Batch - 2
TNPSC GROUP IV
GENARAL TAMIL - Eligibility cum Scoring Test
டி.என்.பிஸ்.சி குரூப் 4 தேர்வு
மாதிரி வினாத்தாள் - 5
(6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு)
விடையுடன் இலவச பதிவிறக்கம்
PDF FILE FREE DOWNLOAD
இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள
Batch-1
டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பொதுத் தமிழ் 30 மாதிரி வினாத்தாள்கள் (PDF File) விடையுடன் இலவச பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 1)
மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 2)
மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 3)
மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் - முழுத் தேர்வு - 4)
மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)
மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)
Batch - 2
இந்த வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான Batch-2 பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்களை (PDF File) இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇
மாதிரி வினாத்தாள் - 5
(6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு)
(100வது வினாவின் இறுதியில் இவ்வினாத்தாளினை விடையுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது)
1. புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என பாரதியாரைப் புகழ்ந்தவர் யார் ?
A) பாரதிதாசன்
B) சுரதா
C) வாணிதாசன்
D) மு.மேத்தா
E) விடை தெரியவில்லை
2. தமிழில் “சொல்” என்பதற்கு வழங்கப்படும் பொருள் யாது ?
A) பத்தி
B) நெல்
C) வாக்கியம்
D) பொருள்
E) விடை தெரியவில்லை
3. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ணா, றா, னா ஆகிய எழுத்துகளில் சீர்திருத்தத்தை மேற்கொண்டவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) உ.வே.சாமிநாதர்
C) தந்தை பெரியார்
D) கால்டுவெல்
E) விடை தெரியவில்லை
4. இரண்டு ஓரெழுத்து ஒருமொழிகளை இணைத்து உருவான பொருள் தரும் கலைச்சொல் எது ?
A) பூங்கா B) ஆமா
C) சேயோன் D) A மற்றும் B
E) விடை தெரியவில்லை
5. “செந்தமிழ் அந்தணர்” என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) இரா.இளங்குமரனார்
B) வீரமாமுனிவர்
C) வாணிதாசன்
D) திரு.வி.க
E) விடை தெரியவில்லை
6. நன்னூலார் கூற்றுப்படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின்
எண்ணிக்கை ?
A) 42
B) 46
C) 52
D) எண்ணிலடங்கா
E) விடை தெரியவில்லை
7. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கபடுபவர் யார் ?
A) தேசிக விநாயகனார்
B) புதுமைப்பித்தன்
C) அறிஞர் அண்ணா
D) வாணிதாசன்
E) விடை தெரியவில்லை
8. “பஞ்சக் கும்மிகள்” என்ற நூலை இயற்றியவர் யார் ?
A) செ.இராசு
B) பி.ச.குப்புசாமி
C) இறையரசன்
D) இராச கோபாலான்
E) விடை தெரியவில்லை
9. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – விழலுக்கு இறைத்த நீர் போல
A) தற்செயல் நிகழ்வு
B) எதிர்பாரா நிகழ்வு
C) எளிதில் மனதில் பதிதல்
D) பயனற்ற செயல்
E) விடை தெரியவில்லை
10. உவமையால் விளக்கப்படும் பொருளைக் காண்க – நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல
A) தற்செயல் நிகழ்வு
B) ஒற்றுமையின்மை
C) எளிதில் மனதில் பதிதல்
D) பயனற்ற செயல்
E) விடை தெரியவில்லை
11. பரணிக்கோர் செயங்கொண்டார் என செயங்கொண்டாரை புகழ்ந்தவர் ?
A) கம்பர்
B) ஒட்டக்கூத்தர்
C) பலபட்டடை சொக்கநாதப் புலவர்
D) பாரதியார்
E) விடை தெரியவில்லை
12. 63 நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் இருந்து தமிழ் பணியாற்றியவர் ?
A) திருமூலர்
B) இடைக்காடர்
C) குதம்பைச் சித்தர்
D) காடவராயன்
E) விடை தெரியவில்லை
13. பின்வருபவர்களுல் “பாவை” பாடல்களை பாடாதவர் யார் ?
