Batch 2 - 4 குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள்- 4 (ஒன்பதாம் வகுப்பு இயல் 1 முதல் 9 வரை)- TNPSC GROUP IV - GENARAL TAMIL - Eligibility cum Scoring Test - MODEL QUESTION PAPER WITH ANSWER KEY PDF FREE DOWNLOAD (2022 New Syllabus) 9th std

  Batch - 2

TNPSC GROUP IV
GENARAL TAMIL - Eligibility cum Scoring Test

டி.என்.பிஸ்.சி குரூப் 4 தேர்வு
மாதிரி வினாத்தாள் - 4

(ஒன்பதாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை)

விடையுடன் இலவச பதிவிறக்கம்

PDF FILE FREE DOWNLOAD


இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 

Batch-1

டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பொதுத் தமிழ் 30 மாதிரி வினாத்தாள்கள் (PDF File) விடையுடன் இலவச பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇




















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)












Batch - 2

இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான Batch-2 பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்களை (PDF File) இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇  









மாதிரி வினாத்தாள் - 4
(ஒன்பதாம் வகுப்பு இயல் 1 முதல் இயல் 9 வரை) 

(100வது வினாவின் இறுதியில் இவ்வினாத்தாளினை விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது)




1. சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை என்று குறிப்பிட்டவர் – ச.அகத்தியலிங்கம்

II. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் – குமரிலபட்டர்

III. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது தமிழ் என முதலில் குறிப்பிட்டவர் – வில்லியம் ஜோன்ஸ்.

IV. தமிழ் > தமிழா > தமிலா >டிரமிலா > ட்ரமிலா > த்ராவிடா >திராவிடா என்று வந்ததாக விளக்கியவர் - ஹீராஸ் பாதிரியார்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



2. வட திராவிட மொழி எது ?

A) கதபா

B) குரூக்

C) மால்தோ

D) பிராகுயி

E) விடை தெரியவில்லை



3. மலையாள இலக்கியங்களுக்கு இலக்கணமாக விளங்கும் நூல் எது ?

A) தொல்காப்பியம்

B) கவிராஜ மார்க்கம்

C) ஆந்திர பாஷா பூஷணம்

D) லீலா திலகம்

E) விடை தெரியவில்லை



4. பின்வரும் கூற்றுகளுடன் பொருந்திவரும் தமிழ்ச்சான்றோர் யார் ?

I. “வணக்கம் வள்ளுவ” என்னும் நூலுக்காக 2004ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.

II. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று தன் தமிழோவியம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

III. இவரின் கவிதைத் தொகுப்பு தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

IV. இவரின் கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

A) வண்ணதாசன்

B) கவிக்கோ அப்துல் ரகுமான்

C) ஈரோடு தமிழன்பன்

D) கவிஞர் மு.மேத்தா

E) விடை தெரியவில்லை



5. “முக்குணம்” என்னும் தொகைச் சொல்லுடன் பொருந்தாத சொல் எது ?

A) சத்துவம்

B) இராசசம்

C) அமைதி

D) மேன்மை

E) விடை தெரியவில்லை



6. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று குறிப்பிட்டவர் யார் ?

A) கம்பர்

B) சீத்தலைச் சாத்தனார்

C) இளங்கோவடிகள்

D) பிங்கலர்

E) விடை தெரியவில்லை



7. உலக தாய்மொழி நாள் ?

A) பிப்ரவரி 21

B) ஏப்ரல் 21

C) ஜனவரி 30

D) ஜுலை 18

E) விடை தெரியவில்லை



8. இலக்கண குறிப்பறிக - முத்திக்கனி

A) வினைத்தொகை

B) உருவகம்

C) வேற்றுமைத் தொகை

D) அன்மொழித் தொகை

E) விடை தெரியவில்லை

9. தமிழ்விடு தூது தொடர்பான தவறான கூற்று எது ?

