) அருந் + துணை

D) அருந்து + உணை



22. இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப் போக்கன் கேட்டது ------- வினா. அதோ
அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது-------- விடை

A) ஐயவினா, வினா எதிர் வினாதல் விடை

B) அறிவினா, மறைவிடை

C) அறியா வினா, சுட்டு விடை

D) கொளல் வினா, இனமொழி விடை



23. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல் இத்தொடரில் கழிந்த பெரும் கேள்வியினான் யார் ? காதல்மிகு கேண்மையினான் யார்?

A) குசேலபாண்டியன் - இடைக்காடனார்

B) பாரி - கபிலர்

C) இறைவன் - தருமி

D) இரும்பொறை - மோசிகீரனார்.



24. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Underground drainage

A) பாதாள சாக்கடை

B) புதை சாக்கடை

C) அடிநில சாக்கடை

D) இவற்றில் எதுவுமில்லை



25. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Nanotechnology

A) நானோ தொழில்நுட்பம்

B) அதிநுண் தொழில்நுட்பம்

C) மிகுவண்தொழில்நுட்பம்

D) மீநுண் தொழில்நுட்பம்



26. கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே - என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ?

A) வெற்றி வேற்கை

B) நீதிநெறி விளக்கம்

C) உலகநீதி

D) ஆத்திச்சூடி



27. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் ?

A) கரகாட்டம்

B) தேவராட்டம்

C) ஒயிலாட்டம்

D) தேரையாட்டம்



28. மாதவி ஆடிய ஆடல் வகைகள் ?

A) 63

B) 11

C) 12

D) 64



29. காவடி என்ற சொல்லில் கா என்பதன் பொருள் யாது ?

A) சேவல்

B) பாரந்தாங்கும் கோல்

C) பால்

D) சோலை



30. தவறான இணையை கண்டறிக ?

A) Thesis - ஆய்வேடு

B) Intellectual - அறிவாளர்

C) Emblem - குறிப்பு பேழை

D) Symbolism - குறியீட்டியல்



31. “தேவதுந்துபி" என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது ?

A) உறுமி

B) உடுக்கை

C) மத்தளம்

D) பறை



32. பொருத்துக

1. கேள்வியினான் - அ) நட்பினன்

2. கேண்மையினான் - ஆ) பொறுத்தல்

3. போற்றார் - இ ) பகைவர்

4. நோன்றல் - ஈ ) நூல் வல்லான்

 

1.         

2.        

3.        

4.       

A.    

B.    

C.    

D.   















33. பெயரெச்சத் தொடரைக் காண்க?

A) ஓடிய அருணா

B) ஓடி வந்தாள்

C) அருணா ஓடாதே

D) அருணாவிற்காக ஓடினான்



34. மழைவேண்டி நிகழ்த்தப்படும் நிகழ்கலை கூத்து எது ?

A) அருச்சுனன் தபசு

B) அசுவமேதயாகம்

C) வருன நிருத்தம்

D) இவற்றில் எதுவுல்லை.



35. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று பாடியவர் ?

A) பாரதியார்

B) வால்ட் விட்மன்

C) ந.பிச்சமூர்த்தி

D) சாலினி இளந்திரையன்





36. நிகழ்வை வரிசைப் படுத்துக?

1. கபிலரின் நண்பரான இடைக்காடனார் பாண்டிய மன்னன் குலேச பாண்டியன் முன் கவிதையினை பாடினான்.

2. பாண்டிய மன்னன் புலவரை அவமதித்தான்

3. இடைக்காடனார் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.

4. இறைவன் கடம்ப வன கோவிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார்.

5. மன்னன் தன் பிழையை பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்கு சிறப்பு செய்தான்.

A) 5, 4, 3, 1, 2

B) 3, 4, 5, 1, 2

C) 5, 1, 3, 4, 2

D) 1, 2, 3, 4, 5



37. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எதன்மூலம் அறியலாம் ?

A) சிந்துவெளி நாகரிகம்

B) சங்க இலக்கியம்

C) அரிக்கமேடு அகழாய்வுக் குறிப்பு

D) பத்துப்பாட்டு



38. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் - என்ற உவமையால் விளக்கப்படும் பொருள் யாது ?

A) கலங்காது காத்திருத்தல்

B) பொறுமை

C) நோயின் குணம் அறிதல்

D) இவற்றுள் எதுவுமில்லை.



39. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க - கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர் ?

A) கும்பாட்டம் என்று அழைக்கப்படுவது எது?

B) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

C) கும்பாட்டம், குடக்கூத்து என்று அழைக்கப்படுவது கரகாட்டமா? D) கரகாட்டம் என்றால் என்ன?



40. குளிர்காலத்தை பெரும் பொழுதாக கொண்ட நிலங்கள் ?

