Batch 2 - 2 குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள்- 2 (பத்தாம் வகுப்பு இயல் 4 முதல் 6 வரை)- TNPSC GROUP IV - GENARAL TAMIL - Eligibility cum Scoring Test - MODEL QUESTION PAPER WITH ANSWER KEY PDF FREE DOWNLOAD (2022 New Syllabus)

 

TNPSC GROUP IV  
GENARAL TAMIL - Eligibility cum Scoring Test

டி.என்.பிஸ்.சி குரூப் 4 தேர்வு
மாதிரி வினாத்தாள் - 2

விடையுடன் இலவச பதிவிறக்கம்


Batch - 2

(பத்தாம் வகுப்பு இயல் 4 முதல் 6 வரை)


மாதிரி வினாத்தாள் -2  👇

மாதிரி வினாத்தாள் - 2 (Batch-2)



1. பூமி உருவான விதம் குறித்து பரிபாடல் நூலில் பாடிய சங்கப் புலவர் யார் ?

A) நக்கீரர்

B) கீரந்தையர்

C) கபிலர்

D) கணிமேதாவியார்

E) விடை தெரியவில்லை



2. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க - Nonotechnology

A) மீநுண்தொழில் நுட்பம்

B) உயர்தொழில் நுட்பம்

C) விண்வெளி தொழில் நுட்பம்

D) உயிரித் தொழில் நுட்பம்

‘E) விடை தெரியவில்லை



3. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாடியவர் யார் ?

A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

B) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

C) மகாகவி பாரதியார்

D) நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பிள்ளை

E) விடை தெரியவில்லை



4. “விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்” என்ற திருவிளையாடல் புராணத்தின் பாடல் அடியில் “மீனவன்” என்ற சொல் யாரைக் குறிக்கும் ?

A) பாண்டிய மன்னன்
 
B) சேர மன்னன்

C) சோழ மன்னன் 

D) சிவபெருமான்

E) விடை தெரியவில்லை

5. சொல்லேருழவனுக்கு கவரி வீசிய வில்லேருழவன் யார் ?

A) யானைக்கட்சேய் மாத்தரஞ்சேரல் இரும்பொறை

B) குசேல பாண்டியன்

C) மோசிகீரனார்

D) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

E) விடை தெரியவில்லை



6. மொழி பெயர்த்தல் என்ற தொடர் தொல்காப்பியத்தில் எந்த இயலில் கையாளப்பட்டுள்ளது ?

A) மரபியல் (98)

B) மெய்ப்பாட்டியல் (98)

C) உவமையியல் (98)

D) செய்யுளியல் (98)

E) விடை தெரியவில்லை



7. வடமொழிக் கதைகளை தழுவி படைக்கப்பட்ட காப்பியங்கள் எவை ?

A) பெருங்கதை, சீவக சிந்தாமணி

B) கம்பராமாயணம், வில்லிபாரதம்

C) சிலப்பதிகாரம், மணிமேகலை

D) A மற்றும் B

E) விடை தெரியவில்லை



8. கருத்துப் பகிர்வைத் தருவதால் “பயன்கலை” என்று அழைக்கப்படும் கலை எது ?

A) நாடகக் கலை

B) மொழி பெயர்ப்பு

C) நாட்டியக் கலை

D) இசைக் கலை

E) விடை தெரியவில்லை



9. தனிநாயகம் அடிகளாரின் கூற்றுப்படி பிரான்சு தேசிய நூற்கூடத்தில் (Bibliothque National) உள்ள அச்சிடப்பெறாத நூல் ?

A) மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்

B) சரளிப் புத்தகம்

C) புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்

D) இவை அனைத்தும்

E) விடை தெரியவில்லை



10. இலக்கணக் குறிப்பு தருக - கேள்வியினான்

A) வினையாலனையும் பெயர் B) பெயரெச்சம்

C) தன்மை பன்மை வினைமுற்று D) அன்மொழித்தொகை

E) விடை தெரியவில்லை

11. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க ?