A) கலிவெண்பாவால் இயற்றப்பட்ட இந்நூல், 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாக விளங்குகிறது

B) இந்நூலின் பாட்டுடைத் தலைவன் – மதுரை சொக்கநாதர்

C) 268 கண்ணிகளைக் கொண்டுள்ள இந்நூலை 1930 உ.வே.சாமிநாதர் முதன்முதலில் பதிப்பித்தார்

D) இதன் ஆசிரியர் - முடத்தாமக்கண்ணியார்

E) விடை தெரியவில்லை



10. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் இலக்கியம்

A) குறவஞ்சி இலக்கியம்

B) பிள்ளைத்தமிழ் இலக்கியம்

C) தூது இலக்கியம்

D) பள்ளு இலக்கியம்

E) விடை தெரியவில்லை



11. தமிழ் எண்ணருக்களில் பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க ?

A) க - 1

B) உ - 2

C) ங - 3

D) ச – 5

E) விடை தெரியவில்லை



12. தோன்றா எழுவாய் அமைந்துள்ள தொடரைத் தேர்வு செய்க ?

A) படித்தாய்

B) நீ படித்தாய்

C) காட்சிக்கு தோன்றாதவன் இறைவன்

D) இறைவன் கண்ணுன்னு புலப்படாதவன்

E) விடை தெரியவில்லை



13. நிரப்புக : ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் --------------- ஆகவும், பயனிலை -----------------ஆகவும் இருக்கும் ?

A) வினைமுற்று - பெயர்ச்சொல்

B) பெயரடை - வினையடை

C) வினைத்தொகை - வினையடை

D) பெயர்ச்சொல் - வினைமுற்று

E) விடை தெரியவில்லை



14. “பெயரடை” அமைந்துள்ள தொடரைக் காண்க ?

A) மகிழ்நன் மெல்ல வந்தான்

B) நூல் படித்தேன்

C) நல்ல நூல் ஒன்று படித்தேன்

D) தாமரை விரைந்து படித்தாள்

E) விடை தெரியவில்லை

15. தன்வினைத் தொடரைக் காண்க. ?

A) அவர்கள் நன்றாகப் படித்தனர்

B) அவனைத் திருந்தச் செய்தான்

C) தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்

D) பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்

E) விடை தெரியவில்லை



16. செயப்பாட்டு வினைத்தொடரைத் தேர்வு செய்க ?

A) அப்துல் நேற்று வந்தான்

B) விஜய் சேதுபதி நேற்று வருவித்தான்

C) அருணா உரை படித்தாள்

D) உரை கவிதாவால் படிக்கப்பட்டது

E) விடை தெரியவில்லை



17. ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல்லில் பொருந்தாத இணையைக் காண்க ?

A) Morpheme - உருபன்

B) Phoneme - ஒலியன்

C) Comparitive Grammer - செவ்வியல் இலக்கணம்

D) Lexicon - பேரகராதி

E) விடை தெரியவில்லை



18. வாக்கிய வகை அறிக – குமரன் மழையில் நனையவில்லை

A) எதிர்மறை வினைத்தொடர்

B) உடன்பாட்டுத் தொடர்

C) உணர்ச்சித் தொடர்

D) கட்டளைத் தொடர்

E) விடை தெரியவில்லை



19. வாக்கிய வகை அறிக – இது நாற்காலி

A) எதிர்மறை வினைத்தொடர்

B) உடன்பாட்டுத் தொடர்

C) பெயர் பயனிலைத் தொடர்

D) கட்டளைத் தொடர்

E) விடை தெரியவில்லை



20. “எழுத்துப்பேறு” எழுத்தாக வருவது ?

A) க்

B) ச்

C) த்

D) ப்

E) விடை தெரியவில்லை



21. வேர்ச்சொல்லைக் கண்டறிக - மகிழ்ந்தாள்

A) மகிழ்

B) மகி

C) மகிழம்

D) மகிழ்ந்து

E) விடை தெரியவில்லை



22. “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்றவர் ?

