Batch 2 - 1 குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள்-1 (பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 3 வரை)- TNPSC GROUP IV - GENARAL TAMIL - Eligibility cum Scoring Test - MODEL QUESTION PAPER WITH ANSWER KEY FREE DOWNLOAD (2022 New Syllabus)

 TNPSC GROUP IV  
GENARAL TAMIL - Eligibility cum Scoring Test

டி.என்.பிஸ்.சி குரூப் 4 தேர்வு 

மாதிரி வினாத்தாள் - 1

Batch - 2

(பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 3 வரை)


மாதிரி வினாத்தாள் - 1 (Batch-2) 



1. சொல்லின் சரியான பொருளைமைந்த தொடரைத் தேர்க ?

A) அடவி - காடு

B) சுவல் - தோள்

C) அவல் - மேடு

D) பழனம் - வயல்

E) விடை தெரியவில்லை



2. யவனக் கடல் வணிகம் பெருக பேருதவியாக இருந்த காற்று ?

A) ஹிப்பாலஸ் பருவக் காற்று

B) வாடைக் காற்று

C) தென்மேற்கு பருவக் காற்று

D) வடகிழக்கு பருவக் காற்று

‘E) விடை தெரியவில்லை



3. சரியான எதிர்ச்சொல்லை காண்க - அவல் ?

A) பொம்மல்

B) இறுடி

C) மிசை

D) அவன்

E) விடை தெரியவில்லை



4. இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு என்ற பாரதியாரின் வரிகளில் இடம்பெற்றுள்ள வடமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் காண்க ?

A) உயிர்வளி

B) பழச்சாறு

C) வெந்நீர்

D) விருந்து

E) விடை தெரியவில்லை



5. எந்தமிழ்நா – பிரித்தெழுதுக ?

A) எந் + தமிழ் + நா

B) எந்த + தமிழ் + நா

C) எந்தம் + தமிழ் + நா

D) எம் + தமிழ் + நா

E) விடை தெரியவில்லை



6. ‘புளி மற்றும் காஞ்சிரை என்ற நச்சு மரத்தின் விதை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) கொட்டை

B) மணி

C) வித்து

D) காழ்

E) விடை தெரியவில்லை



7. தாவரங்களின் தவறான தொகுப்புப் பெயரை தேர்வு செய்க ?

A) கொத்து - அவரை

B) குலை - கேழ்வரகு

C) கதிர் - சோளம்

D) அலகு அல்லது குரல் - நெல்

‘E) விடை தெரியவில்லை



8. வெற்றி வேற்கை என்ற நூலுக்கு வழப்படும் வேறு பெயரினைக் கண்டறிக ?

A) நெடுந்தொகை

B) புறத்திரட்டு

C) நறுந்தொகை

D) வஞ்சி நெடும்பாட்டு

E) விடை தெரியவில்லை



9. முச்சங்கு என்ற சொல்லிற்கு பொருந்தாத சொல்லைக் காண்க ?

A) வெண்சங்கு

B) வலம்புரி சங்கு

C) சலஞ்சலம்

D) பாஞ்சசன்யம்

E) விடை தெரியவில்லை



10. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

A) ந.பிச்சமூர்த்தி

B) கு.ப.ராஜகோபாலன்

C) கி.ராஜநாராயணன்

D) மகாகவி பாரதியார்

E) விடை தெரியவில்லை


11. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க ?

A) நேமி - சக்கரம்

B) கோடு - மலை

C) விரிச்சி - நற்சொல்

D) கொடுஞ்செலவு – வீணாக செலவு செய்தல்

E) விடை தெரியவில்லை



12. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினமான “ புயலிலே ஒரு தோணி ” என்ற புதினத்தை எழுதியவர் யார் ?

A) மா.இராமலிங்கம் (எ) எழில் முதல்வன்

B) ப.சிங்காரம்

C) நா.பார்த்தசாரதி

D) இரா.பி.சேதுப்பிள்ளை

E) விடை தெரியவில்லை



13. பின்வரும் குறிப்புகளுடன் சரியாகப் பொருந்தும் தமிழறிஞரை தேர்வு செய்க ?

1. இவர் சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.

2. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” அமைத்தார்.

3. பாவாணர் நூலகத்தை உருவாக்கினார்.

4. திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர்.

5. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

A) மு.மேத்தா

B) இரா.இளங்குமரனார்

C) கண்ணதாசன்

D) மருதகாசி

E) விடை தெரியவில்லை



14. இளமைப் பெயர்களுடன் சரியாகப் பொருந்தும் தொடரைத் தேர்வு செய்க ?

A) மூசு - பலா

B) நுழாய் - பாக்கு

C) கச்சல் - பனை

D) கவ்வை - எள்

E) விடை தெரியவில்லை



15. மரபுப் பெயர்களுடன் சரியாகப் பொருந்தும் தொடரைத் தேர்வு செய்க ?

A) நாற்று - நெல்

B) கன்று - கத்தரி

C) குட்டி - விளா

D) மடலி (அ) வடலி - பனை

E) விடை தெரியவில்லை



16. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக?

A) கவை

B) கிளை

C) சண்டு

D) சினை

E) விடை தெரியவில்லை



17. ஆங்கிலச் சொல்லிற்குரிய சரியான தமிழ்ச் சொல்லை எழுதுக ?

A) Tornado - சூறாவளி

B) Whirwind - கடற்காற்று

C) Land Breeze - நிலக்காற்று

D) Tempest - பெருங்காற்று

E) விடை தெரியவில்லை



18. மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டர் – அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைக் காண்க ?

A) மஞ்சள் – கேழ்வரகு களி

B) மஞ்சள் - மகிழ்ச்சி

C) மயில் - மகிழ்ச்சி

D) பூரிப்பு - உளமகிழ்ச்சி

E) விடை தெரியவில்லை



19. பின்வரும் வட்டார வழக்குச் சொற்களுக்கு இணையான சரியான சொற்கள் அமைந்த சரியான தொடரைத் தேர்க

A) வரத்துக்காரன் - புதியவன்

B) மகுளி – சோற்றுக் கஞ்சி

C) நீத்துப் பாகம் – மேல் கஞ்சி

D) அலுக்கம் - சலிப்பு

E) விடை தெரியவில்லை



20. சொல்லுக்குரிய சரியான பொருள் பொருந்தி வரும் சொல்லைக் கண்டறிக ?

1. அசைஇ - இளைப்பாரி

2. கடும்பு - சுற்றம்

3. ஆரி - அருமை

4. வயிரியம் – கூத்தர்

5. இறடி - தினை

A) 1, 2, 3 மற்றும் 4 சரி

B) 1, 2 மற்றும் 5 சரி

C) 3 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



21. விருந்தினர் என்ற சொல்லின் பொருள் யாது ?

A) உறவினர்

B) இல்லத்திற்கு வருகை தரும் குடும்ப உறுப்பினர்

C) முன்பின் அறியாத புதியவர்

D) உணவு அருந்துவதற்கு இல்லத்திற்கு வருகை தரும் உறவினர்

E) விடை தெரியவில்லை



22. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது ?

A) சிற்றூர்

B) புத்தூர்

C) மூதூர்

D) பேரூர்

E) விடை தெரியவில்லை



23. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்றவர் யார்?

A) தேவநேயப்பாவணர்

B) பேரறிஞர் அண்ணா

C) பன்மொழிப் புலவர் க.அப்பாதுரையார்

D) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

E) விடை தெரியவில்லை

 



24. பொருத்துக

ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் பொருத்துக

a. நா.பார்த்தசாரதி - 1. தமிழின்பம்

b. வ.ராமசாமி - 2. குறிஞ்சி மலர்

c. இரா.பி.சே - 3. நாட்டுப் பற்று

d. மு.வரதராசனார் - 4. மழையும் புயலும்

  

 

a.     

b.     

c.     

d.     

A.    

3

1

2

4

B.     

1

2

3

4

C.    

2

4

1

3

D.    

3

1

4

2

E.     

விடை தெரியவில்லை

  

 25. சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற “புதிய உரைநடை” என்ற நூலை இயற்றியவர் யார் ?