A) தார் - மாலை

B) முடி - தலை

C) முனிவு - சினம்

D) தமர் – பகைவர்

E) விடை தெரியவில்லை



12. 1907 மார்ச் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் “சதாவதானி” பட்டம் பெற்றவர் யார் ?

A) வீரமாமுனிவர்

B) அப்துல் காதிர் மரைக்காயர்

C) செய்குதம்பிப் பாவலர்

D) உமறுப் புலவர்

E) விடை தெரியவில்லை



13. 1. குலசேகராழ்வார் “வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்

2. பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்

என்ற அடிகளில் அமைந்துள்ள வழுவமைதி எது ?

A) 1. பால் வழுவமைதி – 2. திணை வழுவமைதி

B) 1. திணை வழுவமைதி – 2. பால் வழுவமைதி

C) 1. இட வழுவமைதி – 2. திணை வழுவமைதி

D) 1. கால வழுவமைதி – 2. இட வழுவமைதி

E) விடை தெரியவில்லை



14. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற நூலை இயற்றியவர் ?

A) கமலாலயன்

B) ஈரோடு தமிழன்பன்

C) பரலி சு.நெல்லையப்பர்

D) சுஜாதா

E) விடை தெரியவில்லை



15. பெருமாள் திருமொழி தொடர்பான சரியான கூற்று எது ?

I. நாலயிர திவ்விய பிரபந்தத்தில் 5வது திருமொழியாக அமைந்துள்ளது.

II. இதனைப் பாடியவர் – குலசேகராழ்வார்

III. காலம் – 8ஆம் நூற்றாண்டு

IV. இதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 105

A) I மற்றும் II சரி

B) II மற்றும் III சரி

C) III மற்றும் IV சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



16. இசைப்பாடல் வகையைச் சார்ந்த நூல், சங்க நூல்களுல் பண்ணோடு பாடப்பட்ட நூல் என்ற சிறப்பினை பெற்ற “ஓங்கு” என்ற அடைமொழியினைக் கொண்ட பரிபாடல் நூலில் கிடைக்கப்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

A) 22

B) 24

C) 26

D) 28

E) விடை தெரியவில்லை



17. ஆங்கிலச் சொல்லிற்குரிய சரியான தமிழ்ச் சொல்லை எழுதுக ?

A) Transcribe - படியெடுத்தல்

B) Transfer - உருமாற்றுதல்

C) Transform - செயல்படுத்துதல்

D) Transact - மாறுதல்

E) விடை தெரியவில்லை



18. Hundred railsleepers were washed away என்ற தொடரில் “Railsleepers” என்ற சொல்லின் பொருளைக் காண்க ?

A) உறங்கிக் கொண்டிருந்த தொடர்வண்டி பயணிகள்

B) தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டை

C) பயணிகள் உறங்கும் தொடர்வண்டிப் பெட்டி

D) தொடர் வண்டி நிலையத்தின் மேலாளர்.

E) விடை தெரியவில்லை



19. பரிபாடல் அடியில் “விசும்பும் இசையும்” என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?

A) வானத்தையும் பாட்டையும்

B) வானத்தையும் புகழையும்

C) வானத்தையும், பேரொலியையும்

D) வானத்தையும், பூமியையும்

E) விடை தெரியவில்லை



20. சொல்லுக்குரிய சரியான பொருள் பொருந்தி வரும் இணையைக் கண்டறிக ?

1. விசும்பு - வானம்

2. ஊழி - யுகம்

3. ஊழ் - முறை

4. தண்பெயல் – குளிர்ந்த மழை

5. பீடு - சிறப்பு

A) 1, 2, 3 மற்றும் 4 சரி

B) 1, 2 மற்றும் 5 சரி

C) 3 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



21. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

- - - - - - - - - - - - - - - - - - - -

சிறிய ஆகப் பெரியோன் தெரியின் – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

A) திருவாசகம்

B) திருப்பதிகம்

C) திருவாய்மொழி

D) நற்றிணை

E) விடை தெரியவில்லை



22. “சில நேரங்களில் உண்மை, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்து விடுகிறது, அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும்” என்றவர் ?