A) மணவை முஸ்தபா

B) என்.சொக்கன்

C) பேராசிரியர் தொ.பரமசிவன்

D) நாஞ்சில் நாடன்

E) விடை தெரியவில்லை



23. உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை எது ?

A) இலஞ்சி

B) குண்டம்

C) கூவல்

D) பூட்டைக் கிணறு

E) விடை தெரியவில்லை



24. பொருத்துக

a. தரளம் - 1. சங்கு

b. பணிலம் - 2. முத்து

c. கழை - 3. குளக்கரை

d. கோடு - 4. கரும்பு



a b c d

A 3 1 4 4

B 1 2 4 3

C 2 1 4 3

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



25. தெய்வச் சிலைகளை குளி(ர்)க்க வைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது. ?

A) திருமஞ்சனம் ஆடல்

B) கடலாடுதல்

C) திருக்குடமுழுக்கு

D) தூபம்

E) விடை தெரியவில்லை



26. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - மா

A) வண்டு

B) சோலை

C) பலா

D) திருமகள்

E) விடை தெரியவில்லை



27. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - கா

A) வண்டு

B) சோலை

C) கதளி

D) மலைமகள்

E) விடை தெரியவில்லை



28. பெரிய புராணம் தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும், திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் பெரியபுராணத்திற்கு அடிப்படை நூலாக அமைந்துள்ளன.

II. பெரியபுராணத்தை எழுதியர் – சேக்கிழார்

III. கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்.

IV. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.



A) I, II, III மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



29. எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான புறநானூற்றில் இடம்பெறாத பாடல் அடி அல்லாதது எது ?

A) நீரின்றி அமையாது உலகு

B) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

C) உண்பது நாழி உடுப்பவை இரண்டே

D) யாதும் ஊரே யாவரும் கேளிர்

E) விடை தெரியவில்லை



30. தமிழில் உள்ள துணை வினைகளின் எண்ணிக்கை ?

A) 40

B) 96

C) 108

D) 100

E) விடை தெரியவில்லை

31. மிசை என்பதன் எதிர்ச்சொல் ?

A) மேலே

B) கீழே

C) இசை

D) வசை

E) விடை தெரியவில்லை



32. சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் ஆகிய சிறுகதைகளை எழுதியவர் ?

A) கந்தர்வன்

B) கா,ராஜன்

C) அ.தட்சிணாமூர்த்தி

D) க.ரத்னம்

E) விடை தெரியவில்லை



33. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் – என்ற கலித்தொகை அடியின் மூலம் அறியப்படும் சங்ககால விளையாட்டு எது ?

A) சேவல் சண்ட

B) விற்போர்

C) மற்போர்

D) ஏறு தழுவுதல்

E) விடை தெரியவில்லை



34. பெண்மையை முதன்மைப்படுத்துவதால் “புரட்சிக் காப்பியம்” என்று அழைக்கப்படும் நூல் ?

A) கம்ப ராமாயணம்

B) பாஞ்சாலி சபதம்

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை

E) விடை தெரியவில்லை



35. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரை பாராட்டியவர் யார் ?

A) கோசிகீரனார்

B) இளங்கோவடிகள்

C) தந்தை பெரியார்

D) பாரதிதாசன்

E) விடை தெரியவில்லை



36. 1863-இல் பல்லாவரத்தில் அகழாய்வு மேற்கொண்டு முதன்முதலில் கற்கருவிகளை கண்டறிந்தவர் யார் ?

A) மாக்ஸ்முல்லர்

B) ஹோக்கன்

C) இராபர்ட் புரூஸ்புட்

D) வில்லியம் ஜோன்ஸ்

E) விடை தெரியவில்லை

37. ரோமானியர்களுடன் தமிழர்களுக்கிருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் சான்றுகள் இடைக்கப்பெற்ற இடம் ?

