Batch - 2
TNPSC GROUP IV
GENARAL TAMIL - Eligibility cum Scoring Test
டி.என்.பிஸ்.சி குரூப் 4 தேர்வு
மாதிரி வினாத்தாள் - 3
(பத்தாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை)
விடையுடன் இலவச பதிவிறக்கம்
PDF FILE FREE DOWNLOAD
இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள
Batch-1
டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பொதுத் தமிழ் 30 மாதிரி வினாத்தாள்கள் (PDF File) விடையுடன் இலவச பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 1)
மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 2)
மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 3)
மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 4)
மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)
மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)
Batch - 2
இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான Batch-2 பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்களை (PDF File) இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 3
(பத்தாம் வகுப்பு இயல் 7 முதல் இயல் 9 வரை)
(100வது வினாவின் இறுதியில் இவ்வினாத்தாளினை விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது)
1. தமிழ்நாடு, பாரதமணி, பாரத தேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணி புரிந்தவர் யார் ?
A) ம.பொ.சிவஞானம்
B) கு.ப.இராஜகோபாலன்
C) இரா,கிருஷ்ணமூர்த்தி
D) மார்ஷல் நேசமணி
E) விடை தெரியவில்லை
2. மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கிய ம.பொ.சிவஞானத்தின் முழக்கத்தில் “மாலவன் குன்றம் – வேலவன் குன்றம்” என்பது எதனைக் குறிக்கும்
A) வேங்கடமலை – திருத்தணி மலை
B) திருத்தணி மலை - வேங்கடமலை
C) இமய மலை – பொதிகை மலை
D) பொதிகை மலை - இமயமலை
E) விடை தெரியவில்லை
3. கல் இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது ?
A) சங்க இலக்கியங்கள்
B) சின்னமனூர் செப்பேடுகள்
C) மெய்க்கீர்த்திகள்
D) அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள்
E) விடை தெரியவில்லை
4. “உரைப்பாட்டு மடை” என்ற தமிழ் நடை கையாளப்பட்டுள்ள இலக்கியம் எது ?
A) கம்பராமாயணம்
B) சீவக சிந்தாமணி
C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
E) விடை தெரியவில்லை
5. ம.பொ.சிவஞானத்தின் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்தவர் யார் ?
A) மார்ஷல் நேசமணி
B) பெருந்தலைவர் காமராசர்
C) மங்கலக்கிழார்
D) இராச கோபாலாச்சாரி
E) விடை தெரியவில்லை
6. சீத்தலைச் சாத்தனாரை நோக்கி இளங்கோவடிகள் தெரிவித்த உரையினை சரியான வரிசையில் அமைக்க ?
A) நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யும்
B) ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் யாம்
C) யாம் நாட்டுதும் ஓர் பாட்டுடைச் செய்யுள்
D) பாட்டுடைச் செய்யுள் ஓர் நாட்டுதும் யாம்
E) விடை தெரியவில்லை
7. இலக்கணக் குறிப்பறிக - பயில்தொழில்
A) அன்மொழிக் தொகை
B) வினைத்தொகை
C) பண்புத்தொகை
D) இருபெயரொட்டு பண்புத் தொகை
E) விடை தெரியவில்லை
8. பொருந்தாத சொல் எது ?
A) குரல்
B) துத்தம்
C) கைக்கிளை
D) கல்யாணி
E) விடை தெரியவில்லை
9. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் “பெருங்குணத்துக் காதலாள்” என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) கண்ணகி
B) மாதவி
C) கோவலன்
D) கவுந்தியடிகள்
E) விடை தெரியவில்லை
10. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று அடைந்த இடம்
A) திருமால் குன்றம் (அழகர் மலை)
B) வேங்கைக் கானல்
C) தென்னவன் சிறுமலை
D) கொடும்பாளூர்
E) விடை தெரியவில்லை
11. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க ?