A) ஆண்டாள்
B) மாணிக்கவாசகர்
C) இறையரசன்
D) திரிகூடராசப்பக் கவிராயர்
E) விடை தெரியவில்லை
14. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B) வல்லபாய் பட்டேல்
C) அண்ணல் அம்பேத்கர்
D) ஜவஹர்லால் நேரு
E) விடை தெரியவில்லை
15. வைப்பு என்ற சொல்லின் பொருள் ?
A) நிலப்பகுதி
B) கடல்
C) ஆகாயம்
D) காடு
E) விடை தெரியவில்லை
16. சரியாகப் பிரிக்கப்பட்ட சொல்லைக் காண்க
A) என்றென்றும் = என்றும் + என்றும்
B) அறிந்ததனைத்தும் = அறிந்தது + அனைத்தும்
C) வானமளந்தது = வான + மளந்தது
D) வானமறிந்த = வானம் + மறிந்த
E) விடை தெரியவில்லை
17. ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல்லில் பொருந்தாத இணையைக் காண்க ?
A) Articulatory Phonetics - ஒலி பிறப்பியல்
B) Consonant - மெய்யொலி
C) Epigraph - கல்வெட்டு
D) Pictograph - உருபன்
E) விடை தெரியவில்லை
18. விலங்குகளின் இளமைப் பெயர்களில் சரியானதைக் கண்டறிக
A) சிங்கம் - குட்டி
B) புலி - பறழ்
C) யானை - குருளை
D) ஆடு - கன்று
E) விடை தெரியவில்லை
19. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ?
A) உ, ஊ,
B) அ, ஆ
C) இ, ஈ
D) எ, ஏ
E) விடை தெரியவில்லை
20. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ?
A) மூக்கு
B) கழுத்து
C) மார்பு
D) தலை
E) விடை தெரியவில்லை
21. பின்வருவனவற்றில் தொல்காப்பியரின் வரிகள் அல்லாதது எது ?
A) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
B) நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி
C) குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே
D) தோன்றின் புகழொடு தொன்றுக
E) விடை தெரியவில்லை
22. மரபு பிழையற்ற தொடரைக் காண்க ?
A) ஆந்தை அலற கோழி கூவியது
B) மயில் அகவ, புறா குனுகியது
C) கிளி பேச, கூகை கூவியது
D) குயில் கத்த, ஆந்தை அலறியது.
E) விடை தெரியவில்லை
23. மரபு பிழையற்ற தொடரைக் காண்க.?
A) சோறு சாப்பிடு
B) சுவர் கட்டு
C) தண்ணீர் பருகு
D) பூக் கொய்
E) விடை தெரியவில்லை
24. பொருத்துக
a. இயற்கை ஓவியம் - 1. பெரிய புராணம்
b. இயற்கை தவம் - 2. கம்பராமாயணம்
c. இயற்கைப் பரிணாமம் - 3. சீவகசிந்தாமணி
d. இயற்கை அன்பு - 4. பத்துப்பாட்டு
a b c d
A 3 1 4 4
B 4 3 2 1
C 2 1 4 3
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
25. நெல் குத்தும்போது பாடப்படும் பாடல் எது ?
A) வாய்ப்பாட்டு
B) வள்ளைப்பாட்டு
C) கும்மிப்பாட்டு
D) தாலாட்டு
E) விடை தெரியவில்லை
26. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - பை
A) கடவுள்
B) இளமை
C) அன்பு
D) பூமி
E) விடை தெரியவில்லை
27. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க - பே
A) மேகம்
B) தலைவன்
C) உயர்வு
D) மதில்
E) விடை தெரியவில்லை
28. பொருந்தாத இணையைக் கண்டறிக ?
A) பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணகவி
B) சொல்லின் செல்வர் – இரா.பி.சேது
C) இரசிகமணி – டி.கே.சிதம்பரநாதர்
D) மக்கள் கவிஞர் - பாரதியார்
E) விடை தெரியவில்லை
29. தொடர் வகையை அறிக – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
A) உணர்ச்சித் தொடர்
B) வினாத் தொடர்
C) விழைவுத் தொடர்
D) செய்தித் தொடர்
E) விடை தெரியவில்லை
30. தொடர் வகையை அறிக – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
A) உணர்ச்சித் தொடர்
B) வினாத் தொடர்
C) விழைவுத் தொடர்
D) செய்தித் தொடர்
E) விடை தெரியவில்லை
31. தொடர் வகையை அறிக – உன் திருக்குறள் நூலைத் தருக
A) உணர்ச்சித் தொடர்
B) வினாத் தொடர்
C) விழைவுத் தொடர்
D) செய்தித் தொடர்
E) விடை தெரியவில்லை
32. தொடர் வகையை அறிக – சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ?