A) ஜான் வீலர்

B) ஐன்ஸ்டன்

C) ஸ்டீபன் ஹாக்கிங்

D) கலீலியோ

E) விடை தெரியவில்லை



23. கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற அடிகள் இடம் பெற்ற நூல் ?

A) பன்னிருபாட்டியல்

B) பதிற்றுப் பத்து

C) புறநானூறு

D) அகநானூறு

E) விடை தெரியவில்லை



24. பொருத்துக

ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் பொருத்துக

a. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - 1. கண முத்தையா

b. அன்றாட வாழ்வில் அறிவியல் - 2. நீலமணி

c. காலம் - 3. ச.தமிழ்ச் செல்வன்

d. வால்காவிலிருந்து கங்கை வரை - 4. ஸ்டீபன் ஹாக்கிங்



a b c d

A 3 1 2 4

B 1 2 3 4

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.





25. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் ?

A) ஜான் வீலர்

B) ஐன்ஸ்டன்

C) ஸ்டீபன் ஹாக்கிங்

D) கலீலியோ

E) விடை தெரியவில்லை



26. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் – என்ற அடிகள் இடம் பெற்ற நூல் ?

A) திருவாசகம்

B) திருப்பள்ளியெழுச்சி

C) பெருமாள் திருமொழி

D) பரிபாடல்

E) விடை தெரியவில்லை



27. செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு,

தண்பெயல் தலைஇய ஊழியும் என்ற கீரந்தையார் எழுதிய பரிபாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள சொல்லிசை அளபெடைச் சொல்லை எழுத்து எழுதுக.

A) செந்தீ

B) ஊழியும்

C) தண்பெயல்

D) தலைஇய

E) விடை தெரியவில்லை



28. அஃறிணைக்குரிய பால்வகை எது ?

A) ஒன்றன் பால்

B) ஆண்பால்

C) பெண்பால்

D) பலர்பால்

E) விடை தெரியவில்லை



29. முன்னிலை வினைச் சொற்கள் எவை ?

A) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்

B) நீ, நீர், நீவிர், நீங்கள்

C) வந்தான், சென்றான், பறந்தன

D) வந்தேன், வந்தோம்

E) விடை தெரியவில்லை



30. “மூவிடங்கள்” – பொருந்தாத சொல்லைக் காண்க?

A) படர்க்கை B) விளி

C) முன்னிலை D) தன்மை

E) விடை தெரியவில்லை



31. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) வழுவமைதி

B) வழு

C) வழாநிலை

D) பொருள்கோள்

E) விடை தெரியவில்லை



32. இலக்கண முறையின்றிப் பிழையுடன் பேசுவதும் எழுதுவதும் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) மங்கலம்

B) வழு

C) வழாநிலை

D) குழுஉக்குறி

E) விடை தெரியவில்லை





33. தொடருக்கேற்ற வழுவின் சரியான வகையினை கண்டறிக – செழியன் வந்தது

A) பால் வழு

B) இட வழு

C) திணை வழு

D) கால வழு

E) விடை தெரியவில்லை



34. மரபு வழு தொடரைக் காண்க.

A) கண்ணகி உண்டான்

B) தென்னந்தோட்டம்

C) நீ வந்தேன்

D) நேற்று வருவான்

E) விடை தெரியவில்லை





35. “கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்“ என்ற பாரதியின் அடிகளில் இடம்பெற்றுள்ள வழுவமைதி எது ?

A) மரபு வழுவமைதி

B) திணை வழுவமைதி

C) பால் வழுவமைதி

D) இட வழுவமைதி

E) விடை தெரியவில்லை





36. தொடருக்கேற்ற வழுவின் சரியான வகையினை கண்டறிக – ஒரு விரலைக் காட்டி சிறியதோ ? பெரியதோ ? எனக் கேட்டல்.

A) விடை வழு

B) இட வழு

C) திணை வழு

D) வினா வழு

E) விடை தெரியவில்லை



37. பொருத்தமான இணையைக் கண்டறிக ?

A) இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர் – இட வழுவமைதி

B) வாடா இராசா வாடா கண்ணா என்று மகளை அழைப்பது – கால வழுவமைதி

C) என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது – பால் வழுவமைதி

D) மாண்புமிகு அமைச்சர் நாள் விழாவிற்கு வருகிறார் – திணை வழுவமைதி

E) விடை தெரியவில்லை



38. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் – எவ்வகை வழுவமைதி ?

A) திணை வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

E) விடை தெரியவில்லை



39. படர்க்கையை முன்னிலையாகவும், முன்னிலையை தன்மையாகவும், தன்மையை படர்க்கையாகவும் மாற்றுக.

“அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை”

A) நீ என்னிடமும், அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

B) அவன் என்னிடமும், உன்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை

C) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை

D) அவன் செய்தியை உன்னிடமும் என்னிடமும் இன்னும் கூறவில்லை.

E) விடை தெரியவில்லை



40. பொருத்துக

a) ஆண்பால் - 1. பசுக்கள்

b) பெண்பால் - 2. மருதன்

c) பலர்பால் - 3. அரசி

d) பலவின் பால் - 4. பெண்கள்





a b c d

A 3 1 2 4

B 2 3 4 1

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



41. பாரதியாரின் மொழிபெயர்ப்பை பொருத்துக

a) Exibition - 1. வேலை நிறுத்தம்

b) Revolution - 2. புரட்சி

c) Strike - 3. இருப்புப் பாதை

d) East Indian Railways - 4. பொருட்காட்சி

a b c d

A 4 2 1 3

B 2 3 4 1

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை



42. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது “மொழி பெயர்ப்பு” என்றவர் ?

A) மணவை முஸ்தபா

B) மு.கு.ஜகந்நாதர்

C) தொல்காப்பியர்

D) யூமா வாசுகி

E) விடை தெரியவில்லை



43. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர் செப்பேட்டுக் குறிப்பின் மூலம் புலனாகும் செய்தி யாது ?

A) மகாபாரதப் போரில் தமிழ்பேசும் மதுராபுரிச் சங்கத்தினர் ஈடுபட்டனர்

B) பல்லவர் காலத்தில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

C) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

D) மதுராபுரிச் சங்கத்தில் மகாபாரத நூல் அரங்கேற்றப்பட்டது.

E) விடை தெரியவில்லை



44. கீதாஞ்சலி நூலை இயற்றியவர் யார் ?

A) இரவீந்திரநாத் தாகூர் B) டாக்டர் என்.ஸ்ரீதர்

C) முத்து மீனாட்சி D) யூமா வாசுகி

E) விடை தெரியவில்லை





45. அதிகமாக தமிழ் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் எவை ?

A) 1. ஆங்கிலம், 2.தெலுங்கு, 3.மலையாளம், 4. இந்தி

B) 1. ஆங்கிலம், 2.இந்தி, 3.தெலுங்கு, 4.மலையாளம்

C) 1. ஆங்கிலம், 2. இந்தி, 3. மலையாளம், 4. தெலுங்கு.

D) 1. ஆங்கிலம், 2. மலையாளம், 3.தெலுங்கு, 4. இந்தி

E) விடை தெரியவில்லை



46. காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

பேசி மகிழ் நிலை வேண்டும் – என்ற குலோத்துங்கன் எழுதிய வரிகளில் “காசினி” என்ற சொல்லின் பொருள் ?

A) கீரை

B) புன்னிய தலம்

C) கடல்

D) உலகம்

E) விடை தெரியவில்லை



47. நீதி வெண்பா நூலை இயற்றியவர் ?

A) கா.ப.செய்குதம்பிப் பாவலர்

B) ஔவையார்

C) சிவப்பிரகாசர்

D) உலகநாதர்

E) விடை தெரியவில்லை



48. தேமதுர தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும் – என்று பாடியவர் ?

A) கவிமணி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

E) விடை தெரியவில்லை



49. கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம் ?