A) குறிஞ்சி, மருதம், பாலை

B) குறிஞ்சி

C) குறிஞ்சி, மருதம், நெய்தல்

D) நெய்தல்



41. தொடர்வகை அறிக - மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்

A) தனிச்சொற்றொடர்

B) தொடர்நிலைத் தொடர்

C) கலவைத் தொடர்

D) நேர்கூற்றுத் தொடர்



42. தொடர்வகை அறிக - அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

A) தனிச்சொற்றொடர்

B) தொடர்நிலைத் தொடர்

C) கலவைத் தொடர்

D) நேர்கூற்றுத் தொடர்



43. தொடர்வகை அறிக - மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.

A) தனிச்சொற்றொடர்

B) தொடர்நிலைத் தொடர்

C) கலவைத் தொடர்

D) நேர்கூற்றுத் தொடர்



44. முதுவேனில் காலத்திற்குரிய மாதங்கள் ?

A) சித்திரை, வைகாசி

B) ஆனி, ஆடி

C) ஆவணி, புரட்டாசி

D) ஐப்பசி, கார்த்தினை



45. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) பொருள் பின்வருநிலையணி

B) ஏகதேச உருவக அணி

C) சொற்பொருள் பின்வரு நிலையணி

D) சிலேடை அணி



46. புற உலக ஆராய்ச்சிக்கு கொழுகொம்பு போன்றது என திரு.வி.க எதனைக் குறிப்பிடுகிறார் ?

A) அறிவியல்

B) ஓலைச்சுவடி

C) சங்க இலக்கியங்கள்

D) ஒழுக்கம்



47. ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் வரும் வேற்றுமை உருபு எது ?

A) ஐ

B) ஆல்

C) இல்

D) இன்



48. கலித்தொகையை தொகுத்தவர் ?

A) நம்பியாண்டார் நம்பி

B) இடைக்காடனார்

C) பவணந்தி

D) நல்லந்துவனார்



49. பொருத்துக

A. பண்டி - 1) உறவினர்

B. தமர் - 2) கோபம்

C. பொறை - 3) வயிறு

D. முனிவு - 4) வறுமை



 

a.     

b.    

c.     

d.    

A.    

2

4

1

3

B.    

2

1

3

4

C.    

3

1

4

2

D.   

2

3

1

4















50. விசாரணை கமிஷன் என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர் யார் ?

A) சா. கந்தசாமி

B) கி.ராஜநாராயணன்

C) வ.உ.சிதம்பரனார்

D) வெங்கடேசன்



51. பொருந்தாத இணையைக் கண்டறிக ?

A) கிண்கிணி - நெற்றியில் அணிவது

B) குழை - காதில் அணிவது

C) சூழி - தலையில் அணிவது

D) அரைநாண் - இடையில் அணிவது



52. கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - என்று பாடியவர் ?

A) திருவள்ளுவர்

B) குமரகுருபரர்

C) ஔவையார்

D) முன்றுறையரையனார்



53. சுந்தரர் இயற்றிய தேவாரப் பாடல்களின் திருமுறை வைப்புமுறை ?

A) முதல் மூன்று திருமுறைகள்

B) ஐந்தாம் திருமுறை

C) ஏழாம் திருமுறை

D) எட்டாம் திருமுறை



54. பொருத்துக

1. இயற்கை தவம் - அ ) திருக்குறள்

2. இயற்கைப் பரிணாமம் - ஆ ) பெரிய புராணம்

3. இயற்கை அன்பு - இ ) கம்பராமாயணம்

4. இயற்கை வாழ்வில்லம் - ஈ ) சிந்தாமணி


 

1.         

2.        

3.        

4.       

A.    

B.    

C.    

D.   
















55. கொண்டு, வைத்து, உடன், கூட ஆகிய சொல்லுருபுகள் எந்த வேற்றுமைக்கு உரியது

A) இரண்டாம் வேற்றுமை

B) மூன்றாம் வேற்றுமை

C) நான்காம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



56. பொருந்தாத இணையை கண்டறிக

A) காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல - எதிர்பாராத நிகழ்வு

B) பசுமரத்து ஆணி போல - எளிதில் மனதில் பதிதல்

C) விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற செயல்

D) நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - ஒற்றுமையின்மை



57. சரியான இணையைக் கண்டறிக ?

A. ஊழ் ஊழ் - வினைத் தொகை

B. செந்தீ - அடுக்குத் தொடர்

C. வளர் வானம் - பண்புத் தொகை

D. வாரா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்



58. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ?

A) எழுவாய்

B) செயப்படுபொருள்

C) பயனிலை

D) வேற்றுமை



59. பொருத்துக

A. விசும்பு - 1) குளிர்ந்த மழை

B. ஊழி - 2) முறை

C. ஊழ் - 3) யுகம்

D. தண்பெயல் - 4) வானம்


 

a.     

b.    

c.     

d.    

