Part A - 2 (3) பொதுத்தமிழ் பகுதி (அ) இலக்கணம் - 2 (3) தொடரும் தொடர்பும் அறிதல் - மேற்கோள்கள் - TNPSC VAO Group IV & II General Tamil Study Material (Part - A) Quotation

 TNPSC VAO Group IV & II General Tamil Study Material


பொதுத்தமிழ் பகுதி (அ) இலக்கணம்
2 (3) தொடரும் தொடர்பும் அறிதல் - மேற்கோள்கள்

இறைவனே வந்து திகழசக்கரம் எடுத்து என்ற அடியை எடுத்து கொடுத்த நூல் கந்தபுராணம்

இறைவனே வந்து உலகெலாம் என்று அடியெடுத்து கொடுத்த நூல் - பெரிய புராணம்

10ஆம் வகுப்பு புதிய புத்தகம் (2022-2023)

ஆசிரியர்கள்

மேற்கோள்கள், பாடல்வரிகள்

(கனிச்சாறு) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

க. சச்சிதானந்தன்

 

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்

மகாகவி பாரதியார்

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' 

தண்டி

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அ ஃ து உருவகமாகும்'

அறிஞர் அண்ணா

“களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று”

திருக்குறள்

“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்”

தொல்காப்பியர்

 

 

ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப்  பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்”

(உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வு உடையன போலவும் கற்பனை செய்வதுண்டு என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்)

அறிஞர் அண்ணா

"அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்."

பாரதியார்

“இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி”

ஔவை குறள், (வாயுதாரணை)

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்

சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்)

"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

"நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே"

புறநானூறு (வெண்ணிக்குயத்தியார்)

"நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!"  

புறநானூறு

( ஐயூர் முடவனார்)

வளி மிகின் வலி இல்லை

தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.

முல்லைப்பாட்டு (நப்பூதனார்)

கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்

அகநானூறு

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”

கவிஞர் கண்ணதாசன்

வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

திருவள்ளுவர்

“மோப்பக் குழையும் அனிச்சம்”

சிலப்பதிகாரம்

“…………………….. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

கம்பராமாயணம்

"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே"

கலிங்கத்துப் பரணி

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"

புறநானூறு

“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே…….. ”

நற்றிணை

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

பொருநராற்றுப்படை

‘’காலின் ஏழடிப் பின் சென்று’

புறநானூறு

குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்

புறநானூறு

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்…

சிறுபாணாற்றுப்படை

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்

அம்சப்பிரியா

“இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு

குறுந்தொகை

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ”

கொன்றை வேந்தன் (ஔவையார்)

“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்”

ஔவையார் (தனிப்பாடல்)

“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான் ஈ(து) எல்லா உலகும் பெறும்”

பாரதிதாசன்

"இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்

விவேகசிந்தாமணி

“ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகும் தானே”

அறிவுமதி

உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்

பெருமாள் திருமொழி  (குலசேகராழ்வார்)

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

ஸ்டீபன் ஹாக்கிங்

தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்

அகநா னூறு

"கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர்க் கருவூர் முன்துறை"

ஐன்ஸ்டைன்

"அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது"

ஸ்டீபன் ஹாக்கிங்

"வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்"

மணவை முஸ்தபா.

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு

மு.கு. ஜகந்நாதர்

ஒரு மொழி வளம்பெற வும் உலகத்துடன் உறவு கொள்ளவும், மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்.

குலோத்துங்கன்

காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்

பாரதியார்

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

நீதிவெண்பா (கா.ப.செய்குதம்பிப் பாவலர்)

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

திருவிளையாடற் புராணம்

(பரஞ்சோதி முனிவர்)

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித்தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா .

புறம்

“மாசற விசித்த வார்புறு வள்பின் …

ஐங்குறுநூறு

“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை”

நன்னூல்

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்

நன்னூல்

“சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப”

பாரதியார்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

பாரதிதாசன்

அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.

கூத்துப்பட்டறை
ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு

“நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்”

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்

மலேசியத் தலைநகர் கோ லாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், 'இராச சோழன் தெரு' என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.