A) நாயக்கர் கால இலக்கியம்

B) சங்கம் மருவிய கால இலக்கியம்

C) சங்க இலக்கியம்

D) சிற்றிலக்கியங்கள்

E) விடை தெரியவில்லை







50. பிரித்து எழுதுக - அருந்துணை ?

A) அருமை + துணை

B) அருந் + துணை

C) அரு + துணை

D) அருந்து + துனை

E) விடை தெரியவில்லை



51. திருவிளையாடற் புராணம் தொடர்பான சரியான விடையைத் தேர்ந்தெடு ?

1. இயற்றியவர் – பரஞ்சோதி முனிவர், இவர் பிறந்த ஊர் – திருமறைக்காடு (வேதாரண்யம்), காலம் – 17ஆம் நூற்றாண்டு.

2. திருவிளையாடற் புராணத்தில் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் உள்ளன.

3. திருவிளையாடற் புராணத்தில் 64 பாடல்கள் உள்ளன.

4. பரஞ்சோதி முனிவர் இயற்றிய பிற நூல்கள் – வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலி வெண்பா, மதுரை பதிற்றுப் பத்தந்தாதி.

A) 1 மட்டும் சரி

B) 1, 2 மற்றும் 3 சரி

C) 1 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



52. மாணவரிடம் “இந்தக் கவிதையின் பொருள் யாது ” என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா ?

A) அறிவினா

B) அறியாவினா

C) ஐயவினா

D) கொளல் வினா

E) விடை தெரியவில்லை



53. ஆசிரியரிடம் “இந்தக் கவிதையின் பொருள் யாது ” என்று மாணவர் கேட்டல் எவ்வகை வினா ?

A) அறிவினா

B) அறியாவினா

C) ஐயவினா

D) கொளல் வினா

E) விடை தெரியவில்லை



54. இச்செயலை செய்தது மங்கையா ? மணிமேகலையா ? என்று வினவுவது எவ்வகை வினா ?

A) அறிவினா B) அறியாவினா

C) ஐயவினா D) கொளல் வினா

E) விடை தெரியவில்லை



55. பொருத்துக

a) ஆசிரியரின் டைரி - 1. வெ.ஸ்ரீராம்

b) குட்டி இளவரசன் - 2. வல்லிக் கண்ணன்

c) சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று - 3. உமா மகேஸ்வரி

d) கற்பாவை - 4. எம்.பி.அகிலா



a b c d

A 3 1 2 4

B 1 2 3 4

C 2 3 4 1

D 4 1 2 3

E விடை தெரியவில்லை.



56. வெளிப்படை விடை எது

A) மறை விடை

B) ஏவல் விடை

C) வினா எதிர் வினாதல் விடை

D) உற்றது உரைத்தல் விடை

E) விடை தெரியவில்லை



57. குறிப்பு விடை எது ?

A) இனமொழி விடை

B) சுட்டு விடை

C) மறை விடை

D) நேர் விடை

E) விடை தெரியவில்லை



58. இது செய்வாயா என்று வினவியதற்கு “நீயே செய்” என்று விடையளிப்பது ?

A) மறை விடை

B) ஏவல் விடை

C) வினா எதிர் வினாதல் விடை

D) உற்றது உரைத்தல் விடை

E) விடை தெரியவில்லை



59. என்னுடன் ஊருக்கு வருவாயா என்று வினவியதற்கு “வராமல் இருப்பேனா” என்று விடையளிப்பது ?

A) மறை விடை

B) ஏவல் விடை

C) வினா எதிர் வினாதல் விடை

D) உற்றது உரைத்தல் விடை

E) விடை தெரியவில்லை

60. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது - இக்குறளை பொருள்கொள்ள வேண்டிய முறை ?

A) முறை நிரல் நிறைப்பொருள்கோள்

B) எதிர் நிரல் நிறைப்பொருள்கோள்

C) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

D) தாப்பிசைப் பொருள்கோள்

E) விடை தெரியவில்லை



61. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர் - இக்குறளை பொருள்கொள்ள வேண்டிய முறை ?