A) பாசவர் - வெற்றிலை விற்போர்
B) ஓசுநர் - எண்ணெய் விற்போர்
C) கண்ணுள் வினைஞர் - ஓவியர்
D) மண்ணீட்டாளர் – கொத்தனார்
E) விடை தெரியவில்லை
12. கோவலனையும், கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் ?
A) மாதவி
B) சதுக்கத்து பூதம்
C) சீத்தலைச் சாத்தனார்
D) கவுந்தியடிகள்
E) விடை தெரியவில்லை
13. மரூஉச் சொல் அல்லாதது எது ?
A) மயிலை
B) புதுச்சேரி
C) குடந்தை
D) நாகை
E) விடை தெரியவில்லை
14. “இசைப் பேரரசி” என்று நேருவால் அழைக்கப்பட்டவர் யார் ?
A) பால சரஸ்வதி
B) ராஜம் கிருஷ்ணன்
C) கிருஷ்ணம்மான் ஜெகந்நாதன்
D) மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி
E) விடை தெரியவில்லை
15. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம,பொ.சி கருதிய நூல் எது ?
A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
E) விடை தெரியவில்லை
16. “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்னும் வரலாற்கு புதினத்தை எழுதியவர் யார் ?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ராஜம் கிருஷ்ணன்
D) பால பாரதி
E) விடை தெரியவில்லை
17. ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல்லில் பொருந்தாத இணையைக் காண்க ?
A) Renaissance - மறுமலர்ச்சி
B) Revivalism - மீட்டுருவாக்கம்
C) Philosopher - கைதி
D) Belief - நம்பிக்கை
E) விடை தெரியவில்லை
18. பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும் – இவ்வடியில் விளக்கப்படும் வீதி எது ?
A) கருவூர்ப்பாக்கம் , புகார் நகரம்
B) மதுரை கூலவாணிகன் வீதி
C) வஞ்சி மாநகர் வீதி
D) இவை அனைத்தும்
E) விடை தெரியவில்லை
19. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதை எந்த காண்டத்தில் அமைந்துள்ளது ?
A) புகார்க் காண்டம்
B) மதுரைக் காண்டம்
C) வஞ்சிக் காண்டம்
D) திருவாலவாய்க் காண்டம்
E) விடை தெரியவில்லை
20. இராஜம் கிருஷ்ணன் எழுதிய பின் வரும் நூல்களுல் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது ?
A) கரிப்பு மணிகள்
B) குறிஞ்சித் தேன்
C) வேருக்கு நீர்
D) மண்ணகத்துப் பூந்துளிகள்
E) விடை தெரியவில்லை
21. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார் ?
A) சின்னப்பிள்ளை
B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
C) பால சரஸ்வதி
D) இராஜம் கிருஷ்ணன்
E) விடை தெரியவில்லை
22. “இந்திய அரசின் தாமரைத்திரு விருதினையும், சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருதினையும், சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருதினையும் பெற்றவர் யார் ?
A) சின்னப்பிள்ளை
B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
C) பால சரஸ்வதி
D) இராஜம் கிருஷ்ணன்
E) விடை தெரியவில்லை
23. களஞ்சியம் குழுவைத் தொடங்கி தொண்டாற்றி, இந்திய பாரதப் பிரதமரிடம் பெண் ஆற்றல் விருதினையும்(ஸ்திரீ சக்கித புரஸ்கர்), இந்திய அரசின் தாமரைத்திரு விருதினையும், தமிழக அரசின் ஔவையார் விருதினையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதினையும் பெற்ற பெருந்தகையாளர் யார் ?
A) சின்னப்பிள்ளை
B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
C) பால சரஸ்வதி
D) இராஜம் கிருஷ்ணன்
E) விடை தெரியவில்லை
24. பொருத்துக
a. சுண்ணம் - 1. நெய்பவர் (சாலியர்)
b. காருகர் - 2. பவளம்
c. தூசு - 3. நறுமணப்பொடி
d. துகிர் - 4. பட்டு
a b c d
A 3 1 2 4
B 1 2 3 4
C 2 3 4 1
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
25. உழுபவருக்கே நில உரிமை இயக்கத்தை (Land for the Tillers Freedom - LAFTI) தொடங்கியவர் யார் ?