A) உணர்ச்சித் தொடர்
B) வினாத் தொடர்
C) விழைவுத் தொடர்
D) செய்தித் தொடர்
E) விடை தெரியவில்லை
33. தொடர் வகையை அறிக – பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே !
A) உணர்ச்சித் தொடர்
B) வினாத் தொடர்
C) விழைவுத் தொடர்
D) செய்தித் தொடர்
E) விடை தெரியவில்லை
34. இலக்கணக் குறிப்பு தருக - கரியன்
A) பண்புத்தொகை
B) குறிப்பு வினைமுற்று
C) இரண்டாம் வேற்றுமைத் தொகை
D) உரிச்சொல்
E) விடை தெரியவில்லை
35. இலக்கணக் குறிப்பு தருக – பாடிய பாடல்
A) இறந்தகால பெயரெச்சம்
B) வினையெச்சம்
C) முற்றெச்சம்
D) குறிப்பு வினைமுற்று
E) விடை தெரியவில்லை
36. இலக்கணக் குறிப்பு தருக – படித்து முடித்தான்
A) இறந்தகால பெயரெச்சம்
B) வினையெச்சம்
C) முற்றெச்சம்
D) குறிப்பு வினைமுற்று
E) விடை தெரியவில்லை
37. இலக்கணக் குறிப்பு தருக – வள்ளி படித்தனள்
A) இறந்தகால பெயரெச்சம்
B) வினையெச்சம்
C) முற்றெச்சம்
D) குறிப்பு வினைமுற்று
E) விடை தெரியவில்லை
38. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) தமிழ்த் தென்றல் – திரு.வி.க
B) சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
C) காந்தியக் கவிஞர் - வாணிதாசன்
D) உவமைக் கவிஞர் - சுரதா
E) விடை தெரியவில்லை
39. கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) தாராபாரதி
B) வீ.முனிசாமி
C) நாமக்கல் கவிஞர்
D) இரா.இளங்குமரனார்
E) விடை தெரியவில்லை
40. பொருத்துக
a) மூன்றாம் வேற்றுமை - 1. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
b) நான்காம் வேற்றுமை - 2. மண்ணால் குதிரை செய்தான்
c) ஐந்தாம் வேற்றுமை - 3. பாரியினது தேர்
d) ஆறாம் வேற்றுமை - 4. இராமனுக்கு தம்பி இலக்குவன்
a b c d
A 3 1 2 4
B 2 4 1 3
C 2 3 1 4
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
41. பொருத்துக
a) இரண்டாம் வேற்றுமைத்தொகை - 1. மலைவீழ் அருவி
b) மூன்றாம் வேற்றுமைத்தொகை - 2. சிதம்பரம் சென்றான்
c) நான்காம் வேற்றுமைத்தொகை - 3. தலைவணங்கு
d) ஐந்தாம் வேற்றுமைத்தொகை - 4. திருவாசகம் படித்தான்
a b c d
A 4 3 2 1
B 2 3 4 1
C 2 3 1 4
D 3 1 4 2
E விடை தெரியவில்லை
42. கலித்தொகையைத் தொகுத்தவர் யார் ?
A) நம்பியாண்டார் நம்பி
B) நல்லந்துவனார்
C) செயங்கொண்டார்
D) கணிமேதாவியார்
E) விடை தெரியவில்லை
43. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்ற நூலை எழுதியவர் யார் ?
A) இரா.இளங்குமரனார்
B) பி.ச.குப்புசாமி
C) வாணிதாசன்
D) திரு.வி.க
E) விடை தெரியவில்லை
44. சொல்லின் பொருளுடன் பொருந்தாத இணையைக் கண்டறிக
A) அலந்தவர் - வறியவர்
B) பேதையார் - அறிவற்றவர்
C) போற்றார் - பகைவர்
D) நோன்றல் - ஆழப்படுத்துதல்
E) விடை தெரியவில்லை
45. முற்றுப்போலி சொல் எது ?
A) அஞ்சு
B) அமச்சு
C) அகன்
D) மஞ்சு
E) விடை தெரியவில்லை
46. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார் ?
A) ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்
B) தொண்டைமான் இளந்திரையன்
C) குளமுற்றத்துஞ்சிய பாண்டிய நெடுஞ்செழியன்
D) ஆரிய படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்
E) விடை தெரியவில்லை
47. திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
C) முடியரசன்
D) தந்தை பெரியார்
E) விடை தெரியவில்லை
48. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
A) 1780
B) 1870
C) 1786
D) 1876
E) விடை தெரியவில்லை
49. தமிழ் மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது ?
A) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
B) தாயுமானவர்
C) பன்னிரு திருமுறைகள்
D) திருக்குறள்
E) விடை தெரியவில்லை
50. இந்திய நூலகவியலின் தந்தை யார் ?
A) முனைவர் இரா.அரங்கநாதன்
B) நெல்லை சு.முத்து
C) உ.வே.சாமிநாதர்
D) ஆனந்தரங்கர்
E) விடை தெரியவில்லை
51. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் என்று பாடியவர் ?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) வாணிதாசன்
D) வைரமுத்து
E) விடை தெரியவில்லை
52. பொங்கல் திருநாள் இராஜஸ்தான் மாநிலத்தின் எவ்வாறு கொண்டாடப்படுகிறது ?
A) மகர சங்கராந்தி
B) லோரி
C) உத்தராயன்
D) பொங்கல்
E) விடை தெரியவில்லை
53. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக் கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?
A) பாவண்ணன்
B) முடியரசன்
C) தாராபாரதி
D) நாமக்கல் கவிஞர்
E) விடை தெரியவில்லை
54. அடுக்குத் தொடர் சொல் எது ?
A) விறு விறு
B) கல கல
C) மள மள
D) எடு எடு
E) விடை தெரியவில்லை
55. பொருத்துக
a) முத்து நகரம் - 1. மதுரை
b) குட்டி ஜப்பான் - 2. திருவண்ணாமலை
c) தூங்கா நகரம் - 3. தூத்துக்குடி
d) தீப நகரம் - 4. சிவகாசி
a b c d
A 4 3 2 1
B 1 2 3 4
C 3 4 1 2
D 4 1 2 3
E விடை தெரியவில்லை.
56. நீலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
A) சிலப்பதிகாரம்
B) தொல்காப்பியம்
C) மணிமேகலை
D) புறநானூறு
E) விடை தெரியவில்லை
57. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
A) ஐந்து
B) மூன்று
C) பத்து
D) பன்னிரண்டு
E) விடை தெரியவில்லை
58. இளமை விருந்து என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A) திரு.வி.க
B) பி.ச.குப்புசாமி
C) குணங்குடி மஸ்தான் சாகிபு
D) புதுமைப் பித்தன்
E) விடை தெரியவில்லை
59. தேவாராத்தை தொகுத்தவர் யார் ?
A) சேக்கிழார்
B) நம்பியாண்டார் நம்பி
C) மாணிக்க வாசகர்
D) திருஞான சம்பந்தர்
E) விடை தெரியவில்லை
60. தமிழில் எழுந்த முதல் பரணி நூல் ?
A) தக்கயாகப் பரணி
B) இரணியவதைப் பரணி
C) கலிங்கத்துப் பரணி
D) பாசவதைப் பரணி
E) விடை தெரியவில்லை
61. சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் நூலை எழுதியவர் யார்
A) இரா.பி.சேது
B) சுரதா
C) நாமக்கல் கவிஞர்
D) மு.மேத்தா
E) விடை தெரியவில்லை
62. பொருத்துக
a) மறலி - 1. மலைக்குகை
b) கரி - 2. தமிழர்
c) அருவர் - 3. காலன்
d) பிலம் - 4. யானை
a b c d
A 3 4 2 1
B 4 1 2 3
C 2 4 1 3
D 2 1 4 3
E விடை தெரியவில்லை.
63. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார் ?
A) கண்ணதாசன்
B) நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கனார்.
C) வைரமுத்து
D) ம.பொ.சி
E) விடை தெரியவில்லை
64. பின்வருவனவற்றுன் காட்டைக் குறிக்கும் சொல் எது ?
A) கானகம்
B) பதுக்கை
C) கணையம்
D) இவை அனைத்தும்
E) விடை தெரியவில்லை
65. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கிய சங்ககாலப் பெண்பாற் புலவர் யார் ?