A) பெருஞ்சித்திரனார் (துரை.மாணிக்கம்)

B) வண்ணதாசன் (கல்யாண்ஜி)

C) எழில் முதல்வன் (மா.இராமலிங்கம்)

D) தமிழழகனார் (சண்முக சுந்தரம்)

E) விடை தெரியவில்லை


26. தமிழறிஞர்களின் சிறப்புப் பெயருடன் பொருந்தாத இணையை தேர்வு செய்க ?

A) மொழி ஞாயிறு - தேவநேயப்பாவாணர்

B) உலகப்பெருந்தமிழர் – இரா.இளங்குமரனார்

C) சந்தக் கவிமணி - வண்ணதாசன்

D) பாவலரேறு - பெருஞ்சித்திரனார்

E) விடை தெரியவில்லை



27. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் யார் ?

A) க.சச்சிதானந்தன்

B) தமிழழகனார்

C) மகாகவி பாரதியார்

D) பாரதிதாசன்

E) விடை தெரியவில்லை



28. காணுதல் – வேர்ச்சொல் தருக ?

A) கண்

B) கண்ட

C) காணல்

D) காண்

E) விடை தெரியவில்லை



29. பாடுதல் என்ற சொல்லின் வேர்ச்சொல் எழுதுக ?

A) பாடி

B) பா

C) பாடு

D) பாடிய

E) விடை தெரியவில்லை



30. “கோல்” என்று அழைக்கப்படும் அடிப்பகுதியைக் கொண்டுள்ள தாவரம் எது ?

A) நெல், கேழ்வரகு

B) கீரை, வாழை

C) நெட்டி, மிளகாய்ச் செடி

D) குத்துச்செடி, புதர்

E) விடை தெரியவில்லை



31. கரும்பின் அடிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தட்டை

B) தட்டு

C) கழை

D) கழி

E) விடை தெரியவில்லை



32. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ?

A) கால்டுவெல்

B) தேவநேயப்பாவாணர்

C) குமரிலபட்டர்

D) வில்லியம் கேரி.

E) விடை தெரியவில்லை



33. பத்துப்பாட்டு நூல் எது ?

A) முல்லைப்பாட்டு

B) அகநானூறு

C) பரிபாடல்

D) பதிற்றுப்பத்து

E) விடை தெரியவில்லை



34. பொருத்தமான அருஞ்சொல் பொருளில் தவறான இணையைக் கூறுக ?

A) தொங்கான் - கப்பல்

B) பொம்மல் – காதணி

C) கப்பித்தான் – தலைமை மாலுமி

D) நரலும் – ஒலிக்கும்

E) விடை தெரியவில்லை



35. பொருத்தமான அருஞ்சொல் பொருளில் தவறான இணையைக் கூறுக ?

A) துய்ப்பது - கற்பது

B) உடுக்கள் – ஆடை

C) விண் - ஆகாயம்

D) முகில் – மேகம்

E) விடை தெரியவில்லை



36. “களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைதான் அதற்குச் சான்று” என்றவர் யார் ?

A) அறிஞர் அண்ணா

B) டாக்டர் மு.வ

C) திரு.வி.க

D) தந்தை பெரியார்

E) விடை தெரியவில்லை



37. Carthila de lingoa Tamul e Portugues என்பது ?

A) இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதன்முதலில் 1554ஆம் ஆண்டு போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் அச்சேறிய தமிழ் நூல்.

B) போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் சிறந்த தமிழ் நூலுக்கு வழங்கப்படும் விருது.

C) போர்ச்சுகீசு நாட்டிற்கு புலம்பெயர்ந்த உலக தமிழர்கள் அமைத்துள்ள நினைவுத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

D) இவற்றில் எதுவுமில்லை

E) விடை தெரியவில்லை



38. தவறான கூற்றினை தேர்வு செய் ?

A) முரண்பட்ட சொற்களை சேர்த்து எழுதுவது – எதிரிணை இசைவு (Antithesis)

B) எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் “இணை ஒப்பு” (anology) என்று அழைக்கப்படுகிறது.

C) உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வது - இலக்கணை

D) படிப்பவருக்கு முரண்படுவது போல இருக்கும், உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்லுவது – முரண்படு மெய்ம்மை (paradox)

E) விடை தெரியவில்லை



39. உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும் என்று இலக்கணம் வகுத்தவர் யார் ?