A.    

4

3

2

1

B.    

2

1

3

4

C.    

2

1

4

3

D.   

2

3

1

4
















60. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை இயற்றியவர் ?

A) வல்லிக் கண்ணன்

B) சா.கந்தசாமி

C) பி.ச.குப்புசாமி

D) சுரதா



61. கீழ்க்காணும் கூற்றுகளை கவனி

1. முதுமக்கள் தாழி ஆதிச்ச நல்லூரில் கண்டறியப்பட்டது

2. கலையழகு மிக்க மண்கலங்கள் நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கண்டறிப்பட்டது.

3. சுடுமண் பொருட்கள் மதுரைக்கு அருகில் கீழடியில் கண்டறியப்பட்டது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி



62. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் ------- வேற்றுமை உருபுகள் என்கிறோம்?

A) எழுத்துகளை

B) சொற்களை

C) அசைகளை

D) தொடர்களை



63. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - Antibiotic

A) நுண்ணுயிர் முறி

B) தடுப்பூசி

C) நோய்எதிர்பொருள்

D) தடுப்பு மருந்து



64. அறத்தான் வருவதே இன்பம்- இத்தொடரில் --------- வேற்றுமை பயின்று வந்துள்ளது?

A) இரண்டாம்

B) மூன்றாம்

C) நான்காம்

D) ஐந்தாம்



65. அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

A) தமிழ்விடுதூது

B) உமர்கய்யாம் பாடல்கள்

C) திருக்குறள்

D) நாலடியார்



66. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை எது?

A) இன்னிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை



67. ரூபாயத் என்ற பாடல் எதனை விளக்குகிறது ?

A) வாழ்க்கைத் தத்துவம்

B) சமய நெறி

C) பொருளீட்டல்

D) கடற்பயணம்



68. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல் – இக்குறளின் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

A) மிகுதியான் - மிக்கவை

B) தகுதியான் - வென்றுவிடல்

C) மிகுதியான் - தகுதியான்

D) தாம் - தம்



69. பண்டையத் தமிழர்கள் அறிவன், கணியன், நாழிகைக் கணக்கர் என யாரை அழைத்தனர் ?

A) கவிபாடும் புலவர்களை

B) வானியலைப் பற்றிக் கணித்துக் கூறுபவர்களை

C) அரண்மனை ராஜ குருக்களை

D) இவர்களில் யாரும் இல்லை



70. பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது?

A) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

B) அளைமறிபாப்புப் பொருள்கோள்

C) அடிமறிமாற்றுப் பொருள்கோள்

D) மொழிமாற்றுப் பொருள்கோள்



71. நக்கீரர் தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக.

A) இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டார். B) எட்டுதொகையில் அதிக பாடல்களை எழுதியவர்.

C) பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றினார்.

D) மதுரைக் கணக்காயனார் மகன்



72. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில்
போகிப் பண்டிகை எந்த விழாவாக கொண்டாடப்பட்டது ?

A) மகரசங்கராந்தி

B) இந்திர விழா

C) இல்லுறை வழிபாடு விழா

D) இவற்றில் எதுவுமில்லை



73. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் யார் ?

A) அறிஞர் அண்ணா

B) புவியரசு

C) புலவரேறு

D) முடியரசன்




74. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதி எந்த நூலைக் குறிப்பிட்டார் ?

A) திருக்குறள்

B) பகவத் கீதை

C) திரிகடுகம்

D) திருப்பாவை



75. ஜி.யு. போப்பின் எந்த படைப்பு காந்தியை வெகுவாகக் கவர்ந்தது ?

A) தமிழ்க்கையேடு

B) திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு

C) திருக்குறள் ஆங்கி மொழிபெயர்ப்பு

D) இவற்றில் எதுவுமில்லை



76. கவி ஞாயிறு என்று சிறப்பிக்கப்படுபவர் யார் ?

A) தேவநேயப் பாவாணர்

B) தாராபாரதி

C) பரிதிமாற் கலைஞர்

D) குணங்கடி மஸ்தான் சாகிபு



77. காமராசருக்கு அரசு சார்பில் செய்யப்பட்ட சிறப்புகள் தொடர்பான தவறான கூற்று எது ?

A) சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.

B) கன்னியாகுமரியில் காமராசருக்கு 02.10.2000 அன்று மணிமண்டபம் அமைக்கப்பட்டது

C) நடுவண் அரசு 1978-ல் பாரதரத்னா விருது வழங்கியது

D) மதுரை பல்கலைகழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.



78. யாருக்கு எஸ்.ஆர் அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது?

A) சிறந்த தொல்பொருள் ஆய்வாளருக்கு

B) சிறந்த அறிவியல் அறிஞருக்கு

C) சிறந்த நூலகர்களுக்கு

D) சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு



79. ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று தாம் இயற்றிய ஒரு கவிதை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டவர் யார் ?