A) சின்னப்பிள்ளை
B) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
C) பால சரஸ்வதி
D) இராஜம் கிருஷ்ணன்
E) விடை தெரியவில்லை
26. அகர வரிசையில் அமைக்க
A) உழவு, ஏர், மண், மாடு
B) ஏர், மாடு, மண், உழவு
C) ஏர், உழவு, மாடு, மண்
D) ஏர், உழவு, மண், மாடு
E) விடை தெரியவில்லை
27. பகர்னவர் திதிதிரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருகையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் என்ற இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகார அடியில் பயின்று வந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
A) பட்டினும் - கட்டு
B) பகர்னவர் - பட்டினும்
C) தூசும் - ஆரமும்
D) பட்டினும் - நூலினும்
E) விடை தெரியவில்லை
28. 30.09.1932-இல் “தமிழா ! துள்ளி எழு” என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் வழங்கியதற்காக சிறைபட்டவர் யார் ?
A) ம.பொ.சி
B) மார்ஷல் நேசமணி
C) மங்கலக்கிழார்
D) படாஸ்கர்
E) விடை தெரியவில்லை
29. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர்
யார் ?
A) ம.பொ.சி
B) மார்ஷல் நேசமணி
C) பெருந்தலைவர் காமராசர்
D) ராஜாஜி
E) விடை தெரியவில்லை
30. கோவலன் கண்ணகி கதையைக் கூறி “அடிகள் நீரே அருளுக” என்றவர் யார் ?
A) இளங்கோவடிகள்
B) கவுந்தியடிகள்
C) சீத்தலைச் சாத்தனார்
D) கோவலன்
E) விடை தெரியவில்லை
31. நம் நாட்டுப் பண்ணாகிய “ஜனகண மன” பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு பரதநாட்டியம் ஆடியவர் மற்றும் காஞ்சிபுரத்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றியவர் யார் ?
A) சோபனா
B) எம்.எஸ்.சுப்புலட்சுமி
C) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
D) பாலசரஸ்வதி
E) விடை தெரியவில்லை
32. கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க !
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது – என்ற அடிகளில் அமைத்துள்ள அடியெதுகையை எடுத்து எழுதுக.
A) கொள்வோர் - உள்வாய்
B) கொள்வோர் - குரைக்க
C) உள்வாய் - உடம்பு
D) குரைப்போர் - உள்வாய்
E) விடை தெரியவில்லை
33. வெண்பாவின் வகைகள் எத்தனை ?
A) 4
B) 5
C) 6
D) 8
E) விடை தெரியவில்லை
34. ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை ?
A) 4
B) 5
C) 6
D) 8
E) விடை தெரியவில்லை
35. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“என்று வள்ளல் ஆய் பற்றி புறநானூற்றில் பாடியவர் யார் ?
A) ஏணிச்சேரி முடமோசியார்
B) ஊன் பொதிப் பசுங்குடையார்
C) மாங்குடி மருதனார்
D) ஆவூர் மூலங்கிழார்
E) விடை தெரியவில்லை
36. அறநெறி முதற்நே அரசின் கொற்றம்
அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர் – என்று பாடியவர் ?
A) ஏணிச்சேரி முடமோசியார்
B) ஊன் பொதிப் பசுங்குடையார்
C) மாங்குடி மருதனார்
D) ஆவூர் மூலங்கிழார்
E) விடை தெரியவில்லை
37. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்
அறனும் காத்தலும் அமைச்சர் கடமை – மதுரைக் காஞ்சி
B) எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறநானூறு (ஆவூர் மூலங்கிழார்)
C) செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – புறநானூறு (மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்)
D) பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் - நச்செள்ளையார்
E) விடை தெரியவில்லை
38. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களைப் பற்றி பாடியவர் யார் ?