A) முறை நிரல் நிறைப்பொருள்கோள்

B) எதிர் நிரல் நிறைப்பொருள்கோள்

C) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

D) தாப்பிசைப் பொருள்கோள்

E) விடை தெரியவில்லை



62. பொருத்துக

a) ஊழ் ஊழ் - 1. பண்புத் தொகை

b) வளர்வானம் - 2. அடுக்குத் தொடர்

c) செந்தீ - 3. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

d) வாரா - 4. வினைத் தொகை



a b c d

A 3 1 2 4

B 2 4 1 3

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



63. ஆலத்து மேல குவளை குளத்துல

வாலின் நெடிய குரங்கு - இவ்வடிகளை பொருள்கொள்ள வேண்டிய முறை ?

A) முறை நிரல் நிறைப்பொருள்கோள்

B) எதிர் நிரல் நிறைப்பொருள்கோள்

C) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

D) தாப்பிசைப் பொருள்கோள்

E) விடை தெரியவில்லை



64. அரசே தருக – “தருக” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. ?

A) தா B) தரு

C) த D) தருக

E) விடை தெரியவில்லை





65. குழந்தை வந்தது - “வந்தது” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. ?

A) வந்து

B) வந்த

C) வா

D) வந்தான்

E) விடை தெரியவில்லை



66. “ஓடு” என்ற வேர்ச்சொல்லை வினையெச்சத் தொடராக்கு

A) அருணா ஓடினாள்

B) ஓடிய அருணா

C) ஓடி வந்தாள்

D) அருணா ஓடாதே

E) விடை தெரியவில்லை



67. தவறான கூற்று எது ?

A) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளிப்பது சதாவதானம் எனப்படும்

B) சதாவதானி என்ற பட்டம் பெற்றவர் – செய்குதம்பிப் பாவலர்

C) செய்குதம்பிப் பாவலர் சீறாபுராணத்திற்கு உரை எழுதினார்

D) செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர் - தச்சநல்லூர்

E) விடை தெரியவில்லை



68. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துரை – இவ்வடியில் இடம்பெற்றுள்ள கொற்கை என்னும் ஊர் தற்போது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

A) திருச்சிராப்பள்ளி

B) தஞ்சாவூர்

C) தூத்துக்குடி

D) திருவண்ணாமலை

E) விடை தெரியவில்லை



69. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே –

தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ” என்று பாடியவர் ?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) ஔவையார்

D) ஒக்கூர் மாசாத்தியார்

E) விடை தெரியவில்லை





70. சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் – குமர குருபரர்

II. பிள்ளைத் தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

III. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரை குழந்தையாகக் கருதி பாடப்படுவது பிள்ளைத் தமிழ்

IV. பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்துப்பாடல்கள் என 100 பாடல்கள் இதில் இடம்பெறும். பொதுவான பருவங்கள் ஏழு.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



71. பொருந்தாத இணையைக் கண்டறிக ?

A) பண்டி – வயிறு

B) கொன்றை வேந்தன்

C) உழுவை - சிங்கம்

D) முச்சி – தலையுச்சிக் கொண்டை

E) விடை தெரியவில்லை



72. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான் – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

A) சொல் பின்வரு நிலையணி

B) வஞ்சப் புகழ்ச்சி அணி

C) எடுத்துக்காட்டு உவமையணி

D) உவமை அணி

E) விடை தெரியவில்லை



73. ஆடலரசி மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் ஒன்று குடக்கூத்து, இதற்கு தற்காலத்தில் வழங்கப்படும் வேறு பெயர் எது ?

A) மயிலாட்டம்

B) கும்பாட்டம்

C) தேவராட்டம்

D) சேர்வையாட்டம்

E) விடை தெரியவில்லை



74. நீரற வறியாக் கரகத்து – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) புறநானூறு

B) சிலப்பதிகாரம்

C) குறுந்தொகை

D) கம்பராமாயணம்

E) விடை தெரியவில்லை



75. காவடியாட்டம் – என்ற சொல்லில் “கா” என்பதன் பொருள் ?