சிலப்பதிகாரம், (ஊர்காண்காதை)

"ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்

திருத்தணிகையுலா

“சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்

சீத்தலைச்சாத்தனார்

’அடிகள் நீரே அருளுக’

இளங்கோவடிகள்

’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’

பாரதிதாசன

கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக் கல்வைத்த, நகைதீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு – தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!

புறநானூறு

(ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளது)

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“-

மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)

நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை

‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’

புறநானூறு.

அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’

புறநானூறு

(ஆவூர் மூலங்கிழார்)

எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்

புறநானூறு

(மதுரைக் கணக்கா யனார் மகனார் நக்கீரனார்)

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே

வள்ளல்கள்

“இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன் ” என்றெல்லாம் போற்றப்பட்டனர்.

ஔவையார்.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்

நச்செள்ளையார்.

இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு

பரணர்.

பேகன் மறுமை நோக்கிக் கொடுக்கா தவன்

பெருந்தலைச் சாத்தனார்

தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தினான்.

கபிலர்

எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரி

கலித்தொகை

ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது

ஈழத்துப் பூதன் தேவனார்

உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிடுகிறார்.

கலித்தொகை (நல்லந்துவனார்)

பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்

நல்வேட்டனார்

' உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பது தான் '

நற்றிணை

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே

பெருங்கடுங்கோ

உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும்

சீன நாட்டுத் தாவோயியம்

‘நிறைவடைகிறவனே செல்வன்’

நற்றிணை

’ பிழையா நன் மொழி ’

‘ பொய் மொழிக் கொடுஞ்சொல் ’

கண்ணதாசன்

*மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

புறநானூறு

"கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!"

வள்ளலார்

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்  ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

மதுரை க்காஞ்சி

"ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி"

தண்டியலங்காரம்

“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்“


சமச்சீர் கல்வி புத்தகம்

அறிஞர்கள்/நூல்கள்

மேற்கோள்கள்

நாலடியார்

கல்வி கரையில் கற்பவர் நாள் சில

டாக்டர் கிரௌல்.

 

தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று கூறியர்

தொல்காப்பிய நூற்பா.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறும் நூல்

மோசிகீரனார்.

நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

முதுமொழிக்காஞ்சி

இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வே சிறந்தது  என்று கூறும் நூல்

 உ.வே.சாமிநாதர்

யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என எழுந்தவர்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர்

ருஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவ்.

“நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர்

பெருஞ்சித்திரனார்.

தமிழ் படித்தால் அறம் பெருகும் அகத்தில் ஒளிபெருகும் திறம் பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும்

ஔவையார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் என்று பாடியவர்

லிட்டில்வுட்டு

ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்றவர்

இந்திராகாந்தி

பிறவிக் கணிதமேதை இராமானுஜன் என்று பகழ்ந்தவர்  

திரிகடுகம் (பாயிரம்)

செருஅடுதோள் நல்லாதன்

காந்தி

வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின்மீது சீற்றம் கொண்டானாம்’ என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு  என்றவர்

வாணிதாசன்

கற்பிப்போர் கண்கொடுப் போரே! - அந்தக் கணக்காயர் உரையினில் இருசெவி சேரே! என்றவர்

ந. பிச்சமூர்த்தி

நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,

திருக்குறள்

‘கூத்தாட்டவைக்குழாத் தற்றே’

சிலப்பதிகாரம்

நாடகமேத்தும் நாடகக் கணிகை

கவிமணி

நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்றவர்

புறநானூறு

புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் 

கம்பர்

மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே

பாரதிதாசன்

நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்!

திருக்குறள்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

வில்லிபுத்தூரார்

வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன் மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்

முடியரசன்

காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி

மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை

மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர்

கவிமணி

‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ’

கவிமணி

சாலைகளில் பலதொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்

நாமக்கல் கவிஞர்

பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்.

முடியரசன்

ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி?

பாரதியார்

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.

நாமக்கல் கவிஞர்

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும்.

நாமக்கல் கவிஞர்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை யில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது

தோழர் ஜீவானந்தம்

‘நீ மீண்டும் தோன்றிய பாரதியடா’எனக் கல்யாணசுந்தரத்தைப் பாராட்டியவர்

கண்ணதாசன்

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் – வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம்தொடுப்பேன்,

 

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை – நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.

குறுந்தொகை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ

கெலன்.

“வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்றுபோனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது"

மூதுரை (ஔவையார்)

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு

பாரதியார்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

பாரதியார்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

நாண்மணிக் கடிகை

இளமைபருவத்தில் கல்லாமை குற்றம்

திருவள்ளுவர்

சிரிக்க தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருட்டாகும்

கண்ணதாசன்

மாற்றம் என்பது மானிட தத்துவம்

பாரதியார்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

நல்லந்துவனார்

முப்பால் எழுதிய முதல் பாவலர் என திருவள்ளுவரை கூறியவர்

பாரதியார்

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதிதாசன்

எங்கெங்கு காணிணும் சக்தியடா

நாமக்கல் கவிஞர்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

வள்ளலார்

வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்

புறநானூறு (பொன்முடியார்)

கல்வி புகட்டடுதல் தந்தைக்கு கடன்

சிலப்பதிகாரம்

கள்வனை கோறல் கொடுங்கோலன்று

இராமாயணம்

உடையாறும் இல்லை இல்லாறும் இல்லை

ஔவையார்

இளமையில் கல்

கவிமணி

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

சிலப்பதிகாரம்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

கலித்தொகை

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியன்)

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

திருநாவுக்கரசர்

குறிக்கோள் இலாது கெட்டேன்

திருநாவுக்கரசர்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

புறநானூறு (கழைதின் யானையார்)

ஈயென இரத்தல் இழிந்தன்று

திருமூலர்

உடம்பால் அழியின் உயரால் அழிவர்

பாரதியார்

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் 

அண்ணா

எதையும் தாங்கம் இதயம் வேண்டும்

நற்றிணை

முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

குறுந்தொகை

வினையே ஆடவர்க்கு உயிரே

புறநானூறு (கணியன் பூங்குன்றனார்)

பெரியாரை புகழ்தல் இலமெ சிரியோரை இகழ்கல் அதனினும் இலமே

ஔவையார்

சீரைத் தேடின் ஏரைத் தேடு

கவிமணி

உள்ளத்துள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை

பாரதிதாசன்

தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்

கபிலர்

ஒன்றே செய்தல் வேண்டும் ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும்

பாரதியார்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

நாமக்கவ் கவிஞர்

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

பாரதியார்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

புறநானூறு (பொன்முடியார்)

களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே

பாரதியார்

ஏழையென்றும் அடிமையென்றும் எவரும் இல்லை ஜாதியில்

நரிவெறு உறுத்தலையர்

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்

தாயுமானவர்

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

பாரதியார்

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்

புறநானூறு (ஒளைவை)

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே

ஔவையார்

ஜாதி இரண்டொழிய வேறில்லை

புறநானூறு (குடபுலவியனார்)

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

புறநானூறு (பாண்டியன் நெடுஞ்செழியன்)

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை மனியாது கற்றல் நன்றே

திருநாவுக்கரசர்

சலம் பூவோடு பூசனை மறந்தறியேன்

திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடியெல்லாம் நமனை அஞ்சோம்

திருநாவுக்கரசர்

நற்றுணையாவது வமச்சிவாயமே

திருநாவுக்கரசர்

தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்

திருநாவுக்கரசர்

என் கடன் பணி செய்து கிடப்பதே

திருநாவுக்கரசர்

மணித்த பிறவியும் வேண்டவதே இம்மாநிலத்து

சுந்தரர்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் யான்

சுந்தரர்

பெரியபுராணத்தின் கதாநாயகன்

சுந்தரர்

நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன் என்று பாடியவர்

திருவாசகம்

மனிதன் சொல்ல கடவுள் எழுதிய நூல்

நாலடியார்

நட்புக்கு கரும்பை உவமையாக சொன்ன இலக்கியம்

குறுந்தொகை

யாயும் யாயும் யாரோ கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

குறுந்தொகை

செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

மணிமேகலை

உண்டி கொடுத்தொர் உயிர் கொடுத்தொரே

குறுந்தொகை

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

வெற்றி வேற்கை

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

கலித்தொகை

மத்தம் பிணித்த கயிறுபோல் நின்நிலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு

புறநானூறு

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே

புறநானூறு

செல்வத்துப் பயனே ஈதல்

பழமொழி

ஞாயிற்றை கைமறைப்பார் இல்

ஆத்திச் சூடி

அறம் செய விரும்பு, ஔவியம் பேசேல், தையல் சொல் கேளேல், எண் எழுத்து இகழேல்

கொன்றைவேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,

ஈயார் தேட்டைத் தீயாள் கொள்வர்,

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்,

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை,

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு,

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நல்வழி

ஆண்டாண்டு தோறும் அழது புரண்டாலும் மாண்டார் வருவரோ

வெற்றிவேற்கை

கேளும் கிளையும் கெட்டார்க்கு இல்லை

உலக நீதி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மணிமேகலை

இளமையும் நில்லா யாக்கையும் வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா

நந்திக் கலம்பகம்

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் தேகம்

விவேக சிந்தாமணி

வெள்ளத்தே போகாது வெந்தணிலில் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாதது கொடுத்தாலும் நிறைவின்றிக் குறையாது

புறநானூறு

தமக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மையானே

மோசிகிரனார் (புறநானூறு)

நெல்லும் உயரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

திருக்குறள்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

புறநானூறு

மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே

புறப்பொருள் வெண்பாமாலை

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி

திருப்பாவை

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று

இலக்கண விளக்கப் பாட்டியல்

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி

பாரதியார்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவனைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை

பாரதியார்

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

ஔவையார்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், இளமையில் கல்

பழமொழி

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஔவையார்

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள்

பாரதியார்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

பாரதிதாசன்

வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

சுந்தரர்

பித்தா பிறை சூடி பெருமானே

நம்மாழ்வார்

அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியவர்க்கும் அடியேன் யான்

பாரதியார்

வட்டமிட்டு பெண்கள் வளைகரங்கள் தாம் ஒலிக்க கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு

ஔவையார்

நூல் பல கல், நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு

பாரதியார்

பாரதநாடு பழம் பெரு நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்

பாரதியார்

தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்

முத்துராமலிங்க தேவர்

பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு

படிக்காசுப் புலவர்

செத்தும் கொடுத்த சீதக்காதி

பலபட்டடை சொக்கநாத புலவர்

பரணிக்கோர் ஜெயங்கொண்டார்

ஒட்டக்கூத்தர்

தென்றமிழ் தெய்வப் பரணி

திருமூலர்

உடம்பை வளத்தேன் உயர் வளர்த்தேனே

திருமூலர் (திருமந்திரம்)

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

தாயுமானவர்

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

வள்ளலார்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

வள்ளலார்

வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்

பாரதியார்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கம் காணோம்

பாரதியார்

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

கவிமணி

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கு துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

பாரதியார்

ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

வள்ளலார்

பசித்திரு தனித்திரு விழித்திரு

பாரதியார்

காக்கை குருவி எங்கள் ஜாதி

பாரதியார்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையால்

ராமகிருஷ்ண பரமஹம்சர்

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

பாரதியார்

காக்கை சிறகிலே நந்தலாலா, ஜாதிகள் இல்லையடி பாப்பா, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

நாமக்கல் கவிஞர்

தமிழனென்றோர் இனமண்டு தனியே அவர்க்கோர் குணமண்டு

நாமக்கல் கவிஞர்

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

நாமக்கல் கவிஞர்

கைத்தொழில் ஒன்றைக் கற்றக்கொள்

பாரதிதாசன்

இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே

பாதிதாசன்

கொலைவாளினை எடடா வெகுகொடியோர் செயல் அறவே

பாரதிதாசன்

புதியதோர் உலகம் செய்வோம்

திருமூலர்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

புத்தர்

ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஔவையார்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

வள்ளலார்

எல்லோரு வாழ்க இசைந்து

நாமக்கல் கவிஞர்

புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டமடா

குறுந்தொகை

விருந்துவர கரைந்தது காக்கை

கம்பர்

தமிழ்தழீய சாயல்

கபிலர்

உழைப்பின் வாரா உறுதிகள் உளவே

அண்ணா

கடமை கண்ணியம் கட்டுப்பாடு, எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகையும் மணக்கும், மறப்போம் மன்னிப்போம் 