A) தொல்காப்பியர்

B) பவணந்தி முனிவர்

C) ஐயனாரிதனார்

D) தண்டி

E) விடை தெரியவில்லை

 

40. பொருத்துக

a) கல் - 1. மந்தை

b) புல் - 2. குலை

c) பழம் - 3. கட்டு

d) ஆடு - 4. குவியல்

 

a.     

b.     

c.     

d.     

A.    

2

4

3

1

B.     

4

3

2

1

C.    

4

1

2

3

D.    

3

2

4

1

E)      விடை தெரியவில்லை

 


 41. பொருத்துக

a) கொண்டல் - 1. தெற்கு

b) கோடை - 2. வடக்கு

c) வாடை - 3. குணக்கு

d) தென்றல் - 4. குடக்கு

 

a.     

b.     

c.     

d.     

A.    

2

3

4

1

B.     

3

4

2

1

C.    

4

1

2

3

D.    

4

3

2

1

E)      விடை தெரியவில்லை

 

  

42. தந்தை பெரியாருடைய பெரும்பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் என்று கூறுகிறேன் என்றவர் ?

A) பாவேந்தர் பாரதிதாசன்

B) கவிக்கோ அப்துல்ரகுமான்

C) மனவை முஸ்தபா

D) அறிஞர் அண்ணா

E) விடை தெரியவில்லை



43. வினையாலனையும் பெயர் அமைந்துள்ள தொடரைக் காண்க.

A) கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறார், அவரை அழைத்து வாருங்கள்

B) ஊட்டமிகு உணவு உண்டார், அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

C) பொதுஅறிவு நூல்களைத் தேடிப்படித்தவர் தேர்வில் வெற்றி பெற்றார்

D) நேற்று என்னைச் சந்தித்தார், அவர் என் நண்பர்

E) விடை தெரியவில்லை



44. நட என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க ?

A) நடந்தான்

B) நடத்தல்

C) நடந்து

D) நடந்த

E) விடை தெரியவில்லை



45. குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம், பசித்தவயிறுகள் ஒரு பக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம் என்று வருந்தியவர் யார் ?

A) தாராபாரதி

B) மருதகாசி

C) தோழர் ப.ஜீவானந்தம்

D) ஈரோடு தமிழன்பன்

E) விடை தெரியவில்லை



46. மா.இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட எழில் முதல்வன் அவர்கள் எழுதாத நூல் எது ?

A) இனிக்கும் நினைவுகள்

B) எங்கெங்கு காணினும்

C) வணக்கம் வள்ளுவ

D) யாதுமாகி நின்றாய்

E) விடை தெரியவில்லை




47. இன்னிசை அளபெடைச் சொல்லை காண்க ?

A) ஓதல் வேண்டும்

B) எடுப்பதூஉம்

C) உறாஅர்க் குறுநோய்

D) நல்ல படாஅ பறை

E) விடை தெரியவில்லை



48. சொல்லிசை அளபெடைச் சொல்லைக் காண்க ?

A) உரனசைஇ

B) எங்ங்கிறைவன்

C) கெடுப்பதூஉம்

D) எஃஃகிலங்கிய

E) விடை தெரியவில்லை



49. இசைநிறை அளபெடை என்று அழைக்கப்படுவது ?

A) உயிரளபெடை

B) சொல்லிசை அளபெடை

C) ஒற்றளபெடை

D) செய்யுளிசை அளபெடை

E) விடை தெரியவில்லை



50. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதே சொல் பிரிந்து நின்று மற்றொரு பொருளையும் தருமாறு அமையும் சொல் ?

A) தனிமொழி

B) தொடர்மொழி

C) பொதுமொழி

D) ஓரெழுத்து ஒருமொழி

E) விடை தெரியவில்லை



51. சரியான விடையைத் தேர்ந்தெடு ?

1. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – துரை.மாணிக்கம்

3. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ள நூல் – திருக்குறள் மெய்ப்பொருளுரை.

4. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் – உலகியல் நூறு, பாவியக் கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப்பறவைகள்.