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) ரா.பி. சேதுப்பிள்ளை

D) ஈரோடு தமிழன்பன்



80. நாலடியாரை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என பகுத்து உரை கண்டவர் யார்?

A) பரிமேலழகர்

B) மணக்குடவர்

C) நச்சினார்க்கினியர்

D) தருமர்



81. வியன் புலம் என்னும் இலக்கிய இதழை நிறுவியவர் யார்

A) கண்ணதாசன்

B) திரு.வி.கலியாண சுந்தரனார்

C) துரை ஜெயப்பிரகாஷ்

D) உ.வே.சாமிநாதய்யர்



82. தமிழ்க்கும்மி பாடலை இயற்றியவர் யார் ?

A) அ.தட்சிணாமூர்த்தி

B) பெருஞ்சித்திரனார்

C) கா.ராஜன்

D) சு.வித்யானந்தன்



83. ஆசாரக் கோவையை இயற்றிய பெருவாயின் முள்ளியார் பிறந்த இடம் ?

A) வண்கயத்தூர்

B) மருதூர்

C) தண்டலம்

D) சிக்கல்



84. ஓரெழுத்து ஒரு மொழிக்கான பொருளைத் தேர்க - நை

A) இழிவு

B) அன்பு

C) வான்

D) உண்



85. பகுபத உறுப்புகளில் காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது

A) பகுதி

B) விகுதி

C) இடைநிலை

D) சந்தி



86. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திரமடல் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?

A) கம்பர்

B) காளமேகப் புலவர்

C) ஒட்டக்கூத்தர்

D) புகழேந்திப் புலவர்



87. புனையா ஓவியங்கள் பற்றிய செய்திகளை கூறும் இலக்கியம் எது ?

A) நெடுநல்வாடை

B) மணிமேகலை

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை



88. முற்காலத்தில் கண்ணுள் வினைஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) கட்டிட வல்லுநர்

B) புலவர்

C) பானை வனைபவர்

D) ஓவியர்



89. கருத்துப்பட ஓவியங்களை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ?

A) பாரதியார்

B) இராஜா ரவிவர்மா

C) மாமல்லன்

D) இராஜராஜ சோழன்



90. கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுவது

A) ஓலைச்சுவடி ஓவியம்

B) துணி ஓவியம்

C) செப்பேட்டு ஓவியம்

D) கண்ணாடி ஓவியம்



91. வானத்திலிருந்து பார்க்கும்போது தமிழ்நாடு என தெரியும் வகையில் அமைக்கப்பட்ட கட்டடம்?

A) தமிழ்ப்பல்கலைக் கழகம்

B) சென்னை பல்கலைக் கழகம்

C) சரசுவதி மகால்

D) இவற்றில் எதுவுமில்லை



92. உலகத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம் ?

A) சென்னை

B) மதுரை

C) கோலாலம்பூர்

D) கொழும்பு



93. பூம்புகாரில் அமைந்திருந்த கடல்பகுதி எது?

A) பட்டினப்பாக்கம்

B) காவிரிப் பூம்பட்டினம்

C) மருவூர்ப்பாக்கம்

D) முட்டம்



94. ஒருமை பன்மை பிழை நீக்கிய தொடரைக் காண்க

A) பெண்கள் பெறவேண்டியது பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை

B) நான் உண்ட பழங்கள் அவை அன்று

C) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தார்

D) செடியில் பூ பூத்தன



95. தொழிற்பெயர் அல்லாதது எது ?

A) வாழ்க்கை

B) விலை

C) மறதி

D) கமலம்



96. பழமொழி நானூறு நூலை இயற்றியவர் ?

A) திருவள்ளுவர்

B) ஔவையார்

C) முன்றுறை அரையனார்

D) பூதஞ்சேந்தனார்



97. “வாய்மொழி இலக்கியம்” - என அழைக்கப்படுவது ?

A) தாலாட்டு

B) நாட்டுப்புறப் பாடல்கள்

C) ஒப்பாரி

D) இவற்றில் எதுவுமில்லை.



98. முற்காலத்தில் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட ஊர் எது ?

A) திருநெல்வேலி

B) மதுரை

C) திருச்சி

D) கோயம்புத்தூர்



99. அக்கசாலை எனப்டுவது?

A) அரண்மனை இராஜ சமையலறை

B) பொன் நாணயங்களை உருவாக்கும் இடம்

C) அரண்மனை இராஜ வைத்திய சாலை

D) நூலகம்


100. தனிக்குறிலை அடுத்து எந்த எழுத்து வந்தால் அந்த சொல் பிறமொழிச்
சொல்லாக இருக்கும் ?

A) ற்

B) ர்

C) ன்

D) ப்

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post