நேரு

உலகமே உறங்கம் வேளையில் இந்தியா விழித்திருக்கிறது

நேரு

காலம் பொன் போன்றது

காந்தி

செய்து முடி அல்லது செத்துமடி

ஔவையார்

பசித்துப் புசி, ஊருடன் கூடி வாழ், மனம் போனபோக்கெல்லாம் போக வேண்டாம்

மனோன்மணியம் சுந்தரனார்

நீராருங் கடலுடுத்த, போர்க்குறி காயம் புகழின் காயம், இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்

விவேகானந்தர்

விழுமின் எழுமின் அயராது எழுமின்

சிலப்பதிகாரம்

ஈன்ற குழந்தை எடுத்து வளர்க்குதூஉம் சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொள்

சிலப்பதிகாரம்

மாசறுபொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே

புறநானூறு

இன்னாது அம்ம இவ்வுலகம்

புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

புறநானூறு

மயக்குறு மக்களை இல்லோர்க்கும் பயக்குறை இல்லை

ஔவையார்

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு

ஔவையார்

அறம் செய விரும்பு, ஆறவது சினம், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், பசி வந்திட பத்தும் பறக்கும்

காரைக்காலம்மையார்

அறவானும் தானே அறிவிப்பானும் தானே

திருமூலர்

அம்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்

குமரகுருபரர்

கல்வி அழகே அழகு, சிந்தையின் நிறைவே செல்வம், பிரம்மன் படையிலும் புலவன் படைப்பு பெருமையுடையது

வள்ளலார்

அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு

பாரதியார்

மனதில் உறுதி வேண்டும், காதல் காதல் காதல் காதல் போயின் சாதல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தையலை உயர்வு செய்

பாரதிதாசன்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம், மாங்குயில் கூவிடம் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை, பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே,

கொத்தமங்கலம் சுப்பு

பெரியன் மனுஷன் புளுகினாக்கா பேப்பர்ல போடுகிறான் சின்ன மனுஷன்  புளுகினாக்கா ஜெயிலுக்குள்ளே போடுகிறான்


பாடக்குறிப்புகள்

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்


 
புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்

பிரித்தெழுதுக

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்.


அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்



எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்

 

TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS

பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்கள் 


BATCH 1

மாதிரி வினாத்தாள் - 1

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி - அ)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (பொருள் அறிக)

2. (பகுதி-அ) புகழ் பெற்ற நூலாசிரியர்.

3. (பகுதி-ஆ) திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல் வகை, வினைத் திட்பம், இனியவை கூறல்.


4. (பகுதி-இ) பாரதியார், பாரதிதாசன், நமக்கல் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்.



மாதிரி வினாத்தாள் - 2

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) தொடரும் தொடர்பும் அறிதல் (I) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் (II) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.

2. பகுதி (ஆ) அறநூல்கள் நாலடியார், நாண்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. பகுதி (இ) மரபுக் கவிதை முடியரசன் , வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.


மாதிரி வினாத்தாள் - 3

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பிரித்தெழுதுக

2. பகுதி (ஆ) கம்ப ராமாயணம் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பாவகை, சிறந்த தொடர்கள்.

3. பகுதி (இ) புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, ரா. மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.


மாதிரி வினாத்தாள் - 4

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

2. பகுதி (ஆ) புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையரை, எட்டுத்தொகை , பத்துப் பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

3. பகுதி (இ) தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, நேரு - காந்தி - மு.வ - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்

மாதிரி வினாத்தாள் - 5

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பொருந்தாச் சொல்லை கண்டறிதல்

2. பகுதி (ஆ) சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறும் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) நாடகக் கலை - இசைக் கலை தொடர்பான செய்திகள்.



மாதிரி வினாத்தாள் - 6

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) பிழைத் திருத்தம் (I) சந்திப் பிழையை நீக்குதல் (II) ஒருமை பன்மை, பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

2. பகுதி (ஆ) பெரிய புராணம் - நாலாயிர திவ்விய பிரபந்தம் - திருவிளையாடல் புராணம் - தேம்பாவணி - சீறாப் புராணம் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்


 

மாதிரிவினாத்தாள் - 7

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல்லை அறிதல்.

2. பகுதி (ஆ) சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றலக் குறவஞ்சி - கலிங்கத்துப் பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக் கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற் பள்ளு, காவடிச் சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்லகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளை விடு தூது, ராஜ ராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) கலைகள் சிற்பம் - ஓவியம்- பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 8

பாடத்திட்ட தலைப்புகள்

1. பகுதி (அ) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

2. பகுதி (ஆ) மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காள மேக புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)

3. பகுதி (இ) தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 9

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி அ ) - ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்.