A) 1 மட்டும் சரி

B) 1, 2 மற்றும் 3 சரி

C) 1 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



52. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று பாடியவர் யார் ?

A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

B) பாவேந்தர் பாரதிதாசன்

C) மகாகவி பாரதியார்

D) நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பிள்ளை

E) விடை தெரியவில்லை



53. வேங்கை என்ற சொல் வேம் + கை எனப் பிரிந்தும், எட்டு என்ற சொல் எள் + து எனப் பிரிந்தும் இருவேறு பொருள்களைத் தருவதை எதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் ?

A) தனிமொழி

B) பொதுமொழி

C) தொடர்மொழி

D) இவற்றில் எதுவுமில்லை

E) விடை தெரியவில்லை



54. பொருந்தாத இலக்கணக் குறிப்பு இணையைத் தேர்ந்தெடுக்க

A) நடவாமை – எதிர்மறை தொழிற்பெயர்

B) பொறுத்தவர் – எதிர்மறை பெயரெச்சம்

C) உரைத்தல் – முதனிலைத் தொழிற்பெயர்

D) சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

E) விடை தெரியவில்லை

 

 55. பொருத்துக


a) முதனிலைத் தொழிற்பெயர் - 1. கேடு

b) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - 2. கொல்லாமை

c) எதிர்மறைப் பெயர் - 3. பாடியவள்

d) வினையாலனையும் பெயர் - 4. கட்டு

 

a.     

b.     

c.     

d.     

A.    

2

3

1

4

B.     

4

1

2

3

C.    

3

4

2

1

D.    

2

3

4

1

E)      விடை தெரியவில்லை

 

 56. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன், சுற்றும் முற்றும் பார்ப்பேன், மனம் அமைதி எய்தும் – இத்தொடரில் உள்ள வினைமுற்று சொற்களை எழுதுக.


A) அடிக்கடி – ஏறுவேன் – அமர்வேன் – மனம் - அமைதி

B) அழைக்கும் – ஏறுவேன் – அமர்வேன் – பார்ப்பேன் – எய்தும்.

C) மலை – மலைமீது – ஓரிடத்தில் – சுற்றும் முற்றும் - மனம்

D) என்னை – ஏறுவேன் – அமர்வேன் – முற்றும் - அமைதி

E) விடை தெரியவில்லை



57. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள் அடிக்கோடிட்ட சொற்களுடன் சரியாக பொருந்தி வரும் தொடரைத் தேர்க

A. இலையும் சருகும்

B. தோகையும் சண்டும்

C. சருகும் சண்டும்

D. தாளும் ஓலையும்

E. விடை தெரியவில்லை



58. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரையும் வினையாலனையும் பெயரையும் காண்க. ?

A) பாடல் - கேட்டவர்

B) பாடிய - கேட்டவர்

C) பாடல் - பாடிய

D) கேட்டவர் - பாடிய

E) விடை தெரியவில்லை




59. வேர்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை ?

A) மணி வகை

B) குலை வகை

C) கொழுந்து வகை

D) இலை வகை

E) விடை தெரியவில்லை




60. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடை ?

A) செய்யுளிசை அளபெடை

B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை

E) விடை தெரியவில்லை



61. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைக் காண்க.

A) பட்டாம்பூச்சிகள் - கள்

B) வண்டுகள் - தேன்

C) வண்டுகள் - கள்

D) மலைநில மனிதர்கள் - தேன்

E) விடை தெரியவில்லை

 

 62. பொருத்துக


a) மூதூர் - 1. உரிச்சொல் தொடர்

b) உறுதுயர் - 2. மூன்றாம் வேற்றுமைத் தொகை

c) கைதொழுது - 3. வினைத்தொகை

d) தடக்கை - 4. பண்புத் தொகை

 

 

a.     

b.     

c.     

d.     

A.    

4

3

2

1

B.     

2

4

1

3

C.    

4

1

2

3

D.    