A) காவற்பெண்டு
B) மாறோக்கத்து நப்பசலையார்
C) இளவெயினி
D) ஒக்கூர் மாசாத்தியார்
E) விடை தெரியவில்லை
66. திணைக்குரிய சிறுபொழுதுடன் பொருத்துக
a) வெண்பா - 1. தூங்கல் ஓலை
b) ஆசிரியப்பா - 2. துள்ளல் ஓசை
c) கலிப்பா - 3. அகவல் ஓசை
d) வஞ்சிப்பா - 4. செப்பல் ஓசை
a b c d
A 4 3 2 1
B 2 4 1 3
C 2 3 4 1
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
67. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று பாராட்டியவர் யார் ?
A) பெருந்தலைவர் காமராசர்
B) திரு.வி.க
C) தந்தை பெரியார்
D) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
E) விடை தெரியவில்லை
68. குழுஉக்குறி சொல் எது ?
A) பறி
B) திருமுகம்
C) நெல்லை
D) முன்றில்
E) விடை தெரியவில்லை
69. இலக்கணப் போலி சொல் எது ?
A) பறி
B) திருமுகம்
C) நெல்லை
D) முன்றில்
E) விடை தெரியவில்லை
70. மரூஉ சொல் சொல் எது ?
A) பறி
B) திருமுகம்
C) நெல்லை
D) முன்றில்
E) விடை தெரியவில்லை
71. வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A) நாலடியார்
B) நான்மணிக்கடிகை
C) பழமொழி
D) அகநானூறு
E) விடை தெரியவில்லை
72. திருக்குறளார் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) கண்ணதாசன்
B) ம.பொ.சி
C) வரதன்
D) வீ.முனிசாமி
E) விடை தெரியவில்லை
73. திருக்குறள் போன்று அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பினைக் கொண்ட நூல் எது ?
A) நாலடியார்
B) ஆத்திச்சூடி
C) நீதிநெறி விளக்கம்
D) அறநெறி சாரம்
E) விடை தெரியவில்லை
74. திருநெல்வேலியின் முற்காலப் பெயர் ?
A) வேணுவனம்
B) கடம்பவனம்
C) செண்பகவனம்
D) குண்டலி வனம்
E) விடை தெரியவில்லை
75. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுவது ?
A) கன்னியாகுமரி
B) நாமக்கல்
C) மதுரை
D) பாளையங்கோட்டை
E) விடை தெரியவில்லை
76. கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசை காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) திரிகூடராசப்ப கவிராயர்
B) டி.கே.சிதம்பரநாதர்
C) அண்ணாமலை ரெட்டியார்
D) வீரமாமுனிவர்
E) விடை தெரியவில்லை
77. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிசாரம் நூலில் இடம்பெற்றுள்ள “பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்ற அடியில் பைங்கூழ் என்ற சொல்லின் பொருள் யாது ?
A) கம்பு கூழ்
B) கேழ்வரகு கூழ்
C) பசுமையான பயிர்
D) இவற்றில் எதுவுமில்லை
E) விடை தெரியவில்லை
78. பொய்கையாழ்வார் பிறந்த இடம் ?
A) திருவெஃகா
B) மாமல்லபுரம்
C) தீபங்குடி
D) திருவில்லிபுத்தூர்
E) விடை தெரியவில்லை
79. சரியான இணையைக் கண்டறிக ?
A) வானம் - வெடி
B) வாணம் - ஆகாயம்
C) விளை – பொருளின் மதிப்பு
D) விழை - விரும்பு
E) விடை தெரியவில்லை
80. இடுகுறி பொதுப்பெயர் எது ?
A) மரம்
B) மா
C) நாற்காலி
D) மரங்கொத்தி
E) விடை தெரியவில்லை
81. சுட்டுத் திரிபு எது ?
A) அ
B) இ
C) உ
D) அந்த
E) விடை தெரியவில்லை
82. பொருத்துக
a) வங்கம் - 1. கலங்கரை விளக்கம்
b) நீகான் - 2. பகல்
c) எல் - 3. கப்பல்
d) மாட ஒள்ளெரி - 4. நாவாய் ஓட்டுபவன்
a b c d
A 4 3 2 1
B 1 2 3 4
C 2 3 4 1
D 3 4 2 1
E விடை தெரியவில்லை.
83. செவாலியர் விருது பெற்றவர் யார் ?