A) பல்லாவரம்

B) அரிக்கமேடு

C) ஆதிச்சநல்லூர்

D) ஹரப்பா

E) விடை தெரியவில்லை



38. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

A) தொன்மையான தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

B) ஏறு தழுவுதல் தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு

C) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

D) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

E) விடை தெரியவில்லை



39. பிரித்து எழுதுக - கண்டெடுக்கப்பட்டுள்ளன

A) கண்டு + எடு + பட்டு + உள்ளன

B) கண்டெடு + பட்டு + உள்ளன

C) கண்டு + எடுபட்டு + உள்ளன

D) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

E) விடை தெரியவில்லை



40. பொருத்துக

a) அழகின் சிரிப்பு - 1. வெ.இறையன்பு

b) தண்ணீர் தண்ணீர் - 2. பாரதிதாசன்

c) தண்ணீர் தேசம் - 3. கோமல் சுவாமிநாதன்

d) வாய்க்கால் மீன்கள் - 4. வைரமத்து



a b c d

A 3 1 2 4

B 2 3 4 1

C 2 3 1 4

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



41. பொருத்துக

a) தமிழர் நாகரிகமும் பண்பாடும் - 1. மா.இராசமாணிக்கனார்

b) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - 2. கா.ராஜன்

c) தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - 3. அ.தட்சிணாமூர்த்தி

d) தொல்லியல் நோக்கில் சங்க காலம் - 4. க.ரத்னம்





a b c d

A 4 3 1 2

B 2 3 4 1

C 2 3 1 4

D 3 1 4 2

E விடை தெரியவில்லை



42. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை – இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக ?

A) அகழ்வார் - இகழ்வார்

B) அகழ்வார் - தாங்கும்

C) இகழ்வார் - பொறுத்தல்

D) தாங்கும் - தம்மை

E) விடை தெரியவில்லை



43. தமிழில் எழுதப்பட்ட “உலகப் பனுவல்” என்று சிறப்பிக்கப்படும் நூலை இயற்றியவர் யார் ?

A) மாதானுபங்கி

B) இளங்கோவடிகள்

C) மாறன்பொறையனார்

D) கணியன் பூங்குன்றனார்

E) விடை தெரியவில்லை



44. 2003-இல் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் யார் ?

A) கு.அழகிரிசாமி

B) தி.ஜானகிராமன்

C) கி.இராஜநாராயணன்

D) வைரமுத்து

E) விடை தெரியவில்லை



45. புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) புறநானூறு

D) பதிற்றுப்பத்து

E) விடை தெரியவில்லை





46. தொல்காப்பியம் தொடர்பான தவறான கூற்று எது ?

A) தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

B) இயற்றியவர் - தொல்காப்பியர்

C) ஐந்து அதிகாரங்களைக் கொண்டுள்ளது

D) 27 இயல்களைக் கொண்டுள்ளது.

E) விடை தெரியவில்லை



47. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர், சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, 1930-இல் அவ்வை இல்லத்தை தொடங்கியவர், 1952-இல் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியவர் என்ற சிறப்புகளுக்கு உரியவர் யார் ?

A) முத்துலட்சுமி அம்மையார்

B) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

C) நீலாம்பிகை அம்மையார்

D) சாவித்திரிபாய் பூலே

E) விடை தெரியவில்லை



48. தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் என்ற சிறப்புகளுக்கு உரியவர் யார் ?

A) முத்துலட்சுமி அம்மையார்

B) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

C) நீலாம்பிகை அம்மையார்

D) சாவித்திரிபாய் பூலே

E) விடை தெரியவில்லை



49. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் ?

A) முத்துலட்சுமி அம்மையார்

B) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

C) நீலாம்பிகை அம்மையார்

D) சாவித்திரிபாய் பூலே

E) விடை தெரியவில்லை



50. பல தனித்தமிழ் கட்டுரைகள், வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்ற படைப்புகளை அளித்தவர் ?