1

3

4

2

E)      விடை தெரியவில்லை

 

 

  63. முல்லைப்பாட்டு தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக

A) பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று

B) 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களிலேயே குறைந்த அடிகளைக் கொண்ட நூல் இது

C) பாவகை - ஆசிரியப்பா

D) இதனை படைத்தவர் - கபிலர்

E) விடை தெரியவில்லை



64. முல்லை நிலத்திற்குரிய மரம் அல்லாதது எது ?

A) கொன்றை

B) காயா

C) பிடவம்

D) குருந்தம்

E) விடை தெரியவில்லை



65. முறுக்கு மீசை வந்தார் – இலக்கணக் குறிப்பறிக

A) வினைத் தொகை

B) அன்மொழித் தொகை

C) உம்மைத் தொகை

D) இருபெயரொட்டு பண்புத் தொகை

E) விடை தெரியவில்லை



66. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) மதுரை சென்றார் – நான்காம் வேற்றுமைத் தொகை

B) மலர்க்கை – உருவகத் தொடர்

C) தேர்ப்பாகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

D) மார்கழித் திங்கள், – இருபெயரொட்டு பண்புத் தொகை

E) விடை தெரியவில்லை



67. கி.ராஜநாராயணன் தொடர்பான தவறான கூற்று எது ?

A) இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற நூல் 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

B) இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கினார்

C) இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனை கதைகள் “கரிசல் இலக்கியம்” என்று அழைக்கப்படுகின்றனர்

D) இவரின் சொந்த ஊர் - மேலக்குடிகாடு

E) விடை தெரியவில்லை




68. நண்பா எழுது ! - எவ்வகைத் தொடர்

A) வினாத் தொடர்

B) விளித் தொடர்

C) எதிர்மறைத் தொடர்

D) வினையெச்சத் தொடர்

E) விடை தெரியவில்லை



69. “காலின் ஏழடிப் பின்சென்று” என்ற பொருநராற்றுப்படை பாடல் அடிகள் மூலம் அறியப்படும் செய்தி யாது ?

A) பகைவரைத் தாக்க காலில் ஏழு அடி தூரம் பின் சென்று அம்பெய்தினர்

B) காலில் ஏழு அடி தூரம் பின் சென்று பகைவரை பாய்ந்து தாக்கினர்

C) மன்னர்களிடம் பேசும்போது அமைச்சர்கள் ஏழு அடி தூரம் பின்சென்று நின்று பணிந்து பேசினர்

D) விருந்தினர்களை அவர்கள் வந்த 4 குதிரைகள் பூட்டிய தேர்வரை ஏழு அடி நடந்து வழியனுப்பினர்.

E) விடை தெரியவில்லை



70. பாடல் அடிகளுக்கான சரியான புலவரை தேர்வு செய்க ?

I. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவன யாவையே - கம்பராமாயணம்

II. ------------------- தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை - சிலப்பதிகாரம்

III. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல - கலிங்கத்துப்பரண்ணி

IV. அல்லில் ஆயினும் விருந்து வரின்

உவக்கும் - நற்றிணை

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



71. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ?

A) வெற்றி வேற்கை

B) கொன்றை வேந்தன்

C) ஆத்திச்சூடி

D) உலக நீதி

E) விடை தெரியவில்லை



72. காசிக்காண்டம் என்னும் நூலை இயற்றிய அதிவீர ராம பாண்டியரின் வேறுபெயர் ?

A) குளமுற்றத்துஞ்சியவன்

B) ஆரிய படை கடந்தோன்

C) மும்முடி சோழன்

D) சீவல மாறன்

E) விடை தெரியவில்லை



73. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் யார் ?

A) நன்னன் என்ற குறுநில மன்னன்

B) கரிகால் பெருவளத்தான்

C) பாண்டிய நெடுஞ்செழியன்

D) ஆரிய அரசன் பிரகதத்தன்

E) விடை தெரியவில்லை



74. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்

B) கேட்ட பாடல் – பெயரெச்சத் தொடர்

C) பாடி மகிழ்ந்தனர் – வினையெச்சத் தொடர்

D) அன்பால் கட்டினர் – இடைச்சொல் தொடர்

E) விடை தெரியவில்லை



75. மற்றொன்று – எவ்வகைத் தொடர் ?