A) ஏணிச்சேரி முடமோசியார்
B) ஊன் பொதிப் பசுங்குடையார்
C) மாங்குடி மருதனார்
D) ஆவூர் மூலங்கிழார்
E) விடை தெரியவில்லை
39. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் – அற அவையம் குறித்து குறிப்பிடும் நூல் எது ?
A) மதுரைக் காஞ்சி B) புறநானூறு
C) பதிற்றுப்பத்து D) சிறுபாணாற்றுப்படை
E) விடை தெரியவில்லை
40. பொருத்துக
a) வெறுக்கை - 1. உப்பு விற்போர்
b) நொடை - 2. செல்வம்
c) கிழி - 3. விலை
d) உமணர் - 4. துணி
a b c d
A 3 1 2 4
B 2 3 4 1
C 2 3 1 4
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
41. பொருத்துக
a) Consulate - 1. வணிகக் குழு
b) Patent - 2. நிலப்பகுதி
c) Guild - 3. காப்புரிமை
d) Territory - 4. துணைத் தூதரகம்
a b c d
A 4 3 1 2
B 2 3 4 1
C 2 3 1 4
D 1 3 4 2
E விடை தெரியவில்லை
42. உதவி செய்தலை “உதவியாண்மை” என்று குறிப்பிட்டவர் யார் ?
A) ஈழத்துப் பூதன் தேவனார்
B) நல்லந்துவனார்
C) நல்வேட்டனார்
D) பெருங்கடுங்கோ
E) விடை தெரியவில்லை
43. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்றவர் ?
A) ஈழத்துப் பூதன் தேவனார்
B) நல்லந்துவனார்
C) நல்வேட்டனார்
D) பெருங்கடுங்கோ
E) விடை தெரியவில்லை
44. “உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும்” என்றவர் ?
A) ஈழத்துப் பூதன் தேவனார்
B) நல்லந்துவனார்
C) நல்வேட்டனார்
D) பெருங்கடுங்கோ
E) விடை தெரியவில்லை
45. “பிழையா நன்மொழி” என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் எது ?
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) ஐங்குறுநூறு
D) பதிற்றுப்பத்து
E) விடை தெரியவில்லை
46. “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்று கலித்தொகையில் பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகக் கருதி உதவ வேண்டும் என்றவர் யார் ?
A) ஈழத்துப் பூதன் தேவனார்
B) நல்லந்துவனார்
C) நல்வேட்டனார்
D) பெருங்கடுங்கோ
E) விடை தெரியவில்லை
47. 1. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்று கூறுவது ?
2. நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறுவது ?
A) 1. தமிழ் இலக்கியம் – 2. ரசூல் கம்சதேவ்
B) 1. தமிழ் இலக்கியம் – 2. சீன நாட்டு தாவோயியம்
C) 1. ரசூல் கம்சதேவ் - 2. சீன நாட்டு தாவோயியம்
D) 1. சீன நாட்டு தாவோயியம் – 2. தமிழ் இலக்கியம்
E) விடை தெரியவில்லை
48. மாற்றம் எனது மானிடத் தத்துவம் – என்று பாடியவர் ?
A) கவிமணி
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) கண்ணதாசன்
E) விடை தெரியவில்லை
49. விதியின் பிழை நீ
இதற்கென்னை வெகுண்டதென்றான் – என்று பாடியவர் ?
A) கவிமணி
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) கம்பர்
E) விடை தெரியவில்லை
50. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார் ?
A) கபிலர்
B) பரணர்
C) ஔவையார்
D) பெருஞ்சித்திரனார்
E) விடை தெரியவில்லை
51. ம.பொ.சிவஞானம் தொடர்பான சரியான விடையைத் தேர்ந்தெடு ?
1. இவர் சிலம்புச் செல்வர் என போற்றப்படுகிறார்.