A) வாணிதாசன்
B) கண்ணதாசன்
C) முடியரசன்
D) மீ.இராசேந்திரன்
E) விடை தெரியவில்லை
84. ஆல் அலப்பு என்பது ?
A) காடர்கள் பேசும் மொழி
B) ஒரு பழங்குடி இனம்
C) ஒரு வகை ஆயுதம்
D) ஒரு இசைக்கருவி
E) விடை தெரியவில்லை
85. நீதிநெறி விளக்கம் நூலை எழுதியவர் ?
A) சிவப்பிரகாசம்
B) குமரகுருபரர்
C) முனைப்பாடியார்
D) பவனந்தி முனிவர்
E) விடை தெரியவில்லை
86. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?
A) குணங்குடி மஸ்தான் சாகிபு
B) பனு அகமது மரைக்காயர்
C) ஜி.யு.போப்
D) வீரமாமுனிவர்
E) விடை தெரியவில்லை
87. காளமேகப் புலவரின் இயற்பெயர் ?
A) சுப்புரத்தினம்
B) முத்தையா
C) எத்திராசலு
D) வரதன்
E) விடை தெரியவில்லை
88. பொருத்துக
a) இயற்சொல் - 1. அழுவம்
b) திரிசொல் - 2. சோறு
c) திசைச் சொல் - 3. இரத்தம்
d) வடசொல் - 4. பெற்றம்
a b c d
A 4 3 2 1
B 1 2 3 4
C 2 1 4 3
D 3 1 4 2
E விடை தெரியவில்லை.
89. வாய்மொழி இலக்கியம் என அழைக்கப்படுவது ?
A) நாட்டுப்புறப் பாடல்கள்
B) குறவஞ்சிப் பாடல்கள்
C) பள்ளு
D) தூது
E) விடை தெரியவில்லை
90. அக்கசாலை எனப்படுவது ?
A) அங்காடித் தெரு
B) உணவு வழங்குமிடம்
C) முத்துக் குளிக்கும் இடம்
D) பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்
E) விடை தெரியவில்லை
91. மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று பாடியவர்
A) சீத்தலைச் சாத்தனார்
B) இளங்கோவடிகள்
C) பரணர்
D) கபிலர்
E) விடை தெரியவில்லை
92. பொருந்தாத இணையைக் கண்டறிக
A) அரசு - இலை
B) அகத்தி - கீரை
C) அருகு - புல்
D) மல்லி - மடல்
E) விடை தெரியவில்லை
93. ஆசாரக் கோவை நூலை இயற்றியவர் ?
A) ஔவையார்
B) பெருவாயின் முள்ளியார்
C) முனைப்பாடியார்
D) குமரகுருபரர்
E) விடை தெரியவில்லை
94. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் – என்ற அடிகள் இடம் பெற்ற நூல் ?
A) திருவாசகம்
B) திருப்பள்ளியெழுச்சி
C) பெருமாள் திருமொழி
D) பரிபாடல்
E) விடை தெரியவில்லை
95. தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும் – என்று பாடியவர் ?
A) கவிமணி
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) நாமக்கல் கவிஞர்
E) விடை தெரியவில்லை
96. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது ?
A) சீனா
B) இந்தியா
C) இலங்கை
D) இவற்றில் எதுவுமில்லை.
E) விடை தெரியவில்லை
97. கவிஞரேறு, பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் யார் ?
A) வண்ணதாசன்
B) வாணிதாசன்
C) கண்ணதாசன்
D) பெருஞ்சித்திரனார்
E) விடை தெரியவில்லை
98. உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்
A) கவிமணி B) உவமைக் கவிஞர்
C) மொழிஞாயிறு D) தமிழ்த்தென்றல்
E) விடை தெரியவில்லை
99. பின்வருவனவற்றுள் இடக்கரடக்கல் சொல்/தொடர் எது ?
A) நுனிக்கிளை
B) கால் கழுவி வந்தான்
C) திருமுகம்
D) காரை
E) விடை தெரியவில்லை
100. மகாகவி பாரதியாருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கியவர் யார் ?
A) எட்டயபுர மன்னர்
B) திருவாங்கூர் சமஸ்தானம்
C) சிவகங்கை ஜமீன்
D) இவர்களில் எவருமிலர்.
E) விடை தெரியவில்லை