A) உரிச்சொல் தொடர்

B) இடைச்சொல் தொடர்

C) அடுக்குத் தொடர்

D) தொகாநிலைத் தொடர்

E) விடை தெரியவில்லை



76. சரியாக அமைக்கப்பட்ட தொடரைக் காண்க.

A) வாழை தனித்த இடமுண்டு தமிழர் பண்பாட்டில் இலை

B) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

C) தனித்த இடமுண்டு வாழை தமிழர் பண்பாட்டில் இலைக்கு.

D) வாழை இலைக்கு தனித்த இடமுண்டு தமிழர் பண்பாட்டில்

E) விடை தெரியவில்லை



77. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ?

A) எழுவாய்

B) உவம உருபு

C) வேற்றுமை உருபு

D) உரிச்சொல்

E) விடை தெரியவில்லை



78. விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்ற புறநானூறு செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை யாது ?

A) நிலத்திற்கேற்ற விருந்து

B) இன்மையிலும் விருந்து

C) அல்லில்லும் விருந்து

D) உற்றாரின் விருந்து

E) விடை தெரியவில்லை



79. பழமொழியை நிறைவு செய்க – உப்பில்லாப் ------------------------- ?

A) பொருள் வீணாகும்

B) பண்டம் குப்பையிலே

C) பொருள் எதற்கு

D) உணவு உடலுக்கு வலு சேர்க்கும்

E) விடை தெரியவில்லை



80. பழமொழியை நிறைவு செய்க – ஒரு பானை ------------------------- ?

A) சோற்றுக்கு ஒரு சட்டி குழம்பு

B) பல பானைகளை உருவாக்கும்

C) சோற்றுக்கு ஒரு சோறு பதம்

D) குயவனின் உழைப்பால் வந்தது.

E) விடை தெரியவில்லை



81. தவறாக அமைந்த பழமொழியை தேர்வு செய்க.

A) உப்பிட்டவரை உள்ளளவும் நினை

B) தொட்டில் பழக்கம் குழவியோடு மட்டும்.

C) அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு

D) விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்

E) விடை தெரியவில்லை

 



82. பொருத்துக

a) திருக்குறள் தெளிவுரை - 1. ச.முகமது அலி

b) சிறுவர் நாடோடிக் கதைகள் - 2. எஸ்.ராமகிருஷ்ணன்

c) ஆறாம் திணை - 3. வ.உ.சி

d) அதோ அந்த பறவை போல - 4. கி.ராஜநாராயணன்

e) உலகின் மிகச்சிறிய தவளை - 5. மருத்துவர் கு.சிவராமன்

 

a.     

b.     

c.     

d.     

e.     

A.    

4

3

2

5

1

B.     

2

4

1

3

5

C.    

3

4

5

1

2

D.    

1

3

5

2

4

E.     

விடை தெரியவில்லை

 

 

 

 

83. சரியாக அமைந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைக் காண்க

A) செவ்விலக்கியம் - Devotional Literature

B) பக்தி இலக்கியம் – Classical Literature

C) பண்டைய இலக்கியம் – Modern Literature

D) காப்பிய இலக்கியம் – Epic Literature

E) விடை தெரியவில்லை





84. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) உவமை அணி

B) நிரல்நிறை அணி

C) எடுத்துக்காட்டு உவமை அணி

D) ஏகதேச உருவக அணி

E) விடை தெரியவில்லை



85. பண் என்னாம் பாடற் கியைபின்றேல் ; கண்என்னம்

கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) உவமை அணி

B) நிரல்நிறை அணி

C) எடுத்துக்காட்டு உவமை அணி

D) ஏகதேச உருவக அணி

E) விடை தெரியவில்லை





86. பாரதியார் தொடர்பான சரியான கூற்றை தேர்வு செய்க ?

I. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன் என்று புகழப்படுகிறார்.

II. இந்தியா, சுதேசமித்ரன் இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.

III. உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவமான வசன கவிதையை இலகுவாகக் கையாண்டார்.

IV. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



87. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம்உண் டாம்” என்று பாடியவர் ?