2. (பகுதி ஆ) - நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

3. பகுதி (இ) - உரைநடை - மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க, வையாபுரிப் பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 10

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ)வேர்ச் சொல்லை தேர்வு செய்தல்

2.(பகுதி-ஆ)சமய முன்னோடிகள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குல சேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, உமறுப் புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

3. (பகுதி-இ)உ.வே.சாமிநாத அய்யர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்பணி தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 11

பாடத்திட்ட தலைப்புகள்.

1. (பகுதி-அ) வேர்ச் சொல்லை கொடுத்து வினை முற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல்.

2.(பகுதி-இ)தேவநேயபாவாணர் - அகர முதலி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் - தமிழ்தொண்டு தொடர்பான செய்திகள்




மாதிரி வினாத்தாள் - 12

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

2. (பகுதி-ஆ) ஜி.யு.போப் - வீரமாமுனிவர், தமிழ்த் தொண்டு சிறப்புத் தொடர்கள்.

3.(பகுதி-இ) பெரியார் -- அண்ணா -- முத்துராமலிங்கத் தேவர் -- அம்பேத்கர் - - காமராசர் -- சமுதாயத் தொண்டு.




மாதிரி வினாத்தாள் - 13

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

2. (பகுதி-ஆ) தமிழகம் - - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

3. (பகுதி - இ) உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.




மாதிரி வினாத்தாள் - 14

பாடத்திட்ட தலைப்பு - பெயர்ச்சொல்லின் வகையறிதல்




மாதிரி வினாத்தாள் - 15

பாடத்திட்டம் - பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்




மாதிரி வினாத்தாள் - 16

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) விடைக் கேற்ற வினைவை தேர்ந்தெடுத்தல்

2. (பகுதி - அ)எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்

3. (பகுதி-அ) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.

4. (பகுதி-இ)தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.




மாதிரி வினாத்தாள் - 17

பாடத்திட்ட தலைப்புகள்

1. (பகுதி-அ) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

2. (பகுதி-இ) தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, விடுதலை போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள்)

3. பகுதி (இ) தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்.



மாதிரி வினாத்தாள் - 18
பாடத்திட்டம்

1.(பகுதி-அ) எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.

2.(பகுதி-இ) உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

3.(பகுதி-இ) சமய பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கலியாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.




மாதிரி வினாத்தாள் - 19
பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்





மாதிரி வினாத்தாள் - 20
பாடத்திட்டம் - ஏழாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 21
பாடத்திட்டம் - எட்டாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 22
பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 23
பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்



மாதிரி வினாத்தாள் - 24
பாடத்திட்டம் - 11 & 12 ஆம் வகுப்பு பாடப்புத்தக மாதிரி வினாக்கள்




மாதிரி வினாத்தாள் - 25
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-1



மாதிரி வினாத்தாள் - 26
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-2




மாதிரி வினாத்தாள் - 27
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-3




மாதிரி வினாத்தாள் - 28
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-4



மாதிரி வினாத்தாள் - 29
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-5




மாதிரி வினாத்தாள் - 30
முழு பாடத்திட்டத்தின் படி முழுத்தேர்வு-6





BATCH 2

TNPSC GROUP IV AND GROUP II
GENARAL TAMIL MODEL QUETION PAPERS


மாதிரி வினாத்தாள் - 1

பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 3 வரை





மாதிரி வினாத்தாள் - 2

பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 4 முதல் 6 வரை






மாதிரி வினாத்தாள் - 3


பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை





மாதிரி வினாத்தாள் - 4

பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு இயல் 7 முதல் 9 வரை




மாதிரி வினாத்தாள் - 5

பாடத்திட்டம் - 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு





GENARAL TAMIL ONLINE TEST

ONLINE TEST - 1



ONLINE TEST - 2


ONLINE TEST - 3


ONLINE TEST - 4


ONLINE TEST - 5


ONLINE TEST - 6


ONLINE TEST - 7


ONLINE TEST - 8


ONLINE TEST - 9


ONLINE TEST - 10


ONLINE TEST - 11


ONLINE TEST - 12



thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post