A) கண்ணதாசன்

B) மறைமலையடிகள்

C) நீலாம்பிகை அம்மையார்

D) பெருஞ்சித்திரனார்

E) விடை தெரியவில்லை



51. திருக்குறள் தொடர்பான சரியான விடையைத் தேர்ந்தெடு ?

1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

2. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசம்

3. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

4. திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்

A) 1 மட்டும் சரி

B) 1, 2 மற்றும் 3 சரி

C) 1 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



52. பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது, இன்றியமையாதது என்ற கருத்தை வலியுறுத்தும் பாவேந்தர் பாரதிதாசனின் படைப்பு ?

A) குடும்ப விளக்கு

B) பாண்டியன் பரிசு

C) அழகின்சிரிப்பு

D) தமிழியக்கம்

E) விடை தெரியவில்லை



53. பாரதிதாசனின் வரிகளைத் தேர்ந்தெடு ?

A) பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.

B) மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

C) பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிபடாது

D) நீரின்றி அமையாது உலகு

E) விடை தெரியவில்லை



54. மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர், “மாக்காரியாசான்” என்று பாயிர செய்யுளால் சிறப்பிக்கப்படுவர் இயற்றிய நூல் எது ?

A) சிறுபஞ்சமூலம்

B) ஏலாதி

C) பழமொழி

D) திணைமாலை ஐம்பது

E) விடை தெரியவில்லை



55. பொருத்துக

a) ஈரறிவு உயிர் - 1. பறவை, விலங்கு

b) மூவறிவு உயிர் - 2. நண்டு, தும்பி

c) நான்கறிவு உயிர் - 3. கரையான், எறும்பு

d) ஐந்தறிவு உயிர் - 4. சிப்பி, நத்தை



a b c d

A 4 3 2 1

B 1 2 3 4

C 2 3 4 1

D 4 1 2 3

E விடை தெரியவில்லை.



56. இலக்கணக் குறிப்பறிக - வில்வாள்

A) வினைத்தொகை

B) உம்மைத்தொகை

C) பண்புத்தொகை

D) இருபெயரொட்டு பண்புத்தொகை

E) விடை தெரியவில்லை



57. வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்ல நிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை என்று கூரியவர் ?

A) அறிஞர் அண்ணா

B) பெருந்தலைவர் காமராசர்

C) மு.வரதராசனார்

D) சீர்காழி இரா.அரங்கநாதன்

E) விடை தெரியவில்லை



58. சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் – தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

II. உலகளவில் தமிழ்நூல்கள் அதிகமுள்ள நூலகம் – சென்னை, எழும்பூரிலுள்ள கன்னிமாரா நூலகம்

III. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொதுநூலகம் – திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.

IV. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் – கொல்கத்தாவில் உள்ள “தேசிய நூலகம்”

V. உலகின் மிகப்பெரிய நூலகம் – அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) I, III, IV, V மட்டும் சரி

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை



59. தவறான கூற்று எது ?

A) தென்னகத்து பெர்னாட்ஷா என்று சிறப்பிக்கப்படுபவர் – அறிஞர் அண்ணா

B) அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2020

C) உலகில் சாகா வரம்பெற்ற பொருள்கள் புத்தகங்களே ! என்றவர் - கதே

D) தேசிய நூலக நாள் – சீர்காழி இரா.அரங்கநாதன் பிறந்த நாளான ஆகஸ்ட் 9

E) விடை தெரியவில்லை



60. உரிச்சொற்கள் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும் ?

A) இசை

B) குறிப்பு

C) பண்பு

D) இவை அனைத்தும்

E) விடை தெரியவில்லை



61. மிகுதி என்னும் பொருளில் வரும் உரிச்சொல் எது ?