2. 26.06.1906-இல் சென்னை, ஆயிரம் விளக்கு வட்டம், சால்வன் குப்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – ஞானப்பிரகாசம்.
3. 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1972 முதல் 1978 வரை சட்ட மன்ற மேலவைத் தலைவராகவும் பணியாற்றினார்.
4. 1966ஆம் ஆண்டு “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.
A) 1 மட்டும் சரி
B) 1, 2 மற்றும் 3 சரி
C) 1 மற்றும் 4 சரி
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
52. தன்னைத் தேடிவந்த பரிசிலன், பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் என வருந்தியவன் “குமணன்” என்றவர் ?
A) அறிவினா
B) பெருந்தலைச் சாத்தனார்
C) ஐயவினா
D) கொளல் வினா
E) விடை தெரியவில்லை
53. “படாஸ்கர் ஆணையம் ” மூலம் மீட்கப்பட்ட தமிழ் நிலம் ?
A) திருத்தணி
B) கன்னியாகுமரி
C) சென்னை
D) சித்தூர்
E) விடை தெரியவில்லை
54. கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாள் ?
A) 1956 நவம்பர் 1
B) 1947 நவம்பர் 1
C) 1967 ஜுலை 18
D) 1969 ஜுலை 18
E) விடை தெரியவில்லை
55. பொருத்துக
a) எனது போராட்டம் - 1. உ.வே.சா
b) என் கதை - 2. ம.பொ.சி
c) நாற்காலிக்காரர் - 3. நாமக்கல் கவிஞர்
d) என் சரிதம் - 4. ந.முத்துசாமி
a b c d
A 3 1 2 4
B 1 2 3 4
C 2 3 4 1
D 4 1 2 3
E விடை தெரியவில்லை.
56. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்றும் முழங்கியவர் யார் ?
A) சி.பா.ஆதித்தனார் B) அறிஞர் அண்ணா
C) மார்ஷல் நேசமணி D) ம.பொ.சி
E) விடை தெரியவில்லை
57. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று புகழப்படுவர் யார் ?
A) முதலாம் இராசராச சோழன்
B) இரண்டாம் இராசராச சோழன்
C) குலோத்துங்க சோழன்
D) கரிகால் பெருவளத்தான்
E) விடை தெரியவில்லை
58. மெய்க்கீர்த்திகள் வடிக்கும் வழக்கம் யார் காலத்தில் தொடங்கியது ?
A) முதலாம் இராசராச சோழன்
B) இரண்டாம் இராசராச சோழன்
C) குலோத்துங்க சோழன்
D) கரிகால் பெருவளத்தான்
E) விடை தெரியவில்லை
59. சிலப்பதிகாரம் தொடர்பான தவறான கூற்று எது ?
A) இதில் 33 காதைகள் உள்ளன.
B) புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.
C) முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் இந்நூல் இரட்டைக் காப்பியங்களில் ஒரு காப்பியமாகத் திகழ்கிறது.
D) ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக விளங்கும் இக்காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேர மரபைச் சார்ந்தவர்.
E) விடை தெரியவில்லை
60. ராஜம் கிருஷ்ணன் எழுதிய கீழ்க்காணும் புதினங்களில் பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) உப்பள தொழிலாளர் வாழ்க்கை பற்றிய புதினம் – கரிப்பு மணிகள்
B) படுகர் இன மக்களின் வாழ்க்கை பற்றிய புதினம் – குறிஞ்சித் தேன்
C) மீனவர் இன மக்களின் வாழ்க்கை பற்றிய புதினம் – அலைவாய்க் கரையில்
D) அமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்கள் வாழ்க்கை பற்றிய புதினம் – கூட்டுக் குஞ்சுகள்
E) விடை தெரியவில்லை
61. ராஜம் கிருஷ்ணன் எழுதிய மண்ணகத்துப் பூந்துளிகள் என்ற புதினம் எதைப் பற்றியது. ?
A) குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கை
B) பெண் குழந்தை கொலைக்கான காரணங்கள்
C) மலைவாழ் மக்களின் வாழ்க்கை
D) அமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்கள் வாழ்க்கை
E) விடை தெரியவில்லை
62. பொருத்துக
a) அறமும் அரசியலும் - 1. தி.சொ.வேணுகோபாலன்
b) மீட்சி விண்ணப்பம் - 2. எம்.எஸ்.உதய மூர்த்தி
c) எண்ணங்கள் - 3. அபி
d) அபி கதைகள் - 4. மு.வரதராசனார்
a b c d
A 3 1 4 3
B 4 1 2 3
C 2 3 4 3
D 2 1 4 3
E விடை தெரியவில்லை.
63. “கோட்டையை வளைத்தல்” எந்த புறப்பொருள் திணைக்கு உரியது ?
A) உழிஞை
B) நொச்சி
C) தும்பை
D) வாகை
E) விடை தெரியவில்லை
64. வெட்சித் திணைக்குரிய எதிர் புறப்பொருள் திணை எது ?
A) வஞ்சி
B) கரந்தை
C) காஞ்சி
D) நொச்சி
E) விடை தெரியவில்லை
65. பிரித்து எழுதுக - பாடாண்திணை ?
A) பாடு + ஆண் + திணை
B) பாடா + ண் + றிணை
C) பாடு + ஆன் + திணை
D) பாடான் + திணை
E) விடை தெரியவில்லை
66. திணைக்குரிய சிறுபொழுதுடன் பொருத்துக
a) மிரியல் - 1. சணல்
b) வருத்தனை - 2. மிளகு
c) அதசி - 3. வௌவால்
d) துரிஞ்சல் - 4. செல்வம்
a b c d
A 4 3 2 1
B 2 4 1 3
C 2 3 4 1
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
67. வள்ளல் எழுவரின் கொடைப் பெருமையை கூறுவது ?
A) சிறுபாணாற்றுப்படை
B) பெருஞ்சித்திரனாரின் பாடல்கள்
C) A மற்றும் B
D) இவற்றில் எதுவுமில்லை
E) விடை தெரியவில்லை
68. கொடை இலக்கியம் என்று அழைக்கப்படுவது ?
A) சங்க இலக்கியங்கள்
B) பக்தி இலக்கியங்கள்
C) ஆற்றுப்படை இலக்கியங்கள்
D) சிற்றிலக்கியங்கள்
E) விடை தெரியவில்லை
69. “இல்லோர் ஒக்கல் தலைவன் – பசிப்பிணி மருத்துவன்” என்று புகழப்படுபவர்கள் ?
A) புலவர்கள்
B) வள்ளல்கள்
C) அமைச்சர்கள்
D) மருத்துவர்கள்
E) விடை தெரியவில்லை
70. கண்ணதாசன் தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?
I. இயற்பெயர் - முத்தையா
II. பிறந்த இடம் – சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி
III. பெற்றோர் – சாத்தப்பன் விசாலாட்சி
IV. இவரின் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற நூல் – கள்வனின் காதலி
A) I, II, III மட்டும் சரி
B) I, III, IV மட்டும் சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
E) விடை தெரியவில்லை
71. மெய்க்கீர்த்தி வரிகளை எழுதி கல்லில் வடிப்பவர் யார் ?
A) புலவர்
B) கல் தச்சர்
C) அமைச்சர்
D) புலவர் மற்றும் கல்தச்சர்
E) விடை தெரியவில்லை
72. வழங்குவதற்கு பொருள் உள்ளதா ? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் “பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்” என்று புகழ்ந்தவர்
A) பெருங்கடுங்கோ
B) நல்வேட்டனார்
C) நக்கீரர்
D) செல்வக்கடுங்கோ வாழியாதன்
E) விடை தெரியவில்லை
73. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்றவர் ?