A) முருகன்

B) சோலை

C) பாரந்தாங்கும் கோல்

D) அழகு

E) விடை தெரியவில்லை



76. ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டம், “தேவதுந்துபி” என்று அழைக்கப்படும் உறுமி என்ற இசைக்கருவி பயன்படுத்தப்படும் ஆட்டம் என்ற சிறப்புகளைப் பெற்ற நாட்டுப்புற கலை எது ?

A) மயிலாட்டம்

B) கரகாட்டம்

C) பொய்க்கால் குதிரையாட்டம்

D) தேவராட்டம்

E) விடை தெரியவில்லை



77. “போலச் செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளுல் ஒன்று

A) மயிலாட்டம்

B) கரகாட்டம்

C) பொய்க்கால் குதிரையாட்டம்

D) தேவராட்டம்

E) விடை தெரியவில்லை



78. சரியான கூற்றினை கண்டறிக ?

A) நாடகக் கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்றவர் – கூத்துப்பட்டறை ந.முத்துசாமி

B) இவர் கலைஞாயிறு என்று போற்றப்படுகிறார்.

C) இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதினையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

D) இவை அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



79. மழைவேண்டி நிகழ்த்தப்படும் தெருக்கூத்து எது ?

A) இராச சூய யாகம்

B) அருச்சுனன் தபசு

C) கர்ண மோட்சம்

D) பதினெட்டாம் போர்

E) விடை தெரியவில்லை







80. இலக்கணக் குறிப்பறிக

1. ஆடுக 2. குண்டலமும் குழைக்காதும்

A) 1.வியங்கோள் வினைமுற்று - 2. முற்றும்மை

B) 1. வினைமுற்று - 2. உம்மைத் தொகை

C) 1. வியங்கோள் வினைமுற்று - 2. உம்மைத் தொகை

D) 1. வியங்கோள் வினைமுற்று - 2. எண்ணும்மை

E) விடை தெரியவில்லை



81. குமர குருபரர் புலமை பெற்றிருந்த மொழி எது ?

A) தமிழ்

B) வடமொழி

C) இந்துஸ்தானி

D) இவை அனைத்தும்

E) விடை தெரியவில்லை



82. பொருத்துக

a) திருக்குறள் நீதி இலக்கியம் - 1. உமா மகேஸ்வரி

b) தேன்மழை - 2. அ.கா.பெருமாள்

c) நாட்டார் கலைகள் - 3. க.த.திருநாவுக்கரசு

d) நட்சத்திரங்கள் நடுவே - 4. சுரதா



a b c d

A 3 4 2 1

B 1 2 3 4

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



83. சரியாக அமைந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைக் காண்க

A) கலைப் படைப்புள் - Terminology

B) கலைச் சொல் – Astehtics

C) முருகியல் – Artifacts

D) தொன்மம் – Myth

E) விடை தெரியவில்லை



84. மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதொரு அழியா அழகுடையான் – என்று கம்பராமாயத்தில் புகழப்படுபவன் யார் ?

A) இராமன்

B) இராவணன்

C) பரதன்

D) அனுமன்

E) விடை தெரியவில்லை

85. கீழ்க்காணும் சா.கந்தசாமி எழுதிய நூல்களில் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற நூல் எது ?

A) சாயாவனம்

B) விசாரணை கமிஷன்

C) சூர்ய வம்சம், தக்கையின் மீது நான்கு கண்கள்

D) தொலைந்து போனவர்கள், சாந்தகுமாரி

E) விடை தெரியவில்லை



86. சரியான கூற்றை தேர்வு செய்க ?