A) உறு

B) தவ

C) நனி

D) இவையனைத்தும்

E) விடை தெரியவில்லை



62. பொருத்துக

a) அப்பாவின் சிநேகிதர் - 1. நாஞ்சில் நாடன்

b) மின்சாரப் பூ - 2. அசோகமித்திரன்

c) சூடிய பூ சூடற்க - 3. வண்ணதாசன்

d) ஒரு சிறு இசை - 4. மேலாண்மை பொன்னுசாமி



a b c d

A 3 1 4 3

B 4 1 2 3

C 2 4 1 3

D 2 1 4 3

E விடை தெரியவில்லை.



63. கடி என்ற உரிச்சொல்லின் பொருள் ?

A) மணம்

B) காவல்

C) விரைவு

D) இவையனைத்தும்

E) விடை தெரியவில்லை



64. செப்புத் திருமேனிகளின் காலம் ?

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம்

D) பல்லவர் காலம்

E) விடை தெரியவில்லை



65. கூற்றுக்களுக்கு பொருந்திவரும் நூல் எது ?

காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நூல்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ் பெருங்காப்பியம்

A) பாஞ்சாலி சபதம்

B) இராவண காவியம்

C) தமிழியக்கம்

D) கம்பரசம்

E) விடை தெரியவில்லை



66. திணைக்குரிய சிறுபொழுதுடன் பொருத்துக

a) அள்ளல் - 1. சங்கு

b) பழனம் - 2. சேறு

c) பார்ப்பு - 3. நீர் மிக்க வயல்

d) நந்து - 4. பறவைக் குஞ்சு

a b c d

A 4 3 2 1

B 2 4 1 3

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



67. பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார் ?

A) புலவர் குழந்தை

B) முத்தமிழறிஞர் கலைஞர்

C) மு.வரதராசனார்

D) சிற்பி மு.பாலசுப்பிரமணியம்

E) விடை தெரியவில்லை



68. சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுபவர் ?

A) காரைக்காலம்மையார்

B) நச்செள்ளையார்

C) ஒக்கூர் மாசாத்தியார்

D) ஆண்டாள்

E) விடை தெரியவில்லை



69. இவற்றில் மெய்ம்மயக்க சொல் எது ?

A) செய்ந்நன்றி

B) எடுப்பதூஉம்

C) மகடூஉ

D) உரநசைஇ

E) விடை தெரியவில்லை



70. சீவக சிந்தாமணி தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

II. இயற்றியவர் – திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியைப் பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இவர் இயற்றியுள்ளார்.

III. சிறப்புப் பெயர் -மணநூல்

IV. இதன் உட்பிரிவு இலம்பகம் ஆகும். இதில் 13 இலம்பகங்கள் உள்ளன.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



71. முத்தொள்ளாயிரம் தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. வெண்பாவால் எழுதப்பட்டது

II. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடப்பட்டுள்ளது.

III. மூன்று மன்னர்களைப் பற்றி 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என பெயர்பெற்றது.

IV. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



72. மதுரைக்காஞ்சி தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. பெருகுவள மதுரைக்காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று.

II. இந்நூலில் மொத்தம் 782 அடிகள் உள்ளன. இதில் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டுமே சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

III. காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று பொருள்.

IV. இதனைப் பாடியவர் – மாங்குடி மருதனார்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை







73. பொறி மயிர் வாரணம் ....

கூட்டுறை வயமாப் புலியொடு குழும – என்ற மதுரைக் காஞ்சி அடிகளின் மூலம் புலனாகும் செய்தி ?

A) சங்க காலத்தில் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்தது.