A) பெருங்கடுங்கோ
B) நல்வேட்டனார்
C) நச்செள்ளையார்
D) செல்வக்கடுங்கோ வாழியாதன்
E) விடை தெரியவில்லை
74. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் ?
A) பரணர்
B) பெருந்தலைச் சாத்தனார்
C) நச்செள்ளையார்
D) ஔவையார்
E) விடை தெரியவில்லை
75. வீரமாமுனிவர் தொடர்பான தவறான கூற்று எது ?
A) தூய துறவி என்று பொருள்படும் “இஸ்மத் சன்னியாசி” என்ற பாரசீக பட்டத்தை திருச்சியை ஆண்ட சாந்தாசாகிப் இவருக்கு வழங்கினார்
B) இவரின் இயற்பெயர் – கான்சுடான்சு சோசப் பெசுகி
C) இவர் எழுதிய நூல்கள் – தமிழின் முதல் அகராதி நூலான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), பரமார்த்த குருகதைகள்
D) இவர் பிறந்த இடம் - பாரசீகம்
E) விடை தெரியவில்லை
76. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார் ?
A) யேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்
B) யேசுநாதர்
C) மரியம்மை
D) திருமுழக்கு யோவான்
E) விடை தெரியவில்லை
77. வேற்றுமைத் தொகைக்குரிய சொல்லை தேர்வு செய்க
A) உய்முறை
B) மெய்முறை
C) கைமுறை
D) செய்முறை
E) விடை தெரியவில்லை
78. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடியான திருமுழுக்கு யோவான் எனப்படும் அருளப்பன் என்பவர் தேம்பாவணியில் எப்பெயரில் குறிப்பிடப்படுகிறார் ?
A) கருணையன்
B) வளன்
C) யூதாசு
D) மத்தேயு
E) விடை தெரியவில்லை
79. கி.இராஜநாராயணனுக்கு இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களை எழுதியவர் யார் ?
A) பாவண்ணன்
B) கு.அழகிரிசாமி
C) வண்ணதாசன்
D) கு.ப.இராஜ கோபாலன்
E) விடை தெரியவில்லை
80. தவறான இணையைக் கண்டறிக.
A) தெவ் - பகைமை
B) சிலை – வில்
C) புள் - தாவரம்
D) மிசை - மேலே
E) விடை தெரியவில்லை
81. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் யார் ?
A) கண்மணி குணசேகரன்
B) கு.அழகிரிசாமி
C) கி.இராஜநாராயணன்
D) வைரமுத்து
E) விடை தெரியவில்லை
82. பொருத்துக
a) வெண்பா - 1. ஓங்கல் ஓசை
b) ஆசிரியப்பா - 2. துள்ளல் ஓசை
c) கலிப்பா - 3. அகவல் ஓசை
d) வஞ்சிப்பா - 4. செப்பலோசை
a b c d
A 4 3 2 1
B 1 2 3 4
C 2 3 4 1
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
83. எதிர்ச்சொல்லைக் காண்க - அவல்
A) மிசை
B) அவன்
C) தேன்
D) பள்ளம்
E) விடை தெரியவில்லை
84. தீவகம் என்னும் சொல்லின் பொருள் ?
A) நிலம் சூழ்ந்த நீர்ப்பகுதி
B) விளக்கு
C) கடற்கரை
D) வீடு
E) விடை தெரியவில்லை
85. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – தாமரை இலை நீர்போல ?
A) வாட்டம்
B) பாதுகாப்பு
C) உறுதி
D) பற்றின்மை
E) விடை தெரியவில்லை
86. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – மழைமுகம் காணாப் பயிர்போல
A) வாட்டம்
B) பாதுகாப்பு
C) உறுதி
D) பற்றின்மை
E) விடை தெரியவில்லை
87. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – சிலை மேல் எழுத்து போல ?