I. கம்ப ராமாயத்திற்கு கம்பர் இட்ட பெயர் - இராமாவதாரம்

II. கல்வியில் பெரியர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று கம்பர் புகழப்படுகிறார்.

III. கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல். கம்பர் பிறந்த ஊர் – சோழ நாட்டிலுள்ள திருவழுந்தூர்

IV. கம்பர் இயற்றிய நூல்கள் – சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



87. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

B) முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

C) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

D) நெய்தல் – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

E) விடை தெரியவில்லை



88. திணைக்குரிய சிறுபொழுதுடன் பொருத்துக

a) குறிஞ்சி - 1. எற்பாடு

b) முல்லை - 2. வைகறை

c) மருதம் - 3. மாலை

d) நெய்தல் - 4. யாமம்

a b c d

A 4 3 2 1

B 1 2 3 4

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



89. பொருந்தாத இணையை கண்டறிக ?

A) இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி

B) முதுவேனில் காலம் – ஆனி, ஆடி

C) கார் காலம் – ஐப்பசி, கார்த்தினை

D) முன்பனிக் காலம் – மார்கழி, தை

E) விடை தெரியவில்லை



90. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) காலை – காலை 6 மணிமுதல் 10 மணி வரை

B) வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

C) எற்பாடு – காலை 10 மணி முதல் 2 மணி வரை

D) யாமம் – இரவு 10 மணி முதல் 2 மணி வரை

E) விடை தெரியவில்லை



91. தொடர் வகையினை அறிக – மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்

A) தனிச் சொற்றொடர்

B) தொடர் சொற்றொடர்

C) கலவைச் சொற்றொடர்

D) எதிர்மறைத் தொடர்

E) விடை தெரியவில்லை



92. தொடர் வகையினை அறிக – இனியநிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார் ; பரிசைத் தட்டிச் சென்றார்

A) தனிச் சொற்றொடர்

B) தொடர் சொற்றொடர்

C) கலவைச் சொற்றொடர்

D) எதிர்மறைத் தொடர்

E) விடை தெரியவில்லை



93. தொடர் வகையினை அறிக – மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்

A) தனிச் சொற்றொடர்

B) தொடர் சொற்றொடர்

C) கலவைச் சொற்றொடர்

D) எதிர்மறைத் தொடர்

E) விடை தெரியவில்லை



94. தொடர் வகையினை அறிக – கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

A) தனிச் சொற்றொடர்

B) தொடர் சொற்றொடர்

C) கலவைச் சொற்றொடர்

D) எதிர்மறைத் தொடர்

E) விடை தெரியவில்லை

95. பாலை நிலத்திற்குரிய ஊர் எது ?

A) குறும்பு

B) சிறுகுடி

C) பாடி, சேரி

D) பட்டினம், பாக்கம்

E) விடை தெரியவில்லை



96. அணிகலன்கள் அணியப்படும் உறுப்புகளுடன் பொருந்தாத இணையைக் கண்டறிக

A) சிலம்பு, கிண்கிணி - கால்

B) சுட்டி - நெற்றி

C) குண்டலம் - காது

D) சூழி - இடை

E) விடை தெரியவில்லை



97. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது ?

A) கழங்கு

B) சிற்றில்

C) சிறுபறை

D) சிறுதேர்

E) விடை தெரியவில்லை



98. வெறும் பொழுது என்ற நூலை இயற்றியவர் யார் ?

A) உமா மகேஸ்வரி

B) கலைஞர் மு.கருணாநிதி

C) இலக்குவனார்

D) அறிஞர் அண்ணா

E) விடை தெரியவில்லை



99. நீதி நெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார் ?

A) குமர குருபரர்

B) பரலி சு.நெல்லையப்பர்

C) முத்துக்குமார சுவாமி

D) சிவப்பிரகாசர்

E) விடை தெரியவில்லை

100. மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) சிலப்பதிகாரம்

B) பதிற்றுப்பத்து

C) புறநானூறு

D) கம்பராமாயணம்

E) விடை தெரியவில்லை

இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 

Batch-1

டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான 30 மாதிரி வினாத்தாள்கள் விடையுடன் இலவச பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇




















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)












Batch - 2 

மாதிரி வினாத்தாள் - 1

மாதிரி வினாத்தாள் 2-ஐ PDF ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

👇



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post