B) மதுரையில் முச்சங்கம் இருந்தது

C) சங்க காலத்தில் மதுரையில் கூட்டுத்தொழில் வணிகர்கள் இருந்தனர்

D) சங்க காலத்தில் மதுரைத் தமிழர்கள் கூட்டாக புலி வேட்டைக்கு சென்றனர்

E) விடை தெரியவில்லை

74. பெயர்ச்சொல் வகை அறிக – முல்லையைத் தொடுத்தாள்

A) பொருளாகு பெயர்

B) இடவாகு பெயர்

C) காலவாகு பெயர்

D) சினையாகு பெயர்

E) விடை தெரியவில்லை



75. பெயர்ச்சொல் வகை அறிக – மருக்கொழுந்து நட்டான்

A) பொருளாகு பெயர்

B) இடவாகு பெயர்

C) காலவாகு பெயர்

D) சினையாகு பெயர்

E) விடை தெரியவில்லை



76. பெயர்ச்சொல் வகை அறிக – கார் அறுத்தான்

A) பொருளாகு பெயர்

B) இடவாகு பெயர்

C) காலவாகு பெயர்

D) சினையாகு பெயர்

E) விடை தெரியவில்லை



77. பெயர்ச்சொல் வகை அறிக – பைங்கூழ் வளர்ந்தது

A) காரியவாகுபெயர்

B) தொழிலாகுபெயர்

C) காலவாகு பெயர்

D) சினையாகு பெயர்

E) விடை தெரியவில்லை



78. தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூலை இயற்றியவர் ?

A) மு.மேத்தா

B) கி.வா.ஜகந்நாதன்

C) ச.தமிழ்ச்செல்வன்

D) வெ.இறையன்பு

E) விடை தெரியவில்லை



79. தந்தை பெரியார் எதை எதிர்த்தார் ?

A) இந்தித் திணிப்பு

B) குலக்கல்வித் திட்டம்

C) மணக்கொடை

D) இவை அனைத்தும்

E) விடை தெரியவில்லை



80. தந்தை பெரியார் தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. 1938 நவம்பர் 13-இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

II. 27.06.1970-இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாருக்கு “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்ற பட்டத்தை வழங்கியது.

III. தந்தை பெரியார் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்

IV. தந்தை பெரியார் நடத்திய இதழ் – முரசொலி

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



81. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர். மேலும் தமிழ்ப்பண்பாடு என்ற இதழைத் தொடங்கியவர் யார் ?

A) கு.அழகிரிசாமி

B) தனிநாயகம் அடிகளார்

C) மறைமலையடிகள்

D) குன்றக்குடி அடிகளார்

E) விடை தெரியவில்லை



82. பொருத்துக

a) புரிசை - 1. முரசு

b) அணங்கு - 2. சாளரம்

c) புழை - 3. தெய்வம்

d) பணை - 4. மதில்



a b c d

A 4 3 2 1

B 1 2 3 4

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



83. கல்யாண்ஜி தொடர்பான சரியான கூற்றினை தேர்வு செய்க ?

I. இவரின் இயற்பெயர் – கல்யாண சுந்தரம், மறுபெயர் - வண்ணதாசன்

II. இவர் எழுதிய கவிதை நூல்கள் – புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு.

III. இவரின் கடித நூல் – சில இறகுகள் சில பறவைகள்

IV. இவரின் சிறுகதை நூல்கள் – கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

E) விடை தெரியவில்லை



84. வடமொழியில் இருந்து தமிழில் எழுதப்பட்ட, அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறும், ஐஞ்சிறுங்காப்பிய நூல் எது ?

A) யசோதர காவியம்

B) உதயன குமார காவியம்

C) நாக குமார காவியம்

D) இவற்றில் எதுவுமில்லை

E) விடை தெரியவில்லை

85. 1915ஆம் ஆண்டு குறுந்தொகை நூலினை முதன்முதலில் பதிப்பித்தவர் யார் ?

A) உ.வே.சாமிநாதர்

B) ஆறுமுக நாவலர்

C) பாலாம்பாள் அம்மையார்

D) சௌரிப் பெருமாள் அரங்கனார்

E) விடை தெரியவில்லை



86. கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியவர் ?

A) பெருங்கடுங்கோ

B) பூதஞ்சேந்தனார்

C) கபிலர்

D) நப்பூதனார்

E) விடை தெரியவில்லை



87. வேரில் பழுத்த பலா என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதினையும், குற்றம் பார்க்கில் என்ற நூலுக்காக தமிழக அரசின் விருதினையும் பெற்றவர் யார் ?