A) திருவள்ளுவர்

B) தாயுமானவர்

C) மாணிக்கவாசகர்

D) ஔவையார்

E) விடை தெரியவில்லை



88. பாடல் அறிந்து பொருத்துக

a) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - 1. ஐயூர் முடவனார்

b) வளி மிகின் வலி இல்லை - 2. வெண்ணிக்குயத்தியார்

c) வளிதொழில் ஆண்ட உரவோன் மருக - 3. கா.நமச்சிவாயர்

d) தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே- 4. சிலப்பதிகாரம்

 

a.     

b.     

c.     

d.     

A.    

4

3

2

1

B.     

2

4

1

3

C.    

4

1

2

3

D.    

1

3

4

2

E)      விடை தெரியவில்லை

 

 

  89. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது நூலை எழுதியவர் யார் ?


A) பலபட்டடை சொக்கநாதப் புலவர்

B) திரிகூடராசப்பக் கவிராயர்

C) கம்பர்

D) கா.நமச்சிவாயர்

E) விடை தெரியவில்லை



90. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) நாம் ஏன் தமிழ்காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

B) தவறின்றி தமிழ் எழுதுவோம் – மா.நன்னன்

C) பச்சை நிழல் – உதய சங்கர்

D) வாயு சம்கிதை - சடையப்பர்

E) விடை தெரியவில்லை



91. விருந்தே புதுமை என்றவர் ?

A) அப்துல்ரகுமான்

B) தொல்காப்பியர்

C) பவணந்தி முனிவர்

D) வண்ணதாசன்

E) விடை தெரியவில்லை


92. மோப்பக் குழையும் அனிச்சம் என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) குறுந்தொகை

D) அகநானூறு

E) விடை தெரியவில்லை



93. பைங்கூழ் என்பது ?

A) நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிர்

B) குழந்தை அளாவிய கூழ்

C) பசுமையான தினையினால் செய்யப்படும் கூழ்

D) இவற்றில் ஏதுமில்லை

E) விடை தெரியவில்லை



94. சொல்லுதல் என்ற பொருளைத் தரும் சொல் அல்லாதது எது ?

A) இயம்பல்

B) இயற்றல்

C) விளம்புதல்

D) மொழிதல்

E) விடை தெரியவில்லை



95. தமிழ் மூவாயிரம் என்ற சிறப்புப் பெயர் கொண்ட நூலை இயற்றியவர் யார் ?

A) மாறன் வழுதி

B) திருமூலர்

C) சேக்கிழார்

D) ஆண்டாள்

E) விடை தெரியவில்லை



96. கடுங்காற்று மணலைக் கொண்டுவந்து சேர்க்கிறது என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் யார் ?

A) ஐயூர் முடவனார்

B) மதுரை இளநாகனார்

C) வெண்ணிக்குயத்தியார்

D) நப்பூதனார்

E) விடை தெரியவில்லை



97. “வீ” – என்ற ஓரெழத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கூறுக ?

A) ஒரு வகை மலர்

B) சரசுவதி

C) வண்டு

D) அம்பு

E) விடை தெரியவில்லை



98. இலக்கண குறிப்பறிக - மோர்ப்பானை ?

A) இருபெயரொட்டு பண்புத் தொகை

B) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

C) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

D) வினைத்தொகை

E) விடை தெரியவில்லை



99. குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து

சிறது புறப்பட்டன்றோ இலள் – என்ற அடிகள் இடம்பெற்ற நூல் ?

A) புறநானூறு

B) அகநானூறு

C) குறுந்தொகை

D) நற்றிணை

E) விடை தெரியவில்லை



100. மலைபடுகடாம் நூல் தொடர்பான தவறான கூற்று எது ?

A) மலையை யானையாக உருவகம் செய்து, மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் என இலக்கிய நயத்துடன் பெயர் சூட்டப்பட்டது.

B) இது எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று

C) இதன் வேறு பெயர் – கூத்தராற்றுப் படை

D) இந்நூல் 583 அடிகளைக் கொண்டது

E) விடை தெரியவில்லை


இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 

Batch-1

டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான 30 மாதிரி வினாத்தாள்கள் விடையுடன் இலவச பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇




















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)












Batch - 2 

மாதிரி வினாத்தாள் 1-ஐ PDF ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

👇




thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post