A) வாட்டம்
B) பாதுகாப்பு
C) உறுதி
D) பற்றின்மை
E) விடை தெரியவில்லை
88. திணைக்குரிய சிறுபொழுதுடன் பொருத்துக
a) நேர் நேர் - 1. கூவிளம்
b) நிரை நேர் - 2. தேமா
c) நிரை நிரை - 3. புளிமா
d) நேர் நிரை - 4. கருவிளம்
a b c d
A 4 3 2 1
B 1 2 3 4
C 2 3 4 1
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
89. கொல்லி, வெற்பன், மலையமான் என்ற பட்டப்பெயர்களுக்கு உரியவர்கள் ?
A) சேரர்கள்
B) சோழர்கள்
C) பாண்டியர்கள்
D) பல்லவர்கள்
E) விடை தெரியவில்லை
90. பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) சேக்கை – படுக்கை
B) யாக்கை – உடல்
C) புழை – புகழ்
D) அசும்பு – நிலம்
E) விடை தெரியவில்லை
91. சந்திப் பிழை நீக்கிய தொடரைக் காண்க.
A) அடுப்பு புகையால் விழிபுனல் கண்டது
B) முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
C) ஆசிரியர் மாணவனை பாராட்டினார்
D) இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்
E) விடை தெரியவில்லை
92. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A) தற்குறிப்பேற்ற அணி
B) தீவக அணி
C) நிரல்நிறை அணி
D) உவமையணி
E) விடை தெரியவில்லை
93. ஒருமை பன்மை நீக்கிய சரியான தொடரைக் காண்க.
A) ஒவ்வொரு மாணவனும் சீருடையில் வர வேண்டும்.
B) நான் கடித்த பழம் அது அல்ல
C) தென்றல் மெல்ல வீசின.
D) அவர் தன்னுடைய பொருளைத் தந்தார்.
E) விடை தெரியவில்லை
94. சரியான எதிர்ச்சொல்லைக் காண்க. - அவிதல்
A) வாழ்தல்
B) கொதித்தல்
C) குளித்தல்
D) வாடுதல்
E) விடை தெரியவில்லை
95. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லை தேர்ந்தெடுக்க ?
A) தானணி = தான் + அணி
B) வியனுலகம் = வியனும் + உலகம்
C) ஏரினுழார் = ஏர் + நுழார்
D) வானமிழ்தம் = வான + அமிழ்தம்
E) விடை தெரியவில்லை
96. நூல்-நூலாசிரியருடன் பொருந்தாத இணையைக் கண்டறிக
A) யானை சவாரி - பாவண்ணன்
B) கல் மரம் - திலகவதி
C) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன்
D) வேரில் பழுத்த பலா - சாண்டில்யன்
E) விடை தெரியவில்லை
97. அடியின் முதலாம், இரண்டாம், நான்காம் சொல்லின் முதலெழுத்து ஒன்றி வரும் மோனை எது ?
A) கீழ்க்கதுவாய் மோனை
B) மேற்கதுவாய் மோனை
C) ஒரூஉ மோனை
D) கூழை மோனை
E) விடை தெரியவில்லை
98. போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட – இவ்வடிகளில் பயின்று வந்துள்ள அணி ?
A) தற்குறிப்பேற்ற அணி
B) தீவக அணி
C) நிரல்நிறை அணி
D) உவமையணி
E) விடை தெரியவில்லை
99. தேம்பாவணியில் உள்ள காண்டங்கள் படலங்கள் பாடல்கள் எத்தனை ?
A) 3 காண்டங்கள், 33 படலங்கள், 3565 பாடல்கள்
B) 3 காண்டங்கள் 36 படலங்கள், 3651 பாடல்கள்
C) 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள்
D) 5 காண்டங்கள், 30 படலங்கள், 3615 பாடல்கள்
E) விடை தெரியவில்லை
100. மெய்கீர்த்தியின் முன்னோடி ?
A) பதிற்றுப்பத்து பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள்
B) குறவஞ்சி இலக்கியம்
C) பிள்ளைத் தமிழ் இலக்கியம்
D) உலா இலக்கியங்கள்
E) விடை தெரியவில்லை