A) ஆதவன்

B) சு.சமுத்திரம்

C) வண்ணதாசன்

D) தி.ஜானகிராமன்

E) விடை தெரியவில்லை

88. பொருத்துக

a) நாளிகேரம் - 1. பச்சிலை மரம்

b) கோளி - 2. ஆச்சா மரம்

c) சாலம் - 3. அரச மரம்

d) தமாலம் - 4. தென்மை மரம்



a b c d

A 4 3 2 1

B 1 2 3 4

C 2 3 4 1

D 3 1 4 2

E விடை தெரியவில்லை.



89. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – அத்தி பூத்தாற்போல

A) அரிய செயல்

B) இளமையில் கல்

C) தெளிவாக தெரிதல்

D) இனிமை

E) விடை தெரியவில்லை



90. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – பசுமரத்தாணி போல

A) அரிய செயல்

B) மனதில் ஆழமாக பதிதல்

C) தெளிவாக தெரிதல்

D) இனிமை

E) விடை தெரியவில்லை



91. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – உள்ளங்கை நெல்லிக்கனி போல

A) அரிய செயல்

B) இளமையில் கல்

C) தெளிவாக தெரிதல்

D) இனிமை

E) விடை தெரியவில்லை



92. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – செந்தமிழும் சுவையும் போல

A) இணை பிரியாமை

B) இளமையில் கல்

C) தெளிவாக தெரிதல்

D) உலகில் நிகழாத செயல்

E) விடை தெரியவில்லை





93. தென்னிந்திய மொழிகளை “தமிழியன்” எனப் பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை வேறுபட்டவை என்று கருதியவர் யார் ?

A) வில்லியம் ஜோன்ஸ்

B) ஹோக்கன்

C) ஹீராஸ் பாதிரியார்

D) பிரான்சிஸ் எல்லீஸ்

E) விடை தெரியவில்லை



94. இலக்கணக் குறிப்பறிக - ஆடுங்கிளை

A) பெயரெச்சத் தொடர்

B) வினையெச்சத் தொடர்

C) அன்மொழித் தொகை

D) உருவகம்

E) விடை தெரியவில்லை



95. கவிஞர் தமிழ் ஒளி தொடர்பான தவறான கூற்று எது ?

A) பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணாக்கராகவும் திகழ்ந்தவர்

B) பிறந்த ஊர் - சிறுகூடல்பட்டி

C) இவரின் காலம் – 1924-1965

D) இவரின் படைப்புகள் – நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம்.

E) விடை தெரியவில்லை



96. தேன் என்று பொருள் தரும் சொல் எது ?

A) மது

B) வேரி

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை.

E) விடை தெரியவில்லை



97. தமிழ் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருக்கும் நூல் ?

A) நன்னூல்

B) தொல்காப்பியம்

C) தண்டியலங்காரம்

D) தொன்னூல் விளக்கம்

E) விடை தெரியவில்லை







98. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக - Avionics

A) வானூர்தியியல்

B) கூட்டமைப் பொருள்கள்

C) விண்வெளியியல்

D) வான் பயண மின்னணுவியல்

E) விடை தெரியவில்லை



99. சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞர்களின் வாதம் ஒரு விளக்கு என்றவர் யார் ?

A) நாவலர்

B) தமிழ்த் தென்றல்

C) சிலம்புச் செல்வர்

D) தென்னகத்துப் பெர்னாட்ஷா

E) விடை தெரியவில்லை



100. இந்திய ஏவுகனை நாயகன் ?

A) விக்ரம் சாராபாய்

B) அப்துல் கலாம்

C) மயில்சாமி அண்ணாதுரை

D) ஆரியபட்டர்

E) விடை தெரியவில்லை

மாதிரி வினாத்தாள் 4-ஐ PDF ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

👇



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post